Re: [தமிழ் மன்றம்] Re: [அன்�(R)�ுடன்] Rose (= ரோசா) - ஏன் தம�(R)�ழில் ‘ரோஜா’ ஆகிறது?

200 views
Skip to first unread message

Mani Manivannan

unread,
Nov 2, 2009, 11:44:20 AM11/2/09
to tamil...@googlegroups.com
 
அசை, ஆசை, இசை, ஈசல், ஊசி, ஏசு, ஐசரி, ஓசை, கசை, காசு, கூசி, கொசு, கோசர், தசை, தாசி, திசை, தூசு,  பசு, பசை,  பசுமை, பாசி, பூசு, பேசு, பொசுக்கு, நசுக்கு, நேசம், மாசு, மிசை, மீசை, மூசு, மேசை, மோசம், வசை, விசை, வீசை, வேசி...
 
இவற்றில் எல்லாம் ச-கரம் மெலிந்து ஸ-கரம் ஆக ஒலிக்கும் என்பது தமிழ் பயின்றவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
 
கணேசன் என்ற பெயரை கணேச்சன் என்று தமிழ் தெரியாதவர்கள்தாம் பலுக்குவர்.
 
தூங்குபவர்களை எழுப்பலாம்.  தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்புவது கடினம்.
 
-மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு

 
On 11/2/09, S. Jayabarathan <jaya...@tnt21.com> wrote:
நண்பர் கணேஸன்,
 
'Ganesan'   என்பதை நான்  'கணேஸன்' என்று ஆங்கில உச்சரிப்புப்படி எழுத  விரும்புகிறேன்.
 
நீங்கள் 'கணேசன்' என்று எழுத விரும்பினால் ஆங்கிலத்தில் 'Ganechan'   என்றுதான் குறிப்பிட வேண்டும்.
 
 
சி. ஜெயபாரதன்.


 


அன்புடன் புகாரி

unread,
Nov 2, 2009, 11:56:02 AM11/2/09
to tamil...@googlegroups.com
கணேசன் என்ற பெயரை கணேச்சன் என்று தமிழ் தெரியாதவர்கள்தாம் பலுக்குவர்.
 
தூங்குபவர்களை எழுப்பலாம்.  தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்புவது கடினம்.
 
ஹாஹாஹா....
 
இந்த இழையில் எனக்கு நிறைய் சிரிப்பு வருகிறது. என்ன செய்யட்டும்?
 
 
 
-மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு

 
On 11/2/09, S. Jayabarathan <jaya...@tnt21.com> wrote:
நண்பர் கணேஸன்,
 
'Ganesan'   என்பதை நான்  'கணேஸன்' என்று ஆங்கில உச்சரிப்புப்படி எழுத  விரும்புகிறேன்.
 
நீங்கள் 'கணேசன்' என்று எழுத விரும்பினால் ஆங்கிலத்தில் 'Ganechan'   என்றுதான் குறிப்பிட வேண்டும்.
 
 
சி. ஜெயபாரதன்.


 



S. Jayabarathan

unread,
Nov 2, 2009, 1:07:34 PM11/2/09
to tamil...@googlegroups.com, anb...@googlegroups.com
நண்பர்களே,
 
வலைப் பக்கங்களில் சில தூய தமிழர் என் பெயர் சி. ஜெயபாரதனை,   சி. செயபாரதன்  என்று எழுதி வருகிறார்.   அது அவரது உரிமை.
 
அதுபோல் Ganesan  என்பதைக் கணேஸன் என்றும்  Selvan  என்பதை ஸெல்வன் என்றும் நான் எழுத எனக்கு உரிமை உள்ளது. 
 
 
சி. ஜெயபாரதன்
 
++++++++++++++++
 
-------Original Message-------
FREE Animations for your email - by IncrediMail! Click Here!

S. Jayabarathan

unread,
Nov 2, 2009, 7:19:32 PM11/2/09
to anb...@googlegroups.com, tamil...@googlegroups.com
நண்பர்களே,
 
1.  Physics ==>>  பூதியல்,  இயல்பியல், இயற்பியல்,  பௌதிகம் 
 
2. Chemistry ==>> வேதியல், இரசாயனம் 
 
3  Philosophy ==>> மெய்யறிவியல், வேதாந்தம்
 
4.  Philosopher  ==>> மெய்யறிவியலாளர்,   வேதாந்தி
 
4. Science ==>>  அறிவியல், விஞ்ஞானம்
 
5. Scientist ==>> அறிவியலாளர்,  விஞ்ஞானி.
 
1.  பூதியல் என்பது பூதத்தின் அறிவியல் என்பது போல் தொனிக்கிறது.  
 
பௌதிக விஞ்ஞானம் என்பது பிரபஞ்சத் தோற்றம், காலவெளிப் பரிமாணங்கள்,  அணுக்கள்,  பரமாணுக்கள், அடைப்படைத் துகள்கள், காலக்ஸி என்னும் ஒளிமந்தைகள், அணுப்பிளவு, அணுப்பிணைவு இயக்கங்கள், விண்மீன்கள், அண்டக் கோள்கள்,  ஈர்ப்பியல்  விசைகள்,  கருஞ்சக்தி,  கரும் பிண்டம், கருந்துளை, பிரபஞ்ச விரிவு, பிரபஞ்ச இயக்கங்கள் பற்றிய  மெய்ப்பாடுகளைக்  கூறுவது.   
 
இதற்கு இயல்பியல்அறிவியல் என்பதை விடப்  பௌதிக விஞ்ஞானம் என்பது எளிதாகவும்  பொருத்தமானதாகவும் உள்ளது   
 
+++++++++
2.  இரசாயனத்தை வேதியல் என்பது தகுதியான சொல்லில்லை.   வேதியல் என்றால் வேதத்தை விளக்கும் அறிவியல் என்பது போல் தொனிக்கிறது. 
++++++++++
 
3.  ஃபிலாஸஃபியை மெய்யறிவியல் என்பது சரியில்லை.  வேதாந்தம் என்னும் சொல் பழக்கத்தில் உள்ளது.   வேதாந்தம் மெய்ப்பாடாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.   அது ஒரு கோட்பாடு. சித்தாந்த விளக்கம்.   கோட்பாடு ஒப்புக் கொள்ளப் படலாம். அல்லது நிராகரிக்கப் படலாம்.   அதை மெய்யறிவியல் என்பது சரியில்லை.
+++++++++
4 & 5  விஞ்ஞானம், விஞ்ஞானி என்பவை அறிவியல், அறிவியலாளர் என்பதை விட  எளிதாகவும்  தெளிவாகவும் உள்ளன  
++++++++++++++++++++
 
தமிழ் விஞ்ஞானத்தில் பிரபஞ்சம், அகிலம், அண்டம், அணு பரமாணு, உலகம், பூமி, வாயு அக்கினி,  சக்தி
போன்ற வடமொழிச் சொற்கள் பல்லாண்டுக் காலம் பழக்கத்தில் உள்ளன.   வட மொழிச் சொற்கள் என்பதற்காக இவற்றைத் தமிழ்ப் படுத்த வேண்டியதில்லை.
 
அதுபோல் விஞ்ஞானம், விஞ்ஞானி, பௌதிகம், இரசாயனம்,  வேதாந்தம் என்னும் வடமொழிச் சொற்கள் என்பதற்காக நீக்கப் பட வேண்டியதில்லை.
 
சி. ஜெயபாரதன்
 
 
faint_grain.jpg
stampa_girl_line_en.gif

iraamaki

unread,
Nov 3, 2009, 3:55:10 AM11/3/09
to tamil...@googlegroups.com
அறியாமை என்பது பல்வேறு உருவம் எடுக்குமாம்.
 
1. கிணற்றுக்குள் கிடக்கும் தவளையின் அறியாமை.
2. சூடாவது தெரியாமல் நீருக்குள்ளேயே அமிழ்ந்து சுகங்காணும் தவளையின் அறியாமை.
3. கொடுத்திருப்பது பூமாலை என்று தெரியாமல், அதைப் பிச்சுப்போட்டு உதிர்த்தெறியும் குரங்கு அறியாமை
3. “தன் கண்ணை மூடிக் கொண்டு உலகமே இருண்டது போல் காட்டிக் கொள்ளும்” பூனையின் அறியாமை.
 
முதல் மூன்று அறியாமைகளையும் ஓரளவு பொறுத்துக் கொள்ளலாம். எப்படியோ சொல்லிக் கொடுத்து அறியவும் வைக்கலாம். ஆனால், இந்தப் பூனை அறியாமை இருக்கிறது பாருங்கள். இந்தக் “கொனஷ்டையை”த் திருத்தவே முடியாது. தூங்குவது போல் நடிக்கும் இவர்களை எழுப்புவதே இயலாது.
 
வடமொழியில் சில சொல்லாக்க வழக்கங்கள் உண்டு. குறிப்பாக இரண்டு பெயர்களை வைத்து உருவாக்கும் கூட்டுப் பெயர்ச் சொற்கள், அல்லது பெயரடை சேர்ந்து வரும் கூட்டுச் சொற்கள். இதில் முதலில் வரும் பெயர், அல்லது பெயரடை இகரம்/எகரத்தில் இருந்தால் கூட்டுச் சொல்லில் அது ஐகாரமாகும். அன்றி உகரம்/ஒகரத்தில் இருந்தால் கூட்டுச் சொல்லில் அது ஔகாரமாகும். இந்த ஒலிமாற்றப் பழக்கம் தமிழில் இல்லை. பின்னால் தமிழில் கடன் வாங்கும் போது சில பெருகபதிகள் (=ப்ரகஸ்பதிகள்) கூட்டுப் பெயரின் ஐகார/ஔகார முதற்பகுதியைக் கடன் வாங்கி வடமொழி இலக்கண மாற்றத்தையும் தமிழுக்குள் கொண்டுவந்து திணிப்பர். போதாதற்கு இந்த ஐகார/ஔகார மாற்றமில்லாத வடமொழிச் சொல்லையும் கடன்வாங்கி இங்கு கொட்டிவைத்திருப்பர். ஒத்தைக்கு ரெட்டைத் தாழ்ப்பாள்.
 
அட முட்டாள்களே? கடன் வாங்குவது என்று முடிவு பண்ணிவிட்டீர்கள்? அப்புறம் என்ன ஒரே பொருளுக்கு இரண்டு உருவத்தில் கடன்? ஒரு கடன் பற்றாதா? பெரிய பூனைக்குப் பெரிய ஓட்டை, சின்னப்பூனைக்குச் சின்ன ஓட்டையா? என்னய்யா கூத்து இது? .  
 
மேலே சொன்ன பெயரடை அல்லது முதற் பெயர்ச்சொல் வடமொழியில் இருந்தே உருவான சொல்லாகவோ, தமிழில் இருந்து கடன்வாங்கிய சொல்லாகவோ இருக்கும். அந்த முதற் சொல்லை இங்கு பட்டியலிட்டிருக்கிறேன்.
 
(தமிழில் இருந்து வடமொழி கடன் வாங்கியது என்று சொல்லுவதையே “அபசாரம், அபசாரம்” என்று சொல்லும் வடமொழி பத்தர்கள் இப்பொழுதெல்லாம் இணையத்தில் மிகுதி. இவர்களுக்கெல்லாம் தேவநேயப் பாவாணரைக் கண்டாலே ஆகாது; அந்தத் திட்டு திட்டுவார்கள். ஏனென்றால் சம்மட்டி அடியாக இன்னின்ன சொற்கள் வடமொழி தமிழில் இருந்து கடன் வாங்கியது என்று அடையாளம் கண்டு பட்டியலிட்டாரே? அது பொறுக்குமா? அதெப்படி, “கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளுக்கு” என்று இவர்களின் புளுகுக் கதைகளை வெளியிற் கொண்டுவந்து போடலாம்? அப்படிப் போட்டவரைத் திட்டாவிட்டால், பத்தனுக்கு மோட்சம் கிடைக்குமோ? எனவே ”பள்ளத்தில் இருந்து மேட்டிற்குத் தண்ணீர் ஓடுமா?” என்று வியாக்யானம் சொல்லி முடிந்த மட்டும் ”சமஸ்க்ருதாய நமஹ” என்று சாதிப்பார்கள். எல்லாமே ”வடமொழியில் இருந்து தமிழுக்குக் கடன் வந்தது தான்” என்ற root - ஐ மாற்றி மேட்டிமைத்தனம் காட்டுவார்கள்.)    
 
.
இந்த ஐகார/ஔகாரப் பேர்வழிகளுக்கு,
 
உபாசனம் வேண்டாம்; ஔபாசனம் வேண்டும்.
கோசிகன் வேண்டாம்; கௌசிகன் வேண்டும்.
கோதமன் வேண்டாம் கௌதமன் வேண்டும்.
கோவனம் வேண்டாம்; கௌபீனம் வேண்டும்.
கோளி வேண்டாம்; கௌளி வேண்டும்.
சுகம் வேண்டாம்; சௌக்யம் வேண்டும்.
சுகந்தம் வேண்டாம்; சௌகந்தம் வேண்டும்.
சுந்தரம் வேண்டாம்; சௌந்தரம் வேண்டும்
சுபாக்யம் வேண்டாம்; சௌபாக்யம் வேண்டும்.
சூரம் வேண்டாம்; சௌரம் வேண்டும்.
சுலபம் வேண்டாம்; சௌலப்யம் வேண்டும்.
துலம் வேண்டாம்; தௌலம் வேண்டும்.
பூஷம் வேண்டாம், பௌஷம் வேண்டும்
புத்தம் வேண்டாம், பௌத்தம் வேண்டும்.
புத்ரன் வேண்டாம்; பௌத்ரன் வேண்டும்.
பூதிகம் வேண்டாம்; பௌதிகம் வேண்டும்.
பூமம் வேண்டாம்; பௌமம் வேண்டும்.
பூர்ணம் வேண்டாம்; பௌர்ணம் வேண்டும்.
புராணிகம் வேண்டாம்; பௌராணிகம் வேண்டும்.
புரோகித்யம் வேண்டாம்; பௌரோகித்யம் வேண்டும்
பூழியன் வேண்டாம்; பௌழியன் வேண்டும்.
முண்டிதம் வேண்டாம்; மௌண்டிதம் வேண்டும்.
முத்தம் வேண்டாம்; மௌத்திகம் வேண்டும்.
மோலி வேண்டாம்; மௌலி வேண்டும்.
முவ்வல் வேண்டாம்; மௌவல் வேண்டும்;
மோனம் வேண்டாம்; மௌனம் வேண்டும்.
யுவனம் வேண்டாம்; யௌவனம் வேண்டும்.
வேதம் வேண்டாம் வைதீகம் வேண்டும்.
 
(நான் ஐகாரச் சொற்களில் ஒன்றை மட்டும் பட்டியலிட்டு மற்றவற்றை வேண்டும் என்றே விட்டுவிட்டேன். அது இன்னும் நேரத்தை வீணடிக்கும்.)
 
பூதிகம் என்றால் பூதம் வந்து விடுமாம். பௌதிகம் என்றால் வந்துவிடாதாம். என்ன, சமர்த்து பாருங்கள்? முகத்தில் இருந்து அப்படியே வழிகிறது? கண்ணை மூடிக் கொண்ட பூனைகளுக்கு என்னத்தை சொல்ல? தமிழராகிய நாம் ”பௌதிக விஞ்ஞானம்” என்ற கழுதையைக் கட்டிக் கொண்டு மாரில் அடித்துக் கிடப்போம்.
 
தாசானு தாசன் ஆவது என்று முடிவெடுத்தபின், கூழைக் கும்பிடு போட்டால் என்ன? குப்புறக் கீழே விழுந்து அட்டாங்கம் போட்டால் என்ன?
 
“சரணம், சுபமஸ்து”
 
அன்புடன்,
இராம.கி.
stampa_girl_line_en.gif
faint_grain.jpg

S. Jayabarathan

unread,
Nov 3, 2009, 11:48:23 AM11/3/09
to tamil...@googlegroups.com, anb...@googlegroups.com
மதிப்புக்குரிய இராம்.கி. ஐயா,
 
வணக்கம்.   
 
காலுக்குச் சேராத பூதியல் என்னும் உங்கள் செருப்புக்குள் காலை விட்டுக்  கடிக்கும்  போது  போடும் உங்கள் அலறல் இங்கு கனடாவிலும் கேட்கிறது.
 
பூதியல் என்று பொருந்தாத புதிய சொல்லுக்கு ஆதரவு தர நான்கு கட்டுரைகள், நானூறு வரிகளா ?
 
நீங்கள் நீரில்லாத கிணற்றுக்குள்ளிருத்து நீர் தேடித் தவிக்கிறீர். 
 
பூதியல் அறிவியல் என்று வெளியே முத்திரை இட்டுக் கொண்டு நூற்றுக்  கணக்கான வடமொழிச் சொற்களை விஞ்ஞானப் படைப்புகள் உள்ளே எழுதி  வருகிறீர்கள்   
 
 
சி. ஜெயாபரதன்
 
-------Original Message-------
faint_grain.jpg
stampa_girl_line_en.gif

N. Ganesan

unread,
Nov 3, 2009, 12:40:47 PM11/3/09
to தமிழ் மன்றம்

On Nov 2, 10:44 am, Mani Manivannan <mmanivan...@gmail.com> wrote:
> அசை, ஆசை, இசை, ஈசல், ஊசி, ஏசு, ஐசரி, ஓசை, கசை, காசு, கூசி, கொசு,
> கோசர், தசை, தாசி, திசை, தூசு,  பசு, பசை,  பசுமை, பாசி, பூசு, பேசு, பொசுக்கு,
> நசுக்கு, நேசம், மாசு, மிசை, மீசை, மூசு, மேசை, மோசம், வசை, விசை, வீசை,
> வேசி...
>

asai, aasai, isai, iisal, uusi, Esu, ....

> இவற்றில் எல்லாம் ச-கரம் மெலிந்து ஸ-கரம் ஆக ஒலிக்கும் என்பது தமிழ்
> பயின்றவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
>
> கணேசன் என்ற பெயரை கணேச்சன் என்று தமிழ் தெரியாதவர்கள்தாம் பலுக்குவர்.
>
> தூங்குபவர்களை எழுப்பலாம்.  தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்புவது கடினம்.
>
> -மணி மு. மணிவண்ணன்
> சென்னை, தமிழ்நாடு
>

> On 11/2/09, S. Jayabarathan <jayaba...@tnt21.com> wrote:
>
>
>
> >    நண்பர் கணேஸன்,
>
> > 'Ganesan'   என்பதை நான்  'கணேஸன்' என்று ஆங்கில உச்சரிப்புப்படி எழுத
> > விரும்புகிறேன்.
>
> > நீங்கள் 'கணேசன்' என்று எழுத விரும்பினால் ஆங்கிலத்தில் 'Ganechan'
> > என்றுதான் குறிப்பிட வேண்டும்.
>
> > சி. ஜெயபாரதன்.

> >     <http://www.incredimail.com/index.asp?id=109095&rui=115895523>

Mani Manivannan

unread,
Nov 3, 2009, 4:03:07 PM11/3/09
to tamil...@googlegroups.com, தமிழமுதம்
நண்பர்களே,
 
அறிவியல், இயல்பியல்/இயற்பியல், வேதியியல், மெய்யறிவியல், போன்ற சொற்கள் கடந்த நாற்பது ஆண்டுகளாகத் தமிழ்நாடு அரசு பாடநூல்களில் வழங்கி வரும் சொற்கள்.  இரண்டு தலைமுறை தமிழ்வழிப் பள்ளி மாணவர்களுக்கு இந்தத் தமிழ்ச் சொற்கள்தாம் பழக்கம்.  தமிழ்க் கட்டுரைகளின் முதல் நோக்கம் தமிழ்வழிப் பள்ளி மாணவர்களுக்குச் செய்தியைக் கொண்டு சேர்ப்பதுதான். ஆங்கிலவழிப் பள்ளிகளில் படித்தவர்கள் ஆங்கிலத்திலேயே செய்தியைத் தெரிந்து கொள்வார்கள்.  நாற்பது ஆண்டுகளுக்கு முந்திய சொற்கள், தற்போது பணி ஓய்வு பெறும் நிலையில் இருப்பவர்களுக்கு வேண்டுமானால் பழக்கமாக இருக்கலாம்.
 
முதலில் அறிவியல், விஞ்ஞானம் என்ற இரண்டு சொற்களைப் பார்ப்போம்.
 
சென்னைப் பல்கலை அகராதி:
 
விஞ்ஞானம் viññāṉam : (page s413)

vijñāna விஞ்ஞானம் viññāṉam

, n. < vijñāna. Scientific knowledge; இயற்கை சாஸ்திரத்தினைப் பற்றிய அறிவு. Mod.

அப்தே சமஸ்கிருத அகராதியில்:
 
विज्ञानम् vijñānam : (page 1434)

केन विज्ञानयोगेन मतिश्चित्तं समास्थिता Mb. 14.21.11.-वादः the theory of knowledge, the doctrine taught by Buddha.-स्कन्धः one of the five स्कन्धs postulated in the Buddhistic philosophy (रूपवेदना- विज्ञानसंज्ञासंस्काराः क्षणिकविज्ञानस्कन्धे स्मृतिरनुपपन्ना ŚB. on MS.1.1.5.

Apte, Vaman Shivaram. Revised and enlarged edition of Prin. V. S. Apte's The practical Sanskrit-English dictionary. Poona: Prasad Prakashan, 1957-1959. 3v.

http://dsal.uchicago.edu/dictionaries/apte/

விக்கிப்பீடியாவில்: ( http://en.wikipedia.org/wiki/Vij%C3%B1%C4%81na )

Vijñāna (Sanskrit; Devanagari: विज्ञान) or viññāa (Pāli; Devanagari: विञ्ञाण) is translated as "consciousness" or "life force" or simply "mind".[1][2]

This article considers the Buddhist concept primarily in terms of Early Buddhism's Pali literature as well as in the literature of other Buddhist schools.

 

ஆங்கில அகராதியில் (http://dictionary.reference.com/browse/science)

sci⋅ence

 
1. a branch of knowledge or study dealing with a body of facts or truths systematically arranged and showing the operation of general laws: the mathematical sciences.
2. systematic knowledge of the physical or material world gained through observation and experimentation.
3. any of the branches of natural or physical science.
4. systematized knowledge in general.
5. knowledge, as of facts or principles; knowledge gained by systematic study.
6. a particular branch of knowledge.
7. skill, esp. reflecting a precise application of facts or principles; proficiency.
 
Origin:
1300–50; ME < MF < L scientia knowledge, equiv. to scient- (s. of sciēns), prp. of scīre to know + -ia -ia
 
சரி.
 
தமிழில் அறிவியல் என்றால் என்ன?
 
அறிவியல் என்ற சொல் 1930களில் ஆக்கப்பட்ட சென்னைப் பல்கலை அகராதியில் இல்லை.  இது அதற்குப் பிறகு படைக்கப்பட்ட புதுச்சொல். '60களின் இறுதியில் பாடநூல்களில் வழங்கும் சொல்.
 
சயன்ஸ் என்ற ஆங்கிலச் சொல் சயன்ஷியா என்ற லத்தீனச் சொல்லில் இருந்து பிறந்த சொல். அறிதல் என்ற வினையில் இருந்து பிறந்த சொல்.  இதன் அடிப்படையில் எழுந்ததே அறிவியல் என்ற சொல்லாக்கம்

விஞ்ஞானம் என்ற சமஸ்கிருத மற்றும் பாலி மொழிச் சொல் சமயச் சிந்தனைகளின் வழி எழுந்தது.  பின்னால் அந்தச் சொல்லுக்குச் சமயச் சார்பற்ற பொருளைக் கொள்ளலாம் என்றாலும், தமிழிலேயே நேரடியாகப் பொருள் தரும் சமயச் சார்பற்ற அறிவியல் என்ற சொல் மிகப் பொருத்தமல்லவா?
 
இந்தக் கடிதம் நீண்டு விட்டது.
 
மற்ற சொற்களைப் பின் வரும் மடல்களில் பார்ப்போம்.
 
அன்புடன்,
 
மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு
 
2009/11/3 S. Jayabarathan <jaya...@tnt21.com>

S. Jayabarathan

unread,
Nov 3, 2009, 4:45:32 PM11/3/09
to tamil...@googlegroups.com, anb...@googlegroups.com
நண்பர் மணிவாண்ணன்
 
//////நாற்பது ஆண்டுகளுக்கு முந்திய சொற்கள், தற்போது பணி ஓய்வு பெறும் நிலையில் இருப்பவர்களுக்கு வேண்டுமானால் பழக்கமாக இருக்கலாம்.////
 
விஞ்ஞானம், விஞ்ஞானி இரண்டும் புராதனச் சொற்கள் அல்ல.
 
1992 ஆம் ஆண்டு வெளியான  சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சியத்தில் சையன்ஸ் என்னும் ஆங்கிலப் பதத்துக்கு விஞ்ஞானம், அறிவியல் என்னுமிரண்டு சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
 
சையன்டிஸ்ட் :  விஞ்ஞானி
 
அகராதி: 1223 பக்கங்கள், விலை ரூ 150.   (பக்கம் : 882-883  பார்க்க)
 
அதன் பதிவாசிரியர்கள் :
 
1.  ஏ. சிதம்பரநாத செட்டியார்
2.  கே. அப்பத்துரை
3. வி. பாலசுரமணியன்.
4. டி.ஏ.வி. நாதன்
5. என். சஞ்சீவி
6. பி.எஸ். இந்திரா
7. ஆ ஜகதீசன்
8. டி. எஸ். உமாபதி
 
ஆலோசனைக் குழுவினர்
 
1.  ஆர். பி. சேதுப்பிள்ளை
2. மு. வரதராசனார்
3. டி. பி. மீனாட்சி சுந்தரம்
4. சேவியர் தனியநாயகம்
5. பி. ஆலாலசுந்தரம்
6. எஸ். ஆருமுக முதலியார்
 
++++++++
1992  Universal Deluxe Dictionary  (English-English-Tamil) (பக்கங்கள் 1916) விலை; ரூ: 360
 Scientist :  விஞ்ஞானி  (page : 1537) 
+++++++++
 நர்மதாவின் தமிழகராதி (2002.  பக்கங்கள் : 816  விலை ரூ 370)
விஞ்ஞானம் : அறிவியல், சையன்ஸ் (பக்கம் 803)
+++++++
 
சி. ஜெயபாரதன்
 
+++++++++++
 
-------Original Message-------

அன்புடன் புகாரி

unread,
Nov 3, 2009, 6:07:43 PM11/3/09
to tamil...@googlegroups.com, anb...@googlegroups.com


2009/11/3 S. Jayabarathan <jaya...@tnt21.com
நண்பர் மணிவாண்ணன்
 
//////நாற்பது ஆண்டுகளுக்கு முந்திய சொற்கள், தற்போது பணி ஓய்வு பெறும் நிலையில் இருப்பவர்களுக்கு வேண்டுமானால் பழக்கமாக இருக்கலாம்.////
 
விஞ்ஞானம், விஞ்ஞானி இரண்டும் புராதனச் சொற்கள் அல்ல.
 
1992 ஆம் ஆண்டு வெளியான  சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சியத்தில் சையன்ஸ் என்னும் ஆங்கிலப் பதத்துக்கு விஞ்ஞானம், அறிவியல் என்னுமிரண்டு சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
 
அதே காலகட்டத்தில் கணினி கம்ப்யூட்டர் என்று எழுதப்பட்டது. இன்று நீங்கள் கணினி என்று எழுதுகிறீர்கள். ஏன்?
 
அன்புடன் புகாரி 
 
 
 
 
சையன்டிஸ்ட் :  விஞ்ஞானி

iraamaki

unread,
Nov 3, 2009, 9:38:55 PM11/3/09
to tamil...@googlegroups.com
மதிப்பிற்குரிய ஜெயபாரதன் ஐயா,
 
அதுதான் முன் மடலில் சொல்லியிருந்தேனே?
 
---------------------------------
 
அறியாமை என்பது பல்வேறு உருவம் எடுக்குமாம்.
 
1. கிணற்றுக்குள் கிடக்கும் தவளையின் அறியாமை.
2. சூடாவது தெரியாமல் நீருக்குள்ளேயே அமிழ்ந்து சுகங்காணும் தவளையின் அறியாமை.
3. கொடுத்திருப்பது பூமாலை என்று தெரியாமல், அதைப் பிச்சுப்போட்டு உதிர்த்தெறியும் குரங்கு அறியாமை
3. “தன் கண்ணை மூடிக் கொண்டு உலகமே இருண்டது போல் காட்டிக் கொள்ளும்” பூனையின் அறியாமை.
 
முதல் மூன்று அறியாமைகளையும் ஓரளவு பொறுத்துக் கொள்ளலாம். எப்படியோ சொல்லிக் கொடுத்து அறியவும் வைக்கலாம். ஆனால், இந்தப் பூனை அறியாமை இருக்கிறது பாருங்கள். இந்தக் “கொனஷ்டையை”த் திருத்தவே முடியாது. தூங்குவது போல் நடிக்கும் இவர்களை எழுப்புவதே இயலாது.
-------------------------------
 
உங்களிடம் போய் பகுத்து அறிதலை எதிர்பார்க்கலாமா? 
 
எப்படியோ தாசானு தாசன் ஆவது என்று முடிவெடுத்துவிட்டீர்கள். அப்புறம் சங்கதத்திற்குக் கூழைக் கும்பிடு போட்டால் என்ன?  குப்புறக் கீழே விழுந்து அட்டாங்கம் போட்டால் தான் என்ன?
 
“சரணம், சுபமஸ்து”
 
ஆதலால்,  1950 களிலேயே நின்று கொண்டிருங்கள். அந்தக் காலக் கற்படிமமாய் ஆகிப்போன அரைகுறைக் ”கந்தரகோளக்” கலைச்சொற்களை கையாளுவதில் இருந்து வெளியே வந்துவிட வேண்டாம்.  நீங்கள் சொல்லுவது மட்டுமே சரி. மற்றவர்கள் எல்லாம் உங்கள் கால் தூசிக்குச் சமம். என்ன சொல்லுகிறீர்கள்?  
 
உங்களுக்குப் பிடித்த ”பௌதிக விஞ்ஞான” நடையில் தான் என் முந்தைய மடலை எழுதியிருக்கிறேன்.  ”வழக்கமான என் மொழிநடை என்ன?” என்பது என்னைத் தொடர்ந்து படிப்போருக்கு விளங்கும். அதில் நீர் இருக்கிறதா, இல்லையா என்பதும் அவர்களுக்குத் தெரியும்.  
 
 
அன்புடன்,
இராம.கி.
----- Original Message -----
stampa_girl_line_en.gif

Mani Manivannan

unread,
Nov 4, 2009, 2:32:50 PM11/4/09
to tamil...@googlegroups.com, தமிழமுதம்
அடுத்ததாக, பௌதிகம் என்ற சொல்லைப் பார்ப்போம்.
 
சென்னைப் பல்கலைப் பேரகராதியில்:
 
பௌதிகம் pautikam : (page 2973)

pautika-pāvaṉai

, n. < id. +. Meditation of God, as having form; கடவுளை உருவனாகத் தியானிக்கை. (சங். அக.)

பௌதிகம்¹ pautikam

, n. < bhautika. 1. That which pertains to the five elements; that which is physical; பூதசம்பந்தமானது. தேகங்க ளத்தனையு மோகங்கொள் பௌதிகம்

சரி, சமஸ்கிருத அகராதியில் பௌதிகம் என்றால் என்ன பொருள்?
 
भौतिक bhautika : (page 1213)

a. (-की f.) [भूत-ठक्] 1 Belonging to created or living beings; प्रहुतो भौतिको बलिः Ms.3.74; आहंकारिकत्वश्रुतेर्न भौतिकानि Sāṅkhya S.-2 Formed of coarse elements, elemental, material; वृक्षाणां नास्ति भौतिकम् Bhāg. 12 184.9; पिण्डेष्वनास्था खलु भौतिकेषु R.2.57.-3 Relating to evil spirits.-4 Possessed by evil spirits. -कः 1 N.

 
பஞ்சபூதங்களால் ஆன இயற்கைப் பொருள்கள் என்பதும் ஒரு பொருள்.  இதில் அறிவியல், விஞ்ஞானம், ஆராய்ச்சி என்பதுபோல் ஏதும் பொருள் இருப்பதாகத் தெரியவில்லை.
 
சரி, ஃபிசிக்ஸுக்கு ஆங்கிலத்தில் என்ன பொருள்? (காலின்ஸ் அகராதி, Collins English Dictionary)
 
physics
1. (Physics / General Physics) the branch of science concerned with the properties of matter and energy and the relationships between them. It is based on mathematics and traditionally includes mechanics, optics, electricity and magnetism, acoustics, and heat. Modern physics, based on quantum theory, includes atomic, nuclear, particle, and solid-state studies. It can also embrace applied fields such as geophysics and meteorology
2. (Physics / General Physics) physical properties of behaviour the physics of the electron
3. (Physics / General Physics) Archaic natural science or natural philosophy
 
[from Latin physica, translation of Greek ta phusika natural things, from phusis nature]

இதுவும் இலத்தீன வேர்ச்சொல்லில் இருந்து பிறந்த சொல்.  ஃபிசிக்கா, ஃபூசிக்கா, இயல்பொருள், ஃபூசிஸ் இயற்கை என்ற வேர்கள்.

பௌதிகம் என்ற சொல்லுக்கும் பூதியியல் என்ற சொல்லுக்கும் உள்ள ஒரே வேறுபாடு முன்னது சமஸ்கிருதச் சொல், பின்னது தமிழ்ச்சொல்.  இரண்டுமே பஞ்ச பூதங்களைப் பற்றித்தான் குறிப்பிடுகின்றன.  பூதியியலை பூதத்தின் அறிவியல் என்று கிண்டல் செய்தால், பௌதிகத்தையும் பூதத்தின் விஞ்ஞானம் என்று கிண்டல் செய்யலாம். நமக்கு சமஸ்கிருதம் தெரியாது.  எனவே பௌதிகம் என்பது கடவுளே கொடுத்த சொல் போலச் சிலருக்குத் தோன்றலாம்.

இயல்பியல், இயற்பியல் என்ற சொற்கள் ஃபிசிக்ஸின் natural science or natural philosophy என்ற முதல் பொருளோடு ஒத்துப் போகிறது.  Physical object என்பதை இயல் பொருள் என்று பாடநூல்களில் குறிப்பிட முடிகிறது.  இல்லாவிட்டால் பௌதிகப் பொருள் என்று சொல்ல வேண்டியிருக்கும்.  ஏற்கனவே பௌதிகம் என்பது தமிழர்களுக்குப் பொருள் புரியாத சொல்.  அதை அடிப்படையாக வைத்து மாடி கட்டினால், இது அந்நியர் மாடியாகத்தான் இருக்கும், நமது வீடாக உரிமையுடன் போவது கடினம்.

சூழ்நிலையியல் (Environmental Science) என்ற பாடம் முதல் வகுப்பில் தொடங்குகிறது.  அது மூன்றாம் வகுப்பில் சூழ்நிலையியல் அறிவியல் என்று விரிவாகிறது. ஒருங்கிணைந்த அறிவியல் பாடங்கள் எட்டாம் வகுப்பு வரை தொடர்கின்றன.

இயற்பியல், வேதியியல், உயிரியல் என்ற தனிப்பாடங்கள் ஒன்பதாம் வகுப்பில் அறிமுகமாகின்றன.

இந்தச் சொற்கள் கடந்த நாற்பது ஆண்டுகளாகத் தமிழ்நாட்டுப் பாடநூல்களில் வழங்கி வரும் சொற்கள்.  அகராதியிலும், தினமலரிலும் வரும் சொற்களை வைத்துத் தமிழ் வழிப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு என்ன சொல் தெரியும் என்று கற்பனை செய்ய முடியாது.

சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி (University of Madras Tamil Lexicon) கடைசியாக 1936ல் திருத்தப் பட்டது.  பின்னர் மறு அச்சு மட்டும்தான்.  பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையார் வெளியிட்ட கையகராதியும், சொற்களஞ்சியமும் 1965இல் வெளிவந்தது.  பின்னர் வந்தவை எல்லாம் மறு அச்சுகள்தாம்.  (குறிப்பு.  Appadurai என்று ஆங்கிலத்தில் எழுதியிருப்பதைத் தமிழில் அப்பாதுரை என்று எழுத வேண்டும்.  மணிவண்ணன் என்ற என் பெயரைத் தட்டச்சிடும் போது பெரியவர் ஜெயபாரதன் தவறாக மணிவாண்ணன் என்று எழுதியிருக்கிறார்.  தம் பெயரைத் தவறாக எழுதினால் எல்லோருக்கும் கோபம் வரும் தான்.  ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.)

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்

சென்னை, தமிழ்நாடு

On 11/4/09, Mani Manivannan <mmani...@gmail.com> wrote:
 
அறிவியல், இயல்பியல்/இயற்பியல், வேதியியல், மெய்யறிவியல், போன்ற சொற்கள் கடந்த நாற்பது ஆண்டுகளாகத் தமிழ்நாடு அரசு பாடநூல்களில் வழங்கி வரும் சொற்கள்.  இரண்டு தலைமுறை தமிழ்வழிப் பள்ளி மாணவர்களுக்கு இந்தத் தமிழ்ச் சொற்கள்தாம் பழக்கம்.  தமிழ்க் கட்டுரைகளின் முதல் நோக்கம் தமிழ்வழிப் பள்ளி மாணவர்களுக்குச் செய்தியைக் கொண்டு சேர்ப்பதுதான். ஆங்கிலவழிப் பள்ளிகளில் படித்தவர்கள் ஆங்கிலத்திலேயே செய்தியைத் தெரிந்து கொள்வார்கள்.  நாற்பது ஆண்டுகளுக்கு முந்திய சொற்கள், தற்போது பணி ஓய்வு பெறும் நிலையில் இருப்பவர்களுக்கு வேண்டுமானால் பழக்கமாக இருக்கலாம்.
 
 
 

S. Jayabarathan

unread,
Nov 4, 2009, 3:26:55 PM11/4/09
to tamil...@googlegroups.com
நண்பர் மணிவண்ணன், 
 
 
////மணிவண்ணன் என்ற என் பெயரைத் தட்டச்சிடும் போது பெரியவர் ஜெயபாரதன் தவறாக மணிவாண்ணன் என்று எழுதியிருக்கிறார்.  தம் பெயரைத் தவறாக எழுதினால் எல்லோருக்கும் கோபம் வரும் தான். ///
 
செயபாரதன் என்று பிறர் எழுதும் போது சும்மா இருந்தீர்கள்.   ஆனாலும் எனக்குக்  கோபம்  வரவில்லை.   கிரந்தமின்றி எழுதுவது அவரவர்  உரிமை .  
 
உங்கள் பெயரை எழுதியது என் கைத்தவறல்.   மன்னிக்க வேண்டும்.
 
நான் விஞ்ஞானம், விஞ்ஞானி, பௌதிகம், இரசாயனம், தத்துவம் என்று எழுதி வருவது என்னுரிமை. 
 
பூதியல் என்பதை நீங்கள் ஏற்கவில்லை என்று இரரம். கி. சொல்கிறார்.
 
பூதவியல் என்பதை ஏற்றுக் கொள்ளலாம்.   இயல்பியல் என்பதை விட மேலாக உள்ளது. 
 
 
சி. ஜெயபாரதன்
 
-------Original Message-------
 
Date: 04/11/2009 2:33:02 PM

Mani Manivannan

unread,
Nov 4, 2009, 3:36:19 PM11/4/09
to tamil...@googlegroups.com, தமிழமுதம்
கெமிஸ்ட்ரி என்ற சொல்லுக்கு வேதியியல் என்ற தமிழ்ச்சொல்லை நாற்பதாண்டுகளாகத் தமிழ்நாட்டு அரசுப் பாட நூல்களில் வழங்குகிறார்கள்.  (அது வேதியல் இல்லை வேதியியல்.)   இதற்கு முன் ரசாயனம், ரஸாயனம் என்ற சொற்கள் புழக்கத்தில் இருந்தன. 
 
கெமிஸ்ட்ரிக்கு ஆங்கில அகராதியில் என்ன விளக்கம் கொடுக்கிறார்கள் என்று பார்ப்போம்:
 
chemistry 1. (Chemistry) the branch of physical science concerned with the composition, properties, and reactions of substances See also inorganic chemistry, organic chemistry, physical chemistry
2. (Chemistry) the composition, properties, and reactions of a particular substance
[from earlier chimistrie, from chimist chemist]
 
வேர்ச்சொல்லைக் கிளறுவோம்.  கெமிஸ்ட் என்றால் என்ன?
 
chemist 1. (Business / Commerce) Brit a shop selling medicines, cosmetics, etc.
2. (Medicine / Pharmacology) Brit a qualified dispenser of prescribed medicines
3. (Chemistry) a person studying, trained in, or engaged in chemistry
4. (Chemistry / Alchemy) an obsolete word for alchemist
[from earlier chimist, from New Latin chimista, shortened from Medieval Latin alchimista alchemist]
இது கொஞ்சம் அனுமார் வால் போல் நீண்டு போனாலும், சுவையான தடயங்கள் தெரிகின்றன.  அல்கெமிஸ்ட் என்பவன் அல்கெமி செய்பவன்.  ஆங்கிலத்தில் அல்- என்று தொடங்கும் சொற்களைக் கவனமாகப் பார்க்க வேண்டும்.  அல் ஜீப்ரா, அல் கெமி இரண்டுக்குமே அரபுக்காரர்கள் தொடர்பு உண்டு.
 
alchemy 1. (Chemistry / Alchemy) the pseudoscientific predecessor of chemistry that sought a method of transmuting base metals into gold, an elixir to prolong life indefinitely, a panacea or universal remedy, and an alkahest or universal solvent
[C14 alkamye, via Old French from Medieval Latin alchimia, from Arabic al-kīmiyā', from al the + kīmiyā' transmutation, from Late Greek khēmeia the art of transmutation]
 
ஓ, இது நமது ராமர் பிள்ளை கதை போல் இல்லை.  ஆமாம், கெமிஸ்ட்ரி, மண்ணைப் பொன்னாக்கும் மந்திரவாதிகளிடம் இருந்து பிறந்த அறிவியல்.  பழைய கட்டுக்கதைகளில் எல்லாம், சூனியக்காரிகளும், மந்திரவாதிகளும் ஏதாவது குடுவையில் எலும்பு, மயிர், மற்றும் பல கலவைகளைக் குடுவைகளில் போட்டுக் கொதிக்க வைத்துக் கொண்டிருப்பார்கள்.  இதற்கு ரஸவாதம் என்றும் ஒரு பெயர் உண்டு.  இதில் இருந்துதான் ரஸாயனம் தோன்றியது.
 
ரஸம் என்பது மெர்க்குரி அல்லது பாதரஸத்தைக் குறித்தது.  பாதரசத்தை வைத்து சித்தர்கள் மண்ணைப் பொன்னாக்குவது, தங்க பஸ்பம், காயகல்பம் போன்ற மருந்துகளைச் செய்வது என்று விளையாடிக் கொண்டிருந்தார்கள்.  சித்தர்கள் தமிழ்நாட்டின் அல்கெமிஸ்ட்கள், ரசவாதிகள்.
 
இரசாயனம் iracāyaṉam : (page 306)

*இரசாயனநூல் iracāyaṉa-nūl

, n. < rasā- yana *இரசாயனம் iracāyaṉam

, n. < rasāyana. 1. Elixir of life, medicine credited to have the property of prolonging life and preventing the coming of old age; காயசித்திமருந்து. (மூ. அ.) 2. Poison; நஞ்சு.

சரி, ஒரு வழியாக ரசாயானம், இரசாயனம் என்ற சொல் அல்கெமி வழியாக கெமிஸ்ட்ரியை எட்டுவது புரிகிறது. இந்த வேதியியல் எங்கிருந்து வந்தது?  வேதி என்ற சொல் சதுர்வேதி என்ற சொல்லைப் பெரியவர் ஜெ.பா.வுக்கு நினைவூட்டியிருக்க வேண்டும்.  ஆனால், இந்த வேதி வேறு.  பேரகராதி என்ன சொல்கிறது என்று பார்ப்போமா?
 
வேதி vēti : (page 3833)

வேதி&sup4; vēti

, n. < வேதி³-. Transmuting; தாழ்ந்தவற்றை யுயர்பொருளாக மாற்றுகை. குளிகை கொடு பரிசித்து வேதி செய்து (தாயு. சின்மயா. 7).

வேதி&sup5;-த்தல் vēti-

 
கீழ் உலோகத்தை மேல் உலோகமாக, பித்தளையைப் பொன்னாக்குவது டிரான்ஸ்முயூட்டிங், அல்கெமிக்கல், ரசவாத வேலை.  வேதி என்ற சொல்லைத் தாயுமானவர் இந்தப் பொருளில் கையாண்டிருக்கிறார் என்று பேரகராதி குறிக்கிறது.
 
கடைசியில் அப்படி இப்படிப் பார்த்து, வேதியியலும், கெமிஸ்ட்ரியின் வேருக்குள் நுழைந்து விடுகிறது.
 
வேதிப்பொருள், வேதிச்சமன்பாடு, வேதி வினை, வேதியாற்றல், வேதி வாய்பாடு, வேதி நிறுத்தி, தனிமம், கனிமம், அணு, மூலக்கூறு, சேர்மம், கலவை, அமிலம், காரம், உலோகம், அலோகம், தாது, நீர்த்த சல்ஃபியூரிக் அமிலம், அடர் சல்ஃபியூரிக் அமிலம், இளக்கி, கசடு, கரைசல், உப்பு, ஆக்சிஜனேற்றம், குளோரினேற்றம், கிருமி நாசினி, எஸ்டராக்கம், கொதிநிலை, எரிசாராயம், இப்படிப் பல சொற்கள் வேதியியல் பாட நூல்களில் பள்ளி மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள். கிருமி நாசினி என்பதை நுண்ணுயிர்க் கொல்லி, பூச்சிக் கொல்லி என்பவை போல எழுதலாம்.  ஆனால், ஆங்கிலம், வடமொழி, கிரந்தம் இவற்றை நீக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு யாரும் தூய்மைப் படுத்தவில்லை.  இது முழுக்க முழுக்க வடமொழி, ஆங்கில எதிர்ப்பு என்ற கொள்கையிலும் இல்லாமல், தமிழ் தேவையே இல்லை என்றும் இல்லாமல் ஒரு சமரசம் செய்து கொண்ட நடை.
 
சில பெயர்ச்சொல்களை இரவல் வாங்கி விட்டு, கருத்துகளைத் தமிழாக்கியிருக்கிறார்கள்.  இது முதல் தேவை.  தாய்மொழியில் கருத்துகளைப் புரிந்து கொண்டால், மிரட்டலான பாடங்களும் கை வசப்படும்.  இயற்பியலில் இருக்கும் தமிழ்நடை வேதியியற் பாடநூல்களில் இல்லை.
 
ஆனால், வேதத்தை விளக்கும் அறிவியல் என்பது ஒரு மேலெழுந்த வாரியான கற்பனைதான்.  வேதியியல் என்ற சொல் தகுதியானதா இல்லையா என்ற பட்டிமன்றத்துக்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே தீர்ப்பு வழங்கியாயிற்று.  வேதியியல் வென்றது.
 
கண்ணுள்ளவர் பார்க்கக் கடவர்.
 
வேதாந்தத்தை அடுத்த கடிதத்தில் பார்த்து முடிப்போம்.
 
அன்புடன்,
 
மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு

 

Mani Manivannan

unread,
Nov 4, 2009, 4:18:38 PM11/4/09
to tamil...@googlegroups.com, தமிழமுதம்
பெரியவர் ஜெ.பா.வுக்கு ஃபிலாஸஃபி என்பது வேதாந்தம்.  மெய்யறிவியல் என்பது சரியில்லை என்கிறார்.
 
"வேதாந்தம் மெய்ப்பாடாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.   அது ஒரு கோட்பாடு. சித்தாந்த விளக்கம்.   கோட்பாடு ஒப்புக் கொள்ளப் படலாம். அல்லது நிராகரிக்கப் படலாம்.   அதை மெய்யறிவியல் என்பது சரியில்லை" என்று வாதாடுகிறார்.
முதலில் ஃபிலாஸஃபி என்ற ஆங்கிலச் சொல்லைப் பார்ப்போமா?
 
phi·los·o·phy1. Love and pursuit of wisdom by intellectual means and moral self-discipline.
2. Investigation of the nature, causes, or principles of reality, knowledge, or values, based on logical reasoning rather than empirical methods.
3. A system of thought based on or involving such inquiry: the philosophy of Hume.
4. The critical analysis of fundamental assumptions or beliefs.
5. The disciplines presented in university curriculums of science and the liberal arts, except medicine, law, and theology.
6. The discipline comprising logic, ethics, aesthetics, metaphysics, and epistemology.
7. A set of ideas or beliefs relating to a particular field or activity; an underlying theory: an original philosophy of advertising.
8. A system of values by which one lives: has an unusual philosophy of life.

[Middle English philosophie, from Old French, from Latin philosophia, from Greek philosophi, from philosophos, lover of wisdom, philosopher; see philosopher.]
 
சரி வேதாந்தம் என்றால் என்ன? வேதத்தின் அந்தம். வேதியல் என்று சொன்னால் வேதம் நினைவுக்கு வரும் பெரியவருக்கு வேதாந்தம் என்று சொன்னால் எப்படியோ சமயச் சார்பற்ற பொதுச்சொல்லாகி விடுகிறது!  விந்தை.
 

56. वेदः vēdḥ : (page 1496)

system; see मीमांसा. It represents the popular pantheistic creed of the Hindus, regarding, as it does, the whole world as synthetically derived from one eternal principle, the Brahman or Supreme Spirit; see ब्रह्मन् also). ˚गः, ˚ज्ञः a follower of the Vedanta philosophy.-अन्तिन् m. a follower of the Vedanta philosophy.-अभ्यासः 1 the study of the Vedas; वेदाभ्यासो हि विप्रस्य तपः परमिहोच्यते Ms.2.166.-2 the repetition of


57. वेदः vēdḥ : (page 1496)

of the Hindus, regarding, as it does, the whole world as synthetically derived from one eternal principle, the Brahman or Supreme Spirit; see ब्रह्मन् also). ˚गः, ˚ज्ञः a follower of the Vedanta philosophy.-अन्तिन् m. a follower of the Vedanta philosophy.-अभ्यासः 1 the study of the Vedas; वेदाभ्यासो हि विप्रस्य तपः परमिहोच्यते Ms.2.166.-2 the repetition of the sacred syllable Om.-अर्थः the meaning of the

vedanta (p. 298) [ veda&halfacute;anta ] m. end of the Veda (rare); end of Vedic study (rare); text forming the conclusion or the essence of the Veda, i.e. an Upanishad and the theologico-philosophical doctrine based thereon (Uttara-mîmâmor Vedânta system): -krit, m. author of the Vedântas; -sâra, m. essence of the Vedânta, T. of a compendium of the Vedânta system; -&half;abhihita, pp. contained in the Vedânta; -&half;upagata, pp. accruing from the Vedânta (reward).
 
வேதாந்தம் vētāntam : (page 3832)

, n. < vēdānta. 1. The Upaniṣads, as the concluding portions of the Vēdas; உபநிடதம். வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கை

 
ம்ம்ம்.  இந்து மதக் கொள்கையில் ஆழ்ந்து நிற்கும் வேதாந்தம் என்ற சொல்லுக்குச் சமயச் சார்பற்ற ஃபிலாசஃபி என்ற பொருளைக் கொள்வது பொருத்தமாகவா இருக்கிறது?  "அல் கொய்தாவின் வேதாந்தம் என்னவென்றால்..." என்று எழுதினால் அடிக்க வருவார்கள் இல்லையா?
 
கிரேக்க வேர்களில் இருந்து எடுத்தால், அறிவன்பியல் என்று பிய்த்து உதறலாம்.
 
"தம்பி என்ன படிக்கிறீங்க?"
 
"ரஸாயன எஞ்சினியரிங்லெ வேதாந்த டாக்டருக்குப் படிச்சிட்டிருக்கேன்."
 
"தம்பி, பாத்துங்க!  எஞ்சினியரிங், டாக்டர்னு குழம்பிக்கிட்டிருந்தீங்கன்னா, நம்ப சிவன் கோவில் வாசல்ல வாந்தியெடுத்துட்டு நிக்கப்போறீங்க!"
 
சே, கொஞ்சம் மிடுக்கா, வேதியியல் பொறியியலில் அறிவன்பு முனைவராகப் படிக்கிறேன் என்று சொல்லியிருக்கலாமோ?
 
நோ, நோ, பொறியல் சாப்பிட்டு பேதி வந்து அரை வேக்காடா சுத்தறேன்னு புரிஞ்சுப்பாங்க.  அதுவும் மெய்தான், இருந்தாலும்...
 
சரி, சரி, கற்பனையிலிருந்து கட்டுரைக்கு வருவோம்.
 
என்ன சொன்னார்கள் ஆங்கிலத்தில்?
 
Investigation of the nature, causes, or principles of reality, knowledge, or values, based on logical reasoning rather than empirical methods.
 
இதைத்தானே மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றார் வள்ளுவர்? principles of reality, knowledge.
 
மெய்யறிவியல் என்றால் நான் கண்டுபிடித்ததுதான் மெய்ப்பாடு என்ற பொருள் இல்லை.  மெய்யறிவை ஆராயும் துறை.  இதுதான் எல்லா அறிவியல்களுக்கு தந்தை என்கிறார் பேரா. மூர்த்தி. (அறிவியல் அகராதி, மணிவாசகர் பதிப்பகம்.)  "மெய்யறிவியலின் நோக்கம் உண்மையை முழுமையாக அறிதலே."
 
"வேதியியல் நுட்பவியலில் மெய்யறி முனைவர் பட்டத்துக்குப் படிக்கிறேன்."
 
அப்படித்தான் தமிழ் உள்ளம் எண்ணுகிறது.  திரமிள மனஸ் சிந்திக்கிறது.  டாமில் மைண்ட் தின்க்கறது.
 
உங்களுக்கு எப்படி வசதியோ அப்படியே இருங்கள்.  ஆனால், நாற்பது ஆண்டுகளாக வழங்கும் சொற்களைப் புறக்கணித்தால் உங்கள் கட்டுரைகளுக்கும் கோனார் உரை எழுத வேண்டி வரலாம்!
 
முற்றும்.

C.R. Selvakumar

unread,
Nov 4, 2009, 4:19:33 PM11/4/09
to tamil...@googlegroups.com, தமிழமுதம்


2009/11/4 Mani Manivannan <mmani...@gmail.com>

கெமிஸ்ட்ரி என்ற சொல்லுக்கு வேதியியல் என்ற தமிழ்ச்சொல்லை நாற்பதாண்டுகளாகத் தமிழ்நாட்டு அரசுப் பாட நூல்களில் வழங்குகிறார்கள்.  (அது வேதியல் இல்லை வேதியியல்.)   இதற்கு முன் ரசாயனம், ரஸாயனம் என்ற சொற்கள் புழக்கத்தில் இருந்தன. 
 
 
பார்க்கவும்:  http://tinyurl.com/chemistry-tawiki

C.R. Selvakumar

unread,
Nov 4, 2009, 4:39:38 PM11/4/09
to tamil...@googlegroups.com, தமிழமுதம்
ரொம்பப் பொறுமை மணி உங்களுக்கு.
மிக்க நன்றி.
 
வேதாந்த்தம் என்றால் உபநிச்ச^த்துகள் பற்றியது என்று பொதுவாக
அறிவது. வேதத்தின் அந்தம் (முடிவாய்ப் பின்னர் வருவது).
வேதத்தின் பயனாய்ப், பிழிவாய் வருவது என்றும் கொள்வது
உண்டு. மெய்யறிவியல் என்பது மெய்யியல் என்று சுருங்குகின்றது.

 
"தம்பி என்ன படிக்கிறீங்க?"
 
"ரஸாயன எஞ்சினியரிங்லெ வேதாந்த டாக்டருக்குப் படிச்சிட்டிருக்கேன்."
 
"தம்பி, பாத்துங்க!  எஞ்சினியரிங், டாக்டர்னு குழம்பிக்கிட்டிருந்தீங்கன்னா, நம்ப சிவன் கோவில் வாசல்ல வாந்தியெடுத்துட்டு நிக்கப்போறீங்க!"
 
 
:) :)
 
செல்வா
 
பி.கு பெரியவரின் கட்டுரைகள் (அண்மையில் இங்கு இட்டவை)
மிக அழகு. நான் மிகவும் பாராட்டுகிறேன். நெஞ்சாரப் பாராட்டுகிறேன்.
சில சொற்கள், சில பயன்பாடுகள் சற்றே மாறி இருந்தால் இன்னும்
அழகாகவும் சிறப்பாகவும் இருக்கும் என்பது என் கருத்து.
அவர் எழுதுவது போலவே எழுதுவதாக இருந்தாலும் பலரும் அவரை முன் காட்டாககக் கொண்டு உழைத்து எழுத வேண்டும்.  இன்னும் நல்ல பொதுத்தமிழில் எழுத வேண்டும் என்னும் மனப்பாங்கு வர வேண்டும்.
 
 

Mani Manivannan

unread,
Nov 4, 2009, 4:45:39 PM11/4/09
to tamizh...@googlegroups.com, tamilmanram
எல்லாப் பெயர்களுக்கும் பொருள் கொடுப்பது இந்திய மொழிகளின் தன்மை.  நமது பெயர்களுக்குக்கூட பொருள் உண்டு.  இடுகுறிப் பெயர்கள் பின் வந்தவை.
 
கணினிக்கும் கணினியைப் புழங்கி உருவாக்கும் மென்கலன்களுக்கும், பயன்பாடுகளுக்கும் இடையே நீங்கள் குழப்பிக் கொள்கிறீர்கள்.  அடிப்படையில் இன்றும் கணினி கணக்கு போடும் ஒரு கருவிதான். நீங்கள் திரையில் பார்க்கும் படங்கள் ஒன்றும் சுழியுமாக ஒருவாகும் புள்ளிகள்தாம்.  கேட்கும் இசையும் அதில் இருந்து வந்ததுதான்.  இந்த ஒன்றும் சுழியும் மக்களுக்குத் தெரியும் வகையில் மாற்றுவது வேறு கருவிகளின் வேலை.  நாம் பேசுவதையும், தட்டுவதையும் ஒன்றும் சுழியுமாக மாற்றுவதும் வேறு கருவிகளின் வேலை.
 
ஈயடிச்சான் காப்பி என்ற  ஒன்று கண்னியைப் பற்றிய அடிப்படை அறிவு இல்லாதவர்கள் சொல்லலாம்.  இல்லை விளையாட்டுக்காகச் சொல்லலாம்.  (கணிப்பொறி, கணினி என்று இருக்க வேண்டும்.  ஒற்று மிகும்.  -னியில் முடியும்.)
 
அறிவியலாளர் என்பது நீளமாக இருந்தால், அறிவியலார் அல்லது அறிவர் என்று குறுக்கி விடலாம்.  இது மொழியின் தன்மை.  நான் முன்னரே சொன்னது போல, சயன்டிஸ்ட், விஞ்ஞானி எல்லாம் மிரட்டலான சொற்கள்.  எளிமைப் படுத்தினால் நம்மால் முடியும் என்ற நம்பிக்கை பிறக்கும். அம்புடுதேன்.
 
பௌதீகம், பவுதீகம் என்று எழுதுவது பிழை.  பௌதிகம், பவுதிகம் என்று எழுத வேண்டும்.  சமஸ்கிருத இலக்கண விதி.  இகரக் கொக்கி இடப் புறம் விழுந்திருப்பதை நோக்கவும்..  தமிழில் பௌதீகம் என்ற சொல் அகராதியில் இருக்காது.
 
பௌதிகப் பொருள், பௌதிகத் தன்மை, என்பதை விட இயல் பொருள், இயல் தன்மை, இயல் விதிகள் என்ற சொற்கள் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு எளிதாக விளங்கும்.
 
-மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு
 
கொர்... கொர்ர்ர்ர்ர்ர்....

 
On 11/5/09, செல்வன் <hol...@gmail.com> wrote:
ஒரு பொருளுக்கும் அதன் பெயருக்கும் பொருத்தம் வேண்டியதில்லை.கம்ப்யூட்டரை கண்டுபிடித்த காலத்தில் அது கணக்கு போடதான் பயன்பட்டது.அதனால் இன்றும் அதை கம்ப்யியூட்டர் என அழைத்துகொண்டிருக்கிறோம்.இன்று அதன் பயன்கள் கணக்கை தாண்டி எங்கோ போய்விட்டது.தமிழில் ஆங்கிலத்தை ஈயடிச்சான் காப்பி அடித்து கணிபொறி, கணிணி என்று வைத்துகொண்டிருக்கிறோம்.

ஒரு சொல்லை புழங்கும்போது அது மக்களுக்கு புரியுமா, அது பிரபலமா அது கிளைசொற்களை உருவாக்க பயன்படுமா, இலக்கணரீதியாக ஒத்துவருமா என்பதை தான் நோக்கவேண்டும்.அப்படி பார்த்தால் அறிவியல், விஞ்ஞானம் இரண்டும் தேறுகின்றன.அறிவியலாளர் என்பதை விட விஞ்ஞானி என்றால் இன்னும் எழுத உச்சரிக்க எளிதாக இருப்பதால் அதுக்கு தான் அதிக கூகிள் ஹிடஸ்.

பவுதீகம் என எழுதினால் படிப்பவருக்கு புரியுமா?எழுதுபவருக்கு அது வசதியாக உள்ளதா?அப்படியானால் பயன்படுத்துங்கள்.இல்லாவிட்டால் வேண்டாம்.(ஆனால் இயற்பியல் எனும் பெயர் பவுதீகத்தை விட அழகாக உள்ளது என்பது உண்மை.)

அன்புடன் புகாரி

unread,
Nov 4, 2009, 5:39:59 PM11/4/09
to tamil...@googlegroups.com, தமிழமுதம்
அண்ணா மணிவண்ணா தமிழ்த்தாயின் கண்ணா தேடல் மன்னா
எத்தனை அக்கறையாய் சேகரித்திருக்கிறீர்கள். யாவும் விக்கிக்குள் செல்லட்டும்.
 
அன்புடன் புகாரி

2009/11/4 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>


2009/11/4 Mani Manivannan <mmani...@gmail.com>

கெமிஸ்ட்ரி என்ற சொல்லுக்கு வேதியியல் என்ற தமிழ்ச்சொல்லை நாற்பதாண்டுகளாகத் தமிழ்நாட்டு அரசுப் பாட நூல்களில் வழங்குகிறார்கள்.  (அது வேதியல் இல்லை வேதியியல்.)   இதற்கு முன் ரசாயனம், ரஸாயனம் என்ற சொற்கள் புழக்கத்தில் இருந்தன. 
 
 
பார்க்கவும்:  http://tinyurl.com/chemistry-tawiki

S. Jayabarathan

unread,
Nov 4, 2009, 5:46:31 PM11/4/09
to tamil...@googlegroups.com
நண்பர் மணிவண்ணன்,
 
////Investigation of the nature, causes, or principles of reality, knowledge, or values, based on logical reasoning rather than empirical methods.
 
இதைத்தானே மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றார் வள்ளுவர்? Principles of reality, knowledge.////
 
லாஜிக்கல் என்பது மெய்ப்பொருள் ஆக இருக்க வேண்டியதில்லை.   லாஜிக்படி கடவுள் இல்லை என்று நிரூபிக்கலாம்.   சான்றுகள் கூற முடியாவிட்டால் "ஒன்றில்லை" என்று சொல்ல  முடியாது.    கடவுள் இல்லை என்பது எப்படி லாஜிக்காகச் சொல்ல முடியுமோ அதே போல் கடவுள் உள்ளது என்றும் லாஜிக்காக் கூற முடியும்.  
 
ஃபிலாஸஃபி என்பது ஒருவிதச் சிந்தனைத் தர்க்கம், தத்துவம், வேதாந்தம்.    அவை மெய்ப் பொருளாக இருக்க வேண்டிய அவசியமில்லை.   தத்துவம் பிற்காலத்தில் மாற்றம் அடையலாம்.
 
ஜான் டால்டனின் அணுவியல் தத்துவக் கோட்பாடு இப்போது முற்றிலும் மாறிப் போனது.    ஜார்ஜ்  காமாவின்  பிரபஞ்சப் பெருவெடிப்புக் கோட்பாடு இப்போது மாறி வருகிறது.   ஐன்ஸ்டைனின் ஈர்ப்பியல் கோட்பாடு மாறப் போகிறது.
 
விஞ்ஞானக் கோட்பாடுகள் எல்லாம் முடிவில் கணித முறையின்றி  மெட்டா பிசிக்ஸாக (சித்தாந்த  வாசகமாக)  யூகிப்பாகிறது. 
 
++++++++++
 
தமிழ்மன்றத்தில் சில விஞ்ஞானக் கட்டுரைகளை இட்டுள்ளேன்.  கோனார் உரை தேவையா என்று புரியா விட்டால் என்று சொல்லுங்கள்.   
 
திண்ணையில் www.thinnai.com  &  http://jayabarathan.wordpress.com/   எனது வலையில் வந்துள்ள விஞ்ஞானக் கட்டுரைகளை  விரும்பினால்  படித்துப்  பாருங்கள்.    விருப்பு, வெறுப்பின்றிப் படித்துக்  கோனார்  உரை  தேவையா  என்று கூறுங்கள்.
 
 
அன்புடன்
சி. ஜெயபாரதன்
 
-------Original Message-------
 
Date: 04/11/2009 4:19:20 PM
Subject: [தமிழ் மன்றம்] Re: [அன்புடன்] Re: [தமிழ் ம�(R)�்றம்] மூன்று தமிழ்ச் சொற்கள் (For Physics, Chemistry & Philosophy)
 

S. Jayabarathan

unread,
Nov 4, 2009, 5:54:35 PM11/4/09
to tamil...@googlegroups.com

உலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரம் புரியும் பிரபஞ்சப் படைப்புச் சோதனை !

 

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

 

 

பூத விரைவாக்கி யந்திரம்

புரட்டானை மோத வைத்து உடைக்கும் !

புரட்டான் வயிற்றில்

உரித்தெடுக்கும் நுண்துகளை !

பிரபஞ்சப் பெருவெடிப்புக் காட்சியை

அரங்கேற்றும் ஆய்வகத்தில் !

கருந்துளையை உண்டாக்கிக்

காசினியை விழுங்காது !

சிகாகோ நகரில் ·பெர்மி செய்த

அணுப்பிளவுத் தொடரியக்க

ஆய்வில்லை இது !

பரமாணுவுக் குள்ளேயும்

பம்பர மாய்ச் சுற்று மோர்

நுட்ப அகிலம் !

பராமணுக்கள் முட்டையிடும் !

பொறிக்கும் அவற்றில்

கோடான கோடி

குளுவான்கள் ! குவார்க்குகள் !

லிப்டான்கள் !

·பெர்மி யான்கள் !

இதுவரைக் காணாத

நுட்ப போஸானை

வட்ட விரைவாக்கி யந்திரம்

சுட்டு நோக்கிடும் !

+++++++

Fig. 1

CERN Starts its First Experiment

மனித இனம் தொடுவானுக்கு அப்பால் விண்வெளியை நோக்கி அங்கே என்ன உள்ள தென்று எப்போதுமே அறிய விரும்பியுள்ளது ! . . . 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த பிரபஞ்சப் பெருவெடிப்பு நிகழ்ச்சி ஓர் வரையறைக் குட்பட்ட காலத்தில்தான் எழுந்திருக்கிறது ! அதாவது 15 பில்லியன் ஆண்டுக்கு முந்தி உண்டான வடிவுகளை (Objects) நாம் காண முடியாது ! காரணம் அதுவரைப் பயணம் செய்யும் கால வரம்பு ஒளிக்குப் போதாது ! . . . ஆதலால் இன்னும் ஆழமாய் நோக்கி உளவச் சக்தி வாய்ந்த மிகக் நுண்ணிய மின்னலைகளை (Short Waves) நாம் பயன்படுத்த வேண்டி யுள்ளது. . . . ஆகவேதான் (செர்ன் போன்ற) பூத விரைவாக்கி யந்திரங்கள் பரமாணுக்களை மிகச் சக்தியூட்டிச் சோதிக்கத் தேவைப்படுகின்றன !

விஞ்ஞான மேதை டாக்டர் ஸ்டி·பென் ஹாக்கிங் (பிப்ரவரி 3, 1994)

மாபெரும் சக்தி வாய்ந்த மிக நுண்ணிய துகள்கள்தான் பிரபஞ்சத்தின் பெரும்பான்மைச் சக்தி இயக்கங்கள் பற்றிய வினாக்களுக்கு விடை அளிக்கின்றன.

ஸ்காட் வேக்லி, (Scott Wakely) துணைப் பேராசியர், சிகாகோ பல்கலைக் கழகம். (2006)

Fig. 1A

Large Hadron Collider

ஓர் எலெக்டிரானின் உள்ளே பயணம் செய்ய முடிந்தால், ஒளிந்திருக்கும் அதற்குரிய ஓர் அகிலத்தைப் பார்க்க முடியும் ! மேலும் அதற்குள்ளே காலாக்ஸிகளுக்கு ஒப்பான ஒளிமந்தைகளும் சிறிய அண்டங்களும், எண்ணற்ற நுண் துகள்களும் அடுத்த அகிலங்களாக இருக்கலாம் ! பரமாணுக் குள்ளேயும் அவ்விதம் முடிவில்லாமல் அடுத்தடுத்துப் பிரபஞ்சத்தில் பிரபஞ்சங்களாய் விண்வெளியில் உள்ளன போல் இருக்கலாம் !

ஒன்றுக்குச் சான்றுகள் இல்லாமை என்பது அது இல்லாமைக்குச் சான்றில்லை !

கார்ல் ஸேகன் (Carl Sagan) வானியல் துறை மேதை

மனதைக் துள்ள வைக்கும் உச்சநிலைச் சக்தி வானியல் பௌதிகம் (High Energy Astrophysics) நுட்பத் துகளை பிரமாண்டத்துடன் பிணைக்கிறது. இத்துறையில் எழுந்த முன்னேற்றக் கோட்பாடுகள் பிரபஞ்சத் துவக்கத்தின் நிகழ்ச்சிகளையும், அப்போது தோன்றிய பேரளவுச் சக்தி வாய்ந்த இயக்கங்களையும் உளவு செய்ய விஞ்ஞானிகளுக்கு உதவுகிறது. அத்துடன் அடுத்த சில ஆண்டுகளுக்கு மேலும் புதுக் கண்டுபிடிப்புகள் தோன்றுவதற்கு உறுதி அளிக்கின்றன.

கெல்லி ஜாகர், (Kellie Jaeger, Astronomy Magazine)

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே புரோட்டான்களும், நியூட்ரான்களும்தான் முதன்முதல் கண்டுபிடிக்கப்பட்ட மூலாதாரப் பரமாணுக்கள் (Subatomic Particles). அவை கண்டுபிடிக்கப்பட்ட சமயத்தில் அவைதான் அணுவின் பிளக்க முடியாத மூலப் பரமாணுக்களாய்க் கருதப்பட்டன. 1960 ஆண்டுகளில் அவற்றுக்கும் நுட்பமான துகள்களால் பரமாணுக்கள் உருவாகியுள்ளன என்று அறியப் பட்டது. புதுமுறைச் சோதனைகள் மூலம் புரோட்டான், நியூட்ரான் ஆகிய பரமாணுக்களின் உறுதியற்ற உள்ளமைப்பை இப்போது அழுத்தமாய்ச் சொல்ல முடிகிறது.

