காடை வளர்ப்பு
காடை வளர்ப்பின் முக்கிய அம்சங்கள்
|
கொட்டகை அமைப்பு:
| ||||||||||||||||||||||||||||||||||
|
தீவனப் பாரமரிப்பு
|
|
காடை பண்ணை பாரமரிப்பு முறைகள்
|
|
காடைக்குஞ்சு பராமரிப்பு முறைகள்
|
|
இனப்பெருக்கம்
|
|
காடைகளில் ஏற்படும் நோய்கள்
|
|
காடை இறைச்சி
|
|
காடை வளர்ப்பில் உள்ள சிரமங்கள்
|
முயல் வளர்ப்பு
முயல் வளர்ப்பு
இனங்கள்
|
இனங்கள் |
விளக்கம் |
|
சோவியத் |
இந்த இனம் சோவியத் குடியரசு நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. இதன் எடை 4.5-5 கிலோகிராம் வரை இருக்கும். இது அதிகம் இறைச்சிக்காக வளர்க்கப்பட்டாலும் இதன் ரோமங்கள் கைவினைப் பொருட்கள் செய்யப் பயன்படுகின்றன. |
|
சாம்பல் நிற ஜெயிண்ட் |
இதுவும் சோவியத் குடியரசு நாடுகளைச் சேர்ந்த இனம், எடை 4.5-5 கிலோ வரை இதன் ரோமம் அடர்த்தியாகக் குழியுடன் காணப்படுவதால் இது ‘குழிமுயல்’ எனத் தவறாகக் கருதப்படுகிறது. இது உரோமம் மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகிறது. |
|
நியூசிலாந்து வெள்ளை |
இவ்வினம் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டது. உரோமங்கள் வெள்ளை நிறம், தோல் நிறமற்றது. மெலனின் நிறமி இல்லாததால் கண்ணின் நிறம் சிவப்பாக இருக்கும். 4-5 கிலோ எடையுடன் இது இறைச்சி மற்றும் உரோமத்திற்காக வளர்க்கப்படுகிறது. |
|
வெள்ளை நிற ஜெயிண்ட் |
இதுவும் சோவியத் குடியரசின் இனம் ஆகும். இது தோற்றத்தில் நியூசிலாந்து வெள்ளை போன்றே இருக்கும். உரோமம் வெள்ளை நிறத்துடனும், தோலும் கண்களும் சிவப்பு நிறத்துடனும் காணப்படும். ஆனால் உடல் சற்று நீளமாகக் காணப்படும். |
|
அங்கோரா |
3 கிலோ மட்டுமே எடைகொண்ட பழங்காலத்திலிருந்து வளர்க்கப்படும் சிறிய இனம் ஆகும். கம்பளி தயாரிக்க உதவும் வெள்ளை நிற உரோமங்களுடன் கூடியது. ஒரு வருடத்திற்கு 3-4 முறை உரோமம் கத்தரிக்கலாம். 300-1000 கிராம் அளவு உரோமம் கிடைக்கும். |
|
கலப்பு இனங்கள் |
மேலே கூறப்பட்ட அயல்நாட்டு இனங்களுடன் உள்ளூர் இனங்கள் கலப்பு செய்யப்பட்டு புதிய இனங்கள் உருவாகின்றன. கேரள தட்பவெப்பநிலைக்கு இவ்வினம் மிகவும் ஏற்றது. எடை 4-4.5 கிலோ இருக்கும். உரோமங்களின் நிறம் ஒவ்வொரு முயலுக்கும் வேறுபடும். |
|
|
|
|
சோவியத் சின்செல்லா |
அங்கோரா |
சாம்பல் நிற ஜெயிண்ட்
வீட்டமைப்பு மற்றும் இடவசதி
சரியான வெளிச்சத்துடன் காற்றும், நல்ல இடவசதியும் கொண்ட கொட்டகை / வீட்டமைப்பு முறை முயல் வளர்ப்பிற்கு மிகவும் அவசியம் சரியான கூண்டுகள் அல்லது மரத்தால் அமைக்கப்பட்ட பெட்டியமைப்புகளில் குடிநீர், தீவன வசதிகள் முறையாக வழங்கப்பட்டிருக்கவேண்டும். முயல்கள் ஓடிவிடாமல் இருக்க சுற்றுப்புற அமைப்பு கொண்ட வீட்டமைப்பு அவசியம். வளர்க்கும் இடம், தட்பவெப்பநிலை, பொருளாதார வசதியைப் பொறுத்து பல முறைகள் முயல் வளர்ப்பில் பின்பற்றப்படுகின்றன. மூங்கில்கள், பழைய பெட்டிகள், மரத்துண்டுகள், செங்கற்கள், ஏஸ்பெஸ்டாஸ் சீட்டுக்கள் மற்றும் கட்ச் தரைகள், சுவர்கள் போன்றவை பொதுவாக உபயோகிக்கும் பொருட்கள்.
முயல் வளர்ப்பிற்கு உகந்த தட்பவெப்பநிலைகள்
ஒளி (வெளிச்சம்)
முயல்களின் இனப்பெருக்கத்தில் ஒளியானது முக்கிய பங்கு வகிக்கிறது. இயற்கை அல்லது செயற்கை ஒளி முயல்களுக்குக் கட்டாயம் வழங்கப்படவேண்டும். ஒரு ஆண் முயல் (இனக்கலப்பிற்குப் பயன்படுத்தப்படுவது) 8-12 மணி நேரம் ஒளி வழங்கப்பட்டிருக்க வேண்டும். அப்போது தான் அதன் உயிரணுக்கள் நல்ல ஓட்டத்துடன் இருக்கும். அதே போல் சினைத் தருணத்தில் இருக்கும் பெண் முயலானது குறைந்தது 6 மணி நேரத்திற்காவது வெளிச்சத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதன் இனப்பெருக்கத்திறன் நன்கு இருக்க இவ்வொளி மிகவும் அவசியம். இயற்கை வெளிச்சம் குறைவாக உள்ள இடங்களில் செயற்கை பல்புகளைப் பொருத்துதல் நலம்.பொதுவாக 100 வாட்ஸ் குமிழி விளக்கு (பல்பு) அல்லது 40 வாட்ஸ் ஒளிரும் குழாய் விளக்குகளைப் பயன்படுத்தலாம். இப்பல்புகளை 3 மீட்டர் இடைவெளி விட்டு தரையிலிருந்து 2 மீட்டர் தொலைவில் இருக்குமாறு 16 மணி நேரம் எரியுமாறு அமைத்தல் வேண்டும். இந்தப் பல்புகளை அடிக்கடி அனைத்துப் பின் போடக்கூடாது. காலை 6 மணியிலிருந்து இரவு 8 மணி வரை எரியுமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். அடிக்கடி விளக்கை அணைத்துப் போடுவதால் அவை பயந்து, ஒன்றன் மேல் ஒன்று தாவிக் காயங்களை அனைத்துப் போடுவதால் முயல்கள் பயந்து, ஒன்றன் மேல் ஒன்று தாவிக் காயங்களை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்புண்டு. இளம் முயல்களுக்கு ஓரிரு மணி நேர வெளிச்சம் போதுமானது.
வெப்பநிலை
5 டிகிரி செல்சியஸ் இருந்து 33 டிகிரி செ வரை முயல்கள் வெப்பத்தைத் தாங்கக்கூடியவை. எனினும் முயலுக்கு உகந்த வெப்பநிலை அளவு 10 டிகிரி செல்சியஸ் - 26 டிகிரி செல்சியஸ். நமது இந்தியத் தட்பவெப்பநிலைக்கு முயல்கள் மிகவும் ஏற்றவை. சூடான காற்றை விட முயல்கள் குளிர்காற்றையே விரும்பும். எனினும் உயரமான மலைப்பகுதிகளில் இவைகள் வளர்வது இல்லை. கோடைகாலங்களில் சிறிது வெப்ப அழுத்தம் ஏற்படலாம். சரியான குளிர்ச்சியும், காற்றும் அளிப்பதால் இவ்வழுத்தத்தைத் தணிக்கலாம். வறட்சி ஏற்பட்டு அதனால் முயல்கள் பாதிக்கப்படாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். வயதான முயல்கள் தன் உடலை நீட்சிப்பதன் மூலம் வெப்பத்தை தாங்கிக் கொள்ளலாம்.இளம் முயல்களைத் தகுந்த முறையில் பாதுகாக்கவில்லையெனில் அவை வெப்பத்தைத் தாங்க இயலாமல் பாதிக்கப்படலாம்.
ஈரப்பதம்
முயல்கள் அதிக ஈரப்பதத்தையும் தாங்கக்கூடியவை, எனினும் ஈரப்பதம் 50 சதவிகிதமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதிக வெப்பமும் அதிக ஈரப்பதமும் முயல்களில் நோய்த் தாக்கம் ஏற்படுத்தலாம். எனவே மழைக்காலங்களில் ஈரப்பதத்தைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம். எந்த ஒரு நீர்க்கசிவும் உள்ளே ஏற்படாதவாறு தண்ணீர்க்குடுவைகளை வெளியிலேயே வைப்பது நல்லது.
காற்றோட்டம்
சுத்தமான புகையற்ற காற்று முயல்களுக்கு மிக அவசியம். முயல் பண்ணையில் தூயகாற்று தங்கு தடையின்றி உலவுமாறு அமைந்திருத்தல் வேண்டும். கோடைக்காலங்களில் காற்று குளிர்ந்ததாக இருத்தல் வேண்டும். வறண்ட காற்று முயல்களின் சுவாசத்திற்கு ஏற்றதல்ல. எனவே ஆங்காங்கு மரங்களை நட்டு வளர்த்தல் நன்மை பயக்கும்.
சப்தம்
முயல்களில் ஒலியின் பாதிப்பு அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை எனினும் முயல்கள் அதிக சப்தத்தை விரும்புவதில்லை. குறிப்பாக குட்டிகள் பாலூட்டும் போதும், இனச்சேர்க்கையின் போதும் சிறு சப்தம் கூட பாதிப்பு ஏற்படுத்தலாம்.
