"யாமும் சேறுகம். நீயிரும் வம்மின்..." [3வது தொகுப்பு]: [1] :வாலி வதைப் படலம்

562 views
Skip to first unread message

Innamburan Innamburan

unread,
Oct 30, 2012, 4:13:47 PM10/30/12
to mintamil, Manram, thamizhvaasal, vall...@googlegroups.com, தமிழ் சிறகுகள், Innamburan Innamburan

"யாமும் சேறுகம். நீயிரும் வம்மின்..." [3வது தொகுப்பு]: [1] :வாலி வதைப் படலம்


இன்று மின் தமிழில் ‘இராமர் வாலியை வதம் செய்தது ஏன்?’ என்ற இழையை படித்தேன். நான் தனி இழை தொடங்கக் காரணம், நான் முன் வைக்கும் கருத்துக்களுக்கும், தவணை முறை தொடருக்கும் முழு பொறுப்பு ஏற்றுக்கொள்ளவே. திரு. தேசிங்கு அவர்களுக்கும், திரு. ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றி. 


திரு.தேசிங்கு அவர்கள் இன்று சுட்டிய அவருடைய வாலி வதத்தை பற்றிய கட்டுரையை பலமுறை படித்தேன். வேத வரலாறு என்று அவர் எதை குறிக்கிறார் என்று அறிந்திலேன். அவர் ராமனின் செயலை நியாயப்படுத்தி கூறிய அலசல்களை கூர்ந்து, கவனித்துப் படித்தேன். அவை ஒருதலைபக்ஷமாக இருப்பதாக கருதுகிறேன். ஆத்திகர்களில் சிலர் இராமன் செயலில் நியாயம் இல்லை என்று சொல்லக்கூடும். நாத்திகர்களில் சிலர் வாலியின் கூற்றில் உண்மை இல்லை என்று சொல்லக்கூடும்.. 


திரு. ஹரிகிருஷ்ணன், அந்த கட்டுரையின் தொடர்பாக குறிப்பிட்ட http://www.heritagewiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Vali என்ற அவருடைய கட்டுரை தொகுப்பை ஏற்கனவே பலமுறை படித்திருக்கிறேன். இன்றும் அவற்றை படித்தேன். திரும்பத்திரும்ப படிக்க வேண்டியவை. அதை செய்வேன்.


மேற்படி பின்னணியில் என் கருத்துக்கள் சிலவற்றை முன் வைக்கத் துணிந்தேன். இது ஆரம்ப கட்டம். மேலும் சொல்ல விழைகிறேன். பொறுத்தாள்க. நான் வால்மீகி ராமாயணத்தின் பக்கம் செல்லவில்லை. எனக்கு வடமொழியை இணைய தளத்தில் படிப்பது கடினம். படித்து குறியீடுகள் இடுவதும் கடினம். பொறுத்தாள்க. நான் கம்பராமாயணத்திலிருந்து மேற்கோள்கள் காட்டி, என்னால் இயன்றவரை நடுவு நிலையிலிருந்து, வாலி வதத்தை பற்றி எழுத விழைகிறேன். 


இன்று ஒரு குறிப்பு மட்டும், இராமனின் திட்டம் பற்றி: தன்னுடைய தகனத்துக்கு பிரதியுபகாரமாக, முன் கூட்டி சொல்லப்பட்ட, கபந்தனின் ஆலோசனையை பற்றி இப்போதைக்கு நான் எழுதவில்லை.


கம்பநாடரின் இராமகாதை வால்மீகி ராமாயணத்தின் மொழிபெயர்ப்பும் இல்லை; தழுவலும் இல்லை. மு.வ. அவர்கள் குறிப்பிட்ட மாதிரி, இது ஒரு புது காப்பியமே. ( இலக்கிய வரலாறு 1972: 2006: பக்கம்:192). வால்மீகியின் சீதை வேறு; கம்பனின் சீதை வேறு என்கிறார், டி.கே.சி. (ரசிகமணி கட்டுரைக் களஞ்சியம்:2006: காவ்யா: பக்கம்: 65). கம்பனின் அங்கதன் வால்மீகியின் அங்கதன் அல்ல. கம்பரின் ‘மாயாசனகப்படலம்’ வால்மீகியில் இல்லை. இரணியப்படலமோ கம்பரின் தனிப்படைப்பு. (மு.வ. இ.வ. பக்கம்195). அவர் சுட்டியபடி, ‘இந்த வேறுபாடுகள் கதைச்சுவையையும், பண்புச்சிறப்பையும், கற்பனை வளத்தையும் கூட்டுவிக்கின்றன.’


வாலி வதைப்படலம் கம்பரின் வாதத்திறனுக்கும், நடுவு நிலைக்கும் நிகரற்ற எடுத்துக்காட்டு. கம்பரை பற்றி நிறைய எழுத ஆர்வம். கை ஒத்துழைக்க மறுக்கிறது. அதனால், சிறிய இடுகைகளை, தவணை முறையில் தர அனுமதியுங்கள், இடையில் தாராளமாக பின்னூட்டங்கள் தரலாம். தயை கூர்ந்து, திசை மாற்ற வேண்டாம், இந்த தொடர் முடியும் வரை. 

நான் முன் வைப்பது:

ஶ்ரீராமசந்திர மூர்த்தி வாலியை வதம் செய்தது தர்மம் இல்லை. கம்பர் இந்த படலத்தை படைத்தபோது மிகவும் சங்கடப்பட்டிருப்பார் என்று எனக்குத் தோன்றுகிறது. அவர் இராமனுக்கு வாதத்திறன் அளிக்கவில்லை. வாலி அடிப்பட்டு வீழ்ந்த பிறகு, அவனுக்கும், இராமனுக்கும் நடந்த வாதம், இலக்குவனின் குறூக்கீடு உள்பட, 56 பாடல்களில் உள்ளன. அவற்றுக்கு, பிறகு, வருகிறேன்.


