மீண்டும் கல்பாக்கம் அணுசக்தி பற்றி ஞாநியின் தவறான கருத்துகள்!

37 views
Skip to first unread message

சி. ஜெயபாரதன்

unread,
Nov 7, 2011, 5:36:38 PM11/7/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com, vanna...@gmail.com, Anne Josephine, jayashree shankar

மீண்டும் கல்பாக்கம் அணுசக்தி பற்றி  ஞாநியின்
தவறான கருத்துகள்!
 
 
சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng (Nuclear) கனடா
 
 
 
 

'எரிசக்தி இல்லாமை போன்ற விலை மிகுந்த எரிசக்தி எதுவும் இருக்க முடியாது ' [No Energy is so costly as No Energy].

அணுவியல் விஞ்ஞான மேதை, டாக்டர் ஹோமி பாபா (1909-1966)

 
 
முன்னுரை: 50 ஆண்டு நிறைவுப் பொன்விழாவைக் கொண்டாடும் [2003-2004] பாரத அணுசக்தித் துறையகம் இன்னும் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில் மின்சார உற்பத்தியை 2620 MWe மின்னாற்றலிலிருந்து 6800 MWe மின்னாற்றல் மிகுதி நிலைக்கு உயர்த்தப் போவதாக அணுசக்திப் பேரவையின் அதிபதி, டாக்டர் அனில் ககோட்கர் [Dr. Anil Kakodkar, Chairman Atomic Energy Commission] வியன்னா, அகில நாட்டு அணுசக்திப் பேரவையில் [International Atomic Energy Agency, Vienna] 2003 செப்டம்பர் 17 ஆம் தேதி பெருமிதத்துடன் பறைசாற்றி யிருக்கிறார். மேலும் [2002-2003] ஆண்டில் இந்திய அணுமின் நிலையங்கள் செவ்விய முறையில் இயங்கி 19,358 மில்லியன் யூனிட் (KWh) மின்சாரத்தை, 90% திறமைத்தகுதியில் [Capacity Factor: 90%] பரிமாறியுள்ளன என்றும் கூறி யிருக்கிறார். அவற்றின் மகத்தான வெற்றிக்குக் காரண கர்த்தாக்கள்: அணுமின் உலைகளை ஆழ்ந்து டிசைன் செய்து அமைத்தவர்கள், இராப் பகலாக இயக்கிக் கண்காணித்து வரும் எஞ்சியர்கள், விஞ்ஞானிகள், பணியாளிகள் ஆகியோரே.
 
இந்தியாவைப் போல் மற்றும் 30 உலக நாடுகள் 438 அணுமின் உலைகளை இயக்கி [2001 அறிக்கை] 351,327 MWe மின்னாற்றலைப் பரிமாறி வருகின்றன! அடுத்து 31 அணு உலைகள் கட்டப்பட்டு இன்னும் 27,756 MWe அதிக மின்னாற்றல் உலகெங்கும் பெருகப் போகிறது! 2000 ஆண்டில் மட்டும் உலக நாடுகளில் 2,447,530 பில்லியன் யூனிட் [MWh] மின்சாரம் உற்பத்தியாகி யுள்ளது! மேலும் அமெரிக்கா, கனடா நாடுகளில் வயதாகி முன்பு மூடப்பட்ட பழைய அணு உலைகள், பல புதுப்பிக்கப்பட்டு மின்சாரம் பற்றாக் குறைப் பிரச்சனையை நிவர்த்தி செய்யத் தயாராக்கப் படுகின்றன.
 
 
 
 
கல்பாக்கம் ஞாநியின் அணுசக்தி பற்றித் தவறான கருத்துகள்

மீண்டும் மதிப்புக்குரிய நண்பர் 'கல்பாக்கம் ஞாநி ' சென்ற வாரக் கட்டுரையில் [செப் 18, 2003] தனது நெற்றிக் கண்ணைத் திறந்து அணுமின் நிலையங்கள் மீது கனலற்ற தீப்பொறிகளைக் கக்கி இருக்கிறார்! 'இந்தியாவில் அணுசக்தித் துறை என்பதே மின்சாரத்துக்கானது அல்ல. அணுமின்சாரம் இதுவரை எந்த மூலையிலும் மின்சாரப் பற்றாக் குறையைத் தீர்க்கவில்லை ' என்று தவறான கருத்தைப் பரப்பி வருகிறார். பெரும்பான்மையான இந்திய அணுமின் நிலையங்கள் எவ்விதம் சீரும் சிறப்பாக இயங்கி மின்சக்தி பரிமாறி வருகின்றன என்று மெய்யான செய்திகளை முழுமையாக அறியாது, கண்களை மூடிக் கொண்டு புளுகுத் தகவலைத் தமிழ் நாட்டிலும், அகிலவலை மூலம் தமிழ் உலகிலும் ஒரு பத்திரிகை ஆசிரியர் பரப்பி வருவது வியப்பாக இருக்கிறது!

சென்ற வாரக் கட்டுரையில் நான்கு தனிப்பட்ட தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார். அவற்றில் சில பிழையானவை.

1. மின்சார உற்பத்திக்கு அணுசக்தி சரியான வழியல்ல. இந்தியாவில் அணுசக்தித் துறை என்பதே மின்சாரத்துக்கானது அல்ல. அணுமின்சாரம் இதுவரை எந்த மூலையிலும் மின்சாரப் பற்றாக் குறையைத் தீர்க்கவில்லை. [இவை பிழையான கருத்துக்கள்]. பல தலைமுறைகளுக்கு ஆபத்தான கழிவுகளைத்தான் உற்பத்தி செய்யும். [இது மெய்யானது]

2. வல்லரசு வேடங்கட்டி ஆடுவதற்காக அணு ஆயுதத்துக்கான புளுடோனியத்தை எடுத்து, அணுகுண்டு தயாரிப்பவர்கள்தான் உண்மையான பயங்கரவாதிகள். [இது மெய்யானது]

3. கல்பாக்கம் அணு உலைகள் நிரந்தர ஆபத்தாக இருந்து அங்குள்ள ஊழியர்களுக்கு உடல்நல விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. [இது தவறானது. அவர் குறிப்பிடும் விபத்து எரிக்கோல் மீள்சுத்திகரிப்புத் தொழிற்கூடத்தில் நிகழ்ந்தது. கல்பாக்க அணு உலைகளில் நிரந்தர ஆபத்துக்கள் இல்லை]

4. கல்பாக்கம் அணு உலகளைக் கட்டி முடிக்கவே 15 ஆண்டுகள் ஆகின. இயங்கத் தொடங்கிய முதல் ஐந்து ஆண்டுகளில் 200 முறை பிரச்சினைகளினால் நிறுத்தப் பட்டன. [அதாவது ஆண்டுக்கு 40 தடவை நிறுத்தம், மாதம் ஒன்றுக்கு 3-4 நிறுத்தம்]. [முன்னோடி அணுமின் உலைகளில் இத்தனை நிறுத்தங்கள் ஒன்றும் பெரிதல்ல!]

இந்தியச் சாதனங்கள் 70%, அன்னியச் சாதனங்கள் 30% கொண்டு கல்பாக்கத்தில் தயாரியான முன்னோடி அணு உலைகள் இவை. இந்தியா தன் காலில் நின்று முதன் முதலில் அணுமின் நிலையச் சாதனங்களைத் தயாரித்துச் சுயதேவைப் பூர்த்திக்குக் கட்டி இயக்கும் போது, 15 ஆண்டுகள் நீடித்ததில் ஒன்றும் தவறில்லை. ஆரம்ப காலத்தில் விஞ்ஞானிகளும், எஞ்சியர்களும் புது அணு உலையை இயக்கும் போது மாதம் ஒன்றில் 3-4 நிறுத்தம் ஏற்பட்டதும் ஒப்புக் கொள்ள வேண்டியதே.