கிளாஸ் ரித் & ஆன்டிரியா சே·பர் (Klaus Rith & Andreas Schafer)

நுண்துகள் பௌதிகத்தின் நிலை பெற்ற மாதிரி விதி (The Standard Model of Particle Physics) விஞ்ஞான வரலாற்றில் வெற்றியின் உச்சத்திலும், அதைத் தாண்டிய முன்னேற்ற துவக்கத்திலும் கால அச்சின் மீது ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறது !

கார்டன் கேன், (Goron Kane) பௌதிகப் பேராசிரியர், மிச்சிகன் பல்கலைக் கழகம்.

Fig. 1B

Superconducting Magnets

பூத விரைவாக்கி யந்திரத்தின் புரட்சிகரமான முதல் சோதனை

2008 செப்டம்பர் 10 ஆம் தேதி ஜெனிவாவுக்கு அருகில் அடித்தளத்தில் கட்டப்பட்டுள்ள பூதகரமான செர்ன் வட்ட விரைவாக்கி அரணில் முதன்முதல் புரோட்டான் கணைகளை ஒட்டிய ஒளிவேகத்தில் எதிர்த்திசையில் முட்ட வைத்துத் துகள் பௌதிக விஞ்ஞானிகள் (Particle Physicists) வெற்றிகரமாக முதற்படிச் சோதனையைச் செய்து காட்டினார்கள்.

அந்த ஆராய்ச்சி மூலம் இதுவரைக் காணாத பிரபஞ்சத்தின் மூலாதாரத் துகள், "ஹிக்ஸ் போஸான்" (Higgs Boson) என்பது விளைந்திடுமா என்று விஞ்ஞானிகள் தேடினர். அப்போது சோதனையில் எழும் பேரளவு உஷ்ணத்தில் பெருஞ் சிதைவு ஏற்பட்டு வெடித்துக் கருந்துளை ஒன்று உருவாகிப் பூமி விழுங்கப்பட்டு விடும் என்று சில விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்து ஆராய்ச்சியைத் தடை செய்ய முயன்றார்கள் ! ஆனால் அப்படி ஒரு கருந்துளை உருவாகா தென்று பிரிட்டீஷ் விஞ்ஞான மேதை ஸ்டீ·பென் ஹாக்கிங் ஊக்கம் அளித்தார் ! மேலும் விஞ்ஞானிகள் பெரிதும் எதிர்பார்க்கும் ஹிக்ஸ் போஸான் அந்தச் சோதனையில் எழாது என்றும் ஸ்டீ·பென் ஹாக்கிங் நூறு டாலர் பந்தயம் வைத்தார் ! செர்ன் முதல் சோதனையில் ஹிக்ஸ் போஸான் துகள் எழாமல் போவதே நல்லதென்றும், அதனால் மற்ற விந்தையான விளைவுகளை உண்டாக்க வழிவகுக்கும் என்று ஹாக்கிங் விளக்கினார். இறுதியில் வெற்றி பெற்றவர் ஹாக்கிங்தான் ! புரோட்டான் ஒளிக்கணைகள் மோதிக் கொள்ளும் முதல் சோதனையில் ஹிக்ஸ் போஸான் மூலாதாரத் துகள் ஏனோ விளைய வில்லை !

Fig. 1C

Particle Detectors

முதல் சோதனையில் நல்ல செய்தி என்ன ? பூதப் பரமாணு உடைப்பி எனப்படும் [Large Hadron Collider (LHC)] செர்ன் (CERN) விரைவாக்கிச் சோதனையில் சிக்கலில்லை ! பிரச்சனை யில்லை ! தவறுகள் எதுவும் நேரவில்லை ! அசுரக் கருந்துளை உருவாகி நமது அருமைப் பூமியை விழுங்க வில்லை ! அத்துடன் ஹாக்கிங் எதிர்பார்த்தபடி ஹிக்ஸ் போஸான் துகள் காணப்பட வில்லை ! உலகத்திலே திறமையுள்ள விஞ்ஞானிகள் 20 ஆண்டுகளாய்க் காத்திருந்து செர்ன் இப்போது ஆரம்பிக்கத் துவங்கியுள்ளது. இந்த அசுர யந்திரம் பிரபஞ்சப் பெருவெடிப்பைப் போல் அரங்கத்தில் உருவாக்கி நுட்ப வினாடியில் வெளியாகுபவை எத்தகைய நுண்துகள்கள் (Tiniest Particles) என்று கருவிகள் மூலம் உளவப் படும், புரோட்டான் கணைகளை ஒளிவேகத்துக்கு ஒட்டிய வேகத்தில் எதிர்த் திசையில் மோத வைத்துப் பரமாணுக்களின் (Sub-Atomic Particles) வயிற்றுக்குள் இன்னும் புலப்படாமல் ஒளிந்துள்ள நுண்துகள்கள் எவையென்று அறியப்படும் !

செர்ன் விரைவாக்கியின் உன்னத நிறுவக அமைப்புகள்

4 பில்லியன் டாலர் செலவில் உருவான செர்ன் விரைவாக்கி யந்திரம் ஜெனிவாவுக்கு அருகில், 150-500 அடி (45-150 மீடர்) ஆழத்தில் 17 மைல் (27 கி. மீடர்) நீளமுடைய வட்ட அரணில் அமைக்கப் பட்டிருக்கிறது. 1995 இல் கட்டுமான வேலைகள் தொடங்கி 13 ஆண்டுகளாகக் கட்டப்பட்ட நவீன செர்ன் விரைவாக்கியில் பணிபுரிவோர் 80 உலக நாடுகளைச் சேர்ந்த 500 பல்கலைக் கழகங்களின் உயர்ந்த 10,000 விஞ்ஞானிகள் ! அவர்களில் 1200 விஞ்ஞானிகள் அமெரிக்காவிலிருந்து சென்றவர். செர்ன் விரைவாக்கி யந்திரத்துக்கு ஆகும் செலவில் அமெரிக்காவின் பங்கீடு : 531 மில்லியன் டாலர் ! செர்ன் விரைவாக்கி யந்திரத்தை இயக்கிச் சோதனைகள் புரியச் செலவாகும் மின்சக்தி ஆற்றல் 120 மெகாவாட் ! அந்த அசுர ஆற்றலில் 1600 மின்காந்தத் தீவிரக் கடத்திகள் (Superconducting Magnets) புரோட்டான்களைப் படிப்படியாக ஒரு திசையில் ஒட்டிய ஒளிவேகத்தில் (99.9999 % ஒளிவேகம்) உந்த வைத்து, அவை 17 மைல் நீள வட்டக் குகை அரணில் ஏவப்படுகின்றன. அதேபோல் எதிர்த்திசையில் புரோட்டான்கள் ஒட்டிய ஒளிவேகத்தில் உந்திச் சென்று இரண்டு ஒளிக்கற்றைகளும் மோதிக் கொள்கின்றன ! பரமாணுக்கள் ஒட்டிய ஒளிவேகத்தில் எதிர்த்திசைகளில் பயணம் செய்து முட்டும் போது பேரளவு வெப்பச் சக்தி உண்டாகுகிறது ! மெய்யாகக் குகை அரணில் புரோட்டான் ஒளிக்கணைகள் மோதும் போது ஒரு சிறு பெரு வெடிப்பு உள்ளே நிகழ்கிறது.

Fig. 1D

A Proton Journey

உலகப் பெரும் விரைவாக்கி யந்திரம் புரோட்டான் கணைகள் மோதுதலின் போது 13 அடி (3.8 மீடர்) விட்டமுள்ள வட்டக் குகை அரண் சூடேறுவதால் அது தொடர்ந்து குளிர்ப்படுத்துச் சாதனங்களால் (Refrigerating Units) வெப்பத் தணிப்பு (-271 டிகிரி) செய்யப்பட வேண்டும். பேராற்றல் மிக்க மின்காந்தக் கடப்பிகள் தொடர்ந்து திரவ ஹீலியத்தில் வெப்பத் தணிப்பு செய்யப்படுகின்றன. 17 மைல் நீளக்குகையில் இரண்டு இணையாகச் செல்லும் புரோட்டான் ஒளிக்கணைகள் (Two Parallel Proton Beams) பயணம் செல்லும். எதிர்த்திசையில் செல்லும் ஒளிக்கற்றைகள் மோதிக் கொள்ளும் வீதம் வினாடிக்கு ஒரு பில்லியன் தடவைகள் ! அவற்றின் விளைவுகளைப் பதிவு செய்ய 3000 கணனிகள் பாதையில் அமைக்கப் பட்டுள்ளன. அவை ஒரு பில்லியன் மோதல்களை வடிகட்டி அவற்றில் 100 மிக முக்கிய மோதல்களாகச் சேமிக்கின்றன. அத்தகவல் பல்கலைக் கழகங்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் அங்கிருந்து அனுப்பப் படுகிறது.

Fig. 1E

Fundamental Particles

விரைவாக்கியில் பெரு வெடிப்பு இயக்கமும் நுண்துகள்களை உளவும் கருவிகளும்

1. அட்லாஸ் உளவி (ATLAS Detector - A Toroidal LHC Apparatus) : 150 அடி (46 மீடர்) நீளமுள்ள இந்தக் கருவி எல்லாவற்றிலும் பெரியது. 7000 டன் எடை கொண்ட இக்கருவி ஐ·பெல் கோபுரத்தின் எடையை நெருங்கியது ! அதன் இணைப்புக் கம்பிகள் 3000 எண்ணிக்கை அளவு ! அதை அமைக்க 300,000 டன் பாறைகளைத் தகர்க்க வேண்டிய தாயிற்று ! 50,000 டன் காங்கிரீட் ஊற்ற வேண்டி தாயிற்று ! அட்லாஸ் உளவி 3200 டெர்ராபைட்ஸ் பச்சைத் தகவல் (Terabytes of Raw Data) ஓராண்டில் சேமிக்கும் ! இரண்டு கருவிகள் உள்ளன. அவை பிண்ட ஆரம்பத்தைக் காணும். புதிய பௌதிகம், பிறப் பரிமாணம் (Extra Dimension) காணும்.

பத்து மணிநேரச் சோதனையில் ஒளிக்கணைத் துகள்கள் (Particles Beam) 10 பில்லியன் கி.மீடர் தூரத்துக்கும் மிஞ்சிப் பயணம் செய்கின்றன ! அந்த தூரத்தை காட்ட முடிந்தால் பூமியிலிருந்து நெப்டியூன் சென்று மீள்வதை ஒத்தது ! ஒளிக்கணையின் வெப்பச் சக்தி ஆற்றலைக் கணக்கிட்டால் ஒரு கார் மணிக்குச் சுமார் 1000 மைல் (1600 கி.மீடர்) வேகத்தில் செல்லத் தேவையான எரிசக்திக்கு ஒப்பாகும் ! LHC மோதல் [Large Hadron Collider (LHC)] உற்பத்தி செய்யும் சக்தி 14 டெட்ரா எலெக்டிரான் வோல்ட் (14 Tetra eV) or 14 TeV. (One TeV is the equivalent Energy of motion of a flying mosquito).

2. CMS Detectors (Compact Muon Solenoid) : இதுதான் ஹிக்கிஸ் போஸான்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் கருவி. கரும்பிண்டத்தின் இயற்கைப் பண்பாடை உளவும்

Fig. 1F

Quarks & Leptons

3. ALICE (A Large Ion Collider Experiment) : இது திரவப் பிண்டத்தைக் கண்டுபிடிக்கும்.

(Liquid form of Matter called Quark-Gluon Plasma that existed shortly after the Big Bang)

4. LHCb (Large Hadron Collider Beauty) : பெரு வெடிப்பில் தோன்றிச் சரிபாதி இருக்கும் பிண்டம், எதிர்ப்பிண்டம் (Matter & Anti-Matter) ஆகியவற்றைக் கண்டுபிடிப்பது. இழந்து போன எதிர்ப்பிண்டத்துக்கு என்னவாயிற்று என்று உளவு செய்யும்.

பூத விரைவாக்கி யந்திரங்களில் அடிப்படைத் துகள்கள் சோதனை

சுவிட்ஜர்லாந்தின் தென்மேற்கு மூலையில் ஜெனிவாவுக்கு அருகில் அமைந்துள்ள "செர்ன்" (CERN Particle Accelerator) அடித்தளக் குகைக் குழல்களில் சூரியனை மிஞ்சிய உஷ்ணத்தை உண்டாக்கி, விஞ்ஞானிகள் அணுவின் அடிப்படைத் துகள்களை உண்டாக்கி ஆராய்ச்சி செய்து வருவார்கள். செர்ன் ஐரோப்பிய விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகள் நடத்தும் அடிப்படைத் துகள் விரைவாக்கி ஆய்வுக் கூடம். நான்கு மைல் நீளமாகச் சுருண்ட குழலில் அமைக்கப் பட்ட, உலகிலே மிகப் பெரிய ஒரு பூத விரைவாக்கி. அந்த வீரிய காந்தக் குழல்களில் 7000 டிரில்லியன் [(1 Trillion = 10^12) 1 followed by 12 Zeros] டிகிரி செல்ஸியஸ் உஷ்ணம் உண்டாக்கப் படுகிறது ! செர்ன் விரைவாக்கியை ஒரு பூத நுண்ணோக்கிக் கருவியாகப் பயன்படுத்தி விஞ்ஞானிகள், பிண்டத்தின் அணுவுக்குள்ளே அடங்கியுள்ள பரமாணுக்களின் அகிலத்தைக் கடந்த 50 ஆண்டுகளாக உளவு செய்து புதிய மூலத் துகள்களைக் கண்டுபிடித்துள்ளார்கள்.

Fig. 1G

Quarks & Bosons

1960 ஆண்டு முதல் விரைவாக்கி யந்திரங்களில் அணுவின் 12 மூலாதாரத் துகள்களைப் பற்றி விஞ்ஞானிகள் இதுவரை அறிந்துள்ளார்கள். அணுவின் உள்ளமைப்பு எளிதானது என்னும் பழைய பௌதிகக் கருத்துக்கு அவை எதிர்த்து நின்றன ! 1961 இல் முர்ரே ஜெல்மன் (Murray Gellmann) 8 அடுக்கு வழியின் மூலம் அடிப்படைத் துகள்களின் கணிதச் சீரமைப்பை (Eightfold Way to Relate Particles by Mathematical Symmetry) எடுத்துக் கூறினார். அடுத்து தனியாக ஜியார்ஜ் ஸ்விக் என்பவர் (George Zweig) இன்னும் அடிப்படையான "குவார்க்ஸ்" போன்ற துகள்களைக் காட்டி, துகள்கள் சீரமைப்பை விளக்கினார். முதலில் மூன்று குவார்க்குகள்தான் உள்ளன என்று கூறினர். பிறகு 1974 இல் பர்டன் ரிக்டர் (Burton Richter) என்பவர் இரண்டு மைல் நீள "ஸ்டான்·போர்டு நேர்போக்கு விரைவாக்கியில்" (Stanford Liner Accelerator) நான்காவது குவார்க் கண்டுபிடிக்கப் பட்டது. அதே சமயத்தில் ஸாமுவேல் திங் (Samuel Ting) என்பவரும் அதைக் கண்டுபிடித்தார்.

1977 இல் ·பெர்மி ஆய்வகத்தின் (Fermilab) லியான் லேடர்மான் (Leon Lederman) மிகக் கனமான ஐந்தாவது குவார்க்கைக் கண்டுபிடித்தார். அடுத்து 1984 இல் ஐரோப்பாவில் செர்ன் ஆய்வகத்தில் ஆறாவது குவார்க் காணப் பட்டது. ஆறு குவார்க்குகள் மேல், கீழ், நளினம், நூதனம், உச்சம், நீச்சம் (Up, Down, Charm, Strange, Top & Bottom) என்று பெயரிடப் பட்டன. அந்த ஆறு வகை குவர்க்குகள் மேலும் மூன்று நிறப் பிரிவில் "சிவப்பு, பச்சை, நீலம்" என்று கூறப்பட்டன. முதல் நிலை மாதிரி அட்டவணையில் (Standard Model) மூலாதாரத் துகள்கள் ஆறு குவார்க்குகள், ஆறு லெப்டான்கள், ஐந்து போஸான்கள், [ஹிக்ஸ் என்னும் ஆறாவது யூகிப்பு போஸான் பிறகு இணைந்தது). பிறகு மூன்று இயக்க விசைகள் (Physical Forces). குவார்க்குகள் கனமான அடிப்படைத் துகள்கள். லெப்டான் என்பவை பளு குன்றிய அடிப்படைத் துகள்கள். போஸான்கள் மூன்று வித விசைகளைக் (Strong & Weaker Nuclear Forces, Electromagnetic Forces) கொண்டு செல்பவை (Bosons are Force Carriers). (ஈர்ப்பு விசை இன்னும் சேர்க்கப் படவில்லை). குளுவான் என்பது குவார்க்குகளைப் பிணைத்திருக்கும் பிசின். குவார்க்குகளும், லெப்டான்களும் ·பெர்மியான்கள் (Fermions) என்று அழைக்கப் படுகின்றன.

Fig. 2

CERN Control Room & other

Facilities

பிரபஞ்சத்தின் புதிய அடிப்படைத் துகள்களும் அவற்றின் பிணைப்புகளும்

விண்வெளியில் மினுமினுக்கும் எண்ணிலா விண்மீன்கள் முதலாக நமது மூலாதார டியென்னே (DNA) அணுக்கள் வரை, அனைத்துப் பிண்டங்களும் (Matter) குறிப்பிட்ட சில அடிப்படைத் துகள்களைக் (Fundamental Particles) கொண்டவை. பிளக்க முடியாது எனக் கருதப்பட்ட அணுக்கருவின் புரோட்டானும், நியூட்ரானும் மிக நுண்ணிய குளுவான்கள் கொண்டவை என்று அறியப்பட்டது. மூலாதாரமான அந்த நுண்துகள்களை மேலும் பிளக்க முடியாது. அவை புரோட்டான், நியூட்ரான் போலத் தனித்துக் காணப்படாதவை. பிரித்து எடுக்க முடியாதவை. 1960 ஆம் ஆண்டுக்கு முன்பு விஞ்ஞான மேதைகள் ரூதர்·போர்டு (1871-1937), நீல்ஸ் போஹ்ர் (1885-1962) ஆகியோர் முன்னோடிகளாய் விளக்கிய அணு அமைப்பின் உட்கருவில் புரோட்டான்களும், நியூட்ரான்களும் உள்ளன வென்றும், அவற்றை எலெக்டிரான்கள் சுற்றி வருகின்றன வென்றும் கூறினார்கள். அதாவது எலெக்டிரான், புரோட்டான், நியூட்ரான் ஆகியவை அணுவின் பிளக்க முடியாத அடிப்படைத் துகள்கள் என்று ஒருகாலத்தில் கருதினார்கள். அந்தப் பூர்வீகக் கருத்து 1960 ஆண்டுகளில் மாறிவிட்டது.

Fig. 3

High Energy Physics

1960-1970 ஆண்டுக்களில் அடிப்படைத் துகள்கள் பற்றிய பூர்வீக அணுவியல் அமைப்புச் சித்தாந்தம், பின்னால் வந்த விஞ்ஞானிகளால் திருத்தப் பட்டது. பிரபஞ்சத்தின் புதிய அடிப்படைத் துகள்களில் முதலாகக் "குவார்க்குகள்" (Quarks) என்பவை அறியப் பட்டது. குவார்க்குகளை அசுர வலுவுடன் பிணைத்துள்ள "குளுவான்" (Gluon) பற்றி அறியப்பட்டது. ஆறு வகையான குவார்க்குகள் இருப்பது தெரிய வந்தது. அதாவது குவார்க்குகள் << மேல், கீழ், நளினம், நூதனம், உச்சம், நீச்சம் >> (Up, Down, Charm, Strange, Top, Bottom) என்று ஆறு விதத்தில் நினைவில் நிற்கும் எளிய பெயர்களில் குறிப்பிடப் பட்டன. பளுவின்றி மெலிந்த குவார்க்குகள் "மேல்," "கீழ்" என்று இரு விதத்தில் இருப்படுபவை. குவார்க்குகள் இரண்டும் பொதுவாக அணுவின் உட்கருவில் உள்ள புரோட்டான், நியூட்ரான் ஆகியவற்றில் இருப்பவை.

பிரபஞ்சத்தில் குவார்க்குகள் வலுமிக்க விசையால் (Strongest Force) ஒன்றை ஒன்று இறுக்கமாகப் பிணைத்துக் கொண்டுள்ளன. அதாவது குவார்க்குகள் தனியாக இருக்க மாட்டா ! ஒரு குவார்க் மற்ற குவார்க்குடன் வலுவுள்ள விசையால் பரமாணுக்களுக்குள் எப்போதும் இணைந்தே இருப்பது. அந்த வலுவான விசை குளுவான் அல்லது ஒட்டுவான் (Gluon) என்று அழைக்கப்படுகிறது. அப்படிப்பட்ட அடிப்படைத் துகள்களால் கட்டப் பட்டவையே இந்த பிரபஞ்சமும் அதன் உள்ளே நகரும் கோடான கோடிப் பிண்டப் பொருட்களும் என்பது அறியப்படுகிறது. அத்தகைய மூலாதாரக் குவார்க்கையும் அவற்றைப் பிணைத்துள்ள அசுர வலுவான விசையையும் ஆழ்ந்து அறிவதே இப்போது விஞ்ஞானிகளின் பிரதமக் குறிக்கோளாக உள்ளது. பூமியின் மீது பொழிந்து விழும் அகிலக் கதிர்களில் (Cosmic Rays) ஏராளமான அடிப்படைத் துகள்கள் உள்ளன ! அவற்றில் 90% புரோட்டான்கள், எலெக்டிரான்கள். அவற்றைத் தவிர மேஸான், நியூட்ரினோ, பாஸிட்ரான், மியூவான், சியான் போன்றவையும் விழுகின்றன.

Fig. 4

Particle Accelerators

தற்போதிருக்கும் விஞ்ஞானக் கருவிகளால் அளக்க முடியாதபடிக் குவார்க்குகள் மிக மிக நுண்ணியவை. அவற்றின் பளுவை நிறுக்க முடியாது. குவார்க்குகளைப் பிரிக்க முடியாது. ஒரு புரோட்டானைப் பிளக்க முயலும் போது, குவார்க்குகள் பத்து டன் விசை வலுவுடன் ஒட்டிக் கொள்கின்றன. அவை மிக நுட்பமாக இருப்பதால் புரோட்டானுள் பில்லியனில் ஓரளவான இடத்தைப் பிடித்துக் கொள்கிறது. புரோட்டான் பளுவிலும் மிகச் சிறிய விகிதமாகக் குவார்க் உள்ளது. புரோட்டானில் குவார்க்குகள் அடைத்துக் கொண்ட சிற்றிடம் போகக் காலியாகக் கிடக்கும் இடத்தில் இருப்பதென்ன என்னும் வினா எழுகிறது. அந்தக் காலி மனையில்தான் குளுவான் எனப்படும் பிசின் குவார்க்குகளைப் பிணைக்கும் ஒட்டு விசையாக நிரப்பிக் கொண்டுள்ளது ! அத்தகைய குவார்க், குளுவான் பிசினே பிரபஞ்சத்தின் 98% பளுவாகவும் பரவியுள்ளது ! இயற்கையானது கோடான கோடி முறைகளில் பளுவில்லா குவார்க்குகளையும், வலுவான குளுவான்களால் பிணைத்து பிரபஞ்சத்தைப் படைத்துள்ளது !

Fig. 5

CERN Circular Cotainment

செர்ன் விரைவாக்கியில் நடக்கும் உளவுச் சோதனைகள்

ஹைடிரஜன் மூலக்கூறுகளிலிருந்து எழுகின்ற புரோட்டான் ஒளிக்கணைகள் (Proton Beams) ஒட்டிய ஒளிவேகத்தில் வட்ட அரண் பைப்பில் 10,000 இல் ஒரு பங்கு வினாடியில் ஒரு முறைச் சுற்றி விடுகின்றன ! LHC விரைவாக்கி மிக்க நவீனச் சாதனம் ! பேரிச்சையில் அமைக்கப் பட்ட சாதனம் ! செர்ன் விரைவாக்கி எப்படிப் பிரபஞ்சம் தோன்ற ஆரம்பித்தது ? முதற்சில நுட்ப பின்ன வினாடிகளில் உண்டான மூலாதாரப் பிண்டத் துகள்கள் எவை ? புதிரானக் கரும்பிண்டம், புரியாத கருந்துளை எவ்விதம் உதித்தன ? போன்ற வினாக்களுக்கு விடைகாண உதவி செய்யும். விரைவாக்கியின் வட்ட அரணில் புரோட்டான் ஒளிக்கணைகள் வினாடிக்கு 600 மில்லியன் தடவை நேர்முட்டு மோதி (Head-on Collisions) ஒரு நுட்பப் பேரொளிக் கோளத்தை (Minuscule Fire Ball) எழுப்பி முதல் 10^12 இல் 1 வினாடியில் (One Millionth of a Millionth Second) நேர்ந்த பெரு வெடிப்புக் காட்சியை அரங்கேற்றுகிறது ! அந்தக் காட்சி நிகழ்ச்சியில் துகள் பௌதிக விஞ்ஞானிகள் இதுவரைக் காணாத மூலாதார ஹிக்ஸ் போஸானைக் காணப் போவதாக எதிர்பார்க்கிறார். ஒளித்துகள் விஞ்ஞானிகள் இதுவரை ஏன் புரோட்டான், நியூட்ரான் ஆகிய பரமாணுக்களும் அவை நிரம்பிய மூலகங்களும் நிறை பெற்றன வென்று விளக்கிய தில்லை ! அவ்விதம் நிறை அளிப்பவை ஹிக்ஸ் போஸான் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார் ! "செர்ன் விரைவாக்கிச் சோதனை மோதல்களில் ஹிக்ஸ் போஸான் காணப்பட வில்லை என்றால், விஞ்ஞானிகளுக்கு அது பெரும் அதிர்ச்சியைத் தரும்," என்று ஹார்வேர்டு கோட்பாடு விஞ்ஞானி லிஸா ரான்டல் கூறுகிறார் !

Fig. 6

CERN Particle Smasher

++++++++++++++++++++++++++

தகவல்:

Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.

1. Our Universe - National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)

2. 50 Greatest Mysteries of the Universe - How Many Planets are in the Solar System ? (Aug 21, 2007)

3. Astronomy Facts File Dictionary (1986)

4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)

5. Sky & Telescope - Why Did Venus Lose Water ? [April 2008]

6. Cosmos By Carl Sagan (1980)

7. Dictionary of Science - Webster's New world [1998]

8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)

9. Atlas of the Skies - An Astronomy Reference Book (2005)

10 Hyperspace By : Michio kaku (1994)

11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)

12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)

13 National Geographic - Frontiers of Scince - The Family of the Sun (1982)

14 National Geographic - Living with a Stormy Star - The Sun (July 2004)

15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)

16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)

17 The Geographical Atlas of the World, University of London (1993).

18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)

19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)

20 Astronomy Magazine - What Secrets Lurk in the Brightest Galaxies ? By Bruce Dorminey (March 2007)

21 National Geographic Magazine - Dicovering the First Galaxies By : Ron Cowen (Feb 2003)

22 Astronomy Magazine Cosmos - The First Planet By : Ray Villard & Adolf Schaller & Searching for Other Earths By : Ray Jayawardhana [Jan 2007]

23 Discover Magazine - Unseen Universe Solar System Confidential [Jan 2007]

24 The Search for Infinity - Solving the Mysteries of the Universe By : Gordon Fraser (1995)

25 CERN Large Hadron Collider - Particle Physics - A Giant Takes on Physics' Biggest Question By : The New York Times (May 15, 2007)

26 CERN Fires up the New Atom Smasher to Near Big Bang By : Alexander Higgins [Sep 7, 2008]

27 World's Largest Atom Smasher (CERN) Completion [March 26, 2008]

28. Time Magazine Report - The Moment [September 10, 2008] Geneva [Sep 22, 2008]

29 CERN Atom Smasher - Latest Wikipedia Report

******************

jaya...@tnt21.com [Setember 18, 2008]

faint_grain.jpg
imstp_animation_monkey_en_020908.gif

வேந்தன் அரசு

unread,
Nov 4, 2009, 9:23:05 PM11/4/09
to tamil...@googlegroups.com, தமிழமுதம்


4 நவம்பர், 2009 3:36 pm அன்று, Mani Manivannan <mmani...@gmail.com> எழுதியது:

கெமிஸ்ட்ரி என்ற சொல்லுக்கு வேதியியல் என்ற தமிழ்ச்சொல்லை நாற்பதாண்டுகளாகத் தமிழ்நாட்டு அரசுப் பாட நூல்களில் வழங்குகிறார்கள்.  (அது வேதியல் இல்லை வேதியியல்.)   இதற்கு முன் ரசாயனம், ரஸாயனம் என்ற சொற்கள் புழக்கத்தில் இருந்தன. 



வேதியியல் இன்னொரு வகையில் சால பொருத்தமானசொல்

வேது என்றால் வெப்பம்

எல்லா வேதி வினைகளும் வெப்பம் சார்ந்தவை. இரண்டு தனிமங்கள் ஏன் கலவி புரிகின்றன் எனில் அவற்றின் கூடலால் அவற்றின் மொத்த வெப்ப அளவு தனித்தனியாக இருக்கும் போது உள்ள வெப்ப அளவைவிட குறைவாக இருக்கும். பல வேதி வினைகளில் வெப்பம் வெளியாவதன் காரணம் இதுவே.



--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”

S. Jayabarathan

unread,
Nov 4, 2009, 10:46:04 PM11/4/09
to tamil...@googlegroups.com

Philosophy   மெய்ப்பாடில்லை.   இவை உதாரணங்கள் : 

2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கிரேக்க கணித மேதை பித்தகோரஸ் [Pythagoras], பூமியை ஒரு கோளமாகக் கருதி, அது மற்ற அண்டங்களுடன் அக்கினி மையமானச் சூரியனைச் சுற்றி வருகிறது என்று அப்போதே கூறியிருக்கிறார்! அண்ட கோளங்கள் யாவும் சீரிய ஓர் கணித ஒழுங்கைக் கடைப்பிடித்து, நீண்ட இடைவெளியில் சீரிய கால வேறுபாட்டில் சுற்றி வருகின்றன என்றும் அறிவித்துள்ளார்! ஆனால் அவருக்குப் பின் வந்த கிரேக்க ஞானிகளில் சிலர் மாறுபட்ட கருத்தை உபதேசித்து வந்தார்கள்!

கிரேக்க வேதாந்தி அரிஸ்டாடில் [Aristotle (384-322 B.C.)] பூமி உருண்டை வடிவானது என்பதற்கு இரண்டு உதாரணங்களைக் காட்டினார்! கடலில் மிதந்து வரும் கப்பலின் பாய்மரக் கம்ப நுனிதான் முதன் முதலாகத் தொடுவானில் தெரிகிறது! கப்பல் கரையை நோக்கி நெருங்க, நெருங்க கம்பத்தின் முழு உயரத்தையும் காண முடிகிறது! அடுத்து சூரிய கிரகணத்தின் போது, சந்திரனில் படும் பூமியின் நிழல் வளைந்து காணப் படுகிறது! கோள வடிவில் பூமி இருந்தால்தான் நிலவில் அம்மாதிரி வளைவு நிழலை உண்டாக முடியும்! பூமியை மையமாகக் கொண்டு சூரியனும் மற்ற கோள்களும் சுற்றி வருகின்றன என்ற கொள்கையை ஊகித்தவர்களில் அவரும் ஒருவர்! அந்த அரிஸ்டாடில்தான், கிரேக்க மேதை பிளாட்டோவின் சீடர், மகா அலெக்ஸாண்டரின் மாண்பு மிக்க குரு!

கிரேக்க வானியல் மேதை, அரிஸ்டார்ச்சஸ் [Aristarchus (310-230 B.C.)] பூமி தானே தன்னச்சில் சுழல்வதையும், பூமி சூரியனைச் சுற்றி வருவதையும் எடுத்துக் கூறியவர்! பரிதியை மையமாகக் கொண்டு [Sun-centered or Heliocentric] சுற்றிவரும் அண்ட கோளங்கள் அமைந்த ஓர் பிரபஞ்சத்தை அவர்தான் முதன் முதல் அறிவித்தவர்! அவரது கோட்பாடு சூரிய சந்திர கோளங்களின் வடிவளவையும், பூமியிலிருந்து அவற்றின் தூரத்தையும் கணக்கிட உதவியது! பரிதி நிலவை விட மிகப் பெரிதென்றும், அது சந்திர தூரத்தை விட வெகு தொலைவில் உள்ளதென்றும் கூறினார். ஒரு கோள உருண்டையைத் தயாரித்து, அதனுள்ளே சூரியனை மையத்தில் வைத்து, விண்மீன்களை அப்பால் விளிம்பில் இட்டு, பிரபஞ்ச அமைப்பைக் காட்டினார்.

கிரேக்க நிபுணர் எராடோஸ்தெனிஸ் [Eratosthenes (276-194 B.C.)] பூமியின் சுற்றளவை 4% துல்லியத்தில் கணித்து, வானியலில் ஒரு மைல் கல்லை நிலை நாட்டினார். எகிப்தில் அலெக்ஸாண்டிரியா, ஸைன் [அஸ்வான்] என்னும் இரு நகரில் உள்ள நிழல்களை உச்சிப் பொழுதில் ஒப்பிட்டு, அவ்விரு நகரங்களின் இடைத் தூரத்தைக் கணித்தார்! அதே முறையைக் கையாண்டு பூமியின் சுற்றளவை 24,000 மைல் என்று முதன் முதலில் கணக்கிட்டார்! மேலும் பூமி தானே சுற்றும் சுழல் அச்சின் சாய்வையும் [Tilt of Earth Axis] துல்லியமாக அவர் கணக்கிட்டார்.

கிரேக்க மேதை ஹிப்பார்ச்சஸ் [Hipparchus (190-120 B.C.)] விண்மீன்களின் அட்டவணையைத் தயாரித்து, முதல் வானவெளிப் படத்தை வரைந்தார். நிலையான விண்மீன்களின் கூட்டமைப்புகளைக் கண்டு [Constellations of Stars] பதிவு செய்தார். அவர் துல்லியமாகக் கணித்தவை: பூமி பரிதியைச் சுற்றி வரும் ஓராண்டு காலத்தின் நாட்கள், இரவு பகல் சமமாக வரும் நாட்கள் [Equinoxes], நிலவின் தூரம் ஆகியவை! அடுத்து விண்கோள் அளப்புக் கோளம் [Astrolabe] ஒன்றையும் அமைத்தார்.

கி.பி. 87-150 ஆண்டுகளில் வாழ்ந்த டாலமி [Ptolemy] கிரேக்க வானியல் ஞானிகளின் இளவரசர் [Prince of Astronomers] என்று போற்றப்படும் மேதை! அரிஸ்டாடில் ஊகித்த தவறான பூமைய [Geo-centric or Earth centered] அமைப்பான பிரபஞ்சத்தை டாலமி கடைப்பிடித்தார்! ஆயினும் அக்கொள்கை ஐரோப்பிய நாடுகளில் அடுத்து 1500 ஆண்டுகளாய் நம்பப் பட்டு வந்தது! அரிஸ்டாடிலின் பூமையப் பிரபஞ்ச வடிவுக்கு, டாலமி ஓர் கணித அமைப்பையும் [Mathematical Model] உண்டாக்கினார்! அண்டக் கோள் சில சமயம் விரைவாக நகர்வதையும், சில சமயம் மெதுவாகச் செல்வதையும், சில சமயம் நிற்பதுபோல் தோன்றி பின்னோக்கிப் போவதையும் [Retrograde Motion] முதலில் கண்டார்! கோள்களைச் சிறு வட்ட விளிம்பில் வைத்து, அவ்வட்டத்தை மற்றுமொரு பெரிய வட்டத்தில் சுற்றி வரும்படி [Epicycles] அமைத்துக் காட்டினார்! அதுவே அவர் கருதிய பிரபஞ்ச அமைப்பு!

