அவள் என்னோடுதான் இருக்கிறாள் - நவராத்திரிப் பாடல்

22 views
Skip to first unread message

Hari Krishnan

unread,
Oct 16, 2012, 2:51:24 AM10/16/12
to MarabinMaindan Muthiah, Ramanan Isaikkavi, vannadasan sivasankaran, krishnan venkatasubramanian, swami nathan, crazy mohan, Subbu, Veeraraghavan P., Sundarji, Swami Siva Yogananda, R.S,Mani, கவிநயா, kanaga lakshmi, siva...@md3.vsnl.net.in, rugan & arya, Dr vallioor Subramanian, rajasekaran shanmuganathan, Dr S Raja Sabapathy, Ramana Athaan, BR Haran, vspr...@thehindu.co.in, Elayavan, SUBBAIER RAMASAMI, V Gopalakrishnan, Geetha Kailasam, Guha Kumari, Haritha, jana laxman, jeevananthan v, Murali Krishna Sweets, Anna Kannan, K V Trisakti, Kamadhenu Publications Ltd, இல கணேசன், Raghuji, Kothamangalam Swamy, Madhurabharathi, mi thra, Sathish Nagarajan, Shylaja Narayan, v narasimhan, Vetrivel Hari Om, Padhukka, Ramanathan T.R., Suresh Vijayaraghavan, Krishnamurthy T.S., Umanath Selvan, உதயன் மு, Ulaganayaki Palani, Raman Pattabi, Vimala ramanajothi, vishwa shirasini, Koothanainar SRS, Matt Krishnan, Anand Mani, Mani Krishnan, Rani Srinivasan, Sukanya Mani, Varshaa Moahan, Arvind Venkatraman, PR Vittel, Aandiappan Singai, gopala subramanian, Raghavan alias Saravanan M, Alamelu Viswanathan, AMR Jothida Chakravarthy, amudha surabi, Ananthanarayanan, Vettai, Ma Anbalagan Masilamani, Arkay Ramakrishnan, Ashoke Pondy, Saranya Balaji, Baskar baskar, T. Bhaskara Doss, shivananda bharati, Chanakya Bombay, vasan iyer, My Brother Nirmal, Brindhaa Ramani, Anu Kannan Canada, Chithan Yugamayini, Chitra Venky, Dakshayani Ramachandran, V. Dhivakar, Vijayalakshmi Doordarshan, Murali Krishnan, Sunder Subramaniam, Prema Seshadri, edi...@solvanam.com, vallamai editor, Ganapathy Raman, Gopalan Ganesan, Narayanan Gopala Sundaram, Geetha Srinivasan, janaki raman, Girija PR, Manivannan Madurai, Professor Ku Gnanasambandan, Vis Gop, Gurugnanambikai, Tamil Hindu, IBMC HARI, ramesh isha, Jayanthasri Balakrishnan, j.g. shanmuganathan, Jillu Rangan, Sakthi Jothi, Rajendran Kovai, S Krishnamurthy, ksaisara...@yahoo.co.in, Kulandai Vel, K.R Kumar, Krishnan K.V., K.V.Krishnamoorthy Kovai KVK, LAKSHMINARASIMHAN, Sharada Lakshman, LMD, Lochana Suresh, Madhu mitha, malar mannan, Viswanathan M R Visu, Viswanathan Madurai, meena muthu, mrinalini vidhyadharan, rajesh muthuswamy, Sevalaya Murali, murali ramakrishnan, musicforum chennai, Narayanan V.S., Subha Narayanan, N. Mathusuthanan, NTFANS, Krishnaamachari Parthasarathy, sam path, Prakash Swamy, Ponraj V, Prime Point Srinivasan, SVK Reddy, Prabhu Shankar, PSFIDUCIAL, Anuradha Ramesh, Krishnamachary Rangaswamy, Subramanian Ravi (RBIC), revathira...@hotmail.com, Renganayaki, Iyer Rajeswari, Sri, Rajesh S, Maheswari Sarguru, sankar Krishnaswamy, Selva, C.R. Selvakumar, Natesan K SFC, Yuva Shakthi, Siddharthan Velu, Sivaraman V, Krishnaiyer Sivaramakrishnan, Smt Gayathri Kannan, Rama Srinivasan, Srikanth, Srimathi's Parents, Subramanian Swaminathan, svra...@gmail.com, Thayumanasamy Sivagnanam, thiruppurkrishnan krishnan, Bharathi Thirumagan, Tirupathi Padmanabhan, tkmohan, Tulasi A, vrajamani vaidyanathan, Bala, துரை. ந. உ, vgram...@hpcl.co.in, விபாகை - மனிதம், Chezian Thanjavur, Ramasamy Raveendran, vanith...@pricol.co.in, bests...@yahoo.in, Pas S.Pasupathy, Fixed-term Subramanian Ravi (CC/BMSI), santhavasantham, vallamai, தமிழ் சிறகுகள், தமிழ் மன்றம்
(குரல்வடிவில் கவிதையை இணைத்துள்ளேன்.)