(ஆதாரம்:நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் - முயல் வளர்ப்பு)
முயல் வளர்ப்பில் பின்பற்றப்படும் முறைகள்
கூண்டு முறை
கூண்டின் உயரம் 50 செ.மீ ஆகவும், அகலம் 70 செ.மீ நீளம் 90 செ.மீ ஆகவும் இருத்தல் வேண்டும். இது பெண் முயல்களுக்கான கூண்டின் அளவு. ஆண் முயல்களுக்கு இவை முறையே 45 செ.மீ, 60 செ.மீ, 60 செ.மீ. கூண்டு செய்யும் கம்பி அளவு அடிப்பாகத்தில் 1 செ.மீ x 1 செ.மீ பக்கங்களில் 2.5 செ.மீ x 2.5 செ.மீ அளவும் இருக்கவேண்டும். கூண்டின் அடிப்பாகம் தரைமட்டத்தில் இருந்து 75-90 செ.மீ உயரத்தில் இருக்குமாறும், எலி, பாம்பு தொல்லைகள் இல்லாதவாறும் கூண்டுகளை வைக்கவேண்டும். கூண்டுகள் நல்ல குளிர்ந்த நிழற்பாங்கான இடத்தில் அமைக்கப்படவேண்டும்.
கொட்டில் முறை
தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட முயல் குட்டிகளை 1.2 மீட்டர் அகலம், 1.5 மீ நீளம், 0.5 மீ உயரம் கொண்ட கொட்டிலில் அடைக்கலாம். ஒரு கொட்டிலில் 20 குட்டிகள் வரை அடைக்கலாம். பருவமடைந்த ஆண், பெண் குட்டிகளை ஒரு கொட்டிலில் அடைத்தால் அவை ஒன்றோடொன்று சண்டையிட்டுக் காயங்கள் ஏற்படுத்திக் கொள்ளும். எனவே ஒவ்வொன்றையும் தனியே அடைத்தல் சிறந்தது.
குடிசை முறை
நிழலான இடத்தில் குடிசைகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். தரை கான்கிரீட் சிமெண்ட் தளமாக இருத்தல் நலம். குடிசையைச் சுற்றிலும் சுற்றுச் சுவர் சிறிது உயரத்துடன் பாம்பு, எலி போன்றவற்றிலிருந்து பாதுகாப்பானதாக இருத்தல் வேண்டும். மேற்கூரை, மரக்கட்டை, ஆஸ்பெஸ்டாஸ் அல்லது இரும்புக் கம்பிகள் கொண்டதாக இருக்கலாம்.
பறவைக்கூடு முறை
இம்முறையில் பல அளவுகளில் கூடுகள் இருந்தாலும் 50 செ.மீ நீளமும், 30 செ.மீ அகலமும், 15 செ.மீ உயரமும் கொண்ட அளவு பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. இது மரத்தால் செய்யப்பட்டாலும் காற்றும், வெளிச்சமும் புக வசதியாக இருக்கவேண்டும். கழிவுகள் வெளியேற வசதியாகக் கீழே கம்பி வலை போல் பின்னப்பட்ட அடிப்பாகம் அமைக்கலாம்.
தீவனமும் நீரும்
அலுமினியம் அல்லது கால்வனைசிங் செய்யப்பட்ட இரும்பினால் ஆன தீவனத்தொட்டியைப் பயன்படுத்தலாம். தீவனத் தொட்டியானது கூண்டின் ஓரங்களில் வெளியிலிருந்து கதவைத் திறக்காமலே தீனியை உள்ளே கையைவிட்டுப் போடுமாறு அமைப்பது நன்று. கூண்டுகளில் நீர் வைக்க மண்பானைகள் உபயோகிக்கப்படுகின்றன.தானாக நீர் வெளியாகும் குழாய் அல்லது புட்டியில் நீர் அளிப்பதே சிறந்தது.
தீவனப் பராமரிப்பு
முயல்களின் தீவனத் தேவை
முயல்களின் ஊட்டச்சத்துக்கள் அதன் வயது மற்றும் உற்பத்தித் திறனைப் பொறுத்தே அமையும். சிறந்த வளர்ச்சியைப் பெற முயலின் வயதையும் உட்கொள்ளும் திறனையும் பொறுத்து உணவளித்தல் வேண்டும். பொதுவான ஒரு வகை உணவையே அனைத்து முயல்களுக்கும் கொடுக்க வேண்டும். நல்ல இலாபம் ஈட்ட முயல்களுக்கு வளர்ச்சியை ஊக்குவிக்க ஒரு வகைத் தீவனமும், பால் உற்பத்தியை அதிகரிக்க ஒரு வகைத் தீவனமென இரண்டு வகைகளைப் பின்பற்றுதல் நன்று.
வளர்ச்சிக்கான ஊட்டச்சத்துக்கள்
குட்டிகளுக்கான வளர்ச்சிக்கெனப் பல உயிர் மற்றும் புரதச்சத்து நிறைந்த தீவனம் அளிக்கவேண்டும். இத்தீவனம் வயது அதிகரிக்க அதிகரிக்க அளவு குறையும். உட்கொள்ளும் தீவனத்தை விட அதிகமாகவே வளர்ச்சியடையும் குட்டிகளுக்கான தீவனம் அதிக விலையாக இருக்கும் பட்சத்தில் எளிய தீனிகளை நாமே தயாரித்து அளிக்கலாம்.
22 சதவிகிதம் பண்படா புரதமுள்ள குட்டிகளுக்கான தீனியில் அடங்கியுள்ள பொருட்கள்
|
பொருட்கள் |
அளவு |
|
ஓட்ஸ் (அரைத்தது) |
19.0 |
|
கோதுமை (அரைத்தது) |
10.0 |
|
பார்லி (அரைத்தது) |
10.0 |
|
கோதுமை தவிடு |
6.4 |
|
சோயாபீன் கழிவு |
12.0 |
|
மீன் கழிவு |
3.2 |
|
குதிரை மசால் (ஹைட்ரஜன் ஒடுக்கம் செய்யப்பட்ட) |
23.7 |
|
ரேப்ஸ்டு கழிவு |
2.5 |
|
உலர்ந்த தயிர்த் தெளிவு |
4.0 |
|
நொதித்து உலர்ந்த ஈஸ்ட் |
3.0 |
|
கரும்புச்சக்கை |
1.0 |
|
அயோடைஸ்டு உப்பு |
0.5 |
|
வைட்டமின்கள், தாதுக்களின் கலவை |
0.775 |
|
டிஎல் மெத்தியோனைன் |
0.07 |
|
வாசனைத் தீவனம் |
0.05 |
தாயிடமிருந்து குட்டிகளைப் பிரிக்கும் போது அளிக்கவேண்டிய ஊட்டச்சத்துக்கள்
தாயிடமிருந்து குட்டி முயல்களைப் பிரிக்கும் 30-45வது நாளில் அதன் தீவனம் பாலில் இருந்து திட நிலையிலுள்ள தீவனங்களுக்கு மாறுகிறது. அப்போது அதிக நார்ச்சத்து மிகுந்த ஸ்டார்ச் குறைந்த தீவனம் அளிக்கவேண்டும். அதன்பின் இரண்டு வாரங்கள் கழித்து அதன் செரிக்கும் தன்மை அதிகரிக்கும் போது நல்ல ஸ்டார்ச் சத்து நிறைந்த தீவனங்களை அளிக்கலாம். நல்ல உற்பத்தித் திறன் பெற நன்கு செரிக்கக்கூடிய அதிக கார்போஹைட்ரேட் அடங்கிய தீவனங்கள் கொடுத்தல் வேண்டும்.
சினைத் தருணத்தில் தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள்
சினைத்தருணத்தில் அதிக புரதம், ஆற்றல், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் தேவைப்படுகிறது. நல்ல உற்பத்திக்குக் குறைந்தது 18 சதவிகிதம் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் தேவை. பெண் முயல்கள் அடிக்கடி கருத்தரித்து குட்டி ஈன்று கொண்டே இருப்பதால் இவற்றுக்கு அதிக கால்சியம், பாஸ்பரஸ் தேவைப்படுகிறது. குட்டிகளுக்குப் பாலூட்டவும் அதிக சத்துக்கள் தேவைப்படுகிறது.
அதே சமயம் குட்டிகள் நீண்ட நாள் பாலூட்ட அனுமதித்தால் அவைகள் குண்டாகி ஏதேனும் நோய் ஏற்படலாம். குட்டி ஈன்ற 21 நாட்களில் பால் சுரப்பு அதிகமாக இருக்கும்.பிறகு குறைய ஆரம்பித்து விடும். அடுத்த சினை தரித்தவுடன் பால் சுரப்பு நாளங்கள் மீண்டும் அதன் வேலையைத் துவக்கிவிடும்.
சினைக்கால உணவூட்டம்
|
பொருட்கள் |
கலந்துள்ள அளவு |
|
முயல் மசால் கழிவுகள் |
40.0 |
|
பார்லே அரைத்தது |
20.25 |
|
கோதுமை மாவுக் கழிவு |
20.0 |
|
சோயாபீன்ஸ் கழிவு |
14.0 |
|
கரும்புச் சக்கை |
3.0 |
|
கொழுப்பு |
1.5 |
|
டை கால்சியம் பாஸ்பேட் |
0.75 |
|
உப்பு (சிறிதளவு) |
0.5 |
|
ஓட்ஸ் அரைத்தது பார் |
26.5 |
ஊக்க உணவுகள்
சிறிய அளவிலான முயல் வளர்ப்புப் பண்ணைகளில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய வைக்கோல், தேர்ந்தெடுக்கப்பட்ட பசும்புல் மற்றும் இதர தீனிகள் அளிப்பதே போதுமானதாகும். அதிக புரதம் மற்றும் ஆற்றல் கொண்ட தீவனங்கள் சிறிதளவு அளிக்கலாம்.
