ta-u-k-kaa-la-r ta-n ko-t-taa-n ko-t-taa-n va-yi-ta-ti pa-la-kai
தாஉக்காளர் / தாவுக்காளர் - வழிப்போக்கர், to pace out a distance, traveller, உலகளந்தான் றா அயது (குறள் 610); தன் - உடைய; கொத்து - எழுத்து செதுக்கு, to engrave, carve, கொத்தான் - சிற்பி; பலகை - எழுத்து கல். இதை வைத்தது இப்பலகை என்று பிரித்து படிக்க வேண்டும்.
இதன் பொருள் தொலைவான இடம் கடக்கும் வழிப்போக்கர் (வணிகர்) உடைய எழுத்து செதுக்கும் சிற்பி இந்த பலகைக் கல்லை வைத்தான் என்பதே. வணிகரோடு தொடர்புடைய தாவாளம் என்ற சொல்லுக்கும் தாவுக்காளர் என்ற சொல்லுக்கும்ம் நெருங்கிய தொடர்புண்டு. ஏனெனில் வணிகரே பெரும்பாலும் நெடும் தொலைவு பயணிப்பர். ஆளர் என்ற பன்மைக்கு தம் என்ற பன்மை இடாது தன் என்ற ஒருமை இட்டது
இலக்கணப் பிழை ஆகும். இதனால் கடல் வணிகர் எப்போதும் தம்முடன் ஒரு சிற்பியை வைத்திருந்தனர் என்று தெரிகின்றது. இதில் புழங்கும் முதல் எழுத்து -D & பலகையில் புழங்கும் பகரமும் சில தகர எழுத்தும் தமிழி எழுத்துகள் அல்ல, அவை சிந்து எழுத்துகளே. அதனால் பச்சை வண்ணத்தில் குறிக்கப்பட்டுள்ளன. இந்த முதல் எழுத்து D/த வட பிராமியில் da என்ற குறியீடாக பயன்படுத்தப்பட்டதை அறிக. இது ஒரு ஈரெழுத்து கல்வெட்டு ஆகும்.
நான் 2005 இல் ஆதிச்ச நல்லூர் அகழ்வாய்வு பொருள்களை மத்திய தொல்லியல் துறை அலுவலகம் அமைந்த சென்னை கோட்டையில் பொழுது போக்காக பார்த்து வந்தபின் அகழ்வாய்வு, பழைய எழுத்துகள் ஆகியவற்றில் ஆர்வம் வளர்த்துக் கொண்டேன். பின்பு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்ட தமிழ் பிராமி கல்வெட்டுகள் என்னும் நூலை படித்து தமிழி எழுத்துகளை அடையாளம் கண்டு படிக்கத் தொடங்கினேன். அந்த அறிவு தான் இப்போது இந்த கல்வெட்டை படிக்க எனக்கு உதவியது. பின்னர் 2007 இல் பேரா இரா. மதிவாணனிடம் சிந்து எழுத்து படிப்பதை கற்றுக் கொண்டேன். அப்படியே படிப்படியாக ஒரு கல்வெட்டு ஆய்வாளன் ஆகிவிட்டேன்.
இந்த கல்வெட்டு மூலம் சிந்து எழுத்தை தமிழாக படித்ததை நகையாட்டு செய்தவர் இனி கொண்டாடப் போகின்றார் பேரா இரா. மதிவாணனை. முன்னம் கொல்லிமலை நெடுவலம்பட்டி வணிக கல்வெட்டில் இதே போல தமிழி, சிந்து எழுத்து கலந்திருந்தது. அது உரிய கவனிப்பின்றி போய்விட்டது.