தமிழ் இனி மெல்லச் சாகும்! விழித்திடு தமிழா !

1,468 views
Skip to first unread message

எல்லைத் தமிழன்

unread,
Dec 10, 2010, 2:20:49 PM12/10/10
to tamilmantram
தமிழ் இனி மெல்லச் சாகும்!  விழித்திடு தமிழா !

மிழ் இனி மெல்லச் சாகும் - என்றான் பாரதி . இப்போதைக்கு அந்த நிலைமை இல்லை என்றே தோன்றினாலும், ஒரு மொழி அழிவதற்கு உண்டான அத்தனை அம்சங்களும் இப்போது தமிழுக்கும் உள்ளது. 


நண்பர் ஒருவர் அனுப்பியுள்ள இந்த கட்டுரை - நம் அனைவருக்கும் ஒரு படிப்பினை. எங்கே சார்? ஸ்ரீலங்கா வில அக்கிரமம் நடந்தப்போவே நாங்கள் எல்லாம் சும்மாதான் வேடிக்கை பார்த்தோம்.. இன்னும் நூறு வருஷம் கழிச்சு நடக்கபோற விஷயத்துக்கு ... கொஞ்சம் ஓவரா இல்லை ! .... ..  என்று கேட்பவர்களுக்கு.....???? 


Tamil tops the series of languages digged-in? - Tamil Literature Ilakkiyam Papers
சமீபத்தில் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் "மரியா ஸ்மித் ஜோனெஸ்" என்ற பெண்மணி இறந்து விட்டார். ஒன்பது பிள்ளைகளுக்கு தாயான இவர் இறக்கும் போது இவருடைய வயது 89. இவருடைய இறப்பு பலருக்கு துயரத்தை கொடுத்துள்ளது.

அவருடைய இழப்பை யாராலுமே ஈடு செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். பழங்குடி இனத்தை சேர்ந்த மரியா ஸ்மித் அலாஸ்காவில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைக்காக பல போராட்டங்களை மேற்கொண்டவர். 

ஆனால் அவருடைய இறப்பு யாராலும் ஈடு செய்ய முடியாததாக பார்க்கப்படுவதற்கு காரணம் அது இல்லை. உண்மையான காரணம், மரியா ஸ்மித் போகும் போது ஒரு மொழியையும் தன்னுடனே சேர்த்துக் கொண்டு போய் விட்டார். ஆம், அலாஸ்காவின் பழங்குடி மக்களின் மொழிகளில் ஒன்றான "ஏயக்" என்கின்ற மொழியை பேசத் தெரிந்த உலகின் கடைசி மனிதராக அவர் மட்டும்தான் இருந்தார். 

அவர் இறந்ததன் பிறகு இன்றைக்கு உலகில் யாருக்குமே அந்த மொழியை பேசத் தெரியாது. அவர் இறந்த தினத்தோடு உலகில் உள்ள பல மொழிகளில் ஒரு மொழி அழிந்து விட்டது. மரியா ஸ்மித்திற்கு ஒன்பது பிள்ளைகள் இருந்தும், யாருமே "ஏயக்" மொழியை கற்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. எல்லோரைப் போன்று அவர்களும் ஆங்கிலம் கற்பதும், பேசுவதும்தான் நாகரீகமானதும், தேவையானதும் என்ற கருத்தோடு இருந்து விட்டார்கள். "ஏயக்" மொழியைப் பேசும் கடைசி மனிதராக தான்தான் இருக்கப் போகின்றேன் என்ற விடயம் மரியா ஸ்மித்திற்கு அன்றைக்கு தெரிந்திருந்ததா என்பதும் தெரியவில்லை.
"ஏயக்" மொழி பேசத் தெரிந்த மரியா ஸ்மித்தின் ஒரு சகோதரி 1993 இலேயே இறந்து விட்டார். அதன் பிறகு மரியா ஸ்மித்தோடு "ஏயக்" மொழியில் உரையாடுவதற்கு யாருமே இருக்கவில்லை. "ஏயக்" மொழி அழிந்து விடக் கூடாது என்பதற்கு மரியா ஸ்மித் சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஒரு மொழியியல் வல்லுனரின் உதவியோடு "ஏயக்" மொழிக்கான அகராதியையும், இலக்கண நூலையும் தயாரித்தார். இனிமேல் யாராவது இந்த நூல்களின் உதவியோடு ஏயக் மொழியை கற்றுப் பேசினால் மட்டும்தான், அந்த மொழி மீண்டும் உயிர் பெறும்.ஏயக் மொழிக்கு மட்டும்தான் இந்த நிலைமை என்று இல்லை.

உலகின் பெரும்பாலான மொழிகளின் நிலைமை இதுதான்.  இரண்டு வாரத்திற்கு ஒரு முறை உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு மொழி அழிவதாக மொழியியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள்.

மரியா ஸ்மித் வாழ்ந்த அலாஸ்காவில் பேசப்படுகின்ற மொழிகளில் மேலும் 20 மொழிகள் விரைவில் அழிந்து விடும் நிலையில் இருக்கின்றன. உலகம் எங்கும் மொழிகள் அழிந்து வரும் வேகம் அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை. ஒரு மொழி அழிகின்ற பொழுது ஒரு இனத்தின் பண்பாடு அழிகிறது. இன்னும் சொல்வது என்றால் ஒரு இனமே அழிகிறது. அழிகின்ற மொழிகளில் பெரும்பாலானவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழமையான மொழிகள். அந்த மொழிகளுக்குள் மனித குலத்தின் வரலாற்றின் பெரும் பகுதி புதைந்து கிடக்கின்றது. மொழிகளோடு மனித குலத்தின் வரலாற்று உண்மைகளும் அழிந்து போகின்றன. 
இன்றைக்கு உலகிலே வாழுகின்ற அறுநூறு கோடி மக்களும் மொத்தம் ஆறாயிரம் மொழிகளைப் பேசுகின்றார்கள். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆறாயிரம் மொழிகளிலே அறுநூறு மொழிகள் மட்டுமே மிஞ்சியிருக்கும். மிச்சம் ஐந்தாயிரத்து ஐந்நூறு மொழிகளும் அழிந்து விடும். இது மொழியியல் வல்லுனர்களின் தீவிரமான ஒரு எச்சரிக்கை. இன்றைக்கு பேசப்படுகின்ற ஆறாயிரம் மொழிகளில் மூவாயிரம் மொழிகளை ஆயிரத்திற்கும் குறைவானவர்களே பேசுகின்றார்கள். ஏறக்குறைய ஆயிரத்து ஐந்நூறு மொழிகளை நூறு பேர் வரையிலானவர்களே பேசுகிறார்கள். ஐந்நூறு மொழிகளை வெறும் பத்துப் பேர்தான் பேசுகிறார்கள்.

ஒரு மொழி நிலைத்து நிற்பதற்கு ஆகக் குறைந்தது ஒரு இலட்சம் பேராவது அந்த மொழியை பேச வேண்டும் என்பது மொழியியல் வல்லுனர்களின் கருத்து. அந்த வகையில் தமிழ் மொழி தற்போதைக்கு அழியாது என்று நம்பலாம். உலகில் மிக அதிகமானவர்களால் பேசப்படுகின்ற இருபது மொழிகளின் பட்டியலில் தமிழும் இருக்கின்றது. கல்வெட்டில் இருந்து கணினி வரை தமிழ் மொழி பரந்து நிற்கின்றது. 
ஆனால் ஒரு மொழி அழிவதற்கு தேவையான அனைத்துக் காரணங்களையும் தமிழ் மொழியும் கொண்டுதான் இருக்கின்றது என்பது இதிலே ஒரு அபாயகரமான செய்தி.

ஒரு மொழி அழிவதற்கான முக்கிய காரணங்களாக சில விஷயங்கள்  சுட்டிக் காட்டப்படுகின்றன. மொழிக்குள் மற்றைய மொழிகளின் ஊடுருவலும் ஆதிக்கமும், வட்டாரப் பேச்சு வழக்குகள் தனி மொழிகளாக கிளர்வது, இளந்தலைமுறை மொழியை கற்கவும் பேசவும் ஆர்வம் அற்று இருப்பது போன்றவை ஒரு மொழி அழிவதற்கு முக்கிய காரணங்கள். வேற்று மொழிகளின் ஊடுருவல் தமிழுக்குள் மித மிஞ்சிப் போய் கிடக்கின்றது. எத்தனையோ சொற்களை, அவைகள் தமிழ் சொற்களா இல்லையா என்பதை அறிவதே மிகக் கடினமாக இருக்கின்றது.

அதே போன்று பல துறைகளில் ஆங்கிலம் போன்ற மொழிகளின் ஆதிக்கம் இருக்கின்றது. வட்டாரப் பேச்சு வழக்கு மொழிகளாக இருந்தவை தனி மொழிகளாக பிரிந்து போனதையும் தமிழ் மொழி சந்தித்திருக்கின்றது. இன்றைக்கு தமிழ் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான வட்டார மொழிகள் நாளை தனி மொழிகளாக மாறி விடாது என்று உறுதியாக நம்புவதற்கு போதுமான காரணங்கள் இல்லை. "பொதுவான தமிழ்" இன்றைக்கு எழுத்தில் மட்டும்தான் இருக்கின்றது. ஆனால் "வட்டார மொழி இலக்கியங்கள்" என்ற பெயரில் வருகின்ற அதிகரித்த படைப்புக்கள் இதற்கும் முடிவு கட்டி விடுமோ என்ற அச்சத்தைக் கொடுக்கின்றது. தமிழ் நாட்டின் சென்னை போன்ற பெரு நகரங்களிலும், புலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழும் இளந்தலைமுறை தமிழை எவ்வளவு தூரம் பேசுவதற்கும், கற்பதற்கும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இன்றைக்கும் தமிழ் மொழி உயிரோடு இருப்பதன் ஒரே ஒரு காரணம், தமிழை பேசுபவர்கள் ஆறு கோடிக்கும் மேற்பட்டவர்களாக இருப்பதுதான். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் முப்பது ஆண்டுகளில் அழியப் போகின்ற மொழிகளில் ஒன்றாக தமிழும் இருப்பதாக செய்தி ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் முப்பது ஆண்டுகளில் எல்லாம் தமிழ் அழிந்து விடாது. முப்பது ஆண்டுகள் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. அதே வேளை நீண்ட காலத்திற்கு நாம் இப்படி இறுமாப்போடு இருக்க முடியாது.

பேசுபவர்களின் எண்ணிக்கையில் மட்டும் ஒரு மொழியின் இருப்பு தங்கியிருக்க முடியாது. எண்ணிக்கையும் மாறுபடக் கூடிய ஒன்றுதான். மொழி அழிவதற்கு தேவையான மற்றைய காரணிகளும் தமிழில் இருக்கின்றன. ஆகவே தமிழ் மொழி நீடித்து நிலைக்க வேண்டும் என்ற சிந்தனை ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் இருந்தால் மட்டும்தான், தமிழ் மொழி நீண்ட காலத்திற்கும் நிலைக்கும். இல்லையென்றால் "அழிந்து போன மொழிகளின் பட்டியலில்" தமிழ் இடம் பெறுவது தவிர்க்க முடியாததாகி விடும். மரியா ஸ்மித் ஜோனஸின் உடலோடு "ஏயக்" மொழியும் புதைக்கப்பட்டுவிட்ட இந்த நாளில் தமிழர்களைப் பார்த்து சொல்லக் கூடிய செய்தி இதுதான்.
தமிழரோடு தமிழில் பேசுவோம்...
தமிழன் என்று சொல்வோம்....
தலை நிமிர்ந்து நிற்போம்.....

"தமிழன் இல்லாத நாடில்லை
தமிழனுக்கென்று ஒரு நாடில்லை..."


Mani Manivannan

unread,
Dec 10, 2010, 3:12:05 PM12/10/10
to tamilmanram
ஆட்சி மொழியாக இல்லாத மொழிகள், அடுக்களை மொழிகள் மெல்ல மெல்ல அழிந்து மறைந்திடும் என்பது உண்மைதான் என்றாலும், இது போன்ற மிரட்டல் கட்டுரை அப்படிப் பட்ட அழிவுக்கு வித்திடுமே ஒழிய வாழ்வுக்கு வழி வகுக்காது என்பதுதான் வருந்தத்தக்க உண்மை.
 
ஒரு மொழி அழிந்து கொண்டு இருக்கிறது என்றால் அதைக் கற்பவர்கள் எண்ணிக்கை குறையுமே ஒழியக் கூடாது. 
 
முன்னெப்போதையும் விட இப்போது தமிழ் பல்லாயிரக் கணக்கானவர்களுக்குச் சோறு போட்டுக் கொண்டிருக்கிறது.  முன்னெப்போதையும் விட பல்லாயிரக் கணக்கணவர்கள் தமிழில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.  தமிழில் இல்லாத தலைப்புகளே இல்லை என்னும் அளவுக்கு மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் உட்பட, உலகில் வெளிவந்துள்ள எந்த நூலாக இருந்தாலும் அதைப் படித்துக் கருத்துரைக்கும் தமிழ்ப் பதிவர்கள் இருக்கிறார்கள்.  உலகத் திரைப்படங்களை அலசும் பதிவுகள் ஆயிரக் கணக்கானவை.  அரசியல் தமிழனுக்கு மூச்சு போல.
 
தமிழ்நாட்டில் வாழ்பவர்கள் தமிழ்ச் சூழலில் வாழ்கிறார்கள்.  இங்கே செந்தமிழ் நடையில் அரசு அறிவிப்புப் பலகைகள் உள்ளன.  செந்தமிழ் நடையில் எண்ணற்ற நூல்கள், தாளிகைகள் வெளிவருகின்றன.
 
ஆட்சி மொழியிலும், சட்ட மன்ற மொழியிலும், அரசு அலுவலகங்களிலு, நீதி மன்றங்களிலும் தமிழ் இன்னும் மேம்படலாம், மேம்பட வேண்டும்.
 
வெல்லத் தமிழ் இனி வெல்லும் என்று பறை சாற்றுவார் சிங்கைத் தமிழர் மா. கோ.  தமிழின் பெருமை அதன் தொன்மையில் மட்டுமல்ல, அதன் தொடர்ச்சியிலும் இருக்கிறது என்று முழங்கினார் மலேசியத் தமிழர் முத்து நெடுமாறன்.  தமிழால் வாழ்வோர் எண்ணிக்கை கூடிக்கொண்டு வரும் காலத்தில் தன்னம்பிக்கை மிக்க வருங்காலத்தை வரவேற்போம்.
 
தமிழை மேம்படுத்துவது நம் பொறுப்பு. அதைச் செவ்வனே செய்வோம்.  மற்றவர்களுக்கும் தமிழ் மீது நம்பிக்கை வரவழைப்போம்.  இது அழிந்து கொண்டு இருக்கும் மொழி என்ற நம்பிக்கையற்ற பேச்சு நம்மைத் தளரச் செய்வது.
 
பாரதியின் பாடலிலிருந்து ஒரு பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு நம்பிக்கையிழந்து திரிய வேண்டாம்.
 
அவ்வாறு தமிழைத் தூற்றுபவன் ஒரு பேதை என்றே கடிந்தார் பாரதி.
 
”கொன்றிடும்போல் ஒரு வார்த்தை” என்று இந்தக் கூற்றைச் சாடுகிறார்.  “கூறத்தகாதவன் கூறினன் கண்டீர்” என்று சொன்னவனைக் கடிகிறார் பாரதி.
 
இந்த வசை எனக்கெய்திடலாமோ? என்று தமிழன்னை தமிழர்களிடம் கேட்பதாகச் சொல்கிறார்.
 
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
 செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்
 
என்று தமிழன்னை தன் செல்வங்களுக்குக் கட்டளை இடுகிறாள்.
 
தந்தை அருள்வலியாலும் - இன்று
 சார்ந்த புலவர் தவ வலியாலும்
இந்தப் பெரும்பழி தீரும் புகழ்
  ஏறிப் புவிமிசை என்றுமிருப்பேன்
 
என்று தன்னம்பிக்கையோடு நிறைவு பெரும் பாரதியாரின் பாடலில் வரும் பேதையின் கூற்றையே நம் பிடித்துக் கொண்டிருப்பது பாரதியை நாம் புரிந்து கொள்ளவில்லை என்பதற்கே அடையாளம்.  இந்தியாவுக்கு விடுதலை என்பதே பொய்யாய் வெறுங்கனவாய் இருந்த கொடுமையான காலத்திலேயே
 
“ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்”
 
என்று கொண்டாடிய தன்னம்பிக்கைக் கவிஞன் பாரதி.
 