தீவன அட்டவணை
நாளொன்றுக்கு 100 கிராம் புற்களும், 200-250 கிராம் சமச்சீரான தீவனம் ஒரு சினை முயலுக்கு அவசியம் ஆகும்.
உட்கொள்ளும் உணவு
தினசரி உட்கொள்ளும் உணவு அதன் உடல் எடையில் 5 சதவிகிதம் ஆகும். அதே போல் முயலானது தனது உடல் எடையில் 10 சதவிகிதம் அளவு நீர் அருந்தும். சினை முயல்களுக்கு இந்த அளவு மேலும் அதிகரிக்கும். முயல் வளர்ப்பில் சரியான அளவு தீவனங்கள் மற்றும் தூயநீர் வழங்குதல் அவசியம் ஆகும்.
முயல்களின் உணவூட்டம்
குட்டிகள் பிறந்த முதல் 15-21 நாட்களுக்கு பால் மட்டுமே அவைகளுக்கு உணவு. எனவே குட்டிகள் அனைத்தும் நன்கு பால் குடிக்கின்றனவா என்பதைக் கவனித்துக் கொள்ளல்வேண்டும். இல்லையனில் நன்கு பால் குடிக்கும் குட்டிகள் நன்றாக வளரும். பால் ஊட்டத் தெரியாத குட்டிகள் இறந்துவிடும். இந்தச் சூழ்நிலையில் தாய் முயலில் பால் ஒழுங்காக சுரக்கிறதா எனப்பார்த்து அதற்கேற்ப தீவனமும் நீரும் அளித்தல்வேண்டும்.
15-21 நாட்களிலிலேயே குட்டிகளுக்குச் சிறிது சிறிதாக புற்கள், தீனிகளை கொறிக்கச் செய்து பழக்க வேண்டும். 21 நாட்களுக்குப் பின் குட்டிகள் பாலை குறைத்துக் கொண்டு தீனிகளைக் கொறிக்க ஆரம்பித்து விடும். தாயிடமிருந்து பிரிக்கும் காலங்களில் இருந்தே பசும்புற்கள், காய்கறிகள் மற்றும் அடர் தீவனங்கள் அளிக்கவேண்டும்.
உணவளிக்கும் நேரம்
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சரியான இடைவெளிவிட்டு உணவளித்தல் நலம். அடர் தீவனங்களை காலை 7.00 மணி மற்றும் மாலை 5 மணிக்கும் அளிக்கலாம். பசும் புற்களை மாலை நேரங்களில் அவை மிகச்சுறுசுறுப்பாக இருக்கும் நேரங்களில் அளிக்கலாம். உணவானது புதிதாகவும், எந்த குப்பை, அழுக்கின்றி சுத்தமானதாகவும் இருக்கவேண்டும்.
உணவளிக்கும் போது கவனிக்க வேண்டியவை
தீவனத்தொட்டி / பாத்திரங்கள்
பலவகையான தீவனப் பாத்திரங்கள் மற்றும் தீவன அமைப்புகள் முயல் வளர்ப்பில் பயன்படுத்தப்படுகிறது. கூண்டுகளில் வெளியிலிருந்தே உள்ளே தீவனம் வைப்பது போல் அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. தரையிலிருந்து தீவனத் தொட்டி 5-8 செ.மீ உயரத்தில் இருக்கவேண்டும். அப்போது தான் முயல் கழிவுகள் தீவனத்தொட்டியில் விழாமல் இருக்கும். நீரைத் திறந்தவெளியில் வைப்பதை விட புட்டிகளில் அடைத்து வைத்தல் சிறந்தது. மண் பானை (அ) அலுமினிய கிண்ணங்கள் போன்றவை மலிவான பொருட்களாகும். தீவனங்கள் அதிகம் சிந்தி இறையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். தண்ணீர் புட்டிகளை சுத்தமாகக் கழுவிப் பயன்படுத்த வேண்டும். பெரிய பண்ணைகளில் நீரைத் தானாக செல்லுமாறு அமைத்தல் ஆள்கூலியை மிச்சப்படுத்தும். எந்த வகைத் தொட்டிகளாயினும் அவற்றைக் கழுவி சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும்.
(ஆதாரம்:நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் - முயல் வளர்ப்பு)
இரு கலப்புத் தீவனங்களின் கலவைகள்
|
பொருட்கள் |
அளவு |
|
கொண்டைக்கடலை |
14 பங்கு |
|
கோதுமை |
30 பங்கு |
|
கடலை பிண்ணாக்கு |
20 பங்கு |
|
எள்ளுப் பிண்ணாக்கு |
20 பங்கு |
|
இறைச்சி மற்றும் எலும்புத்தூள் |
10 பங்கு |
|
உளுந்து உமி |
24 பங்கு |
|
தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் |
1-5 பங்கு |
|
உப்பு |
0.5 பங்கு |
|
கொண்டைக்கடலை |
10 பங்கு |
|
கடலைப்பிண்ணாக்கு |
20 பங்கு |
|
எள்ளுப்பிண்ணாக்கு |
5 பங்கு |
|
தீட்டப்பட்ட அரிசி |
35 பங்கு |
|
கோதுமை |
28 பங்கு |
|
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் |
1.5 பங்கு |
|
உப்பு |
0.5 பங்கு |
|
|
100 |
முயல்களுக்கான தீவன அளவு அட்டவணை
|
முயல்கள் |
உடல் எடை (தோராயமாக) |
நாளொன்றுக்குக் கொடுக்கவேண்டியது | |
|
அடர் தீவனம் |
பசும்புல் | ||
|
ஆண்முயல் |
4-5 கிலோ |
150 கிராம் |
600 கிராம் |
|
பெண் முயல் |
4-5 கிலோ |
150 கிராம் |
600 கிராம் |
|
சினை முயல்கள் |
- |
200 கிராம் |
700 கிராம் |
|
வளரும் முயல்கள் |
600-700 கிராம் |
50 கிராம் |
200 கிராம் |
அகத்தி பயிரிடப்படும் தீவனப்பயிர்களான கினியாடெஸ்மான்தஸ். லூசர்ன், ஸ்டைலோ போன்றவையும் பலா இலை, முள் முருங்கை, கல்யாண முருங்கை இலை போன்றவைகளையும் கொடுக்கலாம்.
மேலும் முயல்களில் வளரும் முயல்களுக்கு 100 கிராம் உடல் எடைக்கு 10 மிலி அளவும் பாலூட்டும் முயலுக்கு 100 கிராம் உடல் எடைக்கு 90 மிலி அளவும் தூய தண்ணீர் வழங்கப்படவேண்டும்.
இனப்பெருக்கம்
இனப்பெருக்கத்திற்கான முயல்களைத் தெரிவு செய்தல்
நல்ல, ஆரோக்கியமான முயல்களிடமிருந்து தான் வளமான குட்டிகளைப் பெற முடியும். ஆகவே சிறந்த இனங்களைத் தேர்வு செய்தல் அவசியம்.
ஆண் முயல்
இனச்சேர்க்கைக்குப் பயன்படுத்தம் ஆண் முயலுக்கு குறைந்தது 8 மாத வயதாவது இருக்கவேண்டும். நல்ல கிடா முயலானது 3 வருடங்கள் வலை நல்ல இனவிருத்தித் திறன் பெற்றிருக்கவேண்டும். இளம் கிடாக்கள் 3 (அ) நான்கு நாட்கள் இடைவெளிவிட்டு ஒரு பெட்டை முயலுடன் சேர்க்கலாம். 12 மாத வயதிற்குப் பிறகு வாரத்திற்கு 4-6 பெட்டைகளுடன் சேர்க்கலாம். 6 வருடத்திற்குப் பின்பு அதன் விந்தணு உற்பத்தி மிகவும் குறைந்து விடும். ஆதலால் அதைப் பண்ணையிலிருந்து கழித்து விட வேண்டும். கிடாக்களின் இனவிருத்தித் திறன் குறையாமல் இருக்க நல்ல உணவூட்டமும், பராமரிப்பும் அவசியம். புரதம், தாதுக்கள், விட்டமின்கள் நிறைந்த உணவளித்தல் அவசியம். அதோடு கிடாக்களைத் தனித்தனியே பராமரித்தால் அவை சண்டையிட்டுக் கொள்வதைத் தடுக்கலாம்.
பெண் முயல்
இனவிருத்திக்குப் பயன்படுத்தும் பெண் முயல் பெட்டை முயல் எனப்படும். இது அதிக ஆரோக்கியமும் இனவிருத்தித்திறனும் பெற்றிருத்தல் அவசியம். பெட்டை முயலானது தட்பவெப்பநிலை, இனம் மற்றும் உணவூட்ட அளவு ஆகியவற்றைப் பொறுத்தே அதன் இனப்பெருக்கத்திறன் அமையும். பெரிய இனங்களை விடச் சிறிய இனங்கள் விரைவிலேயே பருவமடைந்து விடுகின்றன. சிறிய இனங்கள் 3-4 மாதங்களிலும், எடை மிகுந்த இனங்கள் 8-9 மாதங்களிலும் பருவமடைகின்றன. 3 வருடங்கள் வரை மட்டுமே பெண் முயல்களை இனப்பெருக்கத்திற்குப் பயன்படுத்தவேண்டும்.
இனப்பெருக்கம்
கருமுட்டை வெளிப்படுதல்
முயல்களில் கருமுட்டை வெளிப்படுவது தன்னிச்சையாக நடப்பதில்லை. இவைகளில் ஓஸ்டிரஸ் சுழற்சி காணப்படுவதில்லை. எனவே இனச்சேர்க்கை மூலம் கருமுட்டை வெளிவருமாறு தூண்டப்படுகிறது. இனச்சேர்க்கைத் தூண்டலானது இனக்கலப்பினாலோ, வெளிப்புறத் தூண்டலினாலோ, இனப்பெருக்க அணு உற்பத்தித் தூண்டுதல் மூலமாகவோ, கருமுட்டை வெளிவருதல் மூலமாகவோ நடைபெறுகிறது. சில முறை பெண் முயல்களே ஒன்றையொன்று தூண்டிக் கொள்வதும் உண்டு. இதனால் பொய்ச்சினை மற்றும் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புண்டு.
