Hub - தமிழ்

99 views
Skip to first unread message

Elangovan N

unread,
Jul 16, 2012, 2:53:23 AM7/16/12
to tamilmanram
Hub என்பதற்குக் குடம் என்று பொருள் இருக்கிறது. ( வண்டிக்குடம், தேர்க்குடம் என.) 
http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.6%3A1%3A6838.tamillex

Commercial Hub, Service Hub போன்ற சொற்றொடர்களை எப்படித் தமிழ் செய்யலாம்?

அன்புடன்
நாக.இளங்கோவன்

Hamdun Fakhrudeen

unread,
Jul 16, 2012, 3:17:03 AM7/16/12
to tamil...@googlegroups.com
Hub என்பதற்கு மையம் என்பதே எளிமையாக இருக்கிறது
Bombay is the hub of Air India.

//Commercial Hub, Service Hub போன்ற சொற்றொடர்களை எப்படித் தமிழ் செய்யலாம்?//
வணிக மையம், சேவை மையம் என்று எளிதாகச் சொல்லிச் செல்லலாமே ஐயா.

--
H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953 / 050 1207670
www.ezuthovian.blogspot.com
www.mypno.com

Mani Manivannan

unread,
Jul 16, 2012, 3:32:43 AM7/16/12
to tamil...@googlegroups.com
மையம் என்ற சொல் பிராகிருத வேரில் இருந்து வந்தது என்பார்கள்.  அதன் பொருளும் இங்கே சரியல்ல.  Hub is different from Center.

விக்கிப்பீடியா ஆழிக்குடம் என்ற சொல்லைக் குறிப்பிடுகிறது.  ஆழி என்பது சக்கரத்தின் தமிழ்ப் பெயர் என நினைக்கிறேன்.

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்

2012/7/16 Hamdun Fakhrudeen <fakhru...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

Elangovan N

unread,
Jul 16, 2012, 3:56:55 AM7/16/12
to tamil...@googlegroups.com
 //Hub is different from Center. //

நண்பர் பஃகுருதீன், நண்பர் மணிவண்ணன் சொன்ன கருத்து உண்மை.
இரண்டும் வேறு வேறானவை.

for example, a network hub is defined as  below. commercial or financial hubs may be understood through this.

Hubs are commonly used to connect segments of a LAN. A hub contains multiple ports. When apacket arrives at one port, it is copied to the other ports so that all segments of the LAN can see all packets.

passive hub serves simply as a conduit for the data, enabling it to go from one device (or segment) to another. So-called intelligent hubs include additional features that enables an administrator to monitor the traffic passing through the hub and to configure each port in the hub. 

அன்புடன்
நாக.இளங்கோவன்

2012/7/16 Hamdun Fakhrudeen <fakhru...@gmail.com>

Hari Krishnan

unread,
Jul 16, 2012, 4:12:42 AM7/16/12
to tamil...@googlegroups.com

On 16 July 2012 13:26, Elangovan N <nela...@gmail.com> wrote:
//Hub is different from Center. //

நண்பர் பஃகுருதீன், நண்பர் மணிவண்ணன் சொன்ன கருத்து உண்மை.
இரண்டும் வேறு வேறானவை.

சித்திரகவி வகைகளில் ஆரைச் சக்கரம் என்ற வகையொன்று உண்டு.  நான்காரைச் சக்கரம், ஆறாரைச் சக்கரம்..எட்டாரைச் சக்கரம் என்றெல்லாம் பிரிவுகள் இவற்றுக்கு உண்டு.  முதலில் ஆரை என்ற சொல் பொருந்துமா என நினைத்தேன்.  ஆனால்,ஆரை என்ற சொல் ஆரத்தை மட்டுமே குறிக்கிறது. 

குடம் என்ற சொல் ஹப் என்ற பொருளில் பயன்பட்டிருக்கிறது.  பல்கலைக் கழகப் பேரகராதி:

குடம் kuṭam : (page 964)
2. Aquarius, a sign of the zodia கும்பராசி. (பன்னிருபா. 163.) 3. A dance of Kṛṣṇa. See குடக்கூத்து. நீணில மளந்தோ னாடிய குடமும் (சிலப். 6, 55). 4. See குடதாடி. 5. Hub a wheel; வண்டிக்குடம். 6. Globe, ball, sphericity; திரட்சி. (W.) 7. cf. குடஞ்சுட்டு. Cow; பசு. (சூடா.)

எனவே, குடம் பொருத்தம் என்றுதான் தோன்றுகிறது.

--
அன்புடன்,
ஹரிகி.