சுருங்கச்சொல்லின், வாலியின் வதை திட்டமிடப்பட்டதே, இராமனால், யாதொருவித பிரமேயம் இல்லாமலே.  சுக்ரீவனை அழைத்து,



அவ் இடத்து, இராமன், நீ

      அழைத்து, வாலி ஆனது ஓர்

வெவ் விடத்தின் வந்து போர்

      விளைக்கும் ஏல்வை, வேறு நின்று

எவ்விடத் துணிந்து அமைந்தது; என்

      கருத்து இது' என்றனன்;

தெவ் அடக்கும் வென்றியானும்,

      'நன்றிஇது' என்று சிந்தியா. [3944]



நீ வாலியை வலியப் போருக்கழைத்து வா. நீங்கள் சண்டை போடும்போது, நான் வேறிடத்திலிருந்து அம்பு தொடுப்பேன், இது என் கருத்து” என்கிறான். அவனும் ‘ஆமாஞ்சாமி’ போடுகிறான். 


இது தகுமோ? இது நியாயமோ? இது தர்மமோ? இது அடுக்குமோ?


(தொடரும்)

இன்னம்பூரான்

30 10 2012






Innamburan Innamburan

unread,
Nov 1, 2012, 3:22:16 AM11/1/12
to mintamil, Manram, thamizhvaasal, vall...@googlegroups.com, தமிழ் சிறகுகள், Innamburan Innamburan

ஶ்ரீராமஜெயம்


"யாமும் சேறுகம். நீயிரும் வம்மின்..." [3வது தொகுப்பு]: [2] வாலி வதைப் படலம்


வாலி மோக்ஷம் மிகவும் உருக்கமான நிகழ்வு; ஷைலஜாவின் கருத்தை அசைப்போட்டுக்கொண்டே படுத்தேன், நேற்றிரவு. இன்று அதிகாலை தரிசனம்: ஶ்ரீராமச்சந்திர மூர்த்தியின் ஜாதகம். எழுதத்தொடங்கினால், ஶ்ரீமத் வால்மீகி ராமாயணத்தின் அரிய தமிழ் உரை ஒன்று வந்து போனது. (இன்று இணையதள சிக்கல்கள், சில.) ராமாயணம் என்றுமே அதிசயப்படுத்தும். அநேக வீடுகளில் தினந்தோறும்  பக்தியோடு ராமாயண படனம் உண்டு. மனம் கலங்கினால், ராமாயனத்திலிருந்து ஏதோ ஒரு பக்கம் எடுத்து படித்தி ஆறுதல் நாடுவதும் உண்டு.


தொடக்கத்திலிருந்தே வாலி ராமபக்தன். அவனுக்கு பகையாக ராமன் -சுக்ரீவன் உடன்படிக்கை செய்ததை எப்படியோ தாரை ‘...நெடுந்துணை உடைமையால்...’ என்று மோப்பம் பிடித்து விடுகிறாள். வாலியை ‘துன்னிய அன்பினர் சொல்லினார்...’ என்று மென்மையாக எச்சரிக்கிறாள். ராமபக்தனுக்கு சினம் பொங்கியது. பெண்புத்தி பின்புத்தி என்று சினந்தான். ‘...வாலியின் கண் வரும் தீயிடை, தன் நெடுங்கூந்தல் தீகின்றாள்...’ என்று கம்பன் சொல்கிறார். கோபம் கொப்பளிக்க, கொப்பளிக்க, வாலியின் கண்களிலிருந்து தீ பறக்கிறது. அதில் கருகிப்போகிறது, தாரையின் கூந்தல். ஐயகோ! ஒரு பெண்ணின் கூந்தல் கருகினால், அது தீநிமித்தம் அல்லவோ!


‘...உலகினுக்கு அறத்தின் ஆறு எலாம், இழைத்தவர்...’, ‘இருமையும் நோக்கும் இயல்பினான்...’, அவனுடைய ‘...ஆறுடை தர்மம் தன்னைத்தான் தவிர்க்குமோ? தன்னைத்தான் அரோ!..’, ‘...புன்தொழில் குரங்கோடு புணரும் நட்பனோ?...’, ‘...அம்பு இடை தொடுக்குமோ? அருளின் ஆழியான்...’ என்றெல்லாம் இராமனின் நற்குணங்களை பாராட்டி, தாரைக்கு சமாதானம் கூறுகிறான். இராமபாணம் துளைத்து வீழ்ந்த பின், ‘...இதுவும் தான் ஓர் ஓங்கு தர்மமோ?...’ என்ற வினா அவனுள் எழுகிறது. அப்போது தான் வாலிக்கு ஆண்புத்தி பின்புத்தி என்ற தெளிவு பிறக்கிறது.

(தொடரும்)

இன்னம்பூரான்

31 10 2012


Innamburan Innamburan

unread,
Nov 1, 2012, 5:57:08 AM11/1/12
to mint...@googlegroups.com, Manram, thamizhvaasal, vall...@googlegroups.com, தமிழ் சிறகுகள்
வாலி எழுப்பும் வினாக்கள். அடேயப்பா!
இன்னம்பூரான்

2012/11/1 Dhivakar <venkdh...@gmail.com>
”செட்டி தாடுன தாகி திட வாலினெ சம்பு மீ ராமுடொக்க வீரடவுனோ?”

(அம்பு மூலமாக) மரங்களையெல்லாம் பிளந்து சென்றதோடு மட்டுமின்றி, வலிமையான வாலியையே கொன்ற உங்கள் ராமர் அல்லவா வீரர்.. இல்லையா?

எகத்தாளம் அந்த பதிலில் என்றால் வியப்பு இந்த பதிலில்

அன்புடன்
திவாகர்

2012/11/1 kra narasiah <nara...@yahoo.com>
சரியான பொருள்!
CHCHETTU  yes
இன்னொரு அர்த்தம் என்ன?



From: Dhivakar <venkdh...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Thursday, November 1, 2012 3:03:13 PM
Subject: Re: [MinTamil] "யாமும் சேறுகம். நீயிரும் வம்மின்..." [3வது தொகுப்பு]: [1] :வாலி வதைப் படலம்

மரத்தின் பின்னே மறைந்து கொண்டு  வலிமையான வாலியை தாக்கிக் கொன்ற உங்கள் ராமர்  வீரன் தானோ

அப்படித்தானே சார்?? (ச்செட்டு இல்லையோ) இன்னொரு அர்த்தம் கூட வருகிறது..

