நெய், நெய்த்தோர் - என்று அரத்தத்திற்கு பெயர். (அரத்தம் : ரத்தம்.
மீண்டு வரும்போது
இரத்தம் என்றாவதாக படித்துள்ளேன்). இணைப்பு, உறவு என்று பொருள்படும்
நெய்- (உ-ம்: நெயவு, நெசவு) நேயம் என்று பாவாணர் கொண்டிருக்கலாம்.
இராமகி, செல்வா, மு. இளங்கோ, ... மேலும் தெரியும் என்று நினைக்கிறேன்.
நா. கணேசன்
On Nov 3, 8:48 pm, devoo <rde...@gmail.com> wrote:
> * நல்லூர் வண சுவாமி ஞானபிரகாசர்*
>
> இப்படி ஒருத்தரு இருந்தாரா ?
> தமிள் படிச்சவுக யாருமே இவுகளப்பத்தி இந்நேரம் வரக்கிச் சொல்லலீங்களே !
> நீங்களாவது சொல்லுங்க சாமீ.
> ஞானப்பிரகாச அடிகளார்ன்னு போட்டுத் தேடுனா அருட் தந்தை,பங்குத்
> தந்தைன்னுல்லா வருது ?
>
> தேவ்
நேயம்:
சென்னைப் பல்கலைப் பேரகராதி நேசம் என்ற சொல்லை நேயம் என்ற
தமிழ்ச் சொல்லில் இருந்து பிறப்புக் காட்டுகிறது. ஸ்நேஹ என்றல்ல.
வெள்ளாளன் - வேளாளன் (கர்நாடக சிரமண வெளகுளம், வெள்- வேளிரைக்
குறிப்பது), பெண்-:பேணு- போல் நெய்-:நேயம் > நேசம் (குயவன் >
குசவன், ...)
---------
நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்
http://inemai.blogspot.com/2009/01/blog-post_21.html
தமிழ் அமைப்புற்ற வரலாறு (1927/1985)
http://www.tamilheritage.org/old/text/ebook/tamvar/index.html
யாழ்ப்பான வைபவ விமர்சனம் (1928)
http://www.noolaham.net/project/03/257/257.pdf
நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்
வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்
(எழுத்தாளர் தெளியவத்தை ஜோசப் நூலகப்படி)
http://noolaham.net/project/08/789/789.pdf
நா. கணேசன்
On 4 Nov, 11:51, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> நேயம். நேசம் இரண்டும் தமிழில் வரலாற்று முறைப் பொருள்கள்
> உடையனவாய்க் காணப்படுகின்றன.
>
> நேயத்தை எடுத்துக்கொண்டால் ‘வேக உள்ளத்து வேழம் தெரிந்து நிரந்தன
> காட்டிய நேயம் தோன்ற’ என்று அன்பு என்ற பொருளில் பெருங்கதை (60:
> 195-6 ) யில் ஆளப்படுகிறது. அநேகமாக அதுவே முதல் ஆட்சியாக இருக்கலாம்.
>
ஓ! கொங்குவேளின் பெருங்கதை.
உவேசா இன்னொரு கொங்கு நூலைச் சொல்வார்:
http://www.kalachuvadu.com/issue-85/pathippu08.asp
"கொங்கு மண்டல சதகத்தை முத்துசாமிக் கோனார் பதிப்பித்தபோது உ.வே.சா.
சாற்றுக்கவி அளித்துள்ளார். உ.வே.சா. நூலகக் கையெழுத்துப் பிரதியில்
சிந்தாமணி, சூளாமணி போன்றவற்றையும் கொங்கு நாட்டு இலக்கியங்கள் என்று
உ.வே.சா. குறிப்பிட்டுள்ளார்."
நெய் பொதி நெஞ்சின் மன்னர் (சீவக சிந்தாமணி 3049 )
அன்பு, நட்பு என்னும் ஒருபொருட் சொற்கள் ~ நெய், நேயம்
காணும்போது நேயம் கடன்சொல்லா
என்பதில் பெரும் ஐயம், ஐயா.
நெய் என்னும் தமிழ்ச் சொல் ஸ்நேஹத்தில் இருந்தா?
வரலாற்று முறைத் தமிழ் இலக்கியப் பேரகராதி
நெய் (= அன்பு, நட்பு) என்பவற்றுக்கு வேறு என்ன
உதாஹரணங்களை இலக்கியங்களில் இருந்து காட்டுகிறது?
அன்புடன்,
நா. கணேசன்
> அடுத்து சடகோபரந்தாதி ’ நேயத்தோடு கழிந்த போது உனக்கு எவ்வுலகம் நிகரே’
> என்று ஆள்கிறது. திருமூலர் ‘நின்றதுதான் விளையாட்டு என்னுள்
> நேயமே’ என்று அறியப்படும் பொருள் என்ற ஆட்சியில் ஆள்கிறார்.
>
> பக்தி என்ற பொருளில் பெரிய புராணம் ‘நின்றியூர் மேயாரை நேயத்தால்
> புக்கிறைஞ்சி’ என்று ஆள்கிறது.
>
> இனி நேசம் என்பதைப் பார்த்தால், அன்பு என்ற
> பொருளில் திருமழிசையாரின் பாசுரம் முதல் ஆட்சியாக வருகிறது.--
> ’வாசியாகி நேசமின்றி வந்தெதிர்ந்த தேனுகன்’
>
> அவரே பக்தி என்னும் பொருளில் ‘நேச பாசம் எத் திற’த்தும்
> வைத்திடேன் எம் ஈசனே’ என்று சொல்கிறார்.
>
> சம்பந்தர் விருப்பம் என்ற பொருளில் ‘நேசம் மிகு தோள்
> வலவன் ஆகி இறைவன் மலையை நீக்கி இடலும்’ என்று ஆட்சி செய்கிறார்.
>
> நாவுக்கரசரோ ஆர்வம் என்ற பொருளில் ‘நேசம் மிக்கு அன்பினாலே
> நினைமின் நீர் நின்று நாளும்’ என்கிறார்.
>
> பெரியாழ்வார் நட்பு என்னும் பொருளில் ‘நின்று ஒழிந்தேன் உன்னைக்
> கூவி நேசமேல் ஒன்றும் இலாதாய்’ என்று ஆள்கிறார்.
>
> (விவரங்கள் குறிப்புதவி -- வரலாற்று முறைத் தமிழ் இலக்கியப்
> பேரகராதி,
> நான்காம் தொகுதி, சாந்தி சாதனா 2002AD)
கல்லில் நார் உரிக்க முயலுகிறீர்கள். அது இயலாத வேலை.
தேவநேயப் பாவாணரை எவ்வளவெல்லாம் இழிவு படுத்த வேண்டுமோ அவ்வளவு இழிவுபடுத்தித்
திட்டுகிற கூட்டத்திடம் போய், நேயம்>நேசம், நேயம்>நேகம்>ஸ்நேகம் என்று சொல்ல
முற்படுகிறீர்கள்; சான்றுகள் காட்டப் பாடுபடுகிறீர்கள்; எல்லாம் விழலுக்கு
இறைத்த நீர். இவர்களுடைய அரசியல் உங்களுக்கு விளங்கவில்லையா? (அரசியல்
இல்லையென்று சொல்லிக் கொண்டே இவர்கள் அரசியல் செய்வார்கள். இவர்களின் பேச்சைக்
கேட்பதற்கு அணைவாய் “ஐயா, பெரியவுகளே” என்று நாலு வெள்ளைக்காரர்களிடமும்
ஓலமிடுவார்கள்.). நம்மில் பலரும் இது போன்ற தூண்டில்களிற் சிக்கியே வெளிவராது
கிடக்கிறோம். தூண்டில் வீசுவதே தொண்டாகக் கொள்ளும் சிலரிடம் கவனமாக இருங்கள்.
