Safeguarding Yourself From Internet Based Attacks - Part III

4 views
Skip to first unread message

Maakimo - Gmail

unread,
Mar 30, 2007, 8:10:39 AM3/30/07
to
இணையத்தில் அடி வாங்காமல் இருக்க...பாகம் 3

கணினி அறிவும் துஷ்பிரயோகமும்

ஒரு வேளை நான் சொன்னதெல்லாம் கேட்டு ஞானோதயம் வந்து Anonymous ஆக எழுத முன்வந்தால் தப்பித்துவிடலாம் என்று மனப்பால் குடிக்க வேண்டாம்.

  1. IP tracing - தமிழும் கற்று கணினி அறிவும் பெற்று பெரிய இடங்ளில் வேலை பார்க்கும் கணினி வல்லுனர்கள் நீங்கள் எங்கிருந்து பதிக்கிறீர்கள் என்று கண்டுபிடித்து உங்களுக்கே சொல்வார்கள். இதை ஒரு சேவையாகவே செய்து வருகிறார்கள். ஒருவேளை நீங்கள் அலுவலகத்தில் இருந்து பதித்து நிரந்தர ஐபி பயன்படுத்துபவராக இருந்தால் அடுத்த வாரம் உங்கள் அலுவலகத்திற்கு போன் போட்டு தொந்தரவு தருவார்கள்.
  2. Email tracing - இது போலவே உங்கள் மின்னஞ்சலையும் தேடிக்கொண்டு வருவார்கள். நீங்கள் இங்கு வேலை செய்கிறீர்கள் இந்த ஊரில் இருக்கிறீர்கள் உங்கள் இயற்பெயர் இது உங்கள் குடும்பத்தில் இத்தனை பேர் இருக்கிறார்கள் என்று தங்கள் புத்திசாலித்தனத்தை இப்படியெல்லாம் காட்டிக் கொள்வார்கள்.
  3. கடவுச் சொல் திருட்டு - அப்படித் தெரியாமல் தமிழ் இணையதளம் தானே என்று நீங்கள் பதித்து விட்டால் உங்கள் கடவுச் சொல்லை கண்டறிந்து பிற இடங்களுக்கு சென்று உங்கள் கடவுச் சொல்லை பயன்படுத்த முயல்வார்கள். உங்கள் பெயரில் நீங்களே இட்டது போன்ற பதிவுகளை இட்டு உங்கள் பெயரை கெடுக்க முயல்வார்கள்.
  4. கூகிள் யாஹூ குழுக்கள் - அழகு தமிழ் விளையாடும் கூகிள் யாஹூ குழுக்களில் மானாவாரியாக மக்கள் அடித்துக் கொள்வதை பார்க்கலாம். ஏதோ அலுவலக நேரத்தில் தமிழ் மக்களுடன் கலக்கலாம் என்று வந்தால் ஏதாவது ஒரு திரி தொடங்கி காபி குடித்து வருவதற்குள் அதற்கு ஆயிரம் கண்டனம் தரம் தாழ்ந்த மொழியில் காணப்பெறலாம்.
  5. மன்றங்கள் - தமிழ் மொழியை ஆதரிக்காத மென்பொருள் வாங்கி பல நல்ல இடத்தில் வேலை செய்யும் வெளிநாட்டில் இருக்கும் தமிழ் விரும்பிகள் அந்த மென்பொருளை தமிழ் படுத்தி தமிழ் யூனிகோட் அமைத்து தமிழ் உறவுகளை ஏற்படுத்தலாம் என்ற நல்ல எண்ணத்தில் தொடங்கினால் அவ்வளவு தான். இந்த பிரிவினை வாதிகள் அங்கும் பல் வேறு பொய் பெயர்களில் வந்துவிடுவார்கள். பல மன்றங்கள் 24 மணி நேரமும் வழிநடத்துனர்களால் கண்காணிக்க பட்டு வருவதால் நல்ல தரத்தில் இன்னும் இருக்கின்றன. சில களங்களில் களம் ஆரம்பித்த நண்பர்கள் வேலை பளு காரணமாக வரமுடியாமல் போனால் அவ்வளவு தான் - அசிங்கங்கள் நிறைந்து குப்பை கூளமாக ஆக்கிவிடுவார்கள். இதனால் தாங்கள் அறிந்தது என்ன? கருத்துக்களங்களும் பாரம்களும் துவங்காமல் இருப்பது நல்லது. அப்படி துவங்கினாலும் பூட்டி விடுவது நல்லது.