அன்புடன்
திவாகர்



2012/11/1 shylaja <shyl...@gmail.com>


2012/11/1 K R A Narasiah <naras...@gmail.com>
திரு இன்னம்பூரானுக்கு
நான் அனுப்பிய அழைப்பிதழ் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். 48 ராமாயணங்களை அலசி ஆராய்ந்து, முனைவர் மணவாளன் எழுதிய “இராமகாதையும் இராமாணங்களும்” என்ற நூலுக்குத் தான் இவ்வருடத்திய சரஸ்வதி சம்மான் கிடைத்துள்ளது. அவரை பாராட்டும் வகையில் நடக்கவிருக்கும் விழாவில் நான் சொற்பொழிவாற்றவுள்ளேன். அதில் நான் பேசவிருப்பது comaparitvi study of Literature என்ற தலைப்பில்; ஆங்கிலத்திலும் தமிழிலும்.

முதல் வால்யூம் மட்டுமே கிடைத்துள்ளது. அதில் ஆரண்யகாண்டத்துடன் முடிவடைவதால் இப்ப்குதி அவர் கையாண்டுள்ள விதம் தெரியவில்லை. 

நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது, (ஆந்திராவில்) இரவில் எங்கள் தந்தை சொல்லும் கதைகளில் ஒரு பகுதியாக், லவ குசர்கள் கேட்கும் கேள்வி (உத்தரகாண்டம்) வரும்.
”செட்டி தாடுன தாகி திட வாலினெ சம்பு மீ ராமுடொக்க வீரடவுனோ?”
நரசய்யா
>>>>மதிப்பிற்குரிய   திருநரசய்யா அவர்களுக்கு
 
லவகுசா  தெலுங்கில்  கேட்பதன் அர்த்தம் என்ன  சொல்ல இயலுமா? 
2012/11/1 கி.காளைராசன் <kalair...@gmail.com>

ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

இராமாயணக் கதை தெரியும். 
அதன் உட்கதைகளை அலசி ஆராய்ந்ததில்லை.

தங்களது கருத்துக்களைப் படித்து வருகிறேன் ஐயா,

அன்பன்
கி.காளைராசன்



2012/11/1 Innamburan Innamburan <innam...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
அன்பன்
கி.காளைராசன்
http://pulikkarai-iyanar.blogspot.in/

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
shylaja
 
"எந்த நாளும் நின்மேல் - தாயே
இசைகள் பாடி வாழ்வேன்"
 
பாரதி

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Innamburan Innamburan

unread,
Nov 1, 2012, 6:50:43 AM11/1/12
to mint...@googlegroups.com, Manram, thamizhvaasal, vall...@googlegroups.com
ஆஹா! எரி உறும் மெழுகு ஆனார்!

இதுவல்லவோ கவிதை.

After all we had stalwarts; today they are not forgotten but wrongly remembered! 


~ Sad, but, true! At the same time humble endeavors of acolytes like me aim at mitigating that deficit somewhat.

கடைசி இடுகையில் முதலடிகளை மட்டும் குறிப்புணர எடுத்து வைத்தேன். யாராவது அந்தந்த செய்யுளை எழுப்பி வைப்பார்கள்

என்று ஆவலுடன் காத்திருந்தேன். நீங்கள் வேறு ஒரு நிகழ்வை, அழகாக முன் வைத்தீர்கள், நன்றி, திரு. நரசய்யா.


திவாகர். வஞ்சகம் செய்து மனைவியை அபகரித்துச் சென்றவனுக்கு தூது. தன் இன பண்புக்கேற்ற வகையில் தாரையை மணந்த

மாவீரனுக்கு மறைந்திருந்துத் தாக்கு. என்ன தர்மமிது, ஐயா?

நான் சிறிய பகுதிகளாக எழுதி வருகிறேன், திவாகர். (அப்படி கைவலி) வாலி வாதத்திலும் திறன் படைத்தவன். நற்குணங்களுக்கு உறைவிடம்.

சிறியன சிந்தியாதான். இந்த படலத்தின் கதாநாயகன்.

Innamburan Innamburan

unread,
Nov 1, 2012, 2:19:16 PM11/1/12
to mintamil, Manram, thamizhvaasal, vall...@googlegroups.com, தமிழ் சிறகுகள், Innamburan Innamburan

ஶ்ரீராமஜெயம்


"யாமும் சேறுகம். நீயிரும் வம்மின்..." [3வது தொகுப்பு]: [3] வாலி வதைப் படலம்


முந்தைய இடுகையில் குறிப்பிட்ட‘...நெடுந்துணை உடைமையால்...’ என்ற பாடலின் பின்னணி வாலியின் மேன்மையையும், சுக்ரீவனின் சிறுமையையும், கம்பரின் நிகரற்ற வாக்கு செப்புகிறது.

உருத்தனன் பொர எதிர்ந்து

      இளவல் உற்றமை,

வரைத் தடந் தோளினான்,

      மனத்தின் எண்ணினான்;

சிரித்தனன்; அவ் ஒலி,

      திசையின் அப் புறத்து

இரித்தது, அவ் உலகம்

      ஓர் ஏழொடு ஏழையும். (3948)


இராமனின் வருகையால் உவகை பூத்த சுக்ரீவன் வாலியிடம் பலமுறை தோல்வி அடைந்தவன். அவன் வந்து வாலியை தடபுடலாக போருக்குக் கூவி அழைத்ததை (‘எதிர்ந்து உற்றமை’) கண்டு வாலி வாய் விட்டு சிரித்தான். அந்த சிரிப்பொலி ‘பதினான்கு உலகங்களையும் நிலை கலங்கி ஓடச்
செய்தது’ என்று சொல்லும் உரை, அந்த சொற்த்தொடரை உயர்வு நவிற்சி அணி என்று இலக்கணக்குறிப்பையும் தருகிறது. ‘உலகம்’ என்றால் உலகில் வாழும் மக்கள் ~இடவாகு பெயர்.