இனச்சேர்க்கை செய்த 10 மணி நேரம் கழித்துதான் கருமுட்டை வெளிவரும். ஆண்டு முழுவதும் முயல்கள் இனச்சேர்க்கைக் கொண்டாலும், சுரப்பிகள் விரிந்து பின்பு பின்னோக்கிச் செல்லும் சுழற்சியின் 15-16 நாட்களில் தான் அவற்றின் கருமுட்டை வெளிப்படுவது அதிகமாக இருக்கும். பிற நாட்களில் பெண் முயல்கள் இனச்சேர்க்கையை விரும்பவதில்லை. சினைப்பையை இயந்திரம் மூலம் தூண்டி விடுவதன் மூலமாகவும் கரு முட்டை வெளிவருவதைத் துரிதப்படுத்தலாம்.
இனச்சேர்க்கை
சினைக்காலம்
முயல்களின் சினைக்காலம் 28-32 நாட்கள் ஆகும். பெண் முயல் கூண்டுக்குள் வைக்கோல், புற்கள் போன்ற பொருட்கள் வைப்பதால் சினை முயல் தன் குட்டிகளுக்கு படுக்கையைத் தயார் செய்து கொள்ளும். குட்டி ஈனுவதற்கு ஒரு வாரம் முன்பே வைக்கோல், புற்கள், மரத்துண்டுகள் போன்ற பொருட்களை உள்ளே போட்டு வைத்துக் கொள்ளவேண்டும். மரத்தூளைப் படுக்கை தயார் செய்ய தனது சொந்த முடியையே பிய்த்துக் கொள்ளும். சரியான தீவனம் மற்றும் தூய தண்ணீர் சினைக்காலத்தில் வழங்கப்படவேண்டும். சூழ்நிலை மாற்றங்கள் சினை முயல்களைப் பாதிக்காமல் பாதுகாத்தல் அவசியம்.
சினையை உறுதிப்படுத்தும் சோதனைகள்
உடல் எடை அதிகரிப்பு
கலப்பு செய்து 30 நாட்கள் கழித்து உடல் எடை 300-400 கிராம் எடை (பெரிய இனங்களில்) கூடி இருக்கும்.
குட்டி ஈனுதல்
பொதுவாக முயல்கள் இரவில் தான் குட்டி ஈனுகின்றன. அவை குட்டி ஈனும் போது எந்த ஒரு தொந்தரவையும் விரும்புவதில்லை. 7 - 30 நிமிடத்திற்குள் குட்டி ஈனுதல் நடைபெற்று முடிந்து விடும். சில சமயம் எல்லாக் குட்டிகளும் தொடர்ந்து வெளி வராமல், சில குட்டிகள் பல மணி நேரம் கழித்தும் வெளிவரலாம். அச்சமயத்தில் ஆக்ஸிடோசின் ஊசி போடப்பட்டு குட்டிகள் வெளிக்கொணரப்படும். குட்டி போட்டவுடன் தாய் முயல் குட்டிகளை நக்கி சினைக்கொடியை உண்டு விடும். பிறந்த குட்டிகள் தாயிடம் பாலூட்ட முயலும். அவ்வாறு பாலூட்ட இயலாத குட்டிகள் உடல் நலம் குன்றி குட்டியிலேயே இறந்து விடும். தாய் முயலானது வேண்டுமளவு அதன் விருப்பத்திற்கு உணவு எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படவேண்டும். அப்போது தான் குட்டிகளுக்குத் தேவையான அளவு பால் கிடைக்கும். தாய் முயல் இரவில் தான் குட்டிகள் பால் குடிக்க அனுமதிக்கும். ஒரு ஈற்றில் 6-12 குட்டிகள் வரை ஈனலாம்.
தாயிடமிருந்து பிரித்தல்
குட்டிகள் பிறந்த சில நாட்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே முக்கிய உணவு. 3வது வாரத்தில் சிறிதளவு உரோமம் வளர்ந்த குட்டிகள் கண் திறந்து, தீவனங்களைக் கொறிக்க ஆரம்பிக்கும். 4 - 6வது வாரத்தில் குட்டிகளைத் தாயிடமிருந்து பிரித்து விடலாம். முதல் 21 நாட்களுக்கு மட்டுமே தாய்ப்பால் அவசியம். அதன் பின் பாலைக் குறைத்து பிற தீவனங்களைக் கொறிக்கப் பழக்குதல் வேண்டும்.
இனம் பிரித்தல்
குட்டிகளைப் பிரிக்கும் போதே இனங்களைக் கண்டறிந்து ஆண், பெண் முயல்களைத் தனித்தனியாகப் பிரித்து விடவேண்டும். குட்டிகளின் இனப்பெருக்க உறுப்பை கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் மூலம் அழுத்தும் போது ஆண்குறி காணப்பட்டால் ஆண் முயல் என்றும் அல்லது சற்று துவாரம் போல் காணப்பட்டால் அதைப் பெண் எனவும் கண்டறியலாம்.
(ஆதாரம்: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம், முயல் வளர்ப்பு)
முயலின் பல்வேறு வளர்ச்சி நிலைகளின் அடடவணை
|
இனக்கலப்பிற்குத் தேவையான ஆண் முயல்கள் |
10 பெண் முயல்களுக்கு 1 ஆண் முயல் |
|
முதல் கலப்பிற்கான வயது |
சிறிய இனங்கள் - 4 மாதம் |
|
இனப்பெருக்கத்திற்கான பண்புகள் |
முயல்கள் பல இனச்சேர்க்கைப் பருவம் கொண்டவை. பெண் முயல்களுக்கு பருவ சுழற்சி இல்லையெனினும் மாதத்தில் 12 நாட்கள் சூட்டில் இருக்கும். |
|
சினைத்தருண அறிகுறிகள் |
அமைதியின்மை, வாயைத் தரையில் அல்லது கூண்டில் அடிக்கடி தேய்த்தல், ஒரு புறமாக சாய்ந்து படுத்தல், வாலைத்தூக்குதல், தடித்த, கருஞ்சிவப்பான, ஈரமான பெண் உறுப்பு. |
|
இனச்சேர்க்கை |
சினை அறிகுறியுள்ள பெண் முயலை ஆண் முயலின் கூண்டிற்கு எடுத்துச் சென்று இனச்சேர்க்கைக்கு விடவேண்டும். சரியான பருவத்தில் உள்ள பெண் முயல் வாலைத்தூக்கி சேர்க்கையை ஏற்றுக் கொள்ளும். ஓரிரு நிமிடத்தில் இந்நிகழ்ச்சி நடந்த உடன், ஆண் முயல் கிரீச் என்ற சப்தத்துடன் ஒரு புறமாகவோ அல்லது பின்புறமாகவோ விழும். |
|
கருமுட்டை வெளிவருதல் |
இனச்சேர்க்கை நடந்த 10-13 மணி நேரங்களில் கருமுட்டை வெளிவரும். தன்னியல்பாக தூண்டப்படும் கருமுட்டை வெளிவரும். |
|
போலிச்சினை / பொய்ச்சினை |
பெண் முயல்கள் தங்களுக்குள்ளே மலட்டு இனப்புணர்ச்சி செய்து கொள்வதால் 16-17 நாட்கள் இவை சினைதரித்தது போல் காணப்படும். இச்சமயத்தில இவை குட்டிகளுக்குப் படுக்கை தயார் செய்ய தனது முடியை பிய்த்துக் கொள்ளும். பெண் இனப்பெருக்க உறுப்பும் சிறிது வீங்கிக் காணப்படும். |
|
சினைக்காலம் |
28-34 நாட்கள் (சராசரியாக 31 நாட்கள்) |
|
சினையை உறுதிப்படுத்தும் சோதனைகள் |
முயலின் சினையை உறுதிப்படுத்த கலப்பு சோதனை, எடை கூடும் முறை மற்றும் அழுத்தச் சோதனை முறை போன்றவற்றின் மூலம் அறியலாம். நன்கு அறிந்த நபரால் செய்யப்படும் அழுத்தச் சோதனை முறையே எல்லாவற்றிலும் சிறந்தது. |
|
குட்டிகளின் எண்ணிக்கை |
6-8 குட்டிகள் |
|
தாயிடமிருந்து குட்டிகளைப் பிரித்தல் |
4-6 வாரங்கள் |
|
அடுத்தடுத்த ஈற்றுகளுக்கு (குட்டி ஈனும்) உள்ள இடைவெளி |
2 மாதங்கள் (ஒரு ஈற்று முடிந்து குட்டியிணை பிரித்தவுடன் இனச்சேர்க்கைக்கு விட்டால் இந்த இடைவெளி ஒரு மாதமாகக் குறையலாம்). |
முயல்களின் நோய்களும் அவற்றிற்கான சிகிச்சைகளும்
|
வ.எண் |
நோயின் பெயர் |
காரணிகள் |
அறிகுறிகள் |
சிகிச்சை / மருந்துகள் |
குறிப்புகள் |
|
1. |
முயல் நச்சுயிரி நோய் |
வைரஸ் (தெள்ளுப் பூச்சிக்கொசு போன்ற உயிரிகளால் பரவுகிறது |
கண்களில் எரிச்சல்,நீர் கோர்ப்பு, காதுகள், ஆசனவாய், பிறப்பு உறுப்புகளில் நீர் கோர்ப்பு, கண் இமையும், சவ்வும் வீங்குதல், தோலில் இரத்த ஒழுக்கு |
சரியான பலன் தரும் சிகிச்சைகள் கிடையாது. |
இந்நோய் தாக்கினால் 100 சதவிகிதம் இறப்பு நேரும். சில நாடுகளில் தடுப்பூசிகள் கிடைக்கின்றன. |
|
2. |
பாஸ்சுரேல்லா நுண்ம நோய் |
பாக்டீரியா (பாஸ்சுரெல்லா மல்டோசிடா) |
மூச்சு விட முடியாமை, குறிப்பிட்ட இடத்தில் குடல் அழற்சி, காது குருத்தெலும்பு சீழ்கட்டி, மேலும் இரத்தத்தில் நுண்ணுயிரிகள் பெருகும். |
