1.) தேவதானப்பட்டி பகுதியில் வெளவால்கள் அழிவாட்டம் 2.) மூடுவிழாவை நோக்கிக் கயிறு திரிக்கும் தொழில்

12 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Sep 14, 2014, 5:24:20 PM9/14/14
to thiru thoazhamai

seithi_vavvaal_vaigaianeesu02

  தேவதானப்பட்டி பகுதியில் வெளவால்கள் அழிவாட்டத்தால் (அட்டகாசத்தால்) விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

  தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை, கெங்குவார்பட்டி, வைகை அணைப்பகுதியில் ஆயிரக்கணக்கான வெளவாலகள் கூட்டம் கூட்டமாக தங்கியுள்ளது. இவ்வகை வெளவால்கள் இப்பொழுது மழை இல்லாததால் பழங்கள் இருக்கும் பகுதியை நாடி இடம் பெயர்ந்து வருகின்றன. மேலும் இப்பொழுது நாவல் பழப் பருவம் தொடங்கியுள்ளதால் நாவல்மரங்கள் அடங்கிய பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளன.

  இவ்வாறு நாவல்மரங்களில் தங்களுக்குத் தேவையான உணவுகள் கிடைக்காவிட்டால் அண்மையில் உள்ள   சீமையிலுப்பை(சப்போட்டா), வெள்ளரித்தோட்டம், முந்திரித்தோட்டம், பப்பாளித்தோட்டங்களில் நுழைந்து அவற்றை உணவாக உட்கொள்கின்றன.

  ஏற்கெனவே மழை இல்லாமல் வாடும் உழவர்குடியினர் இருக்கின்ற தண்ணீரை வைத்துப் பயிர்த்தொழில் செய்து வருகின்றனர். இப்பொழுது அந்தப் பயிர்த்தொழிலையும் நசுக்கும் வகையில் வெளவால்கள் அழித்து வருகின்றன.

  எனவே வனத்துறையினர் வெளவால்களை விரட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என உழவர் பெருமக்கள் வலியுறுத்துகின்றனர்


அகரமுதல 44


மூடுவிழாவை நோக்கிக் கயிறு திரிக்கும் தொழில்

kayiru_vaigaianeesu02

  தேனிப் பகுதியில் கயிறு திரிக்கும் தொழில் மூடப்படும் பேரிடர்(அபாயம்) உள்ளது.

  தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி பகுதிகளில் தென்னை மரத்தின் மட்டைகளில் இருந்து கயிறு தயாரிக்கும் தொழில் குடிசைத்தொழிலாக நடைபெற்று வருகிறது. இத்தொழிலை நம்பி ஏராளமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. தென்னை மட்டைகளின் நார்கள் வெளிநாட்டிற்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் செங்கல் போன்று கடினமாக்கப்பட்டு அதனையும் வெளிநாட்டிற்கு அனுப்புகிறார்கள்.

இதனால் அதிக விலை கொடுத்தும்முன் தொகை கொடுத்தும் தென்னை மட்டைகளை வாங்கிச்செல்கின்றனர். தற்பொழுது குடிசைத்தொழிலாக உள்ள இத்தொழில்போதிய மூலதனத்துடன் நடைபெறுவதில்லை. இவை தவிர கடந்த சில வருடங்களுக்கு முன்னர்க் கூட்டுறவு முறையில் கயிறு திரிக்கும் தொழில் நடைபெற்று வந்தது. தற்பொழுது தேவதானப்பட்டி பகுதியில் அந்தத் தொழிற்சாலையும் மூடப்பட்டு விட்டது.

  இதனால் பலர் சேலம்ஓமலூர் பகுதிகளுக்கு வேலைக்குச் சென்றுவிட்டனர். இவை தவிர சீனாவில் இருந்து தரமான கயிறுகள் குறைந்த விலைக்குக் கிடைப்பதாலும் நொசிவிழை(நைலான்) மலிவாகக் கிடைப்பதாலும் அவற்றின் விலைக்கு இவர்களால் கொடுக்க முடியவில்லை. இதனால் கயிறு உற்பத்தி செய்யும் குடிசைத்தொழில் நாளுக்கு நாள் மூடப்பட்டு வருகிறது.

எனவே நலிந்த இத்தொழிலை மேம்படுத்த அரசு சார்பில் நல்கையுடன் கூடிய கடன்வழங்கவேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

vaigaianeesu_name

அகரமுதல 44


--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

rajam

unread,
Sep 14, 2014, 8:11:58 PM9/14/14
to tamilmanram
தேவதானப்பட்டி எனக்கு அணுக்கமான, செழிப்பாக இருந்த ஊர்! சிறுபிள்ளைப் பருவத்தில் எங்கள் உறவினருக்கு அங்கே பல ஏக்கர் நிலம் இருந்தது. மஞ்சளாறு பாசானம். மிக்க வளம். பின்னாளில் மஞ்சளாறு அணைத்திட்டத்துக்காக அந்த நிலங்களை அரசு எடுத்துக்கொண்டது. 