வீசுகவி பேசுகவி ஆசுகவி நின்றமன்றில்
     விகடகவி யாகமட்டும் வந்தேன் - அன்னை
     விரல்பிடித்தேன் அச்சமிலை நின்றேன்!

அவளும் நானும்



அவளென்னோடுதான் இருக்கிறாள்
நான்தான்
அவளுடனில்லை...

முளைத்த நாள்முதல் முகிழ்த்த கனவெனக்
களைக்கக் களைக்கக் கவியெனுள் ஊற்றி

படிக்கும் எழுத்தில் பரவசக் காட்சியாய்
பிடிக்கும் எழுத்தில் பீறிடும் அமுதாய்

வெடிக்கும் கணங்களின் வேதனை துடைத்து
நடக்கும் பாதையில் நறுஞ்சொல் புதைத்து

பிடித்துக் கொள்ள ஒருவிரல் கொடுத்து
நடத்திச் சென்ற நாட்களும் உண்டு...

நான்நடை விட்டு நடைகளம் மாறினும்
ஏனெனக் கேளா இளஞ்சிரிப் புடனே

அவளென்னோடுதான் இருக்கிறாள்
நான்தான்
அவளுடனில்லை...

உரைநடை விரைநடை ஒளிவிளை யாட்டும்
அரைநடை குறைநடை அதிரடி போட்டும்

அலைந்த நாட்களும் மலைந்த வாட்களும்
கலைந்த கவனமும் கவிமறை வனமும்

எதையோ ரசித்து இதயம் திரித்து
விதையை முகிலில் விதைக்க நினைத்து

குறியைத் தொலைத்து கூட்டம் கலைத்து
மறித்த கரத்துடன் மனந்தடு மாறினேன்.

கவியாய்ச் செதுக்கக் காத்தவள் நிற்க,
குவியா மனத்துடன் குதித்துநான் ஓட....

அவளென்னோடுதான் இருக்கிறாள்
நான்தான்
அவளுடனில்லை...


மருளும் தெருளும் ஒன்றேதான்--
     மனமொரு ஊசல் ஆடும்வரை
அருளும் பொருளும் அரைகுறைதான்
    அகத்துள் ஒளிநுழை வழியடைத்தால்
இருளும் ஒளியும் ஒன்றேதான்
    எடுத்துக் காட்டும் விழியின்றேல்  
வெருளும் மனத்துக் கெதுவழியோ
    விரல்பிடித் துள்ளேன் போதாதா!

அவளென்னோடுதான் இருக்கிறாள்
நானும் அவளோடிருக்கின்றேன்


பகுத்த கனவினை தொகுத்த விடையென
மிகுத்த சுமையினை புகைத்த கொடையென

ஆடிவிட்ட நாளுமென்னுள் ஆடிடாம லாடிநின்று
கூடி,விட்ட என்கரத்தை குறைபடாமற் பற்றிவந்து

நடிக்கிறாள் - எனுள்
வெடிக்கிறாள் - எனைக்
குடிக்கிறாள் - வழி
பிடிக்கிறாள்

வகுத்த கலைகளைப் புகுத்து மனத்தினில்.
மிகுத்த களைகளைப் பறிக்கும் சினத்தினில்

தேடி,விட்ட பாணமுன்னுள் தீமைதீய்க்கும் என்றுநித்தம்
பாடிவைத்த பாடலோடு, பாலெடுத்த ஓடையோடு

பறிக்கிறாள் - எனைத்
தரிக்கிறாள் - பால்
நிறைக்கிறாள் - மனம்
கரைக்கிறாள்.

அவளென்னோடுதான் இருக்கிறாள்
நான்தான்
அவளை விட்டிருந்தேன்...

வெறித்த நிலையினை விடைத்த தலையினை
கறித்த சிலையினில் தொடுத்த கணையினில்

மூடிவைத்த நெஞ்சினுள்ளும் மூழ்கிமூழ்கி தான்குளித்து
ஏடெடுத்துக் கைதிணித்து எழுதவைக்க என்மனத்தைப்

பற்றுவாள் - சிறை
முற்றுவாள் - இது
கொற்றவாள் - பா
கற்றவாள்.

குறித்த வழியினை குதித்த சிறுபிளை.
மறித்த தெனதனை; மசித்த தெனையெனை.