வேந்தன் அரசு

unread,
Jul 16, 2012, 7:16:19 AM7/16/12
to tamil...@googlegroups.com
கூடுதுறை

வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Elangovan N

unread,
Jul 16, 2012, 7:50:53 AM7/16/12
to tamil...@googlegroups.com
நண்பர் வேந்தர், அது கூடல் என்றாகி Junction ஆகிவிடுமோ என்று எண்ணுகிறேன்.
இன்னும் கொஞ்சம் தேடினால் கிடைத்துவிடும் :-)

அன்புடன்
நாக.இளங்கோவன்

வேந்தன் அரசு

unread,
Jul 16, 2012, 9:24:40 PM7/16/12
to tamil...@googlegroups.com
இளன்கோவன் ஐயா

துறை என்றாலே கூடுமிடம்தானே.

பறவைகள் கூடுமிடம்

16 ஜூலை, 2012 7:50 am அன்று, Elangovan N <nela...@gmail.com> எழுதியது:

--

C.R. Selvakumar

unread,
Jul 16, 2012, 10:39:54 PM7/16/12
to tamil...@googlegroups.com

2012/7/16 Mani Manivannan <mmani...@gmail.com>

மையம் என்ற சொல் பிராகிருத வேரில் இருந்து வந்தது என்பார்கள்.  அதன் பொருளும் இங்கே சரியல்ல.  Hub is different from Center.

விக்கிப்பீடியா ஆழிக்குடம் என்ற சொல்லைக் குறிப்பிடுகிறது.  ஆழி என்பது சக்கரத்தின் தமிழ்ப் பெயர் என நினைக்கிறேன்.

ஆம், மணி ஆழி எனில் வட்டம் எனவே சக்கரம். சக்கரம் என்பதை இலங்கையில்  சில்லு என்றும் கூறுகின்றனர். தேராழி என்றால் தேர்ச்சக்கரம். நீராழி மண்டபம் என்றால் நீர் வட்டமாய்ச் சூழ்ந்திருக்க நடுவே உள்ள மண்டம. கோயிலின் முன்னே இருக்கும் தெப்பக்குளத்தின் நடுவே உள்ள மண்டபத்துக்கு நீராழி மண்டபம் என்பர். ஆழி என்பது வளையம் என்னும் சொல்லுக்கும்
வழங்குவர். எனவே ஆழிவிரல் என்றால் மோதிரவிரல். அரசனின் முத்திரை மோதிரத்தைக் கணையாழி என்பார்கள்.

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்

2012/7/16 Hamdun Fakhrudeen <fakhru...@gmail.com>
Hub என்பதற்கு மையம் என்பதே எளிமையாக இருக்கிறது
Bombay is the hub of  Air India.

//Commercial Hub, Service Hub போன்ற சொற்றொடர்களை எப்படித் தமிழ் செய்யலாம்?//
வணிக மையம், சேவை மையம் என்று எளிதாகச் சொல்லிச் செல்லலாமே ஐயா.

--
H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953 / 050 1207670
www.ezuthovian.blogspot.com
www.mypno.com

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

அன்புடன்
செல்வா

C.R. Selvakumar

unread,
Jul 16, 2012, 11:58:31 PM7/16/12
to tamil...@googlegroups.com
அன்புள்ள இளங்கோவன்,

பொதுவாக ஒருமொழியில் உள்ள ஒரு சொல்
அது வழங்கும் பொருட் சூழல்களில் அதே பொருளில் வழங்க
பிறிதொரு மொழியில் எல்லா நேரங்களிலும் இயலாது, அது இயல்பும் ஆகாது.
எ.கா. ஆங்கிலத்தில் sea shore ஆனால் river bank ஆனால் தமிழில் கடற்கரை, ஆற்றங்கரை

இங்கே hub என்பது ஆழி, சகக்ரம் போன்ற இடங்களில் குடம் என்பது பொருந்தும்.
குளவிக்கூடு ஊசிக்கூடு என்பன போல், router hub என்பதற்குக் கூடு என்று பயன்படுத்தலாம்.
"A hub contains multiple ports."  என்பது இங்கு கூடு என்பதற்குப் பொருந்தும்.
இயக்க மையம் என்னும் பொருளில் செயற்பாடுகளுக்கு நடுவமாக விளங்கும் அகத்துக்குப் பயன்படுத்தலாம்.

