People of India இந்திய மக்கள்
அன்பான சகோதர சகோதரிகளே,
People of India- இந்திய மக்கள்
என்னும் இணையதளத்தை நமக்காக, நம் நன்மைக்காக,
நம் சகோதர்கள் கொடுத்த ஊக்கத்தின் பேரில் ஆரம்பித்திருக்கிறேன்.
நாம் கீழே விழும் தருணத்தில் பக்கத்தில் இருந்து
யார் நம்மைத் தூக்குகிறார்களோ அவர்கள் தானே உறவினர்கள்
நம் பக்கத்தில் உள்ளவர்கள் வருத்தமாய் இருக்கும்போது
நாம் மகிழ்ச்சியாய் இருந்தாலும் காட்டிக் கொள்ள முடியாது
ஆகவே அனைவரையும் மகிழ்ச்சியாய் வைத்து
நாமும் மகிழ்ச்சியாய் இருப்போம்
மக்கள் வளம் பெறட்டும், வாழ்வு சிறக்கட்டும், நன்மைகள் விளையட்டும்,
நாடு செழிக்கட்டும். மீண்டும் சுதந்திரம் என்னும் சிந்தை வளர்ப்போம்
மனிதர்கள் தான் உலகில் முக்கியம்!
மதமோ,ஜாதியோ,இனமோ, மொழியோ எல்லாமே?
மனிதர்கள் இருந்தால்தானே!!!
மனிதர்கள் இல்லா உலகம் இருந்தும் பயனில்லை....
ஆகவே மக்களை மாக்களாக்கும் மடமைகளைத் துரத்துவோம்.
மக்கள் சக்தியைப் பெருக்குவோம்,
மனிதம் வளரட்டும் மனித நேயம் மலரட்டும்
இணையத்தில் பல தளங்கள் உள்ளன. நாமும் ஒரு தளம் அமைக்கிறோம்,
நம்முடைய தளம் அன்பு, பாசம், நேசம், மனிதாபிமானம் போன்ற
அடிப்படைகளால் வலுவாக உருவாக்கப்பட்டு, மனிதம் வளர்க்கும்
தளமாக அமைய வேண்டும் என்பது என்னுடைய ஆசை,
பல மனிதர்களின் துன்பங்களைப் போக்கும் விதமாக அமையும்,
அமைக்க வேண்டும். நிச்சயமாய் இந்தத் தளம் அப்படி அமையும்.
கலைகள்: நம்முடைய நாட்டின் பாரம்பரியக் கலைகளை புதுப்பிக்கும்
வகையில் இயல்,இசை நாட்டியம் ,சிற்பக்கலைகள்,ஓவியக்கலை,
தேசீய விழிப்புணர்வு ,சுற்றுச் சூழல்,பற்றிய
நாடகங்கள்,குறும்படங்கள்,அனைத்தும் அளிக்கலாம்
இலக்கியம்: நம்முடைய புராதன, நவீன இலக்கியங்களின் ஆக்கம்
கதைகள்; கவிதைகள், கட்டுரைகள்,
அரசியல், குறும்பு ஓவியங்கள்,செய்திகள்,என அனைத்தும் எழுதலாம்,
முக்கியமாக அவரவர் தம் வீடுகளில் இருக்கும் பாசமிகு
அங்கத்தினர்களின் திறமைகளை சாதனைகளை எழுதி
கலைகளை வளர்க்கலாம்,
ஒரு அன்பான வேண்டுகோள்...
தயவு செய்து யாரையும் புண்படுத்தாமல் மனிதர்களுக்கு,
மனதுக்கு இதமாக நன்மை பயக்கும் நல் விஷயங்களப்பற்றி எழுதுங்கள்.
பொதுவாக நம் நாட்டில் ஆங்காங்கே நடக்கும் பல விஷயங்களில்
மக்களுக்குப் பாதகமான விஷயங்கள் நடைபெற்றால் அவைகளைப் பற்றி
எழுதலாம், அது மட்டுமல்ல, ப்ரச்சனைகளை யார் வேண்டுமானலும் சொல்லலாம்.
அவைகளுக்கு தீர்வுகள் சொல்வதற்கும் நாம் முயல்வோம்,
தீர்வுகள் சொல்வதற்கும் முன்வாருங்கள்.தீர்வுகளுக்கு உதவ சக்தி
உள்ளவர்கள் முன் வாருங்கள். முடிந்தவரை மக்களுக்கு உதவுவோம்,
நாட்டின் பல ப்ரச்சனைகளை விவாதிப்போம், நம்மால் முடிந்த அளவுக்கு
அனைத்தையும் எளிதாக தீர்க்க முயலுவோம்.
முயன்றால், முடியாதது எதுவும் இல்லை உலகில்,
“” முயற்சி திருவினையாக்கும் ””
இப்படிக்கு
உங்கள் தமிழ்த்தேனீ
அன்புடன்
தமிழ்த்தேனீ
ஆசிரியர்- தமிழ்த்தேனி
rkc...@gmail.com
http;//
thamizthenee.blogspot.com
http://www.peopleofindia.net
Contact us at:
con...@peopleofindia.net or
peopleof...@gmail.com