இந்திய அணுமின் நிலையங்களின் மகத்தான சாதனைகள்

இந்திய அணுசக்திக் கார்பொரேஷன் [Nuclear Power Corporation of India Ltd (NPCIL)] தனது அகிலவைப் பின்னலில் [www.npcil.org] 1995 முதல் 2002 ஆண்டுவரை அணுசக்தி பரிமாறி வந்த மொத்த யூனிட்களையும் [Generation Units], நிலையங்கள் இயங்கிய திறத்தகுதிகளையும் [Capacity Factors] விளக்கமாகத் தந்துள்ளது. அவை யாவும் மெய்யான எண்ணிக்கைகள்! புளுகு எண்ணிக்கைகள் அல்ல! அதே எண்ணிக்கைகளை அணுசக்தி கார்பொரேஷன் வியன்னாவில் உள்ள அகிலநாட்டு அணுசக்திப் பேரவைக்கும் [International Atomic Energy Agency (IAEA)] இதுவரை அனுப்பி வந்துள்ளது.

அணுசக்தித் துறையின் புதிய 2003 ஆம் ஆண்டு அறிக்கையில் (ஏப்ரல் 2002-மார்ச் 2003) தற்போதைய நிதியாண்டில் பரிமாறிய மின்சாரம் 19200 மில்லியன் யூனிட் [1 Unit=1 KWh (Kilo Watt Hour)] என்றும், பெற்ற இலாபம் ரூ.1438 கோடி என்றும் அறியப்படுகிறது. அடுத்து ஏப்ரல்-ஜுன் 2003 மூன்று மாதத்தில் மட்டும் அடைந்த இலாபம் ரூ 545 கோடி! ஏழாண்டுகளில் (1995-2002) இந்திய அணுமின் நிலையங்கள் சராசரி 13590 மில்லியன் யூனிட் மின்சாரத்தை, சராசரி 74% திறமைத்தகுதியில் [Capacity Factor: 74%] பரிமாறி வந்துள்ளன.

கல்பாக்கம் முன்னோடி அணுமின் உலைகள் கடந்த நான்கு வருடங்கள் [1998-2002] சராசரி 82% திறமைத்தகுதியில் சராசரி 1183 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரித்துள்ளன. அதே சமயம் வட இந்தியாவில் ஓடும் புதிய அணுமின் நிலையங்கள் 2002 ஆம் ஆண்டில் புரிந்த மகத்தான மின்சார உற்பத்திகள் பாராட்டுக்குரியவை.
 

கக்ரபார் அணுமின் நிலையம்: திறமைத்தகுதி: 92% ... பரிமாற்றம்: 1735 மில்லியன் KWh

கெய்கா அணுமின் நிலையம்: திறமைத்தகுதி: 78% ... பரிமாற்றம்: 1500 மில்லியன் KWh

நரோரா அணுமின் நிலையங்கள்: திறமைத்தகுதி: 88% ... பரிமாற்றம்: 1664 மில்லியன் KWh

ராஜஸ்தான் அணுமின் நிலையம்: திறமைத்தகுதி: 80% ... பரிமாற்றம்: 1525 மில்லியன் KWh

கல்பாக்கம் அணுமின் நிலையம்: திறமைத்தகுதி: 78% ... பரிமாற்றம்: 1122 மில்லியன் KWh

 
 
இந்திய அணுமின் நிலையங்கள் எவ்விதம் திட்டமிடப்பட்டன ?

முதல் இரண்டு இந்திய அணுமின் உலைகள் அமெரிக்கா, கனடா, ஆகிய நாடுகளின் உதவியால் உருவாயின. தற்போது ரஷ்யாவின் உதவியால் 1100 MWe இரட்டை அணுமின் நிலையங்கள் [1100 MWe VVER] கூடங்குளத்தில் கட்டப்பட்டு வருகின்றன. கனடா முன்னோடி அணுமின் உலைகளைப் பிரதி எடுத்து, மேலும் புதிய உறுப்புகளைப் புகுத்தி, புது அணுமின் நிலையங்கள் பின்னால் தோன்றின. அவை யாவும் யுரேனியத்தைப் பயன்படுத்தும் முதற்கட்டத் திட்ட அமைப்புகள். தற்போது இயங்கி வரும் பத்து 220 MWe அணுமின் நிலையங்கள், இந்தியப் பொறியியல், விஞ்ஞானிகளால் டிசைன் செய்யப்பட்டு, அவற்றின் 80% சாதனங்கள் இந்தியத் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டவை. இப்போது புதிய அணுமின் உலைகள், முன்னோடிகளை விடச் சிறந்த நிலையில் இயங்கி, மின்சாரம் பரிமாறி வருகின்றன. கல்பாக்கம் ஞாநி வலியுறுத்துவது போல் அணுமின் நிலையங்களை மூடிவிட்டால், பல மாநிலங்களில் இருட்டடிப்புகள் நீடிக்கும். தொழிற்சாலைகள் அநேகம் நிறுத்தமாகி, மாநிலங்களில் ஆயிரம் ஆயிரம் நபர்கள் வேலை இழந்து, வயிற்றுச் சோறுக்குத் திண்டாட்டம் உண்டாகிவிடும்!

இரண்டாம் கட்டத் திட்டத்தில் தோரியத்தைப் பயன்படுத்தி வேகப்பெருக்கி அணுமின் நிலையங்கள் [Fast Breeder Reactors] அமைப்பு. இந்தியாவில் இயங்கி வரும் அல்லது கட்டப்பட்டு இனிமேல் இயங்கும் அணுமின் நிலையங்கள் ஏராளமான யூனிட் மின்சாரம் பரிமாறி வருவதுடன், பல இந்தியத் தொழிற்சாலைகளின் பணியாளிகளுக்கு வேலை வாய்ப்பும் அளிக்கின்றன. இந்தியா அணுமின் நிலையங்களின் டிசைன், தயாரிப்பு, நிறுவகம், இயக்கம், பராமரிப்பு, பாதுகாப்பு, எரிக்கோல் சுத்தீகரிப்பு, கழிவுகள் புதைப்பு ஆகிய அனைத்துத் துறைகளிலும் உலக முன்னணியில் நிற்கிறது. அவற்றில் சிக்கல், பிரச்சனைகள் எழுந்தாலும், அவற்றைத் தீர்க்க நிபுணர்கள் அருகே இருக்கிறார்கள்.

பாரதத்தில் மின்சாரப் பற்றாக் குறையை நிவர்த்தி செய்வது எப்படி ?

நூறு கோடி ஜனத்தொகையை மிஞ்சி விட்ட இந்தியாவுக்குப் பற்றாக்குறை மின்சாரம் மட்டுமா ? உணவு, நீர், உடை, இல்லம், கல்வி, வேலை, போக்குவரத்து, குடிவசதி, சுகாதாரம் போன்ற முக்கியமான துறைகளிலும் பற்றாக்குறைகள் உள்ளன! இந்தியாவில் பற்றாக்குறை மின்சார உற்பத்திக்கு வேண்டிய நிலக்கரி கிடைப்பதில்லை! ஈரான், ஈராக்கிலிருந்து எரிஆயில், எரிவாயு ஆகியவற்றை வாங்கிப் பாரதத்தில் மின்சாரம் தயாரித்துப் பெருத்த செலவில் நமது தொழிற்சாலைகளைத் தொடர்ந்து ஓட்ட முடியாது! கோடான கோடி இல்லங்களுக்கும் விளக்கேற்ற இயலாது! நீர்வீழ்ச்சி மின்நிலையங்களை மேலும் பெருக்க நீர்வளச் செழிப்பும் கிடையாது! காற்றிலிருந்தும், கடல் அலைகளிலிருந்தும், மாட்டு சாணத்திலிருந்தும், பரிதியின் வெப்பத்திலிருந்தும், நமக்குத் தேவைப்படும் மாபெரும் 200 MWe, 500 MWe, 1100 MWe மின்சார நிலையங்களைக் கட்ட முடியாது! ஆனால் பாரதத்தில் மிகுந்து கிடக்கும் யுரேனியத்தைப் பயன்படுத்தி முதற் கட்டத்தில் 50,380,000 மெகாவாட் அணு மின்னாற்றலும், தோரியத்தைப் பயன்படுத்தி இரண்டாம் கட்டத்தில் 200,000,000 மெகாவாட் அணு மின்னாற்றலும் தயாரிக்க நம்மிடம் மனிதத் திறமையும், மூல உலோகங்களும், யந்திர சாதனங்களும் நிரம்ப உள்ளன. அணுவியல் துறையகத்தின் முதல் அதிபதி, டாக்டர் ஹோமி பாபா திட்டமிட்டது போல், பாரதத்தில் கிடைக்கும் ஏராளமான யுரேனியம், தோரியம் மூலகங்களைப் பயன்படுத்தி, இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்தியாவில் அணு மின்சக்தி உற்பத்தி செய்வதைத் தவிர, வேறு வழியே இல்லை!