முன்பொரு முறை தலை என்பதற்கான பொருளை உள்வாங்க முயன்றபோது, வியப்பாக இருந்தது.
தலை என்பது பலவும் கூடும் இடம் என்றும் அங்கிருந்தே எல்லாம் பிரிந்து செல்லும் இடம் என்றும்
தமிழில் பொருள். தலைதல் = கூடுதல் என்று கழக அகராதியும் தெளிவுபடக் கூறும். தலைதல் = பரத்தல்
(பலவாகப் பிரிந்து செல்லுதல்) தலைப்பெய்தல் என்றால் ஒன்றாகக் கூடுதல் (பலவற்றையும் ஒருசேர
கணக்கில் கொண்டு எண்ணுதல் என்றும் பொருள்). தலைப்படுதல் என்றாலும் ஒன்றுகூடுதல்.
தலைஇ என்றால் பெய்தல் (மழை பெய்தல், பரக்க வழங்குதல்). தலைவன் என்னும் சொல்லின் பொருள்
அனைத்து தொட்ரபுகளும்  அவனிடம் வந்து சேரும் அல்லது அனைத்தும் அவனிடம் இருந்து கிளைத்துப்போகும்\
என்னும் பொருள் கொண்டது (தமிழில்). எனவே நடுவகம், நடுவம் என்பது தலையகம், தலை என்றும்
கூறலாம் (இங்கு மையத்துக்குக் கூற வேண்டும் என்று சொல்லவில்லை, ஆனல் கருத்தடிப்படையில்
செயற்கருவாய நடுவிடம்  "தலை"). இங்கே நம் பயன்பாட்டுக்குக் கூடம், கூடகம், கூடு, கூடிடம் என்று
ஏதேனும் ஒன்றைச் சொல்லலாம்.

தூறு என்றால் பரத்தல் என்று பொருள். தூறு என்றால் "
2. To spread, as news; செய்திபரத்தல். (W.) 3. To sprout forth, branch forth,"
என்று சென்னைத் தமிழ் பேரகரமுதலி குறிக்கும். தூறு என்றால் அடர்ந்த காடு என்றும் பொருள்.
பலவற்றையும் வழங்கும் நடுவகம் எனில் தூறு என்றும் சொல்லலாம்.

குவை என்றால் அம்புகள் வைக்கும் கூடு. அதுபோல, ""A hub contains multiple ports." " என்பதற்குக்
குவை என்றும் சொல்லலாம். பல தகவல் செலுத்தும் வடங்கள், கம்பிகள், தூம்புகள் பிணைத்திருக்கும்
கூடு என்பதால்.

சில சொற்களை தக்க சூழலில் முயன்று பார்த்தால்தால் இணங்கி பொருள் சுட்டுமா என்று தெரியும்.

அன்புடன்
செல்வா

--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

Mani manivannan

unread,
Jul 17, 2012, 12:26:44 AM7/17/12
to tamil...@googlegroups.com, tamil...@googlegroups.com
hub என்பதற்குக் கூடு என்ற சொல் பிடித்திருக்கிறது. தற்காலத்தில் வழக்கிலுள்ள சொல். எளிதில் புரியும் சொல். பொருள் பொருந்துகிறது.  என்ன சொல்கிறீர்கள் இளங்கோ?

MANICKAM POOPATHI

unread,
Jul 17, 2012, 12:35:53 AM7/17/12
to tamil...@googlegroups.com
வணக்கம்: _/\_

கும்பம் என்பது  தொன்று தொட்டு
வழங்கி வரும்  தூயதோர் தமிழ் சொல் தானே..?

மிக்க நன்றி...!

அன்புடன்.../பூபதி

Elangovan N

unread,
Jul 17, 2012, 3:18:53 AM7/17/12
to tamil...@googlegroups.com
அன்பின் நண்பர் மணிவண்ணன்,

தங்களொடு, நண்பர்கள் அனைவரும்  சொன்ன விளக்கங்களுடன் எனக்கு உடன்பாடே. கும்பம், குடம், கூடு என்ற மூன்று சொற்களில் (+ கூடம், கூடகம், கூடிடம்) இருந்துதான் ஒன்று பிறக்க முடியும் என்று கருதுகிறேன். எனக்கு என்னவோ இன்னும் கொஞ்சம் விதப்பு தேவை என்று
படுகிறது.

குடம், கும்பம் என்பன ஒரு கருவியைக் குறிக்கின்றன. கருவியொடு இடத்தையும் குறிக்குமாப் போல ஒரு சொல் தேவையோ என்று கருதுகிறேன். 