தேடிவந்து கோவில்நின்று தெய்வலீலை தான்வியந்து
பாடவைத்த பாட்டையிந்த பரவசத்தி லாழ்த்தியென்னை

ஆட்டுவாள் - கனல் 
மூட்டுவாள் - கவி
கூட்டுவாள் - பேய்
ஓட்டுவாள்.

அவளென்னோடுதான் இருக்கிறாள்
நானும்
அவளுடன் உள்ளேன்.


விட்டுப் பறக்க சிறகளித்தாய்
     விட்டுத் துறக்கச் சிறகடித்தேன்.
தொட்டமு தத்தை நாவைத்தாய்
    தொட்டமு தத்தை நான்கவிழ்த்தேன்
இட்டம் தாயே உன்னிட்டம் - எனை
     எட்டடிப் பறிப்ப துன்னிட்டம்
நட்ட நிலையில் மனமிதனை
    நாட்டிடும் நாளும் என்றோடீ!

அவளும் நானும் கரைந்துள்ளோம்
அமுதில் நானோ நிறைந்துள்ளேன்

அவளெனை என்றும் விடமாட்டாள்!
அடுத்தெனை எங்கும் நடமாட்டாள்!


12.10.12
12.12 மணி
--
அன்புடன்,
ஹரிகி.
Navarathri Padal.mp3

Kaviyogi Vedham

unread,
Oct 16, 2012, 2:59:07 AM10/16/12
to tamil...@googlegroups.com, Hari Krishnan
பலே பலே ரொம்பப் பிரமாதம்.
 யோகியார்

2012/10/16 Hari Krishnan <hari.har...@gmail.com>

Hari Krishnan

unread,
Oct 17, 2012, 10:32:38 PM10/17/12
to Ramanan Isaikkavi, MarabinMaindan Muthiah, கவிநயா, Subbaier Ramasami, crazy.mohan, Tthamizth Tthenee, Muthiah, vannadasan sivasankaran, krishnan venkatasubramanian, swami nathan, Subbu, Veeraraghavan P., Sundarji, Swami Siva Yogananda, R.S,Mani, kanaga lakshmi, siva...@md3.vsnl.net.in, rugan & arya, Dr vallioor Subramanian, rajasekaran shanmuganathan, Dr S Raja Sabapathy, Ramana Athaan, BR Haran, vspr...@thehindu.co.in, Elayavan, V Gopalakrishnan, Geetha Kailasam, Guha Kumari, Haritha, jana laxman, jeevananthan v, Murali Krishna Sweets, Anna Kannan, K V Trisakti, Kamadhenu Publications Ltd, இல கணேசன், Raghuji, Kothamangalam Swamy, Madhurabharathi, mi thra, Sathish Nagarajan, Shylaja Narayan, v narasimhan, Vetrivel Hari Om, Padhukka, Ramanathan T.R., Krishnamurthy T.S., Umanath Selvan, உதயன் மு, Ulaganayaki Palani, Raman Pattabi, Vimala ramanajothi, vishwa shirasini, Koothanainar SRS, Matt Krishnan, Anand Mani, Mani Krishnan, Rani Srinivasan, Sukanya Mani, Varshaa Moahan, Arvind Venkatraman, PR Vittel, Aandiappan Singai, gopala subramanian, Raghavan alias Saravanan M, Alamelu Viswanathan, AMR Jothida Chakravarthy, Ananthanarayanan, Vettai, Ma Anbalagan Masilamani, Arkay Ramakrishnan, Ashoke Pondy, Saranya Balaji, Baskar baskar, T. Bhaskara Doss, shivananda bharati, Chanakya Bombay, vasan iyer, My Brother Nirmal, Brindhaa Ramani, Anu Kannan Canada, Chithan Yugamayini, Chitra Venky, Dakshayani Ramachandran, V. Dhivakar, Vijayalakshmi Doordarshan, Murali Krishnan, Sunder Subramaniam, Prema Seshadri, edi...@solvanam.com, vallamai editor, Ganapathy Raman, Gopalan Ganesan, Narayanan Gopala Sundaram, Geetha Srinivasan, janaki raman, Girija PR, Manivannan Madurai, Professor Ku Gnanasambandan, Vis Gop, Gurugnanambikai, Tamil Hindu, IBMC HARI, ramesh isha, Jayanthasri Balakrishnan, j.g. shanmuganathan, Jillu Rangan, Sakthi Jothi, Rajendran Kovai, S Krishnamurthy, ksaisara...@yahoo.co.in, Kulandai Vel, K.R Kumar, Krishnan K.V., K.V.Krishnamoorthy Kovai KVK, LAKSHMINARASIMHAN, Sharada Lakshman, LMD, Lochana Suresh, Madhu mitha, Viswanathan M R Visu, Viswanathan Madurai, meena muthu, mrinalini vidhyadharan, rajesh muthuswamy, Sevalaya Murali, murali ramakrishnan, musicforum chennai, Narayanan V.S., Subha Narayanan, N. Mathusuthanan, NTFANS, Krishnaamachari Parthasarathy, sam path, Prakash Swamy, Ponraj V, Prime Point Srinivasan, SVK Reddy, Prabhu Shankar, PSFIDUCIAL, revathira...@hotmail.com, Renganayaki, Iyer Rajeswari, Sri, Rajesh S, Maheswari Sarguru, sankar Krishnaswamy, Selva, C.R. Selvakumar, Natesan K SFC, Yuva Shakthi, Siddharthan Velu, Sivaraman V, Smt Gayathri Kannan, Rama Srinivasan, Srikanth, Srimathi's Parents, Subramanian Swaminathan, svra...@gmail.com, Thayumanasamy Sivagnanam, thiruppurkrishnan krishnan, Bharathi Thirumagan, Tirupathi Padmanabhan, tkmohan, Tulasi A, vrajamani vaidyanathan, Bala, துரை. ந. உ, vgram...@hpcl.co.in, விபாகை - மனிதம், Chezian Thanjavur, Ramasamy Raveendran, Ravi Subramaniyan, vanith...@pricol.co.in, vija_...@yahoo.com, Ravi Subramanian, santhavasantham, vallamai, தமிழ் சிறகுகள், தமிழ் மன்றம்
வாழ்த்திய அனைவருக்கும் தலைதாழ்ந்த வணக்கம்.  வாணியல்லவா நம் அனைவருள்ளிருந்தும் பேசுகிறாள். 