அணு உலைகளில் ஏற்படும் அபாய நிகழ்ச்சிகள், விபத்துகள்.

உலக நாடுகளில் இயங்கும் அணுமின் நிலையங்களில் விபத்துகள் நிகழ்ந்ததுபோல், இந்திய அணு உலைகளிலும், அணுஎருச் சுத்தீகரிப்புத் தொழிற் கூடங்களிலும் சில அபாயங்கள் நேர்ந்துள்ளன! மனிதர் கவனமின்மை, மனிதத் தவறுகள், பாதுகாப்புப் பணிநெறிகளைப் பின்பற்றாமை, சீரான மேற்பார்வை இன்மை, கண்காணிப்பு இன்மை ஆகிய ஒழுங்கீனங்களால் தொழிற்சாலைகளில் விபத்துகள் உண்டாகும். அவற்றைத் தவிர்ப்பது, தடுப்பது அல்லது குறைப்பது இயக்குநரின் முக்கிய கடமையாக இருத்தல் அவசியம். அணு உலைகளில் பெரும்பான்மையான விபத்துகள் மனிதத் தவறுகளால் ஏற்படுகின்றன. மனிதத் தவறுகள், கண்காணிப்பட்டு குறைக்கப்பட வேண்டும். குறைந்து குறைந்து மனிதத் தவறுகள் பூஜியமாக்கப்பட வேண்டும். விபத்துகளின் மூல காரணங்கள் ஆழ்ந்து உளவப்பட்டு, மீண்டும் அவை ஏற்படாதிருக்க தடுப்பு முறைகள், பாதுகாப்பு நெறிகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அணு உலைகளின் பிரச்சனைகளைக் கண்டு மிரளாமல், அவற்றைத் தீர்க்க வழிகள் வகுக்கப்பட வேண்டும். அணு உலைகளே நாட்டின் மின்சாரப் பற்றாக்குறையை நீக்கும் என்று ஆணித்தரமாக நம்பி, மக்கள் அறியும்படி அவர்களுக்குக் கல்விப் பயிற்சிகள் அளித்து, அணுத்துறைக் கண்காட்சி சாலைகள் அமைக்கப்பட வேண்டும்.

தற்போதைய தொழில்யுகம் [Industrial Age] தோற்றுவித்த யந்திர, இராசயனத் தொழிற்சாலைகள், போக்குவரத்துகள் [இரயில் தொடர், கார், கப்பல், ஜெட் விமானம், ராக்கெட் விண்கப்பல்], மின்சார நிலையங்கள், ஆய்வுக்கூடங்கள் அனைத்திலும் அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் ஒளிந்துள்ளன! எப்போதாவது விமானம் ஒன்று விழுந்து நூற்றுக் கணக்கான பேர் மடிகிறார்! ஆனால் விமானப் பயணங்கள் நிறுத்தப் படுகின்றனவா ? இல்லை. இரயில் வண்டி தடம் பெயர்ந்து உருண்டு அநேக நபர் உயிரிழக்கிறார்; பலர் காயமடைகிறார்! ஆனால் இரயில் பயணங்கள் நிறுத்தப் படுகின்றனவா ? இல்லை. காரணம் பாதிக்கப் பட்டாலும் மக்கள், அவற்றின் அபாயங்களை எதிர்பார்த்து அவ்விபத்துகளை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் கடந்த 50 ஆண்டு அனுபவத்தில் இந்திய அணு உலைகளில் இதுவரை யாரும் கதிரடியால் மரணம் அடைய வில்லை! பாதுகாப்புக்கு மீறிய அளவுக் கதிரடி சிலர் வாங்கி யிருந்தாலும் மருத்துவச் சிகிட்சையில் அவர்களைக் குணப்படுத்த முடியும்! கல்பாக்கம் ஞாநி அணுவியல் துறைகளில் ஏற்பட்ட விபத்துகளை மட்டும் பெரிது படுத்திக் கொண்டு, அவற்றை மூடவிட வேண்டும் என்று கூச்சலிடுவது ஆதரமற்ற, நியாயமற்ற கூப்பாடு!

இந்திய அணுமின் உலைகளைப் பற்றித் தவறான தகவல்கள்!

அணுசக்தி, இப்போது மின்சாரப் பற்றாக் குறையை ஓரளவு நிவர்த்தி செய்து வருகிறது. இயங்கிக் கொண்டிருக்கும் அணுமின் நிலையங்களையும் நிரந்தரமாக ஞாநி விரும்புவது போல் நிறுத்தி விட்டால், இந்தியா வெங்கும் இருட்டடிப்பும் [Blackouts], பழுப்படிப்பும் [Brownouts] தாண்டவமாடும்! பிறகு அவரது பத்திரிகைகள் கூட அச்சடிக்கப் படாமல் ஆபீஸுக்குள்ளேயே தூங்கிக் கொண்டிருக்கும்! 2003 இல் இந்தியாவின் பதிமூன்று அணுமின் நிலையங்கள் 2620 MWe மின்சாரம் பரிமாறி வருகின்றன. 2012 இல் மூன்று மடங்கு [8100 MWe] அதிகரிக்கத் திட்டங்கள் உருவாகி, இப்போது புது அணுமின் உலைகள் கட்டப்பட்டு வருகின்றன. அணுசக்தி மூலம் 2020 ஆண்டுக்குள் 20,000 MWe மின்னாற்றலை பாரதத்தில் உண்டாக்க மாபெரும் திட்டங்கள் கைவசம் உள்ளன.

கல்பாக்கம் ஞாநி அணு உலைகள் செர்நோபிள் போல் வெடிக்கும் என்றும், அப்படி வெடித்தால் சென்னை நகரமே அழிந்துவிடும் என்றும் அணுவியல் கல்வி புரியாமல் தன் நுனிப்புல் அறிவில் 2003 ஏப்ரலில் எழுதி, தமிழர் அனைவருக்கும் அச்சத்தையும், பீதியையும் கிளப்பினார்! அதே கட்டுரையில் கல்பாக்க அணு உலைகளில் பணியாற்றுவோரும், அவற்றின் அருகில் வாழ்வோரும் புற்று நோயால் தாக்கப்படுகிறார் என்ற புரளியையும் உண்டாக்கினார்! அவற்றைத் தவறென்று காட்டித் திண்ணையில் எழுதிய கட்டுரைக்குப் பதில் தராமலே ஒளிந்து கொண்டார், கல்பாக்கம் ஞாநி! இந்திய அணு உலைகளை நேரில் கண்டு, அணு உலை எதிர்ப்பாளிகள் தம் அறிவைச் செழுமைப்படுத்த வேண்டும் என்று கூறிய ஆலோசனைக்கும் அவர் பதிலே அளிக்கவில்லை!

பத்திரிக்காசிரியர் என்று வேடங்கட்டி, கல்பாக்கம் ஞாநி அணுசக்தி பற்றி பூரணப் பயிற்சி இல்லாமல், வெறும் அரைகுறை ஞானத்துடன், அணுசக்தியைப் பற்றி அறியாத மாந்தர்களுக்கு எழுத்து மூலம் அச்ச மூட்டியும், அதிர்ச்சி கொடுத்தும் வருவது எழுத்து நெறியற்ற அநாகரீகச் செயல்!