சல்ஃபர் குயினாக்ஸலைன், சல்ஃபடிமிடின் |
- |
|
3. |
இரத்தக் கழிச்சல் நோய் |
புரோட்டோசோவா எய்மெரியா மேக்னா எய்மெரிய பர்ஃபோ ரென்ஸ் எய்மெரியா ஸ்டெய்டே |
பசியின்மை, உடல் மெலிதல், வயிறு வீங்குதல் |
சல்ஃபர் குயினாக்ஸலைன், சல்ஃபமிடின் நைட்ரோ பியூரசோன் |
- |
|
4. |
கோழை குடல் அழற்சி |
எதன் மூலம் பரவுகிறது என்பது தெளிவாக அறியப்படவில்லை |
வயிற்றில் கோழை, கட்டி, வயிற்றுப் போக்கு ஏற்படும். வயிறு உலர்ந்து போய்விடும். |
சிறந்த தடுப்பு முறைகள் ஏதுமில்லை. |
- |
|
5. |
மடிவீக்க நோய் |
ஸ்டிரெப்டோ காக்கஸ், ஸ்டெஃபைலோ காக்கஸ் |
சிவந்த, ஊதா நிற நாளங்கள் |
எதிர் உயிர்ப்பொருள் |
- |
|
6. |
காது சொறி |
சோரோஃபீட்ஸ் குனிகுளி |
தலையை ஆட்டுதல், காதுகளால் காதை பிராண்டுதல், காதிலிருந்து கெட்டியான திரவம் வழியும் |
பென்ஸைல் பென்ஸோயேட் (அஸ்காபியல்). காதை சுத்தப்படுத்திய பிறகு மருந்தளிக்க வேண்டும். |
- |
|
7 |
உருளை நாடா |
பூஞ்சான் (டிரைக்கோபைட்டான் மைக்ரோஸ்போரான்) |
முடிகள் உடலின் சில பகுதிகளிலிருந்து உதிர்ந்து விடுவதால் அங்கங்கே சொட்டையாகக் காணப்படும் |
கிரிசியோஃபல்வான் |
- |
|
8. |
உடல் சொறி / சொறி நோய் |
நோட்டிரஸ் கேட்டி |
காது மற்றும் மூக்கிலிருக்கும் முடி விழுந்துவிடும். முன்னங்கால்களால் காது மற்றும் முகங்களை பிராண்டிக் கொள்ளும். |
பாதிக்கப்பட்ட இடங்களில் பென்சைல் பென் சோயேட் மருந்தை தடவலாம். 2.5 கிலோ எடல் எடையுள்ள முயலுக்கு 0.1 மிலி ஐவர்மெக்டின் மருந்தை ஊசி மூலம் செலுத்தலாம். |
- |
|
9. |
பின்னங்கால் புண் (அல்சரேட்டிவ் போடோடெர்மாடிட்டிஸ்) |
முயல்கள் கூண்டுகளின் கம்பித் தரையில் நிற்கும் போது உடல் எடை தாளாமல் கால்களில் புண் ஏற்படும். இப்புண்பட்ட இடங்களில் திசுக்கள் அழிந்து விடுவதால் வலி ஏற்படும். |
கணுக்கால் பகுதியில் புண்கள் ஏற்பட்டு, அழற்சி போன்று உடலில் தோன்றுகிறது. எடைகுறைதல், பின்பகுதியில் வீக்கம் ஏற்படுதல், காலை சாய்த்து நடக்கும். |
ஜிங்க் அயோடின் களிம்பு மற்றும் 0.2 சதவிகிதம் அலுமினியம் கரைசல் மேலும் பரவாமல் தடுக்க, நுண்ணுயிர்க்கொல்லியைப் பயன்படுத்தலாம். |
- |
வாத்து வளர்ப்பு
‘அனாட்டிடே’ குடும்பத்தைச் சார்ந்த அனைத்துப் பறவைகளுக்கும் வாத்து என்பது பொதுவான பெயர். அன்னப்பறவை, பெருவாத்து, சிறு வாத்து என பல வகை இக்குடும்பத்தினுள் அடக்கம். எனினும் சிறுவாத்துகளையே பொதுவாக வளர்ப்பது வழக்கம். இவை நல்ல நீரிலும், உப்புகொண்ட கடல்நீரிலும் கூட வாழக்கூடியவை. பெரும்பாலான வாத்து வகைகளில் அதன் அலகு அகண்டு தட்டையாகவும் இறையைத் தோண்டி எடுப்பதற்கு ஏற்றவாறு இருக்கும். வாத்துகள் பல்வேறுபட்ட உணவை எடுத்துக் கொள்பவை. புற்கள், நீர்த்தாவரங்கள், மீன்கள், புழுக்கள், சிறுநத்தைகள், தவளை போன்ற பலவகை உயிரிகளை உணவாக உண்கின்றன.
கோழி வளர்ப்பிற்கு அடுத்தபடியாக வாத்துவளர்ப்பு நம் நாட்டில் முக்கியமான ஒன்றாகும். நமது நாட்டின் மொத்த பறவைகள் எண்ணிக்கையில் 10 சதவீதமும், முட்டை உற்பத்தியில் 6-7 சதவீதமும் பங்கு வகிக்கிறது.
வாத்துகள் நாட்டின் கிழக்கு மற்றும் தென் மாவட்டங்களில் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிகம் வளர்க்கப்படுகின்றன. வாத்து இறைச்சி, கோழி இறைச்சியைவிட சற்று கடினமானவை. வாத்துகளைக் கையாள்வது எளிது. வாத்துகள் தமது இரண்டாவது வருடத்தில் கூட நல்ல முட்டை உற்பத்தியை அளிக்கக் கூடியவை.
இனங்கள்
காக்கி கேம்பெல் முட்டை உற்பத்திக்கும், வெள்ளை பெக்கின் இறைச்சிக்கும் பெயர்பெற்ற வாத்து இனங்களாகும்.
காக்கி கேம்பெல்
இவ்வகை லண்டனில் இருந்து இறக்குமதி செய்யப்ட்டவை. ஒரு முட்டை சுழற்சியில் 300 முட்டைகள் வரை தரக்கூடிய இனங்கள் இவை. கிரமப்புற மேம்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடிய முக்கியமான இனங்கள் இவை. முட்டை உற்பத்தியில் மிகச் சிறந்த இனம் காக்கி கேம்பெல் ஆகும். நாளொன்றுக்கு தவறாமல் 1 முட்டை என 300 முட்டைகள் எளிதில் கிடைக்கும். இவ்வின பெட்டை வாத்துகள் 2-2.2 கி.கி. மும் ஆண் வாத்துகள் 2.2-2.4 கி.கி எடையும் கொண்டிருக்கும். முட்டை எடை 65-75 கிராம் வரை இருக்கும்.
காக்கி கேம்பெல்
வெள்ளை பெக்கின்
வியட்நாமிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இவ்வினம் இந்தியச் சூழ்நிலைக்கு மிகவும் ஏற்பது. இவ்வினம் விரைவில் வளரும் தன்மைக்கும் நல்ல இறைச்சி உற்பத்திக்கும் புகழ் பெற்றது. குறைந்தளவு தீவனம் உண்டு நல்ல தரமான இறைச்சியை உற்பத்தி செய்யக்கூடியது. இது 2.2-2.5 கி.கி எடையை 42 நாட்களில் அடைந்துவிடும். இதன் தீவன மாற்றுத்திறன் விகிதம் 1:2.3 - 2.7 கி.கி ஆகும்.
வெள்ளை பெக்கின்
இனப்பெருக்க வாத்துகளின் பராமரிப்பு
6-8 வார வயதான ஆண், பெண் வாத்துகளை இனச் சேர்க்கைக்கெனத் தேர்ந்தெடுக்கலாம். நல்ல இனச்சேர்க்கைக்கு ஆண் வாத்துகள் பெட்டை வாத்துக்களை விட 4-5 வாரங்கள் வயது முதிர்ந்தவையாக இருக்க வேண்டும். ஆண் : பெண் விகிதம் 1:6 அல்லது 1:8 ஆக இருக்க வேண்டும். இறைச்சிக்காக வளர்க்கப்படும் இனங்களில் இவ்விகிதம் குறைவாகப் பராமரிக்கப்பட வேண்டும்.
இனப்பெருக்க வாத்துகள்
முட்டை வாத்துக்களின் அடைகாப்பு
அடைக்காப்புக் காலம் 28 நாட்கள் ஆகும். 6-8 வாரத்திற்குட்பட்ட வாத்துகள் இட்ட முட்டைகளையே குஞ்சு பொரிப்பதற்குப் பயன்படுத்த வேண்டும். ஆண், பெண் வாத்துகளை இனச்சேர்க்கைக்கு விட்ட 10 நாட்களுக்குப் பின்பு முட்டைகள் சேகரிக்கத் தொடங்கலாம். அழுக்கான முட்டைகளை கழுவிப் பயன்படுத்துதல் வேண்டும். இவ்வாறு கழுவுவதற்கு 27 டிகிரி செல்சியஸ் சூடான நீரில் கிருமிநாசினி உடனே உலரவைக்க வேண்டும். இல்லையெனில் முட்டை அழுகிவிட வாய்ப்புள்ளது.
அடைகாப்பு
14-16 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 80 சதவீகிதம் ஈரப்பதமுள்ள இடத்தில் முட்டைகளை சேகரித்து வைக்க வேண்டும். முட்டைகளை செயற்கை முறையில் பொரிக்க வைக்க செலுத்தப்பட்ட அடைகாப்பானைப் பயன்படுத்தலாம். எனினும் வாத்துமுட்டைகளுக்கு ஈரப்பதம் அதிகம் தேவைப்படுகிறது. எனவே இயஞ்சூடான நீரை இரண்டாம் நாளிலிருந்து அடைக்காப்பின் 23ம் நாள் வரை தெளிக்க வேண்டும். முட்டைகளை 24ம் நாள் வரை நாளொன்றுக்கு 4 முறையாவது திருப்பிவிடுதல் வேண்டும். 24ம் நாள் முட்டைகள் அடைகாப்பகத்தில் இருந்து பொரிப்பகத்திற்கு மாற்றப்படுகிறது.