எழுந்தனன், வல் விரைந்து

      இறுதி ஊழியில்

கொழுந் திரைக் கடல்

      கிளர்ந்தனைய கொள்கையான்;

அழுந்தியது, அக் கிரி; அருகில்

      மால் வரை

விழுந்தன, தோள் புடை

      விசித்த காற்றினே. (3949)


தற்கால நிகழ்வு ஒன்றை உவமையாக கூறுவதை மன்னிக்கவும். சண்டமாருதமாக வந்து அமெரிக்காவை அலக்கழித்த ‘சண்டி’ சூறாவளியை போல, யுகாந்திரத்தில் அலை மோதும் கடலைப் போல, சினம் பொங்கி எழுந்தானாம், மலை ஒத்த தோளுடையான் வாலி. அந்த வேகத்தில் கிஷ்கிந்தை மலை அழுந்தியதாம். தோள்கள் அசைந்ததால் வீசிய புயல்காற்று அருகில் இருந்த மலைகளை வீழ்த்தியதாம். கம்பர் உயர்வு நவிற்சி அணியை கையாளும் லாவகத்தைப்பாருங்கள்.

போய்ப் பொடித்தன மயிர்ப்

      புறத்த, வெம் பொறி;

காய்ப்பொடு உற்று எழு வட

     கனலும் கண் கெட,

தீப் பொடித்தன, விழி;

      தேவர் நாட்டினும்

மீப் பொடித்தன புகை,

      உயிர்ப்பு வீங்கவே. (3950)


தீப்பொறிகள் பறக்கின்றன. ஆம். வாலி வெகுண்டு எழுந்தவுடன் அவனுடைய உடலின் மயிர்க்கால்களிலிருந்து அவை சிதறின. கண்கள் தீயைச் சிந்தின. (வானுலகில் ஒரேயடியாக தேவர்கள் தும்முகிறார்கள்.) அங்கும் பரவியது, வாலியின் சினமிகுந்த சுவாசத்தின் புகை மண்டலம்.


கைக் கொடு கைத்தலம் புடைப்ப, காவலின்

திக் கயங்களும் மதச் செருக்குச் சிந்தின;

உக்கன உரும்இனம்; உலைந்த உம்பரும்;

நெக்கன, நெரிந்தன, நின்ற குன்றமே. (3951)


கை கொட்டி ஆர்ப்பரித்து வாலி போருக்கு ஆயத்தமாவது எட்டுத்திக்கு யானைகளும், வானின் இடிக்கூட்டமும், மலைகளும் நிலை குலைந்தனவாம். 

‘நெக்கன நெரிந்தன -பிளவுபட்டு நொறுங்கின.’ என்று பொருள் கூறும் உரை, ‘நெக்குதல் -
நெகிழ்ந்து பிளவுபடல்.  ''நெட்டிருப்புப் பாறைக்கு நெக்கு விடாப் பாறை, பசு
மரத்து வேருக்கு நெக்கு விடும்'' என்பது நல்வழி.(33) என்று ஒரு அருமையான மேற்க்கோளும் தருகிறது.

'வந்தெனன்! வந்தெனன்!' என்ற வாசகம்

இந்திரி முதல் திசை எட்டும் கேட்டன;

சந்திரன் முதலிய தாரகைக் குழாம்

சிந்தின, மணி முடிச் சிகரம் தீண்டவே. (3952)


(அறை கூவி சண்டைக்கு இழுத்தது இளவல். சினம் பொங்கியது அண்ணனுக்கு.) இதோ வந்தேன் என்று அவன் முழங்கியது எட்டு திசைகளிலும் எதிரொலித்ததாம். மணிகளால் இழைத்த அவனுடைய மகுடம் தீண்டியதால், சந்திரனும், விண்மீன்களும் சிதறி வீழ்ந்தனவாம்.

‘வந்தனென், வந்தனென் - வெகுளியின் வந்த அடுக்குத் தொடர்.’ என்று உரையின் இலக்கணக்குறிப்பு.

வீசின காற்றின் வேர் பறிந்து, வெற்புஇனம்

ஆசையை உற்றன; அண்டப் பித்திகை

பூசின, வெண் மயிர் பொடித்த வெம் பொறி;

கூசினன் அந்தகன்; குலைந்தது உம்பரே. (3953)


வாலியின் ஆவேசத்தின் வேகம் மலைகளை வீழ்த்தி, திசையின் எல்லைகளுக்கு அப்பால் வீசியது. இந்த அண்டத்தின் எல்லை சுவரை அவனுடைய உடலிலிருந்து எழுந்த தீப்பொறிகள் தாக்கின. எமதர்மராஜனின் கண்களும் கூசின. தேவர்களும் நிலை குலைந்தனர்.

கடித்த வாய் எயிறு உகு

      கனல்கள் கார் விசும்பு

இடித்த வாய் உகும்

      உரும் இனத்தின் சிந்தின;

தடித்து வீழ்வன எனத்

      தகர்ந்து சிந்தின,

வடித்த தோள் வலயத்தின்

      வயங்கு காசு அரோ. (3954)


சினமிகுதியால் வாலி ‘நற நற’வென்று பற்களைக் கடித்தான். தீப்பொறிகள் சிதறின, மோதிக்கொள்ளும் இடிகளின் கூட்டங்கள் போல. அவனுடைய தோள்கள் புடைத்ததால், அவனது தோளணிகளின் இரத்தினங்கள், மின்னல்கள் போல் சிதறி வீழ்ந்தனவே.

‘அரொ’ ~ அசை’ உரையில் இலக்கணக்குறிப்பு.