இந்திய அணுசக்தித் துறைகளின் தகவல்கள்:

1. Atomic Power Plants Performance Reports www.npcil.org [Updated Sep 22, 2003]

2. Kalpakkam Nuclear Site www.igcar.ernet.in [Updated Sep 1, 2003]

3. Bhabha Atomic Research Centre, Bombay www.barc.ernet.in [Updated Sep 19, 2003]

4. Atomic Energy Regulatory Board [AERB] Regulations www.aerb.gov.in [Updated Sep 17, 2003]

4. R. Chidambaram, Former Indian Atomic Energy Commission Report [Sep 20, 2000] http://pib.nic.in/feature/feyr98/fe0798/PIBF2207982.html

5. Dr. Anil Kakodkar, Present Chairman Indian Atomic Energy Commission, IAEA Repot [Sep 17, 2003] http://www.dae.gov.in/gc/gc2003.htm

6. Indian Radiation Safety Division Reports http://www.aerb.gov.in/T/Divisions/RSD/RSD.html

7. Atomic Energy Regulatory Board, Bombay Annual Report [2001-2002] http://www.aerb.gov.in/T/annrpt/annr2k2/annrpt.pdf

*******************

சி. ஜெயபாரதன்

unread,
Nov 9, 2011, 4:58:50 AM11/9/11
to tamizh...@googlegroups.com, tamil...@googlegroups.com, anb...@googlegroups.com, vanna...@gmail.com
பணம் செழித்த சினிமா கட்சிகள் ஆளும் தமிழகத்தின் ஆயிரம் ஆயிரம் சினிமாக் கொட்டகைகள் கொட்டாவி விட்டு மின்சாரக் கட்டில் வெஞ்சாமரம் வீசிக் கொண்டிருக்கும்.

மற்ற மாநிலங்கள் உற்பத்தி பெருக்கி இந்தியருக்கு ஊழியம் அளித்து மென்மேலும் வளமாயிருக்கும்.

கூடங்குளத்தை நிறுத்தி தன் கண்ணைத் தானே குத்திடும் மூடத்தனமான சினிமாக் கட்சிகள் கைவசம் 2000 மெகா வாட் மின்சக்தி உடனே உற்பத்தி செய்ய என்ன இருக்கிறது ?


ஜெயபாரதன்.


++++++++++++++++++++++++++++
 

2011/11/9 Lavanya Sundararajan <lavanya.su...@gmail.com>


2011/11/9 செல்வன் <hol...@gmail.com>


2011/11/9 Lavanya Sundararajan <lavanya.su...@gmail.com>
அணு மின்சாரம் தயாரிக்க செய்யும் அல்லது செய்ய இருக்கும் நிதியில் பாதியை மற்ற ஆதாரங்களில் மூலம் தயாரிக்க உபயோக்கிலாம். நீங்கள் சொல்வது போல 10, 20 வருடங்கள் எல்லாம் ஆகாது. காற்றாலைகள் மூலம், சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் வழி முறைகள் நடைமுறையில் ஏன் இந்தியாவிலேயே இருக்கின்றன.


காற்றாலையை நிறுவலாம். ஆனால் காற்று அடித்தால் தான் அது இயங்கும். வருடத்தில் பல நாட்கள் காற்றாலை சும்மா தான் இருக்கும். காற்றாலை மின்சாரத்தை சேமித்து வைத்து பயன்படுத்த முடியாது.அதனால் காற்றாலை மின்சாரம் நம்பகமானது அல்ல.

நீங்க சொல்றா அதே நம்பகமற்ற மின்சாரம் தான் இந்தியாவின் 5% மின் தேவையை பூர்த்தி செய்யுது. அணு உலை மின்சாரம் பூர்த்தி செய்வது 2.5% கூட இல்லை அதுவும் கூடங்குளம் <0.3% தான் பூர்த்தி செய்யும்.


சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி செய்ய செலவு மிக அதிகம். நிலக்கரியில் ஒரு கிலோவாட்டுக்கு உற்பத்தி செலவு 2 ரூபாய்.சூரியசக்திக்கு 15 ரூபாய்.
 
 அணு சக்தி மின்சாரம் தயாரிக்க ஒரு கிலோவாட்டுக்கு செலவு எவ்வளவுங்க? அணு உலையை மூட எவ்வளவு செலவு ஆகும் என்று யாரும் கணக்கு சொல்ல மாட்டகிறாங்க அதையும் சேர்த்து சொல்லுங்க.
 
இத்தனை பொது மக்களின் எதிர்ப்பை மீறி கிடைக்கும் அந்த 50% மின்வெட்டு குறைப்பொன்றும் அத்தனை பெரிய விசயமில்லை.

அப்ப சரி.மின்வெட்டு இருப்பது பிரச்சனையில்லை என மக்கள் முடிவு செய்தால் அணு உலை வேண்டியதில்லை.கல்பாக்கத்தையும் சேர்த்து மூடிவிடலாம்.என்ன இன்னும் ரெண்டுமணிநேரம் கூடுதலா மின்வெட்டு வரும்.

 
மின் வெட்டுக்கு அணு உலை இல்லாதது மட்டும் காரணமல்ல. இன்னும் நிறைய விசயம் பிண்ணனியில் இருக்கு. ஏகப்பட்ட பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொடுக்கும் மின்சாரத்தை அளவோடு வழங்கி அதை மக்களுக்கு பகிர்ந்து கொடுத்தா போதும்.


இலங்கையில் இருக்கும் சீனா கண்காணிப்பு எந்த நேரத்திலும் போர் நிகழ்ந்தால் முதல் குறி வைக்குமிடம் கல்பாக்கமும், கூடங்குளமுமாகவே இருக்கும். அப்படி சென்னையும், தென் தமிழ்நாடும்  அழிந்தாலும் பராவாயில்லை எங்களுக்கு தற்சமயம் மின்சார தேவை தான் முக்கியம் என்பது எவ்வளவு அபத்தம்.

சீனா, இந்தியா இடையே போர் வந்தால் கல்பாக்கம்,கூடங்குளம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இரு நாடுகளும் அழிந்துவிடும்.இருவரிடமும் ஏராளமாக அணு ஆயுதங்கள் உள்ளன.நேரடியாகவே குண்டு வீசி அழித்துகொள்ளலாம்.

மற்றபடி சீனாவிடம் நூற்றுக்கும் மேற்பட்ட அணு உலைகள் உள்ளன.நம்மிடம் ஏழோ,எட்டோ தான் உள்ளது. கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு யார்தான் கல்லெறிவார்கள்?  

நம்ம மேல குண்டு போடுவான்னு நினைச்சி அவன் போட மாட்டான்னு நினைக்கிறது ஓவர் கான்பிடன்ஸ்
எப்படியும் எப்பாவது சாவு வரத்தானே போகுதுன்னு எதை வேணும்ன்னா செய்ய முடியாதுல்ல
 

--
செல்வன்

"அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி - அதன்
  அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகு என்று பெயரும் இட்டால் - இந்த
பூமி சிரிக்கும், அந்த சாமி சிரிக்கும்"





--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

சி. ஜெயபாரதன்

unread,
Nov 9, 2011, 10:04:16 AM11/9/11
to tamizh...@googlegroups.com, tamilmantram, anb...@googlegroups.com, vanna...@gmail.com
/// அப்ப செத்தவங்களை கணக்கு வச்சி தான் அது பாதிப்புன்னு முடிவெடுப்பீங்க? ம்ம்ம்ம் அப்ப அங்கே இருந்தவர்கள் எல்லோரும் பின் ஏன் வேறு இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டார்கள் மிக வளர்ந்த நாடுகள் எல்லாம் அணு உலைகளை ஏன் மூடுவதாக முடிவெடுத்தது? அங்கே பின்விளைவுகளை தடுக்க போர்க்கால நடவடிக்கை போல செய்யப்பட்ட காரியங்கள் நம் நாட்டில் சாத்தியாமா? ஜப்பானியர்கள் எந்த அணு அபாயத்தையும் சமாளித்து முன்னேறுவார்கள். இந்தியாவில் அது நடக்குமா?  ////

பாதுகாப்பாக வருமுன் காப்பது நல்லதுதானே.   சில நாடுகள் இருப்பதை இயக்கி எதிர்காலத்தில் நிறுத்துவதாக வெறும் அரசியல் அறிவிப்புதான்.,  தமிழ் நாட்டில் தி.மு.க;  அதிமுக போல் கட்சி ஆட்சி மாறினால் கொள்கை தலை கீழாகும்.   விபத்து நேரிட்டால் இந்த பகுத்தறிவுக் கட்சிகள் முதலில் ஒன்றுக்கொன்று  உதவுமா ?