குஞ்சுபொரித்தல்
37.5 முதல் 37.2 டிகிரி செல்சியஸ் அளவு வெப்ப நிலை இருக்க வேண்டும் (99.5-99டிகிரி ஃபாரன்ஹீட்டில்) அடைக்காப்பின் முதல் 25 நாட்களுக்கு 30-31டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பொரிப்பகத்தில் கடைசி 3 நாட்களுக்கு 32.7-33.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பராமரிக்கப்பட வேண்டும். முட்டைகளின் மீது கிருமிநாசினி கலந்த இளஞ்சூடான நீரை அரை மணி நேரம் நாளொன்றிற்கு என 25 நாட்களுக்குத் தெளிக்கலாம். 7ம் நாளில் ஒளியில் கருவளர் நிலை காணலாம்.
வாத்துக் குஞ்சுகள்
வெப்பமளித்தல் (0-4 வாரங்கள்)
காக்கி கேம்பெல் குஞ்சுகளுக்கு வெப்ப மூட்டும் காலம் 3-4 வாரங்கள். இறைச்சிவகை வாத்துக்குஞ்சுகலான பெக்கின் போன்ற இனங்களுக்கு 2-3 வாரங்கள் போதுமானது. அடைப்பானுக்குள் இடவசதி 90-100 ச.செ.மீ அளவு ஒவ்வொரு குஞ்சிற்கும் அளிக்கப்படவேண்டும். 29-32 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பநிலை முதல் வாரத்தில் அளித்தல் அவசியம். பின்பு இது வாரத்திற்கு 3 டிகிரி செல்சிஸ் என்று 24 டிகிரி செல்சியஸ் அளவு குறைக்கப்படுகிறது (4வது வாரத்தில்).
வாத்துக் குஞ்சுகளை கம்பி வலை அமைப்பிலோ, குளத்தின் மீதோ அல்லது பேட்டரிகளின் மீதோ வளர்க்கலாம். கம்பிவலையாக இருப்பின் 0.046 மீ2 அளவும் 3 வார வயது வரை ஒவ்வொரு குஞ்சிற்கும் அளிக்கப்படுதல் வேண்டும். 5-7.5 செமீ (2-3 அங்குளம்) ஆழமுள்ள நீர்த்தொட்டிகள் வாத்துக் குஞ்சுகளுக்குப் போதுமானது. ஏனெனில் அதிக ஆழத்தில் குஞ்சுகள் உள்ளே விழுந்துவிட வாய்ப்புண்டு.
வெப்பமளித்தல்
வளரும் வாத்துகளின் பராமரிப்பு
வாத்துகள் 4 வார வயது வரை மித தீவிர வளர்ப்பு முறையில் வளர்க்கப்படுகின்றன. இம்முறையில் ஒரு ஹெக்டரில் 5000 வாத்துக்குஞ்சுகள் வரை வளர்க்க முடியும். சிறிய அளவிலும் 200 குஞ்சுகள் வரை வளர்க்கலாம்.
தீவிர வளர்ப்பு முறையில், ஆழ் கூள முறை, அல்லது சட்டப் பலகை முறையில் வளர்க்கலாம். குடிதண்ணீர் தேவையான அளவு தாராளமாக வழங்கப்பட வேண்டும். நீர்த்தொட்டிகளின் ஆழம் வாத்துகள் அவற்றின் அலகை நனைக்க ஏற்றவாறு இருக்க வேண்டும். 13-15 செ.மீ ஆழம் இருத்தல் நலம்.
மித தீவிர வளர்ப்பு முறை
தீவிர வாத்து வளர்ப்பு முறையில் இட அளவு 4-5 ச.டி ஒரு வாத்திற்கு இருக்க வேண்டும். மித தீவிர வளர்ப்பு முறையில் 3 ச.அடி இரவிலும் பகலில் மேயவிடுவதற்கு 10-15 ச.அடி அளவும் போதுமானது. ஈரப்பதமுள்ள தீவனங்களை ‘V’ வடிவமான தீவனத்தட்டுகளில், 10-12.5 செ.மீ இடைவெளிவிட்டு வைக்கலாம். உலர் தீவன வகைகளில் அல்லது குச்சித்தீவனமாக இருப்பின் வாத்துகள் உண்ணக்கூடிய அளவு தீவனத்தை 5-7.5 செ.மீ இடைவெளியில் வைக்கலாம்.
வளர்ப்பு முறை
நல்ல முட்டை உற்பத்தி அதிகமுள்ள வாத்து வகைகள் 16-18 வார வயதில் முட்டையிடத் துவங்கிவிடும். 95-98 சதவீத முட்டைகள் காலை 9 மணிக்குள் இடப்பட்டுவிடும். ஒவ்வொரு 3 வாத்துகளுக்கும் 80 x 30 x 45 செ.மீ (12 x12 x18”) அளவுள்ள முட்டைக் கூடு பெட்டிகள் வைக்கப்படவேண்டும். முட்டையிடும் வாத்துகளுக்கு ஆண், பெண் இனச்சேர்க்கை விகிதம் 1:6-7 என்று இருக்கலாம். நல்ல உற்பததிக்கு 14-16 மணி வரை சூரிய ஒளி அவசியம். திறந்தவெளி அமைப்பில் 1 ஏக்கரில் பரப்பில் இருக்கும் உணவைப்பொறுத்து 1000 வாத்துகள் வரை வளர்க்கலாம்.
முட்டையிடும் வாத்துகளின் பராமரிப்பு
வாத்துகள் பொதுவாக அதிகாலையிலேயே முட்டையிட்டுவிடும். சாதாரணமாக வாத்து முட்டையின் எடை 65-70கி இருக்கும். 5-6 மாத வயதில் முட்டையிடத் துவங்கும். முட்டையிடத் துவங்கிய 5-6 வாரங்களுக்குப் பிறகுதான் உற்பத்தி அதிகமாக (உச்ச நிலையில்) இருக்கும் குறைந்தது 14 மணிநேர சூரிய ஒளி கிடைக்கச் செய்தால் மட்டுமே நல்ல முட்டை உற்பத்தி இருக்கும். வாத்துகளுக்கு நாளொன்றுக்கு காலை 1 மாலை இரு வேளை தீவனம் அளித்தல் சிறந்தது. நன்கு அரைக்கப்பட்ட தீவனங்களையோ உருளை (குச்சித்) தீவனங்களையோ அளிக்கலாம். எனினும் அரைக்கப்பட்ட ஈரமான தீவனங்களே பெரிதும் உகந்தவை. தீவனமானது 18% புரதம், 2650 கிலோ கலோரி / கி.கி ME ஐப் பெற்றிருக்க வேண்டும். தீவனத் தொட்டி இடைவெளி வாத்து ஒன்றிற்கு 10 செ.மீ தீவிர வளர்ப்பு முறையில் தரை இடஅளவு ஒரு வாத்திற்கு 3710 - 4650 செ.மீ2 அளவு தேவைப்படும். ஆனால் இதுவே கூண்டு வளர்ப்பு முறையில் 1380 செ.மீ2 போதுமானது. மித தீவிர வளர்ப்பு முறையில் தரைஇடஅளவு 2790 செ.மீ2 அளவு இரவிலும் 929-1395 செ.மீ2 அளவு பகலில் உலர்த்தவும் தேவைப்படுகிறது. முட்டையிடும் வாத்துகளுக்கு முட்டைக் கூடுகள் அவசியம். 30 செ.மீ அகலம், 45 செ.மீ ஆழம் 30 செ.மீ உயரம் கொண்ட முட்டைக் கூடுகள் போதுமானவை. ஒரு கூடைப்பெட்டி 3 வாத்துகளுக்கு அளிக்கலாம்.
முட்டையிடும் வாத்து
முட்டையிடும் வாத்துகளுக்கான உணவு அடடவனை.
|
|
கலவைப்பொருட்கள் |
(விகிதம்) அளவு |
|
1. |
மக்காச்சோளம் |
42.00 |
|
2. |
பாலிஸ் செய்யப்பட்ட அரிசி |
20.00 |
|
3. |
எள்ளுப் பிண்ணாக்கு |
7.00 |
|
4. |
சோயாபீன் துகள் |
14.00 |
|
5. |
உலர்த்தப்பட்ட மீன் |
10.00 |
|
6. |
கடற்சிற்பி ஓடுகள் |
5.00 |
|
7. |
தாது உப்புக்கலவை |
1.75 |
|
8. |
உப்பு |
0.25 |
|
மொத்தம் |
100 | |
ஒவ்வொரு 100 கி.கி தீவனக்கலவையுடன் விட்டமின் ஏ 600 விட்டமின் பி2 600 மி.கி மற்றும் நிக்கோட்டினிக் அமிலம் 5 கி. சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வாத்துக் குஞ்சுகளின் பராமரிப்பு
வாத்துக்குஞ்சுகளை தீவிர அல்லது மித தீவிர முறைப்படி வளர்க்கலாம். தீவிர முறையில் தரை இட அளவு 91.5 அடி ஆழ் கூளத்திலும் 29.5 அடி கூண்டுகளிலும் 16 வார வயதுவரை தேவைப்படும். மித தீவிர முறையில் தரை இட அளவு 45.7 அடி ஒரு பறவைக்கு இரவிலும் திறந்த வெளியில் 30-45.7 அடியும் 16 வார வயது வரையிலும் அளிக்கப்பட வேண்டும். முதல் சில நாட்களுக்கு வெப்பக் கூட்டிற்குள் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பராமரித்தல் அவசியம். பின்பு ஒவ்வொரு 2-3 நாட்களுக்கு ஒரு முறை 3 டிகிரி செல்சியஸ் அளவு குறைத்துக் கொள்ளலாம். வெயில் காலங்களில் வாத்துக் குஞ்சுகளை 8-10 நாட்கள் வரை வெப்பக்கூடுகளில் வைத்திருக்கலாம். அதுவே குளிர்காலங்கள் 2-3 வாரங்கள் வரை கூட வைத்திருக்கலாம்.