அடிமைச் சங்கிலிகளால் பிணிக்கப் பட்டு கட்டுண்ட காலத்திலேயே
 
 ”வெள்ளிப் பனிமலை மீதுலவுவோம் அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்”
 
என்று ஒளிமயமான எதிர்காலத்தைப் பற்றிக் கனாக் கண்டவன் பாரதி.
 
தமிழன்னை புகழ் ஏறி என்றும் புவிமிசை இருப்பாள் என்பதே கவிஞனின் வாக்கு.  அந்த வாக்கு நனவாக வேண்டுமென்றால் தமிழன்னையின் மக்கள் எல்லோரும் ஒருமித்து உழைக்க வேண்டும் என்பதே அவன் கட்டளை.
 
செய்வோம்.
 
என்றுமுள்ள தென் தமிழ் என்று கம்பன் கொண்டாடிய தமிழை, என்றும் புவிமிசை இருப்பாள் என்று பாரதி கொண்டாடிய தமிழன்னையைப் போற்றுபவர்கள், வாரத்துக்கு ஒரு புதுக் கட்டுரை, தமிழில் இல்லாத ஒரு கருத்தை, கலைச் செல்வத்தை, தமிழில் மொழி பெயர்த்துக் கொடுப்போம்.
 
வாருங்கள், ஊர் கூடித் தேர் இழுக்கலாம்.  விக்கிப்பீடியா காத்திருக்கிறது.
 
அன்புடன்,
 
மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு
 


 
2010/12/11 எல்லைத் தமிழன் <matha...@gmail.com>
தமிழ் இனி மெல்லச் சாகும்!  விழித்திடு தமிழா !

C.R. Selvakumar

unread,
Dec 10, 2010, 3:56:44 PM12/10/10
to tamil...@googlegroups.com
மிக நன்றாகச் சொன்னீர்கள் மணி!! ஒவ்வொரு சொல்லும்
நம்பிக்கைதரும் ஊக்க மொழிகள்.
 
//..செய்வோம்.
 என்றுமுள்ள தென் தமிழ் என்று கம்பன் கொண்டாடிய தமிழை, என்றும் புவிமிசை இருப்பாள் என்று பாரதி கொண்டாடிய தமிழன்னையைப் போற்றுபவர்கள், வாரத்துக்கு ஒரு புதுக் கட்டுரை, தமிழில் இல்லாத ஒரு கருத்தை, கலைச் செல்வத்தை, தமிழில் மொழி பெயர்த்துக் கொடுப்போம்.
 
வாருங்கள், ஊர் கூடித் தேர் இழுக்கலாம்.  விக்கிப்பீடியா காத்திருக்கிறது.//
 
நீங்கள் சுட்டியவாறு
விக்கிப்பீடியா ஒரு நல்ல எடுத்துக்காட்டு. எப்படி கூட்டுழைப்பால்
பயனுடைய ஒரு கோடி சொற்கள் கொண்ட கருவூலம் உருவாகியது
எனக் காணலாம்.. தேனியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர்
விக்கிப்பீடியாவைப்பற்றி தமிழில் ஒரு நூலே எழுதியுள்ளார். பாருங்கள்.
இடப்புறம் உள்ளவர் தமிழ் விக்கிப்பீடியாவின் முன்னோடி திரு மயூரநாதன்.
நமக்கு வேண்டிய அத்தனையையும் தமிழில் படைக்கலாம். ஆயிரம் பேர்
கூடி உழைத்தால் மிக வியப்புறும் அறிவுக்கருவூலம் கிட்டும்.
 
தமிழ் விக்சனரி என்னும் அகரமுதலி உலக மொழிகளிள் வரிசையில்
10 ஆவதாக உள்ளது. இடாய்ச்சு (செருமன் மொழி)  18 ஆவது, நிப்பானியம் (சப்பானியம்) 27 ஆவது, உலகில் ஏறத்தாழ 500 மில்லியன் மக்கள் பேசும் எசுப்பானியம் (español) 28ஆவது. அரபி 31 ஆவது இடத்தில், இந்தியோ 77-ஆவது.  ஆனால் இன்னும் தமிழர்கள் ஆக்கவழிகளில் உழைக்க முன் வந்தால்
நாம் உலகில் முதல் 5-10 மொழிகளில் ஒன்றாக உயர்ந்து நிற்போம்.
 
தமிழ் ஓங்கி நிற்க நாம் எல்லோரும் சேர்ந்து ஆக்கவழிகளில்
உழைக்க வேண்டும் அல்லவா?
 
அன்புடன்
செல்வா
 
 
Tamil_wikpedia_book_cover.jpg
 

2010/12/10 எல்லைத் தமிழன் <matha...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.



--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar
Tamil_wikpedia_book_cover.jpg

C.R. Selvakumar

unread,
Dec 10, 2010, 3:57:48 PM12/10/10
to tamil...@googlegroups.com
தமிழ் விக்சனரியின் புள்ளிக்குரிப்புகளைக் காண:
 
அன்புடன்
செல்வா

2010/12/10 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

rajam

unread,
Dec 10, 2010, 5:30:51 PM12/10/10
to tamil...@googlegroups.com, Mani Manivannan
"தமிழ் இனி மெல்ல-ச் சாகும்" என்று சொன்னவன் ஒரு "பேதை"தானே, இல்லையா? !
தமிழ் மெல்லச் செத்து விட்டதென்றால் ... ... ... இங்கே நாம் எந்த மொழியில் நம் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறோம்? 
திரு மணிவண்ணன் குறித்துக் காட்டியது போல் ... ஊர் கூடித் தேர் இழுக்கலாமே!
அன்புடன்,
ராஜம்

On Dec 10, 2010, at 12:56 PM, C.R. Selvakumar wrote:

மிக நன்றாகச் சொன்னீர்கள் மணி!! ஒவ்வொரு சொல்லும்
நம்பிக்கைதரும் ஊக்க மொழிகள்.
 
//..செய்வோம்.
 என்றுமுள்ள தென் தமிழ் என்று கம்பன் கொண்டாடிய தமிழை, என்றும் புவிமிசை இருப்பாள் என்று பாரதி கொண்டாடிய தமிழன்னையைப் போற்றுபவர்கள், வாரத்துக்கு ஒரு புதுக் கட்டுரை, தமிழில் இல்லாத ஒரு கருத்தை, கலைச் செல்வத்தை, தமிழில் மொழி பெயர்த்துக் கொடுப்போம்.
 
வாருங்கள், ஊர் கூடித் தேர் இழுக்கலாம்.  விக்கிப்பீடியா காத்திருக்கிறது.//
 
நீங்கள் சுட்டியவாறு
விக்கிப்பீடியா ஒரு நல்ல எடுத்துக்காட்டு. எப்படி கூட்டுழைப்பால்
பயனுடைய ஒரு கோடி சொற்கள் கொண்ட கருவூலம் உருவாகியது
எனக் காணலாம்.. தேனியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர்
விக்கிப்பீடியாவைப்பற்றி தமிழில் ஒரு நூலே எழுதியுள்ளார். பாருங்கள்.
இடப்புறம் உள்ளவர் தமிழ் விக்கிப்பீடியாவின் முன்னோடி திரு மயூரநாதன்.
நமக்கு வேண்டிய அத்தனையையும் தமிழில் படைக்கலாம். ஆயிரம் பேர்
கூடி உழைத்தால் மிக வியப்புறும் அறிவுக்கருவூலம் கிட்டும்.
 
தமிழ் விக்சனரி என்னும் அகரமுதலி உலக மொழிகளிள் வரிசையில்
10 ஆவதாக உள்ளது. இடாய்ச்சு (செருமன் மொழி)  18 ஆவது, நிப்பானியம் (சப்பானியம்) 27 ஆவது, உலகில் ஏறத்தாழ 500 மில்லியன் மக்கள் பேசும் எசுப்பானியம் (español) 28ஆவது. அரபி 31 ஆவது இடத்தில், இந்தியோ 77-ஆவது.  ஆனால் இன்னும் தமிழர்கள் ஆக்கவழிகளில் உழைக்க முன் வந்தால்
நாம் உலகில் முதல் 5-10 மொழிகளில் ஒன்றாக உயர்ந்து நிற்போம்.
 
தமிழ் ஓங்கி நிற்க நாம் எல்லோரும் சேர்ந்து ஆக்கவழிகளில்
உழைக்க வேண்டும் அல்லவா?
 
அன்புடன்
செல்வா
 
 

சி. ஜெயபாரதன்

unread,
Dec 10, 2010, 6:04:38 PM12/10/10
to tamil...@googlegroups.com, anb...@googlegroups.com
தமிழ் மொழி 3000 ஆண்டுகளாக முச்சங்கம் வைத்து வளர்த்து தமிழகத்தை ஆண்டு வருகிறது.   தமிழர் வட அமெரிக்கா (கனடா உள்பட), இங்கிலாந்து,  பிரான்ஸ்,  ஜெர்மனி, நார்வே, ஸ்வீடன், அரேபிய நாடுகள், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா  போன்று பல்வேறு உலக நாடுகளில்  வேரூன்றிக் கிளைகள்,  விழுதுகள்  விட்டிருக்கிறார்.
 
தமிழ் ஓர் இமய மலை.   அதில் சிறிது சரிவுகள் ஏற்பட்டாலும்,  மலையை  யாரும்  அழிக்க முடியாது.    
 
ஜெயபாரதன்.
 

வையகத் தமிழ் வாழ்த்து

சி. ஜெயபாரதன், கனடா

 

பாரத கண்டச் சீரிளம் தமிழே !
ஓரினம் நாமெலாம் ! ஒருதாய் மக்கள் !
வாழ்த்துவம் உனையே ! வணங்குவம் உனையே !
தாரணி மீதில்உன் வேர்களை விதைத்தாய் !
வேர்கள் தழைத்து விழுதுகள் பெருகின !
ஈழத் தீவில் இணைமொழி நீயே !
சிங்கப் பூரினில் துணைமொழி நீயே !
மலேசிய நாட்டில் தனிமொழி யானாய் !
காசினி மீதில் மேவிய தமிழே !
வாழ்த்துவம் உனையே ! வணங்குவம் உனையே !

ஆத்திச் சூடி ஓளவை, ஆண்டாள்,
வையகப் புலவர் வள்ளுவர், இளங்கோ,
பாரதி, கம்பர், பாரதி தாசன்,
யாவரும் உனது மாதவப் புதல்வர் !
மலைகடல் தாண்டி அலைகளைப் போல
ஆசியா, அரேபியா, ஆஃப்ரிக்கா, ஈரோப்,
வடஅமெ ரிக்கா, கனடா புகுந்து
சொந்த மாக்கினர், செந்தமிழ் மாந்தர் !
யாதும் நாடே ! யாவரும் கேளிர் !
பாதுகாத் துன்னைப் பரப்புதல் எம்பணி !
காசினி மீதில் நேசமாய் நிலவும்
மாசிலாத் தமிழே ! வாழ்த்துவம் உனையே !
வையகத் தமிழே ! வணங்குவம் உனையே !

++++++++++
jaya...@tnt21.com [April 7, 2008]

 
 
++++++++++++++++++++
 
 2010/12/10 rajam <ra...@earthlink.net>

Mohanarangan V Srirangam

unread,
Dec 10, 2010, 10:29:49 PM12/10/10
to tamil...@googlegroups.com, anb...@googlegroups.com
ஐயா! தமிழ் ஒரு காலத்தில் மறைந்துவிட்டதென்று ஓரரசன் 12 வருடப் வர்க்கடத்தின் பின் புலவர்களை அழைப்பித்துக் கேட்டானாம் ‘தமிழ் அறிந்தார் யாருமுண்டோ?’ என்று. அற்றைய ‘தமிழ்’ என்பதற்கு அகப்பொருள் என்று பொருள் கொள்க. 

ஆழ்வார்களும், ஆசாரியர்களும் தோன்றி அருந்தமிழை திருவரங்கப் பெருமானின் அரசாங்க மொழியாக ஆக்கிவைத்து விட்டனர். தமிழ் பின் சென்ற பெருமாளும், திருமொழித் திருவாய்மொழித் திருநாள் என்ற தமிழ்த் திருநாளுமாக அன்றிலிருந்து இன்றுவரை, பாலேய் தமிழர் இசைக்காரர் பத்தர் பரவும் பைந்தமிழாய் ஸர்வ கோலாஹலத்துடனும், செழிப்புடனும் தமிழும், தமிழுக்கே தனிச்சிறப்பான அகப்பொருளின் நுணுக்கங்களும் நாளுக்கு நாள் வளர்முகத்தில் செம்மாந்து சிறக்கின்றன. மொத்த வடமொழி நூற்கடலையும் தமிம் மொழியின் வேதத்திற்குச் சேவகம் செய்ய வைத்த, ஆழ்வாரின் திருவடிகளே சரணமெனக் கொண்ட ஆசாரியர்களும், நற்கலை பயிலும் திருமாலவன் அடியார்களும், திருவரங்கத் திருப்பதியும் இவ்வுல்கில் நிலவும் வரை தமிழ் வளர்ந்துகொண்டே இருக்குமே அன்றி ஒரு நாளும் மறையாது. 

அனைத்து மக்களும் தமிழை விட்டாலும் தமிழையும், அதன் சிறப்பையும் கோயில் கட்டி வணங்கும் ஸ்ரீவைஷ்ணவர்கள் தம் அருந்தனமாக அதைக் காப்பாற்றி வருவர் என்பது வரலாறு கண்ட உண்மை, அதற்காக நாடு கடத்தப் பட்டாலும் சரி, அல்லது என்ன துன்பங்களை எதிர்கொள்ள நேர்ந்தாலும் சரி. 

எனவே மெல்லத் தமிழ் இனி சாகும் என்பது பொருத்தமற்ற சொல்லாடலாம் என்க.

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

***

2010/12/11 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>

Mohanarangan V Srirangam

unread,
Dec 10, 2010, 10:31:17 PM12/10/10
to tamil...@googlegroups.com, anb...@googlegroups.com
டைப்போ தவறு -- தமிம் --> தமிழ் 
மன்னிக்கவும்

2010/12/11 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

N. Ganesan

unread,
Dec 11, 2010, 1:38:04 AM12/11/10
to தமிழ் மன்றம்

On Dec 10, 5:04 pm, சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com> wrote:
> *தமிழ் மொழி 3000 ஆண்டுகளாக முச்சங்கம் வைத்து வளர்த்து தமிழகத்தை ஆண்டு


> வருகிறது.   தமிழர் வட அமெரிக்கா (கனடா உள்பட), இங்கிலாந்து,  பிரான்ஸ்,
> ஜெர்மனி, நார்வே, ஸ்வீடன், அரேபிய நாடுகள், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா
> போன்று பல்வேறு உலக நாடுகளில்  வேரூன்றிக் கிளைகள்,  விழுதுகள்

> விட்டிருக்கிறார்.*
> **
> *தமிழ் ஓர் இமய மலை.   அதில் சிறிது சரிவுகள் ஏற்பட்டாலும்,  மலையை  யாரும்
>  அழிக்க முடியாது.    *...
>
> read more »
>
> *ஜெயபாரதன்.*


>
>  வையகத் தமிழ் வாழ்த்து
>

> *சி. ஜெயபாரதன், கனடா *


>
> பாரத கண்டச் சீரிளம் தமிழே !
> ஓரினம் நாமெலாம் ! ஒருதாய் மக்கள் !
> வாழ்த்துவம் உனையே ! வணங்குவம் உனையே !
> தாரணி மீதில்உன் வேர்களை விதைத்தாய் !
> வேர்கள் தழைத்து விழுதுகள் பெருகின !
> ஈழத் தீவில் இணைமொழி நீயே !
> சிங்கப் பூரினில் துணைமொழி நீயே !
> மலேசிய நாட்டில் தனிமொழி யானாய் !
> காசினி மீதில் மேவிய தமிழே !
> வாழ்த்துவம் உனையே ! வணங்குவம் உனையே !
>
> ஆத்திச் சூடி ஓளவை, ஆண்டாள்,
> வையகப் புலவர் வள்ளுவர், இளங்கோ,
> பாரதி, கம்பர், பாரதி தாசன்,
> யாவரும் உனது மாதவப் புதல்வர் !
> மலைகடல் தாண்டி அலைகளைப் போல
> ஆசியா, அரேபியா, ஆஃப்ரிக்கா, ஈரோப்,
> வடஅமெ ரிக்கா, கனடா புகுந்து
> சொந்த மாக்கினர், செந்தமிழ் மாந்தர் !
> யாதும் நாடே ! யாவரும் கேளிர் !
> பாதுகாத் துன்னைப் பரப்புதல் எம்பணி !
> காசினி மீதில் நேசமாய் நிலவும்
> மாசிலாத் தமிழே ! வாழ்த்துவம் உனையே !
> வையகத் தமிழே ! வணங்குவம் உனையே !
>

அருமையான வையத் தமிழ் வாழ்த்து.