ஜெயபாரதன் 

2011/11/9 Lavanya Sundararajan <lavanya.su...@gmail.com>
2011/11/9 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>


௯ நவம்பர், ௨௦௧௧ ௧:௪௯ முற்பகல் அன்று, Lavanya Sundararajan <lavanya.su...@gmail.com> எழுதியது:

ஜப்பானில் நடந்த நிலநடுக்கத்தில் விடித்த அணு உலையின் பாதிப்பை பார்த்த பின்னும் இப்படி பேசுவது எந்த விதத்தில் சரியென்று தெரியவில்லை.


என்ன பாதிப்பு ஏற்பட்டது லாவணயா? உலைக்கு பாதிப்பு ஏற்பட்டது உண்மை. உயிருக்கு?
எத்தனை பேர் இறந்தார்கள்?

அப்ப செத்தவங்களை கணக்கு வச்சி தான் அது பாதிப்புன்னு முடிவெடுப்பீங்க? ம்ம்ம்ம் அப்ப அங்கே இருந்தவர்கள் எல்லோரும் பின் ஏன் வேறு இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டார்கள் மிக வளர்ந்த நாடுகள் எல்லாம் அணு உலைகளை ஏன் மூடுவதாக முடிவெடுத்தது? அங்கே பின்விளைவுகளை தடுக்க போர்க்கால நடவடிக்கை போல செய்யப்பட்ட காரியங்கள் நம் நாட்டில் சாத்தியாமா? ஜப்பானியர்கள் எந்த அணு அபாயத்தையும் சமாளித்து முன்னேறுவார்கள். இந்தியாவில் அது நடக்குமா?


கூடங்குளத்தில் சுனாமி வந்தால் எத்தனை மக்கள் சுனாமியால் சாவார்கள்? அதுக்கு என்ன பாதுகாப்பு செய்து இருக்கோம்?

எதிர்பார்க்காத இயற்கையாக நடக்கும் அழிவினை, பாதுக்காப்பான ஆபத்தோடு ஒப்பிட வேண்டாமே. சாக தானே போறோம் என்று எதை வேண்டுமானாலும் செய்ய முடியுமா


அணு உலை ஆபத்தானது இல்லை எந்த அறிஞரும் சொல்ல மாட்டார். அதுக்கு தக்க பாதுகாப்புகள் செய்யபப்ட்டு உள்ள என என்பதை நம்ப வேண்டும்.  நீங்க விமான பயணம் மேற்கொள்வது இல்லையா? அது விழுந்தால் என்ன ஆகும்னு எண்ணியது உண்டா?

விமான விபத்தும் அணு உலை விபத்தும் ஒன்றா வேந்தன் அய்யா. இரண்டிலும் உயிர் போகும் ஆனால் அணு உலை விபத்துக்கு பின்னர் எத்தனை தலைமுறைக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும் அந்த அளவுக்கான அபாயத்தை கொண்டாத வேறு எந்த ஆபத்தும்?
 

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

சி. ஜெயபாரதன்

unread,
Nov 9, 2011, 11:01:02 AM11/9/11
to tamizh...@googlegroups.com, tamilmantram, anb...@googlegroups.com, vanna...@gmail.com
/////காற்றாலைகள் இந்தியாவின் 6% மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவு திறன் கொண்டவை.அத்தனை காற்றாலைகள் கட்டபட்டு உள்ளன. ஆனால் அவை உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் அளவு நம் மின் தேவையில் 1.6% மட்டுமே. இன்னும் லட்சகணகான காற்ராலைகளை நிறுவலாம்.ஆனால் அவை சுற்றி, மின்சாரம் வருவது எளிதான விஷயமில்லை.   ////

காற்றாலை மின்சாரம், சூரிய சக்தி மின்சாரம் சிறிதளவு மின்சக்தியை விட்டுவிட்டு உற்பத்தி செய்யும்.

காலை எட்டு மணிக்குத் தொழிற்சாலைகள் நூற்றுக்கணக்கில் துவங்கும்.   பல தொழிற் கூடங்கள் இராப்பகலாய்த் தொடர்ந்து இயங்கும்.  மாலை 5 மணிக்கு சில நிறுத்தம் அடையும்.  மின்சக்தி பரிமாற்றம் தினம் பேரளவில் ஏறி இறங்கும்

இவற்றுக்கு ஏறி இறங்கும் பெரும் சேமிப்புக் குஷ்ஷனுள்ள  அணுமின் சக்திதான் பேரளவில் மின்சாரம் அனுப்ப முடியும்

ஜெயபாரதன்

++++++++++++++

2011/11/9 செல்வன் <hol...@gmail.com>


2011/11/9 Lavanya Sundararajan <lavanya.su...@gmail.com>
நீங்க சொல்றா அதே நம்பகமற்ற மின்சாரம் தான் இந்தியாவின் 5% மின் தேவையை பூர்த்தி செய்யுது. அணு உலை மின்சாரம் பூர்த்தி செய்வது 2.5% கூட இல்லை அதுவும் கூடங்குளம் <0.3% தான் பூர்த்தி செய்யும்.


நான் முன்பே சொன்னதுபோல காற்றாலையை கட்டலாம்.ஆனால் மின்சாரம் உற்பத்தி செய்ய இயலாது.

காற்றாலைகள் இந்தியாவின் 6% மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவு திறன் கொண்டவை.அத்தனை காற்றாலைகள் கட்டபட்டு உள்ளன. ஆனால் அவை உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் அளவு நம் மின் தேவையில் 1.6% மட்டுமே.இன்னும் லட்சகணகான காற்ராலைகளை நிறுவலாம்.ஆனால் அவை சுற்றி,மின்சாரம் வருவது எளிதான விஷயமில்லை.

Wind power accounts for 6% of India's total installed power capacity, and it generates 1.6% of the country's power.[25]



 அணு சக்தி மின்சாரம் தயாரிக்க ஒரு கிலோவாட்டுக்கு செலவு எவ்வளவுங்க? அணு உலையை மூட எவ்வளவு செலவு ஆகும் என்று யாரும் கணக்கு சொல்ல மாட்டகிறாங்க அதையும் சேர்த்து சொல்லுங்க.

ஒரு யூனிட் நிலக்கரி மின்சாரம் தயாரிக்க ஆகும் செலவு 81 பைசா

நெய்வேலி லிக்னைட் மின்சாரம் 82 பைசா

அணுமின்சாரம் யூனிட் ஒன்றுக்கு 88 பைசா.


மின் வெட்டுக்கு அணு உலை இல்லாதது மட்டும் காரணமல்ல. இன்னும் நிறைய விசயம் பிண்ணனியில் இருக்கு. ஏகப்பட்ட பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொடுக்கும் மின்சாரத்தை அளவோடு வழங்கி அதை மக்களுக்கு பகிர்ந்து கொடுத்தா போதும்.