ஞாலமும், நால் திசைப் புனலும், நாகரும்,

மூலமும், முற்றிட முடிவில் தீக்கும் அக்

காலமும் ஒத்தனன்; கடலில் தான் கடை

ஆலமும் ஒத்தனன், எவரும் அஞ்சவே. (3955)


நிலவுலகமும், கடல்களும், தேவர்களும்,ஆதார தத்துவங்களும் தீயில் பொசுங்கும் ஆபத்து போலவும் யாவரும் அஞ்சி நடுங்கும்படியும், ஆயத்தமாகிறான், வாலி. ஆலகால நஞ்சு போல் பயங்கரமாக தோன்றுகிறான், என்கிறார், கம்பர். 

கடலில் தான் கடை ~ தான் கடை கடல்:   பாற்கடல் கடைகையில் தேவர்களும் அசுரர்களும் தளர்ச்சி உற்ற போது வாலி தன் இரு கரங்களால் கடைந்தான் ஆதலின் 'தான் கடை
கடலில்' என்றார்.’ ~ பாடம் (உரை).


ஆயிடை,தாரை என்று அமிழ்தின் தோன்றிய

வேயிடைத் தோளினாள், இடை விலக்கினாள்;

வாயிடைப் புகை வர, வாலி கண் வரும்

தீயிடை, தன் நெடுங் கூந்தல் தீகின்றாள். (3956)


(வாலியின் தோள்கள் மலை போல) தாரையின் தோள்கள் ‘அமிழ்தின் தோன்றிய’ மூங்கிலின் தன்மை கொண்டவை. அவளுடைய நீண்ட கூந்தல். வாலியின் சினத்தீயில் கருகியது. அவள் அவனை தடுத்து, கோபத்தைத் தணிக்க முயன்றாள்.

(தொடரும்)

இன்னம்பூரான்

01 11 2012

பி.கு: அடைப்புக்குறிக்குள் கூறப்பட்டவை செய்யுளின் கருத்துக்கு, இடம், பொருள், ஏவல். செய்யுளின் பொருள் அல்ல. நான் படித்ததைப் பகிர்ந்துகொள்கிறேன். குறைகள் எனதே. எல்லாரையும் உரையாசிரியர் கூறுவதையும், மற்ற உரைகளையும் படிக்க வேண்டுகிறேன்.

அடுத்த இடுகையிலிருந்து சுருக்கமாக விளக்க முயற்சி செய்கிறேன்.

உசாத்துணை: கம்பன் அறநிலையத்தின் நற்பணி: கிட்கிந்தா காண்டம்: வாலிவதைப்படலம்: மூலமும், உரையும்:பக்கம் 178~182

Retrieved with thanks from

http://www.tamilvu.org/slet/l3100/l3100pd3.jsp?bookid=56&auth_pub_id=72&pno=11

Innamburan Innamburan

unread,
Nov 4, 2012, 11:34:33 AM11/4/12
to mintamil, Manram, thamizhvaasal, தமிழ் சிறகுகள், vall...@googlegroups.com, Innamburan Innamburan

ஶ்ரீராமஜெயம்


"யாமும் சேறுகம். நீயிரும் வம்மின்..." [3வது தொகுப்பு]: [4] வாலி வதைப் படலம்



இராவணனால் வாலியின் வாலைக் கூட அசைக்கமுடியவில்லை. அத்தனை வலிமை, வாலிக்கு. பாற்கடல் கடைந்த போது தேவாசுரர்கள் களைத்துப் போயினர். ஆபத்துக்கு உதவும் நண்பனாக வந்து அமிர்ததைக் கடைந்த வானரோத்தமன் வாலியை, ஆலகால நஞ்சு போல் முறித்து மாற்றியது, சுக்ரீவனின் வீண்வம்பு அறைகூவல்.  கம்பரின் உயர்வு நவிற்சி அணி எப்படியெல்லாம் வாலியின் பராக்கிரமத்தை வருணித்தது என்பதைப் பார்த்தோம். அதிபராக்கிரமசாலியான வாலியின் இராமபக்தி அபாரம். 


தாரையின் எச்சரிக்கை உதறித்தள்ளக்கூடியது அல்ல. இளவல் சுக்ரீவனுக்கு பயந்த ஸ்வபாவம். சஞ்சலபுத்தி. அவனொரு அசட்டுப்பிறவி. கிஷ்கிந்தா காண்டத்தில், அவன் சுய அறிவு இழந்தவனாகத் தான் தோற்றம். தன்னை பாதுகாத்துக்கொள்ள தெரியாது, அவனுக்கு. அத்தனை பலவீனம். சந்தேகப்பிராணி. ராமலக்ஷ்மணர்கள் கிஷ்கிந்தையில் நுழைந்ததே அவனுக்கு அச்சம் விளைவித்தது. எளிதில் குழப்பம் அடையும் குணமுண்டு, அவனுக்கு. இராமலக்ஷ்மணர்களை வாலி தான் தன்னைக்கொல்ல அனுப்பினான் என்று அனுமனிடம் புலம்புகிறான். இந்த அசட்டு வானரத்திடம், மிகவும் மரியாதையுடன் தஞ்சம் புகுந்தனர், தசரதனின் மைந்தர்கள். அந்த அசடும், இவர்களின் உன்னத நிலையை அனுமன் சொல்லியும், அதற்கு செவி சாய்க்காமல், இராமனின் தன்னடக்கமான நட்புரிமை நாடும் சொல்லையும் காதில் போட்டுக்கொள்ளலாம், கைலாகு கொடுத்து, தனக்கு சமானமாக அமரச்சொல்கிறான்! என்னே டாம்பீகம்! நான் வால்மீகி ராமாயணம் பக்கம் போகவில்லை. அங்கும் சுக்ரீவனுக்கு பெத்த பெயரில்லை. இராம லக்ஷ்மணர்கள் அவனிடன் தஞ்சம் புகுந்ததாகத் தான் நான் படித்த உரை கூறுகிறது.


இப்பேர்ப்பட்ட சுக்ரீவன் வாலியை வம்புக்கு இழுத்தால், அவனுக்கு ஏதோ வலிமை மிகுந்த துணை கிடைத்திருக்கவேண்டும் என்பது - சரி - வெள்ளிடை மலை. அந்த துணை இராமன் என்பதால், எச்சரிக்கையின் தீவிரம் வாலிக்கு புரிந்திருக்க வேண்டும். 