நன்றி,
நா. கணேசன்

> ++++++++++
> jayaba...@tnt21.com [April 7, 2008]


>
> ++++++++++++++++++++
>
>  2010/12/10 rajam <ra...@earthlink.net>
>
>
>
> >  "தமிழ் இனி மெல்ல-ச் சாகும்" என்று சொன்னவன் ஒரு "பேதை"தானே, இல்லையா? !
> >  தமிழ் மெல்லச் செத்து விட்டதென்றால் ... ... ... இங்கே நாம் எந்த மொழியில்
> > நம் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறோம்?
> >  திரு மணிவண்ணன் குறித்துக் காட்டியது போல் ... ஊர் கூடித் தேர் இழுக்கலாமே!
> >  அன்புடன்,
> > ராஜம்
>
> >  On Dec 10, 2010, at 12:56 PM, C.R. Selvakumar wrote:
>
> >  மிக நன்றாகச் சொன்னீர்கள் மணி!! ஒவ்வொரு சொல்லும்
> > நம்பிக்கைதரும் ஊக்க மொழிகள்.
>

> > *//..செய்வோம்.


> >  என்றுமுள்ள தென் தமிழ் என்று கம்பன் கொண்டாடிய தமிழை, என்றும் புவிமிசை
> > இருப்பாள் என்று பாரதி கொண்டாடிய தமிழன்னையைப் போற்றுபவர்கள், வாரத்துக்கு ஒரு
> > புதுக் கட்டுரை, தமிழில் இல்லாத ஒரு கருத்தை, கலைச் செல்வத்தை, தமிழில் மொழி
> > பெயர்த்துக் கொடுப்போம்.
>

> > வாருங்கள், ஊர் கூடித் தேர் இழுக்கலாம்.  விக்கிப்பீடியா காத்திருக்கிறது.//*
> > **


> > நீங்கள் சுட்டியவாறு
> > விக்கிப்பீடியா ஒரு நல்ல எடுத்துக்காட்டு. எப்படி கூட்டுழைப்பால்
> > பயனுடைய ஒரு கோடி சொற்கள் கொண்ட கருவூலம் உருவாகியது
> > எனக் காணலாம்.. தேனியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர்
> > விக்கிப்பீடியாவைப்பற்றி தமிழில் ஒரு நூலே எழுதியுள்ளார். பாருங்கள்.
> > இடப்புறம் உள்ளவர் தமிழ் விக்கிப்பீடியாவின் முன்னோடி திரு மயூரநாதன்.
> > நமக்கு வேண்டிய அத்தனையையும் தமிழில் படைக்கலாம். ஆயிரம் பேர்
> > கூடி உழைத்தால் மிக வியப்புறும் அறிவுக்கருவூலம் கிட்டும்.
>
> > தமிழ் விக்சனரி என்னும் அகரமுதலி உலக மொழிகளிள் வரிசையில்
> > 10 ஆவதாக உள்ளது. இடாய்ச்சு (செருமன் மொழி)  18 ஆவது, நிப்பானியம்
> > (சப்பானியம்) 27 ஆவது, உலகில் ஏறத்தாழ 500 மில்லியன் மக்கள் பேசும்
> > எசுப்பானியம் (español) 28ஆவது. அரபி 31 ஆவது இடத்தில், இந்தியோ 77-ஆவது.
> > ஆனால் இன்னும் தமிழர்கள் ஆக்கவழிகளில் உழைக்க முன் வந்தால்
> > நாம் உலகில் முதல் 5-10 மொழிகளில் ஒன்றாக உயர்ந்து நிற்போம்.
>
> > தமிழ் ஓங்கி நிற்க நாம் எல்லோரும் சேர்ந்து ஆக்கவழிகளில்
> > உழைக்க வேண்டும் அல்லவா?
>
> > அன்புடன்
> > செல்வா
>
> >   <Tamil_wikpedia_book_cover.jpg>
>

> > 2010/12/10 எல்லைத் தமிழன் <mathan....@gmail.com>
>
> >>  *தமிழ் இனி மெல்லச் சாகும்!  விழித்திடு தமிழா !*


>
> >> தமிழ் இனி மெல்லச் சாகும் - என்றான் பாரதி . இப்போதைக்கு அந்த நிலைமை இல்லை
> >> என்றே தோன்றினாலும், ஒரு மொழி அழிவதற்கு உண்டான அத்தனை அம்சங்களும் இப்போது
> >> தமிழுக்கும் உள்ளது.
>
> >> நண்பர் ஒருவர் அனுப்பியுள்ள இந்த கட்டுரை - நம் அனைவருக்கும் ஒரு படிப்பினை.
> >> எங்கே சார்? ஸ்ரீலங்கா வில அக்கிரமம் நடந்தப்போவே நாங்கள் எல்லாம் சும்மாதான்
> >> வேடிக்கை பார்த்தோம்.. இன்னும் நூறு வருஷம் கழிச்சு நடக்கபோற விஷயத்துக்கு ...
> >> கொஞ்சம் ஓவரா இல்லை ! .... ..  என்று கேட்பவர்களுக்கு.....????
>
> >> [image: Tamil tops the series of languages digged-in? - Tamil Literature

> >> Ilakkiyam Papers] <http://www.livingextra.com/>
> >> சமீபத்தில் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் *"மரியா ஸ்மித் ஜோனெஸ்"* என்ற


> >> பெண்மணி இறந்து விட்டார். ஒன்பது பிள்ளைகளுக்கு தாயான இவர் இறக்கும் போது
> >> இவருடைய வயது 89. இவருடைய இறப்பு பலருக்கு துயரத்தை கொடுத்துள்ளது.
>
> >> அவருடைய இழப்பை யாராலுமே ஈடு செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். பழங்குடி

> >> இனத்தை சேர்ந்த மரியா ஸ்மித்- Hide quoted text -
>
> - Show quoted text -

N. Ganesan

unread,
Dec 11, 2010, 1:43:21 AM12/11/10
to தமிழ் மன்றம்

On Dec 10, 9:29 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:


> ஐயா! தமிழ் ஒரு காலத்தில் மறைந்துவிட்டதென்று ஓரரசன்
> 12 வருடப் வர்க்கடத்தின்

வருட வற்கடத்தின் - என்றிருக்க வேண்டுமோ?

ஆண்டுக்கொருமுறை யாரோ ஒரு கிழவி இறப்பதால்
ஒரு மொழி அழிந்துவிட்டது என்று லிங்குவிஸ்ட்
ஒருவர் சொல்வதாய் அறிக்கை வரும். அவை
பேச்சு மொழியாய் இருக்கும், சில நூற்றாண்டுகளாகவே
வெகுசிலர் பேசிய மொழி. அத்துடன் கோடிக்கணக்கானோர்
எழுதும் தமிழை ஒப்பிட முடியாது.

நா. கணேசன்


> பின் புலவர்களை அழைப்பித்துக் கேட்டானாம் ‘தமிழ் அறிந்தார் யாருமுண்டோ?’ என்று.

> அற்றைய ‘தமிழ்’ என்பதற்கு அகப்பொருள் என்று பொருள் கொள்க....
>
> read more »


>
> ஆழ்வார்களும், ஆசாரியர்களும் தோன்றி அருந்தமிழை திருவரங்கப் பெருமானின் அரசாங்க
> மொழியாக ஆக்கிவைத்து விட்டனர். தமிழ் பின் சென்ற பெருமாளும், திருமொழித்
> திருவாய்மொழித் திருநாள் என்ற தமிழ்த் திருநாளுமாக அன்றிலிருந்து இன்றுவரை,
> பாலேய் தமிழர் இசைக்காரர் பத்தர் பரவும் பைந்தமிழாய் ஸர்வ கோலாஹலத்துடனும்,
> செழிப்புடனும் தமிழும், தமிழுக்கே தனிச்சிறப்பான அகப்பொருளின் நுணுக்கங்களும்
> நாளுக்கு நாள் வளர்முகத்தில் செம்மாந்து சிறக்கின்றன. மொத்த வடமொழி
> நூற்கடலையும் தமிம் மொழியின் வேதத்திற்குச் சேவகம் செய்ய வைத்த, ஆழ்வாரின்
> திருவடிகளே சரணமெனக் கொண்ட ஆசாரியர்களும், நற்கலை பயிலும் திருமாலவன்
> அடியார்களும், திருவரங்கத் திருப்பதியும் இவ்வுல்கில் நிலவும் வரை தமிழ்
> வளர்ந்துகொண்டே இருக்குமே அன்றி ஒரு நாளும் மறையாது.
>
> அனைத்து மக்களும் தமிழை விட்டாலும் தமிழையும், அதன் சிறப்பையும் கோயில் கட்டி
> வணங்கும் ஸ்ரீவைஷ்ணவர்கள் தம் அருந்தனமாக அதைக் காப்பாற்றி வருவர் என்பது
> வரலாறு கண்ட உண்மை, அதற்காக நாடு கடத்தப் பட்டாலும் சரி, அல்லது என்ன
> துன்பங்களை எதிர்கொள்ள நேர்ந்தாலும் சரி.
>
> எனவே மெல்லத் தமிழ் இனி சாகும் என்பது பொருத்தமற்ற சொல்லாடலாம் என்க.
>
> ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
>
> ***
>

> 2010/12/11 சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com>
>
>
>
> > *தமிழ் மொழி 3000 ஆண்டுகளாக முச்சங்கம் வைத்து வளர்த்து தமிழகத்தை ஆண்டு


> > வருகிறது.   தமிழர் வட அமெரிக்கா (கனடா உள்பட), இங்கிலாந்து,  பிரான்ஸ்,
> > ஜெர்மனி, நார்வே, ஸ்வீடன், அரேபிய நாடுகள், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா
> > போன்று பல்வேறு உலக நாடுகளில்  வேரூன்றிக் கிளைகள்,  விழுதுகள்

> > விட்டிருக்கிறார்.*
> > **
> > *தமிழ் ஓர் இமய மலை.   அதில் சிறிது சரிவுகள் ஏற்பட்டாலும்,  மலையை  யாரும்
> >  அழிக்க முடியாது.    *
>
> > *ஜெயபாரதன்.*


>
> >  வையகத் தமிழ் வாழ்த்து
>

> > *சி. ஜெயபாரதன், கனடா *


>
> > பாரத கண்டச் சீரிளம் தமிழே !
> > ஓரினம் நாமெலாம் ! ஒருதாய் மக்கள் !
> > வாழ்த்துவம் உனையே ! வணங்குவம் உனையே !
> > தாரணி மீதில்உன் வேர்களை விதைத்தாய் !
> > வேர்கள் தழைத்து விழுதுகள் பெருகின !
> > ஈழத் தீவில் இணைமொழி நீயே !
> > சிங்கப் பூரினில் துணைமொழி நீயே !
> > மலேசிய நாட்டில் தனிமொழி யானாய் !
> > காசினி மீதில் மேவிய தமிழே !
> > வாழ்த்துவம் உனையே ! வணங்குவம் உனையே !
>
> > ஆத்திச் சூடி ஓளவை, ஆண்டாள்,
> > வையகப் புலவர் வள்ளுவர், இளங்கோ,
> > பாரதி, கம்பர், பாரதி தாசன்,
> > யாவரும் உனது மாதவப் புதல்வர் !
> > மலைகடல் தாண்டி அலைகளைப் போல
> > ஆசியா, அரேபியா, ஆஃப்ரிக்கா, ஈரோப்,
> > வடஅமெ ரிக்கா, கனடா புகுந்து
> > சொந்த மாக்கினர், செந்தமிழ் மாந்தர் !
> > யாதும் நாடே ! யாவரும் கேளிர் !
> > பாதுகாத் துன்னைப் பரப்புதல் எம்பணி !
> > காசினி மீதில் நேசமாய் நிலவும்
> > மாசிலாத் தமிழே ! வாழ்த்துவம் உனையே !
> > வையகத் தமிழே ! வணங்குவம் உனையே !
>
> > ++++++++++

> > jayaba...@tnt21.com [April 7, 2008]


>
> > ++++++++++++++++++++
>
> >  2010/12/10 rajam <ra...@earthlink.net>
>
> >>  "தமிழ் இனி மெல்ல-ச் சாகும்" என்று சொன்னவன் ஒரு "பேதை"தானே, இல்லையா? !
> >>  தமிழ் மெல்லச் செத்து விட்டதென்றால் ... ... ... இங்கே நாம் எந்த மொழியில்
> >> நம் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறோம்?
> >>  திரு மணிவண்ணன் குறித்துக் காட்டியது போல் ... ஊர் கூடித் தேர் இழுக்கலாமே!
>
> >>  அன்புடன்,
> >> ராஜம்
>
> >>  On Dec 10, 2010, at 12:56 PM, C.R. Selvakumar wrote:
>
> >>  மிக நன்றாகச் சொன்னீர்கள் மணி!! ஒவ்வொரு சொல்லும்
> >> நம்பிக்கைதரும் ஊக்க மொழிகள்.
>

> >> *//..செய்வோம்.


> >>  என்றுமுள்ள தென் தமிழ் என்று கம்பன் கொண்டாடிய தமிழை, என்றும் புவிமிசை
> >> இருப்பாள் என்று பாரதி கொண்டாடிய தமிழன்னையைப் போற்றுபவர்கள், வாரத்துக்கு ஒரு
> >> புதுக் கட்டுரை, தமிழில் இல்லாத ஒரு கருத்தை, கலைச் செல்வத்தை, தமிழில் மொழி
> >> பெயர்த்துக் கொடுப்போம்.
>
> >> வாருங்கள், ஊர் கூடித் தேர் இழுக்கலாம்.  விக்கிப்பீடியா காத்திருக்கிறது.//

> >> *
> >> **


> >> நீங்கள் சுட்டியவாறு
> >> விக்கிப்பீடியா ஒரு நல்ல எடுத்துக்காட்டு. எப்படி கூட்டுழைப்பால்
> >> பயனுடைய ஒரு கோடி சொற்கள் கொண்ட கருவூலம் உருவாகியது
> >> எனக் காணலாம்.. தேனியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர்
> >> விக்கிப்பீடியாவைப்பற்றி தமிழில் ஒரு நூலே எழுதியுள்ளார். பாருங்கள்.
> >> இடப்புறம் உள்ளவர் தமிழ் விக்கிப்பீடியாவின் முன்னோடி திரு மயூரநாதன்.
> >> நமக்கு வேண்டிய அத்தனையையும் தமிழில் படைக்கலாம். ஆயிரம் பேர்
> >> கூடி உழைத்தால் மிக வியப்புறும் அறிவுக்கருவூலம் கிட்டும்.
>

> >> தமிழ்- Hide quoted text -

Mohanarangan V Srirangam

unread,
Dec 11, 2010, 1:45:06 AM12/11/10
to tamil...@googlegroups.com


2010/12/11 N. Ganesan <naa.g...@gmail.com>



On Dec 10, 9:29 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> ஐயா! தமிழ் ஒரு காலத்தில் மறைந்துவிட்டதென்று ஓரரசன்
> 12 வருடப் வர்க்கடத்தின்

வருட வற்கடத்தின் - என்றிருக்க வேண்டுமோ? 

திருத்தத்திற்கு நன்றி. 
  

rajam

unread,
Dec 11, 2010, 2:05:32 AM12/11/10
to tamil...@googlegroups.com

On Dec 10, 2010, at 10:43 PM, N. Ganesan wrote:

>
>
> On Dec 10, 9:29 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
> wrote:
>> ஐயா! தமிழ் ஒரு காலத்தில்
>> மறைந்துவிட்டதென்று
>> ஓரரசன்
>> 12 வருடப் வர்க்கடத்தின்
>
> வருட வற்கடத்தின் -
> என்றிருக்க வேண்டுமோ?
>
> ஆண்டுக்கொருமுறை யாரோ
> ஒரு கிழவி இறப்பதால்
> ஒரு மொழி அழிந்துவிட்டது
> என்று லிங்குவிஸ்ட்
> ஒருவர் சொல்வதாய்
> அறிக்கை வரும். அவை
> பேச்சு மொழியாய்
> இருக்கும், சில
> நூற்றாண்டுகளாகவே
> வெகுசிலர் பேசிய மொழி.
> அத்துடன்
> கோடிக்கணக்கானோர்
> எழுதும் தமிழை ஒப்பிட
> முடியாது.
>
> நா. கணேசன்


"இடைப்பிறவரல்" ஆக
நுழைகிறேன்.
பொறுத்தருளவும்.