 
+++++++++++++++++
 
-------Original Message-------
 
Date: 04/11/2009 4:19:20 PM
Subject: [தமிழ் மன்றம்] Re: [அன்புடன்] Re: [தமிழ் ம�(R)�்றம்] மூன்று தமிழ்ச் சொற்கள் (For Physics, Chemistry & Philosophy)
 

iraamaki

unread,
Nov 5, 2009, 12:56:47 AM11/5/09
to tamil...@googlegroups.com
தனி மாந்தர் பெயர்களை அவர்கள் மொழியில் எப்படிப் பலுக்கினாரோ அப்படியே எழுதவேண்டும் என்று சொல்லிக் கந்தெழுத்தைப் (அதாங்க, உங்க க்ரந்தம். இந்தச் சொல்லின் அடிப்படைப் பொருள் தமிழில் தான் இருக்கிறது. இதையெல்லாம் விளங்கிக் கொள்ள உங்களுக்கு எங்கே பொறுமையும், நேர்மையும் இருக்கிறது? எனவே அதை விடுப்போம்.) பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் நீங்கள் படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோயிலா? உங்கள் கட்டுரையில் நீங்கள் எழுதும் பெயர்களைச் சரியானபடி எழுதக் கூடாதோ?
 
Aristarchus (Greek: Ἀρίσταρχος, Arístarchos; 310 BC – ca. 230 BC என்பதை அரிஸ்டார்ச்சஸ் என்று எழுதியிருக்கிறீர்கள். கிரேக்க ஒலிப்பின் படி அவன் பெயர் அரிஸ்டார்க்கஸ்.
 
Hipparchus or Hipparch (Greek: Ἵππαρχος, Hipparkhos; c. 190 BC – c. 120 BC) என்பதை ஹிப்பார்ச்சஸ் என்று எழுதியிருக்கிறீர்கள். அவன் பெயர் ஹிப்பார்க்கஸ்.
 
முன்னால் இராமனுஜன் பற்றிய எழுதிய கட்டுரையிலும் லியனார்டு யூளார் [Leonhard Euler] என்று எழுதியிருந்தீர்கள். அதுவும் தவறு. செருமானிய பலுக்கலின் படி அவர் லியனார்ட் ஆய்லர். (உங்கள் கொள்கையின் படி அவர் லியனார்ட் இல்லையோ? எங்கள் பழக்கத்தின் படி தானே லியானார்டு ஆகவேண்டும்? எப்பொழுது “உஜாலாவுக்கு” மாறினீர்கள்?) உங்கள் கொள்கையை நீங்களே பின்பற்ற மாட்டீர்கள் போலும். (தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று சொல்லிக் கொள்வோம். கடைப்பிடிக்கவெல்லாம் வேண்டாம் இல்லையா?) உங்களுடைய கட்டுரைகளை மேலும் படித்தால், இது போன்ற குறைகள் பெரிதும் விரவியிருப்பது நன்றாகத் தெரிகிறது.
 
என்ன செய்வது? அந்தந்த இயலின் தொடர்பில்லாமல், அதில் ஆழ்ந்து தோய்ந்து போகாமல், தமக்குப் புலமையில்லாத துறையில், சகட்டுமேனிக்கு இணையம், பொதுக் களஞ்சியம் போன்ற இடங்களில் இருந்து விவரங்களைச் சேகரித்து ஒரு விவரிப்புக் கட்டுரை உருவாக்கினால், இப்படித்தான் விந்தையான எழுத்துப் பெயர்ப்புகளும், வேடிக்கையான சொல்லாக்கங்களும் வந்து சேரும்.
 
உலகில் உள்ள எல்லா மொழிகளுமா, நமக்குத் தெரியும்? அது இயலாத செயல். இந்த நிலையில் ஒருமொழிப் பெயர்கள் இன்னொரு மொழியிற் பெயரும் போது, விதவித உருவங்களையும், ஒலிப்புகளையும் எடுக்கும் என்பதற்கு உங்கள் கட்டுரைகளே எடுத்துக் காட்டு. ஆனாலும் வெற்றுவாதம் செய்வதிலும், தனக்கு ஆகாதவர்கள் செய்தால் அதைக் கிண்டல் அடிப்பதிலும், நீங்கள் சவடாற் புலி. “கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்து .....” என்று ஒரு பாட்டு உண்டு. எனவே சவடாற் புலியாய் வேயம் கட்டுவதில்லாமல் வான்கோழியாயும் நடமாடிக் கொண்டிருக்க என் வாழ்த்துக்கள்.
 
தான் என்ன தப்பு வேண்டுமானாலும் செய்யலாம்; இன்னொருவர் கந்தெழுத்தைத் தவிர்த்துத் தமிழெழுத்தைப் புழங்கினால் அது தவறு; கிண்டல் செய்யலாம். இல்லையா? :-))))))
 
அன்புடன்,
இராம.கி.
----- Original Message -----
stampa_girl_line_en.gif

Mani Manivannan

unread,
Nov 5, 2009, 8:07:28 AM11/5/09
to tamil...@googlegroups.com, தமிழமுதம்
பெரியவர் ஜெயபாரதன் அவர்களுக்கு,
 
முதலில் சில குழப்பங்களைத் தீர்ப்போம்.
 
மெய்ப்பாடு வேறு.  மெய்யறிவியல் வேறு.
 
மெய்ப்பாடு என்பது உள்ளத்தின் உணர்வுகளை வெளியே காட்டுவது.  அபிநயம் என்று வடமொழியில் சொல்வார்கள்.
 
ஃபிலாசஃபி என்பது மெய்ப்பாடு என்று யாரும் சொல்லவில்லை.
 
மெய் அறிவு இயல்.
 
உண்மையைக் கண்டறிய முயலும் அறிவியல்.
 
நீங்கள் கொடுத்த எடுத்துக் காட்டுகள் அனைத்தும் அதைத்தான் குறிக்கின்றன.  மெய்யறிவியல் யாரையும், எந்தக் கொள்கையையும், கடவுள் கொடுத்தது என்று ஏற்றுக் கொள்வதில்லை.  முன்னோர்கள் கண்டுபிடித்தது எதுவாய் இருந்தாலும் அதைக் கேள்விக்கு உள்ளாக்கி, மீள்பார்வையுடன் பிழைகளைத் திருத்த முயல்கிறார்கள்.
 
வேதாந்தம் அப்படி இல்லை.  வேதம் என்பது மறை பொருள்.  என்றும் உள்ளது. பிழை இல்லாதது.  கடவுள் கொடுத்தது.  மறுக்க முடியாதது.  வேதத்தின் முடிவுகளைத் தெரிவிக்கும் உபநிடதங்களை வேதாந்தம் என்று சொல்லுவது மரபு.  இவை ஏதுமே வேதத்தை மறுக்க முயல்வதில்லை.  அப்படி மறுப்பவர்கள் நாத்திகர்கள்.  நாத்திக வேதாந்தம் என்று சொல்வது முரண்.
 
ஃபிலாசஃபியை வேதாந்தம் என்று சொல்வது பொருந்தாது என்பதற்குத்தான் நீங்கள் விளக்கம் அளித்துள்ளீர்கள்.  நன்றி.
 
கிரேக்க வேதாந்தி சாக்ரடீஸ் என்று கூறுவது முற்றிலும் பொருந்தாது.  ஃபிலாசஃபியைத் தத்துவம் என்றும், ஃபிலாசஃபர்களைத் தத்துவஞானி என்பதும் முந்தைய வழக்கம்.
 
தத்துவம் என்பதும் வேதக் கொள்கைகளின் அடிப்படையில் எழுந்த சொல் என்பதால் அதை விடுத்து, மெய்யறிவியல் என்ற சொல்லை ஏற்றுக் கொண்டோம்.
 
இப்போதெல்லாம் கிறிஸ்து பிறப்பதற்கு முன், கிறிஸ்து பிறந்த பின்,  (கி. மு., கி. பி.) என்ற குறிப்புகள் வரலாற்றில் தருவதில்லை.  இன்றைக்கு ஈராயிரம் ஆண்டுக்கு முன் (Before Present), அல்லது பொது ஆண்டுக்கணக்குக்கு முன்,  (Before Common Era B.C.E., Common Era, C.E.), போன்ற சொற்கள் வழக்கில் வந்துள்ளன.
 
அது போல, தத்துவம், வேதாந்தம் போன்ற சொற்களைப் பொதுமைப் படுத்துவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  இல்லாவிட்டால் வேதாந்த டாக்டர் போன்ற சிரிப்பூட்டும் சொல்லாக்கங்களைப் பார்க்க நேரிடும்.
 
அன்புடன்,
 
மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு


2009/11/5 S. Jayabarathan <jaya...@tnt21.com>

Philosophy   மெய்ப்பாடில்லை.   இவை உதாரணங்கள் : 

2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கிரேக்க கணித மேதை பித்தகோரஸ் [Pythagoras],

கிரேக்க வேதாந்தி அரிஸ்டாடில் [Aristotle (384-322 B.C.)]

கிரேக்க வானியல் மேதை, அரிஸ்டார்ச்சஸ் [Aristarchus (310-230 B.C.)]

கிரேக்க நிபுணர் எராடோஸ்தெனிஸ் [Eratosthenes (276-194 B.C.)]

கிரேக்க மேதை ஹிப்பார்ச்சஸ் [Hipparchus (190-120 B.C.)] .

கி.பி. 87-150 ஆண்டுகளில் வாழ்ந்த டாலமி [Ptolemy] கி

அன்புடன் புகாரி

unread,
Nov 5, 2009, 9:24:35 AM11/5/09
to anb...@googlegroups.com, தமிழமுதம், tamil...@googlegroups.com
ஜெயபாரதன்,

> சமீபத்தில் நீங்கள் வெளியிட்ட நாலைந்து கவிதைகளில் உள்ள வடமொழிச்  சொற்களை நீக்கித் தமிழ்ச் சொற்கள் இடுங்கள் என்றால் கேட்பீர்களா ?

நான் அப்படித்தான் மாறிக்கொண்டே இருக்கிறேன். தமிழ்ச் சொற்களையும்
தமிழ்ப்படுத்தப்பட்ட சொற்களையுமே பயன்படுத்துகிறேன்


> இந்தக் கணினியைத்தவிர வேறு ஏதாவது உதாரணம் இல்லையா ?

ஏன் இந்த உதாரணத்துக்கு என்ன ஆச்சு?

அன்புடன் புகாரி


>


> சி. ஜெயபாரதன்
>
> -------Original Message-------
>

> From: அன்புடன் புகாரி
> Date: 03/11/2009 6:14:20 PM
> To: tamil...@googlegroups.com

> 1.a branch of knowledge or study dealing with a body of facts or truths systematically arranged and showing the operation of general laws: the mathematical sciences.
> 2.systematic knowledge of the physical or material world gained through observation and experimentation.
> 3.any of the branches of natural or physical science.
> 4.systematized knowledge in general.
> 5.knowledge, as of facts or principles; knowledge gained by systematic study.


> 6.a particular branch of knowledge.

> 7.skill, esp. reflecting a precise application of facts or principles; proficiency.


>
> Origin:
> 1300–50; ME < MF < L scientia knowledge, equiv. to scient- (s. of sciēns), prp. of scīre to know + -ia -ia
>

> http://buhari.googlepages.com
> http://groups.google.com/group/anbudan
>
>
> >

--


அன்புடன் புகாரி

http://anbudanbuhari.blogspot.com
http://buhari.googlepages.com
http://groups.google.com/group/anbudan

S. Jayabarathan

unread,
Nov 5, 2009, 10:11:43 AM11/5/09
to tamil...@googlegroups.com
நண்பர் புகாரி 
 
 
அரைத்த மாவு.
 
அது போல் உங்கள் நான்கு நூல்களிலும் உள்ள வடமொழிச் சொற்களையும் அடுத்த பதிப்புகளில் நீக்குவீர்களா ?

S. Jayabarathan

unread,
Nov 5, 2009, 10:25:51 AM11/5/09
to tamil...@googlegroups.com
நண்பர் செல்வக் குமார்,
 
 
/////பெரியவரின் கட்டுரைகள் (அண்மையில் இங்கு இட்டவை)
மிக அழகு. நான் மிகவும் பாராட்டுகிறேன். நெஞ்சாரப் பாராட்டுகிறேன்.
சில சொற்கள், சில பயன்பாடுகள் சற்றே மாறி இருந்தால் இன்னும்
அழகாகவும் சிறப்பாகவும் இருக்கும் என்பது என் கருத்து.
அவர் எழுதுவது போலவே எழுதுவதாக இருந்தாலும் பலரும் அவரை முன் காட்டாககக் கொண்டு உழைத்து எழுத வேண்டும்.  இன்னும் நல்ல பொதுத்தமிழில் எழுத வேண்டும் என்னும் மனப்பாங்கு வர வேண்டும். ////
 
பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே.   சண்டைகள் புரிந்தாலும் விஞ்ஞானப் படைப்பில் நாம் சகோதரர்.
 
 
அன்புடன்,
சி. ஜெயபாரதன்
 
++++++++++
 
-------Original Message-------
 
Date: 04/11/2009 4:40:54 PM

எல்லைத் தமிழன்

unread,
Nov 5, 2009, 10:28:43 AM11/5/09
to ameen i p p

அன்புடன் புகாரி

unread,
Nov 5, 2009, 10:37:17 AM11/5/09
to tamil...@googlegroups.com
அப்போ நீங்க அரைங்க :)

2009/11/5 S. Jayabarathan <jaya...@tnt21.com>

S. Jayabarathan

unread,
Nov 5, 2009, 11:47:50 AM11/5/09
to tamil...@googlegroups.com

விண்கோள்களின் சுற்று விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர்

 

Cover Image

(1571-1630)

 

சி. ஜெயபாரதன், B.E (Hons), P.Eng (Nuclear) கனடா

 

“எனக்கு ஆழ்ந்த உள்ளொளி [Insights] அளித்த கடவுளுக்கு நான் நன்றி கூறுகிறேன்.”

ஜொஹானஸ் கெப்ளர்

 

விண்கோள்களின் நகர்ச்சியை விளக்கிய கிரேக்க ஞானிகள்

2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கிரேக்க கணித மேதை பித்தகோரஸ் [Pythagoras], பூமியை ஒரு கோளமாகக் கருதி, அது மற்ற அண்டங்களுடன் அக்கினி மையமானச் சூரியனைச் சுற்றி வருகிறது என்று அப்போதே கூறியிருக்கிறார்! அண்ட கோளங்கள் யாவும் சீரிய ஓர் கணித ஒழுங்கைக் கடைப்பிடித்து, நீண்ட இடைவெளியில் சீரிய கால வேறுபாட்டில் சுற்றி வருகின்றன என்றும் அறிவித்துள்ளார்! ஆனால் அவருக்குப் பின் வந்த கிரேக்க ஞானிகளில் சிலர் மாறுபட்ட கருத்தை உபதேசித்து வந்தார்கள்!

கிரேக்க வேதாந்தி அரிஸ்டாடில் [Aristotle (384-322 B.C.)] பூமி உருண்டை வடிவானது என்பதற்கு இரண்டு உதாரணங்களைக் காட்டினார்! கடலில் மிதந்து வரும் கப்பலின் பாய்மரக் கம்ப நுனிதான் முதன் முதலாகத் தொடுவானில் தெரிகிறது! கப்பல் கரையை நோக்கி நெருங்க, நெருங்க கம்பத்தின் முழு உயரத்தையும் காண முடிகிறது! அடுத்து சூரிய கிரகணத்தின் போது, சந்திரனில் படும் பூமியின் நிழல் வளைந்து காணப் படுகிறது! கோள வடிவில் பூமி இருந்தால்தான் நிலவில் அம்மாதிரி வளைவு நிழலை உண்டாக முடியும்! பூமியை மையமாகக் கொண்டு சூரியனும் மற்ற கோள்களும் சுற்றி வருகின்றன என்ற கொள்கையை ஊகித்தவர்களில் அவரும் ஒருவர்! அந்த அரிஸ்டாடில்தான், கிரேக்க மேதை பிளாட்டோவின் சீடர், மகா அலெக்ஸாண்டரின் மாண்பு மிக்க குரு!

கிரேக்க வானியல் மேதை, அரிஸ்டார்ச்சஸ் [Aristarchus (310-230 B.C.)] பூமி தானே தன்னச்சில் சுழல்வதையும், பூமி சூரியனைச் சுற்றி வருவதையும் எடுத்துக் கூறியவர்! பரிதியை மையமாகக் கொண்டு [Sun-centered or Heliocentric] சுற்றிவரும் அண்ட கோளங்கள் அமைந்த ஓர் பிரபஞ்சத்தை அவர்தான் முதன் முதல் அறிவித்தவர்! அவரது கோட்பாடு சூரிய சந்திர கோளங்களின் வடிவளவையும், பூமியிலிருந்து அவற்றின் தூரத்தையும் கணக்கிட உதவியது! பரிதி நிலவை விட மிகப் பெரிதென்றும், அது சந்திர தூரத்தை விட வெகு தொலைவில் உள்ளதென்றும் கூறினார். ஒரு கோள உருண்டையைத் தயாரித்து, அதனுள்ளே சூரியனை மையத்தில் வைத்து, விண்மீன்களை அப்பால் விளிம்பில் இட்டு, பிரபஞ்ச அமைப்பைக் காட்டினார்.

Planetary Motions

கிரேக்க நிபுணர் எராடோஸ்தெனிஸ் [Eratosthenes (276-194 B.C.)] பூமியின் சுற்றளவை 4% துல்லியத்தில் கணித்து, வானியலில் ஒரு மைல் கல்லை நிலை நாட்டினார். எகிப்தில் அலெக்ஸாண்டிரியா, ஸைன் [அஸ்வான்] என்னும் இரு நகரில் உள்ள நிழல்களை உச்சிப் பொழுதில் ஒப்பிட்டு, அவ்விரு நகரங்களின் இடைத் தூரத்தைக் கணித்தார்! அதே முறையைக் கையாண்டு பூமியின் சுற்றளவை 24,000 மைல் என்று முதன் முதலில் கணக்கிட்டார்! மேலும் பூமி தானே சுற்றும் சுழல் அச்சின் சாய்வையும் [Tilt of Earth Axis] துல்லியமாக அவர் கணக்கிட்டார்.

கிரேக்க மேதை ஹிப்பார்ச்சஸ் [Hipparchus (190-120 B.C.)] விண்மீன்களின் அட்டவணையைத் தயாரித்து, முதல் வானவெளிப் படத்தை வரைந்தார். நிலையான விண்மீன்களின் கூட்டமைப்புகளைக் கண்டு [Constellations of Stars] பதிவு செய்தார். அவர் துல்லியமாகக் கணித்தவை: பூமி பரிதியைச் சுற்றி வரும் ஓராண்டு காலத்தின் நாட்கள், இரவு பகல் சமமாக வரும் நாட்கள் [Equinoxes], நிலவின் தூரம் ஆகியவை! அடுத்து விண்கோள் அளப்புக் கோளம் [Astrolabe] ஒன்றையும் அமைத்தார்.

கி.பி. 87-150 ஆண்டுகளில் வாழ்ந்த டாலமி [Ptolemy] கிரேக்க வானியல் ஞானிகளின் இளவரசர் [Prince of Astronomers] என்று போற்றப்படும் மேதை! அரிஸ்டாடில் ஊகித்த தவறான பூமைய [Geo-centric or Earth centered] அமைப்பான பிரபஞ்சத்தை டாலமி கடைப்பிடித்தார்! ஆயினும் அக்கொள்கை ஐரோப்பிய நாடுகளில் அடுத்து 1500 ஆண்டுகளாய் நம்பப் பட்டு வந்தது! அரிஸ்டாடிலின் பூமையப் பிரபஞ்ச வடிவுக்கு, டாலமி ஓர் கணித அமைப்பையும் [Mathematical Model] உண்டாக்கினார்! அண்டக் கோள் சில சமயம் விரைவாக நகர்வதையும், சில சமயம் மெதுவாகச் செல்வதையும், சில சமயம் நிற்பதுபோல் தோன்றி பின்னோக்கிப் போவதையும் [Retrograde Motion] முதலில் கண்டார்! கோள்களைச் சிறு வட்ட விளிம்பில் வைத்து, அவ்வட்டத்தை மற்றுமொரு பெரிய வட்டத்தில் சுற்றி வரும்படி [Epicycles] அமைத்துக் காட்டினார்! அதுவே அவர் கருதிய பிரபஞ்ச அமைப்பு!

Fig 2 Geo-Centric System

பூர்வீக இந்தியாவில் வானியல் விஞ்ஞான வளர்ச்சி

கி.மு. 2000 ஆண்டுகளில் பூர்வீக இந்தியாவில் வானியல் விஞ்ஞானத் துறை உன்னத மேன்மையில் இருந்திருப்பதைப் பலரும் அறிய மாட்டார்கள்.  வானியல் பற்றிய குறிப்புகள் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தை அப்போதிருந்த ரிக் வேதத்தில் காணலாம்.  அடுத்த 2500 ஆண்டுகள் (அதாவது கி.பி. 500 வரை) பூர்வீக வானியல் துறையின் விருத்தி அப்போதிருந்த படைப்புக்களில் அறியப் படுகிறது.  ஒருசில உதாரணங்களாக வானியல் கணிதக் குறிப்பீடுகள் கடன் வாங்கப்பட்டு பல்லாயிரம் ஆண்டுகள் ஜோதிடக் கட்டம் வரையப் பயன்பட்டுள்ளதை இப்போதும் இந்திய மொழிகளின் பஞ்சாங்கங்களில் காணலாம்.

முக்கியமாக இந்திய வானியல் விஞ்ஞான வளர்ச்சி

1.  சூரிய சந்திர கிரகணங்களைக் கணித்திடப் பயன்பட்டது.

2.  பூமியின் சுற்றளவைக் கண்டுபிடிக்க உபயோகமானது

3.  ஈர்ப்பு விசையின் நியதியை சிந்தித்தது.

4.  பரிதி ஒரு விண்மீன் என்றும் பரிதி மண்டலத்தின் அண்டக் கோள்களையும் அவற்றின் சுற்றுக்களையும் கணித்தது.

கி.பி. 500 இல் ஆரியபாட்டா என்னும் வானியல் மேதை ஒரு கணித முறையை வெளியிட்டார்.  அதில் பூமியின் சுயச் சுழற்சியை எடுத்தாண்டு பரிதியை மையமாய் வைத்து ஒப்பு நோக்கி மற்ற கோள்களின் சுற்று எண்ணிக்கையைக் குறிப்பிட்டார்.   ஆரியபாட்டா பூமியின் 1,582,237,500 வேகச் சுற்றுக்கள் நிலவின் 57,753,336 மெதுச் சுற்றுக்களுக்குச் சமம் என்று காட்டினார்.  பிறகு அவற்றை வகுத்துப் பின்னமாக்கி ஓர் வானியியல் நிலை இலக்காக 27.396 (1,582,237,500 /57,753,336 =27.396) துல்லியமாகக் கணித்தார்.

Fig 3 Geocentric System

அமெரிக்க எழுத்தாள மேதை டிக் டெரிஸியின் (Dick Teresi) கூற்றுப்படி “இந்தியாவின் பண்டைய வேதப் படைப்புகளில் பூமியே நகர்கிறது என்றும் பரிதி மையத்தில் உள்ள தென்றும் தெரிய வருகிறது.  அதாவது சூரியனே பட்டப் பகலில் எப்போதும் ஒரே இடத்தில் ஒரே பொழுதில் நிலைத்துள்ளது.  பரிதி உதிப்பது மில்லை !  அத்தமிப்பது மில்லை !

யஞ்சனவால்கியா (Yajnavalkya) என்பவர் பரிதி பூமியை விட மிகப் பெரிதென்று கூறினார்.  அவரே முதன்முதலில் பூமியிலிருந்து நிலவு பரிதி ஆகியவற்றின் ஒப்புத் தூரங்களைக் அவற்றின் விட்டத்தைப் போல் 108 மடங்கு என்று கணக்கிட்டவர்.   இப்போது அந்த இலக்கத்தை விஞ்ஞானிகள் 107.6 பரிதிக்கும் 110.6 நிலவுக்கும் துல்லியமாகக் கணக்கிட்டுள்ளார்.

பரிதி மையமானதா ? அல்லது பூமி மையமானதா ?

கி.பி. 476-550 இல் வாழ்ந்த இந்திய கணித வானியல் மேதை ஆரியபட்டா, பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது என்றும், அது சூரியனைச் சுற்றி வருகிறது என்றும் ஐந்தாம் நூற்றாண்டிலே தான் எழுதிய ‘ஆரியபட்டியா ‘ என்னும் சமஸ்கிருத நூலில் கூறி யிருக்கிறார். சூரிய கிரகணத்திற்கும், சந்திர கிரகணத்திற்கும் ஆரியபட்டா தெளிவாக விளக்கம் தந்திருக்கிறார்! அண்டக் கோள்கள் சூரியனை நீள்வட்ட வீதியில் [Elliptical Orbits] சுற்றி வருகின்றன என்றும் அப்போதே அறிவித்திருக்கிறார்! விண்வெளியில் கோள்களின் இடத்தையும், அவற்றின் நகர்ச்சியையும் கணித்துப் பஞ்சாங்க அட்டவணை தயாரித்துப் பாரதத்தில் ஜோதிடம் வளர்ச்சி அடைய காரண கர்த்தாவாக இருந்திருக்கிறார்! ஆரியபட்டாவை அரேபியர் நன்கு அறிந்து கொண்டு, அவரை ‘அர்ஜெஹீர் ‘ [Arjehir] என்று தம் நூல்களில் குறிப்பிட்டுள்ளார்கள்!

கி.பி. 1473-1543 ஆண்டுகளில் வாழ்ந்த போலந்து மேதை நிகோலஸ் காபர்னிகஸ் [Nicolaus Copernicus] பல்லாண்டுகள் வானோக்கி ஆய்வு செய்து, ‘பரிதி மைய அமைப்பின் ‘ [Sun-centered or Helio-centric System] சீரொழுங்கை நிலைநாட்டியவர். அம்முறைப்படி சூரியனைப் புதன் 88 நாட்களில், வெள்ளி 225 நாட்களில், பூமி 365 நாட்களில், செவ்வாய் 1.9 ஆண்டுகளில், வியாழன் 12 ஆண்டுகளில், சனி 30 ஆண்டுகளில் சுற்றி வருகின்றன என்று விளக்கமாகக் கூறினார்! அரிஸ்டாடில், டாலமி போன்ற கிரேக்க ஞானிகள் பூமைய ஏற்பாடை [Geo-centric or Earth centered] உறுதிப் படுத்தி இருந்ததால், ஐரோப்பிய நாடுகளின் கிறித்துவ மதாதிபதிகள் பல நூற்றாண்டுகளாய் அக்கோட்பாடை எடுத்துக் கொண்டு, மக்களையும் நம்பும்படிக் கட்டாயப் படுத்தினர்! பூமைய அமைப்பை நம்பாதவரைச் சிறையில் இட்டும், சித்திரவதை செய்தும், சிரச் சேதம் செய்தும் துன்புறுத்தியதை உலக வரலாற்றில் காணலாம்! காபர்னிகஸ் கிறித்துவ மதாதிபதிகளிடம் நட்பும், மதிப்பும் நீண்ட காலம் கொண்டிருந்ததால், ‘பரிதி மையக் கோட்பாடை ‘ விளக்கும் அவரது, ‘அண்டக் கோள்களின் சுற்றலைப் பற்றி ‘ [Concerning the Revolutions of the Heavenly Orbs (Six Volumes)] என்னும் நூலை மதப்பலியீடுக்குப் பயந்து மறைத்து வைத்துத், தான் சாகும் வரை அதை வெளியிட அனுமதி தரவில்லை!

Fig 4 Heliocentric System

டென்மார்க் வானியல் மேதை டைசோ பிராஹே [Tycho Brahe (1546-1601)] தொலை நோக்கிகள் தோன்றாத காலத்திலே, மற்ற முற்போக்கான கருவிகளைக் கொண்டு சூரியன், சந்திரன், விண்மீன்கள், மற்ற கோளங்களையும் கண்டார்! பரிதி மட்டும் பூமியைச் சுற்றுகிறது என்றும், பிற அண்டங்கள் யாவும் பரிதியைச் சுற்றி வருகின்றன என்றும் பிராஹே நம்பினார்! 1572 இல் வந்த நோவாவின் [Nova] நகர்ச்சியைத் துல்லியமாகக் கூறினார். 1577 இல் தெரிந்த வால்மீன் [Comet] போக்கைக் கண்டு அது பூமண்டலத்தைச் சேராதது என்றும், விண்வெளியில் அப்பால் போகிற தென்றும் அறிவித்தார்! டென்மார்க் தீவில் அவர் கட்டிய யுரானிபோர்க் வானோக்ககம் [Uraniborg Observatory] பின்னால் பல வானோக்காள வல்லுநருக்குப் பயன்பட்டது. 1600 ஆம் ஆண்டில் ஜெர்மன் வானியல் மேதை ஜொஹான் கெப்ளர் [Johan Kepler] என்பவர் டைசோ பிராஹேயிடம் பணி புரியச் சேர்ந்தார்.

கெப்ளர் வானியலில் செய்த ஒப்பற்ற சாதனைகள்

அண்டக் கோள்களின் நகர்ச்சி விதிகளை [Laws of Planetary Motion] முதன் முதல் ஆக்கிய வானியல் மேதை ஜொஹான் கெப்ளர்! பூர்வீக ‘வரைவடிவ ‘ விளக்கத்திலிருந்து [Geometrical Description] மாற்றிப் பெளதிக விசையைப் [Physical Force] புகுத்தி அதை நவீன விண்ணியக்கவியல் [Dynamical Astronomy] கோட்பாடாக்கி, வானியலை ஓர் விஞ்ஞானத் துறையாய் ஆக்கிய பெருமை கெப்ளர் ஒருவரையே சாரும்! நவீன ஒளியியல் [Modern Optics] துறைக்கு வித்திட்டு அதை விஞ்ஞானமாய்த் துவக்கியரும் கெப்ளரே! தொலை நோக்கியில் ஒளி எவ்வாறு உலவுகிறது என்பதை முதலில் ஆய்வு செய்து, ஒருவிதமான முதல் தொலை நோக்கியையும் அமைத்தவர், கெப்ளரே! அவரைப் பின்பற்றி, இத்தாலிய வானியல் மேதை காலிலியோ தன் முதல் தொலை நோக்கியைப் படைத்தார்! கெப்ளரின் ஒளியியல் நூலே, ஸர் ஐஸக் நியூட்டனின் (1642-1726) அடிப்படைக் கருத்தாகி, ஒளித்துறைக் கண்டு பிடிப்புகளுக்கு வழி காட்டியது!

கெப்ளர் கணிதத் துறையில் மிகச்சிறு எண் கணக்கியலை [Infinitesimals in Mathematics] ஆரம்பித்துக் கால்குலஸ் [Calculus] துறையைத் துவக்கியவர். அதுவே நியூட்டன் கால்குலஸ் கணித விருத்தி செய்ய ஏதுவானது! ஜெர்மன் கணித ஞானி வில்ஹெம் லெப்னிஸ் [Wilhem Leibniz (1646-1716)] தனியாக கால்குலஸ் கணிதத்தை வளர்ச்சி செய்தார்!

Fig 6 Geo-centric & Helio-centric Systems

1600 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் விஞ்ஞானி வில்லியம் கில்பர்ட் [William Gilbert (1544-1603)] பூமி ஒரு பிரமாண்டமான காந்தம் [Giant Magnet] என்று கண்டு பிடித்ததை எடுத்துக் கொண்டு, சூரியனிலிருந்து எழும் காந்த விசையே மற்ற அண்ட கோளங்களைத் தள்ளித் தன்னைச் சுற்றி வரச் செய்கிறது என்று கெப்ளர் அறிவித்தார்! அதே போன்று அண்ட கோளங்களில் காந்த விசை உள்ளதென்றும், அவ்விசையே அவற்றை ஒருங்கே இணைத்துக் கொண்டு சீரிய ஓர் ஒழுங்கு முறையில் பரிதியைச் சுற்றி வருகின்றன என்றும் கூறினார். சூரியனை நடுவாய்க் கொண்டு விண்கோள்கள் சுற்றி வருகின்றன என்னும், காபர்னிகஸின் ‘பரிதி மையக் கோட்பாடே ‘ மெய்யான தென்ற உறுதியில் மேற்படுத்திப் ‘பிரபஞ்சம் ஓர் ஆட்ட அரங்கம் ‘ [Dynamic Universe] என்று விளக்கிக் காட்டினார். கெப்ளரது ஒப்பற்ற நகர்ச்சி விதிகளையும், அவர் கருதிய அண்டக் கோள்களின் காந்த விசைகளையும் அடிப்படையாக எடுத்துக் கொண்டு, பிரபஞ்ச யந்திர இயக்கவியலை மேலும் விருத்தி செய்தவர், ஸர் ஐஸக் நியூட்டன்!

ஜொஹான் கெப்ளரின் ஏழ்மை வாழ்க்கை வரலாறு

1571 டிசம்பர் 27 ஆம் தேதி ஜொஹானஸ் கெப்ளர் [Johannes Kepler] ஜெர்மனியில் வைல் டெர் ஸ்டாட், ஊட்டம்பெர்க் [Weil der Stadt, Wuttemberg] என்னும் ஊரில் நலிந்த, வேண்டப் படாத, முன்முதிர்ச்சிக் குழந்தையாய் [Premature Baby] ஏழைப் பெற்றோர்களுக்குப் பிறந்தார். பணத்துக்கு வேலை புரியும் ஒரு பட்டாளத் தந்தைக்கும், விடுதியாளர் [Innkeeper] மகளான ஒரு தாயிக்கும் நோஞ்சான் பிள்ளையாய்த் தோன்றினார்! எலும்பும் தோலுமாய் மெலிந்த சிறுத்த தோற்றம்! ஜொஹான் கெப்ளர் ஐந்து வயதான போது, போருக்குப் போன அவனது தந்தை திரும்பி வரவே யில்லை! தாத்தாவின் விடுதியில் தாயுடன், ஜொஹான் ஓர் பணிப் பையனாக வேலை செய்து வந்தான்! சிறுவனாக உள்ள போதே, ஜொஹானின் உன்னத ஞானம் வெளிப் பட்டது! விடுதியில் தினமும் உண்ண வந்த வாடிக்கையாளர்கள், சிறுவன் ஜொஹான் கணக்கு வல்லமையைக் கண்டு பிரமித்துப் போனார்கள்! உள்ளூர் பள்ளிப் படிப்பில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று, உள்ளூர்ச் செல்வந்தர் அளித்த உபகார நிதியில், 1587 இல் டுபிங்கன் பல்கலைக் கழகத்தில் [University of Tubingen] சேர்ந்தார்.