அன்னது கேட்டவள், 'அரச! "ஆயவற்கு

இன் உயிர் நட்பு அமைந்து இராமன் என்பவன்,

உன் உயிர் கோடலுக்கு உடன் வந்தான்" என, 

துன்னிய அன்பினர் சொல்லினார்' [3964]


என்றாள். இராமன் வந்தது உன் உயிரை பறிக்கவே’ என்று அவள் தெளிவாகத்தான் எச்சரித்தாள்.  


(‘...தாரை அரசியல் அறிவு கொண்டவளாய் ஆங்காங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளை அறிந்து வந்தனள் என்பது புலனாகிறது.  தன்னை எதிர்ப்பவர் எவர் எனப் புறப்படும் வாலியிடம், மாற்றான் வலிமை குறைந்தவனாயினும், அவனுக்குத் துணையாகவரும் துணைவனது வலிமையை எண்ணித்துணிந்தபின் போருக்குச் செல்லுதல் நன்று எனக்கூறும் தாரையின்அரசியலறியும் ஈண்டு நினைக்கத்தக்கது...’ ~ உரை.)


அந்த எச்சரிக்கையை உதறிவிட்டான், இராமபக்தனான வாலி. ‘...இயல்பு அல இயம்பி என் செய்தாய்?...’ என்ன பேச்சு இது? ‘...பிழைத்தனை; பாவி! உன் பெண்மையால்' என்று அவளுக்கு ஈவிரக்கம் காட்டினான், சினம் மிகுந்த கால கட்டத்தில் கூட. இராமனிடம் உள்ள பக்தியால் தான், தாரையை கடிந்து கொண்டான், வாலி.


உழைத்த வல் இரு

      வினைக்கு ஊறு காண்கிலாது

அழைத்து அயர் உலகினுக்கு

      அறத்தின் ஆறு எலாம்

இழைத்தவற்கு, இயல்பு அல

      இயம்பி என் செய்தாய்?

பிழைத்தனை; பாவி! உன்

      பெண்மையால்' என்றான். [3965]




இனி அவன் ஶ்ரீராமசந்தர மூர்த்தியின் கீர்த்தியை சொல்வதை கவனியும்.

1. '... அயர் உலகினுக்கு அறத்தின் ஆறு எலாம் இழைத்தவற்கு...’


~ தருமத்தின் வழிகளையெல்லாம் தன் நடைமுறையால் காட்டிய அந்த
இராமபிரான் என்கிறான், வாலி.

2.'இருமையும் நோக்குறும் இயல்பினாற்கு இது பெருமையோ?


~ இராமன் குறுகிய நோக்கம் உள்ளவன் அல்ல. இம்மைக்கும், மறுமைக்கும் உரிய பலாபலன்களை சீர்த்தூக்கிப் பார்க்கும் இயல்பு உடையவன். (சுக்ரீவனுடன் கூட்டு சேர்வதால்) அவனுக்கு பயன் யாதும் இல்லை. (என்ன உளறுகிறாய்?) தரணிதனில் வாழும் உயிர்களின் ரக்ஷகனான தருமமே தன்னை அழித்துக்கொள்ளுமோ? என்றெல்லாம் இராமனின் உன்னத நிலையை தன் புரிந்து கொண்டதைக்கூறி, தாரையை கடிந்து கொள்கிறான்.


'இருமையும் நோக்குறும்

     இயல்பினாற்கு இது

பெருமையோ? இங்கு இதில்

     பெறுவது என்கொலோ?

அருமையின் நின்று, உயிர்

     அளிக்கும் ஆறுடைத்

தருமமே தவிர்க்குமோ

     தன்னைத் தான்அரோ? (3966)


‘இருவர்க்கிடையில் நடைபெறும் போரில் ஒருவர்க்கு உதவியாய் இருந்து
மற்றொருவரைக் கொல்லுதலாகிய அறமல்லாத செயலை இராமன்
செய்யமாட்டான் என்பது வாலியின் கருத்தாகும். இராமன் தருமமே
உருவெடுத்து வந்தவனாதலின், தருமத்திற்கு மாறான செயல்களைச் செய்ய
மாட்டான் என்பதால் 'தருமமே தவிர்க்குமோ தன்னைத்தான்' என்றான்.
'அறத்தின் மூர்த்தி வந்து அவதரித்தான்' (1349) 'மெய்யற மூர்த்தி வில்லோன்'
(5882) என்பன காண்க.’ (உரை)


3. 'ஏற்ற பேர் உலகு எலாம் எய்தி. ஈன்றவள்

மாற்றவள் ஏவ, மற்று, அவள்தன் மைந்தனுக்கு

ஆற்ற அரும் உவகையால் அளித்த ஐயனைப்

போற்றலை; இன்னன புகறல்பாலையோ?' [3967]


(அடி பேதாய்!) தன்னுடைய மாற்றாந்தாயின் கட்டளைக்கு பணிந்து ராஜ்யபாரத்தை பரதனுக்கு உவகையுடன் தந்துருளிய சான்றோன் இராமனை புகழ்ந்து பாராட்டாமல், நீ அவரை இகழலாமா?)

'பாராளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி' என்றார் குலசேகரர்.(பெருமாள்திருமொழி-8-5) என்று உரையில் கூறியதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

4. நின்று பேர் உலகு

எலாம் நெருக்கி நேரினும்,

வென்றி வெஞ் சிலை

      அலால், பிறிது வேண்டுமோ?

தன் துணை ஒருவரும்,

      தன்னில் வேறு இலான்,

புன் தொழில் குரங்கொடு

      புணரும் நட்பனோ? (3968)


இராமன் நிகற்ற மாவீரன்.  அவனுக்கு தன்னுடையை வில் ஒன்றே போதும், உலகெலாம் திரண்டு வந்து அவனை எதிர்த்தாலும். போய்ம் போயும் இந்த அற்பனாகிய குரங்குடன் அவன் கூட்டு சேர்வானா?