"பொருள் இலக்கணம்"
மறைந்துவிட்டது என்று
பாண்டிய மன்னன்
வருந்தினான் என்றுதான்
படித்திருக்கிறேன்.
"தமிழ்" மறைந்துவிட்டதாக
இல்லை. அப்படித் "தமிழ்"
மறைந்திருந்தால் எந்த
மொழியில் அவன் வருந்தினானோ?

தமிழைப் பொருத்தவரை ...
"பேச்சு மொழியும்"
"எழுத்து மொழியும்"
இரண்டு பெரிய
பகுப்புக்குள் அடங்கும்.
ஒவ்வொரு பகுப்பின்
உள்ளேயும் இது பல பல
வடிவம் பெறும். இதுவே
தமிழின் சிறப்பு; இதுவே
தமிழை இன்றுவரை
வாழவைத்திருக்கிறது.

ஒரு கிழவி இறப்பதால் ஒரு
மொழி அழிந்துவிட்டது
என்பதெல்லாம் ... வம்புப்
பேச்சு.

பேச்சை விடுத்துச்
செய்யக் கூடியது என்ன
என்று பார்க்கலாம்.

தமிழில் பல வகை உண்டு
என்பதை ஒத்துக்கொள்ள
வேண்டும்.

அந்த வகைகளுள் எது
அவரவர்க்கு இயல்பாய்
வருகிறதோ, பிறருடன்
கருத்துப் பகிர்வுக்குப்
பயன்படுகிறதோ அந்த
வகையைப்
பயன்படுத்துவதில் தவறு
இல்லை என்பதை உணரவேண்டும்.


இதுவே என்னால் என்
தமிழுக்குச்
செய்யக்கூடியது.
மற்றவர்கள் என்ன
செய்யப் போகிறார்கள்
என்று தெரிந்துகொள்ள ஆவல்.
> --
> You received this message because you are subscribed to the Google
> Groups "தமிழ் மன்றம்" group.
> To post to this group, send email to tamil...@googlegroups.com.
> To unsubscribe from this group, send email to tamilmanram
> +unsub...@googlegroups.com.

Mohanarangan V Srirangam

unread,
Dec 11, 2010, 2:47:48 AM12/11/10
to tamil...@googlegroups.com


2010/12/11 rajam <ra...@earthlink.net>


On Dec 10, 2010, at 10:43 PM, N. Ganesan wrote:



On Dec 10, 9:29 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
ஐயா! தமிழ் ஒரு காலத்தில் மறைந்துவிட்டதென்று ஓரரசன்
12 வருடப் வர்க்கடத்தின்

வருட வற்கடத்தின் - என்றிருக்க வேண்டுமோ?

ஆண்டுக்கொருமுறை யாரோ ஒரு கிழவி இறப்பதால்
ஒரு  மொழி அழிந்துவிட்டது என்று லிங்குவிஸ்ட்
ஒருவர் சொல்வதாய் அறிக்கை வரும். அவை
பேச்சு மொழியாய் இருக்கும், சில நூற்றாண்டுகளாகவே
வெகுசிலர் பேசிய மொழி. அத்துடன் கோடிக்கணக்கானோர்
எழுதும் தமிழை ஒப்பிட முடியாது.

நா. கணேசன்


"இடைப்பிறவரல்" ஆக நுழைகிறேன். பொறுத்தருளவும்.


"பொருள் இலக்கணம்" மறைந்துவிட்டது என்று பாண்டிய மன்னன் வருந்தினான் என்றுதான் படித்திருக்கிறேன்.
 "தமிழ்" மறைந்துவிட்டதாக இல்லை. அப்படித் "தமிழ்" மறைந்திருந்தால் எந்த மொழியில் அவன் வருந்தினானோ?

தமிழைப் பொருத்தவரை ... "பேச்சு மொழியும்" "எழுத்து மொழியும்" இரண்டு பெரிய பகுப்புக்குள் அடங்கும். ஒவ்வொரு பகுப்பின் உள்ளேயும் இது பல பல வடிவம் பெறும். இதுவே தமிழின் சிறப்பு; இதுவே தமிழை இன்றுவரை வாழவைத்திருக்கிறது. 

உங்களோடு எந்த விதத்திலும் வாதம் வளர்க்காமல் இருப்பதில் ஜாக்கிரதையாக இருக்கிறேன். 

எனினும் குறிப்பிட்டுச் சொன்னதால் பதில் சொல்கிற அவ்வளவே. 

அரசன் பொருளதிகாரம் வேண்டும் என்றான் என்பதுவே சரி. தமிழ் என்பது மொழியைக் குறித்ததாயினும், அதன் சிறப்பாகக் கருதப்பட்ட பொருளதிகாரம், அதிலும் அகத்திணை இலக்கணம் என்பதைச் சிறப்புப் பெயராகக் குறித்தது இறையனார் களவியல் காலத்தில் என்று படித்த ஞாபகம். தவறு எனில் சுட்டிக் காட்டவும். 

இப்பொழுது நீங்கள் பேச்சு மொழி, எழுத்து மொழி என்பனவற்றைச் சிறப்பு அம்சம் என்று கருதினாலும், தமிழ் மரபில் பொருளிலக்கணத்தையே தமிழின் சிறப்பு அம்சம் எனக் கொண்டார்கள் என்பதையே பண்டைய நூல்கள் சுட்டுகின்றன. அவ்வழியே எனது adapted narration ம் அமைந்தது. 

உங்களைப் போன்ற தற்கால ஆராச்சியாளர்க்கு இது முனிவை ஏற்படுத்துமேல் மன்னிக்கவும்.

 
விக்கிப்பீடியாவைப்பற்றி தமிழில் ஒரு நூலே எழுதியுள்ளார். பாருங்கள்.

இடப்புறம் உள்ளவர் தமிழ் விக்கிப்பீடியாவின் முன்னோடி திரு மயூரநாதன்.
நமக்கு வேண்டிய அத்தனையையும் தமிழில் படைக்கலாம். ஆயிரம் பேர்
கூடி உழைத்தால் மிக வியப்புறும் அறிவுக்கருவூலம் கிட்டும்.

தமிழ்- Hide quoted text -

- Show quoted text -

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.

For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.

rajam

unread,
Dec 11, 2010, 3:07:36 AM12/11/10
to tamil...@googlegroups.com
இறையனார் களவியலில் நாம் படித்து அறிவது:

"அக்காலத்துப் பாண்டியனாடு பன்னீரியாண்டு வற்கடஞ் சென்றது. செல்லவே, பசி கடுகுதலும், அரசன் சிட்டரையெல்லாங் கூவி, வம்மின், யான் உங்களைப் புறந்தரகில்லேன்; என் தேயம் பெரிதும் வருந்துகின்றது; நீயிர் நுமக்கு அறிந்தவாறு புக்கு, நாடு நாடாயின ஞான்று என்னையுள்ளி வம்மின் என்றான். என, அரசனை விடுத்து எல்லாரும் போயின பின்றைக் கணக்கின்றிப் பன்னீரியாண்டு கழிந்தது. கழிந்த பின்னர் நாடு மலிய மழை பெய்தது. பெய்த பின்னர், அரசர், 'இனி நாடு நாடாயிற்றாகலின், நூல்வல்லாரைக் கொணர்க' என்று எல்லாப் பக்கமும் ஆட்போக்க, எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் யாப்பதிகாரமும் வல்லாரைத் தலைப்பட்டுக் கொணர்ந்து 'பொருளதிகாரம் வல்லாரை எங்குந் தலைப்பட்டிலேம்' என்று வந்தார். வர, அரசனும் புடைபடக் கவன்று, 'என்னை, எழுத்தும் சொல்லும் யாப்பும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே. பொருளதிகாரம் பெறேமெனின் இவை பெற்றும் பெற்றிலேம்" எனச் சொல்லாநிற்ப மதுரை ஆலவாயில் அழல் நிறக் கடவுள் சிந்திப்பான்; 'என்னை பாவம்! அரசர்க்குக் கவற்சி பெரிதாயிற்று; அதுதானும் ஞானத்ததிடையதாகலான், யாம் அதனைத் தீர்க்கற்பாலம்' என்று இவ்வறுபது சூத்திரத்தையுஞ் செய்து மூன்று செப்பிதழகத்து எழுதிப் பீடத்தின் கீழிட்டான்." 
அன்புடன்,
ராஜம்

Mohanarangan V Srirangam

unread,
Dec 11, 2010, 3:09:21 AM12/11/10
to tamil...@googlegroups.com


2010/12/11 rajam <ra...@earthlink.net>

இறையனார் களவியலில் நாம் படித்து அறிவது:

"அக்காலத்துப் பாண்டியனாடு பன்னீரியாண்டு வற்கடஞ் சென்றது. செல்லவே, பசி கடுகுதலும், அரசன் சிட்டரையெல்லாங் கூவி, வம்மின், யான் உங்களைப் புறந்தரகில்லேன்; என் தேயம் பெரிதும் வருந்துகின்றது; நீயிர் நுமக்கு அறிந்தவாறு புக்கு, நாடு நாடாயின ஞான்று என்னையுள்ளி வம்மின் என்றான். என, அரசனை விடுத்து எல்லாரும் போயின பின்றைக் கணக்கின்றிப் பன்னீரியாண்டு கழிந்தது. கழிந்த பின்னர் நாடு மலிய மழை பெய்தது. பெய்த பின்னர், அரசர், 'இனி நாடு நாடாயிற்றாகலின், நூல்வல்லாரைக் கொணர்க' என்று எல்லாப் பக்கமும் ஆட்போக்க, எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் யாப்பதிகாரமும் வல்லாரைத் தலைப்பட்டுக் கொணர்ந்து 'பொருளதிகாரம் வல்லாரை எங்குந் தலைப்பட்டிலேம்' என்று வந்தார். வர, அரசனும் புடைபடக் கவன்று, 'என்னை, எழுத்தும் சொல்லும் யாப்பும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே. பொருளதிகாரம் பெறேமெனின் இவை பெற்றும் பெற்றிலேம்" எனச் சொல்லாநிற்ப மதுரை ஆலவாயில் அழல் நிறக் கடவுள் சிந்திப்பான்; 'என்னை பாவம்! அரசர்க்குக் கவற்சி பெரிதாயிற்று; அதுதானும் ஞானத்ததிடையதாகலான், யாம் அதனைத் தீர்க்கற்பாலம்' என்று இவ்வறுபது சூத்திரத்தையுஞ் செய்து மூன்று செப்பிதழகத்து எழுதிப் பீடத்தின் கீழிட்டான்." 
அன்புடன்,
ராஜம்


நன்றி. 

rajam

unread,
Dec 11, 2010, 3:11:13 AM12/11/10
to tamil...@googlegroups.com
புறந்தரகில்லேன் ==> புரந்தரகில்லேன்
தட்டெழுத்துப்பிழைகள் என் கணினிக் குற்றம்; கைக் குற்றம்!
அன்புடன்,
ராஜம்


இறையனார் களவியலில் நாம் படித்து அறிவது:

"அக்காலத்துப் பாண்டியனாடு பன்னீரியாண்டு வற்கடஞ் சென்றது. செல்லவே, பசி கடுகுதலும், அரசன் சிட்டரையெல்லாங் கூவி, வம்மின், யான் உங்களைப் புறந்தரகில்லேன்; என் தேயம் பெரிதும் வருந்துகின்றது; நீயிர் நுமக்கு அறிந்தவாறு புக்கு, நாடு நாடாயின ஞான்று என்னையுள்ளி வம்மின் என்றான். என, அரசனை விடுத்து எல்லாரும் போயின பின்றைக் கணக்கின்றிப் பன்னீரியாண்டு கழிந்தது. கழிந்த பின்னர் நாடு மலிய மழை பெய்தது. பெய்த பின்னர், அரசர், 'இனி நாடு நாடாயிற்றாகலின், நூல்வல்லாரைக் கொணர்க' என்று எல்லாப் பக்கமும் ஆட்போக்க, எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் யாப்பதிகாரமும் வல்லாரைத் தலைப்பட்டுக் கொணர்ந்து 'பொருளதிகாரம் வல்லாரை எங்குந் தலைப்பட்டிலேம்' என்று வந்தார். வர, அரசனும் புடைபடக் கவன்று, 'என்னை, எழுத்தும் சொல்லும் யாப்பும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே. பொருளதிகாரம் பெறேமெனின் இவை பெற்றும் பெற்றிலேம்" எனச் சொல்லாநிற்ப மதுரை ஆலவாயில் அழல் நிறக் கடவுள் சிந்திப்பான்; 'என்னை பாவம்! அரசர்க்குக் கவற்சி பெரிதாயிற்று; அதுதானும் ஞானத்ததிடையதாகலான், யாம் அதனைத் தீர்க்கற்பாலம்' என்று இவ்வறுபது சூத்திரத்தையுஞ் செய்து மூன்று செப்பிதழகத்து எழுதிப் பீடத்தின் கீழிட்டான்." 
அன்புடன்,
ராஜம்

On Dec 10, 2010, at 11:47 PM, Mohanarangan V Srirangam wrote:

சி. ஜெயபாரதன்

unread,
Dec 11, 2010, 4:35:47 AM12/11/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பர் நாசா கணேசன்.
 
அன்புடன்,
சி. ஜெயபாரதன்.
 
++++++++++++++++

2010/12/11 N. Ganesan <naa.g...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Dec 11, 2010, 9:23:13 AM12/11/10
to tamil...@googlegroups.com, anb...@googlegroups.com


10 டிசம்பர், 2010 10:29 pm அன்று, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> எழுதியது:


அனைத்து மக்களும் தமிழை விட்டாலும் தமிழையும், அதன் சிறப்பையும் கோயில் கட்டி வணங்கும் ஸ்ரீவைஷ்ணவர்கள் தம் அருந்தனமாக அதைக் காப்பாற்றி வருவர் என்பது வரலாறு கண்ட உண்மை, அதற்காக நாடு கடத்தப் பட்டாலும் சரி, அல்லது என்ன துன்பங்களை எதிர்கொள்ள நேர்ந்தாலும் சரி. 

 
இது மிக மிக உண்மை.
 
அமெரிக்காவில் பார்ப்பனர் இல்லத்து குழ்ந்தைகள்தான் வீட்டிலும் தமிழ் பேசுகின்றன
 
பச்சை தமிழர் வீட்டில் தமிழை காணோம்
 
உலகின் கடைசி தமிழன் ஒரு பார்ப்பனாகத்தான் இருக்கும்.
 
 
--
வேந்தன் அரசு
 
எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்
ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல

சி. ஜெயபாரதன்

unread,
Dec 11, 2010, 9:57:45 AM12/11/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
தமிழ் நாட்டில் சட்டப்படி தாய்மொழி தமிழ் படிக்க வேண்டும் என்று கட்டாயம் கிடையாது! வெளி நாடுகளில் வாழும் தமிழர்க்குத் தமிழை முறையாகக் கற்க அதிக வசதி இல்லை. “எங்க பெண்ணுக்குத் தமிழ் புரியும். ஆனால் எழுதப் படிக்க பேசச் சரியாகத் தெரியாது!” என்று தமிழ்த்தாய் ஒருத்தி சொன்னதாக, கனடா விலிருந்து சென்ற வருடம் சென்னையில் தன் மகனுக்குப் பெண் பார்க்கப் போன என் நண்பர் (ஐயங்கார்) ஒருவர் கூறினார்.  வீட்டில் தமிழை நன்கு கற்ற கனடா மாப்பிள்ளை தமிழில் உரையாடிக் கேள்வி கேட்கும் போது, சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழ்ப் பெண் ஆங்கிலத்திலே பதில் கூறி இருக்கிறாள். இது வெட்கப் பட வேண்டிய கூத்து! இப்படி ஆங்கிலத் தோல் போர்த்திய, போலித் தமிழர்கள் பலர் தமிழ் நாட்டில் இன்று இருக்கிறார்கள் !
 
