தமிழில் விண்மீன் கூட்டங்களின் பெயர்கள்

1,086 views
Skip to first unread message

C.R. Selvakumar

unread,
Nov 8, 2014, 12:27:58 AM11/8/14
to தமிழ் மன்றம்

தமிழில் விண்மீன் கூட்டங்களின் பெயர்கள்


தமிழ் வழக்கப்படி நில உலகத்தைச் சூழ்ந்துள்ள வானத்தை 12 வீடுகளாகப் பகுத்து ஒவ்வொரு வீட்டிலும் 
இரண்டேகால் விண்மீன் கூட்டங்களை (நட்சத்திரங்ளை) அடையாளமாகக்  கொள்கின்றோம். ஆக  2.25 x 12 = 27 அடையாள விண்மீன் கூட்டங்கள் 360 பாகையில் இருக்கின்றன. 

ஒவ்வொரு விண்மீன் கூட்டத்தையும் நான்கு பகுதிகளாகப் 

(பாதம் ) பகுத்தால் 27 x 4 = 108  பாதங்கள்.
எனவே மந்திரங்கள்  108 என்னும் அடிப்படையில் அமைகின்றன. 

சமற்கிருத, ஆரிய முறைப்படி முன்னர் 28 நட்சத்திரங்கள் இருந்தன.  பின்னர் அவர்கள் தமிழ் முறைக்கு  மாறினர் 

(இதற்குச் சான்று பின்னர் தர வேண்டும்).  

இக்குறிப்பில் இந்த விண்மீன் கூட்டங்களுக்கு அல்லது நட்சத்திரங்களுக்குத் தமிழ்ப்பெயர்கள் என்ன என்பதை 

அறியத் தருகிறேன். ஒருசில சொற்கள் தூய தமிழ்ச்சொற்களாக 
இல்லாமல் இருக்கலாம். சில பெயர்கள் வெவ்வேறு கூட்டத்துக்கும் பயன்பட்டிருக்கின்றன. இவற்றை
அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கின்றேன். ஒவ்வொரு விண்மீன் கூட்டத்தின் பெயரும்  ஒருசிலகருத்துகளின் 
அடிப்படையில் அமைந்துள்ளது. 