இதில் ஒரு பெரியவர் ரமணனுக்கு அனுப்பியிருந்த மடல் என் மனத்தைத் தொட்டது.  பொதுவில் இட முயன்று, அவருக்குச் சரியாக அனுப்பத் தெரியாமல், தனியாகப் போய்விட்டதால், பொதுவில் வைக்கிறேன்.  இந்தக் கவிதையின் இதயத்தைக் கச்சென்று பிடித்த ‘கன்னலில் சுவையறியும் குழந்தையைப்போல்’ இவர் வாழ்த்தியது கண்பனிக்கச் செய்கிறது.  தொனிப்பொருளை என்ன அழகாகப் பிடித்திருக்கிறார். பார்த்தறியாப் பெரியவருக்குப் பாதம்தொட்ட வணக்கம், 


2012/10/16 Ramanan Isaikkavi <tavenka...@gmail.com>
ஹரி!

இவர் திருநெல்வேலியில் இருக்கிறார். வயது 83 இருக்கும். அவருடைய ரசனை உனக்கு ஆசீர்வாதமே

அன்புடன்,
ரமணன்


2012/10/16 Ramanan Isaikkavi <tavenka...@gmail.com>
>
> வாவா ஹரியே! என்ன உருக்கமான கவிதை!
 

---------- Forwarded message ----------
From: Koothanainar SRS <srs...@gmail.com>
Date: 2012/10/16
Subject: Re: அவள் என்னோடுதான் இருக்கிறாள் - நவராத்திரிப் பாடல்
To: Ramanan Isaikkavi <tavenka...@gmail.com>


உருக்கம் மட்டுமல்ல - என்ன தன்னம்பிக்கை
'அவள் என்னோடுதான் இருக்கிறாள் ,
நான் தான் அவளோடு இல்லையில் ஆரம்பித்து
'நம்பிக்கையால் இறுகப்பிடித்து'
நான் அவளோடுதான் இருக்கிறேன்' என
உறுதியுடன் அழுத்தமாக சொல்லியிருக்கிறார் !
பாடலை படிப்பதில் இருந்த சுவையைவிட
கவிஞரின் இனிய குரலில் ,சந்தத்துடன் உரிய
வேகத்துடன் கேட்கும்போது அந்த இனிமையே
தனிதான் .
இசைக்கவி தங்கள் குழுவிற்குள் இதுவரை
சுவைத்துக்கொண்டிருந்த இன்பத்தை மன்றத்திற்கு
வரவழைத்து (பாரதி சொல்போல) உலகெலாம்
கேட்டு ரசிக்க உதவியிருக்கிறார் .
இன்னும் எவ்வளவோ வர இருக்கிறது !
எல்லாவற்றிற்கும் சேர்த்து நன்றி சொல்வோம் !
(நான் எல்லோருக்கும் அனுப்ப முயன்றதில்
தங்களுக்கு மட்டும் பதிவாகியிருக்கிறது -
முடிந்தால் எல்லோருக்கும் அனுப்ப
வேண்டுகிறேன் .)


--
Koothanainar
    "A single rose can be my garden
     A single friend can be my world "

Reply all
Reply to author
Forward
0 new messages