 
இரவீந்திரநாத் தாகூர் ஒரு சமயம் சென்னைக்கு வருகை தந்த போது தமிழர் ஒருவர் அவரை வரவேற்றுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். ஆங்கிலத்தில் ஆரம்பித்ததும், தாகூர் அவரைத் தடுத்து, “தயவு செய்து ஆங்கிலத்தில் வேண்டாம்;  உங்கள் தாய்மொழியில் பேசுங்கள்; எனக்காகப் பேசாமல், அதோ ஆங்கு அமர்ந்து கேட்கும் பொது மக்களுக்குப் புரியும்படியாகப் பேசுங்கள்” என்றாராம்.
 
 
ஜெயபாரதன்.
 
+++++++++++++++++++++++
2010/12/11 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

Banukumar Rajendran

unread,
Dec 11, 2010, 10:06:25 AM12/11/10
to tamil...@googlegroups.com

(யாரையும் குறித்து இது எழுதப்படவில்லை)


பொருள் இலக்கணம் கிடைக்காமல் போனதால் ஆலவாய் இறையனார், இறையனார் 

அகப்பொருள் என்ற அகப்பொருள் நூலை எழுதினார் என்று இறையனார் உரையாசிரியர் 

கூறுகிறார். அவரே கீழ்க் கண்டவாறு எழுதுகிறார்.

 

“இனி இடைச்சங்கமிருந்தார் அகத்தியனாரும் தொல்காப்பியனாரும் இருந்தையூர்க் 

கருங்கோழியும் மோசியும் வெள்ளூர்க் காப்பியனும் சிறு பாண்டரங்கனும் திரையன்

மாறனும் துவரைக் கோமானும் கீரந்தையுமென இத் தொடக்கத்தார் 

ஐம்பத்தொன்பதின்மர் எனப…… அவர்க்கு நூல் அகத்தியமும் தொல்காப்பியமும் 

என இவை என்ப.

 

இனி கடைச் சங்கமிருந்து, தமிழாராய்ந்தார் சிறு மேதாவியரும் சேந்தம் 

பூதனாரும் அறிவுடையரனாரும் பெருங்குன்றூர் கிழாரும் இளந்திரு 

மாறனும் மதுரையாசிரியர் நல்லந்துவனாரும் மருதனிள நாகனாரும் 

கணக்காயர் மகனார் நக்கீரனாரும் என இத் தொடக்கத்தார் நாற்பத்தொன்பதின்மர் 

என்ப…. அவர்க்கு நூல் அகத்தியமும் தொல்காப்பியமும் என்ப.

 

காரணம் என்பது அக்காகத்துப் பாண்டியனாருஞ் சங்கத்தாரும் 

பொருளிலக்கணம் பெறாது இடர்ப்படுவாரைக் கண்டு ஆலவாயிற் 

பெருமானடிகளால் வெளிப்படுத்தப்பட்டது.’’

 

இவை சற்றும் பொருந்தவில்லை. அவரே இடை, கடைச் சங்க காலத்துக்கு 

அகத்தியமும், தொல்காப்பியமும் வழக்காற்றில் இருந்தது என்று உரைத்த 

ஆசிரியர் தொல்காப்பியத்தில் பொருளதிகாரம் இருந்தது அறியாமல் இருந்தது 

ஏனோ?

 

ஒருவேளை அகத்தியத்திற்கும், தொல்காப்பியத்திற்கும் பொருள் உரைப்போர்

இல்லாமையால் இறையனாரை அழைத்தார்களோ! என்று சமாதானம் 

கூறினாலும், இறையனார் அவற்றுக்கு (அகத்தியம், தொல்காப்பியம்) 

உரை செய்திருக்கலாமே? என்ற கேள்வி எழுகிறது?

 

ஒருவேளை அது புறச் சமயத்தார் செய்தது என்று கருதினாரோ?

 

;-)

 

வற்கடம் பற்றியக் கதை நம்பமுடியாதது. அதற்கு ஆதாரம் கிடையாது. 

அப்படி தேடினாலும் சமணத்தில் மட்டுமே கிடைக்கும். ;-)

 

இரா.பா,

சென்னை


2010/12/11 rajam <ra...@earthlink.net>

Govindasamy Thirunavukkarasu

unread,
Dec 11, 2010, 10:12:58 AM12/11/10
to tamil...@googlegroups.com
அன்பு மிகு வேந்தன் ஐயா,
உழைக்கப்போன இடத்தில்
பிழைக்கப்போன மண்ணில்
அடுத்தவன் சொல்கேட்டு வாழ்வேண்டியவன்
அடுத்தவன் சிந்தனையை செயல் படுத்த வேண்டியவன்
தன் மூளை அணுக்களில் அடுத்தவன் விதைகளை சுமக்கிறான்.

அதை ஏன் தாய்மொழிப்படுத்தி சுமக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.
நல்ல கேள்விதான்.
தாய்மொழிப்படுத்திவிட்டால் மட்டும் காசுக்கு சோரம்போன வாழ்வில்
கற்பு மழை பொழிந்திடுமோ?
அன்புடன்
அரசு

> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "தமிழ் மன்றம்" group.
> To post to this group, send email to tamil...@googlegroups.com.
> To unsubscribe from this group, send email to
> tamilmanram...@googlegroups.com.
> For more options, visit this group at
> http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>
>


--
கோ.திருநாவுக்கரசு
தாளாண்மை உழவர் இயக்கம்
செம்பியநல்லூர்,அம்மாபேட்டை வழி 614401
திருவாரூர் மாவட்டம்.
பேசி: 9380297522

வேந்தன் அரசு

unread,
Dec 11, 2010, 10:29:27 AM12/11/10
to tamil...@googlegroups.com


11 டிசம்பர், 2010 10:12 am அன்று, Govindasamy Thirunavukkarasu <gthiruna...@gmail.com> எழுதியது:

அன்பு மிகு வேந்தன் ஐயா,
உழைக்கப்போன இடத்தில்
பிழைக்கப்போன மண்ணில்
அடுத்தவன் சொல்கேட்டு வாழ்வேண்டியவன்
அடுத்தவன் சிந்தனையை செயல் படுத்த வேண்டியவன்
தன் மூளை அணுக்களில் அடுத்தவன் விதைகளை சுமக்கிறான்.

அதை ஏன் தாய்மொழிப்படுத்தி சுமக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.
நல்ல கேள்விதான்.
தாய்மொழிப்படுத்திவிட்டால் மட்டும்  காசுக்கு சோரம்போன வாழ்வில்
கற்பு மழை பொழிந்திடுமோ?
அன்புடன்
அரசு

 
 
அரசு ஐயா
 
நாங்க காசுக்கு சோரம் போனது உண்மைதான்
 
எனக்கு ஒரு நல்ல வேலை போட்டு கொடுங்க தாயகம் வந்துடறேன்
 
 
--

rajam

unread,
Dec 11, 2010, 10:30:39 AM12/11/10
to tamil...@googlegroups.com
"வற்கடம்" பற்றி மணிமேகலையில் பார்க்கிறோம்.
மற்றது...

ஒருவேளை அகத்தியத்திற்கும், தொல்காப்பியத்திற்கும் பொருள் உரைப்போர்

இல்லாமையால் இறையனாரை அழைத்தார்களோ! என்று சமாதானம் 

கூறினாலும், இறையனார் அவற்றுக்கு (அகத்தியம், தொல்காப்பியம்) 

உரை செய்திருக்கலாமே? என்ற கேள்வி எழுகிறது?

 

ஒருவேளை அது புறச் சமயத்தார் செய்தது என்று கருதினாரோ?

 
எனக்குத் தெளிவில்லாதது! :-)
அன்புடன்,
ராஜம்


C.R. Selvakumar

unread,
Dec 11, 2010, 10:43:25 AM12/11/10
to tamil...@googlegroups.com, anb...@googlegroups.com
அருமையான பாடல் ஐயா, பாராட்டுகள்!
 
ஆனால் ஒரு கருத்து, உலகம் முழுவதும் தமிழர்கள்
பரவி இருந்தாலும், அடுத 2-3 தலைமுறைகளில் அவை
அங்கெல்லாம் மறைந்துவிடும். தமிழின் தாய்மண்ணாகிய
தமிழ்நாடு இலங்கையில் செவ்வனே வாழ்ந்தால்தான்,
மலேசியா சிங்கப்பூரிலும் கூட வாழ முடியும், பிறகு ஓரளவுக்கேனும்
உலகநாடுகளில் வாழ முடியும்.
 
தமிழின் எதிர்காலம் உங்களில் பலர் எண்ணுவது போல
அத்தனை உறுதியானது இல்லை, ஆனால் வழிவழியாய்
மொழியைக் காக்க எழுந்த நல்லோர்கள் 
வாழையடி வாழையாக வருவர் என்றே
நானும் நினைக்கின்றேன். இன்று தமிழர்களில் 1/3 பகுதி
மலையாளிகளாகிவிட்டனர். இதனை ஆழ எண்ணிப்பாருங்கள்!
மீண்டும் கூறுகின்றேன் ஆழ எண்ணிப்பாருங்கள்!
மறவாதீர்! 35 மில்லியன் பேர்
தமிழர்களாக இருந்திருக்கக்கூடியவர்கள்
இன்று மலையாளிகள் என்பது வேடிக்கை அல்ல. வழிவழியாய்
வந்த இலங்கை+யாழ்ப்பாணப் பண்பாடு இன்று எந்த
நிலையில் உள்ளது என்று பாருங்கள். கற்றவர்களில்,
செல்வாக்கு மிக்கவர்களில் (இவர்கள் 5-10% ஆக இருக்கலாம்),
எத்தனை விழுக்காட்டினர் தமிழ் பயிலுகின்றனர்.
(சுவரொட்டி படிக்கும் தமிழறிவையும், சமையற்கட்டு-
வரவேற்பறைத் தமிழையும் சொல்லவில்லை) - ஒரு
10-ஆவது 12-ஆவது வரை நன்றாகத் தமிழ் பயின்று
வருவோர் எத்தனை விழுக்காட்டினர்?
 
அறிவியலிலே கடுகடிப்பெயர்வு நிகழ்வு "critical phenomenon"
என்பர் (கடுக = விரைவாக),
அப்படித் "திடீரரென்று" திரியும் வாய்ப்புகள் உண்டு.
(சில நகர்வுகளுக்குப் பிறகு இது திடீரென நிகழ்வது)
 
வெறும் எண்ணிக்கையை வைத்துக்கொண்டு அழியாது,
நிலைத்திருக்கும் என்று நினைப்பது அறிவுடைமை
ஆகாது
உலக நாடுகள் அவை (ஐ.நா) 2003 இல் ஓர் அறிக்கை
வெளியிட்டது, அது மொழிகளின் வளர்ச்சி-தேய்வு பற்றி
அறிஞர்கள் கூடிக் கலந்து ஆய்வு செய்து வெளியிட்டது.
(பார்க்கவும்:
UNESCO, Language Vitality and Endangerment, International Expert Meeting on UNESCO Programme Safeguarding of Endangered Languages , Paris, 10–12 March 2003
 
அதில் கூறப்பட்டுள்ள ஒரு செய்தி
"About 97 per cent of the world’s population speak about 4 per cent of the world’s languages; and conversely, about 96 per cent of the world’s languages are spoken by about 3 per cent of the world’s people (Bernard, 1996, p. 142). "
 
தமிழானது உலகில் ஏறத்தாழ 1% மக்களே பேசும் மொழி.
 
மேற்கண்ட ஆவணத்தில் அழிதருவாயில் உள்ள மொழிகளின் கூறுகளில்
பலவற்றைத் தமிழ் பெற்றுள்ளது (எண்ணிக்கை ஒன்றைத் தவிர).
"unsafe" அல்லது "definitely endangered" என்னும் வகையில் தமிழ் அடங்கும்
(பக்கம் 9 ஐப்பார்க்கவும்).
 
தமிழ்நாட்டில் அரசும் கோயில்களும், அறமன்றங்களும், கல்விக்கூடங்களும்,
இசைநிகழ்வுகளும், மிகமிகப் பெரும்பாலும் தமிழில் இல்லை எனில்,
தமிழ் அடுத்த 2-3 தலைமுறைக்குப் பிறகு செப்பமாக
வாழ்வது உறுதியில்லை.
 
கிரியோல் (creole) போலவோ, கல்லாதவர் பேச்சு மொழிபோலவோ வாழும்
என்பதை மறுக்கவில்லை. பல்கலைக்கழகக் கல்வியும் இன்னும் பல களங்களிலும், நிலைகளிலும் தமிழ் ஆழ வேர்கொண்டால்தான் தமிழ்
செப்பமுற வாழும்.
 
முதலில் இந்த ஊடகத் தமிழ்க்கொலையை நிறுத்த
அரசும் மக்களும் ஆவன செய்தல் வேண்டும். கோயில்களில் ஒப்பரிய
தமிழ்ப்பாடல்களைப் பாடிப் போற்ற வேண்டும். சமசுக்கிருதம் வேண்டாம்
எனச் சொல்லவில்லை. தமிழுக்கு முதன்மை தர வேண்டும்.
இது எத்தனை முகனையானது என்பதைப் பலரும் அறிவதில்லை.
(முகனை = முதன்மை, தலைமை, இன்றியமையாமை)
 
அரசில் ஆட்சி மொழி தமிழாக இருக்கவேண்டும்
இது இன்னும் இல்லை என்பது ஆட்சியாளர்களுக்கும்
தமிழ் மக்களுக்கும் மாபெரும் இழுக்கு.  உண்மையை நேர்பட
எதிர்கொள்ள வேண்டும்.
 
அண்மையில் 40,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டது
மாபெரும் கொடுமை. இதனைப் பற்றிப்
பேசக்கூட உரிமை இல்லை. அதாவது தமிழ் மக்கள் தங்கள் மொழி
வாழ்முறை/பண்பாடு பற்றி நிலைநிறுத்திக்கொள்வதில்
மாபெரும் இடர்கள் உள்ளன.
 
கடந்த காலத்தில் தமிழின், தமிழ்க்கலைகளின் வளர்ச்சி
(ஏறத்தாழ) யாவும் தமிழ் ஆட்சிமொழியாகவும் செல்வாக்கு பெற்ற
மொழியாகவும் இருந்தகாலத்தில்தான்.
 
டே'விட்' கிறிசிட்டல் அவர்களின் மொழி அழிவு/,மறைவு (Language Death),பற்றிய புத்தகம் (Crystal, David (2000) Language Death. Cambridge, UK: Cambridge University Press.) படித்துப்பார்க்க வேண்டியது.
 
தமிழ் செப்பமுற வாழ்வது தமிழர்களின் கையில்தான் உள்ளது.
உலகமயமாக்கல் முதல் இந்திய நடவண் அரசு, தமிழ் ஊடகக்கேடர்களின்
போக்கு வரை யாவற்றையும் ஈடுகட்டுவது தமிழர்களின் கையில்தான்.
70-80 மில்லியன் மக்களாக்கும் நாங்கள் என்று இறுமாந்து மார்தட்டிக்
கொண்டிருந்தால்,
அது நம் மாபெரும் அறியாமையாகவே இருக்கும். ஆக்கப்பணிகள்,
ஒவ்வொரு கட்டத்திலும் உரிமை நிலைநாட்டல் என்பனவற்றில் இன்னும்
பன்னூறாயிரம் மடங்கு அக்கறையுடன் இயங்க வேண்டும்.
 
நம்மால் முடியும் :)
 
அன்புடன்
செல்வவ

 
2010/12/10 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>

Mohanarangan V Srirangam

unread,
Dec 11, 2010, 10:54:11 AM12/11/10
to tamil...@googlegroups.com
தமிழின் பொருளதிகாரம், அதிலும் சிறப்பாக அகத்திணை இலக்கணம் ‘தமிழ்’ என்ற பெயராலே குறிக்கப்பட்டமைக்கும், தமிழின் சிறப்பாக அகத்திணை இலக்கணம் கருதப்பட்டமைக்கும்  குறிப்புதவிகள் காண, 
 
இவண் ....>>> 


பயன்கொள விழைவோர் பயன்கொள்க. 
*** 

C.R. Selvakumar

unread,
Dec 11, 2010, 11:07:17 AM12/11/10
to tamil...@googlegroups.com
நல்ல தொடுப்பு அரங்கனாரே!
 
குறிப்பாக:
 
  • இறையனார் அகப்பொருள்

    இறையனார் அகப்பொருள் உரையில் வரும், ‘இந்நூல் என் நுதலிற்றோ எனின், தமிழ் நுதலிற்று’ (இந்த நூல் என்ன சொல்லுகிறது என்றால் தமிழ் சொல்கிறது.) என்ற பகுதி அகமே தமிழ் என்பதைச் சுட்டி நிற்கிறது.