குஞ்சுகளின் பராமரிப்பு
வாத்துக்குஞ்சுகளுக்கு வெப்பமிளிக்க பேட்டரி புரூடர்களையும் பயன்படுத்தலாம். பல அடுக்கு பேட்டரி புரூடர்களும் பயன்படுத்தப்பட்டாலும் ஒரு அடுக்கு முறையே கையாள்வதற்கு எளிதானதாகும். வாத்துக் குஞ்சுகளுக்கு புரதம் 20%, 2750 கி. கலோரி / கி.கி வளர்சிதைமாற்ற எரிசக்தி உள்ள, நன்கு அரைக்கப்பட்ட தீவனம் 3 வார வயது வரையிலும், 18% புரதம், 2750 கி. கலோரி / கி.கி வளர்சிதைமாற்ற எரிசக்தி கொண்ட தீவனம் 4-8 வது வார வயதிலும் கொடுத்தல் வேண்டும். தீவனமும், அதை தயாரிக்கப் பயன் படுத்தப்படும் பொருட்களும் பூஞ்சான பாதிப்புகள் ஏதுமின்றி தூய்மையானதாக இருக்க வேண்டும்.
வளரும் வாத்துகள்
கொட்டகை அமைப்பு
வாத்துகளுக்கு கொட்டகை பெரிய அளவில் தேவைப்படாது. நல்ல காற்றோட்டத்துடனும், எலித்தொல்லைகள் இன்றி இருத்தல் வேண்டும். கூரை கூடாரமாகவோ, அரை வட்டமாகவோ இருக்கலாம். தரை சாதாரணமாகவோ உலோகக் கம்பிகளாலோ அமைக்கப்பட்டிருக்கலாம். மித தீவிர வளர்ப்பு முறையில் திறந்தவெளி அமைப்பை ஒட்டியே கொட்டகை இருக்க வேண்டும். அப்போதுதான் மழைக்காலங்களின் போதும், பகல்நேரங்களிலும் பறவைகளை வெளியில் அனுமதிக்க எளிதாக இருக்கும். இரவு கொட்டகைக்கும் திறந்த வெளிக்கும் உள்ள விகிதம் 1/4 : 3/4 என்றவாறு இருக்க வேண்டும். முறையான வடிகால் வசதி அமைக்கப்படுதல் வேண்டும். 50 செ.மீ அளவில் அகலமும் 15-20 செ.மீ ஆழமும் கொண்ட தொடர்ச்சியான நீர்க்கால்வாய் அமைக்க வேண்டும். இரவில் தங்கும் கொட்டகை அமைப்பிற்கு இருபுறமும் இதுபோன்ற கால்வாய்கள் வடிகாலுக்காக அமைக்கப்பட வேண்டும்.
கொட்டகை அமைப்பு
நீர்
வாத்துகளுக்கு நீர்த்தேவை அதிகமாக இருப்பினும் அவை நீந்துமளவிற்கு நீர் அவசியம் இல்லை. நீர்த்தொட்டிகளில் வாத்துகள் தமது அகன்ற அலகை முழுதும் நனைக்குமாறு நீர் எப்போதும் நிறைந்திருக்க வேண்டும். சரியாக தண்ணீர் அளிக்கப்படாவிடில் வாத்தின் கண்கள் சிவந்து, செதில் செதிலாகக் காணப்படும். தீவிர நிலையில் கண்கள் தெரியாமல் போகவும் வாய்ப்புண்டு. அதேநேரம் அவ்வப்போது தண்ணீர்த் தொட்டிகளை சுத்தப்படுத்தித் தூய்மையாக வைக்க வேண்டும். இறைச்சிக்காக வளர்க்கப்படும் வாத்துகளில் ஏழாவது வாரத்தில் உடல்எடை அளவு கூடும். ஆனால் முட்டையிடும் வாத்துகளில் இவ்வாறு எடை அதிகரிப்பு 0.3% மேல் இருக்கக் கூடாது.
தீவனப் பராமரிப்பு
வாத்துகளுக்கு அரைக்கப்பட்ட அல்லது உருளை மற்றும் குச்சித்தீவனங்களை அளிக்கலாம். விழுங்குவதற்கும் கடினமாக இருப்பதால் வாத்துகள் ஈரப்பதமுள்ள உணவையே விரும்பி உண்ணும். உருளைத் தீவனங்கள் சற்று விலை அதிகமாக இருப்பினும், வீணாவதைக் குறைக்கலாம், குறைந்த அளவே போதுமானது, ஆட்கூலி குறைவு, பராமரிப்பு எளிதானது. எனவே உருளைத் தீவனங்களே சிறந்தவையாகும். வாத்துகளுக்கு நார்த்தீவனம் மிகவும் ஏற்றது. குளங்கள், பச்சைத் தீவனங்களையும் பயன்படுத்தினால் தீவினச் செலவைக் குறைக்கலாம்.
தீவனப் பராமரிப்பு
வாத்துகள் எப்போதும் நீருடன் சேர்ந்துதான் உணவருந்தும். முதல் 8 வாரங்களுக்கு வாத்துகளுக்கு நாள் முழுதும் உணவருந்த அனுமதிக்க வேண்டும். பின்பு நாளொன்றுக்கு இருமுறை அதாவது காலை முதல் பிற்பகலிலும் அளிக்கலாம். காக்கி கேம்பெல் இன வாத்துகள் 20 வார வயது வரை 12.5 கி.கி தீவனம் உட்கொள்ளும். 20 வாரங்களுக்குப் பிறகு வாத்துகளின் உற்பத்தி மற்றும் கிடைக்கும் தீவன அளவைப் பொறுத்து பறவை ஒன்றிற்கு ஒரு நாளைக்கு 120 கிராம் அல்லது அதிகமாகவும் கொடுக்கலாம்.
முட்டை மற்றும் இறைச்சி உற்பத்திக்கான வாத்துகளின் தீவன அளவு அட்டவணை:
|
|
இளம் குஞ்சுகள் |
வளரும் குஞ்சுகள் |
முட்டையிடும் வாத்துகள் |
இறைச்சிக் குஞ்சுகள் |
இறைச்சி வாத்துகள் |
|
ஈரப்பதம் % (அதிக அளவு) |
11.00 |
11.00 |
11.00 |
11.00 |
11.00 |
|
பண்ப்படா புரதம் % (குறைந்த அளவு) |
20.00 |
16.00 |
18.00 |
23.00 |
20.00 |
|
பண்படாத நார்பொருள் % (அதிக அளவு) |
7.00 |
8.00 |
8.00 |
6.00 |
6.00 |
|
அமிலத்தில் கரையாத சாம்பல் சத்து (அதிக அளவு) |
4.00 |
4.00 |
4.00 |
3.00 |
3.00 |
|
உப்பு (அதிக அளவு) |
0.60 |
0.60 |
0.60 |
0.60 |
0.60 |
|
கால்சியம் (குறைந்த அளவு) |
1.00 |
1.00 |
3.00 |
1.20 |
1.20 |
|
பாஸ்பரஸ் (குறைந்த அளவு) கிடைக்கக்கூடியது |
0.50 |
0.50 |
0.50 |
0.50 |
0.50 |
|
லினோலெயிக் அமிலம் (குறைந்த அளவு) |
1.00 |
1.00 |
1.00 |
1.00 |
1.00 |
|
லைசின் (குறைந்த அளவு) |
0.90 |
0.60 |
0.65 |
1.20 |
1.00 |
|
மெத்தியோனைன் (குறைந்த அளவு) |
0.30 |
0.25 |
0.30 |
0.50 |
0.35 |
|
மெத்தியோனைன் + சிஸ்டைன் |
0.60 |
0.50 |
0.55 |
0.90 |
0.70 |
|
வளர்சிதைமாற்ற எரிசக்தி (க.கலோரி / கி.கி) (குறைந்த அளவு) |
2600 |
2500 |
2600 |
2800 |
2900 |
விட்டமின்கள் மற்றும் தாது உப்புகள்:
|
|
தாதக்கள் & விட்டமின்கள். மி.கி / கி.கி |
இளம் குஞ்சுகள் |
வளரும் குஞ்சுகள் |
முட்டையிடும் வாத்துகள் |
இறைச்சிக் குஞ்சுகள் |
இறைச்சி வாத்துகள் |
|
1. |
மாங்கனிசு |
90.00 |
50.00 |
55.00 |
90.00 |
90.00 |
|
2. |
அயோடின் |
1.00 |
1.00 |
1.00 |
1.00 |
1.00 |
|
3. |
இரும்பு |
120.00 |
90.00 |
75.00 |
120.00 |
120.00 |
|
4. |
துத்தநாகம் |
60.00 |
50.00 |
75.00 |
60.00 |
60.00 |
|
5. |
தாமிரம் |
12.00 |
9.00 |
9.00 |
12.00 |
12.00 |
|
6. |
விட்டமின் ஏ |
6000 |
6000 |
6000 |
6000 |
6000 |
|
7. |
விட்டமின் டி.3. சர்வதேச அளவு / கி.கி |
600 |
600 |
1200 |
600 |
600 |
|
8. |
தயமின் |
5.00 |
3.00 |
3.00 |
5.00 |
5.00 |
|
9. |
ரிபோஃபிளேவின் |
6.00 |
5.00 |
5.00 |
6.00 |
6.00 |
|
10. |
பண்டாதொனிக் அமிலம் |
15.00 |
15.00 |
15.00 |
15.00 |
15.00 |
|
11. |
நிக்கோடினிக் அமிலம் |
70.00 |
60.00 |
60.00 |
70.00 |
70.00 |
|
12. |
பயோட்டின் |
0.20 |
0.15 |
0.15 |
0.20 |
0.20 |
|
13. |
விட்டமின் பி.12 |
0.015 |
0.10 |
0.10 |
0.015 |
0.015 |
|
14. |
ஃபோலிக் அமிலம் |
1.00 |
0.50 |
0.50 |
1.00 |
1.00 |
|
15. |
கயோலின் |
|
|
|
|
|
|
16. |
விட்டமின் ஈ |
15.00 |
10.00 |
10.00 |
15.00 |
15.00 |
|
17. |
விட்டமின் கே |
1.00 |
1.00 |
1.00 |
1.00 |
1.00 |
|
18. |
பைரிடாக்ஸின் |
5.00 |
5.00 |
5.00 |
5.00 |
5.00 |
நோய் பராமரிப்பு
பிற பறவைகளைவிட வாத்துகள் பொதுவாக கடின உடலமைப்பைப் பெற்றவை. வாத்துகளைத் தாக்கும் நோய்களில் முக்கியமானவை வாத்து பிளேக், பூசண நச்சு நோய் மற்றும் பாஸ்சுரெல்லா நுண்டி நோய் போன்றவை. இவைகளைத் தடுக்க முக்கியமான வழி பூஞ்சான் (பிடித்த) தாக்கிய தீவனங்களை வாத்துகளுக்கு அளிக்காமல் இருப்பதே வாத்து பிளேக்கிற்கு தற்போது தடுப்பூசிகள் உள்ளன. இது 8-12 வார வயதில் இத்தடுப்பூசிகள் அளிக்கப்பட வேண்டும். வாத்துக்குஞ்சுகளில் வைரஸினால் கல்லீரல் அழற்சி ஏற்பட்டால் இறப்பு வீதம் அதிகரிக்கும்.
