சொட்டு வேர் பொருள்

3 views
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
Oct 17, 2025, 10:54:59 PM (3 days ago) Oct 17
to தமிழ் மன்றம்
சொட்டு வேர் பொருள்
image.png
சிறுமை, நுண்மை, குறுமை, சுருக்கக் கருத்தில் சகர வரிசையில் உ > இ > எ > ஒ >அ திரிபில் சுல் > சில் > செல் > சொல் > சல் வேரில் சில சொற்கள் வழங்குகின்றன. அவை கிழே:

சுல் > சுட்டி - சிறிய, சுண்டு / சுண்டை - சிறுத்த காய், சுருங்கு; சுள்கு> சுக்கல் - சிறு துண்டு, சுக்கு - உலர்ந்து சுருங்கிய இஞ்சி, சுக்குமம் - சிற்றேலம், சுண்டுவிரல் - சிறுவிறல், சுண்டகம் - மூஞ்சூறு, சுண்டம் - சுருங்கும் துதிக்கை, சுணை - சிறுகாஞ்சொறி கொடி, சுத்தி - சிறு சம்மட்டி, சும்பு - சுருங்கு, சுரி - வளைவாய் சுருங்கு,  சுருக்கம் - சிறுமை, குறுமை, குறைவு, சுருளை - குருத்து, சுள் - சிறுமை, சுள்ளி - சிறுமை,  சுன்னிதம்  - நுண்மை

சில் > சிக்க - சுருக்கமாய், சிறிய; சிட்டி - சிறு மட்கலம், சிட்டிகை - சிறு அளவு, சிட்டு - சிறிய, ஓலை நறுக்கு, சிதனம் - சிறு செடி, சிதிலம் / சிதைவு - சிறுகச் சிறுக அழிதல், சிந்து - துளித் துளியாக சொட்டு, சிந்தினர் - குள்ளர் (dwarfs) , சிப்பம் - சிறு மூட்டை, பொட்டலம், சிறுமை, சிம்பு - வாழை இலை துண்டு, சிரங்கு - சிறு கட்டி, சிராய் - மரச்சிலும்பு, சில் - சிறிய, துண்டு, சில்லறை - சிறு சிறு பகுதியாக இருப்பது, சில்லு - துண்டு, சிலந்தி - சிறு கட்டி, சிறு கட்டங்களாக வலை அமைக்கும் பூச்சி, சிலும்பு - கட்டையின் சிறு தும்பு, சின்ன - சிறிய, நுண்மை, துண்டு, சினை - சிறிதாக வளரும், பூ மொட்டு, கிளை.

செல் > செடி / செட்டு(தெலுங்கு) - தாவரத்தின் சிறிய நிலை அல்லது இளநிலை; plant என்ற ஆங்கிலச் சொல் பிள் என்ற இள நிலையில் இருந்து வந்தது நோக்குக. பாவாணர் இளந் தாவரத்தின் அடி சிவப்பாய் இருப்பதால் செ என்ற செம்மைக் கருத்தில் இருந்து செடி என்ற சொல் தோன்றியதாக பொருத்தமின்றி கூறுவார். ஏனெனில் எல்லாச் செடியும் செம்மையான அடி கொண்டிருக்காது. செற்றை - சிறுதாறு, bush 

சொல் > சொட்டு - சிறு துளி, சொக்காய் - சுருங்க வெட்டி தைத்த மேலாடை, சொச்சம் - எஞ்சிய சிறு தொகை, சொணை - இலை,   காயில் உள்ள சிறு முள், சொத்தி - உறுப்பு குறை, நொண்டி;  சோட்டா( இந்தி) - சிறிய, சொல்பு > சொப்பு - சிறுவர் ஆடும் சிறு மட்கலன், சொற்பம் - சிறு அளவு

சல் > சச்சரை - பிளந்த துண்டு, சச்சு / சற்று - சிறிதளவு,  சல்லம் - சிறிய, சல்லி - உடைத்த துண்டுக் கல், சல்லிவேர் - ஆணி வேரில் இருந்து பிரியும் சிறு வேர், சட்டென  / சடுக்கென - காலச் சுறக்கம், விரைவு, சட்டை  - சுருங்க வெட்டி தைத்த மேலாடை
Reply all
Reply to author
Forward
0 new messages