  • தமிழ்நெறி விளக்கம்

    அகப்பொருள் இலக்கணத்தைப் பற்றிக் கூறும்
பழந்தமிழ் இலக்கண நூல் ஒன்றுக்குத் ‘தமிழ்நெறி விளக்கம்’ என்றே பெயர் அமைந்திருப்பதும் இங்கு எண்ணத் தக்கது.

 
அன்புடன்
செல்வா


2010/12/11 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
தமிழின் பொருளதிகாரம், அதிலும் சிறப்பாக அகத்திணை இலக்கணம் ‘தமிழ்’ என்ற பெயராலே குறிக்கப்பட்டமைக்கும், தமிழின் சிறப்பாக அகத்திணை இலக்கணம் கருதப்பட்டமைக்கும்  குறிப்புதவிகள் காண, 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

சி. ஜெயபாரதன்

unread,
Dec 11, 2010, 11:31:18 AM12/11/10
to tamil...@googlegroups.com
நண்பர் செல்வா,
 
பாராட்டுக்கு நன்றி.
 
////ஆனால் ஒரு கருத்து, உலகம் முழுவதும் தமிழர்கள்

பரவி இருந்தாலும், அடுத 2-3 தலைமுறைகளில் அவை
அங்கெல்லாம் மறைந்துவிடும். தமிழின் தாய்மண்ணாகிய
தமிழ்நாடு இலங்கையில் செவ்வனே வாழ்ந்தால்தான்,
மலேசியா சிங்கப்பூரிலும் கூட வாழ முடியும், பிறகு ஓரளவுக்கேனும்
உலகநாடுகளில் வாழ முடியும்/////
 
உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.
 
கனடாவில் வாழும் ஈழத் தமிழர் வீட்டில் பிறந்த பிள்ளைகள் தமிழை  முறையாகக்  கற்றுத் தமிழில் அழகாகப் பேசுகின்றன. 
 
புலம்பெயர்ந்துள்ள ஈழத் தமிழர் இல்லங்களில் தமிழ்மணம் கமழ்கின்றது.  
 
 
ஜெயபாரதன்.
 
+++++++++++++++++++++++++++++++++ 

2010/12/11 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

C.R. Selvakumar

unread,
Dec 11, 2010, 12:31:28 PM12/11/10
to tamil...@googlegroups.com


2010/12/11 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>

நண்பர் செல்வா,
 
பாராட்டுக்கு நன்றி.
 
////ஆனால் ஒரு கருத்து, உலகம் முழுவதும் தமிழர்கள்

பரவி இருந்தாலும், அடுத 2-3 தலைமுறைகளில் அவை
அங்கெல்லாம் மறைந்துவிடும். தமிழின் தாய்மண்ணாகிய
தமிழ்நாடு இலங்கையில் செவ்வனே வாழ்ந்தால்தான்,
மலேசியா சிங்கப்பூரிலும் கூட வாழ முடியும், பிறகு ஓரளவுக்கேனும்
உலகநாடுகளில் வாழ முடியும்/////
 
உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.
 
கனடாவில் வாழும் ஈழத் தமிழர் வீட்டில் பிறந்த பிள்ளைகள் தமிழை  முறையாகக்  கற்றுத் தமிழில் அழகாகப் பேசுகின்றன. 
 
புலம்பெயர்ந்துள்ள ஈழத் தமிழர் இல்லங்களில் தமிழ்மணம் கமழ்கின்றது.  
 
 
ஓரளவுக்கு உண்மை ஐயா, ஆனால் இரண்டு தலைமுறை தாண்டி வாழ்வது கடினம். இது தமிழுக்கு மட்டுமல்ல, பிறமொழிகளுக்கும் பொருந்தும்.
 
இடாய்ச்சு மொழியர், போலந்திய மொழியர் 2 தலைமுறை தாண்டிய பிறகு
ஏறத்தாழ அறவே தம் மொழியை இழக்கின்றனர் என்பது கண்கூடு.
அவர்களில் 1% மக்கள்
ஓரளவுக்கோ, நன்றாகவோ அறிந்திருக்கக்கூடும்,
காரணம் மிக எளிது. இங்கு பள்ளிகளுக்குச் சென்ற பின்னர்
தமிழ் என்பது வீட்டோடு ஆகிவிடும்.
பார்க்கும் திரைப்படம், தொலைக்காட்சி என்று நம்மைச் சூழ்ந்து
ஆங்கில உலகில் முற்றுமாய் மூழ்கியிருப்பதால்
தமிழ் மூச்சு வெளிப்படுவது அரிது.
ஈழத்தமிழர் குழந்தைகளும் தமிழ்நாட்டுத்தமிழர் குழந்தைகளும் தம் மொழியை இழப்பது கண்கூடு. அதுமட்டுமல்லாமல், யாழ்பாணம், கண்டி, தமிழ்நாடு போன்ற பகுதிகளில் மண்ணோடும் மரஞ்செடி
கொடிகளோடும் வாழ்வது முற்றிலும் வேறானது. இடம்பெயர்ந்து வாழ்வதில்
புது வடிவம் காணலாம், மறுக்கவில்லை. எடுத்துக்காட்டாக
என்னைப் பொருத்தவரை
நுரைபனி, மாவுப்பனி, இறுகுபனி, மணற்பனி, தூவிப்பனி என்பன
எனக்குத் தமிழ்மரபே !!
தமிழனாகிய நான் உள்ளுள்ளே தமிழாகவே உயிர்க்கும்
உணர்வுகள்.
எனினும், ஆயிரம் ஆயிரம் கவிதை எழுதும் திறமில்லாதவன்.
 
முனைவர் இராச'ம் (முன்னர் ஒருமுரை)
காட்டிய மாணிக்ககுப்பை போல குளிர்காலத்தில்
ஒவ்வோர் ஆண்டும் கண்டு கண்டு வியக்கும் ஒரு காட்சி
இறைந்து கிடக்கும் வைரக்கற்கள் (வெண்பனியில் பொடி வைரங்கள் கொட்டிக்கிடப்பது போலவே அருங்காட்சி தரும்!!). இப்படி பலவுண்டு.
 
தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் தமிழ் மிகச்சிறப்பான முறையில்
வாழ்தல் வேண்டும். அப்படி இருந்தால்தான் மற்ற இடங்களிலும் தமிழ்
உயிர்த்து இருக்க முடியும். ஆங்கிலமும், சமசுக்கிருதமும், இந்தியும்,
கன்னடமும், தெலுங்கும் யாவுமே நம் நெருங்கிய நண்பர்களே.
சொல்லப்போனால் இன்று பல நாடுகளிலும் பரவி இருக்கும் தமிழர்கள்
சற்று அறிவோடு ஒருங்கிணைந்து உழைத்தால் எல்லா மொழிகளில்
இருந்தும் தமிழ் பெரும்பயன் கொள்ள முடியும். ஆனால்
தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் தமிழ் ஓங்கி வளர்தல் அடிப்படை.
(தமிழ் மட்டும் அல்ல, நம் சூழல் (மரஞ்செடிகொடிகள், உயிரினங்கள்) ஆகிய அனைத்தையும் போற்றி உயர்வாழ்வு வாழ வேண்டும்).

Elangovan N

unread,
Dec 11, 2010, 1:15:49 PM12/11/10
to tamil...@googlegroups.com, nela...@gmail.com
மிகச்சுவையான இழை. ஒவ்வொருவரின் கருத்தும் சிந்தனையைக் கவர்ந்தன.
எனது பார்வையை இணைப்பில் உள்ள கொடிப்படம் (graph :- இதற்கு வரைபடம், புள்ளிப்படம் போன்ற சொற்களைச் சொன்னபோதிலும் எனக்கு இதுதான் பிடித்திருக்கிறது) வழியாகச் சொல்கிறேன்.

இது சிறிதளவு படித்த விதயங்களை வைத்து ஊகித்த அடிப்படையில் வரைந்திருக்கிறேன்.
புள்ளிகளையும் கணக்கையும் கேட்டு பலி போட்டுவிடாதீர்கள் :-)))

முதலாம் நூற்றாண்டை சங்க அல்லது மருவிய காலம் என அறிஞர் சொல்லுவர். அக்காலத்தில்
தமிழின் மொழித்தரமும் திறனும் உயர்ந்து இருந்தது என்பர். அதற்கு 100 புள்ளிகள் கொடுத்து மேலே வைத்து
விட்டு மற்ற காலங்களுக்குக் குறியெண் அல்லது மதிப்பெண் கொடுத்தால் படம் இப்படி வருகிறது.

இந்த 20 நூறாண்டுகளில் தமிழ்ச் சரிவை இரண்டு தாங்கல்கள் (support) தடுத்திருக்கின்றன.
இரண்டு வீழ்ச்சியை கண்டிருக்கின்றன. பிற்காலச் சோழப் பேரரசின் காலம் வளர்ச்சியின்(மீட்சி) பிற்பகுதியைக்
காட்டுகிறது. அதற்கு மேலும் வளர்ச்சிக்குத் தடையாக (resistance) சேரநாட்டிழப்பு, பிறநாட்டினராள்கை,
சமற்கிருதப் பெருக்கு ஆகியவை வந்து சேரும் காட்சி கிடைக்கிறது. கீழே உருளத்துவங்கிய மொழிக்கு
மறைமலையாரின் தனித்தமிழ் இயக்கம் தாங்கலாக வருகிறது. 20ஆம் நூற்றாண்டில் இந்தத் தாங்கல்
ஒரு மீட்சியைக் காட்டுகிறது. அந்த மீட்சியின் வேளையில் தற்போது தமிழர்களின் ஈழ இழப்பும்,
ஆங்கிலப் பெருக்கும் தடைகளாகத் தட்டுப்படுகின்றன. 

இந்தச் சூழலில்தான் தமிழ் சாகிறதா? வளர்கிறதா? என்று பேசிக் கொன்டிருக்கிறோம்.

பொருளியல் துறையில் "பெருமேற்றத்தில் இறங்குமுகம்" என்றும் "பேரிறக்கத்தில் ஏறுமுகம்" என்று
சொல்வார்கள். ஆங்கிலத்திலே சொன்னால் "Bearish(Falling) Trend in a Long Bullish Cycle" என்றும்
"Bullish(Rising) Trend in a Long Bearish Trend" என்றும் சொல்வார்கள்.

2000 ஆண்டு காலக்கட்டத்தை எடுத்துக்கொண்டால்,
தமிழ் இணையம் வளர்ந்திருக்கிறது, நிறைய பேர் தமிழில் எழுதுகிறார்கள், 
நிறைய தமிழ் நூல்கள் வருகின்றன என்ற காரணங்களின் அடிப்படைகளில் 
தமிழ் வளர்கிறது என்றால் அது எப்படியானது என்றால்
"பேரிறக்கத்தில் ஏறுமுகம்" ("Bullish(Rising) Trend in a Long Bearish Trend" )
என்று சொல்வதே பொருந்தும். இது சாவா, வாழ்வா என்பதனை நமக்கேற்றவாறு 
சொல்லிக் கொண்டாலும், இது நெடுங்காலச் சுழற்சியில் நடப்பதால் என்ன ஆகும்
என்பதை காலமே தீர்மானிக்கும்.

ஆனால் ஒன்று நிச்சயம் - இப்போதைக்குத் தமிழிற்கு ஏந்தல் அல்லது தாங்கல் தேவைப்படுகிறது.
அது தற்போதைய உலகச் சூழலில் இருந்து காக்கும் பொருட்டு. இது கிடைக்காவிட்டால்
மேலும் வீழும். 

எங்கே போய் நின்று, எப்பொழுது ஏறும்? இப்படியே ஏறிக்கொண்டு இருக்குமா என்பதைச்
சொல்ல நம்மிடம் போதுமான தரவுகள் இல்லை என்பதே உண்மை.

அன்புடன்
நாக.இளங்கோவன் 
பி.கு:  ஒரு அரசியல் பிட்டுவை ஓட்டிக் கொள்ள அனுமதியுங்கள். 
"சோழன் நல்லா ஆண்ட போதெல்லாம் ஒரு தமிழ்நாட்டை தமிழினம் காவு கொடுத்து விடுகிறது ;-) 










2010/12/11 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
Tamil Status by quality.jpg

Elangovan N

unread,
Dec 11, 2010, 1:38:56 PM12/11/10
to tamilmanram
மேலொரு செய்தியையும் இதில் சேர்க்க விரும்புகிறேன்.

ஒரு 3/6 மாதகால அணிமையில் உலகமே Double Dip Recession (இரட்டை முங்கல் அல்லது இரட்டைப் பஞ்சம் என்று சொல்லலாம்) என்று அலறிக்கொண்டிருந்ததை அறிவீர்கள். குறிப்பாக அமெரிக்கா அலறியது. 
95% அது நடக்காது என்ற தெம்பு உலகப் பொருளியலில் தற்போது ஏற்பட்டிருக்கிறது.

அந்தச் சூழலை இங்கே நினைவு படுத்திக் கொள்வோம்.

தமிழ் மொழியைப் பொறுத்தவரையில் இந்தக் கொடிப்படத்தை உற்று நோக்கினால் அந்த இரட்டை முங்கல்
நேர்ந்தேயிருக்கிறது. பக்திஇயக்கக் காலத்திற்குச் சற்று முன்வரையிலும், தனித்தமிழ் இயக்கக் காலத்திற்குச் சற்று முன்னர் வரையிலும் ஆன தாழ்வை எண்ணினால் அது இரட்டை முங்கலுக்குச் சமமானது.
சொல்லப்போனால் இரட்டை முங்கலை விட சற்று மோசமானது. இந்த இரட்டை முங்கலுக்குப் பின்னரும்
நமது மொழி அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது என்று நாம் நம்பினால் அது நமது தளராத ஊக்கத்தை
மட்டுமெ காட்டுகிறது. உண்மையைக் காட்டவில்லை :-)))

இன்னும் கொஞ்சம் நோண்டினால் இந்த மீட்சி (நாம் வளர்ச்சி என்கிற மீட்சி) என்பதற்கும் பொருளியலில்
ஒரு எடுத்துக் காட்டைச் சொல்லலாம். பிபனாசி மீட்சி என்று ஒன்று உண்டு (Fibanacci Retracing).

அதன்படி ஒரு பெரிய வீழ்ச்சிக்குப் பின்னர் ஒரு மீட்சி இருக்கும். பந்து மேலிருந்து கீழே போடப்படுகின்றது
என்று வைத்துக் கொள்ளுங்கள். கீழே விழுந்தபின்னர் ஒரு அளவு தூரம் அது உயரும். (அந்த உயற்சி எந்த இடத்தில் இருந்து விழுந்ததோ அது வரை உயராது, ), அதனை 66% மீட்சி, 50% மீட்சி, 33% மீட்சி என்று 
கூறுவார்கள்.

அதன்படிப் பார்த்தால் பக்தி இயக்க காலத்தின் பின்னர் ஏற்பட்ட மீட்சியை 66% மீட்சி என்று சொல்லலாம் (66% Retracing). இரண்டாவது வீழ்ச்சியை சோழர் காலத்தின் பின்னால் கணக்கில் கொண்டால் தற்போது நாம் பெற்றிருக்கும் மீட்சி 50% மீட்சியாகும்.

இந்த நிலை முக்கியமானது. ஒன்று பந்து வீழ்ந்து அடுத்தடுத்து உயர்ந்து பின்னர் அடங்கிப் போவது போல்
ஆகலாம். அல்லது சிறப்பான தாங்கல் ஏற்பட்டு மீண்டும் ஒரு பெருஏற்றத் துவக்கமாக ஆகலாம்.

அன்புடன்
நாக.இளங்கோவன்







அன்புடன்
நாக.இளங்கோவன்
Tamil Status by quality.jpg

iraamaki

unread,
Dec 11, 2010, 7:26:23 PM12/11/10
to tamil...@googlegroups.com
நீங்கள் காட்டும் வரைபடம் exponential decay with local perturbations. இப்படி ஓர் வரைபடத்தைப் புரிந்து கொள்ளுமுன், சில இயல்பான கேள்விகள் எழுகின்றன. அவற்றிற்குச் சில மறுமொழிகள் தர வேண்டுகிறேன்.
 
