49 குறளில் பயன்கொண்ட ஆய்த எழுத்துக்கள் 52 / ஐயம்.. அய்யம் - இழையின் தொடர் என்க

2,518 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Apr 20, 2016, 4:07:36 PM4/20/16
to mintamil, vallamai, தமிழ் மன்றம், thamizayam, Maravanpulavu K. Sachithananthan, podhuvan sengai, Vasudevan Letchumanan, ara...@gmail.com, Sivakumar M A, kta...@yahoogroups.com
நூ த லோ சு 
மயிலை 
-------------------------------------------

On Wed, Apr 20, 2016 at 9:42 PM, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:

2016-04-20 20:49 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
சீரின் முடிவில் ஃ என்று வந்து பார்த்ததில்லை.

சீர் ஃ என்று முடியும்தான்.
 
அன்புடன்,
ஹரிகி.
----------------------------------------------
குறளில் பயன்கொண்ட ஆய்த எழுத்துக்கள்
ஐயம்.. அய்யம் - இழையின் தொடர் என்க
-----------------------------------------------------------------------------------------------
அன்புள்ள அரிகி  அவர்களுக்கு 

என்னிடம் உள்ளது  சாதாரண (கேவல simple ) 'மொழி எழுதி' தான் 
அதனைக்கொண்டே எங்களால் எழுத்து சொற்கள் தனை எண்ணிவிட முடியும் 
வேறு ROBATIC SOFT WARE ஏதும் இதுவரை கைக்கொள்ளவில்லை 


திருக்குறளில் தலைப்புக்கள் நீங்கலாக வெண்பாக்களுள் மட்டும்

52 ஆய்த எழுத்துக்கள் 49 குறள்களில் பயன்பட்டுள்ளன
( 3 குறளில் இருமுறை பயன்)

வெண்பா இயல் வழி யோ வேறு  எந்த யாப்பு வழியோ ஆய்தமும் மெய்யும் ஒன்றுதான் = அரை மாத்திரை 
யாப்பில் எழுத்தெண்ணு ம் பொது மெய்கள் கணக்கிடப்படா அவை இர ட்டித்து வந்தாலும் (வாழ்ந்த பார்த்திபன் 
மெயில்தான்  அசை முடிந்துவிடுமே எனவே ஆய்தம் எந்த அ சைக்கும் முதல் வாரா 
அதான்று 
குறள் மட்டுமல்ல சங்கநூல்களாம் பத்துப்பாட்டு எட்டுத்தொகை பதினெண் கீழ்கணக்கு சேர்ந்து ஒன்றாகப் பார்த்ததாலும்
348 ஆய்தம் பயனில் உள்ளமையை ஒரு சொடுக்கில் எண்ணிவிட முடியும் 
அதுபோல்   திருக்குறளை விட  மிக நீண்ட யாப்புடையான ஆன கம்பராமயணமோ 18000 + பாடல்கள் கொண்ட 
சைவத்தின் பன்னிரு திரு முறையிலோ எது  கேட்டாலும் ஒரே சொடுக்கில் சொல்லோ எழுத்தோ எண்ணி  சொல்லிவிட முடியும் 

 மேலும்
யூனிகோடு முறையில் எழுதப்பட்ட  எழுத்துக்களால் முடியாதது பல 
அதனில் பல  எங்கள் TSCII யால்  முடியும் 
எடுத்துக்காட்டாக கிளி யில் வரும்ஓர் ஒட்டேழுத்தாம்  'இகர' த் தலை கீற் று (= எழுத்தில் சேர்வது அ னால் தனியாக கீறும்ஒட்டுகுறி )
 அடுத்து ஐகார ஒட்டேழுத்தாம் 'கைதை'யில் உள்ளது ( * * * )  எங்கெல்லாம் வருகின்றது எத்தனை என்றாலும் ஒரே சொடுக்கில் முடியும் 

ஓர் எழுத்தின்  கடையில் வரும் ஒட்டேழுத்துக்கள் (VOWEL MODIFIERS ) காக்கா கிளி கீரி  என்பதில் உள்ள ஆகார   இகர் ஈகார ஒட்டேழுத்துக்கள்
அடுத்து உடன் வரும் எழுத்தில் முன்வைக்கப்படும் (VOWEL MODIFIERS ) ஒகர ஓகாரக் ஔ காரக் கொம்பு மேலே கா ட்டிய ஐகார ஒட்டேழுத்து 
போன்றவை வந்தாலும் எடுத்துக்காட்டாக கரியில் கீரி<->கையால்  துடைத்தான் என்பதில் உள்ளதை (இகரம் அடுத்து ஐகாராம் )
ஒரே சொடுக்கில் எத்தனை என எண்ணி சொல்ல முடியும் 
நிற்க 