  1. அசுவினி = ஆதிமீன், பரிமுகம், முதனாள்,
  2. பரணி = அடுப்பு, முக்கூட்டு, பாகு, தாழி, கிழவன், காடுகிழவோள்,  நடுவனாள், பூதம், வேழம், யாமை, தராசு
  3. கார்த்திகை =  அறுமீன், அறுவாய், அங்கிநாள், அழற்குட்டம், தழல், எரி, அளகு, அளக்கர், ஆல், ஆறாமீன், இறால், நாவிதன்
  4. உரோகிணி = உருள், தேர்,  ஊற்றால், ஐம்மீன், சகடு, சாகாடு, பண்டி, பேராளன்
  5. மிருகசீரிடம் = திங்கள்நாள், இந்து, இந்திரன், ஐந்தானம், ஐந்தவம், நரிப்புறம், மாழ்கு
  6. திருவாதிரை = செங்கை, செம்மீன், துணங்கை, யாழ்
  7. புனர்பூசம் = அதிதிநாள், ஆவணம், எரி, கரும்பு, கழை, பாலை, பிண்டி, புணர்தம், வேய்
  8. பூசம் = குடம், கொடிறு, தை, புசியம், புணர்மீன், வண்டு
  9. ஆயிலியம் =  அரவு, அரவம், அரவினாள், ஆயில், கட்செவி, கவ்வை, கவை, பாம்பு
  10. மகம் =  முற்சனி, ஆதிச்சனி, ஆதியெழுஞ்சனி, எழுவாய்யெழுஞ்சனி, கொடுநுகம், ஞெமலி, மாகம், மாசி, வாய்க்கால், வேள்வி, வேட்டுவன்
  11. பூரம் = எலி
  12. உத்தரம் = பிற்சனி, கதிர்நாள்,மாரிநாள்
  13. அத்தம் (ஹஸ்தம்) = அங்கிநாள்,  கனலிநாள், அத்தநாள், ஐம்மீன், ஐவிரல், கைம்மீன், கைனி, களிறு.
  14. சித்திரை = அம்பரம், அறுவை, ஆடை, சுவை, செவ்வி, துவட்டாநாள், நடுநாள், தூசு, நெய், நேர்வான், பயறு, 
  15. சுவாதி = அனிலநாள், சோதி
  16. விசாகம் = சேட்டை, முற்றில், வியாகம்.
  17. அனுடம் = தாலம், பனை, புள், தாளி, தேள், அனிழம்
  18. கேட்டை = அழல், எரி, செந்தழல்,  தழல், ஒளி, துளங்கொளி, இந்திரன்
  19. மூலம் = ஆனி, கொக்கு, சிலை, தேள்கடை
  20. பூராடம் = உடைகுளம், முறிகுளம், நீர், நீர்நாள், புனல், மாரி, முற்குளம்.
  21. உத்திராடம் = பிற்குளம்
  22. திருவோணம் = அரி,  மாயோனாள், உலக்கை, ஓணம், சோணை, நள், வயிரம்
  23. அவிட்டம் = காக்கை, கொடி, தனிட்டை, விட்டம்\
  24. சதயம் =  குன்று, சுண்டன், செக்கு, சுண்ணம், வாருணி
  25. பூரட்டாதி = இசைநாள், நாழி, நீர், பதம், முற்கொழுங்கால்
  26. உத்திரட்டாதி = நாழிகை, மன்னன், முரசு, அறிவன், பிற்கொழுங்கால்
  27. இரேவதி = கலம், தோணி, பஃறி,  குலம்,  தொழு, சூலம்
சான்று நூல் பட்டியல்
1. தமிழ்க் கழக அகராதி - திருநெல்வேலி சைவ சித்தசித்தாந்த நூற்பதிப்புக்கழகம். 
2. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி
3. சென்னைப் பேரகராதி (MUTL).
4. நிகண்டுகள் (பிங்கலம், திவாகரம்)

செல்வா
நவம்பர் 5, 2014

(முகநூலிலும் குறிப்பாக இட்டுள்ளேன்)

rajam

unread,
Nov 8, 2014, 5:56:25 PM11/8/14
to tamil...@googlegroups.com
அருமையான குறிப்புகள், செல்வா! பகிர்வுக்கு மிக்க நன்றி!

தங்கள் பட்டியலில் (பார்வையாளராகிய நமக்கு) இடப்பக்கம் இருக்கும் பெயர்கள் … “அசுவினி, பரணி … “ போன்றவற்றிற்கும் வலப்பக்கம் இருக்கும் பெயர்கள் … “பரிமுகம், காடுகிழவோள், …” போன்ற பெயர்களுக்கும் இடையே உள்ள தொடர்பை இன்னும் நுணுக்கமாகப் பார்த்தால் பண்டைத்தமிழரின் எண்ணவோட்டம் (thought process) புரியும். 

காட்டாக, “இரேவதி”க்கும் “கலம், தோணி, பஃறி, குலம், தொழு, சூலம்” என்ற இவற்றுக்கும் என்ன தொடர்பு என்று புரியவில்லை. 

நிகண்டுகளைப் பற்றிய தனி ஆய்வு நடக்கவேண்டும். சில பத்தாண்டுகளுக்குமுன் நிகண்டுகள் பற்றிய முனைவர் ஆய்வுக்கட்டுரை ஒன்று என் மதிப்பீட்டுக்கு வந்திருந்தது. மிக நல்ல கட்டுரையாகத் தெரிந்தது. அந்த ஆய்வாளர் மேற்கொண்டு தம் ஆய்வைத் தொடர்ந்தாரா என்று தெரியவில்லை. 

அன்புடன்,
ராஜம்



--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.