1. உங்கள் படத்தில் கீழே வரும் நீலநிறக் கோடு எதைக் குறிக்கிறது?
2. உங்கள் குத்தச்சில் (vertical axix) வரும் குறியெண் எதைக் குறிக்கிறது? அது தூய்மையைக் குறிப்பது போற் தெரியவில்லை. கிட்டத்தட்டத் தமிழின் ஆட்சிமையைக் (ஆளுமையல்ல. ஆட்சியில் இருந்த தன்மை.) குறிப்பது போற் தெரிகிறது. அது சரியா?
3. இதை எண்ணியலாகச் சொல்வதற்கு எந்தப் புள்ளிவிவரத்தை நாம் தேடலாம்? [நான் உங்களுடைய வழிகாட்டலைக் கேட்கிறேன்.]
4. இதே நூற்றாண்டுகளில் தமிழர் எண்ணிக்கை கூடிவந்திருக்கிறதே? அதை எப்படிக் கணக்கில் எடுத்துக் கொள்வது?
5. இந்தப் படத்தை இன்னும் பலர் அலசினால், ஓர் உருப்படியான அரசியற் புரிதலுக்கு, கோட்பாட்டிற்கு நாம் வரலாம்.
 
”ஒருபக்கம் தமிழ் அழிந்து கொண்டிருக்கிறது என்பது உண்மை. இன்னொரு பக்கம் எதோ அங்கொன்றும் இங்கொன்றுமாய் மறுமலர்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மை.”  இந்த இருபால் நிகழ்வுகளுக்கு நடுவில் சற்று அறிவியலின் பாற்பட்டு இதைப் புரிந்து கொள்வோமே என்று எண்ணுகிறேன். எனவே நண்பர்கள் யாரும் உணர்வு வசப்படாமல் புலனத்தை அணுகினால் நல்லது. 
 
அன்புடன்,
இராம.கி.

வேந்தன் அரசு

unread,
Dec 12, 2010, 8:29:18 AM12/12/10
to tamil...@googlegroups.com
நாங்க சீமையில் வாழ்ந்தாலும் பேசுவதும் எழுதுவதும் தமிழ்.
ஜெனி, முகஏடு எனும் தளங்களில் போய் தமிழில் எழுதி அசர வைக்கிறோம்.  விக்கியில் தமிழில் கட்டுரை எழுதுவது சேவை .
அதுபோலும் தளங்களில் போய் தமிழ் எழுதுவது வெட்கம் இல்லை என் உணர்த்துவதும் சேவை என்பது அடியேனின் கருத்து.
 
அறிஞர்கள் உலவும் தளங்களில் தமிழ் எழுதுவதைவிடவும் எளியவர்கள் உலவும் தளங்களில் தமிழ் எழுதுவது மிக சிறந்த தமிழ் பணி.என்பதும் என் எண்ணம்.
 
இருந்தும்
 
எம்மை காசுக்கு சோரம் போனவர்கள்னு ஏசுறாங்களே?
 
பாவம் அவர்கள் மகிழ்ச்சியை நாம் ஏன் கெடுகக்ணும்
 
நல்லது செய்தல் ஆற்றோம்
எனவே அல்லது செய்தல் ஒம்புவோம்

சி. ஜெயபாரதன்

unread,
Dec 12, 2010, 10:26:08 AM12/12/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com, thantha...@googlegroups.com
தமிழ் அழியுது, அழிந்து கொண்டே இருக்குது, தமிழ் அழுகிப் போவுது, தமிழில் நஞ்சு கலக்குது, தமிழ் நார நாராகக் கிழியுது,  தமிழ் கலப்படம் ஆகுது, தமிழ் நசுக்கப் படுகிறது என்று புகார் செய்து கொண்டிருக்கும் தனித் தமிழர், தமிழ்க் காப்பாளிகள் தமிழ் இலக்கியத்தை  மறுபுறம் வளர்க்கிறாரா ?
 
 
சி.  ஜெயபாரதன்.

++++++++++++++++++++
2010/12/12 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
--

வேந்தன் அரசு

unread,
Dec 12, 2010, 10:39:52 AM12/12/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com


12 டிசம்பர், 2010 10:26 am அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:

தமிழ் அழியுது, அழிந்து கொண்டே இருக்குது, தமிழ் அழுகிப் போவுது, தமிழில் நஞ்சு கலக்குது, தமிழ் நார நாராகக் கிழியுது,  தமிழ் கலப்படம் ஆகுது, தமிழ் நசுக்கப் படுகிறது என்று புகார் செய்து கொண்டிருக்கும் தனித் தமிழர், தமிழ்க் காப்பாளிகள் தமிழ் இலக்கியத்தை  மறுபுறம் வளர்க்கிறாரா ?
 
ஆரம்பிச்சிட்டாரய்யா ஆரம்பிச்சுட்டார்
 
வேந்தன் அரசு

karuannam annam

unread,
Dec 12, 2010, 11:16:49 AM12/12/10
to tamil...@googlegroups.com
காய்தல் உவத்தல் இன்றிப் பலவற்றை எண்ணிப் பார்க்க வைக்கும் இழை.
1950 களில் இருந்து 1970௦ வரை தமிழ்வழிக் கல்வியின் வளர்ச்சியே இன்றையத் தமிழின் சிறப்புக்குக் காரணம் எனக் கருதுகிறேன். இன்று தமிழ் வழிக் கல்வி அருகி வருகிறது. நம் யாருடைய பிள்ளையும் தமிழில் படிக்கவில்லை. அடுத்த 40 ஆண்டுகளில் இன்றைய விதைதானே விழையும். தமிழ் மொழிப் பாடத்தையாவது பிள்ளைகளைப் படிக்கத் தூண்டுவது நம் கடமை.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான். 

karuannam annam

unread,
Dec 12, 2010, 11:18:46 AM12/12/10
to tamil...@googlegroups.com
விதைதானே விளையும்.
சொ.வி.

2010/12/12 karuannam annam <karu...@gmail.com>

Mani Manivannan

unread,
Dec 12, 2010, 12:07:19 PM12/12/10
to tamilmanram
இளங்கோவன், இராமகி,
 
இந்த ஆய்வுமுறை அறிவியல் அணுகுமுறையை ஒத்திருக்கிறது.  இதில் உள்ள அடிப்படைக் கோட்பாடுகளைத் தெளிவுபடுத்தினால் நாம் இன்றைய தமிழ் மொழியையும் வருங்காலத் தமிழ் வளர்ச்சியையும் பற்றிப் புரிந்து கொள்ள இயலும்.
 
இந்த வரைபடத்தில் 19ம் நூற்றாண்டின் இறுதியிலும், 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், சங்கத் தமிழ்ச் சுவடிகளின் மறுகண்டுபிடிப்பும், பதிப்புகளும் எத்தகைய தாக்கங்களை, மறுமலர்ச்சியை ஏற்படுத்தின என்பதற்கான அறிகுறிகளே இல்லை. சொல்லப் போனால், பரிதிமாற்கலைஞரும், மறைமலை அடிகளாரும், சங்கப் பதிப்புகளைப் பார்த்திராவிட்டால் தமிழ் பற்றி இவ்வளவு பெருமை கொண்டிருப்பார்களா, தனித்தமிழ் இயக்கத்துக்கு அடிகோலியிருப்பார்களா என்பதே ஐயம் தான்.
 
அதே போல களப்பிரர் காலம் “இருண்ட காலம்” என்ற அடிப்படையில் தமிழை வெகுவாக வீழ்ந்ததாகக் கருதுவதும் சரியா எனத் தெரியவில்லை.  அக்காலத்தில்தான் திருக்குறள், ஐம்பெருங்காப்பியங்கள், எண்ணற்ற சமண, புத்த நூல்கள் தமிழில் வந்திருப்பதாகவும் ஆய்வாளர் கொள்கிறார்கள்.  பக்தி இயக்கத்தால் தமிழ் வளர்ந்தது என்பது உண்மை என்றாலும், அது பெருவீழ்ச்சியிலிருந்து தமிழை மீட்டெடுத்ததாகக் கொள்வது சரியா? அப்படி மீட்டெடுத்திருந்தால், புதிய பக்தி இயக்கம் ஒன்றால் மட்டுமே இன்றைய வீழ்ச்சியிலிருந்து தமிழுக்கு மறுமலர்ச்சி தர முடியும் என்ற கருத்தையும் எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது.
 
சங்க காலத்துக்குப் பின்னர் எண்ணற்ற பண்பாட்டுக் கலப்புகள் தமிழகத்தில் இருந்திருக்கின்றன.  களப்பிரர், பல்லவர் இருவருமே தமிழரல்லாதவர்கள் ஆனால், இன்று தமிழ் மக்களோடு இரண்டறக் கலந்து விட்டவர்கள்.  தெலுங்குச் சோழர்கள், விஜயநகர மன்னர்கள், மொகலாயர்கள், மராத்தியர்கள் போன்றோரின் படையெடுப்புகளும், பின்னர் ஐரோப்பியர்களின் ஆளுகையும் தமிழ் மொழியின் மீது எத்தகைய தாக்கம் உண்டாக்கின என்பதையும் பார்க்க வேண்டும்.
 
இந்தியா ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு அரச குடும்பம் என்ற கருத்தைக் கொண்டோரின் தாக்கத்தையும் அதற்கான எதிர்விளைவையும் கருத வேண்டும்.
 
அச்சுக்கலை பின்னர் இணையம் என்ற மாபெரும் தொழில்நுட்பம் இவற்றின் விளைவுகள், தமிழ்ப் புலவர்களின் மரபுவழிக் கல்வியின் வீழ்ச்சி, அறிவுசார் கலப்புகளுக்கான எதிர்ப்பு, உணர்வுசார் கருத்துகளின் ஓங்கல் இவற்றின் தாக்கங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். 
 
ஐராவதம் மகாதேவனின் கருத்தின் படி, தமிழ் மன்னர்களின் ஆட்சியால்தான் தமிழ் எழுத்துமுறை தென்னகத்தில் தோன்றியது.  அசோகரின் ஆட்சிக்குட்பட்டிருந்த ஏனைய தென்னக நாடுகளில் தெலுங்கு, கன்னட மொழிகளில் இருந்திருக்கக் கூடிய வாய்மொழி இலக்கியங்கள் பதியப் படாமலேயே போனதற்கு அவர்கள் தன்னாட்சி பெறாததும் ஓர் அடிப்படைக் காரணம்.  14ம் நூற்றாண்டில் வீழ்ந்த தமிழர் ஆட்சி இன்று வரை மீண்டு எழவில்லை.  இந்தியக் கூட்டரசின் ஒரு கூறாக இருக்கும் அளவில் ஓரளவு தன்னாட்சி இருந்தாலும், அதையும் தமிழ்நாட்டு அரசுகள் முறையாகப் பயன்படுத்தியதாகச் சொல்ல முடியாது.
 
பெங்களூரில் தெருப்பெயர்ப் பலகை உட்பட அனைத்து அரசு அறிவிப்புப் பலகைகளிலும் கன்னடம் இருப்பதை முணுமுணுக்காமல் ஏற்பவர்கள், தமிழ்நாட்டில் தமிழிலும் அறிவிப்புப் பலகையை மாற்றுங்கள் என்றால் போர்க்கொடி தூக்கும் துன்பநிலையைக் காண்கிறோம்.  தமிழ்வழிக் கல்வியும், ஆட்சிமொழித் தமிழும் வளராமல், தமிழ் வளர முடியுமா?
 
14ம் நூற்றாண்டிலிருந்து 19ம் நூற்றாண்டு வரை பிறர் ஆட்சியின் கீழும் தழைத்த தமிழ் 20ம் நூற்றாண்டின் ஆங்கில வளர்ச்சியின் நிழலில் தடுமாறத் தொடங்கியுள்ளதா?
 
பிறமொழி எழுத்துகள், பிற மொழி ஒலிகள், பிறர் பண்பாடுகள், பிறர் உடைகள் இவற்றைத் தமக்குள்ளே ஏற்றும் தம் மொழியையும், பண்பாட்டையும் காக்கும் முறைகளை நிப்பானியர் போன்றோர் செய்திருப்பது போல் தமிழரும் செய்யத் தவறுவதால் என்ன விளையும்?
 
நல்ல திறக்கு.  தொடருங்கள் உங்கள் கருத்தாக்கங்களை.
 
அன்புடன்,
 
மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு


 
2010/12/12 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>

C.R. Selvakumar

unread,
Dec 12, 2010, 12:07:50 PM12/12/10
to tamil...@googlegroups.com


2010/12/12 karuannam annam <karu...@gmail.com>

காய்தல் உவத்தல் இன்றிப் பலவற்றை எண்ணிப் பார்க்க வைக்கும் இழை.
1950 களில் இருந்து 1970௦ வரை தமிழ்வழிக் கல்வியின் வளர்ச்சியே இன்றையத் தமிழின் சிறப்புக்குக் காரணம் எனக் கருதுகிறேன். இன்று தமிழ் வழிக் கல்வி அருகி வருகிறது. நம் யாருடைய பிள்ளையும் தமிழில் படிக்கவில்லை. அடுத்த 40 ஆண்டுகளில் இன்றைய விதைதானே விழையும். தமிழ் மொழிப் பாடத்தையாவது பிள்ளைகளைப் படிக்கத் தூண்டுவது நம் கடமை.
 
மிகச் சுருக்கமாக மிகப் பொருத்தமாகக் கூறியுள்ளீர்கள் ஐயா!
தமிழ்-வழி கற்றவர்கள் (தமிழ்நாட்டிலும், இலங்கையிலும்)
இன்று உலகில் பற்பல இடங்களில் பற்பல பொறுப்புகளில்
ஆங்கில-மொழிவழி பங்காற்றுகிறார்கள் இதில் தடை ஏதும் இல்லை
என்னும் உண்மையை (முழுப் பூசணிக்காயை) மறைக்கின்றார்கள்.
பச்சிளங்குழந்தைகளுக்கும் தமிழிஐ ஒதுக்கிவிட்டு ஆங்கிலத்தில்
பயிற்றுகிறார்ள். பல்வேறுவிதமான ஏய்ப்புகள் நடந்து
கொண்டிருக்கின்றன. மிக அண்மையில் மோகனூருக்கு அருகே உள்ள
ஒரு சிற்றூரில் இயங்கும் ஒரு மழலைகள் பள்ளிக்கு ச்
சென்றேன். அங்கு குழந்தைகளுக்கு ஆங்கிலத்தில் சொல்லித்தருகின்றார்கள்.
இது மிகவும் சிறிய ஊர். குழந்தைகளுக்கும் ஏது புரியவும் இல்லை.
பூவின் பகுதிகளை ஒரு குழந்தையைக் கூறச்சொன்னார்கள்.
அதுவும், ஏதேதோ சொல்லியது. அம்மா பூவோட இதழ் எங்கே, காம்பு
எங்கே என்றேன் புரியாமல் விழித்தது. pistil, stamen, petal என்று அது சொன்ன
எந்தச் சொல்லையும் அச்சிறுமியும் புரிந்துகொள்ளவில்லை,
அது கூரியதை எந்த ஆங்கிலேயரும் புரிந்துகொள்ள முடியாது!
இடையறாது தாழ்வு மனப்பான்மையை ஊட்டுவதொன்றே
விளையும் பயன். உள்ளத்துள் அக்குழந்தை ஆங்கிலத்தில்
சிந்திக்கப் போவது இல்லை, ஆனால் இப்படித் திணிப்பதால்,
சிந்திக்கும் திறனையே அழிக்கின்றார்கள் என்பதை உணரவும்
மறுக்கின்றார்கள். சிறு குழந்தைகளுக்கும் டைகர் பாரு டைகர்,
ஏன் புலி என்றால் அறிவு வளராதா?!!
ராபிட்டுக்கு எவ்வளளோ பி'க்' இயர் (big ear) பாருடா கண்ணு என்று
கிரியோல் வளர்க்கின்றார்கள். நான் ஒண்ணும்
பண்ணமுடியாதுங்க சார், என் ஹாண்ட்லே ஒண்ணும் இல்லே. என்று
கண்டபடி கலந்து பேசுகிறார்கள். இவருக்கு கை என்றால் ஹாண்ட்'
என்று எப்படியோ கண்டுபிடித்துவிட்டார். இப்பொழுது
அவர் உயர் மொழியில் பேசுகிறார்!!
ஏதேனும் ஒரு தமிழ்ச்சொல்லுக்கு ஈடாக ஆங்கிலத்தில் ஒரு சொல்
தெரிந்தாலும் போதும் உடனே அதனைத் தமிழ் சொற்றொடரில்
பயன்படுத்துகிறார்கள். இப்போக்கை சிலர் வளர்க்கிறார்கள். சிலர்
சிறிதளவு ஒழுக்கமும் இல்லாமல் பின்பற்றுகிறார்கள்.
 