Fig 7 Geocentric & Heliocentric Systems

பல்கலைக் கழகத்தில் கெப்ளர் படித்தவை, கணித விஞ்ஞானம் [Mathematical Science]. அவற்றில் கணக்கு, வரை வடிவியல் [Geometry], வானியல் [Astronomy], பிறகு இசை ஆகியவற்றை ஒருவர் கற்க வேண்டும்! அத்துடன் அவர் கிரேக்க, ஹீப்ரூ மொழிகளையும் படித்தார். மேலும் கணிதம், வானியல் ஆகியவற்றைப் பயின்ற முக்கிய மொழி லாட்டின். அவருக்குக் கணிதமும், வானியலும் கற்பித்த ஆசிரியர், மைக்கேல் மேஸ்ட்லின் [Michael Maestlin]. கெப்ளர் முதல் வருடம் கணக்கைத் தவிர மற்ற பாடங்களில் ‘A ‘ மதிப்பு வாங்கினார்! அப்போது மேஸ்ட்லின் புகட்டிய முற்போக்கு வானியலான ‘காபர்னிகஸின் பரிதி மையப் பிரபஞ்ச அமைப்பைப் ‘ புதிதாகக் கற்ற மாணவர்களில், கெப்ளரும் ஒருவர். ‘சூரியனை நடுவாகக் கொண்டு, அண்ட கோளங்கள் அதைச் சுற்றி வருகின்றன ‘ என்னும் காபர்னிகஸ் கோட்பாடை, முதலில் மேஸ்ட்லின் வாயிலாய் கெப்ளர் கற்றுக் கொண்ட உடனே, அக்கோட்பாடு மெய்யான தென்று அவருக்குப் பளிச்செனத் தெரிந்தது!

1588 ஆம் ஆண்டில் கெப்ளர் B.A. பட்டத்தையும், 1591 இல் M.A. பட்டத்தையும் பெற்று, லூதெரன் கோயில் பாதிரியாராக [Lutheran Church Minister] விரும்பி, மதக்கல்வி [Theology] பயிலச் சேர்ந்தார். கெப்ளர் இறுதி ஆண்டில் படிக்கும் போது, ஆஸ்டிரியா லூதரன் உயர்நிலைப் பள்ளியில், கணிதப் பேராசிரியர் பதவி காலியாகவே மதக்கல்வியை முடிக்காமல் விட்டு விட்டு, 1594 இல் அப்பதவியை மேற்கொண்டார். பிறகு 1612 இல் ஆஸ்டிரியா லின்ஸில் [Linz, Austria] கணித ஆசிரியர் பணியையும் செய்தார்.

ஜொஹானின் முதல் மனைவி பார்பரா [Barbara] இறந்ததும், 1613 இல் இரண்டாவது மனைவி சுசானாவை [Susanna] மணந்து கொண்டார். திருமண விழாவிற்கு வந்திறங்கிய ஒயின் கொப்பரைகளில் [Wine Barrels] இருந்த ஒயின் கொள்ளளவைக் [Volume of Wine] கணக்கிட, கோல் ஒன்று நெடு நீளத்தில் [Diagonally] துளை வழியாக விட்டு அளக்கப் பட்டது! இப்படிக் கொள்ளளவை அளக்க முடியுமா ? என்று கெப்ளர் ஐயுற்றார்! அவர் கணித மூளை வேலை செய்ய ஆரம்பித்தது! அதன் அரிய விளைவுதான் ‘திடவ உருளைகளின் கொள்ளளவுக் ‘ [Volumes of Solids of Revolution] கண்டு பிடிப்பு! அம்முறையே பின்னால் போனவென்ச்சரா காவலேரி [Bonavetura Cavalieri (1598-1647)], ஐஸக் நியூட்டன் [1642-1726] ஆகியோரால் விருத்தி செய்யப் பட்டு, கால்குலஸ் [Calculus] கணித மானது!

Fig 8 Kepler's Three Laws

பிரபஞ்ச ஆட்ட அரங்கத்தின் சீரொழுங்கு!

ஜொஹான் கெப்ளர் வாழ்க்கை முழுவதும் மதவாதியாக, கிறிஸ்துவ மதத்தில் ஆழ்ந்த பற்றுடன் வாழ்ந்தார். அவரது படைப்புகள் யாவற்றிலும் கடவுளைப் பற்றி எழுதாத தலைப்பே யில்லை! கடவுளின் படைப்பைப் பற்றிப் புரிந்து கொண்டு எழுதிய தனது நூல்கள், ‘ஒரு கிறித்துவன் தன் கடமையை நிறைவேற்றிய திருப்தியைக் கொடுத்தன ‘, என்று கூறினார். கடவுளின் பிம்பத்தில் படைக்கப் பட்ட மனிதன், கடவுள் உண்டாக்கிய பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்ள முடியும், என்று கெப்ளர் நம்பினார்! மேலும், ‘பிரபஞ்சத்தைக் கடவுள் ஒரு கணித அமைப்பாட்டில் [Mathematical Model] ஆக்கி யுள்ளார் ‘, என்பது அவரது உறுதியான கருத்து! அதே கருத்தைக் கிரேக்க மேதைகள் பித்தகோரஸ், பிளாட்டோ ஆகியோர் ஆக்கிய நூல்களிலும் காணலாம்! தனக்கு ஆழ்ந்த உள்ளொளி [Insights] அளித்த கடவுளுக்கு அடிக்கடி நன்றி கூறினார், ஜொஹான் கெப்ளர்!

அவர் அறிந்த அகிலத்தின் மர்மத்தை விருத்தி செய்து, 1619 இல் கெப்ளர் எழுதி வெளிட்ட நூல் ‘பிரபஞ்ச அமைப்பின் சீரொழுங்கு ‘ [The Harmony of the World (Cosmos)] என்பது! இந்நூலில் கெப்ளர் மிக விபரமான விளக்கத்தில் ஓர் பிரபஞ்சக் கணித அமைப்பைக் [Mathematical Model of Cosmos] காட்டுகிறார். மேலும் பிரபஞ்ச அமைப்பின் சீரொழுங்கில் அவரது மூன்றாவது அண்டக்கோள் விதி [Kepler 's Third Law] விளக்கப் படுகிறது! அதாவது எந்த இரண்டு கோள்களின் சுற்றுக் கால ஈரடுக்கின் விகிதமும் [Ratio of Squares of their Periods], அவற்றின் சுழல் வீதி ஆரங்களின் மூவடுக்கு விகிதமும் [Ratio of Cubes of their Radii] ஒன்றாகும்! பதினேழு ஆண்டுகள் டென்மார்க் வானியல் மேதை டைசோ பிராஹேவுடன் ஆய்வுகள் செய்து, முதலில் கனவுபோல் தென்பட்ட மூன்றாவது விதி, பின்னால் முற்றிலும் மெய்யென்று உறுதிப் படுத்தப் பட்டது!

Planetary Laws of Motion

கெப்ளர் கணித்த முப்பெரும் அண்டக்கோள் விதிகள்

பிரபஞ்சத்தில் விண்கோள்கள் சுற்றி வரும் வீதிகள், அவற்றின் வேகம், பரிதியை அவை நெருங்கும் போது ஏற்படும் வேக வளர்ச்சி, பரிதியை விட்டு அவை அகலும் போது நிகழும் வேகத் தளர்ச்சி, அவை மேவும் விண்பரப்புக்கும் [Spatial Setup] காலத்திற்கும் உள்ள உறவு, அவற்றின் தூரத்திற்கும், சுற்றும் காலத்திற்கும் உள்ள தொடர்பு போன்ற கணிதக் கோட்பாடுகளைக் கூறுவது, கெப்ளரின் மூன்று விதிகள் [Kepler 's Laws]. 1609 இல் அவர் எழுதிய ‘புதிய வானியல் ‘ [New Astronomy] என்னும் நூலில் கெப்ளரின் முதலிரண்டு விதிகள் வெளியாயின! அவர் எழுதிய ‘பிரபஞ்ச அமைப்பின் சீரொழுங்கு ‘ [Harmony of the World (Cosmos)] என்னும் அடுத்த நூலில் மூன்றாம் விதி 1619 இல் வெளி வந்தது!

முதல் விதி:- அண்டக் கோள்கள் பரிதியை ஓர் குறிமையமாகக் [Focus] கொண்டு அதை நீள்வட்டச் சுழல்வீதியில் [Elliptical Orbits] சுற்றுகின்றன. கோள்களின் பாதை விதி இது. முன்பு வானியல் மேதைகள் தவறாக யூகித்தப்படி, கோள்கள் வட்ட வீதியில் சுற்றுபவை அல்ல! அண்டங்கள் பரிதியைச் சுற்றும் வீதிகள் நீள்வட்டம் என்று வலுயுறுத்துகிறது, முதல் விதி!

இரண்டாம் விதி:- ஓர் அண்டம் பரிதியைக் குறிமையமாகக் கொண்டு நீள்வட்டத்தில் சுற்றிவரும் போது அண்டத்தையும், பரிதியையும் சேர்க்கும் ஓர் ஆரம் சம காலத்தில் சமப் பரப்பைத் தடவுகிறது. இது கோள்களின் பரப்பு விதி! அதாவது, கோள் பரிதியை நெருங்க நெருங்க, அதன் வேகம் மிகை யாகிறது! பரிதியை விட்டு அப்பால் செல்லச் செல்ல அதன் வேகம் குறைகிறது!

Fig 10 The Present System

மூன்றாம் விதி:- பரிதியிலிருந்து ஓர் அண்டம் கொண்டுள்ள தூரத்தின் மூவடுக்கு [Cube of the Distance], அந்த அண்டம் பரிதியைச் சுற்றும் காலத்தின் ஈரடுக்கிற்கு [Square of the Period] நேர் விகிதத்தில் உள்ளது. சுருங்கக் கூறினால், அண்டத்தின் தூர மூவடுக்கு/அண்டத்தின் சுற்றுக் கால ஈரடுக்கு விகிதம் ஓர் நிலை யிலக்கம் [(Cube of the Distance)/(Square of the Period), Ratio is a constant].

கெப்ளரின் மூன்று விதிகளும் அவர் கண்ணோட்டத்தில் சிந்தித்த விதிகளே [Empirical Laws]! கணித விதிகள் ஆயினும், காரண அடிப்படைகளைக் கையாண்டு, அவை தர்க்க முறையில் படிப்படியாக உருவாக்கப் பட்டவை அல்ல! அண்டக் கோளப் பாதை, வேகம் ஆகியவற்றை விதிகள் காட்டினாலும், கோள்கள் ஏன் அவ்வாறு நகர்கின்றன என்ற காரணங்களை அவை கூறமாட்டா! அவ்விதிகளைப் பயன் படுத்தி, எதிர் காலத்தில் கோள்கள் எங்கே இருக்கும் என்று அவற்றின் இடத்தை மட்டுமே முன்னறிவிக்கலாம்!

1596 இல் கெப்ளர் எழுதிய ‘பிரபஞ்ச வரைவமைப்பின் மர்மம் ‘ [Cosmographic Mystery] என்னும் நூலில், சூரியன் பூத விசையைக் [Giant Force] கொண்டுள்ள தென்றும், அந்த விசையே மற்ற அண்ட கோளங்கள் தன்னைச் சுற்றி வர ஆளுகிற தென்றும் கூறுகிறார்! தூரம் அதிகமானால், பரிதியின் விசை எதிர்

வீதத்தில் [Force inversely diminishes with distance] குறைகிறது என்றும் எடுத்துரைத்தார்! கெப்ளரின் இந்தக் கோட்பாடு அண்டங்களின் கட்டமைப்பு ஒழுங்குள்ள காபர்னிகஸின் பரிதி மையக் கொள்கையை விளக்க ஏதுவாகிறது!

Copernicus Tycho Brahe & Galileo

கெப்ளரின் குரு டென்மார்க் மேதை டைசோ பிராஹே

டென்மார்க் வானியல் மேதை டைசோ பிராஹே [Astronomer Tycho Brahe (1546-1601)] சூரிய மண்டலத்தின் அண்ட கோளங்களையும், 700 மேற்பட்ட விண்மீன்களையும் பல்லாண்டுகள் நோக்கி விளக்கமாக, துல்லியமாக அளந்து எழுதி வைத்தவர். 17 ஆம் நூற்றாண்டில் தொலை நோக்கிகள் கண்டு பிடிப்பதற்கு முன்னே, அவர் சேகரித்த துல்லிய வானியல் விளக்கங்கள் மிகையானவை! ஒரு கோளம், இரு திசைகாட்டி மானிக் கருவிகளை [One Globe & Two Compasses] மட்டும் பயன்படுத்திப் பண்டைய வானியல் அட்டவணையில் [Astronomical Tables] இருந்த பிழைகளைக் கண்டு பிடித்துத் திருத்தினார்! 1572 இல் அவர் ஓர் உன்னத நோவாவைக் [Supernova] கண்டு பிடித்தார். டென்மார், நார்வே மன்னரிடம் உதவி நிதி பெற்று, 1576 இல் ஓர் வானியல் நோக்ககத்தைக் [Observatory] கட்டி, அதில் 20 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து வந்தார். பிராஹே காபர்னிகஸின் பரிதி மையக் கோட்பாடு முழுவதையும் ஒப்புக் கொள்ளவில்லை! அவர் டாலமியின் பூமைய அமைப்பையும் [Earthentered System], காபர்னிகஸின் பரிதி மைய அமைப்பையும் [Sun-centered System] ஒன்றாக இணைத்து, புதிதாக ‘பிராஹே ஏற்பாடை ‘ [Brahe System] உண்டாக்கினார்!

பிராஹே அமைப்பில் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்து கோள்கள் மட்டும் சூரியனைச் சுற்றுவதாகவும், பிறகு அந்தச் சூரிய குடும்பம் சந்திரனைப் போல் பூமியைச் சுற்றி வருவதாகவும் யூகித்தார்! அதைப் போன்று விண்மீன்களும் ஒரு நாளில் பூமியைச் சுற்றி வருவதாய்க் கருதினார். அவரது பிரபஞ்சக் கோள்களின் கோட்பாடு பிழையானாலும், அவரது துல்லிய கோள் அட்டவணைப் பலருக்குப் பயன்பட்டது! 1600 இல் பிராஹேக்கு துணையாளியாகச் சேர்ந்த ஜொஹான் கெப்ளர், அவரது ஆராய்ச்சிகளையும், அட்டவணையும் உபயோகித்து, முப்பெரும் அண்ட விதிகளைப் படைத்தார்! 1601 இல் பிராஹே காலமானதும், கெப்ளர் அவரது ஆய்வுக் கூடத்தின் அதிபதியாகி, வானியல் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். பேரரசர் ரூடால்ஃப் [Emperor Rudolf II] அரசவையில் பிராஹே வகித்த, அரசவை வானியல் நிபுணர் பதவியை, அடுத்து கெப்ளர் ஏற்றுக் கொண்டு அரசருக்கு ஆலோசனை கூறும் ஜோதிடராகவும் பணி செய்தார்!

Fig 11 Ptolemy Geo-Centric System

கெப்ளர் வானியல் சாதனைகளைக் கூறும் நூல்கள்

கெப்ளர் எழுதிய அரிய வானியல் நூல்கள்: பிரபஞ்ச வரைவமைப்பு மர்மம் [Cosmographic Mystery (1596)], புதிய வானியல் [New Astronomy (1609)], பரிதியைச் சுற்றும் தூதன் [The Sidereal Messenger (1610)], ஒளியியல் [Optics (1611)], வியாழத் துணைக்கோள் பற்றி விரிவுரை [Narration Concerning the Jovian Satellites (1611)], பிரபஞ்ச அமைப்பின் சீரொழுங்கு [Harmony of the World (1619)], காபர்னிக்கன் வானியல் உன்னதம் [Epitome on Copernican Astronomy (1621)], ரூடால்ஃப் கோள் அட்டவணை [Rudolfine Planetary Tables (1628)].

ஜொஹான் கெப்ளர் வானியல் மற்றும் பயிலாது, அத்துடன் ஜோதிடமும் கற்றார்! கெப்ளர் ஜோதிடத்தை நம்பினார்! சூரியன் பூமியில் கால நிலைகளை மாற்றுவது போல், சந்திரன் கடலில் அலை உயர்ச்சி, அலைத் தாழ்ச்சி [High & Low Tides] உண்டாக்குவது போல், கிரகங்கள் மனித வாழ்க்கையைப் பாதிக்கின்றன என்று விளக்கம் தந்தார்! டால்மியின் பூமையக் கொள்கையை நம்பாத கெப்ளர், கிறிஸ்துவ மதப் பலியீட்டுக்குப் பயந்து அடிக்கடித் தன் வேலையை மாற்றிக் கொண்டே இருந்தார்!

கெப்ளர் கால்குலஸ் [Calculus] கணிதத்திற்கு வழி வகுத்த முன்னோடி நிபுணர். தொலைநோக்கிக் கருவி தோன்ற ஒளியியல் [Optics] விஞ்ஞானத்திற்கு விதையிட்ட வல்லுநர். பிரிட்டிஷ் விஞ்ஞான மேதை ஸர் ஐஸக் நியூட்டன் கெப்ளரின் விதிகள், கோட்பாடுகள், கண்ணோக்குகள் [Observations] ஆகியவற்றை முழுமையாகப் பின்பற்றித் தன் உன்னத ‘ஈர்ப்பு விசை நியதியைப் ‘ [Theory of Gravitational Force] உருவாக்கினார்!

Fig 12 Tycho Brahe

ஒப்பற்ற வானியல் மேதை கெப்ளரின் மறைவு

கிறிஸ்துவ மத வேதாந்தியான கெப்ளர், ‘பிரபஞ்சத்தின் அமைப்பைப் பற்றி அறிவ தென்றால், அதைப் படைத்த கடவுளின் மகிமையைப் புரிந்து கொள்வதும் அத்துடன் சேரும் ‘ என்று கூறுகிறார்! கெப்ளர் காலத்தில் இத்தாலியில் வாழ்ந்த வானியல் மேதை காலிலியோவிடம் அவர் தொடர்பு கொண்டிருந்தார். காலிலியோ தான் அமைத்த தொலை நோக்கியில் வியாழனைச் சுற்றிடும் சந்திரன்களைக் கண்டு பிடித்ததும், கெப்ளர் மகிழ்ச்சி அடைந்து மூன்று கடிதங்கள், அவருக்கு எழுதினார். வியாழனின் அந்தச் சந்திரன்களுக்குத் ‘துணைக்கோள்கள் ‘ [Satellites] என்னும் ஓர் புதிய பெயரைக் கடிதத்தில் எழுதி அனுப்பி யிருந்தார்! நேபியர் [Napier] 1614 இல் ஆக்கிய லாகிரித அட்டவணையை [Logarithm Tables] வெளியிட்டதும், கெப்ளர் அவற்றைப் பயன் படுத்தித் தன் ரூடால்ஃபைன் கோள் அட்டவணையை [Rudolphine Planetary Tables] 1628 இல் பல தசமத் துல்லியத்தில் தயாரித்தார்!

வானியல் மேதை ஜொஹான் கெப்ளர் தனது 59 ஆம் வயதில், சில நாட்கள் நோயுற்று 1630 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் நாள் காலமானார். பரிதி மையக் கோட்பாடை ஊன்றிய காபர்னிகஸின் சீடரான, வானியல் மேதை கலிலியோவின் தோழரான, ஐஸக் நியூட்டனின் ஈர்ப்பியல் படைப்புக்கு முன்னோடியான ஜொஹான் கெப்ளர், பதினேழாம் நூற்றாண்டு வானியல் வளர்ச்சியில் ஓர் பெரும் இணைப்புப் பாலமாய் வாழ்ந்திருக்கிறார்! 1604 ஆம் ஆண்டில் அவர் கண்டு பிடித்த புதிய விண்மீனுக்கு ‘கெப்ளர் சூபர்நோவா ‘ [Kepler 's Supernova] என்று இப்போது பெயரிட்டுள்ளார்கள்!

Fig 14 Kepler Telescope in Solar Orbit

புதிய பூமிகளைத் தேடி நாசா ஏவிய கெப்ளர் விண்ணோக்கி

2009 மார்ச் 6 ஆம் தேதி நாசா விண்வெளித் தேடல் ஆணையகம் பிளாரிடா கேப் கெனவரல் ஏவு தளத்திலிருந்து டெல்டா -2 ராக்கெட்டை (Delta II Rocket) உந்த வைத்து, இதுவரை அனுப்பாத மிகப் பெரிய காமிராவைத் தாங்கிய கெப்ளர் விண்வெளித் தொலைநோக்கியை (Kepler Space Telescope) வெற்றிகரமாக அனுப்பியது. ஜெர்மன் வானியல் விஞ்ஞானி ஜொஹான்னஸ் கெப்ளர் (Johannes Kepler) நினைவாக ஏவப்பட்ட அந்த நூதனத் தொலை நோக்கி பூமியைத் தொடர்ந்து பரிதி மையச் சுற்று வீதியில் (Earth-Trailing Heliocentric Orbit) சூரியனைச் சுற்றி வரும். கெப்ளர் தொலைநோக்கி பூமியைப் போல் பரிதியிலிருந்து அதே தூரத்தில் (1 AU Miles) 372.5 நாட்களுக்கு ஒருமுறைச் சூரியனைச் சுற்றி வரும். கெப்ளர் சுமார் மூன்றரை ஆண்டுகள் விண்வெளியைக் கண்ணோக்கி வரும். மூன்றே காலடி விட்டமும் 1039 கி.கிராம் எடையும் கொண்டது. கெப்ளர் தொலைநோக்கியை நாசா அனுப்பியதின் குறிக்கோள் இதுதான் : மூன்றரை அல்லது நான்கு ஆண்டுகளாய் விண்வெளியில் உள்ள 100,000 விண்மீன்களை உளவிப் பூமியைப் போலுள்ள மித வெப்பமான, மீறிய குளிரற்ற உயிரினம் வாழத் தகுதியுள்ள புதிய கோள்களைக் கண்டுபிடிக்கும்.

***********************

தகவல் :

1. A Biography of Johannes Kepler (The Watershed)  By : Arthur Koestler (1960)

2. Kepler By : John Banville (1999)

3. Indian Astronomy (Internet Collections)

4. Wikipedia : Delelopment of Helio-centrism

5.  The Wonder That Was India By : A.L. Basham (1959)

+++++++++

S. Jayabarathan (jaya...@tnt21.com)  September 24, 2009

faint_grain.jpg
imstp_animation_monkey_en_020908.gif

Elangovan N

unread,
Nov 5, 2009, 3:31:32 PM11/5/09
to tamil...@googlegroups.com
:-))))
 


 
2009/11/5 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>

S. Jayabarathan

unread,
Nov 5, 2009, 7:31:52 PM11/5/09
to tamil...@googlegroups.com

பரிதி மைய நியதியை நிலை நாட்டிய 

காபர்னிகஸ்

 

Fig 1 Quotation of Copernicus


சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. (Nuclear), கனடா


 

முடிவாகச் சூரியனைப் பிரபஞ்சத்தின் மையத்தில் வைப்போம்.  முழுப் பிரபஞ்சத்தின் சீரிணைப்பு அமைப்பாலும் அதில் சீராக இயக்கங்கள் தொடர்ந்து நிகழ்வதாலும் நாம் கண்களை விழித்துக் கொண்டு நோக்கும் போது மெய்ப்பாடுகள் நமக்கு எதிர்ப்படுவதால் இவ்விதம் எடுத்துரைக்கப் படுகிறது.

நிக்கலஸ் காபர்னிகஸ்

மதத்திற்கு எதிரான கோட்பாடு என்று முதலில் குற்றம் சாற்றப் பட்டு, முடிவில் மூட நம்பிக்கை என்று தள்ளப் படுவது, புதிய மெய்ப்பாடுகளுக்கு ஏற்படும் வழக்கமான தலை விதி !

தாமஸ் ஹக்ஸ்லி [Thomas Huxley]

 


ஐரோப்பிய மதாதிபதிகளின் ஆதிக்கம், அதிகாரம், அடக்குமுறை!

1616 ஆம் ஆண்டு ரோமா புரியில் ஐந்தாம் போப்பாண்டவர் பால் [Pope Paul V] நூல் பதிப்பு ஆசிரியர் ஒருவருக்கு கடுமையான ஓர் கண்டன அறிக்கையை வெளியிட்டார்!  ‘நிகோலஸ் காபர்னிகஸ் எழுதிய’அண்டக் கோள்களின் சுற்றுக்கள்’ [Revolutions of the Heavenly Globes] என்னும் நூலின் நியதியை உமது செய்தித்தாள் வெளியிட்டிருப்பது, எமது கவனத்திற்கு வந்துள்ளது! பரிதி பிரபஞ்ச நடுவில் அமர்ந்திருப்பதாகவும், பூமி உள்பட மற்ற கோள்கள் அதைச் சுற்றுவதாகவும், அந்த நியதி அறிவிக்கிறது!  படைப்பின் கருத்தை எடுத்துரைக்கும் பைபிளைப் பின்பற்றும் மதக்கோயில் உபதேசத்தை அந்த நியதி நேரடியாக எதிர்க்கிறது! தோற்ற அடிப்படைகளைக் கூறும் வேதநூல், பண்டைய டெஸ்டமன்ட் [Book of Genesis] பூமிதான் பிரபஞ்ச மையம், சூரியன் இல்லை என்று தெளிவாகக் கூறுகிறது!

Fig 1A Ptolemy Earth Centered System

பைபிளை அவமதிக்கும் அந்நூல், இன்றிலிருந்து படிக்க படாத நூலாக ஒதுக்கப் பட்டிருக்கிறது! அந்த நூலை ஆதரிப்போர், கிறிஸ்துவ மதத் துரோகியாகக் [Heresy] கருதப்பட்டுக் கடும் தண்டனைக் குள்ளாவார் என்று அறிவிக்கிறோம்! மரண தண்டனையும் விதிக்கப்படலாம் என்பது நன்றாய் உமது நினைவில் இருக்கட்டும்!  இவ்வறிப்பைக் கேள்விப் பட்டதும், நீவிர் இனிமேல் காபர்னிகஸின் கருத்தை உமது செய்தித் தாளில் ஒருபோதும் பதிப்பிக்காது, உமது தவறைத் திருத்திக் கொள்வீர் என்று உறுதியாக நம்புகிறோம்’.

புரட்சி மூட்டிய காபர்னிகஸின் புதிய நியதி புறக்கணிப்பு!

1543 ஆம் ஆண்டில் மரணப் படுக்கையில் அவதியோடிருந்த காபர்னிகஸ் கையில் அவர் எழுதிய ‘அண்டக் கோள்களின் சுற்றுக்கள்’ என்னும் நூலின் முதற் பிரதி அளிக்கப் பட்டது! ‘பரிதி மைய நியதியை’ வலியுறுத்தி 1530 இல் ஆக்கிய நூலைக் கிறித்துவ மடாதிபதிகளின் எதிர்ப்புக்கும், பலியீட்டுக்கும் அஞ்சி, காபர்னிகஸ் அச்சிடாமலே வைத்திருந்து, தான் இறந்த பின்புதான் அது வெளியிடப்பட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார்! மறைவாக அந்நூல் ஜெர்மனிக்கு எடுத்துச் செல்லப் பட்டு, நூரம்பர்கில் [Nuremberg] அவரது பாதிரி நண்பர், கெய்ஸ் ஆஃப் குல்ம் [Bishop Giese of Kulm] என்பவர் உதவியால் 1543 இல் பதிப்பானது! ரோமாபுரி மடாதிபதிகள், காபர்னிகஸ் நூலைப் பல நூற்றாண்டுகள் தடை செய்து, கி.பி.1616 முதல் 1835 வரைப் புறக்கணித்து ஒதுக்கி வைத்தனர்! டாலமியின் பிழையான ‘பூமையக் கோட்பாடை ‘ ஐரோப்பிய மதாதிபதிகள் சுமார் 1500 ஆண்டுகளாகப் பழைய பைபிள் வேதமாகக் கடைப் பிடித்து வந்தார்கள்! பைபிள் கருத்தை நிராகரித்துக் காபர்னிகஸின் பரிதி மையக் கோட்பாடை ஆதரிப்போரை மடாதிபதிகள் சிறையில் இட்டனர்! சித்திரவதை செய்தனர்! ஏன் உயிரோடு தீயிட்டுக் கொளுத்தினர்!

Fig 1B Copernican Solar System

பிரபஞ்சத்தில் சூரியனை நடுவே கொண்டு மற்ற அண்டங்கள் சுற்றி வருகின்றன என்னும் காபர்னிகஸின் கோட்பாடைப் பின்பற்றியவர் நான்கு வானியல் மேதைகள்!  அவரில் கிறித்துவ மதாதிபதிகளின் நேரடிச் சினத்துக்கு ஆளானவர் மூவர்! காபர்னிகஸ் இறந்த பின் மூன்றாண்டுகள் கழித்துப் பிறந்த டென்மார்க் மேதை டைசோ பிராஹே [Tycho Brahe (1546-1601)], ஐந்தாண்டுகள் கழித்துப் பிறந்த இத்தாலிய ஞானி  கியோர்டானோ புருனோ [Giordano Bruno (1548-1600)], 21 ஆண்டுகள் கழித்துப் பிறந்த  இத்தாலிய மேதை காலிலியோ [Galileo (1564-1642)], 28 ஆண்டுகள் கழித்துப் பிறந்த  ஜெர்மன் கணித மேதை ஜொஹான் கெப்ளர் [Johannes Kepler (1571-1630)]. பரிதி மைய நியதியை ஆறு தொகுப்புகளில் விளக்கிய காபர்னிகஸ் தனது புதிய நூலை வெளியிட முடியாது தவித்தார்! அடுத்து அக்கோட்பாடை விருத்தி செய்த புருனோவை இத்தாலிய மத வாதிகள் கைது செய்து, மதத் துரோகி என்று குற்றம் சாட்டி 1600 இல் உயிரோடு எரிக்கப் பட்டார்! காலிலியோவும் இத்தாலிய மதாதிபதிகளால் கைதி செய்யப் பட்டு, நான்கு தரம் விசாரணைக் குள்ளாகி, சாகும் வரை மடச் சிறையில் வைக்கப் பட்டார்!  ஜொஹான் கெப்ளர் மதப்பலிக்குப் பயந்து வேலையை அடிக்கடி மாற்றிக் கொண்டு நகர் விட்டு நகருக்கு ஓடிக் கொண்டிருந்தார்!

1500 ஆண்டுகளாக மதப்பலிக்குக் காரண மாயிருந்த டாலமியின் ‘பூமையக் கோட்பாடு’ பிழையான தென்று கிறிஸ்துவ மடாதிபதிகளுடன் போராடிய காபர்னிகஸ், புருனோ, பிராஹே, கெப்ளர், காலிலியோ போன்ற மேதைகள் 300 ஆண்டுகளாக உயிர் கொடுத்தும், உயிர் காத்தும், உயிர் பிழைத்தும் வந்துள்ளார்கள்!

Fig 1C the Zodiac Astrology Chart

வானியலே பண்டைய மாந்தரின் பூர்வீக விஞ்ஞானம்!

6000 ஆண்டுகளுக்கு முன் பண்டைய ஈராக் நாட்டில் வாழ்ந்த சுமாரியன் பாதிரிகள் [Sumerian Priests] சூரிய சந்திர கோளங்களையும், வானவெளிக் காட்சிகளையும் வழிபட்டு வந்திருக்கிறார்கள்! சூரிய சந்திர கிரகணங்கள் [Solar & Lunar Eclipse] வரும் போது பயந்து, வால்மீன்கள் [Comets] தோன்றும் போது மிரண்டு தீவினை வருமோ வென்று அஞ்சினார்கள்! கால நகர்ச்சி முன்னேறி வருவதைக் கணக்கிட, வானத்தை நோக்கிக் கண்பட்ட அறிகுறிகளையே பின்பற்றி வந்தார்கள்! அனுதினமும் நேரத்தை, நாட்களை அறிய சூரியனின் உதயம், உச்சிப் பொழுது, மறைவு ஆகியவை பயன் பட்டன. சந்திரனின் அமாவாசை, பெளர்ணமியைப் பின்பற்றி மாதக் கணக்கைக் குறிப்பிட ஏதுவாயின. சூரியன் போக்கில் நிகழும் வசந்தம், வேனில், இலையுதிர், குளிர் போன்ற கால வேறுபாடுகள் வருடத்தை நிர்ணயம் செய்ய குறிக்கப் பட்டன. சூரிய மாதத்திற்கும் [365/12], சந்திர மாதத்திற்கும் [29 நாட்கள்] உள்ள வேறு பாடுகள் கிரீஸ், எகிப்து, அரேபியன், இந்தியா, சைனா ஆகிய தேசங்களில் ஒவ்வொரு மாதிரி திருத்தம் செய்யப் பட்டது! இந்தியாவில் 18 ஆம் நூற்றாண்டில் சூரிய நகர்ச்சியை நிழலின் திசை, கோணம், நீளத்தை அளந்து, காலநிலைகளைக் கணக்கிட்டு வந்திருக்கிறார்கள்!

பாபிலோனியர்கள் பண்டை காலத்திலிருந்தே வானை நோக்கி விண்மீன்களைத் தொழுது வந்தவர்கள்! 2700 ஆண்டுகளுக்கு முன்பே, கிரகங்களின் நகர்ச்சிகளைக் குறித்து, ஜோதிடத் துறையை வளர்த்தவர்கள்! ஒவ்வொரு இரவிலும் கண்ணுக்குத் தெரியும் அண்டங்களின் இடத்தைக் களிமண் தட்டுகளில் எழுதி வைத்தார்கள்! அப்பதிவு விபரங்களிலிருந்து, எந்தக் கோள் எப்போது வரும், இரண்டு அல்லது மூன்று கோள்கள் எச்சமயம் கூடும் போன்ற நிகழ்ச்சிகளை முன்னறிவிக்கும் திறமை பெற்றார்கள்! சுமார் 18 ஆண்டுகளில் சூரிய, சந்திர கிரகணங்கள் எப்போது வரும் என்ற அளவுக்கு அவர்கள் புள்ளி விபரங்கள் குறித்து வைத்துள்ளார்கள்! அந்தக் காலத்தில் வானியலும், ஜோதிடமும் ஒன்றாகவே கருதப் பட்டன! 17 ஆம் நூற்றாண்டுக்குப் பின், வானியல் தூய விஞ்ஞான மாக மாறியதும், ஜோதிடக் கலை அற்று விடப் பட்டது!

Fig 5 Jantar Mantar Observatory

கிரேக்க ஞானிகளின் பண்டைய வானியல் கருத்துக்கள்

பண்டைக் காலத்திய கிரேக்க ஞானிகளின் சித்தாந்தக் கருத்துக்கள் வானியல் விஞ்ஞானம் வளர பல வழிகளில் அடிகோலின. பாபிலோனியன், எகிப்திய முனிவர்கள் வானியல் கருத்துக்களை வெளிப்படுத்தாது, தமக்குள்ளே மறைத்து வைத்திருந்தனர்!  அதே சமயம் ஞானப் பித்தர்களான கிரேக்க வேதாந்திகள், தர்க்கம் புரிந்தோ அன்றிப் பேரவைகளில் விரிவுரைகள் ஆற்றியோ, தம் கருத்துக்களை வெளிப்படையாகப் பறைசாற்றினர்! வானவெளி அண்டங்களையும், எண்ணற்ற விண்மீன்களையும் பல்லாண்டுகள் உற்று நோக்கி, கண்ணோட்டக் கருத்துக்களையே கோட்பாடுகளாக வெளியிட்டனர்! முக்கியமான கிரேக்க வானியல் மேதை, அரிஸ்டார்ச்சஸ் [Aristarchus  (310-230 B.C.)] பூமி தானே தன்னச்சில் சுழல்வதையும், பூமி சூரியனைச் சுற்றி வருவதையும் முதலில் எடுத்துக் கூறியவர்! பரிதியை மையமாகக் கொண்டு [Sun- centered or Heliocentric] சுற்றிவரும் அண்ட கோளங்கள் அமைந்த ஓர் பிரபஞ்சத்தை அவர்தான் முதன் முதல் அறிவித்தவர்!

அடுத்து, கிரேக்க கணித மேதை எராடோஸ்தெனிஸ் [Eratosthenes (276-194 B.C.)] பூமியின் சுற்றளவு, ஆரம், சாய்வு ஆகியவற்றை முதலில் கணித்தார்! பூமியின் சுற்றளவை 4% துல்லியத்தில் கணித்து, அது 24,000 மைல் என்று கணக்கிட்டார்!  மேலும் பூமி தானே சுற்றும் சுழல் அச்சின் சாய்வையும் [Tilt of Earth Axis], அத்துடன் சூரியனின் உயரத்தை வானில் ஒப்பிட்டு, பூமியின் விட்டத்தை 7850 மைல் என்று 50  மைல் துல்லியத்தில் கணித்தார்!