பன்னாட்டு கம்பனிகளை தமிழ்நாட்டுக்கு கொண்டுவர மின்வெட்டு இல்லை என உறுதிமொழி அளிக்க வேண்டி இருக்கிறது.அவற்றுக்கு இலவச மின்சாரம் அளிப்பதில்லை.அனைத்து பன்னாட்டு கம்பனிகளுக்கும் இந்த முறை இல்லை.மகிந்திரா போர்டு போன்ற கம்பனிகளுக்கு தான் இருக்கிறது.அதை அகற்றினால் அவை தமிழ்நாட்டை விட்டு போய்விடும்.கூட அவற்றை நம்பி இருக்கும் சிறுதொழில்,குறும்தொழில் என லட்சகணகான வேலைகளும் போய்விடும்.மின்வெட்டின் கடுமை அதனால் ஒன்றும் பெரிதாக குறையாது. 2 மணிநேர மின்வெட்டு என்பது ஒரு மணிநேரம் ஐம்பத்தி ஒன்பது நிமிஷம் மின்வெட்டாக குறையும்.

நான் பன்னாட்டு கம்பனிகளுக்கு மின்சாரம் வழங்கியே ஆகவேண்டும் என கூறவில்லை.குஜராத்தில் மின்வெட்டு இல்லை.தமிழ்நாட்டில் உள்ளது.நம் அரசுக்கு கம்பனிகளை குஜராத்துக்கு போகாமல் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என ஆசை.அது தவறான ஆசை எனில் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து அதை ரத்து செய்யலாம்.


நம்ம மேல குண்டு போடுவான்னு நினைச்சி அவன் போட மாட்டான்னு நினைக்கிறது ஓவர் கான்பிடன்ஸ்

இல்லை.அதுதான் உண்மை. அணு ஆயுத நாடுகளுக்கிடையே உலகில் இதுவரை போரே வந்ததில்லை. இதுவரை நடந்த போர்கள் எல்லாம் அணு ஆயுதம் இல்லாத இரு நாடுகளுக்கிடையே அல்லது அணு ஆயுதம் உள்ள மற்றும் இல்லாத நாடுகளுக்கிடையே தான் நடந்துள்ளன.கடும் விரோதம் இருந்தாலும் அமெரிக்காவும், ரஷ்யாவும் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுத வலிமை பெற்றபிறகு போரில் இறங்கவில்லை.


--
செல்வன்

"அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி - அதன்
  அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகு என்று பெயரும் இட்டால் - இந்த
பூமி சிரிக்கும், அந்த சாமி சிரிக்கும்"





Govindasamy Thirunavukkarasu

unread,
Nov 9, 2011, 11:27:26 AM11/9/11
to tamil...@googlegroups.com
௮-௧௧-௧௧ அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:

> மீண்டும் கல்பாக்கம் அணுசக்தி பற்றி ஞாநியின்
> தவறான கருத்துகள்!
>
>
> *சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng (Nuclear) கனடா*
>
>
>
> *பாரதத்தில் மின்சாரப் பற்றாக் குறையை நிவர்த்தி செய்வது எப்படி ?*

>
> நூறு கோடி ஜனத்தொகையை மிஞ்சி விட்ட இந்தியாவுக்குப் பற்றாக்குறை மின்சாரம்
> மட்டுமா ? உணவு, நீர், உடை, இல்லம், கல்வி, வேலை, போக்குவரத்து, குடிவசதி,
> சுகாதாரம் போன்ற முக்கியமான துறைகளிலும் பற்றாக்குறைகள் உள்ளன!
இந்தியாவில்

உண்மைதான்.ஆனால் இந்தியாவின் உழவுத்தொழிலிலும் ,தொழில் துறையிலும்,
நுகர்பொருள் வணிகத்திலும் ஆயிரக்கணக்கான கோடிகளை அள்ளிச்செல்லும் பகாசுர
கம்பெனிகள் மட்டும் எப்படி எந்த பறாக்குறைகளும் இல்லாமல்
உள்ளார்கள்.அவர்கலின் கைத்தடிகளும் கால் செருப்புகளும் எவ்வளவு வசதியாக


இருக்கிறார்கள்.

உங்களைப்பொன்றோர் மெத்தப்படித்து வெளி நாட்டில் வேலை செய்து சம்பா
தித்துள்ள பொருட்கள் பத்தாவது வகுப்பைக்கூட தேற் முடியாதவர்கள்
சேர்த்திருக்கும் சொத்தில் ஒரு தூசு என்பதை புரிந்து கொள்ளுங்க்ள். கதவு
திறந்து விட்டவர்கல் இந்தியாவின் பெரும் பணக்காரர்க்ள்.நீங்கள் பேசும்
அறிவியல்-தொழில் நுட்பம் யாருக்கு பயன் படுகிரது என்பது எங்களுக்கு
உறைக்கிறது.

> பற்றாக்குறை மின்சார உற்பத்திக்கு வேண்டிய நிலக்கரி கிடைப்பதில்லை! ஈரான்,
> ஈராக்கிலிருந்து எரிஆயில், எரிவாயு ஆகியவற்றை வாங்கிப் பாரதத்தில் மின்சாரம்
> தயாரித்துப் பெருத்த செலவில் நமது தொழிற்சாலைகளைத் தொடர்ந்து ஓட்ட முடியாது!
> கோடான கோடி இல்லங்களுக்கும் விளக்கேற்ற இயலாது! நீர்வீழ்ச்சி மின்நிலையங்களை
> மேலும் பெருக்க நீர்வளச் செழிப்பும் கிடையாது! காற்றிலிருந்தும், கடல்
> அலைகளிலிருந்தும், மாட்டு சாணத்திலிருந்தும், பரிதியின் வெப்பத்திலிருந்தும்,
> நமக்குத் தேவைப்படும் மாபெரும் 200 MWe, 500 MWe, 1100 MWe மின்சார
> நிலையங்களைக் கட்ட முடியாது! ஆனால் பாரதத்தில் மிகுந்து கிடக்கும்
> யுரேனியத்தைப் பயன்படுத்தி முதற் கட்டத்தில் 50,380,000 மெகாவாட் அணு
> மின்னாற்றலும், தோரியத்தைப் பயன்படுத்தி இரண்டாம் கட்டத்தில் 200,000,000
> மெகாவாட் அணு மின்னாற்றலும் தயாரிக்க நம்மிடம் மனிதத் திறமையும், மூல
> உலோகங்களும், யந்திர சாதனங்களும் நிரம்ப உள்ளன. அணுவியல் துறையகத்தின் முதல்
> அதிபதி, டாக்டர் ஹோமி பாபா திட்டமிட்டது போல், பாரதத்தில் கிடைக்கும் ஏராளமான
> யுரேனியம், தோரியம் மூலகங்களைப் பயன்படுத்தி, இன்னும் பல ஆண்டுகளுக்கு
> இந்தியாவில் அணு மின்சக்தி உற்பத்தி செய்வதைத் தவிர, வேறு வழியே இல்லை!

நீங்கள் சொல்வது மிக மோசமான பொய். உலகில் மிக அதிகமான கால்நடைச்செல்வம்
படைத்தது இந்தியா. தற்போதுள்ள கால்நடைகளோடு ஒவ்வொரு கிராமத்திலும் மேலும்
150 கால்நடைகளை வளர்த்தால் போதும்.இந்தியாவின் முழு மிந்தேவையை அடைய
முடியும்..