அன்புடன்
செல்வா
 
அன்புடன்
சொ.வினைதீர்த்தான். 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

karuannam annam

unread,
Dec 12, 2010, 12:57:33 PM12/12/10
to tamil...@googlegroups.com
 
ஒரு சிற்றூரில் இயங்கும் ஒரு மழலைகள் பள்ளிக்கு ச்
சென்றேன். அங்கு குழந்தைகளுக்கு ஆங்கிலத்தில் சொல்லித்தருகின்றார்கள்.
இது மிகவும் சிறிய ஊர். குழந்தைகளுக்கும் ஏது புரியவும் இல்லை.
பூவின் பகுதிகளை ஒரு குழந்தையைக் கூறச்சொன்னார்கள்.
அதுவும், ஏதேதோ சொல்லியது. அம்மா பூவோட இதழ் எங்கே, காம்பு
எங்கே என்றேன் புரியாமல் விழித்தது. pistil, stamen, petal என்று அது சொன்ன
எந்தச் சொல்லையும் அச்சிறுமியும் புரிந்துகொள்ளவில்லை,
ஆம் திரு செல்வா. தமிழும் போச்சு. ஆங்கிலமும் இல்லை. 
இடையறாது தாழ்வு மனப்பான்மையை ஊட்டுவதொன்றே
விளையும் பயன். உள்ளத்துள் அக்குழந்தை ஆங்கிலத்தில்
சிந்திக்கப் போவது இல்லை, ஆனால் இப்படித் திணிப்பதால்,
சிந்திக்கும் திறனையே அழிக்கின்றார்கள் என்பதை உணரவும்
மறுக்கின்றார்கள்.
மிகவும் சரி. மக்கள் தங்கள் பிள்ளைகள் எதிர்கால ஏற்றம் என்ற பயத்தில், ஆசையில், அரசுப் பள்ளியின் அவலத்தில் காட்டாறாக வரும் மெட்ரிக் பள்ளிகளை ஒன்றும் செய்ய இயலாது. தமிழ் மொழிப் பாடத்தையாவது சிறப்பாகக் கற்பிக்க அரசின், ஆர்வலர்களின் இடையறாத கண்காணிப்புக்கு வழிகாண வேண்டும். 
சார், என் ஹாண்ட்லே ஒண்ணும் இல்லே. என்று
கண்டபடி கலந்து பேசுகிறார்கள். ஏதேனும் ஒரு தமிழ்ச்சொல்லுக்கு ஈடாக ஆங்கிலத்தில் ஒரு சொல்
தெரிந்தாலும் போதும் உடனே அதனைத் தமிழ் சொற்றொடரில்
பயன்படுத்துகிறார்கள்.
வேதனை தரும் நிலையே.
அன்புடன்

Elangovan N

unread,
Dec 12, 2010, 2:13:55 PM12/12/10
to tamil...@googlegroups.com
அன்பின் ஐயா,
நன்றி.

2010/12/12 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>

நீங்கள் காட்டும் வரைபடம் exponential decay with local perturbations. இப்படி ஓர் வரைபடத்தைப் புரிந்து கொள்ளுமுன், சில இயல்பான கேள்விகள் எழுகின்றன. அவற்றிற்குச் சில மறுமொழிகள் தர வேண்டுகிறேன்.
 
1. உங்கள் படத்தில் கீழே வரும் நீலநிறக் கோடு எதைக் குறிக்கிறது?

ஐயா, அது எம்மெசு எக்செல் நான் கேட்காமலேயே போட்டுவிட்டது. 
படமாக்குமுன் நீக்க வேண்டும் என்று இருந்தேன். தவறிவிட்டேன். 
 
 
2. உங்கள் குத்தச்சில் (vertical axix) வரும் குறியெண் எதைக் குறிக்கிறது? அது தூய்மையைக் குறிப்பது போற் தெரியவில்லை. கிட்டத்தட்டத் தமிழின் ஆட்சிமையைக் (ஆளுமையல்ல. ஆட்சியில் இருந்த தன்மை.) குறிப்பது போற் தெரிகிறது. அது சரியா?

நான் எடுத்துக்கொண்ட காரணிகள் ஆட்சிமையைக் கொண்டதுதான் பெரும்பாலும்.
சங்கம் மருவிய காலத்திற்குப் பின் தமிழில் வடசொற்கள் மிகும் காட்சி கிடைக்கிறது.
மேலும் புறச்சமய ஆளுமை அதிகரித்து அதனால் பண்பாட்டுத் தாக்கங்களும் 
அமைதி குறைவான சூழலும் தெரிகின்றன. அந்த இடத்தில் வீழ்ச்சியினளவை என் ஊகப்படியே
அமைத்துக் கொண்டேன்.  குறிஎண் என்று சொல்வது Index என்ற ஒன்றை எண்ணி. ஆனால்
அச்சில் போட்டிருப்பது அந்த index அல்ல. அதனை மிக அகண்ட தரவுகள் கொண்டு அதனை ஏரணத்துடன்
வாய்பாடு வைத்து அளந்து இடவேண்டும். இங்கே ஊக அடிப்படையில் மட்டுமே என்னால் தற்போது அதை
இடமுடிந்தது.

நீங்கள் கீழே சொல்லியிருப்பது போல பல கோணங்களில் தரவுகள் சேர்க்கப் பட்டு ஒரு மாபெரும்
தரவுச்சுரங்கம்     ஏற்படுத்த வேண்டும்.

1) கல்வி நிலை
2) போரமைதி
3) சமய நிலைகள்
4) விழாக்கள் பற்றிய தரவு
5) கல்வெட்டுக்கள்
6) சுவடிகள்
7) ஆட்சி நிலை
8) மக்களிடம் பெறப்பட்ட வரி ( செயபாரதி ஐயா அணிமையிலெழுதிய வரி பற்றிய கட்டுரைகள் கவனிக்கப் படவேண்டியன)
9) வணிக நிலை
10) புறநாட்டுத் தரவுகள்
11) மொழி நிலை 
12) அறிவியல் நிலை
13) நீங்கள் எழுதிய காலங்கள் கட்டுரைத் தொடரிலுள்ள பல்வேறு கூறுகளை நுணுகிச் சேர்க்கப்பட்ட தரவுகள்
14) இலக்கியங்கள்

இது போன்று இன்னும் மிருக்கக்கூடிய கூறுகளையெல்லாம் தரவுகளாக மாற்ற வேண்டும்.

தமிழ்நாட்டின்  ஆராய்ச்சித்தளம் பெருகிவருகிறது கடந்த நூறாண்டாக. ஆய்வுகளை அறிஞர்கள் மிகப்
பரந்து பட்ட களத்தில் செய்து கொண்டிருக்கிறார்கள். இனி, இந்தப் பரந்து பட்ட களத்தை உள்ளடக்கும்
ஒரு ஆராய்ச்சிச் சட்டகம் உருவாகி (Research Framework)  இந்த  ஆய்வுகளையும், ஆய்வுகளின் மூலங்களையும்
தரவுப் படுத்த வேண்டும்.

கணிநுட்பம் இன்றைக்கு வியக்குமளவிற்கு பக்கபலமாக இருகின்றது.

Literature Warehouse அல்லது Tamil Warehouse என்பது போன்ற ஒரு சட்டகமும்
அதனை உள்ளிட்ட கட்டகங்களும், போல்மங்களும் (Architectures, Data Model, Meta Data, Meta Meta Data & Model)
நுணுக்கமாக ஏற்படுத்தி அந்த வரைகளில் தரவுகள் சேர்க்கப்பட வேண்டும்.

ஒரு 10 ஆண்டுகள் முன்னர்வரை கணியுலகம் குறிப்பாக தரவாள்கை (Data Management) 
வரையுள் தரவுகளையே (Structured data - Mostly business oriented)அதிகம் கவனம் செலுத்திக் 
கொண்டிருந்தது. தற்போது மிகப்பெருமாண்டமாக வரையில் தரவாள்கை (Unstructured Data Management) என்ற துறை வளர்ந்துள்ளது. (கூகுள் அதற்கு முன்னோடி.)

இன்றைய நுட்பம்
1) Unstructured data processing என்ற நிலையிலிருந்து Unstructured Information Management என்ற அளவிற்கு
வெகுவாக முன்னேறியுள்ளது.
2) Content Management என்ற நிலையிலிருந்து Enterprise Content Management என்ற நிலைக்குச் சென்றிருக்கிறது.
3) வரையுள், வரையில் தரவுகளை ஒருங்கிணைக்கும் தேவைகளை பலருமுணர    ரஆரம்பித்து விட்டன.
4) Grand support to Localization 

Datawarehouse, DataMart, Business Intelligence, Data Mining, Enterprise Content Management, Data Modeling, Data Quality (The Most important technique for Language related projects) , Meta Data, Data Integration, Relational Databases ஆகிய இந்தத் துறைகளை அறிந்த சிலருடன் தமிழ், வரலாற்று அறிஞர்களை ஒருங்கிணைத்து ஒரு ஆய்வுக் கூடம் அமையுமானால் அது மாபெரும் சாதனைகளைச் செய்ய முடியும்,

பல கோணங்களையும், நுட்பங்களையும் சொல்லுவதால்
கவலுற ஒன்றுமில்லை.

படிப்படியாகக் கட்டி விடலாம். (Iterative and incremental approach).
ஆனால்  அடித்தளச் சட்டகமும், கட்டகங்களும், போல்மங்களும்
நுணுக்கமாகச் செய்யவேண்டும். அதன்பின்னரதுவே வளர்ந்து விடும்.

மிகச்சாதாரண எசுகுயெல் (SQL) ஐ வைத்து எண்ணற்ற வியப்புக்களை
வெளிக்கொணர முடியும்.

 
3. இதை எண்ணியலாகச் சொல்வதற்கு எந்தப் புள்ளிவிவரத்தை நாம் தேடலாம்? 

ஒவ்வொரு பெரிய கோணங்களுக்கும் 
அடிமட்டத் தரவுகள் சேர்க்கப்படவேண்டும்.

அந்த  அடிமட்டத் தரவுகளிலிருந்து (Atomic Data) இந்தப் புள்ளிவிவரங்களைப் பெற வேண்டும்.

தரவு பற்றாத  இடங்களில் புள்ளியில் கணித அடிப்படையில் ஏரணங்கள்
கூட்ட வேண்டும்.

முழுமையாக விளக்கிவிட முடியவில்லை. மிக நீளும். சில காட்டுகளையேனும் வருநாள்களில் செய்ய முயல்கிறேன்.

படத்திலே கிடையச்சின் அலகாக நூறாண்டுகளிருக்கின்றன.
இது பரந்த பார்வையையே தரவல்லது.
ஆனால் நாம் சேர்க்கும் தரவுகள் எவ்வளவு அடிமட்டத்தில் இருக்கின்றனவோ
அந்தளவிற்குத் துல்லியமாக நம்மால் கணிக்க முடியும்.

இதேப் படத்தை ஒவ்வொரு ஆண்டு இடைவெளியில் பார்த்தால்
ஏற்றமும் இறக்கமும் வியப்படையவைப்பதொடு காரணங்களை
அழகாகச் சொல்லும். 

அன்புடன்
நாக.இளங்கோவன்

 
4. இதே நூற்றாண்டுகளில் தமிழர் எண்ணிக்கை கூடிவந்திருக்கிறதே? அதை எப்படிக் கணக்கில் எடுத்துக் கொள்வkது?

Elangovan N

unread,
Dec 12, 2010, 2:35:40 PM12/12/10
to tamil...@googlegroups.com
அன்பின் நண்பர் மணிவண்னன்,
நன்றி.

நீங்கள் கூறியிருக்கும்   அத்தனையும் தரவுகளாகக் கோர்க்கப்படவேண்டியவை. நிறைய நூல்கள் கொண்டு நல்ல துணைகளோடு
ஒவ்வொன்றாகக் கோர்க்கப் படவேண்டியவை.
இங்கே நானிட்டிருக்கும் படம்   ஒரு ஊகத்தினடிப்டையிலான
பார்வை மட்டுமே.    இன்னும் சொல்லப்போனால் என் மனதிலே ஓடுகின்ற
காட்சி என்றும் சொல்லலாம்.

2008 ஆம்  ஆண்டு பெரியார் துக்க நாளென்று சொன்ன ஒரு நாளிலே
இங்கொரு மன்றத்தில் என்னைப் பேசச் சொன்னார்கள். நாமென்னத்தைப்
பேசப்போகிறோம்  என்று எண்ணியபோது நமக்கென்ன பேசிவைப்போம்
என்று "விடுதலைக்கு முன்னரும் பின்னரும் தமிழின் நிலை" என்ற தலைப்பில்
பேசினேன். 

அதில் போரமைதி என்ற கோணத்தைத் தரவுகளோடும் வரைபடங்களோடும்
பேசினேன்.

நீங்களும்  இராம.கி ஐயாவும் பிறரும் அருள்கூர்ந்து படித்துப் பார்த்து
இவ்விழையோடு ஒப்பு நோக்கக் கேட்டுக் கொள்கிறேன்.


(அதைப் பேசிச் சில மாதங்கள் கழித்துத்தான் பதிவில் இட்டேன். 
ஆகத்து மாத அளவில் ஈழப்போர்ச்சூழலின் கொடுமைப் போக்கு நன்கு
உணரப்படாமலிருந்தது).

அன்புடன்
நாக.இளங்கோவன்

2010/12/12 Mani Manivannan <mmani...@gmail.com>
--

C.R. Selvakumar

unread,
Dec 12, 2010, 3:00:26 PM12/12/10
to tamil...@googlegroups.com
அன்புள்ள இளங்கோவன்,
 
//இன்னும் சொல்லப்போனால் என் மனதிலே ஓடுகின்ற
காட்சி என்றும் சொல்லலாம்.//

இப்படித்தான் நானும் எண்ணி வாளாவிருந்தேன்.
 
எண்களைப் பயன்படுத்தும்பொழுதும், வரைபடம்,
(கொடிப்படம்?) பயன்படுத்தும்பொழுதும் அதிகம்
கருத்தீர்ப்பு வேண்டும். எண்கள், வரைபடம் என்பதால்
ஏதோ துல்லியம் இருப்பதாக மயக்கம் தோன்ற
வாய்ப்புண்டு (பார்ப்பவருக்கு).
நீங்கள் இன்னொரு மடலில் கூறியது
போல பல கோணங்களில் தரவுகளையும் குறிப்புகளையும்
திரட்ட வேண்டும். 0.5% விழுக்காடு வேறுபாட்டை
மாபெரும் வேறுபாடாக வரைபடம் காட்டக்கூடும்.
தரவுகள் அறிவால் தீட்டப்பட்டவையா,
சமன்சீர்செய்யப்பட்டவையா
(இங்கே சமன்சீர் செய்தல் என்பது calibrate) 
என்றெல்லாம் பலகோணங்களில் அலசப்பட வேண்டும்.
 
நாம் இருக்கும் இழிநிலை என்னவென்றால், கடந்த 10 ஆண்டுகளில்
எத்தனைத் தமிழ்நூல்கள் வெளிவந்தூள்ளன, கடந்த 100 ஆண்டுகளில்
எத்தனை தமிழ்நூல்கள் வெளியாகியுள்ளன என்றும் அறிய
இயலா நிலை. விருபா திரு குமரேசன் (நம் மன்றத்தில் உள்ளார்),
அவரிடம் ஒய்.எம்.சி.ஏவில் பேசவந்தபொழுதும் கேட்டேன்.
தமிழ்நாடு அரசு நினைத்தால் (தமிழ்மட்டும் அல்ல) அனைத்து
மொழி வெளியீடுகளையும் துல்லியமாக ஆண்டுதோறும் கணித்துக்
கூறமுடியும். கல்வெட்டு ஆவணங்களைப் பற்றி நான் கேட்டு
எழுதினேன் மைசூரில் உள்ள அலுவலகத்தில் (இந்து நாளிதழில்
வெளியான ஒரு எண்ணிக்கையை உறுதி செய்ய), அவர்களால்
உருப்படியாக எதுவும் சொல்ல இயலவில்லை. ஆனால் பொதுவாக
கடந்த சில ஆண்டுகளாகத் தரவுகளின் முகனையை உணர்ந்து
முன்பினும் அதிகமாக வெளியிடுகிறார்கள். ஆனால் போதாது.
 
அன்புடன்
செல்வா
 
  
2010/12/12 Elangovan N <nela...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Dec 12, 2010, 5:06:53 PM12/12/10
to tamil...@googlegroups.com
தமிழ்வட்டம் என  ஒரு குழுமம் இருக்கு
 
Reply all
Reply to author
Forward
0 new messages