பாவாணரின் பெயர் பற்றிய விளக்கத்தை அவரே ஒரு கட்டுரையாக எழுதியிருக்கிறார்
என்று ஒரு நினைப்பு. (தேடிப் பார்க்கவேண்டும்.)
பாவாணரைப் பற்றித் தமிழர் உணரவேண்டும். மற்றபடி, இவர்களுக்கெல்லாம் மறுமொழி
சொல்லி ஒன்றும் ஆகப் போவதில்லை. விட்டொழியுங்கள்.
உங்கள் நேரத்தை வேறு ஏதேனும் ஒரு புலனத்தில் உருப்படியாகச் செலவிடுங்கள்.
அன்புடன்,
இராம.கி.
நா. கணேசன்
On Nov 5, 4:59 pm, Mani Manivannan <mmanivan...@gmail.com> wrote:
> மின் தமிழ்க் குழுமத்தில் இந்த இழையைச் சற்று எட்டிப் பார்த்தேன்.
>
> http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/ebf91c95...
> நேயம் என்ற சொல் திராவிடச் சொல்தான் என்று எமனோவும் ...
>
> read more »
பாவாணரின் கட்டுரையைக் கண்டுபிடித்தேன். தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்ட பாவாணர்
தொகுதியில் “தென்சொற்கட்டுரைகள்” என்ற தலைப்பில் உள்ள பொத்தகத்தில் 9 - வது
கட்டுரையாக “என்பெயர் என்சொல்?” என்ற தலைப்பில் அது வருகிறது. அந்தக் கட்டுரை
முன்பு 1959 தென்மொழி இதழில் நவம்பர் மாதம் வெளிவந்தது.
உங்களுக்காக வேலை மெனக்கிட்டுத் தட்டச்சி அனுப்புகிறேன். இது 50 ஆண்டுகளுக்கு
முந்திய கட்டுரை. இப்பொழுது தமிழ்ச் சொற்பிறப்புகளை மேலும் ஆராய்ந்து அறிந்த
கூடுதற் தெளிவில், பழைய கட்டுரையில் இருக்கும் ஒரு சில நுணவக் (minor)
குறைகளைத் தவிர்த்து, இன்னும் மற்ற சான்றுகளையும் சேர்த்துப் புதிதாக எழுதலாம்
தான். [தேவன், தெய்வம் பற்றி மிக விரிவாக சென்னைக் கிறித்துவக் கல்லூரிப்
பேராசிரியர் முனைவர் கு.அரசேந்திரன் ஒரு பெருங்கட்டுரை எழுதியுள்ளார். மேலும்
எழுத வேண்டுவது நேயம் பற்றி மட்டுமே.] அதே பொழுது, அடிப்படைக் கருத்து
மாறாததால், பாவாணர் தன் பெயரை எப்படிப் புரிந்து கொண்டார் என்று உரைப்பதற்கு
அவர் கட்டுரையே சாலும் என்று கருதிப் புதிதாய் எழுதாமற் தவிர்க்கிறேன்.
பாவாணர் தம் ஆய்விற் தவறே இழைக்காதவர் என்று யாரும் இந்தக் காலத்திற் துதி
பாடுவதில்லை. [அவரிடமிருந்து பலவகைகளில் என்னைப் போன்றவர் மாறுபடுவோம்.] ஆனால்
அவர் முன்னாற் சால் போடவில்லையென்றால், இந்த அளவிற்கு பின் ஏர்கள்
போயிருக்காது; வேர்ச்சொல் ஆய்வு இன்று பெருகியிருக்காது என்பதைத் தமிழாய்ந்த
பலரும் ஒப்புக் கொள்ளுவார்கள். இற்றைத் தமிழ்நடை மறைமலை அடிகளால் போடப்பட்டு,
பாவாணர் போன்றவரால் செழுமையாக்கப் பட்டது. அதை அறியாதவர் என்ன வேண்டுமானாலும்
சொல்லட்டும். அடிப்படையில் “சமஸ்க்ருதாய நமஹ” என்னும் கூட்டம் எதையுமே ஒப்பாது.
ஏனெனில் அவர்களின் ஏமாற்றை தமிழர்க்குப் புரியவைத்தவர் அவர். அதனால் அவரை இழிவு
செய்ய இவர்கள் கருவிக் கொண்டே இருப்பார்கள்.
அன்புடன்,
இராம.கி.
---------------------
என்பெயர் என்சொல்?
மொழியைப் பொறுத்தவரையில் நான் மறைமலையடிகளை முற்றும் அடியொற்றிச்
செல்பவனாயிருந்தும், தமிழ்ப் பேராசிரியர் பலரும் மொழியாராய்ச்சியின்மையானே என்
பெயரையும் வடசொல்லென ஐயுற்றும் வருகின்றனர். அவர் மயக்கறுப்பான் எழுந்ததிக்
கட்டுரை.
1.தேவன்
எக்காலத்தும் மாந்தர் தெய்வ வழிபாடாற்றுதற்குக் காரணம் நன்மை செய்யும்
பொருளிடத்து அன்பும், தீமைசெய்யும் பொருளிடத்து அச்சமுமே. எல்லாம் வல்ல இறைவன்
வழிபாட்டில் இவ்விரு மெய்ப்பாடுகளும் கலந்துள்ளன. இறைவன் இறுதியில் பேரின்பந்
தருவான் என்பது நன்மையும், எரிநிரயத்தில் இடுவான் என்பது தீமையும், பற்றிய
உணர்ச்சிகளாகும்.
வெளியொழிந்த நாற்பூதங்களுள் ஒவ்வொன்றும் நன்மையும் தீமையுஞ் செய்யுமேனும்,
அவற்றுள் தீயே அவற்றைச் சிறப்பாக அல்லது தெளிவாகச் செய்வதாம். அதனால், முதற்கால
மாந்தர் அதனையே சிறந்த தெய்வமாகப் போற்றிவந்தனர். அதுபற்றித் தெய்வப்
பொதுப்பெயரும், முழுமுதற் கடவுட்பெயரும் தீப்பெயரினின்று தோன்றியுள்ளன.
கட்புலனைப் பயன்படுவிக்கும் ஒளியும், சமையற்கு வேண்டும் சூடும், குளிரைப்
போக்கும் வெம்மையும், உணவுப் பயிருக்கு வேண்டும் வெப்பமும், தீயினால் உண்டாகும்
நன்மைகளாம். தீண்டினாற் சுடுவதும், அகப்படின் எரித்துக் கொல்வதும், அதனால்
விளையும் தீமைகளாம். நாற்பூதங்களுள்ளும், சிற்றளவிலிருப்பினும் தீமைசெய்வது
தீயேயாதலின், தீமைப்பெயர் அதனின்றே தோன்றிற்று.
மரத்தொடு மரமும், கல்லொடு கல்லும், உரசும் போதும், நெரியும் போதும்,
நெருப்புண்டாவதைக் கண்ட முதற்கால மாந்தர், அவ்வகையிலேயே நெருப்புண்டாக்கக்
கற்றுக்கொண்டனர். அதனால் உரசல், நெரிசல், தேய்தல் முதலிய உராய்தற் கருத்துச்
சொற்களினின்று, தீயைக் குறிக்கும் பெயர்கள் தோன்றியுள்ளன.
உரசு, உராய், உராய்ஞ்சு, உரிஞ், உரிஞு, உரிஞ்சு, உரை, உரைசு, உரைஞ்சு, உரோசு,
உரோஞ்சு என்பன ஒருவேர்ப் பிறந்த ஒருபொருட் சொற்கள்.