Fig 2 The New Solar System

அரிஸ்டாடில், டாலமியின் பிழையான பூமையக் கோட்பாடு

பிளாட்டோவின் சீடர், மகா அலெக்ஸாண்டரின் குரு கிரேக்க வேதாந்தி அரிஸ்டாடில்  [Aristotle (384-322 B.C.)] கண்ட பிரபஞ்சம் இதுதான்: வெங்காயம் போன்று அடுத்தடுத்த ஏகமைய வட்ட அடுக்குகள் [Concentric Circular Layers] கொண்ட அமைப்பைக்  கொண்டது, பிரபஞ்சம்! நடுவே பூகோளம் நிலையாக இருக்கிறது. பாறையான உட்கருவின் மேற்தளத்தின் மீது நீர், காற்று, அனல் மண்டலம் அடுக்கடுக்காக உள்ளது.  பூமியியைச் சுற்றியுள்ள ஒரு கூண்டில், நிலா உலவி வருகிறது. அக்கூண்டுக் குள்ளே வானவில், எரி விண்மீன்கள், வால்மீன்கள் போன்றவை வந்து மறைகின்றன! நிலவுக்கு அப்பால் உள்ள கோள கூண்டுகளில் புதன், வெள்ளி, சூரியன், செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிரகங்கள் வட்ட வீதிகளில், சீரான வேகத்தில், என்றென்றும் சுற்றி  வருகின்றன! அவை யாவற்றையும் தாண்டி கோடான கோடி விண்மீன்கள் விண்வெளிக் கோளத்தில் நிலையாக அமைந்துள்ளன! இந்த பிரபஞ்ச அண்டங்கள் யாவும் ஓர் ‘தெய்வீக ஆளுநர்’ [Divine Mover] நேரடி ஆட்சியின் கீழ் இயங்கி வருகின்றன!  விண்மீன்கள் அமைந்த புறக்கூண்டு [Outer Sphere] ஒரு நாளுக்கு ஒருமுறை சுற்றி வரும். அப்போது அந்நகர்ச்சி மற்ற கூண்டுகளுக்கும் ஒப்பாகத் தொடர்கிறது.

Fig 3 The Copernican Solar System

கி.பி. 87-150 ஆண்டுகளில் வாழ்ந்த கிரேக்க ஞானி டாலமி [Ptolemy] அரிஸ்டாடில் ஊகித்த தவறான பூமைய [Geo-centric or Earth-centered] அமைப்பான பிரபஞ்சத்தைக் கடைப்பிடித்தார்! டாலமி எழுதிய ‘மாபெரும் வானியல் ஞானி’ [The Great Astronomer], அல்மகெஸ்ட் [Almagest] என்னும் இரண்டு நூல்களில் அவரது கோட்பாடு விளக்கப் பட்டிருக்கிறது. டாலமி ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்மீன்களைக் கண்டு குறிப்பிட்டுள்ளார். பூமியே பிரபஞ்சத்தின் மையமானது! அது நகலாமல் நிலைத்து நிற்கிறது! எல்லா அண்டங்களும் பிரபஞ்சத்தின் மையத்தை [பூமி] நோக்கி விழுகின்றன!  பூமியை நடுவாக வைத்து நிலவு, புதன், வெள்ளி, பரிதி, செவ்வாய், வியாழன், சனி எனக் கூறப்படும் அந்த வரிசையில், வட்ட வீதியில் சீரான வேகத்தில் சுற்றி வருகின்றன! அடுத்து அரிஸ்டாடிலின் பூமையப் பிரபஞ்ச வடிவுக்கு, டாலமி ஓர் கணித அமைப்பையும் [Mathematical Model] உண்டாக்கினார்! அண்டக் கோள்கள் சில சமயம் விரைவாக நகர்வதையும், சில சமயம் மெதுவாகச் செல்வதையும், சில சமயம் நிற்பதுபோல் தோன்றி பின்னோக்கிப் போவதையும் [Retrograde Motion] முதலில் கண்டார்! கோள்களைச் சிறு வட்ட விளிம்பில் வைத்து, அவ்வட்டத்தை மற்றுமொரு பெரிய வட்டத்தில் சுற்றி வரும்படி [Epicycles] அமைத்துக் காட்டினார்! அதுவே அவர் கருதிய பிரபஞ்ச அமைப்பு! அக்கொள்கை ஐரோப்பிய நாடுகளில் அடுத்து 1500 ஆண்டுகளாய் நம்பப் பட்டு, வேதநூல் பைபிளிலும் இடம் பெற்றது!

Fig 7 Giant Sundials

பூர்வீக  இந்தியாவின் வானியல் விஞ்ஞான மேன்மை

கி.மு. 2000 ஆண்டுகளில் பூர்வீக இந்தியாவில் வானியல் விஞ்ஞானத் துறை உன்னத மேன்மையில் இருந்திருப்பதைப் பலரும் அறிய மாட்டார்கள்.  வானியல் பற்றிய குறிப்புகள் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தை அப்போதிருந்த ரிக் வேதத்தில் காணலாம்.  அடுத்த 2500 ஆண்டுகள் (அதாவது கி.பி. 500 வரை) பூர்வீக வானியல் துறையின் விருத்தி அப்போதிருந்த படைப்புக்களில் அறியப் படுகிறது.  ஒருசில உதாரணங்களாக வானியல் கணிதக் குறிப்பீடுகள் கடன் வாங்கப்பட்டு பல்லாயிரம் ஆண்டுகள் ஜோதிடக் கட்டம் வரையப் பயன்பட்டுள்ளதை இப்போதும் இந்திய மொழிகளின் பஞ்சாங்கங்களில் காணலாம்.

முக்கியமாக இந்திய வானியல் விஞ்ஞான வளர்ச்சி

1.  சூரிய சந்திர கிரகணங்களைக் கணித்திடப் பயன்பட்டது.

2.  பூமியின் சுற்றளவைக் கண்டுபிடிக்க உபயோகமானது

3.  ஈர்ப்பு விசையின் நியதியை சிந்தித்தது.

4.  பரிதி ஒரு விண்மீன் என்றும் பரிதி மண்டலசத்தின் அண்டக் கோள்களையும் அவற்றின் சுற்றுக்களையும் கணித்தது.

Fig 9 Jantar Mantar at Delhi

கி.பி. 500 இல் ஆரியபாட்டா என்னும் வானியல் மேதை ஒரு கணித முறையை வெளியிட்டார்.  அதில் பூமியின் சுயச் சுழற்சியை எடுத்தாண்டு பரிதியை மையமாய் வைத்து ஒப்பு நோக்கி மற்ற கோள்களின் சுற்று எண்ணிக்கையைக் குறிப்பிட்டார்.  ஆரியபாட்டா பூமியின் 1,582,237,500 வேகச் சுற்றுக்கள் நிலவின் 57,753,336 மெதுச் சுற்றுக்களுக்குச் சமம் என்று காட்டினார்.  பிறகு அவற்றை வகுத்துப் பின்னமாக்கி ஓர் வானியியல் நிலை இலக்காக 27.396 (1,582,237,500/57,753,336 = 27.396) துல்லியமாகக் கணித்தார்.

அமெரிக்க எழுத்தாள மேதை டிக் டெரிஸியின் (Dick Teresi) கூற்றுப்படி “இந்தியாவின் பண்டைய வேதப் படைப்புகளில் பூமியே நகர்கிறது என்றும் பரிதி மையத்தில் உள்ள தென்றும் தெரிய வருகிறது.  அதாவது சூரியனே பட்டப் பகலில் எப்போதும் ஒரே இடத்தில் ஒரே பொழுதில் நிலைத்துள்ளது.  பரிதி உதிப்பது மில்லை !  அத்தமிப்பது மில்லை !

யஞ்சனவால்கியா (Yajnavalkya) என்பவர் பரிதி பூமியை விட மிகப் பெரிதென்று கூறினார்.  அவரே முதன்முதலில் பூமியிலிருந்து நிலவு பரிதி ஆகியவற்றின் ஒப்புத் தூரங்களைக் அவற்றின் விட்டத்தைப் போல் 108 மடங்கு என்று கணக்கிட்டவர்.  இப்போது அந்த இலக்கத்தை விஞ்ஞானிகள் 107.6 பரிதிக்கும் 110.6 நிலவுக்கும் துல்லியமாகக் கணக்கிட்டுள்ளார்.

Fig 8 The Samrat Yantra

18 ஆம் நூற்றாண்டில் இந்திய வானியல் ஆராய்ச்சி

ராஜஸ்தான் ஜெய்பூரைத் தலைநகராக வைத்து 1727-1734 ஆண்டுகளில் அரசாண்ட ராணா இரண்டாம் ஜெய்சிங் ஜெய்பூர், டெல்லி போன்ற ஐந்து இடங்களில் வானியல் ஆய்வுச் சாதனக் கருவிகளை அமைத்தார்.  அவற்றில் ஜெய்பூரில் உள்ளதே எல்லாவற்றிலும் பெரியது.  அவையே ஜந்தர் மந்தர் (Jantar Mantar) எனப்படும் வானளவுக் கட்டடக் கருவிகள் (Architectural Astronomical Instruments).  ஜந்தர் என்றால் கருவி என்று பொருள்.  மந்தர் என்றால் கணிப்பு என்று அர்த்தம்.  ஜந்தர் மந்தர் என்றால் கணிப்புக் கருவி என்று சொல்லலாம்.  அந்தக் கருவிகள் இந்திய ஜோதிட நிபுணருக்கும் பயன்படும் மதச்சார்பான கணிப்பாக உதவின.

இந்த வானோக்குக் கட்டடக் கருவிகள் பருவக் கால நேரங்கள், கிரகண (Eclipse) அறிவிப்புகள், சுற்று வீதிகளில் நகரும் விண்மீன்களைக் குறிப்பிடுதல், கோள்களின் சாய்வுக் கோணங்களை அளத்தல், சூரிய நகர்ச்சியைத் தொடர்ந்து கணித்து நோக்குதல் போன்ற   வானியல் தகவல் சேகரிக்கும் 14 வரைவியல் சாதனங்கள் (Geometrical Devices)  கொண்டவை.  ஸம்ரத் யந்திரம் (Samrat Yantra) என்பது 90 அடி உயரமுள்ளது.  எல்லா வற்றிலும் பெரியது.  அதனுடைய நிழற் சாய்வு அனுதின நேரத்தைக் காணப் பயன்படும்.  அதன் உச்சியில் உள்ள “இந்து சத்திரி” (Hindu Chhatri or Small Cupola) கிரகண (Eclipse) வருகையையும், மழைப் பருவக் கால நெருக்கத்தையும் காட்டுகிறது ஓர் அரங்க மேடையாக உள்ளது.

Fig 6 The Samrat Yantra

பதினைந்தாம் நூற்றாண்டில் பிறந்த காபர்னிகஸ் நியதி!

1473 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி நிகோலஸ் காபர்னிகஸ் [Nicolaus Copernicus] போலந்து நாட்டில் தோர்ன் என்னும் நகரில் பிறந்தார். வியாபாரியான அவரது தந்தையார் ஜெர்மன் குடியினன் ஆகிய ஸ்லாவ் [Slavak] நாட்டினர். தாயார் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர். போலந்து, ஜெர்மனி ஆகிய இரு நாடுகளும் மேதை காபர்னிகஸ் தம்மினத்தவர் என்று உரிமை கொண்டாடின! பாதிரியான அவரது தாத்தா காபர்னிகஸ் சிறந்த கல்வி பயில வேண்டுமென விழைந்தார். 1491 இல் கிராகோவ் பல்கலைக் கழகத்தில் [Krakow Academy] நான்கு வருடங்கள் படித்து மருத்துவம், சட்டம் பயில, இத்தாலிக்குச் சென்றார். 1497 இல் ரோமன் காதோலிக் சட்டம் [Canon Law] படிக்கப் பொலோனா பல்கலைக் கழகத்தில் [University of Bologna] சேர்ந்தார். கணிதப் பேராசிரியர், டாமினிகோ நோவாரா [Domenico Novara] இல்லத்தில் காபர்னிகஸ் தங்கி இருந்தார்.

வானியல், பூகோளம் ஆகியவற்றில் ஆர்வம் எழக் காபர்னிகஸைத் தூண்டியவர், பேராசிரியர் நோவாரா. இருவரும் சேர்ந்து வானில் விண்மீன்களை நோக்குவதும், சந்திர கிரகணத்தை ஆராயவும் செய்தனர். டாலமியின் நூல் ‘மகத்தான வானியல் அமைப்பு’ [The Great Astronomical System], மற்ற கிரேக்க ஞானிகளின் வானியல் கொள்கைகளை  நோவாரா அவருக்குப் புகட்டினார். காபர்னிகஸ் டாலமியின் பூமையக் கோட்பாடைப் படித்து, அதை ஒப்புக் கொள்ளவில்லை! ஆனால் டாலமிக்கு முன் வாழ்ந்த மேதை அரிஸ்டார்ச்சஸ் [Aristarchus] கூறிய பரிதி மையக் கருத்து, மெய்யாகத் தோன்றியது!  1500 ஆம் ஆண்டில் ரோமா புரியில் வானியலைப் பற்றிச் சொற்பொழிவு நிகழ்த்தும் போது, காபர்னிகஸ் இருவிதக் கருத்துக்களைப் பேசினார்! மருத்துவப் படிப்பைத் தொடராது, வெறும் மதச்சட்டத்தில் [Canon Law] டாக்டர் பட்டம் வாங்கிப் போலந்துக்கு மீண்டார். அங்கே பிரெளன்பர்க் என்னும் நகரில் கிறிஸ்துவப் பாதிரியாக நியமனம் ஆகிப் பணி புரிந்து வந்தார்!

Fig 4A Copernican System

காபர்னிகஸ் 1517 இல் ஆரம்பித்து அவரது வானியல் நூல் ‘அண்டக் கோள்களின் சுற்றுக்கள் ‘ 1530 இல் எழுதி முடிக்கப் பட்டது. அவரது கோட்பாடு இதுதான்: ‘பூமி தினமும் தன்னச்சில், தன்னைத் தானே ஒரு முறை சுற்றிக் கொண்டு, சூரியனையும் ஓராண்டில் சுற்று வருகிறது. அச்சமயம் பூமி பம்பரம் போன்று, தலை சாய்ந்து [Wobbles] ஆடுகிறது! பிற அண்டங்களும் பரிதியை நடுவாகக் கொண்டு சுற்றி வருகின்றன. பிரபஞ்சத்தின் மெய்யான மையம் சூரியன், பூமி இல்லை! பரிதியை விண்கோள்கள் வட்ட வீதியில் சீரான வேகத்தில் [Uniform Motion in Circular Orbits] சுற்றி வருகின்றன’ என்று ஆணித்தர மாகக் கூறினார்!

‘பிரபஞ்சம் ஒரு கோள வடிவானது! மாபெரும் கொள்ளளவு [Volume] உடையது ஒரு கோளமே! முழுமை பெற்றது கோளம்! ஒட்டு இணைப்புகள் அற்றது கோளம்! அதுவே சூரியன், சந்திரன், விண்மீன்கள் அனைத்தையும் அணைத்துக் கொள்ளும் தகுதி உடையது! பூமியும் கோள வடிவானதே. அதன் ஒவ்வொரு புறமும் அதன் மையத்தை நோக்கி தன்னை இழுத்துக் கொள்கிறது. வளர்பிறைத் தேய்பிறைக் காலங்களில் பரிதியின் ஒளி வீசிப் பூமியின் நிழல், நிலவின் மீது விழும் போது, வளைவாகத்  தெரிகிறது! பூமி கோளமாக இருந்தால்தான், அதன் நிழலும் வளைந்து அவ்வாறு காணப்படும்’.

‘அண்ட கோளங்களின் நகர்ச்சி ஒழுங்கானது! சீரானது! வட்ட வீதியில் செல்வது!  அந்நகர்ச்சி முடிவில்லாதது! அம்முறைப்படி சூரியனைப் புதன் 88 நாட்களில், வெள்ளி 225 நாட்களில், பூமி 365 நாட்களில், செவ்வாய் 1.9 ஆண்டுகளில், வியாழன் 12 ஆண்டுகளில், சனி 30 ஆண்டுகளில் சுற்றி வருகின்றன ‘ என்று விளக்கமாகக் கூறினார்!  டாலமி கூறிய பூமைய ஏற்பாடை [Geo-centric or Earth-centered] உறுதியாக நம்பிய ஐரோப்பிய மதாதிபதிகள், புதிய காபர்னிகஸ் கோட்பாடைக் கேள்விப் பட்டுக் கொதித்து  எழுந்தனர்! ஜெர்மன் மதாதிபதி மார்டின் லூதர் [Martin Luther (1483-1546)] காபர்னிகஸை ‘வானியல் விஞ்ஞானம் முழுவதயும் தலைகீழாக மாற்றும், முட்டாள்’ என்று திட்டினார்!

Kepler

உயிரோடு எரிக்கப் பட்ட உன்னத மேதை புருனோ!

புனித மாது ஜோன் ஆஃப் ஆர்க் [Joan of Arc] பிரென்ச் பாதிரிமாரால் மதப் பகையாளி [Heresy] எனக் குற்றம் சாற்றப் பட்டு மரக் கம்பத்தில் கட்டி உயிரோடு எரிக்கப் பட்டது போல், இத்தாலியப் மதாதிபதிகளால் கியோர்டனோ புருனோ மத எதிரி என்று பழி சாற்றப் பட்டு, 1600 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 இல் எரிக்கப் பட்டார்! புருனோ புரட்சிகரமான தனிப்பட்ட கருத்துக்களைத் தைரியமாய் வெளியிட்ட ஒரு மறுமலர்ச்சி வேதாந்தி; கற்பனைச் செழிப்பில் காவியம் படைத்த கவிஞர். அவரது படைப்புகளின் சிறப்பு அவர் உயிரோடு எரிக்கப் பட்டதால் உன்னத மகிமை பெற்றது! ஆனால் உயர்ந்த படைப்பாள விஞ்ஞானியின் ஆயுள் 52 வயதிலே, அநாகரிக மற்ற மத வெறியர்களால் வெட்டிவிடப் பட்டது!

கியார்டனோ புருனோ 1548 ஆம் ஆண்டு இத்தாலியில் நேபில்ஸ் நகருக்கு அருகில் நோலா [Nola near Naples] என்னும் இடத்தில் பிறந்தவர்! புருனோவின் முரண்பாடான ‘பரிதி மையப் பிரபஞ்சக் கோட்பாடு’ தடை செய்யப் பட்டதால் 1576 இல் இத்தாலியை விட்டு ஓடினார்! ஜெனிவா, டெளலஸ் [Toulouse], பாரிஸ் போன்ற நகரங்களில் திரிந்தார்! இறுதியில் பிரென்ச் பிரதிநிதி [Ambassidor] பாதுகாப்பில் லண்டனில் இரண்டு ஆண்டுகள் தங்கினார். அப்போது பிரிட்டிஷ் கவிஞர் ஸர் பிலிப் ஸிட்னியுடன் [Sir Philip  Sidney] பழகினார். புருனோவின் ‘எல்லையற்ற பிரபஞ்சம், உலகங்கள் ‘ [On the Infinite Universe & Worlds (1584)], ‘காரணம், கொள்கை, ஐக்கியம் ‘ [On the Cause, Principle & Unity (1584)] என்னும் அரிய நூல்கள் அக்காலங்களில்தான் உருவாயின! அவரது ஆக்கங்கள் காலிலியோ, நியூட்டன், ஐன்ஸ்டைன் ஆகியோரின் படைப்புகளுக்கு அடிப்படை யாகின!

Fig 10 Nicolaus Copernicus

புருனோவின் மகத்தான சித்தாந்தம்: ‘விண்வெளி எல்லை யற்றது! பிரபஞ்சத்தில் சூரிய மண்டலம், அதன் கோள்கள் போன்று மற்றும் பல ஏற்பாடுகள் உள்ளன! ஏன் ?  நம்மைப் போல் தெளிவுள்ள அல்லது நம்மை விட அறிவு மேம்பட்ட இனங்கள் கூட வேறு உலகங்களில் வாழக் கூடும்!’ என்று பறைசாற்றினார்! ‘எண்ணற்ற உலகங்களைக் கொண்டுள்ள எல்லை யற்ற பிரபஞ்சம் ‘, என்னும் அகிலாண்டத்தின் காட்சி அவரது  தீர்க்கமான, தெளிவான கற்பனை வளத்தைக் காட்டுகிறது! ‘பிற அண்டங்களில் அறிவு மிக்க உயிரினங்கள் வாழாவிடின், கடவுள் அண்டங்களை வீணாகப் படைத்து விட்டார் என்று குறிப்பிடலாம்”! பரிதி பூமிக்கு மிக நெருங்கி யிருக்கும் ஓர் சாதாரண விண்மீன் என்று கருதினார், புருனோ! அதைப் போல் எண்ணற்ற பரிதிக் குடும்பங்கள் பிரபஞ்சத்தில் இருப்பதாகவும் எடுத்துக் கூறினார்! பிரபஞ்சத்தில் ஒருவித ‘ஐக்கிய முறைகள்’ [Patterns of Unity] இருக்க வேண்டுமென அவற்றைத் தேடினார்! “ஒரு வடிவத்தின் சிறப்பு முறைப்பாடு, அதனுள்ளேயே அடங்கி யுள்ளது! அதில் உள்ள பிண்டம் [Matter] குறிப்பான மோனாடு அல்லது துகள் [Monads or Minima] என்னும் அடிப்படைப் பகுதிகளைக் கொண்டது”! புருனோவின் தத்துவங்களை டச் வேதாந்த மேதை ஸ்பைனோஸா [Spinoza (1632-1677)] பின் தொடர்ந்தார். அவையே பின்னால் நவீன வேதாந்தத்தின் [Modern Philosophy] முன்னோடி ஆயின! மத வெறியர்கள் கொடுமைக்குப் பலியான புருனோ, தியாக விஞ்ஞானியாக வரலாற்றில் தனித்துவம் அடைகிறார்!

Galileo

காபர்னிகஸ் நியதியின் குறைகளும் நிவிர்த்தியும்!

காபர்னிகஸ் விளக்கிய பரிதி மையக் கோட்பாடில், டாலமியின் நியதிபோல் சில தவறுகளும் இருந்தன! அண்டக் கோள்கள் யாவும் ‘வட்ட வீதியில் சீரான வேகத்தில்’ [Uniform Motion in Circular Orbits] சுற்றி வருவதாக அவர் கருதினார்! டாலமியும் அதே கருத்தைக் கூறினார்! பரிதிக்கும், கோளுக்கும் உள்ள தூரங்கள் சுற்றும் போது மாறுபடுவதை அவரது நியதி விளக்க முடியவில்லை! அதுபோல் கோள்கள் பரிதியை நெருங்கும் போது விரைவான வேகத்திலும், அப்பால் விலகும் போது குறைவான வேகத்திலும் செல்வதை அவரது நியதி விளக்க முடியவில்லை! அவரது கோட்பாடு மெய்யான தென்று பின்பற்றி மென்மேலும் விருத்தி செய்தவர்கள் புருனோ, கெப்ளர், காலிலியோ போன்ற வானியல் மேதைகள். புருனோ முடிவற்ற பிரபஞ்சத்தை விவரித்து, அங்கே எண்ணற்ற உலகங்கள் இருக்கலாம் என்றார்! டைசோ பிராஹே இருபது ஆண்டுகளாய் ஆராய்ந்து சேகரித்த கோள்களின் நகர்ச்சி அட்டவணையைப் பயன்படுத்திக் கெப்ளர், ஒப்பற்ற ‘அண்டக்கோள் நகர்ச்சி விதிகளைப்’ [Laws of Planetary Motion] படைத்தார்! கெப்ளரின் அரிய முப்பெரும் விதிகள் காபர்னிகஸ் நியதியின் குறைபாடுகள் அனைத்தையும் நீக்கியன! அண்டங்கள் நீள் வட்ட வீதிகளில் [Elliptical Orbits] சுற்றுவதாக கெப்ளர் எடுத்துக் காட்டி, வட்ட வீதியில் ஏற்படும் வேக, தூரப் பிரச்சனைகளை நீக்கினார்!

காபர்னிகஸ், கெப்ளர் தோள் மீது நின்று கொண்டு, காலிலியோ தான் செய்த தொலைநோக்கி வழியாக முதன் முதல் வெள்ளியைப் [Venus] பிறை வடிவில் கண்டு, அது பரிதியைச் சுற்றி வருகிறது என்று நிரூபித்துக் காட்டினார்! கெப்ளர், காலிலியோ ஆகியோர் தோள் மீது நின்று கொண்டு, ஸர் ஐஸக் நியூட்டன் தனது அண்டக்கோள் யந்திரவியல் [Celestial Mechanics], ஈர்ப்பியல் நியதி [Theory of Gravity], ஒளியியல் [Optics] போன்ற புதிய கணித விஞ்ஞானத் துறைகளைப் படைத்தார்!

Fig 11 Nicolaus Copernicus

காபர்னிகஸ் 1543 மே 24 ஆம் நாள் காலமானார். நாசா [NASA] 1972 ஆம் ஆண்டு ஆகஸ்டு 21 இல் காபர்னிகஸ் பெயரில் சுழல்வீதி விண்வெளி நோக்ககம் [Orbiting  Astronomical Observatory, OAO-3] ஒன்றை ஏவியது! அது ஒளி மின்னியல் பட்டைமானி [Photo-electric Spectrometer] ஒன்றையும் 31′ விட்டமுள்ள தொலை நோக்கியையும்  தூக்கிக் கொண்டு அண்ட கோளங்கள், விண்மீன்கள், ஒளிமயப் பால்வீதிகள் ஆகியவற்றின் உட்துகள்களை [Components] எட்டாண்டு காலம் ஆராய்ந்தது!

++++++++++++++++

தகவல் :

1.  Wikipedia Document : Jantar Mantar Jaipur Observatory (Oct 25, 2009)

*************

S. Jayabarathan (jaya...@tnt21.com)  October 29, 2009

faint_grain.jpg
stampa_girl_line_en.gif

S. Jayabarathan

unread,
Nov 5, 2009, 7:38:23 PM11/5/09
to tamil...@googlegroups.com

முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ

 

Fig 1 Image of Galileo

Galileo Galilei

(1564-1642)


சி. ஜெயபாரதன்,B.E (Hons), P.Eng (Nuclear) Canada


“கடந்த நூற்றாண்டுகளில் தெரியாமல் மறைந்திருந்த பல மகத்தான காட்சிகளை, நான் மட்டும் முதலில் காணும்படி வாய்ப்பளித்த கடவுளின் பேரருளுக்கு அளவற்ற எனது நன்றியைக் கூறுகிறேன்”

காலிலியோ


“பிரபஞ்சத்தை அது எழுதப்பட்ட பண்பாட்டுப் பங்களிப்புகளில் பழக்கமாகி அதன் மொழியைக் கற்பதுவரை நாம் வாசிக்க முடியாது. அது கணித மொழியில் எழுதப் பட்டுள்ளது. அதன் எழுத்துக்கள் எவையென்றால் கோணங்கள், வட்டங்கள் அவை போன்ற மற்ற வரைவியல் வடிவங்கள் (Geometrical Figures). அவை இல்லாமல் பிரபஞ்சத்தின் ஒரு சொல்லைக் கூட மனிதர் புரிந்து கொள்வது இயலாது.”

காலிலியோ


விசாரணை மண்டபத்தில் விஞ்ஞான மேதை காலிலியோ!

1600 ஆம் ஆண்டில் புருனோ [Giodarno Bruno] உயிரோடு கம்பத்தில் எரிக்கப் பட்டு முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்து, 69 வயது விஞ்ஞானக் கிழவர் காலிலியோ ரோமாபுரி மதாதிபதிகளால் குற்றம் சாற்றப் பட்டு விசாரணைக்கு இழுத்துவரப் பட்டார்! அவர் செய்த குற்றம், மதத் துரோகம்! போப்பாண்டவர் எச்சரிக்கையை மீறிப் ‘பூமியே மையமாகிச் சூரியன் உள்பட ஏனைய கோளங்களும் அதைச் சுற்றுகின்றன ‘ என்னும் டாலமியின் நியதி [Ptolemy 's Theory] பிழையானது என்று வெளிப்படையாகப் பறைசாற்றியது, காலிலியோ புரிந்த குற்றம்! காபர்னிகஸ் [Copernicus] கூறிய பரிதி மைய நியதியே மெய்யானது என்று பகிரங்கமாக வலியுறுத்தியது, காலிலியோ செய்த குற்றம்! அதற்குத் தண்டனை, சாகும்வரை காலிலியோ பிளாரென்ஸ் நகர்க்கருகில் அர்செற்றி [Arcetri] என்னு மிடத்தில் இல்லக் கைதியாய் [House Arrest] அடைபட்டார்! ஒன்பது ஆண்டுகள் சிறையில் தனியே வாடி வதங்கி, கண்கள் குருடாகி, காலிலியோ 1642 இல் காலமானார்! அந்தக் காலத்தில் எழுந்த புது விஞ்ஞானக் கருத்துக்களை ரோமாபுரி மடாதிபதிகள் புறக்கணித்து, விஞ்ஞான மேதைகளைச் சிறையிலிட்டுச் சித்திரவதை செய்தது, உலக வரலாற்றில் வருந்தத் தக்க, அழிக்க முடியாத கறையாகும்!

‘இருபெரும் உலக அமைப்பாடுகள் பற்றிய சொற்போர் ‘ [Dialogue on the Two Chief World Systems] என்ற காலிலியோவின் நூலைத் தீயிட்டுக் கொளுத்தும்படி ரோமாபுரி மடாதிபதிகள் கட்டளை யிட்டனர்! காலிலியோவின் சிறைத் தண்டனைச் செய்தி எல்லாப் பல்கலைக் கழகங்களிலும் வாசிக்கப் பட வேண்டும் என்றும் கட்டளையில் எழுதி இருந்தது! ஆனால் ‘பழையன கழிதலும், புதியன புகுதலும் ‘ என்னும் முதுமொழிக் கேற்ப, கால வெள்ளத்தில் காபர்னிகஸின் மெய்யான பரிதி மைய நியதியை எவரும் தடைபோட்டு நிறுத்த முடியவில்லை!

Fig 2 The Trials of Galileo-1

விண்வெளியின் முகத்திரையைத் திறந்து வைத்த விஞ்ஞானி!

‘கடந்த நூற்றாண்டுகளில் தெரியாமல் மறைந்திருந்த பல மகத்தான காட்சிகளை, நான் மட்டும் முதலில் காணும்படி வாய்ப்பளித்த கடவுளின் பேரருளுக்கு அளவற்ற எனது நன்றியைக் கூறுகிறேன் ‘ என்று இத்தாலிய விஞ்ஞான மேதை காலிலியோ இறுதியில் ஆனந்தப் படுகிறார்! ஐந்து நூற்றாண்டுகளில் வாழ்ந்த விஞ்ஞானிகளின் வரிசையில் முன்னணியில் நிற்கும் உன்னத மேதையாகக் கருதப் படுபவர், காலிலியோ! முதன் முதலில் தன் கையால் அமைத்த தொலை நோக்கியில் அண்ட கோளங்களை ஆய்ந்து, விண்வெளியின் முகத்திரையைத் திறந்து வைத்தவர், காலிலியோ! பிறை வெள்ளியைக் கண்டு, அது சூரியனைச் சுற்றி வருவதைத் தொடர்ந்து நோக்கி, காபர்னிகஸின் ‘பரிதி மைய நியதி ‘ மெய்யான தென்று நிரூபித்துக் காட்டியவர், காலிலியோ! அடுத்து நிலவை நோக்கி அதன் குழிகளையும் மலைகளையும் காட்டினார்! பரிதியின் தேமல்களை [Sun Spots] முதன் முதலில் கண்டு பிடித்தவரும் காலிலியோவே! பூதக்கோள் வியாழனை சுற்றும் நான்கு சந்திரன்களைக் கண்டு பிடித்து உலகை வியக்க வைத்தவர், காலிலியோ! சூரிய மண்டலத்தின் எட்டாவது கோளான ‘நெப்டியூனை ‘ [Neptune] முதலில் கண்டு, அதன் ஆமைவேக நகர்ச்சியைக் குறித்து வைத்து, தான் ஒரு புதுக்கோளைக் கண்டதைக் கூட அறியாமல் போனவர், காலிலியோ!

ஊசல் ஆட்டத்தில் [Pendulum Swing] ஓர் ஒழுங்கைக் கண்டு பிடித்துக் கடிகார நகர்ச்சிக்கு முதலில் அடிகோலியவர், காலிலியோ! உலகப் புகழ் பெற்ற பைஸா கோபுர [Pisa Tower] உச்சியிலிருந்து மாறான எடையுள்ள குண்டுகளை விழ விட்டு, அவை ஒரே சமயத்தில் பூமியில் வந்து விழுவதை எடுத்துக் காட்டினார்! கண்ணோக்குகள், சோதனைகள் ஈன்ற முடிவுகளை [Observations & Experiments] விளக்கிப் படிப்படியாகப் பின்னிய விதிகளைக் கணித்த முதல் பெளதிக விஞ்ஞானி, காலிலியோ! உலக விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் காலிலியோவை ‘நவீன பெளதிகத்தின் பிதா ‘ [Father of Modern Physics] என்று புகழ் மாலை சூடியிருக்கிறார்!

காலிலியோவின் ஏழ்மை வாழ்க்கை வரலாறு

காலிலியோ காலிலி [Galileo Galilei] 1564 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி இத்தாலியில் பைஸா [Pisa] நகர்க்கருகில் ஓரிடத்தில் பிறந்தார்! தந்தையார் வின்ஸென்ஸொ [Vincenzo Galilei] இசைக் கலையின் கோட்பாடு, பயிற்சி முறைகளில் திறமை பெற்றுப் பல படைப்புகளை ஆக்கிய, ஒர் இசை ஞானி. மற்றும் அவர் ஒரு கணித நிபுணர். வலம்பிராஸா [Vallombrosa] மதப் பள்ளியில் காலிலியோவுக்குக் கல்வி புகட்டியவர், கிறிஸ்துவப் பாதிரிமார் [Monks]! 1575 இல் காலிலி குடும்பம் இடம்மாறிப் பிளாரென்ஸில் போய்க் குடி புகுந்தது. பள்ளிப் படிப்பை முடித்து விட்டுக் காலிலியோ 1581 இல் பைஸா பல்கலைக் கழகத்தில் மருத்துவம் பயிலச் சேர்ந்தார். ஆனால் கல்லூரியில் காலிலியோ மருத்துவத்தில் கவனம் செலுத்தாது, கணிதக் கல்வியில் கவர்ச்சியாகி அதில் ஈடுபட்டார்! தந்தையின் சொல்மீறி அவர் சினத்துக்கு ஆளாகி, காலிலியோ கணிதம், வேதாந்தம் ஆகிய பாடங்களைக் கற்றார்! அடுத்து பெளதிகத்திலும் அவரது கவனம் தாவியது! 1583 இல் பைஸா கோயிலில் தொங்கிய ஸாண்டிலியர் விளக்கு ஊசல் வீச்சு [Chandelier Amplitute of Swing] ஆட்டத்தின் காலத்தைத் தன் நாடித் துடிப்புடன் கணக்கிட்டு ஓர் விந்தையைக் கண்டார்! ஊஞ்சல் வீச்சின் அகற்சி [Width] கூடினாலும், குறைந்தாலும் ஊசல் வீச்சின் காலம் மாறாமல் ஒரே எண்ணிக்கையில் இருந்தது!