>
> *அணு உலைகளில் ஏற்படும் அபாய நிகழ்ச்சிகள், விபத்துகள்.*

> *இந்திய அணுமின் உலைகளைப் பற்றித் தவறான தகவல்கள்!*


>
> அணுசக்தி, இப்போது மின்சாரப் பற்றாக் குறையை ஓரளவு நிவர்த்தி செய்து வருகிறது.
> இயங்கிக் கொண்டிருக்கும் அணுமின் நிலையங்களையும் நிரந்தரமாக ஞாநி விரும்புவது
> போல் நிறுத்தி விட்டால், இந்தியா வெங்கும் இருட்டடிப்பும் [Blackouts],
> பழுப்படிப்பும் [Brownouts] தாண்டவமாடும்! பிறகு அவரது பத்திரிகைகள் கூட
> அச்சடிக்கப் படாமல் ஆபீஸுக்குள்ளேயே தூங்கிக் கொண்டிருக்கும்! 2003 இல்
> இந்தியாவின் பதிமூன்று அணுமின் நிலையங்கள் 2620 MWe மின்சாரம் பரிமாறி
> வருகின்றன. 2012 இல் மூன்று மடங்கு [8100 MWe] அதிகரிக்கத் திட்டங்கள்
> உருவாகி, இப்போது புது அணுமின் உலைகள் கட்டப்பட்டு வருகின்றன. அணுசக்தி மூலம்
> 2020 ஆண்டுக்குள் 20,000 MWe மின்னாற்றலை பாரதத்தில் உண்டாக்க மாபெரும்
> திட்டங்கள் கைவசம் உள்ளன.
>
> கல்பாக்கம் ஞாநி அணு உலைகள் செர்நோபிள் போல் வெடிக்கும் என்றும், அப்படி
> வெடித்தால் சென்னை நகரமே அழிந்துவிடும் என்றும் அணுவியல் கல்வி புரியாமல் தன்
> நுனிப்புல் அறிவில் 2003 ஏப்ரலில் எழுதி, தமிழர் அனைவருக்கும் அச்சத்தையும்,
> பீதியையும் கிளப்பினார்! அதே கட்டுரையில் கல்பாக்க அணு உலைகளில்
> பணியாற்றுவோரும், அவற்றின் அருகில் வாழ்வோரும் புற்று நோயால் தாக்கப்படுகிறார்
> என்ற புரளியையும் உண்டாக்கினார்! அவற்றைத் தவறென்று காட்டித் திண்ணையில்
> எழுதிய கட்டுரைக்குப் பதில் தராமலே ஒளிந்து கொண்டார், கல்பாக்கம் ஞாநி! இந்திய
> அணு உலைகளை நேரில் கண்டு, அணு உலை எதிர்ப்பாளிகள் தம் அறிவைச் செழுமைப்படுத்த
> வேண்டும் என்று கூறிய ஆலோசனைக்கும் அவர் பதிலே அளிக்கவில்லை!
>
> பத்திரிக்காசிரியர் என்று வேடங்கட்டி, கல்பாக்கம் ஞாநி அணுசக்தி பற்றி பூரணப்
> பயிற்சி இல்லாமல், வெறும் அரைகுறை ஞானத்துடன், அணுசக்தியைப் பற்றி அறியாத
> மாந்தர்களுக்கு எழுத்து மூலம் அச்ச மூட்டியும், அதிர்ச்சி கொடுத்தும் வருவது
> எழுத்து நெறியற்ற அநாகரீகச் செயல்!
>

> *இந்திய அணுசக்தித் துறைகளின் தகவல்கள்:*


>
> 1. Atomic Power Plants Performance Reports www.npcil.org [Updated Sep 22,
> 2003]
>
> 2. Kalpakkam Nuclear Site www.igcar.ernet.in [Updated Sep 1, 2003]
>
> 3. Bhabha Atomic Research Centre, Bombay www.barc.ernet.in [Updated Sep 19,
> 2003]
>
> 4. Atomic Energy Regulatory Board [AERB] Regulations
> www.aerb.gov.in[Updated Sep 17, 2003]
>
> 4. R. Chidambaram, Former Indian Atomic Energy Commission Report [Sep 20,
> 2000] http://pib.nic.in/feature/feyr98/fe0798/PIBF2207982.html
>
> 5. Dr. Anil Kakodkar, Present Chairman Indian Atomic Energy Commission,
> IAEA Repot [Sep 17, 2003] http://www.dae.gov.in/gc/gc2003.htm
>
> 6. Indian Radiation Safety Division Reports
> http://www.aerb.gov.in/T/Divisions/RSD/RSD.html
>
> 7. Atomic Energy Regulatory Board, Bombay Annual Report [2001-2002]
> http://www.aerb.gov.in/T/annrpt/annr2k2/annrpt.pdf
>
> *******************
>

> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "தமிழ் மன்றம்" group.
> To post to this group, send email to tamil...@googlegroups.com.
> To unsubscribe from this group, send email to
> tamilmanram...@googlegroups.com.
> For more options, visit this group at
> http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>
>


--
கோ.திருநாவுக்கரசு
உழவன் விடுதலை உலகின் விடுதலை
செம்பியநல்லூர்,அம்மாபேட்டை வழி 614401
திருவாரூர் மாவட்டம்.
பேசி: 9380297522

சி. ஜெயபாரதன்

unread,
Nov 9, 2011, 1:56:29 PM11/9/11
to tamil...@googlegroups.com, தமிழமுதம், anb...@googlegroups.com, vanna...@gmail.com, Anne Josephine, jayashree shankar
நண்பர் திருநாவுக்கரசு,


சாம்பலிலிருந்து சாணி யுகத்தை நீங்கள் புத்துயிர் அளித்து மீட்டு வருவதில் எமக்குத் தடையில்லை

"வீட்டுக்கோர் புத்தகசாலை"  என்று அண்ணாவின் பொன்மொழி.

"வீட்டுக்கோர் மாட்டுக் கொட்டம்" என்று உங்கள் நன்மொழி.

மாடுகள் வளர்ப்பது நகரங்களில் பல்லடுக்கு மாளிகைகளில் வசதிப்படாது.  (மாடுகளுக்கு தனி லிஃப்ட்  வைக்க வசதி செய்ய்லாம்)

மாடுகள் சாணி போடப் போடப் பிடித்து ஓவ்வொரு வீட்டாரும் அள்ளிக் கொண்டு ஊற்றிக் கூடங்குளம் போல் 2000 மெகா வாட் சாணி மின் நிலையம் இயக்கலாம்.   முடியாது என்று நான் சொல்ல மாட்டேன்



சி. ஜெயபாரதன்

++++++++++++++  

2011/11/9 Govindasamy Thirunavukkarasu <gthiruna...@gmail.com>

சி. ஜெயபாரதன்

unread,
Nov 9, 2011, 8:37:54 PM11/9/11
to tamil...@googlegroups.com, தமிழமுதம், anb...@googlegroups.com

Dear Mr Mathan,


There are lakhs of people, the nuclear scientists,engineers,technologists and workers are living with their parents, wife,and children living nearby the nuclear reactors for more than several decades around the world.They are very healthy and comfortable.Nothing happened to them.Don't confuse politics with science. Without science even the politics cannot triumph.

Friendly regards
N.Sithu Muruganandam    

+++++++++++++++++++++++++

2011/11/9 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>

சி. ஜெயபாரதன்

unread,
Nov 10, 2011, 6:03:42 AM11/10/11
to tamizh...@googlegroups.com, tamilmantram, anb...@googlegroups.com, vanna...@gmail.com
இந்தியாவில் 60 ஆண்டுகளாய் அடுத்தடுத்து இயங்கி வரும் 20 அணுமின் உலைகளில் இதுவரை தீவிரக் கதிரடி, மரணக் கதிரடி பெற்றவர் யாருமில்லை.

ஜெயபாரதன்.

++++++++++++  

2011/11/10 செல்வன் <hol...@gmail.com>
உலகிலேயே மிக ஆபத்தான அணு உலை விபத்து செர்னோபில் விபத்து.

அதில் இறந்தவர்கள் எண்ணிக்கை வெறும் 57 மட்டுமே.

அதன் பின்விளைவுகள் 6000 பேருக்கு தைராய்டு கான்சரை உருவாக்கியது.தைய்ராய்டு கான்சர் 96% குணப்படுத்தகூடிய வியாதி.குழந்தைகள் பிறப்பில் எந்த பிரச்சனையும் கண்டறியபடவில்லை.

உலகிலேயே மோசமான அணுவிபத்தின் நிலையே இதுதான்.