  6. தமிழ் ஆர்வம் - உங்களுக்கு தமிழ் ஆர்வம் அதிகமாகி நீங்கள் பல களங்களில் உறுப்பினராக இருந்தால் உங்களை சந்தேக கண் கொண்டு பார்ப்பார்கள். அதனால் மரியாதை எங்கு இருக்கிறதோ கண்ணியம் எங்கு இருக்கிறதோ அங்கு மட்டும் இருந்தால் நல்லது. கேட்க மாட்டேன் என்றால் என்ன செய்வது. இணையத்தில் பல களங்கள் மன்றங்கள் இருந்தாலும் இரண்டு மட்டுமே 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. அதனால் இந்த இரண்டு மன்றத்தில் நீங்கள் நேரம் செலவிட்டால் தமிழும் இணையமும் எனும் சகாப்தத்தில் நல்ல இடங்களும் உண்டு என்று ஆறுதல் கிடைக்கும். இது போலவே சில தமிழ் குழுக்களும் கண்ணியம் காத்து வருகின்றன. அடே அது என்ன என்று கேட்க தோன்றும். அதை பற்றி எழுதினால் அது விளம்பரமாகிவிடும். அதனால் நீங்களே கண்டுபிடித்துக் கொள்ளுங்கள். அனுபவத்தினால் வரும். எனக்கு வந்துள்ளது.
  7. ஓர்குட் - பழைய நண்பர்களை சந்திக்கவும் புதிய உறுவுகளை ஏற்படுத்தவும் ஒரு அருமையான இணைய யோசனை. இதில் துஷ்பிரயோகம் மிகவும் அதிகம். நீங்கள் உங்கள் புகைப்படங்கள் இட்டுக் கொள்ள ஆசைப்படலாம். உங்கள் நண்பர்களுக்கு உங்கள் ஓர்குட் ஐடி தர ஆடைப்படலாம். இப்படியெல்லாம் செய்தால் உங்கள் மீது இருக்கும் வெறுப்பை உங்கள் நண்பர்களின் பகுதிக்கு சென்று scrap எனும் பெயரில் crap எழுதி தள்ளிவிடுவார்கள். உங்கள் நண்பர்களையே இழக்க நேரிடும். மேலும் உங்களை போலவே ஒரு ஐடியை துவக்கி உங்கள் தளத்திற்கு வந்து செல்லும் பெண் நண்பர்களின் தளத்திற்கு சென்று அசிங்கங்கள் எழுதி தள்ளுவார்கள். அதனால் நீங்கள் காதலிக்கும் பெண்ணையோ காதலிக்கப்போகும் பெண்ணையோ மனைவியையோ ஓர்குட்டில் சேர்க்காமல் இருப்பது நல்லது. காரணம் உங்கள் வாழ்கை நன்றாக இருக்க வேண்டும் எனும் நப்பாசை தான். கூடுமானவரை தங்களுக்கு அக்கா தங்கை இருக்கிறார்கள் என்று இணைய உலகத்திற்கு தெரியாமல் இருப்பது நல்லது.

    பரிமாற்றம் தொடரும்....


--
Posted By leomohan to மோகன் வழங்கும் தமிழ் தேன் at 3/30/2007 05:35:00 AM
Reply all
Reply to author
Forward
0 new messages