49 குறளில் பயன்கொண்ட52  ஆய்த எழுத்துக்கள் அதன் குறளிலேயே காண்க 
------------------------------------

38
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்

49
அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று

76
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அதே துணை
80
அன்பின் வழியது உயிர்நிலை அதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு

132
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை

162
விழுப்பேற்றின் அதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்

170
அழுக்கற்று அகன்றாரும் இல்லைஅது இல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்

1.2.14
வெகாமை

171
நடுவின்றி நன்பொருள் வெகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்

172
படுபயன் வெகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்

173
சிற்றின்பம் வெகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்

174
இலமென்று வெகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்

175
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெகி வெறிய செயின்

176
அருள்வெகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்

177
வேண்டற்க வெகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்

178
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்

179
அறனறிந்து வெகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு

180
இறலீனும் எண்ணாது வெகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு

220
ஒப்புரவினால்வரும் கேடெனின் அதொருவ
விற்றுக்கோள் தக்க துடைத்து
226
அற்றார் அழிபசி தீர்த்தல் அதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி

236
தோன்றின் புகழொடு தோன்றுக அதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று

242
நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றான்
தேரினும் அதே துணை

262
தவமும் தவம்உடையார்க்கு ஆகும் அவம் அதனை
துஇலார் மேற்கொள் வது

363
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டுஇல்லை
ஆண்டும் அதொப்பது இல்

368
அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்

414
கற்றில னாயினுங் கேட்க அதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை

427
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
தறி கல்லா தவர்

459
மனநலத்தின் ஆகும் மறுமைமற் றதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து

476
நுனிக்கொம்பர் ஏறினார் அதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்

536
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல்
541
ஒர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வதே முறை
556
மன்னர்க்கு மன்னுதல் செங்கோண்மை அதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி

572
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அதிலார்
உண்மை நிலக்குப் பொறை

575
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அதின்றேல்
புண்ணென்று உணரப் படும்

591
உடையர் எனப்படுவது ஊக்கம் அதில்லார்
உடையது உடையரோ மற்று

600
உரமொருவற்கு உள்ள வெறுக்கை அ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு

621
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அதொப்ப தில்

759
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
கதனிற் கூரிய தில்

773
பேராண்மை என்ப தறுகண்உன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எகு
943
அற்றால் அறவறிந்து உண்க அதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு

971
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
திறந்து வாழ்தும் எனல்
1001
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்

1014
அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை

1032
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து

1037
தொடிப்புழுதி கசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்

1093
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அதவள்
யாப்பினுள் அட்டிய நீர்

1161
மறைப்பேன்மன் யானிதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்

1166
இன்பம் கடல்மற்றுக் காமம் அதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது

1279
தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
தாண் டவள்செய் தது
1308
நோதல் எவன்மற்று நொந்தாரென்று அதறியும்
காதலர் இல்லா வழி


இந்தப் பகுதியில் உள்ள 
எழுத்துக்கள் (TSCII -coding chars+​blank space ) = 1944
சொற்கள்                             = 644
வரிகள்                                 = 147 (தலைப்பாகும் பா எண்ணு டன்)
ஆய்தம்                               = 52 (3 குறள்களில் இருமுறை பயனில் உள்ளன )

குறள்கள்                             = 147 / 3 = 49





 ( * * * )  பாண்டியராசா மற்றும் வேல்முருகன் சுப்பிரமணியம் கவனிக்க 

Hari Krishnan

unread,
Apr 20, 2016, 11:01:21 PM4/20/16
to vallamai, mintamil, தமிழ் மன்றம், Maravanpulavu K. Sachithananthan, podhuvan sengai, Vasudevan Letchumanan, ara...@gmail.com, Sivakumar M A, kta...@yahoogroups.com
2016-04-21 1:37 GMT+05:30 N D Logasundaram <selvi...@gmail.com>:
இந்தப் பகுதியில் உள்ள 
எழுத்துக்கள் (TSCII -coding chars+​blank space ) = 1944
சொற்கள்                             = 644
வரிகள்                                 = 147 (தலைப்பாகும் பா எண்ணு டன்)
ஆய்தம்                               = 52 (3 குறள்களில் இருமுறை பயனில் உள்ளன )

குறள்கள்                             = 147 / 3 = 49


 ( * * * )  பாண்டியராசா மற்றும் வேல்முருகன் சுப்பிரமணியம் கவனிக்க 

வணக்கம்.  நன்றி ஐயா.  நான் இந்தக் குறள்களைப் பார்த்திருக்கிறேன்.  ஆனால் எண்ணிக்கையில் சேர்க்கவில்லை.  நான் தேடியது ஃ மாத்திரை பெறும் குறட்பாக்களை மட்டுமே.  உங்களுடைய தகவல்களுக்கு நன்றி.