சி. ஜெயபாரதன்

unread,
Nov 10, 2011, 6:39:47 AM11/10/11
to tamizh...@googlegroups.com, tamilmantram, anb...@googlegroups.com, vanna...@gmail.com
கடந்த 60 ஆண்டுகளில் நேர்ந்த தீவிர அணுமின் உலை விபத்துகள் பணம் செழித்த கவனம் குறைந்த, மூன்று  பெரிய முன்னேற்ற நாடுகளில்தான் மாபெரும் கதிரியக்கத் தீங்குகள் இழைத்துள்ளன.  

1.  அமெரிக்காவில் திரிமைல் தீவு விபத்து (1979)

2. சோவியத் ரஷ்யாவில் செர்நோபில் (1986)

3.  ஜப்பான் புகுஷிமாவில் நான்கு அணுமின் உலைகள் (2011)



சி. ஜெயபாரதன்

++++++++++++++++++++++++++++++++++++

2011/11/10 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>

சி. ஜெயபாரதன்

unread,
Nov 10, 2011, 11:11:13 PM11/10/11
to tamizh...@googlegroups.com, tamilmantram, anb...@googlegroups.com
புகுஷிமாவின் 4 அணு உலை மேற்கட்டட வெடிப்பில் ஒருவர் கூட மரிக்க வில்லை.  எந்த அணு  உலையும் புகுஷிமாவில் வெடிக்க வில்லை.  பூகம்பம், சுனாமி கோட்டை  அரணில் பாதுகாப்பாய் இருக்கும் அணு உலையை ஒரு பாதிப்பும் செய்ய வில்லை. 


ஜெயபாரதன்.

+++++++++++++++++++++++

2011/11/10 Lavanya Sundararajan <lavanya.su...@gmail.com>


2011/11/11 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>


௧௦ நவம்பர், ௨௦௧௧ ௧௦:௩௦ முற்பகல் அன்று, Lavanya Sundararajan <lavanya.su...@gmail.com> எழுதியது:

அணு உலை வெடித்தால் அங்கே புல் பூண்டு கூட முளைக்காதே, காலத்துங்கும் பிறக்கும் குழந்தைகள் கூட அந்த பாதிப்பு கொண்டே பிறக்குமாமே இந்த பாதிப்புக்கு என்ன பதில் வேந்தன் அய்யா

லாவண்யா

நீங்க அணுகுண்டை சொல்லுறீகளா அணு உலையை சொல்லுறீகளா?

அணு உலை குண்டு போல் வெடிக்காது.


இன்றைய இந்துவில் சயன்ஸ் பக்கத்தில் ராஜா ராமண்ணா ஒரு கட்டுரை வெளி இட்டு இருக்கார். வாசிச்சு ப்பாருங்க

ஒரு 5 அல்லது 6 வருடங்களுக்கு முன்ன வந்த ஒரு திரைப்படத்தில் சொல்லப்பட்டு இருக்காம் அணு உலை ரொம்ப பாதுகாப்பானது, இதனால் ஒரு ஆபத்தும் இல்லைன்ன சொன்னவன் மட்டும் கையில் கிடைச்சான்னு..... அது வெறும் கற்பனை கதை இல்லை என்று சொல்லி விரும்பறேன்.
 

Twenty-five 1,000 MW VVER reactors are in operation in five countries. Kudankulam plants have more advanced safety features

The Unit 1 of the Kudankulam Nuclear Power Project (KKNPP) is under advanced stage of commissioning. Construction of Unit 2 is progressing well. In the meanwhile, sections of the public have expressed apprehensions about the safety of these reactors. Lack of understanding, misconceptions and misinformation contribute to this. Apparently, the Fukushima accident and other issues influence them.

Twenty-five VVER 1,000 MW reactors are in operation now in five countries. Nine more are under construction. The version offered to India is more recent and has more advanced safety features.

Satisfactory

Atomic Energy Regulatory Board (AERB) satisfied itself that the plant is of proven design. Indianspecialists visited Russia and had significant exchange of information from nuclear power plant designers. Indian engineers had completed licensing training process in either Balakova nuclear power plant (NPP) or Kalinin NPP.

The AERB and Bhabha Atomic Research Centre (BARC) and specialists from reputed academic institutions such as the Indian Institute of Technology, Mumbai, the Boilers Board and the Central Electricity Authority have spent over 7,000 man-days in carrying out the safety review and inspection of the Kudankulam reactors.

These system-wise reviews were comprehensive. AERB used relevant documents from the International Atomic Energy Agency (IAEA) and IAEA's peer reviews of VVER for safety assessment of these reactors.

These reactors belong to the Generation 3 + category (with more safety features than Generation 3) with a simpler and standardised design.

The Kudankulam site is located in the lowest seismic hazard zone in the country. The water level experienced at the site due to the December 26, 2004 tsunami, triggered by a 9.2 earthquake was 2.2 metres above the mean sea level. The safety-related buildings are located at higher elevation (SafetyDiesel Generators,9.3 metre) and belong to the highest seismic category and are closed with double sealed, water leak tight doors.

The reactors have redundant, diverse and thus reliable provisions needed to control nuclear reactions, to cool the fuel and to contain radioactive releases. They have in–built safety features to handle Station Black Out.

Besides fast acting control rods, the reactors also have a “quick boron injection system”, serving as a back-up to inject concentrated boric acid into the reactor coolant circuit in an emergency. Boron is an excellent neutron absorber.

Retains radioactivity

The enriched uranium fuel is contained in Zirconium-Niobium tubes. It can retain the radioactivity generated during the operation of the reactor. The fuel tubes are located in the 22 cm thick Reactor Pressure Vessel (RPV) which weighs 350 tonnes. RPV is kept inside a one metre thick concrete vault.

The reactor has double containment, inner 1.2 metre-thick concrete wall lined on the inside with a 6 mm layer of steel and an outer 60 cm thick concrete wall. The annulus between the walls is kept at negative pressure so that if any radioactivity is released it cannot go out. Air carrying such activity will have to pass through filters before getting released through the stack. Multiple barriers and systems ensure that radioactivity is not released into the environment.

KKNPP-1&2 has many new safety systems in comparison with earlier models. The Four-train Safety-System instead of just one system leads to enhanced reliability. The reactors have many passive safety systems which depend on never-failing forces such as gravitation, conduction, convection etc.

Decay heat removal

Its Passive Heat Removal System (PHRS) is capable of removing decay heat of reactor core to the outside atmosphere, during Station Black Out (SBO) condition lasting up to 24 hours. It can maintain hot shutdown condition of the reactor, thus, delaying the need for boron injection.

It works without any external or diesel power or manual intervention.

The reactors are equipped with passive hydrogen recombiners to avoid formation of explosive mixtures .The reactors have a reliable Emergency Core Cooling System (ECCS).

Core catcher

Located outside the reactor vessel, a core catcher in the form of a vessel weighing 101 tonnes and filled with specially developed compound (oxides of Fe, Al & Gd) is provided to retain solid and liquid fragments of the damaged core, parts of the reactor pressure vessel and reactor internals under severe accident conditions.

The presence of gadolinium (Gd) which is a strong neutron absorber ensures that the molten mass does not go critical. The vessel prevents the molten material from spreading beyond the limits of containment. The filler compound has been developed to have minimum gas release during dispersal and retention of core melt.Rat

Fukushima plant spread gloom; the Onagawa plant close to it, in contrast, shut down safely; its gym served for three months as a shelter for those made homeless (Reuters, Oct 21). The plant showed that it is possible for nuclear facilities to withstand even the greatest shocks and to retain public trust.

Kudankulam reactors are more modern and safe. Exercising due diligence, AERB issued clearances to it at various stages. Public may rest assured thatIndian scientists and engineers will operate the reactor safely.AERB shall continue to enforce measures to maintain safe operation of these advanced nuclear power reactors.

The author is Raja Ramanna Fellow, Department of Atomic Energy and can be reached at ksp...@yahoo.co.uk

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
Reply all
Reply to author
Forward
0 new messages