வியன்

1,661 views
Skip to first unread message

Shrinivasan T

unread,
May 11, 2014, 3:22:59 PM5/11/14
to mint...@googlegroups.com, panb...@googlegroups.com, vallamai, tamil...@googlegroups.com

எமது குட்டி இளவரசனுக்கு 'வியன்' என்று நற்றமிழில் பெயர் சூட்டியுள்ளோம். வியப்பானவன், பரந்த மனம் கொண்டவன் என்று பொருள்.

கதிர், நன்னன், புகழ், நிலவன், முகில், வெற்றி, நற்கோ, வளவன், அகரன், கவின், மாலன், செழியன், இனியன், பாரி, எழிலன் - யோசித்த பிற பெயர்கள்.

peyar.in தளம் வெகு உதவியாக இருந்தது.

சிறப்பான பெயர்களை அறிமுகம் செய்த CR செல்வகுமார் ஐயாவிற்கும் நண்பர் பொற்கோ அவர்களுக்கும் நன்றிகள்.

C.R. Selvakumar

unread,
May 11, 2014, 3:38:49 PM5/11/14
to தமிழ் மன்றம், vallamai
அன்புள்ள சீனிவாசன், நித்தியா இணையர்களே

உங்கள் அன்பு இளவரசர் வியனுக்கு நல்வாழ்த்துகள்!
நீண்ட ஆயுளோடு எல்லா நலங்களும் பேறுகளும்
நற்புகழ்களும் பெற்று இன்பத்துடன் வாழ்க!

நித்தியா அவர்களுக்குத் தாய்மார்களின் சிறப்புநாள் வாழ்த்து!


அன்புடன்
செல்வா - குமரி

to Shrinivasan, nithya_duraisa.



--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

வேந்தன் அரசு

unread,
May 11, 2014, 5:57:17 PM5/11/14
to தமிழ் மன்றம்



11 மே, 2014 3:22 பிற்பகல் அன்று, Shrinivasan T <tshrin...@gmail.com> எழுதியது:

எமது குட்டி இளவரசனுக்கு 'வியன்' என்று நற்றமிழில் பெயர் சூட்டியுள்ளோம். வியப்பானவன், பரந்த மனம் கொண்டவன் என்று பொருள்.



விஷால் என்ற பொருள்வருமா?
 
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

rajam

unread,
May 11, 2014, 10:53:03 PM5/11/14
to tamil...@googlegroups.com
‘வியன்’ — மிக அழகான பெயர்! அயல்மொழி பேசுகிறவர் வாயில் சரியாகப் புகுந்து புறப்பட்டால் நல்லது!

குழந்தைக்கு மிக நல்ல வாழ்க்கை அமைய என் அன்பும் ஆசியும். பெற்றோருக்கு என் வாழ்த்து.

அன்புடன்,
ராஜம்

துரை.ந.உ

unread,
May 12, 2014, 12:05:44 AM5/12/14
to tamilmantram, Groups, பண்புடன், vallamai
வியன்..........
தான்மகிழ்ந்து சுற்றத்தை மகிழ்சியில்
ஆழ்த்தும் மாயன் ..

வாழ்க வளத்துடன் 



--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

வேந்தன் அரசு

unread,
May 12, 2014, 7:19:51 AM5/12/14
to தமிழ் மன்றம்



11 மே, 2014 10:53 பிற்பகல் அன்று, rajam <ra...@earthlink.net> எழுதியது:

‘வியன்’ — மிக அழகான பெயர்! அயல்மொழி பேசுகிறவர் வாயில் சரியாகப் புகுந்து புறப்பட்டால் நல்லது!

Pandiyaraja Paramasivam

unread,
May 12, 2014, 9:13:02 AM5/12/14
to tamil...@googlegroups.com
அம்மையீர்! அதைப் பற்றி நமக்கு என்ன கவலை?

Arnold Schwarzenegger - என்னால் இன்னும் சரியாகப் படிக்கமுடியவில்லை!!!

ப.பாண்டியராஜா


rajam

unread,
May 12, 2014, 3:32:20 PM5/12/14
to tamil...@googlegroups.com
உண்மை! தமிழகத்திலேயே தமிழ்ப் பெயரைச் சரியாகப் புரிந்துகொண்டு சரியாக ஒலிக்க இயலாத நிலையில் பிற இடங்களைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை! 

சொல்லப்போனால் … என் பெயர் பலவகையில் குதறுபட்டு ஒலிக்கப்பட்டதைக் கேட்டு மிகவும் நொந்துபோன நாட்கள் செத்துவிட்டன. தொடக்க காலத்தில் (1975) மிகவும் வருந்தினேன். போகப் போக … என் பெயரை அயலவர் எப்படி ஒலிக்கிறார்கள் என்பதை மொழியியல் நோக்கத்தில் பார்க்கத் தொடங்கிய பிறகு … வியப்பும் நகைச்சுவையுமே விஞ்சின!

ரஷாம், ராஹேம், ராமட்டூரி, ராமமட்டுரி, … இன்ன பிற! 

ஒரு கணினித் தொழிலகத்தில் … எனக்கு மேலாண்மையாளர் (வயதில் இளையவர்) என்னைக் குறிப்பிடும்போதோ, கூப்பிடும்போதோ … ‘ராஜம்’ என்று குறிப்பிட்டால் அது நல்லதில்லை, அவருக்கு என்மேல் கோவம் என்று பொருள்!  ‘ரdzஷாம்/ரஹேம்/ராdzஹம்/ராdzஷேம் … ’ என்று இன்ன ஏதாவது ஒலிப்பு முறையில் கூப்பிட்டால் அன்றைக்கு அப்பொழுது அவருடைய அன்பு என் மீது பொங்கி வழிகின்றது என்பது பொருள்! ;-) அன்றைக்கு எங்கள் குழுவினரின் மதியத் தீனிக்கு வெளியே செல்கிறோம் என்பது பொருள்! ;-)

+++++++++++++++++++

என்ன செய்ய! 'ஷ்பஷ்டமா’ப் பேசணும்-னு எங்க வீட்டிலே சொல்லிக்கொடுத்த மாதிரி, எல்லார் வீட்டிலேயும் ஒரு பாட்டி/அம்மா இருந்து சொல்லிக்கொடுத்தால் நல்லது! 

+++++++++++++++++++

‘வியன்' என்பதுக்கு ‘வியன்னா’ போன்ற பிறமொழிச் சொற்கள் வழி காட்டும். கவலையில்லை!

குழந்தைக்கு என் அன்பும் ஆசியும். 

இப்படிக்கு,
ராஜம்



-

Reply all
Reply to author
Forward
0 new messages