அகராதிகள் அன்னை, ஆய், யாய் இவற்றுக்கு வேர் பொருள் தருகிறதா என்று ஆய்ந்த போது திரிபுகளை தான் தருகின்றன வேரைத் தரவில்லை.
எம்+ஆய் > எம்மாய் > யாய் பிறந்ததாக சொல்கிறது. யாய் > ஞாய் என திரிந்தது என்கிறது. எனவே ஆய் > யாய் என்பதற்கு வெண்மை கருத்து உண்டா? என தேடினேன்.
வெள்ளிய முலைப் பாலை தருபவள் என்பதால் அன்னை, ஆய், யாய் ஆகிய சொற்கள் உண்டாகி இருக்க வேண்டும் என்று எண்ணினேன். அதற்கு தக வெண்மைக் கருத்து இவற்றில் உள்ளதா என்று தேடினேன்.
ஆய் என்பதற்கு வெண்மையாய் இருப்பது என்கிறது செ சொ பி பே அகரமுதலி.
யா, அல் இரண்டும் கருமை கருத்து கொண்டவை ஆனால் இங்கு தேவை என்னவோ வெண்மைக் கருத்து வேர். வெண்மை மஞ்சள் ஒளிர்வு கருத்தை தோற்றுவிப்பதால் அதை ஒட்டியும் தேடினேன்.
அல் வேர்:
அன்னம் - தங்கம், மலம்.
அன்னல் - அனல், வெயில்.
அன்னார் - வெள்ளிய கல்நார். அன்னை - கொன்றை மரம்.
அரைவன் - வெண் காந்தள்.
யா வேர்:
யாக்கெடு - கொன்றை
யாகாட்டம் - வெள்ளை நாயுருவி.
யாசுசிதறாணி - கற்பூரம் (வெண்மையானது).
ஞ > ஞா வேர்:
ஞமலி - கள், ஞாளி - கள்.
ஞாலல் - மின்மினி, ஞலவல் - மின் மினி.
ஞேகிழி - தீ, வெள்ளை சோளம்.
ஞான்று - பொழுது, நாள்
ஆக வெண்மை கருத்து வேர் அல், யா, ஞா இவற்றுக்கும் உள்ளது என்பது அன்னை, ஆய், யாய், ஞாய் என்பதற்கு வெண் பாலூட்டுவள் என்று கொள்ளலாமா?