இப்போது வௌவால்களின் தொல்லை கேட்டு வருத்தம். 

மரங்களுக்கும் செடிகளுக்கும் வலை போட முடியாதா? இங்கே அமெரிக்காவில் போடுகிறார்கள். 

என் வீட்டுப்புறத்துச் சிறு பகுதியில் நிலத்திலும் தொட்டிச் செடிகளிலும் வளரும் மரம் செடிகளில் விளையாடி, பூக்களைக் கொத்திப் பயிரை அழிக்கும் அணில்களும் குருவிகளும் பல! இரவில் வரும் எலி-போன்ற பிறவிகளோ ... முளைத்து வரும் பயிர்களின் இலைகளையும் தின்றுவிடும். ஆசை ஆசையாய் வளர்த்த பசலைக்கீரை அப்படித்தான் அழிந்தது. :-( 

சின்னஞ்சிறிய தொட்டிகளில் வளர்க்கும் கீரைகளைக்கூட … குருவிகள் கொத்திப் பார்த்துச் சிதைக்கின்றன! சுண்டைக்காய்ச் செடி, மணத்தக்காளிச் செடி, தக்காளி, … இதெல்லாம் சரியாக வளரவே முடியவில்லை! 

தப்பிப் பிழைப்பவை கறிவேப்பிலை, எலுமிச்சை, இஞ்சி, மஞ்சள், வெங்காயம் ஆகியவை.

முதலில் மிகவும் கோவம் கொண்டேன். பிறகு, சரி உனக்கும் உணவு வேணும்தானே என்று விட்டுவிட்டேன்! அதுகளுக்குக் கிடைத்தது போக எனக்கு எஞ்சுவது சிலவே! ஆண்டாண்டு பல நூறு ஆப்பில் பழங்கள் தரும் மரத்தில் இந்த ஆண்டு மிகக் குறைந்த அளவில் மிஞ்சிய பழங்களும் கொத்துண்டு புரையோடியவை. பூக்கும் காலத்திலேயே அணில்களும் குருவிகளும் அவற்றைப் பதம் பார்த்துவிட்டன.

சரி, அதுகளுக்கும் இரை வேண்டும், நமக்கும் தீனி வேண்டும், என்ன செய்ய? 

ஆனாலும் … இந்த ஊர் அணிலின்மேல் எனக்கு அன்பும் பரிவும் இல்லாமல் போச்சு. நம்மூர் அணில்-போல இதுகளுக்கு அழகில்லை. இணை தேடி அவை போடும் கூச்சலைக் காது கொடுத்துக் கேட்க முடியாது, அவ்வளவு கடூரமானது. அதோடு நான் அதுகளுக்கு என்று எடுத்து வைக்கும் கொட்டை பழங்களைக் கண்டுகொள்ளாமல் செடி, மரத்திலிருந்தே எடுத்துச் சுவைத்துப் பாதியில் துப்பி வீணாக்கிவிடும்! அணில்களும், வௌவால் போலவே, ரேபீஸ் வகை நோய்க்கிருமிகளுக்கு இருப்பிடம். எனவே அணில், எலி, வௌவால், இன்ன பிறவற்றிலிருந்து நம்மைக் காத்துக்கொள்வது நல்லது.

சின்ன சின்ன வலைகளைப் போட்டு என் பயிர்களைக் காக்கிறேன். 

ஆப்பில், ஏப்ரிக்காட், பல வகை பெர்ரிகள், திராட்சைப்பழம், … இன்ன பிறவற்றை விளைவிக்கும் இடம் கலிஃபோர்னியா. தேவதானப்பட்டி போன்ற இடங்களில் பயிர்களை எப்படிக் காக்கவேண்டும் என்பதை இங்கே விவசாயிகள் என்ன செய்கிறார்கள் என்று கேட்டுத் தெரிந்துகொண்டு அதுபடிச் செய்யலாம். 



Begin forwarded message:

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.

வேந்தன் அரசு

unread,
Sep 14, 2014, 8:21:03 PM9/14/14
to தமிழ் மன்றம்
எலிக்கு சிறகு முளைத்தால் வாவல்



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Sep 15, 2014, 5:14:28 AM9/15/14
to tamilmanram kuzhu
அம்மையீர், இங்கும் பன்றிகளின் தொல்லைகளில் இருந்து காக்கக் கீழ்ப்பகுதிகளிலும் பறவைகளில் இருந்து காக்க முழுமையாகவும் வலை போடும் பழக்கம் சில பகுதிகளில் உள்ளது.  தேனியிலும் பயன்படுத்திப் பார்க்கலாம். அரசு உதவலாம். இந்தச் செய்தி  மூலம் உங்களின் மலரும் நினைவுகளை நாங்கள் அறியும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.

வேந்தனார் கூறுவதுபோல் சிறகுமுளைத்த  எலிதான் வாவல். 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.
Reply all
Reply to author
Forward
0 new messages