Fig 3 Confession to the Church

அரிஸ்டாடிலின் [Aristotle] வேதாந்தம் படித்தார். கணிதம் சொல்லிக் கொடுக்கும் அளவுக்குக் கற்றுக் கொண்டு, பட்டம் பெறாமலே பல்கலைக் கழகத்தை விட்டு 1585 இல் வெளியேறினார்! கிரேக்க மேதைகளான யூகிளிட் [Euclid (300 B.C)], ஆர்கிமீடிஸ் [Archemedes (287-212 B.C)] ஆகியோரின் கணிதம், விஞ்ஞானப் படைப்புகளைப் பயின்றார்! அத்துடன் தனியார் புகட்டும் கணிதக் கல்வியையும் பிளாரென்ஸ், ஸியனா நகரங்களில் கற்றார்! 1586 இல் ஆர்கிமீடிஸின் தத்துவத்தை உபயோகித்துக் காலிலியோ சிறிய எடையைக் காண உதவும் புதிதான ஒரு ‘நீரழுத்தத் தராசைச் ‘ [Hydrostatic Balance] செய்து, ‘சிறிய தராசு ‘ [Little Balance] என்னும் கட்டுரையை எழுதினார். 1588-1589 ஆண்டுகளில் தந்தையும் மகனும் சேர்ந்து, இசைக் கருவியின் தொனிப்புக்கும் [Pitch], நாண்களின் இழுப்புக்கும் [Tension of Strings] உள்ள தொடர்பை ஆராய்ச்சி செய்தனர்! அடுத்து இருபது ஆண்டுகள் காலிலியோ ‘அண்டங்களின் நகர்ச்சியைப் ‘ [Motion of Bodies] பற்றி ஆய்வுகள் செய்தார்.

1589 இல் காலிலியோ பைஸா பல்கலைக் கழகத்தில் கணிதப் பேராசிரியராகச் சேர்ந்தார். 1590 இல் காலிலியோ ‘நகர்ச்சியைப் ‘ பற்றிய [On Motion] தனது முன்னோட்டக் கருத்துக்களை எழுதி நூலாக வெளியிட்டார். 1591 இல் அவரது தந்தை காலமாகி, பெருத்த பணமுடை ஏற்பட்டது! ‘விழும் பண்டங்களின் எடைக்கு ஏற்றபடி, பூமியைத் தொடும் காலம் மாறும் ‘ என்று கூறிய அரிஸ்டாடிலின் கோட்பாடைத் தாக்கி, சாய்ந்த பைஸா கோபுர [Pisa Tower] உச்சியிலிருந்து சமமற்ற எடைகளுள்ள [Unequal Weights] இரண்டு பீரங்கிக் குண்டுகளை விழ விட்டு, அவை ஒரே சமயத்தில் பூமியில் விழுவதை எடுத்துக் காட்டினார்! ஆனால் அரிஸ்டாடிலைக் காலிலியோ தாக்கியது அவரது சகபாடிகளுக்குக் கோபத்தை உண்டாக்கியது! அத்துடன் கல்லூரிப் பணி உடன்பாடு [Job Contract] மீண்டும் புதுப்பிக்கப் படாது, பல்கலைக் கழகத்தில் 1592 இல் அவரது வேலையும் நிறுத்த மானது! காலிலியோவின் அன்பர்கள் பாடுவா பல்கலைக் கழகத்தில் [University of Padua] கணிதப் பேராசிரியர் பதவியை அளித்தார்கள். 1592 முதல் 1610 வரை காலிலியோ பதினெட்டு ஆண்டுகள் அங்கே கல்வி புகட்டினார்.

பல்கலைக் கழகச் சம்பளப் பணம் போதாமல் காலிலியோ, தன் இல்லத்தில் செல்வந்த மாணவரை வாடகைக்கு வைத்துக் கொண்டும், அவருக்குத் தனிக்கல்வி புகட்டியும் பணம் சம்பாதிக்க வேண்டியதாயிற்று! அவ்வாறு பணமுடை ஏற்பட்டதால், அவர் காதலித்த வெனிஸ் பேரழகி மரினா கம்பாவைத் [Marina Gamba] திருமணம் செய்து கொள்ள முடியாது, கூட்டுக் குடும்பம் நடத்த வேண்டிய தாயிற்று! காலிலியோவுக்கு இரு பெண்டிரும் ஓர் ஆணும் பிறந்தனர். ஏழ்மை நெருக்கத்திலும் காலிலியோ தனது ‘நகர்ச்சி ‘ [On Motion] கணிதப் படைப்புகளைத் தடையின்றி வளர்த்துக் கொண்டு வந்தார்!

1612 இல் நீரழுத்தவியல் [Hydrostatics] துறையை விருத்தி செய்யும் போது, காலிலியோ அரிஸ்டாடிலைத் தாக்கி ஆர்க்கிமீடியஸைத் தூக்கிப் பேசினார்! அதற்கு அடுத்த ஆண்டு கிறிஸ்துவ மதாதிபதிகளின் சினத்திற்கு அஞ்சாது, காபர்னிகஸின் [Copernicus (1473-1543)] பரிதி மைய நியதியைப் பகிரங்கமாக உயர்த்திப் பேசினார்! அதனால் அவர் மதப் பகையாளி [Heresy] என்று மதாதிபதிகளின் வெறுப்புக்கும், சினத்துக்கும் ஆளாகி, காபர்னிகஸ் கோட்பாடைப் புறக்கணிக்கும்படிக் கிறிஸ்துவ மதக்கோயில் 1616 இல் எச்சரித்தது! எட்டாண்டுகள் காலிலியோ ஆணைக்கு அடங்கி வெளிப்படையாக எதுவும் சொல்லாது, ஆனால் மனத்துக்குள் ஆதரித்து வானியலையும், யந்திரவியலையும் [Astronomy, Mechanics] தொடர்ந்தார்.

Fig 4 The Trials of Galileo-2

‘பூமைய அமைப்பையும் ‘ [Geo-centric System] அதற்கு எதிரான ‘பரிதி மைய அமைப்பையும் ‘ [Sun-centric System] கண்ணோட்ட மின்றி [Impartial Way] எடுத்து விளக்க, 1624 இல் போப்பாண்டவரிடம் [Pope Urban VIII] அனுமதி பெற்றார்! அவர் அனுமதியில் புகழ் பெற்ற நூல் ‘இருபெரும் உலக அமைப்பாடுகள் பற்றிய சொற்போர் ‘ [Dialogue of The Two Chief World Systems] 1632 இல் படைக்கப் பட்டது! ஆனால் காலிலியோ மெய்யாக அந்நூலில் பாரபட்ச மின்றி விவாதிக்க வில்லை! தனது புதிய தொலை நோக்கி மூலம் அவர் அண்டக் கோள் நகர்ச்சிகளைக் கண்டதையும், சோதித்தையும் எடுத்துக் காட்டி, காபர்னிகஸின் பரிதி மைய நியதியே மெய்யானதாக விளக்கி யிருந்தார்! மறுபடியும் அது கிறிஸ்துவக் கோயில் மடாதிபதிகளின் கோபத்தைக் கிளரி விட்டது! உடனே அவரது நூல் தடை செய்யப் பட்டது! காலிலியோ கைதியாகி, ரோமா புரிக்குக் கொண்டு செல்லப் பட்டு, நீதி மன்றத்தில் விசாரணை செய்யப் பட்டார்! விசாரணையின் முடிவில், காலிலியோ தான் கொண்டிருந்த கொள்கைக்கு மாறாக, மனச்சாட்சியை மீறி, ‘பூமி நிலையானது! சூரியன் பூமியைச் சுற்றுவதுதான் உண்மை ‘ என்று வாக்குமூலம் செய்ய வேண்டிய தாயுற்று! ‘ஆயினும் பூமிதான் சுற்றுகிறது ‘ என்று காலிலியோ வாயுக்குள் முணுமுணுத்தாகக் கூறப் படுகிறது!

1614 ஆம் ஆண்டு பிளாரென்ஸ் பாதிரி ஒருவர், ‘பூமி நகர்கிறது, பூமி சுற்றுகிறது என்று காலிலியோக் கூட்டம் புலம்புவது மதத் துரோகம் ‘ என்று அனைவரையும் தூற்றினார்! அதற்கு காலிலியோ ஒரு நீண்ட கடிதம் எழுதினார்! பைபிளில் எங்கெங்கு விஞ்ஞானக் கருத்துக்களுக்கு முரணான கூற்றுகள் உள்ளன என்று அக்கடிதத்தில் எடுத்துக் காட்டி, அறிவு வளர்ச்சி அடைந்து வரும்போது பைபிளில் உள்ள முரண்பாடுகள் திருத்தப்பட வேண்டும் என்றும், ரோமன் காதிலிக் நம்பிக்கையை எந்த விஞ்ஞான மெய்ப்பாடுக்கும் மேற்கோளாக வாதிக்கக் கூடாது என்றும் சுடச் சுடப் பதில் கொடுத்தார்!

காலிலியோ கண்டுபிடித்த கருவிகள், விஞ்ஞான விந்தைகள்

விஞ்ஞான உலகில் பெளதிக [Physics] யுகத்தின் வாசற் கதவை முதன் முதல் திறந்து வைத்தவர் காலிலியோ! அதற்கு விதை யூன்றி, அது ஆல விழுதாகப் பெருக வழி காட்டியவர், காலிலியோ! துல்லிய கருவிகளைக் கையாண்டு அளந்து, தொடர்ச் சோதனைகள் புரிந்து நிரூபித்து, அதுவரை வெறும் பெளதிகச் சித்தாந்தமாக [Metaphysical Principle] இருந்ததைப் பெளதிக விஞ்ஞான [Physical Science] மாக்கிய பெருமை காலிலியோ ஒருவரையே சாரும்! ‘பூர்வீக யந்திரவியல் ‘ [Classical Mechanics] துறைக்கு முதலில் பல அடிப்படைத் தத்துவங்களை ஆக்கி அதைப் பிறப்பித்த விஞ்ஞானத் தந்தை அவரே! காலிலியோதான் தனது தொலை நோக்கியில் அண்டக் கோள்களின் நகர்ச்சியை தொடர்ந்து நோக்கி முதன் முதல் ‘நோக்காய்வு வானியலை [Observational Astronomy] ஆரம்பித்து வைத்தவர்! அவர் எழுதிய ‘விண்மீன்களின் தூதர் ‘ [The Starry Messenger] என்னும் நூல் வானியல் விஞ்ஞானத் துறை வளர வழி வகுத்தது

Fig 5 Galileo Looking at Planets

பைஸா கோபுரத்தின் மேலிருந்து வேறுபட்ட எடைக் குண்டுகள் இரண்டை விழச் செய்து, ஒரே நேரத்தில் அவை தரையில் விழுந்ததைக் காலிலியோ காட்டினார்! அதன்பின் 1604 இல் ‘விழும் அண்டங்களின் விதியை ‘ ஆக்கினார். ‘விழும் அண்டத்தின் உயரம், அது கடக்கும் நேரத்தின் ஈரடுக்கிற்கு நேர் விகிதத்தில் உள்ளது ‘ [The falling height by a body is proportional to the square of the elapsed time] என்பதே அந்த விதி! எறியப்படும் கணைகள் [Projectiles] சீர்வளைவு பாதையில் [Parabolic Path] செல்வதை கணித முறையில் காட்டினார்! காலிலியோ மேலும் கூறியது: ஏவப்படும் ஓர் எறிகணை வேகத்திற்கு இரு திசைப் பிரிவுகள் [Two Components] உள்ளன. ஒன்று மட்டத்தில் செல்லும் சீரான வேகம் [Uniform Horizontal Motion]! மற்றது செங்குத்தில் போகும் வேகம் [Vertical Motion (Acceleration or Deceleration) due to Gravity]! கணை மேல்நோக்கிச் செல்லும் போது, செங்குத்து வேகம் தளர்கிறது! கணை தரை நோக்கி மீளும் போது, செங்குத்து வேகம் வளர்கிறது! அவரது சோதனை மூலம் விளைந்த ‘விழும் அண்டங்களின் விதி ‘ [Law of Falling Bodies], ஸர் ஐஸக் நியூட்டன் ‘நகர்ச்சி விதிகளைப் ‘ [Newton 's Laws of Motion] படைக்க வழி காட்டியது!

அடுத்து காலிலியோ ஒப்பியல் வேகத்தைப் [Relative Velocity] பற்றி விளக்கினார்! ‘நகரும் பூமி அல்லது சுழலும் பூமி, தன்னோடு சேர்ந்து மேகத்தையும், பறவை இனத்தையும் தூக்கிச் செல்லாது ‘ என்று காபர்னிகஸ் கூறி யிருந்தார்! ஆனால் காலிலியோ அதை மறுத்துக் கூறி, ‘பூமியின் நகர்ச்சியில் பிரிபடும் மட்ட வேகம் [Horizontal Component of Earth 's Motion], பூமியோடு ஒட்டாத மேகம், பறவைகள் அனைத்தையும் எப்போதும் தன்னோடு இழுத்துச் செல்லும் ‘ என்று விளக்கினார்!

1609 இல் ஹாலந்தில் ‘உளவு நோக்கி ‘ [Spyglass] ஒன்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளதைக் காலிலியோ கேள்விப் பட்டார். முதன் முதலாக 20 மடங்கு உருப்பெருக்கம் [Magnification] கொண்ட தொலை நோக்கியைத் தன் கையாலே ஆடிகளைத் தேய்த்துத் தயாரித்தார்! அத்தொலை நோக்கி கப்பல் ஓட்டுநருக்கும், கடற்படை ஒற்றரருக்கும் உறுதுணை யானது! காலிலியோ தனது தொலை நோக்கியில் முதலில் நிலவின் மலைகளையும், குழிகளையும் கண்டார்! பால்மய வீதிகள் [Milky Way] கோடான கோடி விண்மீன்கள் கொண்டுள்ளதைக் கண்டார்! பூதக்கோள் வியாழனைச் சுற்றி வரும் நான்கு பெரிய சந்திரன்களைக் கண்டார்! 1610 ஆம் ஆண்டில் சுடரொளி வீசும் வெள்ளியின் வளர்பிறை, தேய்பிறையைக் கண்டு, ‘வெள்ளி சூரியனைச் சுற்றி வருகிறது ‘ என்று முதன் முதலில் சோதனை மூலம் காட்டி, டாலமியின் ‘பூமைய நியதி ‘ பிழையான தென்றும், காபர்னிகஸின் ‘பரிதி மைய நியதியே ‘ மெய்யான தென்றும் நிரூபித்தார்! அதுபோல் புதன் கோளின் பிறைகளையும் கண்டார். இத்தாலிய வேதாந்தப் பேராசிரியர்கள் பிறை வெள்ளி இருப்பதை நம்பாமல் காலிலியோவைத் திட்டி, அரிஸ்டாடில் கூற்றுப்படி முழுக் கோளங்களைத் தவிர குறைக் கோள்கள் விண்வெளியில் இருக்க முடியாதென வாதித்தார்கள்!

Fig 6 Galileo's Refractor

விண்வெளியில் தொலை நோக்கி மூலம் தான் கண்ட, வான அற்புதங்கள் யாவற்றையும் ‘விண்மீன் தூதன் ‘ [The Starry Messenger] என்னும் தனது அரிய நூலில் வெளியிட்டுள்ளார்! 1612 ஆம் ஆண்டில் காலிலியோ ஆர்கிமிடிஸ் தத்துவத்தைப் பயன்படுத்தி, ‘மிதக்கும் கலங்கள் ‘ [Floating Bodies] என்னும் நூலை எழுதினார். உடனே அதைப் புறக்கணித்து நான்கு எதிர்ப்பு நூல்கள் பின்வந்தன! சனிக்கோளை முதன் முதலில் தொலை நோக்கியில் பார்த்து, அது முட்டை வடிவத்தில் இருப்பதாகக் கருதினார். ஆனால் அவருக்குப் பின் வந்த கிரிஸ்டியான் ஹூஜென்ஸ் [Christiaan Huygens], அக்கருத்தை திருத்திச் சனியைச் சுற்றி வளையங்கள் இருப்பதாக விளக்கினார்! 1613 இல் காலிலியோ தன் தொலை நோக்கியில் பரிதியின் தேமல்களைக் [Sunspots] முதன் முதல் கண்டு பிடித்து ஒரு கட்டுரையை வெளியிட்டார்! சூரிய மண்டலத்தின் எட்டாவது கோளான நெப்டியூனின் [Planet Neptune] நகர்ச்சியைத் தொடர்ந்து [1612-1613] குறித்த காலிலியோ, தான் ஒரு புதுக்கோளைக் கண்டு பிடித்ததை அறியாமலே போய்விட்டார்! பிறகு 230 ஆண்டுகள் தாண்டி நெப்டியூன் 1846 இல் ஜொஹான் கல்லே [Johann Galle] என்பவரால் கண்டு பிடிக்கப் பட்டது!

1641 இல் காலிலியோவின் மகன் வின்சென்ஸியோ [Vincenzio] தந்தையின் ஊஞ்சல் கடிகார டிசைனை வரைந்து அதன் முதல் வடிவத்தை உருவாக்கினார். அடுத்து 1655 இல் டச் விஞ்ஞானி கிரிஸ்டியான் ஹியூஜன் அதற்கு முழு வடிவத்தைக் கொடுத்து, ஊசல் கடிகாரத்தை ஆக்கினார்! 1589 இல் உஷ்ணமானி [Thermometer] ஒன்றை ஆக்கினார். அதுவே முதலில் செய்யப் பட்ட சோதனைக் கருவி! 1592 இல் கணிதத் துறையில் கணக்கிட உதவும் கணக்கீடு மானி [Calculating Compass] ஒன்றை அமைத்தார். காலிலியோக்குப் புதிராய் இருந்த பெளதிகப் பிரச்சனைகள் இரண்டு! வால்மீன்களின் [Comets] விபரீதமான போக்கைக் கண்டு, அவை யாவும் ‘ஒளி மாயை ‘ [Optical Illusion] என்று கருதினார்! அடுத்து கடல் அலைகளின் உச்ச, நீச்ச எழுச்சிகள் [High, Low Tides] நிலவின் போக்கால் ஏற்படுகின்றன என்று அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை!

Fig 7 Galileo's 400th Birthday

திருமணம் ஆகாமல் 1600 இல் தனக்குப் பிறந்த மூத்த புதல்வி வெர்ஜீனியாவைப் [Viginia Galilei] பதிமூன்றாம் வயதில் காலிலியோ, பிளாரென்ஸ் நகருக்கு அருகே இருந்த கிறிஸ்துவக் கன்னிமாடத்தில் [Christian Convent] கன்னியாக விட்டுவிட நேர்ந்தது! வெர்ஜீனியா தந்தையைப் போல் நுணுக்கமான சிந்தையும், கூரிய அறிவும் படைத்தவள். கன்னிமாடத்தில் வெர்ஜீனியாவின் ஞானப் பெயர் மரியா ஸெலஸ்டி [Maria Celeste] என்று மாற்றல் ஆனது! தந்தையுடன் சேர்ந்து தொலை நோக்கியில் அண்டக் கோள்களைக் கண்டு மகிழ்ந்தவள், வெர்ஜீனியா! உன்னத மதிப்பில் வைத்துத் தந்தையை அவள் கடவுளுக்கு இணையாகப் போற்றி வந்திருக்கிறாள்! காலிலியோ தான் கண்ட விஞ்ஞான விந்தைகளைத் தன் புதல்வியிடம் கூறி யிருப்பதைக் கன்னிமாடத்திலிருந்து தந்தைக்கு வெர்ஜீனியா எழுதிய கடிதங்களில் காணலாம்!

அவள் 21 ஆண்டுகளாகக் காலிலியோவுக்கு 124 கடிதங்கள் எழுதி யிருக்கிறாள்! அவளது அரிய கடிதங்களில், காலிலியோவின் பல பெளதிகக் கண்டு பிடிப்புகள் காணப் பட்டு, அத்தொகுப்பு அவரது சரிதைக் காவியமாக இப்போதும் பாதுகாக்கப் பட்டு வருகிறது! ஆனால் மகள் பாதுகாப்பாய் வைத்திருந்த காலிலியோவின் கடிதங்கள் அனைத்தும், வெர்ஜனியா காலமான பின்பு ரோமாபுரிக் கோயிலுக்குப் பயந்து, கன்னிமாடத்தில் எரிக்கப் பட்டதாய் அறியப் படுகிறது! புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளி ‘தேவா ஸோபெல் ‘ [Dava Sobel] எழுதிய ‘காலிலியோவின் புதல்வி ‘ [Galileo 's Daughter (1999)] என்னும் அற்புதப் புத்தகம் காலிலியோவின் வரலாற்றை அழகாகக் காட்டுகிறது!

மெய்யான பிரபஞ்ச அமைப்பை பறைசாற்றிய குற்றத்திற்கு காலிலியோ ஒன்பது ஆண்டுகள் இல்லச் சிறைவாச தண்டனையை அனுபவித்தார்! 1634 இல் கன்னிமாடத்தில் தனித்து வாழும் அவரது அருமை மூத்த மகள் மரியா ஸெலஸ்டி மரண மடைந்த செய்தி, தீராக் கவலையைத் தந்தது! அப்போது அந்த நிலையிலும் காலிலியோ பெளதிகப் படைப்புகளைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தார். சிறையில் கிடந்த காலிலியோவைக் காண, பிரிட்டிஷ் கவியோகி ஜான் மில்டன் [John Milton], பிரிட்டிஷ் வேதாந்தி தாமஸ் ஹாப்பில் [Thomas Hobbes], காலிலியோவின் மாணவர் டாரிசெல்லி [Toricelli] ஆகியோர் வந்தனர்! அவரது பெளதிகப் பணிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, ‘இரட்டைப் புதிய விஞ்ஞானங்களின் உரையாடல்கள் ‘ [Discourses on Two New Sciences] என்னும் நூல் தயாரானது! அந்நூல் இத்தாலியை விட்டு ஹாலந்துக்கு மறைவாகக் கடத்தப் பட்டு, 1638 இல் அச்சாகி வெளியானது!

Fig 8 Galileo's Tomb

சிறையில் காலிலியோ தனது 74 ஆம் வயதில் கண்கள் குருடாகிப் போனாலும், தொடர்ந்து ஊஞ்சல் கடிகாரத்தை டிசைன் செய்தார். அதுவே அவரது இறுதியான படைப்பு! 1642 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி உலகின் முதல் பெளதிக விஞ்ஞானியாகக் கருதப் பட்ட காலிலியோ மண்ணுலகை விட்டு உயிர் நீத்தார்!

340 ஆண்டுகளுக்குப் பிறகு 1979 இல் இரண்டாம் போபாண்டவர் ஜான் பால் [Pope John Paul II] மதவாதிகள், அறிஞர்கள், வரலாற்று ஆசிரியர்கள் ஆகியோரைத் தூண்டிக் காலிலியோவிற்கு நீதி மன்றம் அளித்த தண்டனை ஏற்றதா என்று மறுபடியும் ஆராய ஆணையிட்டார்! 1982 இல் காலிலியோ தண்டனை ஆய்வுக் குழுக்கள் நான்கு நியமிக்கப் பட்டன! கிறிஸ்துவ விஞ்ஞான நிறுவனம் [Pontifical Academy of Science] 1992 இல் வெளிப்படையாகப் ‘பரிதி மைய நியதிக்கு' ஒப்புதல் தெரிவித்து, இரண்டாம் போப்பாண்டவர் ஜான் பால் மூலம் மாமேதை காலிலியோவைச் சிறையிட்டதற்கு வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொண்டது!

‘பெளதிக விஞ்ஞானத்தின் பிதா ‘ என்று போற்றிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், அவரது முன்னோடி ஐஸக் நியூட்டன் ஆகியோர் இருவருக்கும் விஞ்ஞான குருவாய், காலிலியோ விளங்குகிறார்! நியூட்டனின் பூர்வீக யந்திரவியல் [Classical Mechanics], ஈர்ப்பியல் நியதி [Theory of Gravitation], ஆகிய பெளதிகப் படைப்புக் களுக்கு அடிப்படைக் கணித ஆக்கங்களை, அளித்தவர் காலிலியோ ஒருவரே!

1971 இல் அபொல்லோ விண்சிமிழில் [Apollo-15 Spacecraft] பறந்து, சூன்ய மண்டலமான சந்திரனில் நடந்த டேவிட் ஸ்காட் [David Scott] பறவையின் சிறகையும், இரும்பு சுத்தியலையும் மேலிருந்து கீழே விழவிட்டார்! இரண்டும் ஒரே சமயத்தில் தரைத் தொட்டவுடன், ‘இது காலிலியோவின் கருத்தை மெய்யாக்குகிறது ‘ என்று மகிழ்ச்சி அடைந்தார்! நாசா [NASA] 1989 இல் வியாழனை நோக்கிக் ‘காலிலியோ விண்சிமிழை ‘ [Galileo Spacecraft] அனுப்பியது! அது 1995 இல் வியாழனை நெருங்கிக் காலிலியோ தொலை நோக்கியில் 385 ஆண்டுகளுக்கு முன்பு கண்ட, அதன் துணைக் கோள்களைப் [Jupiter 's Satellites] படமெடுத்தது!

************************

S. Jayabarathan (jaya...@tnt21.com) October 8, 2009 (R-2)

 
faint_grain.jpg
stampa_girl_line_en.gif

N. Ganesan

unread,
Nov 5, 2009, 9:48:38 PM11/5/09
to தமிழ் மன்றம்

திரு. ஜெயபாரதன்,

பழைய மடல்களின் இழைத் தலைப்பை மாற்றவேண்டாம்.

புதிதாக தலைப்புகளில் எழுதினால் நல்லது. பழைய மடல்கள்
புதைபடாமல் காக்கும்.

நன்றி,
நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 15, 2009, 3:30:58 PM11/15/09
to தமிழ் மன்றம்

On Nov 2, 10:44 am, Mani Manivannan <mmanivan...@gmail.com> wrote:
> அசை, ஆசை, இசை, ஈசல், ஊசி, ஏசு, ஐசரி, ஓசை, கசை, காசு, கூசி, கொசு,
> கோசர், தசை, தாசி, திசை, தூசு,  பசு, பசை,  பசுமை, பாசி, பூசு, பேசு, பொசுக்கு,
> நசுக்கு, நேசம், மாசு, மிசை, மீசை, மூசு, மேசை, மோசம், வசை, விசை, வீசை,
> வேசி...
>
> இவற்றில் எல்லாம் ச-கரம் மெலிந்து ஸ-கரம் ஆக ஒலிக்கும் என்பது தமிழ்
> பயின்றவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
>
> கணேசன் என்ற பெயரை கணேச்சன் என்று தமிழ் தெரியாதவர்கள்தாம் பலுக்குவர்.
>
> தூங்குபவர்களை எழுப்பலாம்.  தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்புவது கடினம்.
>
> -மணி மு. மணிவண்ணன்


> சென்னை, தமிழ்நாடு
>

> On 11/2/09, S. Jayabarathan <jayaba...@tnt21.com> wrote:
>
>
>
> >    நண்பர் கணேஸன்,
>
> > 'Ganesan'   என்பதை நான்  'கணேஸன்' என்று ஆங்கில உச்சரிப்புப்படி எழுத
> > விரும்புகிறேன்.
>
> > நீங்கள் 'கணேசன்' என்று எழுத விரும்பினால் ஆங்கிலத்தில் 'Ganechan'
> > என்றுதான் குறிப்பிட வேண்டும்.
>
> > சி. ஜெயபாரதன்.
> >     <http://www.incredimail.com/index.asp?id=109095&rui=115895523>

N. Ganesan

unread,
Nov 15, 2009, 3:42:32 PM11/15/09
to தமிழ் மன்றம், tamizh...@googlegroups.com

On Nov 2, 10:44 am, Mani Manivannan <mmanivan...@gmail.com> wrote:
> அசை, ஆசை, இசை, ஈசல், ஊசி, ஏசு, ஐசரி, ஓசை, கசை, காசு, கூசி, கொசு,
> கோசர், தசை, தாசி, திசை, தூசு,  பசு, பசை,  பசுமை, பாசி, பூசு, பேசு, பொசுக்கு,
> நசுக்கு, நேசம், மாசு, மிசை, மீசை, மூசு, மேசை, மோசம், வசை, விசை, வீசை,
> வேசி...
>
> இவற்றில் எல்லாம் ச-கரம் மெலிந்து ஸ-கரம் ஆக ஒலிக்கும் என்பது தமிழ்
> பயின்றவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
>

ஆமாம். இதுபற்றி மின்தமிழ் குழுவில் விரிவாக நானும், செல்வாவும்
பேசியுள்ளோம்.
இரண்டு உயிரெழுத்துக்கு நடுவே வரும் க, ச இரண்டுமே உராய்வொலிகள்
(வாய்ஸ்லெஸ் ஃப்ரிக்கேட்டிவ்ஸ்) என்னும் இழையைப் பாருங்கள்.

http://scriptconv.googlelabs.com/ பயனித்தேன்.
அவை ஆங்கிலத்தில் ஆகும் விதம்:
asai, aasai, isai, eesal, oosi, yesu, aisari, osai, kasai, kaasu,
koosi, kosu,
kosar, thasai, thaasi, thisai, thoosu, pasu, pasai, pasumai, paasi,
poosu, pesu, posukku,
nasukku, nesam, maasu, misai, meesai, moosu, mesai, mosam, vasai,
visai, veesai,
vesi...

பசி என்ற சொல் pasi என்றாகும் என்றெழுதினேன். அப்பொழுது ஹரிகி, தேவ்,
நாக. இளங்கோவன், வேந்தன், வினோத், .... எல்லோரும் பேசினோம்.
வேந்தன் மீண்டும் அக்குழுவில் எழுததொடங்கிவிட்டார். நாக. இளங்கோ
சொல்லிய பதில் புரியவில்லை, ....

> இவற்றில் எல்லாம் ச-கரம் மெலிந்து ஸ-கரம் ஆக ஒலிக்கும் என்பது தமிழ்
> பயின்றவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

பழந்தமிழ் ஒலியை ககரம், சகரத்திற்குச் சரியாகப் புழங்குவது ஈழத்திலேதான்.
pirabaharan, pirabhaharan அங்கே தாக்கம் அதிகம்.

நா. கணேசன்


DG Bharathi

unread,
Nov 16, 2009, 1:43:57 PM11/16/09
to தமிழ் மன்றம்
தமிழர் வாழ்வில் பயன்படும் தமிழ்ச் சொற்களைக் களைந்து தமிழாக்கப்பட்ட
பிறமொழிச்சொற்களை ஏற்கவேண்டும் என்பது மிக மிகத் தவறானதொரு எண்ணமாகும்.
இயற்பியலை பௌதிகம் என்றும்
வேதியியலை (வேதியல் என்றெழுதி) ரசாயனமென்றும்
அறிவியலை விஞ்ஞானமென்றும் மற்றும்சில..

கூறுவது
1. தவறான எண்ணத்தில் எழுதியிருக்க வேண்டும், அல்லது
2. தமிழை விட வேறொரு மொழியை நன்கு கற்றதால் அம்மொழிச் சொற்களையும்
பயன்படுத்த வைக்க வேண்டும் என்ற எண்ணமாகும். (ஆனால் தமிழ்ச் சொல்லை
நீக்க வேண்டுமென்பது முற்றிலும் தவறானது). செய்தித்தாளில் காலையில்
படித்த ஒரு ஆங்கிலச் சொல்லை எப்படியாவது அன்று எழுதும் கடிதம் ஒன்றிலாவது
பதித்தே ஆகவேண்டுமென முயல்பவர்களை/நினைப்பவர்களை பார்த்திருப்பீர்கள்.

மணிவண்ணன் அவர்களின் திரட்டல்களிலிருந்து பல தகவல்கள் கிடைத்ததோடு, தமிழை
மேலும் மேலும் எளிமையாக்க முடியும் என்பது தெளிவாகிறது. பேரா. முத்துக்
குமரன், முன்னாள் துணைவேந்தரும், கூடுமிடத்தை கூடம் என்றும்
நிறுத்துமிடத்தை நிறுத்தம் என்றும் எளிமயாக்கப்பட்டதை அறிவியல் தமிழ்
மாநாட்டில் எடுத்துக்கூறினார்.

தமிழை மேன்மைப்படுத்த வேண்டும் கீழ்மைபடுத்தக் கூடாது.

அன்புடன்
பாரதி

> 2009/11/5 S. Jayabarathan <jayaba...@tnt21.com>


>
>
>
> >     Philosophy   மெய்ப்பாடில்லை.   இவை உதாரணங்கள் :
>
> > 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கிரேக்க கணித மேதை பித்தகோரஸ் [Pythagoras],
>
> > கிரேக்க வேதாந்தி அரிஸ்டாடில் [Aristotle (384-322 B.C.)]
>
> > கிரேக்க வானியல் மேதை, அரிஸ்டார்ச்சஸ் [Aristarchus (310-230 B.C.)]
>
> > கிரேக்க நிபுணர் எராடோஸ்தெனிஸ் [Eratosthenes (276-194 B.C.)]
>
> > கிரேக்க மேதை ஹிப்பார்ச்சஸ் [Hipparchus (190-120 B.C.)] .
>
> > கி.பி. 87-150 ஆண்டுகளில் வாழ்ந்த டாலமி [Ptolemy] கி
>
> >  +++++++++++++++++
>

> >  *-------Original Message-------*
>
> >  *From:* Mani Manivannan <mmanivan...@gmail.com>
> > *Date:* 04/11/2009 4:19:20 PM
> > *To:* tamil...@googlegroups.com
> > *Cc:* தமிழமுதம் <tamizh...@googlegroups.com>
> > *Subject:* [தமிழ் மன்றம்] Re: [அன்புடன்] Re: [தமிழ் ம (R) ்றம்] மூன்று


> > தமிழ்ச் சொற்கள் (For Physics, Chemistry & Philosophy)
>
> > பெரியவர் ஜெ.பா.வுக்கு ஃபிலாஸஃபி என்பது வேதாந்தம்.  மெய்யறிவியல் என்பது
> > சரியில்லை என்கிறார்.
>
> > "வேதாந்தம் மெய்ப்பாடாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.   அது ஒரு கோட்பாடு.
> > சித்தாந்த விளக்கம்.   கோட்பாடு ஒப்புக் கொள்ளப் படலாம். அல்லது நிராகரிக்கப்
> > படலாம்.   அதை மெய்யறிவியல் என்பது சரியில்லை" என்று வாதாடுகிறார்.
> > முதலில் ஃபிலாஸஃபி என்ற ஆங்கிலச் சொல்லைப் பார்ப்போமா?
>

> > *phi·los·o·phy**1. *Love and pursuit of wisdom by intellectual means and
> > moral self-discipline.
> > *2. *Investigation of the nature, causes, or principles of reality,


> > knowledge, or values, based on logical reasoning rather than empirical
> > methods.

> > *3. *A system of thought based on or involving such inquiry: *the
> > philosophy of Hume.*
> > *4. *The critical analysis of fundamental assumptions or beliefs.
> > *5. *The disciplines presented in university curriculums of science and


> > the liberal arts, except medicine, law, and theology.

> > *6. *The discipline comprising logic, ethics, aesthetics, metaphysics, and
> > epistemology.
> > *7. *A set of ideas or beliefs relating to a particular field or activity;
> > an underlying theory: *an original philosophy of advertising.*
> > *8. *A system of values by which one lives: *has an unusual philosophy of
> > life.*
> > *
> > ------------------------------
> > *


> > [Middle English philosophie, from Old French, from Latin philosophia, from

> > Greek philosophi, from philosophos, *lover of wisdom, philosopher*; see *
> > philosopher*.]


>
> > சரி வேதாந்தம் என்றால் என்ன? வேதத்தின் அந்தம். வேதியல் என்று சொன்னால் வேதம்
> > நினைவுக்கு வரும் பெரியவருக்கு வேதாந்தம் என்று சொன்னால் எப்படியோ சமயச்
> > சார்பற்ற பொதுச்சொல்லாகி விடுகிறது!  விந்தை.
>

> >  ------------------------------
> > 56. वेदः vēdḥ
> > <http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.5:1:3485.a...>:
> > (page 1496<http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/contextualize.pl?p.5.apte...>)


>
> > system; see मीमांसा. It represents the popular pantheistic creed of the
> > Hindus, regarding, as it does, the whole world as synthetically derived from
> > one eternal principle, the Brahman or Supreme Spirit; see ब्रह्मन् also).

> > ˚गः, ˚ज्ञः a follower of the *Vedanta* philosophy.-अन्तिन् *m.* a follower


> > of the Vedanta philosophy.-अभ्यासः 1 the study of the Vedas; वेदाभ्यासो हि
> > विप्रस्य तपः परमिहोच्यते Ms.2.166.-2 the repetition of
>

> > ------------------------------
> > 57. वेदः vēdḥ
> > <http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.5:1:3485.a...>:
> > (page 1496<http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/contextualize.pl?p.5.apte...>)


>
> >  of the Hindus, regarding, as it does, the whole world as synthetically
> > derived from one eternal principle, the Brahman or Supreme
>

> ...
>
> read more »

DG Bharathi

unread,
Nov 17, 2009, 2:25:49 PM11/17/09
to தமிழ் மன்றம்
ஐயா,
பெய், பேய் என்ற இரண்டு சொற்களுக்கும் pei என்றுதான் வருகிறது.

மேலும் இன்று நாம் பயன்படுத்தும் பல தமிழல்லாத சொற்களும் சிதைகின்றன.

எனவே அத்தளத்தை மேம்படுத்தும்படி கோரவேண்டும்.

அன்புடன்
பாரதி

> ...
>
> read more »

வேந்தன் அரசு

unread,
Nov 17, 2009, 10:49:04 PM11/17/09
to tamil...@googlegroups.com
தீம் எனும் ஆங்கில சொல்லுக்கு நிகரான ஒரு தமிழ் கிளவியை சொல்லுங்கள்


hungry, starving இவற்றுக்கு பசி எனும் ஒரு சொல்தானா?

N. Ganesan

unread,
Nov 18, 2009, 12:19:09 AM11/18/09
to தமிழ் மன்றம்

On Nov 17, 9:49 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> தீம் எனும் ஆங்கில சொல்லுக்கு நிகரான ஒரு தமிழ் கிளவியை சொல்லுங்கள்
>
> hungry, starving இவற்றுக்கு பசி எனும் ஒரு சொல்தானா?


பறிதல், பட்டினி கிடத்தல் = starving

பசி = hunger

வேந்தன் அரசு

unread,
Nov 18, 2009, 8:03:46 AM11/18/09
to tamil...@googlegroups.com


18 நவம்பர், 2009 12:19 am அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:



On Nov 17, 9:49 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> தீம் எனும் ஆங்கில சொல்லுக்கு நிகரான ஒரு தமிழ் கிளவியை சொல்லுங்கள்
>
> hungry, starving இவற்றுக்கு பசி எனும் ஒரு சொல்தானா?


பறிதல், பட்டினி கிடத்தல் = starving

பாடல் உண்டா கணேசர்?

C.R. Selvakumar

unread,
Nov 18, 2009, 9:00:06 AM11/18/09
to tamil...@googlegroups.com
நல்ல கேள்வி வேந்தனாரே!
 
தீம் என்னும் ஆங்கிலச்சொல்லுக்குப் பொதுவாக தலைப்பு
அல்லது தலைக்கரு என்று கூறலாம். நடுவான மையக்
கருத்தோட்டம். இது இசைவடிவாகவும் இருக்கலாம், வேறு எந்தக்
கலை வடிவாகவும் இருக்கலாம். கரு, கருவாயம் என்பது
பொருள்.
 
அ'ங்கிரி என்பதை பசி எனலாம்.
இசுட்டார்வ் என்பதை உறுபசி எனலாம்.
துன்புறுதல் என்பது போல பசியுறுதல் என்றும்
கூறலாம். பசித்திருத்தல் இசுட்டார்வ்
அழிபசியுடன் இருத்தல் இசுட்டார்வ். தீப்பசி
என்றுகூடச் சொல்லலாம். அதாவது
சூழலைப் பொருத்தது. பட்டினி, பட்டினிகா
(பட்டினிகாத்தல்), ஒட்டப்போடுதல் என்றாலும்
வயிற்றைக் காயப்போடுதல்.
மகா பெரிய புதுமையைப் படைப்பதாக நினைப்பவர்கள்,
ஆகா-ஊகூக் காரர்கள்
(அதாவது பெயர்ச்சொல்லையோ அல்லது
எந்தவொரு சொல்லையோ வினைச்சொல்லாகத்
தமிழில்  ஆக்கும் எளிய செயலைச் செய்வோர்)
பட்டினியாய் இருத்தலைப் பட்டினித்தல் என்றுகூடச்
சொல்லலாம். ஒரு கவிதையில்
பட்டினித்திருந்தேன், அல்லது  கண்கள் இருளப்
பட்டினித்தேன்  என்று ஏதேனும் சொல்லிவிட்டால்
போதுமே :)
 
அன்புடன்
செல்வா

2009/11/18 வேந்தன் அரசு raju.ra...@gmail.com

C.R. Selvakumar

unread,
Nov 18, 2009, 10:49:58 AM11/18/09
to tamil...@googlegroups.com
உருபசி என்றும் உறுபசி என்றும் இரண்டுவிதமாகவும் கூறலாம்.
 
உரு என்பதற்கு விளக்கம் சொல்ல இங்கு நல்ல தமிழறிஞர்கள்
இருக்கின்றார்கள்.
 
செல்வா

2009/11/18 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Nov 18, 2009, 10:21:43 PM11/18/09
to tamil...@googlegroups.com
உறுபசிடி வினைத்தொகை

starving க்கு பட்டினி நல்ல சொல்

i am starving
நான் பட்டினி கிடக்கிறேன்

equinox  என்பதற்கு அரைநாளிரா (அர்த்தநாரீஸுவரன் ஒட்டி) என்ற சொல்லை தமிழ் உலகுக்கு அறிமுகம் செய்கிறேன்

iraamaki

unread,
Nov 19, 2009, 4:14:50 AM11/19/09
to tamil...@googlegroups.com
அன்பிற்குரிய வேந்தன் அரசு,
 
theme என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் கேட்டிருந்தீர்கள். கொஞ்சம் இடுக்கான சொல் தான். ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகரமுதலியில் :
 
c.1300, from O.Fr. tesme (13c., with silent -s-), from L. thema "a subject, thesis," from Gk. thema "a proposition, subject, deposit," lit. "something set down," from root of tithenai "put down, place," from PIE base *dhe- "to put, to do" (see factitious). Extension to music first recorded 1674; theme song first attested 1929. Theme park is from 1960 என்று காணப்படும்.
 
தள்>தரு>தருதல் என்ற வினைச்சொல்லில் இருந்து, தரப்படும் பொருள்களைக் குறிப்பதாய்த் தரு>தார்>தாரம் என்று விரியும். ”கடற் பல் தாரத்த நாடு கிழவோயே” என்று புறம் 30 -இல் வரும். தந்தது/தருவது தாரம் ஆகும். தவிர வேறு ஒரு வகையில் தார்>தாரை என்பது ”வரிசை, நீரொழுக்கு, ஒழுங்கு” என்ற பொருட்பாடுகளும் கொள்ளும். தருவது என்னும் வினை உருவாக்கும் பெயர்ச்சொல் தார். (வாழைத் தாரை இங்கு எண்ணிக் கொள்ளுங்கள்.) தருவது என்னும் வினை முன்னே தருவது, மேலே தருவது என்று இருவகைப் படும். தாரின் நீட்சியான தாரம் என்ற சொல் உச்சம், ஏற்றம் என்ற பொருட்பாடுகளையும் நேரடியாகக் காட்டும். இன்னும் நீளுதலில், ஏறி உயர்ந்து நிற்கும் தாரகை (star), தாரணி>தரணி (= ஏற்றம் பெற்ற உலகு) என்ற சொற்கள் ஏற்றப் பொருளைச் சரியாகவே குறிப்பதைப் பார்க்கலாம்.அதோடு தாரம் என்ற சொல் ஏழாவது சுரம் நிஷாதத்தைக் குறிக்கும். இந்தக் காரணங்களால், தாரம் என்ற சொல் theme என்பதைக் குறிக்கவும் பயன்படுத்தலாமோ என்று தோன்றுகிறது. 
 
தாரப் பூங்கா = theme park.
அவர் பேச்சின் இடையே இழையும் தாரம் என்ன “what is the theme permeating his speech?
மிசையின் மேல் ஏற்றுதற்கு பல்வேறு தாரங்களை மைக்ரோசாவ்ட் கொடுக்கிறது ”Microsoft gives various themes for loading on to the desktop”
 
அடுத்து hungry, starve என்ற சொற்களின் வேறுபாட்டைக் கேட்டிருந்தீர்கள்.
 
hungry என்பதைப் பட்டினி, பசி என்ற இரண்டுமே குறிக்க முடியும். இந்த இரு சொற்களுமே புள்>பள் என்னும் வேர்ச்சொல்லில் கிளைத்தவை. பள்>படுதல் = வாடுதல் என்ற பொருள் கொள்ளும். எங்கள் ஊர்ப்பக்கம்: “பட்டுக் கிடப்பான்” என்று சொன்னால், ”இருக்கும் நிலையில் ஆழ்ந்து (பள்ளத்தில்) வாடித் தளர்ந்து கிடப்பான்” என்று பொருளாகும். படுதலின் பிறவினைச்சொல் பட்டுதல். படுத்துதல் = துன்பஞ் செய்தல்; பட்டு உண்ணுதல்> பட்டுண்ணுதல்>பட்டுண்ணித்தல் என்ற வினை ”வாடி உண்ணும் நிலையைக் குறிக்கும். அதாவது நோன்பாய் இருந்து பிறகு உண்ணும் செய்கையைக் குறிக்கும். பேச்சு வழக்கில் பட்டுணி>பட்டினியானது. இன்றைக்குப் பட்டுணி என்றால் யாருக்கும் தெரியாது,, பட்டினி என்றால் விளங்குகிறது.
 
பட்டினி = உணவு கொள்ளாமை படிமை - தவம் - நோன்பு - உண்ணாமை
பட்டினிகாத்தல் = உணவின்றியிருத்தல், to starve
பட்டுதல் = செ.கு.வி. அடித்தல் பள்>பட்டு>பட்டுதல் தென்மொழி மார், ஏப், 76, பக் 2
படுதல் = வாடுதல், அழிதல், சாதல், சாய்தல், துன்பமடைதல், பல்>படு>படு-
பட்டுணிதல் = வாடியபின் உண்ணுதல்
 
பசி என்ற சொல்லின் சொற்பிறப்பையும் தெரிந்து கொள்ளுவது நல்லது. புள்>பொள்>பொய் என்பது உள்ளீடு இல்லாத நிலையைக் குறிப்பது. பொள்ளின் வழியாக உள்ளே தள்ளுவது பொசிவது என்று அமையும் ”நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்”  பொசித்தல் வெறும் ஒழுகலை மட்டும் குறிக்காமல் உண்ணுதலையும் குறிக்கும். பொசித்தல் மீத்திருத்தமாய் இன்று புசித்தல் ஆனது. அதே பொள், பொள்ளாகவே கிடத்தால், பொள்>பள்>(பய்)>பசி என்றாகும். அதாவது வயிறு என்னும் பொள் நிறையாத நிலை. தவிர பொள் கொண்ட கலன் தளர்நிலை எய்தும், கட்டு விரியும். பசியின் விளைவாகவும் தளர்நிலை எய்தும். பசியின் தொடர்ச்சியாய் மூக்கொலி ஏறிய சொற்களும், தளர்நிலை, வற்கடம் போன்றவற்றை உணர்த்தும். பஞ்சறை = தளர் நிலை, weak condition, பஞ்சி = வருத்தம், பஞ்சை = வற்கடம், famine. இன்னும் பஞ்சைக்கோலம், பஞ்சைத்தனம், பஞ்சைப்பனாதி, பஞ்சைப்பாட்டு, பஞ்சை மயிர் = மென்மயிர், புன்மயிர், பஞ்சையன் போன்ற சொற்களை எண்ணிப் பார்க்கலாம்.
 
இங்கு உறுபசி என்பதைச் சொல்லியிருந்தார்கள். உறுதல் என்பது இருத்தல், நேர்தல், தங்கியிருத்தல். அதாவது தொடர்ச்சியாக இருக்கும் பசி. அது starve என்பதற்குச் சரியாக அமையாது.    
   
O.E. steorfan "to die" (pt. stearf, pp. storfen), from P.Gmc. *sterban "be stiff" (cf. O.Fris. sterva, Du. sterven, O.H.G. sterban "to die," O.N. stjarfi "tetanus"), from PIE base *ster- "stiff, rigid" (cf. Gk.
sterphnios "stiff, rigid," sterphos "hide, skin," O.C.S. strublu "strong, hard;" see stare). The conjugation became weak in Eng. by 16c. The sense narrowed to "die of cold" (14c.); meaning "to kill with hunger" is first recorded 1530 (earlier to starve of hunger, 1124). Intrans. sense of "to die of hunger" dates from 1578. Ger. cognate sterben retains the original sense of the word, but the Eng. has come so far from its origins that starve to death (1910) is now common. Starvation (1778) is a hybrid, with a L. ending, apparently first used in ref. to British policies toward rebellious New England colonies.
 
இதைக் கொலைப் பட்டினி, கொலைப்பசி என்று கடும் பட்டினி, கடும்பசி என்று பேச்சுவழக்கில் சொல்லுவார்கள். அதாவது இந்தப் பட்டினி தொடர்ந்தால் உயிருக்கு ஊறு வந்து சேரும் என்று பொருள். பறிதல் = ஒட்டிப் போதல், to sink in, as the belly by starvation என்ற பொருள் அகரமுதலியில் இருக்கிறது தான். [இங்கு பள்ளம் பறிதல் என்று பொருட்பாடு வருகிறது. மேலே நான் சொன்ன பொள்>பள் என்னும் வேரை நினைவு கொள்ளுங்கள்.] இருப்பினும் அதோடு இருக்கும் மற்ற பொருட்பாடுகள் சட்டென்று இதை விதப்பாக உணர்த்த விடுமா என்பதையும் பார்க்க வேண்டும். 
 
மற்றபடி எந்தச் சொல்லை நீங்கள் சரியென்று பயன்படுத்துகிறீர்கள் என்பது உங்கள் உகப்பு.
 
அன்புடன்,
இராம.கி.

C.R. Selvakumar

unread,
Nov 19, 2009, 9:05:18 AM11/19/09
to tamil...@googlegroups.com
அன்புள்ள இராம.கி ஐயா,
 
தாரம் என்பது theme என்னும் பொருள் தரும் என்று கூருகின்றீர்கள்.
அதனையே சற்று மாற்றி அடித்தாரம் என்று சொல்லலாமோ என நினைக்கிறேன். பொதுவாக தீம் என்னும் ஆங்கிலச்
சொல்லின் பொருள் அடிக்கருவான, அடியிழையான, 
தலைக்கருவான ஒன்று. அடியே, ஊடே இழையோடும் ஒன்று.
எனவே கருவிழை (மணிகளைக் கோத்து நிற்கும் இழைபோல கருவாய இழை) என்றுகூடச்  சொல்லலாம் என நினைக்கிறேன்.
தீம் பார்க் என்பதைக் கருவிழைய களிப்பூங்கா
(விளையாட்டுப் பூங்கா) எனலாம்.
தீம் என்பதை ஏதோ ஒரு வகையில் இனிமையான என்னும்
பொருளில் தீம் பூங்கா என்றே கூட அழைக்கலாம் :) :)
தீம் என்னும் தமிழ்ச்சொல் இனிமை, களிப்பூட்டும் தன்மையது
என்னும் பொருள் தரவல்லது. இங்கு ஒரு குறிப்பிட்ட தலைக்கருவான
அல்லது அது விரவி இழையோடும் ஒன்று பற்றிய
தீம் (இனிமை, களிப்பூட்டும் தன்மை கொண்ட) பூங்கா.

Elangovan N

unread,
Nov 19, 2009, 9:23:44 AM11/19/09
to tamil...@googlegroups.com

ஐயா, தாரம் என்ற சொல் நல்ல சிந்தனைகளைக் கிளர்க்கிறது.
அருமையான சொல். இதனைப் பலவிடங்களில் பயன்படுத்த முடியும்
என்று கருதுகிறேன்.

பங்குதாரர் (பங்குதாரம்)
ஒப்பந்ததாரர் போன்ற இடங்களில் பயன்படுகின்ற சொல்,
ஒரே அடிப்படையின் கீழ் அமைந்த பல்வேறு நிகழ்வுகளை ஆள்களைச்
சொல்கிறது.

Object is an instance of a class என்பார்கள்.
அந்த வகையில் object என்ற சொல்லுக்கு இணையாகவோ
அல்லது object என்ற அடிப்படையில் தோன்றுகின்ற இடங்களில்
அல்லது பெயர்களில் தாரம் என்ற சொல்லைப் புழங்கலாம் என்று
கருதுகிறேன். மிக நல்ல சொல்.

அப்படிப் பார்த்தால் "அவ தாரம்" தரும் பொருள் முற்றிலும் வேறாக
இருக்கிறது. அரிதாரம் பூசுதல் என்பர்.
 

அரி + தாரம் = மாயனைப் போல மாற்றிவிடும் பொடியைப்
பூசுதல் ஆகும் போல :-))


நன்றி.
அன்புடன்

நாக.இளங்கோவன்

2009/11/19 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>

iraamaki

unread,
Nov 19, 2009, 9:58:47 AM11/19/09
to tamil...@googlegroups.com
பங்கு தாரர் என்பது தருதல் என்ற வினையில் எழுந்தது தான். பங்கு தாரம் என்ற கிளைச்சொல் புதிதாய் உருவாகலாம். அவ தாரம் என்பது ”இறைவன் கீழே இறங்கித் தருவது எனவே நமக்குத் தோற்றுவது” என்ற பொருள் கொள்ளும். அரி தாரம் என்ற சொல் சிலம்பிலேயே இருப்பதை நேற்றுப் பார்த்து வியந்தேன். [பாரதிதாசன் பல்கலையில் வரும் திசம்பரில் நடத்தவிருக்கும் வேறு ஒரு பரத்தீட்டிற்காக (presentation) சிலம்பை மீண்டும் படித்துக் கொண்டு இருக்கிறேன்.]
 
அன்புடன்,
இராம.கி.    
----- Original Message -----
Sent: Thursday, November 19, 2009 7:53 PM
Subject: [தமிழ் மன்றம்] Re: [தமிழ் ம (R) ்றம்] மூன்று தமிழ்ச் சொற ¯ கள் (For Physics, Chemistry & Philosophy)

ஐயா, தாரம் என்ற சொல் நல்ல சிந்தனைகளைக் கிளர்க்கிறது.
அருமையான சொல். இதனைப் பலவிடங்களில் பயன்படுத்த முடியும்
என்று கருதுகிறேன்.

பங்குதாரர் (பங்குதாரம்)

ஒப்பந்ததாரர் போன்ற இடங்களில் பயன்படுகின்ற சொல்,
ஒரே அடிப்படையின் கீழ் அமைந்த பல்வேறு நிகழ்வுகளை ஆள்களைச்

paசொல்கிறது.

N. Ganesan

unread,
Nov 19, 2009, 7:18:41 PM11/19/09
to தமிழ் மன்றம்

On Nov 19, 8:05 am, "C.R. Selvakumar" <c.r.selvaku...@gmail.com>
wrote:


>  அன்புள்ள இராம.கி ஐயா,
>
> தாரம் என்பது theme என்னும் பொருள் தரும் என்று கூருகின்றீர்கள்.

> அதனையே சற்று மாற்றி *அடித்தாரம்* என்று சொல்லலாமோ என நினைக்கிறேன். பொதுவாக *
> தீம்* என்னும் ஆங்கிலச்
> சொல்லின் பொருள் *அடிக்கருவான, அடியிழையான, *
> *தலைக்கருவான ஒன்று. அடியே, ஊடே இழையோடும் ஒன்று.*


> எனவே கருவிழை (மணிகளைக் கோத்து நிற்கும் இழைபோல கருவாய இழை) என்றுகூடச்
> சொல்லலாம் என நினைக்கிறேன்.
> தீம் பார்க் என்பதைக் கருவிழைய களிப்பூங்கா
> (விளையாட்டுப் பூங்கா) எனலாம்.

> தீம் என்பதை ஏதோ ஒரு வகையில் *இனிமையான* என்னும்


> பொருளில் தீம் பூங்கா என்றே கூட அழைக்கலாம் :) :)
> தீம் என்னும் தமிழ்ச்சொல் இனிமை, களிப்பூட்டும் தன்மையது
> என்னும் பொருள் தரவல்லது. இங்கு ஒரு குறிப்பிட்ட தலைக்கருவான
> அல்லது அது விரவி இழையோடும் ஒன்று பற்றிய
> தீம் (இனிமை, களிப்பூட்டும் தன்மை கொண்ட) பூங்கா.
>
> அன்புடன்
> செல்வா

தீம் = அடிக்கரு (அ) அடிநாதம்

-----------

equinox = சமராத்திரம்.

நா. கணேசன்


வேந்தன் அரசு

unread,
Nov 19, 2009, 8:26:13 PM11/19/09
to tamil...@googlegroups.com
விரிவான விளக்கத்துக்கு நன்றி இராம.கி ஐயா

இறைச்சி என்ற சொல் சங்கத்தில் புழங்குமே

இறை என்றால் தங்குதல். அதனால் கதையில்  தங்கி இருபப்து இறைச்சி

ஆனால் இன்னைக்கு அது மட்டன் ஆயிடுச்சே

19 நவம்பர், 2009 9:05 am அன்று, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> எழுதியது:

அன்புள்ள இராம.கி ஐயா,
 

வேந்தன் அரசு

unread,
Nov 19, 2009, 8:28:15 PM11/19/09
to tamil...@googlegroups.com


19 நவம்பர், 2009 7:18 pm அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:



தீம் = அடிக்கரு (அ) அடிநாதம்


கதைக்கரு என்றாலும் தீம்தானே
 
-----------

equinox = சமராத்திரம்.

தமிழ் போல தோணலையே  கணேசர்

N. Ganesan

unread,
Nov 19, 2009, 11:44:21 PM11/19/09
to தமிழ் மன்றம்

On Nov 19, 7:26 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> விரிவான விளக்கத்துக்கு நன்றி இராம.கி ஐயா
>
> இறைச்சி என்ற சொல் சங்கத்தில் புழங்குமே
>
> இறை என்றால் தங்குதல். அதனால் கதையில்  தங்கி இருபப்து இறைச்சி
>
> ஆனால் இன்னைக்கு அது மட்டன் ஆயிடுச்சே
>

இறையுளி? (சொற்கள் வகுபட்டு இருந்தால் வகையுளி என்பதுப்பொல்.)

------

உள்ளுறை இறைச்சி - இரண்டும் சற்றே வேறுபடுபவை.

உள்ளுறை என்ற சொல் ஓரளவு தீமுக்குப் பொருத்தம்.

கதைக்கரு - எல்லா இடத்துக்கும் பொருந்தாது.

எனவேதான், அடியுறை, அடிக்கரு, அடிநாதம்.

நா. கணேசன்


> 19 நவம்பர், 2009 9:05 am அன்று, C.R. Selvakumar

> <c.r.selvaku...@gmail.com>எழுதியது:

N. Ganesan

unread,
Nov 19, 2009, 11:52:05 PM11/19/09
to தமிழ் மன்றம்
உட்கரு = theme

வேந்தன் அரசு

unread,
Nov 21, 2009, 2:16:20 PM11/21/09
to tamil...@googlegroups.com


19 நவம்பர், 2009 11:52 pm அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
உட்கரு = theme

தாரப் பூங்கா = theme park. க்கு என்று அறிமுகம் செய்யலாம்
thematic னு ஒரு சொல் இருக்கே?

இனி
Thing
Item
Substance,
Matter
Meaning
 எல்லாவற்றுக்கும்  தமிழ் பொருள்தான்

உருப்படி என்ற சொல் எதுக்கு பொருந்தும்
 


N. Ganesan

unread,
Nov 21, 2009, 4:35:25 PM11/21/09
to தமிழ் மன்றம்

On Nov 21, 1:16 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 19 நவம்பர், 2009 11:52 pm அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com>எழுதியது:


>
> > உட்கரு = theme
>
> தாரப் பூங்கா = theme park. க்கு என்று அறிமுகம் செய்யலாம்
> thematic னு ஒரு சொல் இருக்கே?
>

தாரம் என்றால் தமிழில் மனைவி என்று பொருள்.
உ-ம்: கருணாநிதிக்கு (முருகனைப்போல்) 2 தாரம்.

தாரப் பூங்கா என்றால் மனைவி பூங்கா என்று பொருள்கொண்டுவிடுவார்கள்

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 21, 2009, 4:43:08 PM11/21/09
to தமிழ் மன்றம்

On Nov 21, 1:16 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 19 நவம்பர், 2009 11:52 pm அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com>எழுதியது:


>
> > உட்கரு = theme
>
> தாரப் பூங்கா = theme park. க்கு என்று அறிமுகம் செய்யலாம்
> thematic னு ஒரு சொல் இருக்கே?
>

தார்ப் பூங்கா போதாதா?

கணேசன்

தாரம் = மனைவி (தரித்தல், மாங்கல்ய தாரணம், ...)

வேந்தன் அரசு

unread,
Nov 21, 2009, 6:50:14 PM11/21/09
to tamil...@googlegroups.com


21 நவம்பர், 2009 4:43 pm அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:



On Nov 21, 1:16 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 19 நவம்பர், 2009 11:52 pm அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com>எழுதியது:
>
> > உட்கரு = theme
>
> தாரப் பூங்கா = theme park. க்கு என்று அறிமுகம் செய்யலாம்
> thematic னு ஒரு சொல் இருக்கே?
>

தார்ப் பூங்கா போதாதா?

நார் பூங்கானும் சொல்லலாமே

என்னதான் மணம் இருந்தாலும் பூக்களை கோப்பது நார்தானே. அதுதான் தீம்

 

கணேசன்

தாரம் = மனைவி (தரித்தல், மாங்கல்ய தாரணம், ...)


> இனி
> Thing
> Item
> Substance,
> Matter
> Meaning
>  எல்லாவற்றுக்கும்  தமிழ் பொருள்தான்
>
> உருப்படி என்ற சொல் எதுக்கு பொருந்தும்
>
>
>
> --
> வேந்தன் அரசு
> சின்சின்னாட்டி
> (வள்ளுவம் என் சமயம்)
> ”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”

C.R. Selvakumar

unread,
Nov 21, 2009, 6:56:08 PM11/21/09
to tamil...@googlegroups.com


2009/11/21 வேந்தன் அரசு raju.ra...@gmail.com


 

நார் பூங்கானும் சொல்லலாமே

என்னதான் மணம் இருந்தாலும் பூக்களை கோப்பது நார்தானே. அதுதான் தீம்

 
வேந்தனாரே!
 
உங்கள் சிந்தனையே தனி ஐயா!
மகிழ்ந்தேன் :)
 
(அதனால்தான் இழை, கருவிழை என்றேன்; கணேசனார் சொன்ன
சொற்கள் எல்லாமும் சரியானதாக எனக்குப் பட்டது)

வேந்தன் அரசு

unread,
Nov 22, 2009, 10:37:37 AM11/22/09
to tamil...@googlegroups.com
மில்லியன், பில்லியன் ட்ரில்லியன் க்கு மாற்று சொற்கள்


மில்லியன்=1,000,000 = அறுசுழியம்
பில்லியன் =1,000,000,000 = ஒன்பதுசுழியம் (தொள்சுழியம்)
ட்ரில்லியன்1,000,000,000,000 = பன்னிருசுழியம்


இந்திய மக்கள் தொகைஏற்கனவே  ஒன்பதுசுழியத்தை தாண்டி விட்டது

செல்வா

unread,
Nov 22, 2009, 11:22:31 AM11/22/09
to தமிழ் மன்றம்
அன்புள்ள வேந்தனாரே,

மில்லியன், பி'ல்லியன், டிரில்லியன், குவார்ட்டில்லியன்,
குவின்ட்டில்லியன்,
செக்டில்லியன், செப்டில்லியன், ஆக்டில்லியன் முதலானவற்றை நாம்
அப்படியே வைத்துக்கொள்வோம்.
தமிழில் பெயர் எளிதாகச் சூட்டலாம்.
இருமடி ஆயிரம் (1000^2) = மில்லியன். இதனை அறுபதின்மம் என்றும் கூறலாம்.
மும்மடி ஆயிரம் (1000^3 = 10^9) = பில்லியன், இதனை ஒன்பான்பதின்ம என்றும்
கூறலாம்.
இதேபோல நான்மடி ஆயிரம் என்பது டிரில்லியன் என்னும் ஈராறுபதின்மம் .
ஐமடி ஆயிரம் (1000^5= 10^15) என்பது குவின்ட்டில்லியன் அல்லது
மூவைந்துபதின்மம்

இப்படியே மற்றவற்றையும் குறிப்பிட்டலாம்.

அன்புடன்
செல்வா

வேந்தன் அரசு

unread,
Nov 22, 2009, 11:55:00 AM11/22/09
to tamil...@googlegroups.com


22 நவம்பர், 2009 11:22 am அன்று, செல்வா <c.r.sel...@gmail.com> எழுதியது:

அன்புள்ள வேந்தனாரே,

மில்லியன், பி'ல்லியன், டிரில்லியன், குவார்ட்டில்லியன்,
குவின்ட்டில்லியன்,
செக்டில்லியன், செப்டில்லியன், ஆக்டில்லியன் முதலானவற்றை நாம்
அப்படியே வைத்துக்கொள்வோம்.
தமிழில் பெயர் எளிதாகச் சூட்டலாம்.
இருமடி ஆயிரம் (1000^2) = மில்லியன். இதனை அறுபதின்மம் என்றும் கூறலாம்.
மும்மடி ஆயிரம் (1000^3 = 10^9) = பில்லியன், இதனை ஒன்பான்பதின்ம என்றும்
கூறலாம்.
இதேபோல நான்மடி ஆயிரம் என்பது டிரில்லியன் என்னும் ஈராறுபதின்மம் .
ஐமடி ஆயிரம் (1000^5= 10^15) என்பது குவின்ட்டில்லியன் அல்லது
மூவைந்துபதின்மம்

இப்படியே மற்றவற்றையும் குறிப்பிட்டலாம்.


ஆமாம்

Elangovan N

unread,
Nov 22, 2009, 2:00:37 PM11/22/09
to tamil...@googlegroups.com


2009/11/22 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>



22 நவம்பர், 2009 11:22 am அன்று, செல்வா <c.r.sel...@gmail.com> எழுதியது:

அன்புள்ள வேந்தனாரே,

மில்லியன், பி'ல்லியன், டிரில்லியன், குவார்ட்டில்லியன்,
குவின்ட்டில்லியன்,
செக்டில்லியன், செப்டில்லியன், ஆக்டில்லியன் முதலானவற்றை நாம்
அப்படியே வைத்துக்கொள்வோம்.
தமிழில் பெயர் எளிதாகச் சூட்டலாம்.
இருமடி ஆயிரம் (1000^2) = மில்லியன். இதனை அறுபதின்மம் என்றும் கூறலாம்.
மும்மடி ஆயிரம் (1000^3 = 10^9) = பில்லியன், இதனை ஒன்பான்பதின்ம என்றும்
கூறலாம்.
இதேபோல நான்மடி ஆயிரம் என்பது டிரில்லியன் என்னும் ஈராறுபதின்மம் .
ஐமடி ஆயிரம் (1000^5= 10^15) என்பது குவின்ட்டில்லியன் அல்லது
மூவைந்துபதின்மம்

இப்படியே மற்றவற்றையும் குறிப்பிட்டலாம்.

 
 
ஆகா, இருமடி, மும்மடி பயன்பாடு மிக நன்றாக இருக்கிறது.
அடியேன் இப்படிப் பயன்படுத்துவேன்.
 
அன்புடன்
நாக.இளங்கோவன்

வேந்தன் அரசு

unread,
Nov 22, 2009, 9:54:54 PM11/22/09
to tamil...@googlegroups.com



22 நவம்பர், 2009 2:00 pm அன்று, Elangovan N <nela...@gmail.com> எழுதியது:



2009/11/22 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>



22 நவம்பர், 2009 11:22 am அன்று, செல்வா <c.r.sel...@gmail.com> எழுதியது:

அன்புள்ள வேந்தனாரே,

மில்லியன், பி'ல்லியன், டிரில்லியன், குவார்ட்டில்லியன்,
குவின்ட்டில்லியன்,
செக்டில்லியன், செப்டில்லியன், ஆக்டில்லியன் முதலானவற்றை நாம்
அப்படியே வைத்துக்கொள்வோம்.
தமிழில் பெயர் எளிதாகச் சூட்டலாம்.
இருமடி ஆயிரம் (1000^2) = மில்லியன். இதனை அறுபதின்மம் என்றும் கூறலாம்.
மும்மடி ஆயிரம் (1000^3 = 10^9) = பில்லியன், இதனை ஒன்பான்பதின்ம என்றும்
கூறலாம்.
இதேபோல நான்மடி ஆயிரம் என்பது டிரில்லியன் என்னும் ஈராறுபதின்மம் .
ஐமடி ஆயிரம் (1000^5= 10^15) என்பது குவின்ட்டில்லியன் அல்லது
மூவைந்துபதின்மம்

இப்படியே மற்றவற்றையும் குறிப்பிட்டலாம்.

 
 
ஆகா, இருமடி, மும்மடி பயன்பாடு மிக நன்றாக இருக்கிறது.
அடியேன் இப்படிப் பயன்படுத்துவேன்.


நானும் இபப்டித்தான்

(த+ந)2 = த2 + ந2+2தந

தகரம்+ நகரம் முழுமை இருமடி = தகரம் இருமடி + நகரம் இருமடி + இரு தகரம் நகரம்
 

செல்வா

unread,
Nov 23, 2009, 4:50:40 PM11/23/09
to தமிழ் மன்றம்
நண்பர்களே ஒரு பிழை விட்டிருக்கின்றேன்.
ஐமடி ஆயிரம் என்பது (10^15 ) என்பது ஆங்கிலத்தில் குவாடிரில்லியன்
(quadtrillion)
அறுமடி ஆயிரம் என்பதுதான் குவின்ட்டிலியன் ஆகும் (quintillion) = 10^18 =
(1000)^6
இப்படியே செக்டில்லியன் (sextillion) என்பது எழுமடியாயிரம்.
தமிழில் n-மடி ஆயிரம் = (n-1)-llion.

தமிழில் மில்லியன், பில்லியன் அல்லது பி'ல்லியன், டிரில்லியன்,
குவாடிரில்லியன்
என்பது போன்ற சொற்களே பயன்படுத்தலாம் என்பது என் கருத்து.

அன்புடன்
செல்வா

> > ”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”- Hide quoted text -
>
> - Show quoted text -

செல்வா

unread,
Nov 23, 2009, 4:54:26 PM11/23/09
to தமிழ் மன்றம்

>
> நானும் இபப்டித்தான்
>
> (த+ந)2 = த2 + ந2+2தந
>
> தகரம்+ நகரம் முழுமை இருமடி = தகரம் இருமடி + நகரம் இருமடி + இரு தகரம் நகரம்
>

(த+ந)^2 = த^2 + ந^2+2தந

என்று எழுதுங்கள் வேந்தனாரே. 2^3 = 8 என்று மடி எண் 3 ஐக் குறிக்க ^
என்னும் உயர்த்துக்
குறிக்கு அடுத்து 3 என்னும் எண்ணை இடுங்கள்.

அன்புடன்
செல்வா

> --


> வேந்தன் அரசு
> சின்சின்னாட்டி
> (வள்ளுவம் என் சமயம்)

Reply all
Reply to author
Forward
0 new messages