உர்:
உர்>உரு. உருத்தல் = அழலுதல் “ஆகம் உருப்ப நூறி” (புறம் 25:10)
உரு>உரும்>உரும்பு = கொதிப்பு; “உரும்பில் கூற்றத் தன்ன” )பதிற்றுப். 26: 13)
உரு>உருமம் = வெப்பம், நண்பகல்
உரும காலம் = கோடை காலம்
உருமித்தல் = புழுங்குதல்
உரு>உருப்பம் = வெப்பம் “கன்மிசை உருப்பிறக் கனைதுளி சிதறென” (கலித்.16:7)
உருப்பு>உருப்பம் = வெப்பம் “ கனலும் ........... உருப்பமெழ”
(அரிச்.பு.விவா.104)
உரு>உருகு>உருக்கு>உருக்கம்
உருகுதல் = வெப்பத்தினால் இளகுதல், மனம் இளகுதல் (இரங்குதல்).
உருக்கு = உருகின இரும்பு (எஃகு)
உருக்காங்கல் = உருகிப்போன செங்கல்
உர்>உரி = நெருப்பு (கன்னடம், துளுவம்)
உரி என்னும் வடிவம் தமிழில் வழக்கற்று மறைந்தது.
உரி>எரி = நெருப்பு
நெருப்பைக் குறிக்கும் ‘உரு’ வேர் தமிழ்ச்சொற்கள் பிறமொழிகளிலும் சென்று
வழங்குகின்றன.
இலத்தீன் (Latin) - உர் (to burn)
அர்மீனியம் (Armenian) ஓர் = நெருப்பு
ஆபுக்கானியம் (Afghan) - ஓர், வுர் = நெருப்பு
எபிரேயம் (Hebrew) ஊர் = நெருப்பு, ஓர் = ஒளி
நெர்:
நெர்>நெரி>நெரிதல் = நெருங்குதல், உரசுதல், நொறுங்குதல்
நெர்>நெரு>நெருப்பு. நெருப்பு>நிப்பு (தெலுங்கு)
அரபியம் Arabic - நார் = நெருப்பு, நூர் = ஒளி
தேய்:
தேய்தல் = உரசுதல்
தேய்>தீய்>தீ = நெருப்பு, விளக்கு, நரகம்
தீ>தீமை = தீயின் தன்மை,
தீ>தீய = கொடிய,
தீய்தல் = எரிந்து போதல், கருகுதல், பற்றிப் போதல்
தீதல் = தீய்தல், ஏகாரம் ஈகாரமாய்த் திரிதலை தேன்>தேம்>தீம் என்னும் திரிபினும்
கண்ண்டுகொள்க.
தேய்>தேயு (சமற்கிருதம்) = நெருப்பு
இத் ‘தேய்’ அடியினின்றே தெய்வப் பெயர் தோன்றிற்று.
தேய்>தேய்வு>தேவு>தேவன்
தேய்வு>தெய்வு>தெய்வம்
தேவு>தே = தெய்வம், தலைவன் “பால்வரை தெய்வம் வினையே பூதம்” (தொல். 541);
“தெய்வம் உணாவே மாமரம் புட்பறை” (தொல்.964); “தெய்வம் அஞ்சல் புரையறந் தெளிதல்”
(தொல்.1218); “வழிபடும் தெய்வம் நிற்புறங் காப்ப” (தொல்.1367).
யகரவொற்றுள்ள தெய்வப் பெயரே பெரும்பான்மையாகவும், “தேவர்ப் பராஅய முன்னிலைக்
கண்ணே” (தொல்.1395) என வகரவொற்றுள்ள பின்னை வடிவு அருகியும், இதுபோதுள்ள
தமிழ்நூல்களுள் முந்தியதாகிய தொல்காப்பியத்துள் வருதல் காண்க.
சமற்கிருதம் - deva, daiva
இலத்தீன் - dues = god
கிரேக்கம் (Greek) - theos = god
’தேவ’ என்னும் சொற்குச் சமற்கிருத்திற் காட்டப்படும் div (to be bright, di,
dip (to shine) என்னும் வேர்ச்சொற்கள் முதற் பொருளன்றி வழிப்பொருளே
கொண்டுள்ளமையின் பொருந்தாமை
காண்க.
பின்வரும் சித்திய (Scythian) ஆரியச் சொற்கள், ‘தீ’ (நெருப்பு) என்னும்
தமிழ்ச்சொற்கு இனமானவை எனக் கால்டுவெல் கண்காணியார் காட்டுவார்.
சித்தியம்:
சாமாயிதே (samoiede) - tu, tui, ti, ty
மஞ்சு (Manchu) - tua
அங்கேரியம் (Hungarian) - tuz
ஓசுத்தியக்கு (Ostiak) - tut
துங்கசு (Tungus) - togo
இலசுக்கியம் (Lesghian) - tze, zi, zie
ஆரியம்:
கேலிக்கம் (Gaelic) - teire
வேலிசு (Welsh) - tan
பாரசீகம் (Persian) - tigh
நேயம்:
நள்:
நள்>நண்>நண்பு>நட்பு; நள்ளுதல் = அடைதல், பொருந்துதல், நட்புக் கொள்ளுதல்,
செறிதல்
நள்ளார் = பகைவர்
நள்ளி = உறவு (சூடா.)
நள்ளிருள் = செறிந்தவிருள் (திருக்கோ. 156. சிலப். 15:105)
நள்ளுநர் = நண்பர் (திவா.)
நள்>நளி. நளிதல் = செறிதல்
நள்>நெள்>நெய் = ஒட்டும் நீர்ப்பொருள், (oil, ghee), கருப்புக்கட்டிச் சாந்து
நெய்தல் = இணைத்தல், நூலை இணைத்து ஆடையாகச் செய்தல்
நெய் = குருதி; நெய்த்தோ(நெய்த்துவர்?) = குருதி
அகரம் எகரமாதலை, பரு>பெரு, சத்தான்>செத்தான் என்னும் திரிபுகளிற் காண்க.
ளகரமெய்யீறு யகர மெய்யீறாவதை, கொள்>கொ, தொள்>தொய், பொள்>பொய் முதலிய
திரிபுகளிற் காண்க.
நெய்>(நெய்ஞ்சு)>நெஞ்சு>நெஞ்சம் = விலாஎலும்புகள் இணைக்கப்ப்பட்ட இடம் அல்லது
அன்பிற்கிடமாகக் கருதப்படும் நெஞ்சாங்குலை (Heart) உள்ள இடம்.
நெய்>நே>நேயம் = அன்பு
ஈரம், பசை முதலிய சொற்கள் ஒட்டும் பொருளையும், அன்மையும் குறித்தல் காண்க.
அன்பு இருவரை அல்லது பலரை இணைப்பது.
நேய்>நே = அன்பு. நேயம்>நேசம்
ய>ச. ஒ.நோ. ந்யவு>நெசவு
நேசம்>நேசி. நேசித்தல் = அன்பு கடாத்தல், விரும்புதல் “நேசித்து ரசவாத வித்தைக்
கலைந்திடுவர்” (தாயுமானவர்)
நேயம்>நேயன். நேசம்>நேசன்
நேயம் என்ற தென்சொல் வடநாட்டுத் திரவிடத்தில் வழங்கி, பின்னர்
பிராகிருத்தத்திலும் தொடர்ந்து, இறுதியில் சமற்கிருதத்திற் புகுந்து ‘ஸ்நேஹ’
என்று வழங்குகிறது. இவ்வரலாற்றுமுறை அறியாதோர், பேரன் பாட்டனைப் பெற்றான்
என்பதுபோல், ஸ்நேஹ (சமற்) >நேயம் (ப்ராகிருதம்)>நேயம் (தமிழ்) எனத் தலைகீழாகத்
திரிப்பர். இங்ஙனமே சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகராதியிலும், உண்மைக்கு
மாறாகக் காட்டப்பட்டுள்ளது. பகுத்தறிவும் நடுவுநிலையும் உள்ள அறிஞர் உண்மை
கண்டுகொள்வாராக. நேயம் வடசொல்லாயின் ‘நெய்’ என்பதும், அதன்
அடிவேரான ‘நள்’ என்பதும் வடசொல்லாதல் வேண்டும். அங்ஙனமாகாமை வெள்ளிடைமலைபோல்
தெள்ளிதே.
வடமொழி ஆயிரக்கணக்கான தென்சொற்களைக் கடன் கொண்டிருப்பதால், மொழிநூன் முறைப்படி
நடுவுநிலையாய் ஆராய்ந்து உண்மை காணவேண்டுமேயன்றி, வடமொழி தேவமொழியாதலால்
பிறமொழியினின்று கடன்ன்கொள்ளாதென்னும் கருநாட்டுக் குருட்டுக் கொள்ஐயை
அடிப்படையாகக் கொண்டு, தூய தென்சொற்களையும் வடசொல்லென வலிப்பது, அறிவாராய்ச்சி
மிக்க இக்காலத்திற்கு ஏற்காதென, வடமொழிவாணர் திடமாக அறிவாராக.
.ஆராய்ச்சியில்லாத தமிழ்ப் பேராசிரியரும், வடமொழியிலுள்ள சொல்லெல்லாம்
வடசொல்லெனக்
கருதும் பேதைமை விட்டுய்வாராக. மயிர் என்னும் தென்சொல் ‘ச்மச்ரு (smrsru) எனச்
சகரம் முதற்கொண்டு வழங்குவது போன்றே, நேயம் என்னும் தென்சொல்லும் ‘ச்நேஹ’
என்னும் ஸகரம் முற்கொண்டு சமற்கிருதத்தில் வழங்குகின்றதென அறிக.
- “தென்மொழி” நவம்பர் 1959.
-----------------------------
ஒன்று: “தெய்வம்” என்னும் கட்டுரை. இது தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டுள்ள
தொகுதியில், “தலைமைத் தமிழ்” என்ற பொத்தகத்தில் 14 ஆம் கட்டுரையாக உள்ளது.
இரண்டாவது: ”நுல் (பொருந்தற் கருத்து வேர்)” என்னும் கட்டுரை. இது தமிழ்மண்
பதிப்பகம் வெளியிட்டுள்ள தொகுதியில் “வேர்ச்சொற் கட்டுரைகள் - 3” என்னும்
பொத்தகத்தில் 6-வது கட்டுரையாக இருக்கிறது. இதனுள் நள், நயம், நசை, நெருக்கு,
நேர், நெய், நேயம், நேசம், நெஞ்சு, நெய்தல் போன்றவை பேசப்படுகின்றன.
இரண்டு கட்டுரைகளும் சேர்த்து 10-12 பக்கங்கள் வரும். பொத்தகங்களை வாங்கியோ,
நூலகம் சார்ந்தோ, படித்துப் பாருங்கள்.
நடுநிலையர் இதைப் படிக்க வேண்டும். முன்கருத்தை வைத்துக் கொண்டு ”காஞ்சி
முனிவர் சொன்னார்” என்று சமயக் கருத்தைக் கொண்டுவருவோர் என்ன சொன்னாலும்
ஏற்கமாட்டார்.
அன்புடன்,
இராம.கி.
----- Original Message -----
From: "iraamaki" <p...@giasmd01.vsnl.net.in>
To: <tamil...@googlegroups.com>
Sent: Friday, November 06, 2009 11:22 AM
Subject: [தமிழ் மன்றம்] Re: தேவநேயப் பாவாணர்
> அன்பிற்குரிய கணேசன்,
>
நெய், நெயம்/நயம், அதன் நீட்சி நேயம் பற்றிய
பாவாணர் கட்டுரையை இராமகி ஐயா
தட்டெழுதி அனுப்பியுள்ளார். இந்த அவையில்
பகிர்ந்துகொள்கிறேன்.
திராவிட வேர்ச்சொல் அகராதியைப் பாருங்கள்.
நேயம் (நெய்- ) என நிறுவப்பட்டுள்ளது.
திரு. மு. மணிவண்ணன் விரிவாக எழுதியுள்ளார்:
http://groups.google.com/group/tamilmanram/msg/7f761a2559e29df9
பாவாணர் கட்டுரையும் (1959. 50 ஆண்டுகள் ஆகிவிட்டன),
மணிவண்ணன் மடலும் உங்கள் ஆராய்ச்சிகளுக்குப்
பிரயோஜனப்படலாம்.
மேலும் ஒன்று.
வேதப்பிரகாஷ் ஐயாவின் நீண்ட மடல்களில்
விட்சல் பெயர் வந்ததால் ஒன்றை மேலோட்டமாக
பார்த்தேன். விட்சல், பாக்கிஸ்தான் முஷாரஃப்,
படங்கள் உண்மையா? இன்னும் கணினி கிராபிக்ஸ்
மேம்படுத்த இடம் இருப்பதாகத் தோன்றுகிறது.
வண்பாக்கம், வினோத், உங்களைப் போன்றோரின்
அப்படங்கள் பற்றிய கருத்தறிய ஆவல்.
அன்புடன்,
நா. கணேசன்
நீங்கள் என் மடலை மின்தமிழில் கொண்டுபோய்ப் புறவரிக்க, அதற்கு விஜயராகவனின்
முட்டாள்தனமான
http://groups.google.com/group/mintamil/msg/f55895e9013f7041
மறுமொழியைப் படித்தேன். பேசாமல் விட்டுவிடலாம் என்று முதலிற் தோன்றியது.
மீண்டும் மீண்டும் இந்த இழுபறிக்குள் விழுந்து கொண்டே இருக்கிறோமே என்றும்
தோன்றியது. அதேபொழுது, சுற்றியிருக்கிறவர்களுக்குத் தெரிவதற்காவது மறுமொழி
சொல்ல வேண்டும். இல்லையெனில், இந்த முட்டாள் அரைகுறையாய்ச் சொல்லுவதைப்
பார்த்து, தன்னை மறந்து குழிக்குள் விழுபவர்களும் இருப்பார்களே என்றும்
தோன்றியது.
[முட்டாள் என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு என்னை மன்னியுங்கள். விஜயராகவன்
மடலைப் படித்தவுடன் பரமார்த்த குரு கதையில் வரும், மட்டி.,மடையன், முட்டாள்,
மண்டு என்று நாலு மாணாக்கர்களின் நினைவுதான் எனக்கு நினைவிற்கு வந்தது.
இப்படியான பெயர்களைத் தவிர அவரைக் குறிக்க வேறு சொற்கள் எனக்குச் சட்டென்று
தோன்றவில்லை. Because he lacks so much intellectual honesty.
நம் எதிரே ஒரு எதிராளி இருக்கிறார். அவருடைய கருத்தை நாம் ஏற்கிறோம்; ஏற்காமற்
போகிறோம். அது வேறுகதை. ஆனால், ”எதிராளியும் விவரம் அறிந்தவன்” என்ற
நாகரிகத்தில் அவருக்கு உரிய மரியாதையைக் கொடுக்க வேண்டாமோ? ”பாவாணரும் ஏதோ ஒரு
நோக்கில் தனக்குச் சரியென்று தென்பட்டதை 50 ஆண்டுகளுக்கு முன்னால்
சொல்லியிருக்கிறார்” என்ற இந்த முட்டாளுக்குத் தெரியவில்லையே? ஓர் அறிஞர்
வட்டத்தில் நம் எதிராளி ஒரு கருத்தை வைக்கிறார் என்றால், அவருக்கு அடிப்படையில்
ஒரு கண்ணியம் இருப்பதாய் நாம் கொள்ள வேண்டாமோ? அதை விடுத்து எதையுமே
ஒழுங்காய்ப் பாராமல், மேம்போக்கில் இணையத்தில் புல் மேய்ந்துவிட்டு, தான்
தோன்றித் தனமாய்த் தேடிப் பார்த்து, சரியாய் எதுவும் கிடைக்காத நிலையில்,
தன்னுடைய தேடும் முறையைச் சரி பார்க்காமல், ”பாவாணர் புருடா விடுகிறார்” என்று
முழுப்பூசனியைச் சோற்றில் மறைக்கும் இந்த ஆளைப் பார்த்தால் என்ன சொல்லுவது?
பாவாணரைப் போன்ற எதிராளியைப் புழுவாய் நினைக்கும் இவரிடம் அடிப்படை நாகரிகம்,
பண்பாடு என்று எதுவுமே இல்லை என்றுதானே பொருள்? எதிராளிக்குரிய மதிப்பைக்
கொடுத்து, ”அவர் முடிவு வேறாய் இருக்கலாம்; ஆனால் கொடுத்திருக்கும் தரவுகளில்
பொய் சொல்லமாட்டார்; கற்பனை செய்யமாட்டார்; உள்ளதை உள்ளபடியே சொல்லுவார்” என்ற
அடிப்படை அறிவு நேர்மையை ஏற்றுக் கொண்டு, அதற்கிணங்கப் பேசவேண்டாமா? பாவாணர்
குறிப்பிட்ட எடுகோள்கள் (references) எங்கிருக்கின்றன என்று தேடுவதற்கு இந்த
மடையருக்குத் தெரியவில்லையென்றால், ஒழுங்காக, முறையாக அவைக்கு வந்து, ”இது
எங்கே இருக்கிறது? எனக்குக் கிடைக்கவில்லையே? யாராவது சொல்ல முடியுமா?” என்று
கேட்க வேண்டாமோ? அதைவிடுத்து, முன்முடிவில் வெறும் குழாயடிச் சண்டையாய்,
தேர்ந்தெடுத்த வசைச்சொற்களைப் பெய்து பாவணரை வைகிறவருக்கு, என்ன மரியாதை
வேண்டியிருக்கிறது? முட்டாள் என்றுதான் சொல்ல முடியும்.
இவரைப் போன்றவர் கூற்றைத்தான் வடிகட்டிய மேட்டிமைத்தனம் என்று பெரியார்
சொன்னார். அப்புறம், விஜயராகவனின் மடலையும் படித்துக் கொண்டு அவருடைய
நாகரிகமற்றத் தன்மையைக் கண்டிக்காமல் கூட இருந்து வேடிக்கை பார்த்துக்
குதுகலிப்பவரின் மேட்டிமைத்தனத்தை என்ன சொல்வது? Is it not necessary to give
respect and take respect? Should he not have an argumental decency? A bit of
intellectual propreity? உண்மையிலேயே ”எவர் புருடா விடுகிறார்?” என்பது கொஞ்சம்
ஆழப் பார்த்தால் புரிந்து போகும். திரு. விஜயராகவனின் மடலைப் படித்தால், ஒரு
முட்டாள் அறிஞர் அவையேறிய காட்சிதான் என் நினைவுக்கு வருகிறது.]
சரி முட்டாளும் கடைத்தேற வேண்டுமே? என்ன செய்வது? அவர் கூற்றுக்களைப்
பார்ப்போம்.
மடலின் முதலில் அவர் பாவாணர் பற்றிக் கூறியிருக்கும் தன்மயமான கருத்துக்களை
ஒதுக்குவோம். அது விஜயராகவனின் சொந்தக் கருத்து. அதில் நாம் சொல்ல என்ன
இருக்கிறது? அதே போல விக்கிபீடியாவில் இருந்து ”தேவா” என்பது பற்றிக் கொடுத்த
விளக்கம் எந்த வகையிலும் பாவாணருக்கு மாறுபடவில்லை. விக்கிப் பீடியாவில்
கொடுத்துள்ளது ஒரு குறையான விளக்கம் என்று மட்டுமே சொல்லமுடியும். PIE (not
synchronic Sanskrit) vrddhi derivative from the root *diw meaning "to
shine", especially as the daylit sky. என்று சொன்னது ஒளி பற்றித்தான். பாவாணர்
விளக்கங்களிலும் ஒளி பற்றி வருகிறது. பாவாணர் இன்னும் ஆழமாய் விளக்குகிறார்.
அடுத்து “தேவநேயன் 150 ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான மொழி வல்லுனர்கள் அலசிய
சொல்லை கண்டுக்கொள்ளாமல் இருப்பது, ஆராய்ச்சி முறை என எப்படி சொல்வது?” என்று
விஜயராகவன் கேட்டிருக்கிறார். பாவாணர் கட்டுரை 1959 இல் எழுதப்பட்டது. அந்தக்
காலத்தில் அவருக்குக் கிடைத்த எல்லாத் தரவுகளையும் அவர் ஆய்ந்து
பார்த்திருக்கிறார் என்பதே உண்மை. இந்தக் காலத்தில் இக்கட்டுரை
எழுதியிருந்தால், இன்னும் பல சான்றுகளைக் கொண்டுவந்து காட்டியிருப்பார்.
இந்தக் கால நடைமுறைகளுக்கேற்பக் கட்டுரை விரிவான எடுகோள்களைக் கொண்டிருக்கும்.
இனி விஜயராகவன் முட்டாள் தனமாய்க் கிண்டல் அடித்திருக்கும் தரவுகளுக்கு
வருவோம். கொஞ்சமாவது பாவாணரின் கட்டுரையை ஊன்றிப் படித்திருந்தால், பாவாணர்
அந்தத் தரவுகளை எங்கு பெற்றிருந்தார் என்பது தெள்ளென விஜயராகவனுக்கு
விளங்கியிருக்கும். விஜயராகவன் தான் எதையும் ஒழுங்காக ஆழப் படிப்பதில்லையே?
அந்தத் தரவுகளுக்குச் சொந்தக்காரர் இராபர்ட் கால்டுவெல் கண்காணியார் தான்.
விஜயராகவனின் கிண்டல்கள் கால்டுவெல்லையே குறிக்க வேண்டும்; பாவாணரை அல்ல.
முதலில் இலத்தீனில் வரும் உர் = to burn.
இது பற்றிக் கால்டுவெல்லின் “திராவிட மொழிகள் ஒப்பிலக்கணம்” (நான் ஆங்கில
நூலில் இருந்து இங்கு எடுத்துத் தராமல், தமிழ் மொழிபெயர்ப்பில் இருந்து
எடுத்துத் தருகிறேன். ஆங்கிலம் வேண்டுமென்றால் நான் தேடிப் போகவேண்டும். கைவசம்
தமிழ் மொழிபெயர்ப்புக் கிடைத்தது. எனவே கொடுக்கிறேன். என் கைவசம் உள்ள
மொழிபெயர்ப்பு திருமகள் நிலையம் 1959 இல் வெளியிட்டது. பின்னால் 1992 வரை 4
பதிப்புக்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழ் மொழிபெயர்ப்புச் செய்தவர் புலவர் கா.
கோவிந்தன், க.ரத்னம், தமிழ்ப்பேராசிரியர், அரசினர் கலைக்கல்லூரி, முசிறி.)
மேற்கூறிய மொழிபெயர்ப்பு நூலின் பக்கம் 878:
11. ‘உரி’; கன்னட, துளூ மொழிகளில் அரித்தல் எனும் பொருள் உணர்த்தும்; தமிழில்
‘எரி’ என்றாகும். ‘உரொ, [=எரித்தல்] என்ற இலத்தீன் சொல்லையும், ‘ஓர் [=தீ] என்ற
அர்மீனியச் சொல்லையும் காண்க. இதனோடு ஒருமைப்பாடுள்ள வடிவங்கள் செமிடிக்
மொழிகளிலும் உள; ஏப்ரு மொழியில் ‘ஊர்’ தீயையும், ‘ஓர்’ ஒளியையும் உணர்த்தும்.
இந்தச் சான்றை அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டுவதில்லை. நாமே இலத்தீன்
அகரமுதலிகளில் தேடிப் பார்க்கலாம். ஆனால் விஜயராகவன் போல wiki answer என்னும்
நுழைதளங்களை வைத்து வெத்துவேட்டுச் சவடால் அடிக்கக் கூடாது. பாவாணருக்கு
எதிராய்ச் சூளுரைப்பவர்கள் அதற்கும் கீழே ஆழம் போகவேண்டும். நுழைதளங்கள் வெறும்
நுழைவுக்கு மட்டுமே உள்ளவை. http://www.etymonline.com/ என்ற தளத்திற்குப்
போய், மேலே search என்று போட்டிருக்கும் இடத்தில் burn என்றெழுதி search mode
யை அழுத்தினால், இரண்டு பக்கங்களுக்கு பல ஆங்கிலச் சொற்களைக் கொட்டும். அதில்
bust, urn என்ற சொற்களைப் பார்த்தால், கீழே உள்ள விளக்கங்கள் கிட்டும்.
bust:
1691, "sculpture of upper torso and head," from Fr. buste, from It. busto
"upper body," from L. bustum "funeral monument, tomb," originally "funeral
pyre," perhaps shortened from ambustum, neut. of
ambustus "burned around," pp. of amburere "burn around, scorch," from ambi-
"around" + urere "to burn." Sense development in It. probably from Etruscan
custom of keeping dead person's ashes in urn shaped like the person when
alive. Meaning "bosom" is 1819.
urn
late 14c., "vase used to preserve the ashes of the dead," from L. urna "a
jar, vessel," probably from earlier *urc-na, akin to urceus "pitcher,
jug,earch mode " and from the same source as Gk. hyrke "earthen vessel." But
another theory connects it to L. urere "to burn" (cf. bust (1)).
"ஆகா, L.urere = to burn என்ற வினைச்சொல் கிடைத்தது” இதற்குப் பின்னால்,
இலத்தீன் - ஆங்கில அகரமுதலிகளைத் தேடிப் போய்ப் பார்க்கவேண்டும். பார்த்தால்,
Uro, ussi, ustum v.t. to burn, destroy by fire, scorch [இங்கே U என்பது
நெடில், குறில் அல்ல.] என்பது கிட்டும்.
முட்டாள் தனமாக incendere, ignis -யை மட்டும் வைத்துக் கொண்டு இலத்தீன்
இயங்கியது என்று சொல்லக் கூடாது. இலத்தீனும் ஒரு செவ்வியல் மொழியே! அதிலும்
தீயைக் குறிக்கப் பல சொற்கள் இருந்தன. இவரால் கண்டுபிடிக்க முடியவில்லையென்றால்
அந்தக் கையாலாகாத தனத்திற்கு, இலத்தினையோ, கால்டுவெல்லையோ, பாவாணரையோ குறை
சொல்லக் கூடாது.
[நான் urere ஒட்டிய மற்ற சொற்களைச் சொன்னால், இந்தக் கட்டுரை நீண்டுவிடும்
என்பதால் தவிர்க்கிறேன்.]
அடுத்தது ஹீப்ரு மொழியில் வரும் சொல். இதுவும் மேலே குறிப்பிட்ட கால்டுவெல்
நூலின் தமிழ் மொழிபெயர்ப்பில் வருகிறது.
பக்கம் 905:
8. உரி (=எரி); கன்னடச்சொல்; தமிழில் ‘எரி’. ஹீப்ரு மொழியில் ‘ஊர்’
(=நெருப்பு); ‘ஓர்’ (=ஒளி)
இந்தச் சொல்லையும் அப்படியே எடுத்துக் கொள்ளவேண்டிய தேவையில்லை. இருக்கவே
இருக்கிறார் கூகுள் ஆண்டவர்.
http://www.ancient-hebrew.org/35_dictionary_01.html என்ற வலைத்தளத்திற்குப்
போய், அதில் இடப்பக்கம் இருக்கும் வரிசையில் vocabulary>dictionary என்பதை
அழுத்தி உரிய பக்கத்திற் போய், ஹீப்ரு மொழியில் முதலெழுத்தான அல் என்பதில்
வரும் சொற்களைப் படித்துக் கொண்டே வந்தால்,
Modern Ancient Translit Definition AHLB# Strong's#
or light (v)
or light (n)
என்பது தெரியும். அதாவது or என்ற சொல் ஒளியைக் குறிக்கும் என்பது புரியும். இது
போக மேலும் தேடினால், கீழே உள்ள
Burn (V) בער ba-ar 2028 (V) 1197
Lamp נֵר neyr 1319-A (N) 5216
Light אוֹר or 1020-J (N) 216
Light (V) אור or 1020-J (V) 215
என்ற 4 செய்திகளும் கிட்டும். ஆக இதிலும் கால்டுவெல் மிகச் சரியாகவே
இருந்திருக்கிறார். உண்மையில் இந்தத் தரவுகளைத் திரட்டுவதில் பாவாணர் ஒன்றுமே
செய்யவில்லை. அவர் கால்டுவெல் கூறியதை அப்படியே இதில் ஏற்றுக்
கொண்டிருக்கிறார். அவ்வளவுதான். இது உளறல், புரட்டு என்று விஜயராகவன் சொல்வார்
என்றால், அவர் கால்டுவெல்லைத் திட்டவேண்டும். அதைவிடுத்துப் பாவாணரைத் திட்டக்
கூடாது. பாவாணர் கால்டுவெல்லின் முடிவுகளில் வேறுபட்டார். ஆனால் கால்டுவெல்
மூலம் தனக்குக் கிடத்த தரவுகளை விஜயராகவனைப் போல் பாவாணர் நேர்மையில்லாமல் குறை
சொல்லவில்லை.
இன்னும் சில தொடர்பான செய்திகள்.
Pronunciation: "NeR"
Picture: Seed beginning
Culture: This word literally means to "bring forth light" as well as a
"freshly plowed field" because plowing is seen as "the bringing forth of
light in the soil", to the ancient Hebrew. In order for a seed to
grow/begin, there must be water in the soil. When the ground is plowed the
moist soil from underneath, surfaces and shines from the water in the soil
which is a sign that the life giving water is present.
Meaning: The beginning of the germination of the seed by water in the soil.
Light (אור or, Strong's #216): Probably the most quoted passage in the Bible
is Let there be Light. In Hebraic thought, light is associated with order
(notice the Hebrew word or in the English word order). Genesis 1:3 can be
interpreted as “Let there be order” which poetically corresponds with verse
2 which states that the creation was in “chaos.”
Lamp (נר ner, Strong's #5216): A ner is an object that gives off light. A
common style of ancient lamps were made from clay, had a reservoir for oil
andக்கம்a lip or hole on the edge for the wick. The wick
absorbed the oil and the gas coming off the wick is lit giving light. The
menorah [str:4501] of the tabernacle is a ner, in fact, notice that the word
NeR is found within the word meNoRah.
Pronunciation: "NoWR"
Meaning: This root has the more specific meaning "to give off light".
Comments: This child root is derived from the parent root "NeR," formed by
placing the vowel "oW" in the middle of the
Pronunciation: "Ta-NuWR"
Meaning: A heat giver, the fire of an oven that gives off light.
Comments: This word is formed by adding the prefix "Ta" to the root.
Reference: Genesis 15:17
ஆக விவிலியத்தின் மிகச் சிறப்பான வாசகம் “Let there be light" என்பதற்குள்
இந்த ”ஒர்” என்னும் ஒளி இருக்கிறது.
அப்புறம் சித்தியம் பற்றி ஏதோ விஜயராகவன் சொல்லியிருந்தார். அந்த வகைப்பாடு
கால்டுவெல் காலத்தில் இருந்தது. இது பற்றிய பழைய நூல்களைப் படித்திருந்தால்
அவருக்குக் கொஞ்சம் விளங்கியிருக்கும். அவர் தான் wiki answer வைத்து ஆராய்ச்சி
செய்பவர் ஆயிற்றே? புல்நுனி மேய்ந்தால் இப்படித்தான் இருக்கும். ஒன்றும்
விளங்காது. முன்னால் சொன்ன பொத்தகத்தில் கீழே கொடுக்கப் பட்டிருப்பது:
பக்கம் 924
50. ‘தீ’ தீயைக் குறிக்கும் பொதுவான தமிழ்ச்சொல்; ‘நெருப்பு’, தெலுங்கில்
‘நிப்பு’, ‘நிப்புக’. ஆனால், இலக்கியச்சொல் ‘தீ’ என்பதே இச்சொல்லோடு சித்தியச்
சொற்கள் பெற்றிருக்கும் ஒருமைப்பாடு மிகத் தெளிவுடையதாம். உ-ம். ‘து’, ‘துஇ’, ’தி’,
‘தியி’ (சமோல்டி); ‘துஅ’ (மஞ்சு); ‘தூஸ்’ (அங்கேரி); ‘தூத்’ (ஒஸ்தியாக்); ‘தொகொ’
(துங்கேஷ்); ‘துலி’ (பின்னிஷ்); ‘தல்’ (இலாப்பியர்); ‘துல்’ (மங்கோல்), ‘தேஜஸ்
(=பேரொளி வீசு) என்ற சமஸ்கிருதச் சொற்களையும் காண்க.
இந்தச் சொற்களையும் இணையத்திலோ, நூலகத்திலோ தேடி உறுதி செய்ய முடியும். ஆனால்
எனக்கு ஒரு வாரம் வீணாய்ப் போய்விடும். இவருடைய முட்டாள் தனத்தைச்
சரிசெய்வதற்கு நான் 7 நாட்களைக் கழிப்பதாய் இல்லை. எனவே அவரே இதைச் செய்து
கொள்வதாகுக! அவரைப் போன்றவர்கள் கேள்வி மட்டுமே கேட்டு மற்றவர்களை விடை தேடி
ஓடவைப்பதே வழக்கமாய்ப் போய்விட்டது. [வெல்ஷ் பற்றிய செய்திகளையும் அவரே
நுனிப்புல் மேயாமல் ஆழ முக்குளித்துத் தேடட்டும்.]
விஜயராகவனுடைய முட்டாள்தனமான முன்முடிவுகளை நான் மறுத்துரைக்கவில்லை. அவருடைய
நேர்மையின்மையையும், நுனிப்புல் மேயும் முட்டாள்தனத்தையும் தான் குறிப்பிட்டுச்
சொல்லவேண்டியிருக்கிறது.
அன்புடன்,
இராம.கி.
விரிவான மடலுக்கு நன்றி.
அன்புடன்
நா. கணேசன்
> read more »...
----- Original Message -----From: வேந்தன் அரசுSent: Saturday, November 07, 2009 8:34 PMSubject: [தமிழ் மன்றம்] Re: தேவநேயப் பாவாணர்
மன்னிக்க வேண்டும்.
*மின் தமிழ்" என்ற குழு பிழைப்பிற்காகப் பெயரில் தமிழையும்
நெஞ்சில் பிறவற்றையும் வளர்க்க இணையத்தில் இருக்கிற
குழு.
ஈழத்தில் தமிழர்கள் கொல்லப் பட்டபோது அவர்கள் ஆர்ப்பரித்துக்
கொண்டாடினார்கள். அதனை நடத்துபவர்களும் அந்தக் கொண்டாட்டத்துக்கு
உடந்தையாக இருந்தார்கள். அதேபோல தமிழ் மொழி என்று வந்துவிட்டால்
கும்பலாக பழித்துப் பேசுவார்கள்.
அதனை நடத்துபவர்களாலேயே இது ஊக்கப் படுத்தப் படுகிறது.
அதில் பங்கு பெறும் கட்டுரைகள் கருத்துக்கள் பெரும்பாலும்
தமிழுக்கு எதிராகவே இருக்கும்.
அக்குழுவில் வரும் மின்னஞ்சல்களை பிற குழுக்களில் இடுவது
தமிழ் எதிர்ப்புகளுக்குத் தேவையற்ற விளம்பரம் கொடுப்பது போலாம்.
ஆகவே அதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
On Nov 3, 1:45 am, devoo <rde...@gmail.com> wrote:
> காஞ்சிப் பெரியவர் கைகொடுக்கிறார் -
>
> ஸமீபத்தில் 'மனித நேயம்' என்று ஒரு வார்த்தை உலாத்துகிறதாகப்
> பார்க்கிறேன். நல்ல வார்த்தைதான். காதுக்குக் கேட்கவும் நன்றாகத்தான்
> இருக்கிறது. ஆனாலும், 'மனிதாபிமானம்' என்று இத்தனை நாளாகச் சொல்லி
> வந்ததில் 'அபிமானம்' என்ற ஸம்ஸ்கிருத வார்த்தை இருப்பது பிடிக்காமல்தான்
> இப்படி மாற்றியிருக்கிறார்கள் என்பதைக் கவனிக்கும் போது பரிஹாஸமாகத்தான்
> இருக்கிறது! ஏனென்றால், 'நேயம்' என்பதும் ஸம்ஸ்கிருத 'ஸ்நேஹ'த்தின்
> திரிபுதான்!
>
> தெய்வத்தின் குரல் எழாம் பகுதி, வானதி பதிப்பகம்
On Nov 9, 6:30 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> தேவ்:
>
> > > செம்மை திரிந்து எப்படி ’ஸ’ ஆகிறது என்பதை விளக்கினால் நல்லது.
>
> சென்னை: ஸென்னை ...
>
இன்னொரு உ-ம்: நெல்-/நல்-
முனைவர் இராமகி 2001-ல் எழுதிய மடல்:
http://www.treasurehouseofagathiyar.net/08900/8947.htm
நெல் - மஞ்சள் நிறமானது. மங்கலப் பொருள்,
நெல்லைத் தூவுவது சங்க இலக்கிய திருமணங்களில்.
(அந்தத் தொல்வழக்கின் மாற்றமே அரிசியில் மஞ்சட் பூசி
அட்சதை ஆக்கித் தூவுவது).
நெல்- : நல்- (உ-ம்: நலம்.)
[இந்த நெல்-:நல்- என்னும் சொற்களும்,
நள்-:நாள்- (இருள், கருமை) > நல்- என்னும் சொல்லும்
ஒரோவழி மயங்கும். நளவன் > நலவன் > அலவன் “நண்டு”.
நாளகிரி - புத்தரைக் கொல்ல தேவதத்தன் ஏவிய
அஞ்சனமலை போன்ர யானை. பெருங்கதையிலும்
நாளகிரி யானை உண்டு. நள்ளமலை : நல்லமலை
- பிறக்கும் கரும்பெண்ணை (கிருஷ்ணபெண்ணா, கிருஷ்ணா
நதி). ]
நெகு- (நெகிழ்-) என்னும் வினையில் பிறக்கும்
சொல்: நகை (நகைத்தல் - இதழ் நெகிழும் போது நிகழ்வது).
பொன்னை நெகிழ்த்துச் செய்வதும் நெகை:நகை.
> (நெய்-) நெயம்:நயம், செல்:சலோ, தெல்-/தல்-, ஞெண்டு,:ஞண்டு (நண்டு)
>
> எதிர்த்திசையில்,
> ரெங்கநாதன், செயங்கொண்டார், ஜெயா, லெட்சுமணன், (schwa?)
>
> கணேசன்
On Nov 10, 6:26 am, Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
wrote:
> குறித்தோன் கூற்றம் தெரித்து மொழி கிளவி.
> (TC 55c)
>
> இ-ள். ஒரு பொருள் வேறுபாடு குறித்தோன், அஃது ஆற்றல் முதலாயினவற்றால் விளங்காதாயின்,
> அதனைத் தெரித்துச் சொல்லுக; எ-று.
>
> எ-டு.
> "அரிதாரச் சாந்தம் கலந்தது போல
> உரு கெழத் தோன்றி வருமே முருகுறழும்
> அன்பன் மலைப் பெய்த நீர்" எனவும்,
>
> "வாரு மதுச் சோலை வண்டுதிர்த்த நாண் மலரால்
> நாறும் அருவி நளி மலை நன்ன்நாட" எனவும் வரும்.
>
> "கலந்தது போல வருமே இலங்கருவி
> அன்பன் மலைப் பெய்த நீர்" எனவும்,
>
நீர் என்னுஞ் சொல்லும் வடமொழி என்கிறது
சேனாவரையம்.
நீர் போல நேயம் - இரண்டையும் தென்மொழியில்
திராவிட வேர்ச்சொல் ஆய்வுகள் காட்டுகின்றன
(உ-ம்: எமனோ/பர்ரோ அகரமுதலி).
கணேசன்
> "நாறும் அருவி நளி மலை நன்ன்நாட" எனவும்
>
> தெரித்து மொழியாதவழிக் குறித்தது விளங்காது வழுப்படுதலின்
> மரபுவழுக் காத்தவாறு.
>
> வடநூலார் இதனை *நேயம்* என்ப.
>
> [....]
>
> (சேனாவரையம், @TC 55c)
>
> devoo a écrit :
>
>
>
> > கமலம் அம்மா,
>
> > வடமொழி, தென்மொழிகளுக்கிடையேயுள்ள நெருங்கிய ஸ்நேஹம்
> > பிரிக்கவொண்ணாததாக உள்ளது. ஆழம் காண இயலாத அந்த ஸ்நேஹமே ஆராய்ச்சிக்குத்
> > தடையாகவும் உள்ளது.
> > நேயம் குன்றாமல் இதுவரை உரையாடி வந்துள்ளோம்.
> > நீங்களும் நேயத்தோடு வேர்களைப் பற்றிய விவரங்களைச் சொல்லுங்கள். பிறர்
> > கருத்துக்குக் காத்திருக்க வேண்டாம்.
>
> > தேவ்
>
> > On Nov 10, 4:06 pm, Kamala Devi <saahith...@yahoo.com.sg> wrote:
>
> >> அகட, அட, யாரிவர், நமது வேந்தன் சாரா?
> >> எங்கே போனார் இவ்வளவு காலம்?
> >> நல்வரவுக்கு மலர் தூவி வரவேற்கிறோம்
> >> இனி ஸ்நேஹம் எப்படி நேயம் ஆச்சு? பதில் சொல்ல ஆசையாக இருக்கிறது.
> >> ஆனாலும் நம்மிடையே தேவ் சார், மோஹன், ஆழ்வார், சுகுமாரன், திவாகர்,ஹரி, போன்றோர் உள்ளபோது,
> >> ஞான் --- அவர்களெல்லாம் பேசியபிறகு, ஞான் எண்டெ விளக்கத்தை அளிக்கிறேன்
> >> அதுவரை பொறுத்திருங்கள் வேந்தன் சார்
> >> கமலம்
>
> >> http://www.kamalagaanam.blogspot.com
>
> >> ----- Original Message ----
> >> From: வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com>
> >> To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
> >> Sent: Tuesday, 10 November 2009 10:12:30
> >> Subject: [MinTamil] Re: தேவநேயப் பாவாணர்
>
> >> ஸ்நேஹம் = நேயம் எப்படி ஆச்சுது
> >> ஹகரம் யகரம் ஆகும் சொற்கள் வேறு என்ன இருக்கு?
>
> >> New Email names for you!
> >> Get the Email name you've always wanted on the new @ymail and @rocketmail.
> >> Hurry before someone else does!http://mail.promotions.yahoo.com/newdomains/sg/- Hide quoted text -
>
> - Show quoted text -
கீழே உள்ள திரு. சான் லூய்க்கின் மடற் கூற்றிற்கும் ”நேயம் தமிழ்ச்சொல்லா?”
என்ற கேள்விக்கும் உள்ள தொடர்பு எனக்கு விளங்கவில்லை.
தொல்காப்பியம் சொல்லதிகாரம் கிளவியாக்கம் பகுதியில் “குறித்தோன் கூற்றம்
தெரிந்து மொழி கிளவி” என்ற 55 ஆம் நூற்பாவிற்குச் சேனாவரையர்
“ஒருபொருள் வேறுபாட்டைக் குறிக்கிறவன், அந்த வேறுபாட்டின் ஆற்றல் முதலியவற்றை
விளங்காது இருந்தால், அதனைத் தெரிந்து கொண்டு சொல்லவேண்டும்”
என்ற பொருளையே உரையாகத் தருகிறார். அதற்கு இரண்டு காட்டுகளையும் கொடுக்கிறார்.
பின் அந்த இரண்டு காட்டுக்கள் “தெரிந்து மொழியாத வழி அமைவதால் அவை மரபு வழுவை
காத்ததாய் அமையும்” என்று சொல்லி, இது போன்ற வழுவை “நேயம்” என்று வடநூலார்
சொல்லுவார்கள் என்று மேல்விளக்கம் தருகிறார். அதாவது இந்த வகை வழுவை “நேயம்”
என்ற வகைப்பாடாக (classification) வடநூலார் காட்டுவார் என்று சொல்லுகிறார்.
நேயத்தின் பேரில் இது போன்ற மொழிவழு ஏற்படுகிறது என்று பொருளே இங்கு வருகிறது.
"நேயம் என்பது வடசொல்” என்று இங்கு சொல்லுவதாக எனக்குப் படவில்லை.
பரிந்துரைத்தல் என்னும் வினையைக் குறிக்க “out of friendship" என்ற meta phrase
யை வகைப்பாட்டுப் பெயராக ஆங்கிலத்தில் பயன்படுத்துகிறார்கள் என்று வைத்துக்
கொள்ளுங்கள். நாம் அந்தப் புழக்கத்தை ”பரிந்துரைத்தல் என்னும் வினையை நட்புவழி
என்று சொல்லுவர்” என்று சொன்னால், நட்புவழி என்பது ஆங்கிலச்சொல் ஆகி விடுமா?
நேயத்தால் செய்யப்படும் வழு என்று சேனாவரையர் இங்கு புரியவைக்கிறார். அவ்வளவு
தான்.
[தவிர வேறொரு செய்தியையும் மனத்துள் கொள்ளவேண்டும். கொற்கைக்குக் அருகில்
(இன்றையத் தூத்துக்குடி மாவட்டம்) மாறோக்க நாட்டுச் சேனாவரையர் (13 ஆம்
நூற்றாண்டு) “ஒரு சொல்லாய வழி தமிழ்ச்சொல் வடபாடைக்கண் செல்லாமையானும்” (அதாவது
தமிழில் இருந்து ஒரு சொல் கூட வடமொழிக்குள் செல்லவில்லை) என்ற கொள்கையைக்
கொண்டவர். அதே பொழுது, வடசொல் எல்லாத் தேயத்திற்கும் பொது எனவே வடசொல்
தமிழுக்குள் புகலாம் என்ற கொள்கை கொண்டவர்.
[இவ்விரு கொள்கைகளையும் 401 ஆம் நூற்பாவிற்கு (வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே - என்ற நூற்பாவிற்கு) உரைசொல்லும் இடத்துச்
சொல்லுவார்.]
இப்படி ஒருபால் கோடும் சார்புக் கருத்துத் தவறென்று பல்வேறு அறிஞர்கள்
நிறுவித்து விட்டார்கள். எனவே சேனாவரையர் கூற்றைச் ஆழப் பார்த்துத்தான் எதையும்
கூறமுடியும். His views are partisan and already loaded on oneside.]
அன்புடன்,
இராம.கி.
.
----- Original Message -----