தம்பியர் அல்லது தனக்கு

      வேறு உயிர்

இம்பரின் இலது என

      எண்ணி ஏய்ந்தவன்,

எம்பியும் யானும் உற்று

      எதிர்ந்த போரினில்

அம்பு இடை தொடுக்குமோ,

      அருளின் ஆழியான்? [3969]


 சகோதர பாசத்தின் அருமையை உணர்ந்தவன் இராமன். கருணைக்கடலான இராமன் தன் சகோதரர்களிடமிருந்து தன்னை பிரித்துப் பார்ப்பதை அறியாதவன். என் தம்பியும் நானும் சண்டை போட்டால், இடையில் புகுந்து என் மீது அம்பு தொடுக்கமாட்டான்.

‘தம்பியரைத் தன் உயிரெனக் கருதும் இராமன், உடன் பிறந்தார்க்கிடை
ஏற்பட்ட போரில், பகைமையை நீக்கி ஒன்றுபடுத்த முயல்வானேயன்றி ஒரு
பக்கம் சார்ந்து தனக்கெதிரே அம்பினைத் தொடுக்க மாட்டான் என்ற
நம்பிக்கையில் வாலி 'எம்பியும் யானும் உற்றெதிர்ந்த போரினில் அம்பு இடை
தொடுக்குமோ' என்றான். 'தள்ளா வினையேன் தனி ஆர் உயிராய் உள்ளாய்'
(3608) என்ற அடிகள் இராமன் தம்பியரை உயிரெனப் போற்றி ஒன்றி
வாழ்ந்ததை உணர்த்துவன. அருளின் ஆழி - கருணைக்கடல். இராமனைக்
'கருணைக்கடல்' (1257) எனக் கம்பர் முன்னரும் குறிப்பிட்டுள்ளார்.’ (உரை) 

வாலியின் அதிபராக்கிரமமும், அவன் பார்க்கடலை கடைந்து தேவாசுரர்களை உய்வித்ததும், ராவணனை நசுக்கியதும், அவனுடைய இராமபக்திக்கு முன் சிறிய விஷயங்கள். அத்தகைய பக்தனை பற்றி இராமன் அறியாமலும் இல்லை. அவனை விட்டு விட்டு, சஞ்சலபுத்தியும், டாம்பீகமும் குடி கொண்டுள்ள சுக்ரீவனிடம் இராமலக்ஷ்மணர்கள் தஞ்சம் புகுந்தது ஏன்? 

பழவினையோ?

(தொடரும்)

இன்னம்பூரான்

04 11 2012  

உசாத்துணை (மூலமும், உரையும்): http://www.tamilvu.org/library/libindex.htm

Innamburan Innamburan

unread,
Nov 8, 2012, 10:15:00 AM11/8/12
to mintamil, Manram, thamizhvaasal, தமிழ் சிறகுகள், vall...@googlegroups.com, Innamburan Innamburan

ஶ்ரீராமஜெயம்


"யாமும் சேறுகம். நீயிரும் வம்மின்..." [3வது தொகுப்பு]: [5] வாலி வதைப் படலம்


கவிச்சக்கரவர்த்தி கம்பன், நாதமுனிகள் வீற்றிருக்க, இராமாவதாரம் அரங்கேற்றம் செய்தபோது , பெருமாளே வந்து "நஞ்சட கோபனைப் பாடினையோ" என்று சாதித்ததார் என்பது கர்ணபரம்பரை.  ஆனாலும், அங்கிருந்த பெருநாவலர்கள் கம்பருக்கு ஆழ்வார் சம்பந்தமில்லாமை குறித்து ஆக்ஷேபணை கிளப்பினர்களாம். கம்பரும், 'வேதத்தின் முன்செல்க' என்றெடுத்து சடகோபரந்தாதி பாடினாராம்.


"பாவைத் திருவாய் மொழிப்பழத் தைப் பசுங் கற்பகத்தின்

பூவைப் பொருகடற் போதா மமுதைப் பொருள் சுரக்குங்

கோவைப் பணித்தவெங் கோவையல் லாவென்னைக் குற்றங்கண்டென்

நாவைப் பறிப்பினு நல்லோரன் றோமற்றை நாவலரே." [சடகோபரந்தாதி 57]


மற்றொரு இழையில், திருமதி. ஸுபாஷிணி கூறிய மாதிரி, 


‘... ஒரு கருத்தினை ஒருவர் வழங்கி விட்டால் அதனை அப்படியே ஏற்றுக் கொள்வது தான் சபை நாகரிகம் என்ற காலகட்டத்தில் நாம் இல்லை. ஒவ்வொருவர் அனுபவத்திற்கு ஏற்ற கருத்துப் பரிமாற்றங்கள் அவரவர் அனுபவத்தின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். அது தகுந்த விளக்கமாக அமைய வேண்டும். இதுவே மின்தமிழின் எதிர்பார்ப்பு. எனது தனிப்பட்ட கருத்தும் அதுவே...’


அதனால் தான் ‘தயை கூர்ந்து, திசை மாற்ற வேண்டாம், இந்த தொடர் முடியும் வரை.’ என்று முதல் இடுகையிலேயே விண்ணப்பித்தேன். ஆனாலும் பெரும்நாவலர்கள் ஆக்ஷேபணை கிளப்பினார்கள். அலைவரிசையும் குலுங்கியது. மேரி கலி மேன் ஹோகே ஆவோ! ஜிக்ரி தோஸ்த்!’ இலக்கிய சுவையும், கற்பனை ஆற்றலும், அழகியல் நீரோட்டமும் ஆடி, அசைந்து வரும் கம்பராமாயணம் ஒரு புனிதமான காப்பியம். கிஷ்கிந்தை கானகமும் கண் முன்னே. அங்குள்ள ஆச்சா மரங்களும், சந்தன மரங்களும், சோலை வனங்களும், நீரோடைகளும் கண் முன்னே. I miss neither the wood nor the magnificent trees.  இது வரை வந்த/வரப்போகும் எல்லா பின்னூட்டங்களுக்கு உரிய நேரத்தில்/இடங்களில், இந்த இழையின் இலக்கு பிறழாமல், பதில் சொல்கிறேன். இனி அடுத்த கட்டம்.