C.R. Selvakumar

unread,
Nov 9, 2014, 11:04:44 PM11/9/14
to தமிழ் மன்றம்
அன்புள்ள முனைவர் இராசம்,

உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி.

இத் தமிழ்ச்சொற்கள் எல்லாம் சமற்கிருதப் பெயர்களுடன் தொடர்புடையன அல்ல. ஒருசில
மட்டுமே தொடர்புடையது போல் தெரியும். முகநூலில் ஒரு நண்பர் கேட்ட கேள்விக்குக் கீழே
உள்ள்வாறு மறுமொழியிட்டேன்.  விரிவாகப் பின்னர் எழுதுகின்றேன். நோபலியர் சந்திரசேகர்
அமெரிக்க இயற்பியல் கழகத்த்துக்குத் (American Institute of Physics, AIP) தந்த ஒரு நேர்காணலில், தமிழர்களுக்குத்
தனியான வானியல் கருத்துகளும் முறையும் இருந்ததாகக் கூறியதாக வேங்கடராமன் என்னும் என் நண்பர்
கூறினார் (இவர் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் முனைவர் பட்டம் வாங்கி
இப்பொழுது இந்தியாவில் வாழ்கின்றார்) அவர் கூறிய நேர்காணலின் எழுத்துரையை என்னால்
கண்டுபிடிக்க முடியவில்லை.  அவர் தருவதாகக் கூறினார், ஆனால் பற்பல ஆண்டுகள் போயின.
இங்கே  இதனைக் கூறுவதற்குக் காரணம், இப்படி ஒரு செய்தியை நான் கேள்விப்பட்டேன்
என்பதற்காக மட்டுமே. அதில் உள்ள உண்மையை அறியும் வரை எதுவும் கொள்ளத்தக்கதல்ல. ஆனால்
தமிழர்கள் தனியாக வானியல் மரபுகள் கொண்டிருந்ததற்கு வேறு சான்றுகள் உள்ள்ன. சமற்கிருதத்தில் 
வராகமிகிரர் (கி.பி. 5-6 ஆவது நூற்றாண்டு, சூரிய சித்தாந்தம் 10-12 ஆவது நூற்றாண்டு  
ஆகிய சமற்கிருதவழி வரும் நூல்களில் இருந்து மாறுபட்ட கருத்துகள் தமிழில் உள்ளன 
என்று கருத இடமுள்ளன. கல்வெட்டிலும் சில வானியல் செய்திகள் தமிழில் உள்ளன.). 

தமிழர்களின் வானியல் அறிவும் மரபும் தனியானது. பலவும் அழிந்துவிட்டன. இச்சொற்கள் சமற்கிருதத்தின் மொழிபெயர்ப்புகள் அல்ல. எ.கா.சித்திரை என்னும் நட்சத்திரம் சமற்கிருதத்தில் चित्रा எனப்படும் விண்மீன் கூட்டம். இதன் பொருள் இரிக்கு வேதத்திலே 'conspicuous , excellent , distinguished' என்றும் பிற்கால இலக்கியமாகிய நளன் கதையில் புள்ளியுடையது என்றும் சில பொருள்கள் உண்டு. ஆனால் தமிழ்ப்பெயராகிய அறுவை ஆடை எனபன முற்றிலும் வேறானவை. அறுவை என்னும் சொல் பழங்காலத்தில் துணியையும் ஆடையையும் குறித்தது.
சமற்கிருத சித்ர என்னும் சொல்லுக்குப் பொருளாக மோனிய வில்லியம்சு அகராதி தரும் பொருள்கள் கீழே;
_-------
(H2) चित्र [p= 396,1] [L=73633] mf(/आ)n. conspicuous , excellent , distinguished RV.
[L=73634] bright , clear , bright-coloured RV.
[L=73635] clear (a sound) RV.
[L=73636] variegated , spotted , speckled (with instr. or in comp.) Nal. iv , 8 R. Mr2icch. VarBr2S.
[L=73637] agitated (as the sea , opposed to सम) R. iii , 39 , 12
[L=73638] various , different , manifold Mn. ix , 248 Ya1jn5. i , 287 MBh. &c
[L=73639] (execution) having different varieties (of tortures) Mn. ix , 248 Das3. vii , 281
[L=73640] strange , wonderful Ra1jat. vi , 227
[L=73641] containing the word चित्र्/अ S3Br. vii , 4 , 1 , 24 Ka1tyS3r. xvii
(H2C) चित्रम् [L=73642] ind. so as to be bright RV. i , 71 , 1 ; vi , 65 , 2
[L=73643] in different ways R. i , 9 , 14
[L=73644] (to execute) with different tortures Das3. vii , 380
(H2B) चित्र [L=73645] m. variety of colour L. Sch.
_-----------
ஆகவே தொடர்பில்லை என்பதைப் பாருங்கள். விரிவாக எல்லாவற்றையும் சொல்ல இப்பொழுது முடியாது. சில சொற்கள் ஒத்த கருத்துகள் உடையன. எ.கா. அசுவனி, சுவாதி போன்றவை.

--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

rajam

unread,
Nov 10, 2014, 10:40:48 PM11/10/14
to tamil...@googlegroups.com
அன்புள்ள செல்வா,

தகவலுக்கு மிக்க நன்றி. இளங்கலைக் கணிதவியல் படிப்பில் ஒரு பகுதி வானியல் (astronomy) என்று படித்து … எனக்கும் வானுக்கும் உண்டான தொடர்பு கவிதைக்கும் அப்பாற்பட்டது. 

தமிழருக்கு எனத் தனி வானியல் கோட்பாடு இருந்ததைத் தோண்டி எடுத்துப் புரிந்துகொள்வது நம் கடமை. 

///சித்திரை என்னும் நட்சத்திரம் சமற்கிருதத்தில் चित्रा எனப்படும் விண்மீன் கூட்டம். இதன் பொருள் இரிக்கு வேதத்திலே 'conspicuous , excellent , distinguished' என்றும் பிற்கால இலக்கியமாகிய நளன் கதையில் புள்ளியுடையது என்றும் சில பொருள்கள் உண்டு. ஆனால் தமிழ்ப்பெயராகிய அறுவை ஆடை எனபன முற்றிலும் வேறானவை. அறுவை என்னும் சொல் பழங்காலத்தில் துணியையும் ஆடையையும் குறித்தது.///

“சித்ர” என்ற சொல்லின் தமிழ்ப்பொருள் ("கூறுபாடு") எனக்கு உடன்பாடே. “சித்ரவதை” என்றால் உடலைப் பன்முறையில் கொத்திக் கூறுபடுத்துவது என்று புரிந்துகொள்கிறேன். 

ஆனால், அதுக்கும் சித்திரை என்ற விண்மீனுக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை. “சித்திரை அப்பன் தெருவிலே” என்ற மொழி கேட்டதுண்டு. அதாவது, சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் அப்பன்மார் தெருவிலே திரிந்து அலையும் நிலயை அடைவார்கள் எனபது பொருளாம். 

என்னவோ போங்க. விண்மீன்களும் கோள்களும் என்னைப் போன்ற எளியவர்களைக் குலைத்தால் என்ன செய்ய? நல்ல வேளை நான் பிறந்தது அசுவினியில் — அதனால்தான் குதிரை-போல உழைக்கிறேன்! ;-) 

அன்புடன்,
ராஜம்


--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

--


வேந்தன் அரசு

unread,
Nov 11, 2014, 7:21:05 AM11/11/14
to தமிழ் மன்றம்
ஓவியத்தில், பிள்ளையார் எழுத குரங்கானதுதான் சித்திர வதை.

10 நவம்பர், 2014 10:40 பிற்பகல் அன்று, rajam <ra...@earthlink.net> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்
Reply all
Reply to author
Forward
0 new messages