பேரா.செல்வா: நீராழி, கணையாழி பற்றிய தங்கள் விளக்கம் மிகவும் பிடித்திருந்தது. குவையம் என்பதனை corpus என்பதற்குச் சொல்லாகப் பயன்படுத்துகிறேன். இது குறித்து முன்னர் இங்கு நாம் உரையாடியிருக்கிறோம்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

2012/7/17 Mani manivannan <mmani...@gmail.com>
hub என்பதற்குக் கூடு என்ற சொல் பிடித்திருக்கிறது. தற்காலத்தில் வழக்கிலுள்ள சொல். எளிதில் புரியும் சொல். பொருள் பொருந்துகிறது.  என்ன சொல்கிறீர்கள் இளங்கோ?

--

வேந்தன் அரசு

unread,
Jul 17, 2012, 7:31:07 AM7/17/12
to tamil...@googlegroups.com
Airport  என்பதை ஏன் விமான நிலையம் என்கிறார்கள். எந்த விமானமும் அங்கு நிலை கொள்வது இல்லை. தயங்கி செல்லுகின்றன்.

வளித்துறை, வான்முகம் என சூட்டி இருக்கலாம்

தயக்கம் என்றால் தயக்கம் இல்லை.

C.R. Selvakumar

unread,
Jul 17, 2012, 9:50:12 AM7/17/12
to tamil...@googlegroups.com

2012/7/17 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

Airport  என்பதை ஏன் விமான நிலையம் என்கிறார்கள். எந்த விமானமும் அங்கு நிலை கொள்வது இல்லை. தயங்கி செல்லுகின்றன்.

வளித்துறை, வான்முகம் என சூட்டி இருக்கலாம்

வேந்தனாரே,

Port என்பதற்குத் துறை என்ற எளிய சிறிய சொல் உள்ளது. வான்துறை, வளித்துறை என்று கட்டாயம் பயன்படுத்தலாம்.
ஆனால் பல தகுந்த சொற்கள் இருந்தாலும், ஒன்றையோ இரன்டையோதானே பயன்படுத்த முடியும் (பொது வழக்கில்).

நிலையம் என்பது என்பது நிலையாக அங்கு நிறிகின்றது என்பது பொருள் அன்று. பறந்து வந்து அங்கு நிற்கும் இடம்,
புறப்படும் முன் பயணிகளை ஏற்றிக்கொள்ள நிற்கும் இடம் என்றும் பொருள்  உண்டு. ஆங்கிலத்தில் terminal என்றால்
முடிவடையும் இடம் என்று பொருள் இருந்தாலும், அது ஒரு "முனை" என்னும் பொருளிலேயே பயன்படுத்துகின்றார்கள்.

வான்துறை என்பது வானூர்தியைப் பற்றிப் படிக்கும் அறிவுத்துறை, அல்லது அதற்கான சட்ட திட்டங்களுடன் இயங்கு அரசுத்துறை
என்றும் பொருள் கொள்ள வாய்ப்புள்ளது (அதனால் பொருந்தாது என்று
சொல்லவில்லை- இடம் சார்ந்தே பொருள் கொள்ள இயலும்). வளிமுகம், வான்முகம் (துறைமுகம் போல) என்று
சொல்லலாம் என்று
1994-5 களில் பரிந்துரைத்ததாக நினைவு.

Airport என்பதற்குப் பறப்பகம் என்பது எனக்குப் பிடித்துள்ளது.
வானூர்தி நிலையம் நீளமாக உள்ளது. மீனம்பாக்கம் பறப்பகம், தொராண்டோ பியர்சன் பறப்பகம் என்பது இயல்பாக
வழங்க-எளிதாக இருப்பதாக உணர்கின்றேன்.

அன்புடன்
செல்வா

தயக்கம் என்றால் தயக்கம் இல்லை.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

வேந்தன் அரசு

unread,
Jul 17, 2012, 10:25:23 PM7/17/12
to tamil...@googlegroups.com

17 ஜூலை, 2012 9:50 am அன்று, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> எழுதியது:

நிலையம் என்பது என்பது நிலையாக அங்கு நிறிகின்றது என்பது பொருள் அன்று. பறந்து வந்து அங்கு நிற்கும் இடம்,
புறப்படும் முன் பயணிகளை ஏற்றிக்கொள்ள நிற்கும் இடம் என்றும் பொருள்  உண்டு.

நிற்பது நிறுத்துவது இரண்டுக்கும் பெரும் வேற்றுமை இருக்கு செல்வா

நீ பேசுவதை நிறுத்து எனலாம் எனவே பேருந்து நிறுத்தம்.
பேருந்து நிற்குதா உடகாருதா என்பதெல்லாம் குறுஞ்செய்தி பகடிகள்
Reply all
Reply to author
Forward
0 new messages