கடும் போர் நடக்கிறது. இருவரும் பலசாலிகள். சினம் வாலியின் வலிமையை கூட்டுகிறது. அண்டமெல்லாம் நடுங்கியது இருக்கட்டும். சுக்ரீவன் புறமுதுகு காட்டி, இராமனிடம் ஓடி வருகிறான். அறத்தின் உறைவிடம் என்று வாலியால் புகழப்பட்ட இராமன், ‘கொடிப்பூ மிலைந்து செல்க...’ (3995)  என்று போரிலக்கணத்துக்கு மாசுபடியும் உத்தியை சொல்லி அனுப்புகிறான். வாலிக்கும் சுக்ரீவனுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாத கடவுள், கடவுளா? (‘...உமை வேற்றுமை

      தெரிந்திலம்...’) என்ற வாதங்களுக்கு இங்கு இடம் இல்லை. ஆனால், இந்த உத்தி மறைந்திருந்து வாலியை கொல்ல உதவும் என்பது தான் நெருடல். இந்த காலத்து அமெரிக்க/பிரிட்டன் யுத்த விதிகளுக்குக்கூட ஒவ்வாது, அது. அமெரிக்க ராணுவ விதிகளை விட பிரிட்டீஷ் விதிகள் கடினமானவை. ‘நிராயுதபாணியை தாக்கக்கூடாது’ போன்ற யுத்த விதிகளின் கட்டுப்பாட்டால், அநேக ராணுவ வீரர்கள் உயிரிழந்தது 2012 வரலாறு.


கொடிப்பூ சூடிய சுக்ரீவனின் உயிர்நிலை ஊசலாடுகிறது. அத்தருணம், ‘வாலி மேல் கோல் ஒன்று வாங்கித்தொடுத்து, நாணொடு தோள் உறுத்து, இராகவன் துரந்தான்...’. [3999]. பாரதவர்ஷத்தில் இராமாயண காலகட்டத்தில் இருந்த யுத்த தர்மங்களோ, நிச்சயமாக அந்த உத்தியை ஆதரிக்கவில்லை. கபடநாடகம் ஆடி சீதா தேவியை அபகரித்த ராவணனுக்கு தூது. சுக்ரீவனின் நட்புக்கரம். போரில் நிராயுதபாணியாக நின்றபோது, கருணை. ‘தானுண்டு; தன் நித்திரை உண்டு’ என்றிருந்த வாலியை கொல்ல திட்டம். துவந்த யுத்தம் நடக்கும்போது, மறைவிடத்திலிருந்து பறந்து வந்த இராம பாணம் கம்பரின் இணையில்லா உவமையில், ‘கதலின் கனியினைக் கழியச்சேரும் ஊசியிற் சென்றது. [4000]. வாழைப்பழத்தில் குத்திய ஊசியை போல. வேருடன் சாய்ந்த வாலி  ‘கை நெகிழ்ந்திலன், நெகிழ்ந்திலன் கடுங்கணை கவர்தல்...’ [4002]. சுக்ரீவனை பிடித்த பிடியை தளர்த்தினான். ஆனால் தன் மீது எங்கிருந்தோ வந்த பகழியை கைப்பற்றி நெருக்கிப்பிடித்தான். மரணவலியும், சினமும் ஒருசேர, 'அழுந்தும் இச் சரம் எய்தவன் ஆர்கொல்?'[4003] என்று வியப்புடன் நோக்கினான்.


'தேவரோ?' என அயிர்க்கும்; 'அத்

      தேவர், இச் செயலுக்கு

ஆவரோ? அவர்க்கு ஆற்றல்

      உண்டோ?' எனும்; 'அயலோர்

யாவரோ?' என நகைசெயும்;

      'ஒருவனே, இறைவர்

மூவரோடும் ஒப்பான், செயல்

      ஆம்' என மொழியும். [4005]


‘..தேவர்க்கும் வாலிக்கும் பகையின்மையாலும், பாற்கடலைக் கடைந்து அமுதம் கொடுத்திருப்பதால் தன்னால் நன்மை பெற்றவர்களாதலாலும், இருவர் போரிடுகையில் இடையில் ஒருவர்மேல் அம்பு தொடுக்கும் அறமல்லாத செயலைத் தேவர்கள் செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கையாலும் வாலி 'தேவரோ என அயிர்க்கும்' என்றார்.  ஒருவேளை நன்றி மறந்து போரிட எண்ணினர் என்றாலும் வாலியை எதிர்க்கும் வலிமை அவர்களிடத்து இல்லையாதலின் 'அத்தேவர் இச்செயலுக்கு ஆவரோ? என வாலி நினைத்தான்.  தேவர் அல்லாத பிறர் இக்காரியத்தைச் செய்திருப்பரோ என்பதால் 'அயலோர் யாவரோ' என்றான்.  எவர் செயினும் இச்செயல் இகழ்ச்சிக்குரிய செயலாதலின் அதை எண்ணி வாலி சிரித்தான். திரிமூர்த்திகள் தனித்தனியே வந்தால் வாலியை வெல்ல இயலாது.’ [உரை: பக்கம்: 216]


திரிமூர்த்திகளும் ஒன்றாய் அமைந்த ஒப்பற்ற பரம்பொருளே இது செய்யவல்லவன் என்பதால் 'ஒருவனே, இறைவர் மூவரோடும் ஒப்பான் செயலாம்.’ [உரை: பக்கம்: 216]


இராமபாணத்தை பறித்து எடுத்த வாலியின் ஆற்றலை கண்டு தேவர்களும், அசுரர்களும், மற்றவர்களும் பாராட்டி வியந்தனராம். வீரரை யார் வியவாதார்?’ (4009) என்று வாலியை புகழ்ந்து வியந்தது, கம்பர்.

(தொடரும்)

இன்னம்பூரான்

08 11 2012

உசாத்துணை:

[http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=56&auth_pub_id=72&pno=216

vaalivadham-size.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages