(தொல்காப்பியமும் பாணினியமும் – முன்னுரை: தொடர்ச்சி)
தொல்காப்பியமும் பாணினியமும்
நூற்குறிப்பு 2
பொருளடக்கம் 5
நூற்பகுப்பு 7
எழுத்ததிகார இயல்கள் 7
சொல்லதிகார இயல்கள் 7
பொருளதிகார இயல்கள் 7
நூற்பாக்களின் எண்ணிக்கை 8
பாணினியின் அ(சு)ட்டாத்தியாயி பிரிவுகள் 9
அட்டாத்தியாயி சூத்திர எண்ணிக்கை 9
பெயர்க்காரணம் 10
நூற்சிறப்பு 10
தொல்காப்பியம் சிறப்பிக்கும் மரபு 11
முதனூல் 12
தொல்காப்பியத்திற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல்லாயிரம் தமிழ் நூல்கள் இருந்தன 13
மிகவும் பழமை வாய்ந்தது தொல்காப்பியம் 13
தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நூல்கள் நமக்குக் கிடைத்தில 14
பாணினியம் முதல் நூலல்ல 14
பாணினியத்தின் காலம் 14
பாணினியத்தின் சிறப்பு?! 14
பதஞ்சலியின் திட்பத்தைத் தன்னுள் கொண்டும் பாணினியின் செறிவுதனைத் தன்னுள் கொண்டும் 16
தொல்காப்பியர் குறிப்பிடும் சொற்கள் யாவும் தமிழே 17
மேனாட்டு அறிஞர்கள் ஆய்வனவற்றை அன்றே தொல்காப்பியர் மேற்கொண்டுள்ளார் 18
விழுமிய நூல் 19
பழந்தமிழர் நாகரிகத்தைப் பேசும் நூல் 19
தொல்காப்பியரைப் பின்பற்றிய யாசுகர் 19
வடமொழி இலக்கண நூலாசிரியர் அறுபத்து நால்வர் என்னும் புரட்டு 20
கணிணி நிரன்மையைத் தொல்காப்பியர் பன்னெடுங்காலத்திற்கு முன்னரே பயன்படுத்தியுள்ளார் 21
உலகம் போற்றும் தொல்காப்பியம் 22
தொல்காப்பியமும், திருக்குறளும் தமிழர்களின் இரண்டு கண்களாகும். 23
உலக அளவில் இலக்கியத்தையும், வாழ்வியலையும் ஒருசேர கூறிய நூல் தொல்காப்பியம் மட்டுமே. 23
கவிதை வாயிலாகத் தொல்காப்பியத்தின் சிறப்பு 23
பொய்யும் வழுவும் தோன்ற வேற்றினத்தார் வருகையே காரணம் 25
முன்னோர் மொழியைப் பொன்போல் போற்றும் தொல்காப்பியர் 26
தொல்காப்பியர் முன்னோரைச் சுட்டும் வகைகள் 26
பாணினியின் வேர்ச்சொல்லாய்வு மிகப்பெரிய மோசடி 28
ஒலியன்கள் 28
அரித்தாட்டில் காலத்திற்குப் பன்னூறு ஆண்டுகட்கு முன்பே நடைமுறையில் இருந்த தமிழ்நெறி 28
மொழியியலின் மீவுயர் பேராசன் 28
இடைச்செருகல்கள் 29
இடைச்செருகல்கள் இருவகை 30
‘தொல்காப்பியம்: முதல் முழு மொழிநூல்’(2019) 31
இடைச்செருகுநர்களின் தோல்விக்கான காரணங்கள் 32
தொல்காப்பியம் – ஒரு கவிதை இலக்கண நூல் 33
காலம் 33
தொல்காப்பியர் திருவள்ளுவருககுக் காலத்தால் முற்பட்டவர் 33
ஆரியர் வரவு 34
உரையாசிரியர்கள் நால்வருண விளக்கங்கள் தொல்காப்பியர் கொள்கைக்கு முரண்பட்டன 35
கருத்துகளை உள்வாங்குதற்கும் மேற்கோளாகப் பயன்படுத்துவதற்கும் துணை நின்ற நூல்கள் 35
(தொடரும்)
தொல்காப்பியமும் பாணினியமும்
இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழை வாழ்த்துவோம்!
“Yellow Ribbons” என்னும் பாடல் மெட்டில் பின்வரும் பாடலைச் சொல்லித் தாருங்கள். கடமைகளை அறிவதுடன் கன்னித்தமிழ் மீதான பற்றினையும் பெறுவார்கள்.
காலை எழுந்ததும் பாடம் படிப்போம்
மாலை முழுவதும் ஆடிக் களிப்போம்
விளையாடிக் களிப்போம்
பாரதி அன்று சொன்னதைக் கேட்டு நடப்போம்!
பாடிஆடி மகிழ்ந்து நாம் கலையை வளர்ப்போம்-தமிழ்க்
கலையை வளர்ப்போம்!
கூடுவோம் ஒன்றாய்க் கூடுவோம்!
பாரதி அன்று சொன்னபடிக் கூடி ஆடுவோம்! – ஒன்றாய்க்
கூடி ஆடுவோம்!
வாழ்த்துவோம்! சேர்ந்து வாழ்த்துவோம்!
நாளும் தொழுது படித்து நாம் தமிழை வாழ்த்துவோம் – நம்
தமிழை வாழ்த்துவோம்!
இலக்குவனார் திருவள்ளுவன்
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 28 August 2025 அகரமுதல
(வெருளி நோய்கள் 321 – 325 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 326 – 330
புனைவுரு இராட்டென்(Rotten) குறித்த வரம்பற்ற பேரச்சம் இராட்டென் வெருளி.
இரக்கமற்ற, பேராசை கொண்ட, சோம்பேறித்தனமான, முட்டாள்தனமான, கிறுக்குத் தனமான வஞ்சகனான அசைவூட்டப் பாத்திரம்.
இத்தகைய இயல்பு உள்ளவர்கள் மீது எரிச்சலும் சினமும் வெறுப்பும் கொள்பவர்களுக்கு இராட்டென் மீது வெருளி வருவது இயற்கைதானே.
00
புனைவுரு இரால்பி தென்னெலி (Ralphie Tennelli) குறித்த வரம்பற்ற பேரச்சம் இரால்பி வெருளி.
இவர் முழுப் பெயர் இரால்பு அலெக்குசாண்டிரோ கியூசெப்பு தென்னெலி(Ralph Alessandro Giuseppe Tennelli) என்பதாகும். தென்னெலி என்பது முன்பு தின்னெலி(Tinelli) என அழைக்கப்பட்டது.
வாக்கர்வில் (Walkerville) தொடக்கப்பள்ளியில் திருமதி ஃபியோனா ஃபிரிசிலின்(Fiona Frizzle) வகுப்பில் படிக்கும் மாணவி.
இரால்ஃபிக்கு விளையாட்டு, பகற்கனவு காண்பது, தூக்கத்தில் உரத்துக் குறட்டை விடுவது பிடிக்கும். இவையெல்லாம் பிடிக்காதவர்களுக்க இரால்ஃபி மீது வெருளி ஏற்படுகிறது.
00
பருமைப்பல்லியின் தோற்றம் கொண்ட புனைவுரு இரிஃபி(Riff) மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் இரிஃபு வெருளி.
இரிஃபு என்பது பருமைப் பல்லியைக் குறிக்கும்.(Hadrosaurid – hadrளs என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் பருமனான, தடித்த saணra – பல்லி)
மொராக்கோ நாட்டிலுள்ள இரிஃபு மாவட்டத்திலுள்ள தொல்பழங்குடியினர் பெயரும் இஃரிபுதான்.இரிஃபு என ஓர் இசைவகையும் உள்ளது. ஆனால் இவற்றிற்கும் இதற்கும் தொடர்பு இல்லை.
00
இரு நாழி குப்பி குறித்த வரம்பற்ற பேரச்சம் இரு நாழி குப்பி வெருளி.
அளவைக்கலனான நாழி(இலிட்டர்) இரண்டு கொண்ட கொள்ளளவு உடைய குப்பி மீது ஏற்படும் பேரச்சம்.
படி என்பதன் மறு வழக்காகப் படி என்றும் சொல்லப்படுகின்றது. நாழி என்பதைச் சிலர் காற்படி என்றும் சிலர் அரைப்படி என்றம் குறிப்பர். சாமபசிவம் மருத்துவ அகராதி 5 ஆழாக்கு கொண்டது நாழி; 8 ஆழாக்கு கொண்டது 1 படி எனக் குறித்துள்ளது. இங்கு 2 ‘இலிட்டர்’ அளவு கொண்ட குப்பியைக் குறிப்பதால் மருத்துவ அகராதியின் படி நாழி என்பதைக் குறிச் சொல்லாகக் கொண்டு இருநாழி எனக் குறிக்கப்பட்டது.
00
இரட்டை நோக்கி குறித்த வரம்பற்ற பேரச்சம் இரு நோக்கி வெருளி.
இரு நோக்கி என்றால் இரு நோக்கிகள் எனப் பொருள் அல்ல. இரட்டை நோக்கி எனப் பொருள் கொள்ள வேண்டும்.
இரட்டை என்னும் பொருள் கொண்ட பைனசு(bīnus) என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து உருவானதே பைனா
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
வெருளி அறிவியல் தொகுதி 1/5