வாத்து கொள்ளை (பிளேக்) நோய்
இவ்வைரஸ் நோய் பெரும்பாலும் முதிர்ந்த வாத்துகளையே தாக்குகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட வாத்துக்களில் இரத்த நாளங்கள் உடைந்து இரத்தம் உடலுக்குள் பரவுகிறது. குடல்பகுதியிலும் இரைப்பைக்குள்ளும் இரத்தம் பரவுகிறது. பாதிக்கப்பட்ட பிறகு எவ்வித சிகிச்சையும் பலன்தராது. ஆகையால் வாத்து பிளேக் தடுப்பூசிகளை 8-12 வார வயதில் கொடுத்தல் சிறந்த பயன் அளிக்கும். முடிந்தவரை நோய் பரவாமல் தடுப்பதே சிறந்தது.
வாத்து நச்சுயிரி கல்லீரல் அழற்சி
2-3 வார வயதுடைய வாத்துக்குஞ்சுகளையே இந்நோய் அதிகம் பாதிக்கிறது. இந்நோய்க்கும் பாதிக்கப்பட்ட பிறகு சிகிச்சை கிடையாது. இனச்சேர்க்கைக்கு ஈடுபடும் வாத்துகளுக்கு வீரியம் குறைக்கப்பட்ட வைரஸ் தடுப்பூசிகள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுதல் நலம் பயக்கும். இதனை முட்டை உற்பத்தியைத் தொடங்கும் முன்பு செய்தல் வேண்டும். ஒரு நாள் வயதான வாத்துக்குஞ்சுகளுக்கு இந்த வீரியம் குறைக்கப்பட்ட தடுப்பூசிகள் அளிப்பதால் மிகுந்த பலன் பெறலாம்.
வாத்து காலரா கழிச்சல்நோய்
பாஸ்சுரெல்லா மல்டிகோடா எனும் பாக்டிரிய உயிரியால் 4 வார வயதுடைய வாத்துகளில் இந்நோய் அதிகம் பரவுகிறது. பசியின்மை, உடல் வெப்பம் கூடுதல், தாகம், வயிற்றுப்போக்கு மற்றும் திடீர் இறப்பு போன்றவை இந்நோயின் அறிகுறிகள். மூட்டு வீக்கம், தோலுக்கடியில் இரத்த ஒழுக்கு, இதய உறை அழற்சி, இரத்தப் புள்ளிகள் போன்றவை இந்நோயின் உள்நோயின் உள் அறிகுறிகள். கல்லீரல், மண்ணீரல், போன்றவை விரிவடையும். சல்பா மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் மூலம் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம். வாத்து வளர்ச்சியின் 4வது வாரத்திலும், 18 வது வாரத்திலும் காலரா (கழிச்சல்) தடுப்பூசி அளித்தல் அவசியம். என்ரோசின் சிகிச்சை அல்லது 30 மி.லி. சல்ஃபா மெஸ்த்தின் (33.1%) 5 லிட்டர் நீரில் கலந்தும் அல்லது 30-60 மி.லி.சல்ஃபா குயினாக்ஸலனைன் 5லி நீரில் கலந்தும் இம்மருந்தை குடிநீரில் கலந்து 7 நாட்களுக்கு வாத்துகளுக்கு அளிக்கலாம். எரித்ரோமைசின், ராபட்ரன் துகள்கள், நியோடாக்ஸ் - போர்ட், மார்ட்டின் வெட், வொர்க்ரின் கயஸோல் போன்ற மருந்துகளையும் கால்நடை மருத்துவர் ஆலோசனைப்படி நீரில் கலந்து கொடுக்கலாம்.
பொட்டுலிசம் நச்சுத்தன்மை
வாத்துகளில் உணவு நச்சு ஒரு முக்கிய பிரச்சனை ஆகும். கெட்டுப்போன உணவுகள் (பயிர்களில்) வளர்ந்துள்ள பாக்டீரியாக்கள் உயிர்க்கொல்லும் நோயைத் தோற்றுவிக்கும். முடிந்தவரை அழுகிய, கெட்டுப்போன உணவுகளை வாத்துகள் உட்கொள்ளா வண்ணம் பாதுகாத்தல் வேண்டும். எப்சோம் உப்பை குடிநீரில் கலந்தும் கொடுக்கலாம்.
ஒட்டுண்ணிகள்
பொதுவாக வாத்துகள் உட்புற ஒட்டுண்ணிகளுக்கு எதிர்ப்புச் சக்தி பெற்றவை. தேங்கி நிற்கும் குட்டைகள், சிறு கலங்கிய ஓடைகளில் அதிகமாக உலவும் வாத்துகளுக்கு இவ்வகை உட்புற ஒட்டுண்ணித் தாக்குதல் இருக்கலாம். தட்டைப்புழு, உருளைப்புழு, நாடாப்புழு, போன்ற புழுக்கள் இதில் அடங்கும். இப்புழுக்கள் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிக் கொள்வதால் உடலில் உண்டாகும் நச்சுப்பொருட்கள் சிவப்பு இரத்தச் செல்களை அழித்துவிடுவதால் இரத்த சோகை நோய் ஏற்படுகிறது.
வாத்துகளில் புற ஒட்டுண்ணிகள் நோய் உண்டாக்கவில்லை எனினும் வளர்ச்சியைத் தடைப்படுத்தும் முக்கியக் காரணிகள் தெள்ளுப்பூச்சி, உண்ணி, சிற்றுண்ணிகள் போன்றவை முக்கிய புற ஒட்டுண்ணிகள் ஆகும். இவை ஏற்படுத்தும் தொந்தரவு மற்றும் எரிச்சலால் முட்டை உற்பத்தி பாதிக்கப்படுகிறது. மேலும் இவை சில நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகளையும் பரப்புகின்றன. எனினும் கோழிகள் அளவிற்கு வாத்துகளில் பாதிப்பு அதிகம் இருக்காது.
பூசண நச்சு நோய்
வேர்கடலை, மக்காச்சோளம், பாலிஸ் செய்யப்பட்ட அரிசி போன்ற உணவுகளில் பூஞ்சானம் வளர்ந்துவிடும். இவ்வாறு பூஞ்சான் தாக்கிய உணவுப்பொருட்களை வாத்துகளுக்கு அளிப்பதால் இந்நோய் ஏற்படுகிறது. அதிக ஈரப்பதம் மிக்க சூழ்நிலையிலும், சரியாக பயிறுகளை உலர்த்தாமல் விடுவதாலும் இந்நோய் எளிதில் வாத்துகளை பாதிக்கக் கூடியது. பி, பி 2, ஜி, ஜி 2 எனும் நான்கு வகை நச்சுகளில் பி, வகை அதிக நச்சுத் தன்மை வாய்ந்தது. ஒரு கிலோ தீவனத்தில் 0.03 பிபிஎம் அல்லது 0.03 பி.கி அளவு மட்டுமே நச்சுத்தன்மை இருக்கலாம்.
இப்பூசன நச்சுக்கள் கல்லீரலில் புண்களை ஏற்படுத்துவதால் நச்சுத்தன்மை அதிகமாகும்போது வாத்துகளில் இறப்பு ஏற்படும். குறைந்த நச்சுத்தன்மையின் போது வாத்துகள் சுறுசுறுப்பின்மை, கல்லீரல் அழற்சி போன்ற பாதிப்புகளுடன் உயிரிழப்பும் ஏற்படுவதுண்டு. பூசன நச்சு நோய்க்கு சிகிச்சையளிக்கும் மருந்துகள் ஏதும் இல்லை. தீவனங்களின் பூசனத்தை நீக்கி நன்கு உலர்த்திக் கொடுப்பதே இந்நோயிலிருந்து காக்க சிறந்த வழி ஆகும்.
வாத்துகளுக்கான தடுப்பு மருந்து அட்டவணை
|
வ.எண் |
தடுப்பு மருந்தின் பெயர் |
கொடுக்கும் வழி |
அளவு |
வயது |
|
1. |
வாத்து காலரா கழிச்சல் நோய் (பாஸ்சுரெல்லா நுண்ம நோய்) |
தோலின் (அடிப்) கீழ்ப்பகுதியில் |
1 மி.லி |
3-4 வாரங்கள் |
|
2. |
வாத்து கொள்ளை நோய் |
தோலின் அடிப்பகுதியில் |
1 மி.லி |
8-12 வாரங்கள் |