திஸ்கி 1.2 அறிமுகமாவதற்கு முன்பிருந்து திஸ்கியைப் பயன்படுத்தியிருக்கிறேன்.  நான் தொழில்முறைத் தட்டன்.  மூன்று தலைமுறையாக தட்டச்சுக்   கற்பித்த குடும்பத்தைச் சேர்ந்தவன்.  21 வயதில் சொந்த முயற்சியால்--யாரிடமும் பயிலாமல்--இரட்டை நாகபந்தம் செய்தவன்.  இதைத் தவிர அட்டாவதானி இராமையா அவர்களோடு நெருங்கிப் பழகி, வெண்பாவின் பல நுணுக்கங்களைக் கற்றவன்.  தற்போதைய பதினாறு கவனகர் கனகசுப்புரத்தினத்தை, அவர் கவனகராகும் காலத்துக்கு முன்பிருந்து அறிந்தவன்.  அவரை பாரதிதாசன் என்று நாங்கள் அழைப்பது வழக்கம்.   (செங்கைப் பொதுவன் அவர்கள் என்னை நன்றாக அறிவார்கள்.  நானும் அவரும் நங்கநல்லூரில் குடியிருந்தவர்கள்.  எங்களுடைய கவியரங்குகளுக்கு ஐயா வந்திருக்கிறார்.  அவருடைய மகள் தண்ணிலா என்னிடம் தட்டச்சு சுருக்கெழுத்து பயின்றவர்.)  எனவே கி கீ போன்றவற்றில் தட்டச்சுப் பொறிக்கும் திஸ்கி அமைப்புக்கும் உள்ள தொடர்பை நன்றாகவே அறிவேன்.  அந்தக் கொம்புகளை Shackle என்று சொல்வார்கள்.  ஆகவே யுனிகோடில் போன்று இல்லாமல் திஸ்கியில் ஷாக்கிள் உள்ள எழுத்துகளைத் தனியே இனம்காண முடியும்தான்.

திஸ்கி அமைப்பிலிருந்து யுனிகோடுக்கு மாற்றப்பட்ட திருக்குறள் தொகுப்பில் சீர்கள் கண்டபடி பிரிக்கப்பட்டிருந்தன.  தம்பி வேல்முருகனுக்கு கணினித் தேடல் வழியே சீர் தளைகளை இனைம்காண ஏதுவாக 200க்கு சற்று மேற்பட்ட குறட்பாக்களை ஒரேநாளில் சீர்செய்து கொடுத்தேன். இதை அவருடைய Facebook நண்பர்கள் அறிவார்கள்.  அவருடைய தேடலில் எந்த வகையான எழுத்தையும் இனம்காண அவரால் முடிகிறது.  கம்பராமாயணத்தில் எனக்காக சில தேடல்களை அவர் செய்துகொடுத்திருக்கிறார்.   


நன்றி ஐயா.  நீங்கள் கொடுத்துள்ள விவரங்களை நீங்கள் அனுமதித்தால் சேமித்து வைத்துக் கொள்கிறேன்.  உழைப்பை மதிக்கத் தெரிந்தவன் நான்.
--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

N D Logasundaram

unread,
Apr 21, 2016, 1:26:46 AM4/21/16
to vallamai, mintamil, தமிழ் மன்றம், thamizayam, Maravanpulavu K. Sachithananthan, podhuvan sengai, Vasudevan Letchumanan, ara...@gmail.com, Sivakumar M A, Banukumar Rajendran, Raji M, kta...@yahoogroups.com
அன்புமிகு அரிகி அவர்களுக்கு 
தனிப்பட்ட ஒருவர் எப்போதும் தான கண்டு படித்ததை சேமித்து   முடியும் அதனை பலர அ றி ய நேரடியாக
பயன்கொள்ளும் போது தான அந்த தகவலு க்கு நன்றி சொல்வது பண்பு அவ்வளவே  என நினைப்பவன் நான்

வேறு தங்களை அனுபவக்குறி ப்புகள் கண்டேன் நினைவில் கொள்வேன் மிக்க நன்றி  

நூ த லோ சு 
மயிலை 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply all
Reply to author
Forward
0 new messages