--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
திரு இராம்கி அறிந்துதான் எழுதியிருப்பார் என எண்ணுகி்.றேன். சீவக சிந்தாமணி 995 ஆம் பாடல் வருமாறு( குணமாலையார் இலம்பகத்தில்) :
கலத்தல் காலம் கல்லூரி நல் கொட்டிலா
முலைத் தடத்து இடை மொய் எருக் குப்பையா
இலக்கம் என் உயிரா எய்து கற்குமால்
அலைக்கும் வெம் சரம் ஐந்து உடையான் அரோ
எனினும் இந்த இடத்தில் வில்வித்தை பயிற்றுவிக்கும் படைக்கல்லூரிதான் குறிக்கப் பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் அகராதியில் கல்விஊரி என்றால் கல்லூரி எனக் குறிக்கப் பெற்றுள்ளது.
ஊரி என்பதற்கு இளமை என்றும் பொருள் உள்ளது. கல்வி பயிலும் இளைஞர்கள் இருக்குமிடம் கல்லூரி எனப் பெற்றது போலும்.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
அதே பேரகராதி மற்றொரு பொருளாக
, n. < ஊர் + ஆள்-. An official who superintends the village affairs; ஊராட்சி செய்யும் ஓர் அதிகாரி. (T. A. S. iv, i, 10.
என்று குறிக்கின்றது. இதன்படியும் கல்வி கற்கின்ற, ஆட்சி நடைபெறுகின்ற இடம் என்றும். கல்வியாளர்கள் (கல்வி ஆட்சியர்) இருக்கும் இடம் என்றும் ஆகுபெயராக இருக்கவும் வாய்ப்புகள் இருப்பதாகக் கருதுகின்றேன்.
இவை என் மேலோட்டமான கருத்துகள் மட்டுமே.
வேந்தன், பள்ளி என்பதும் சேர்ந்து கற்கும் இடம் என்னும் பொருள் கொண்டது என்று கருதுகின்றேன்.
பள்ளு பாடுதல் என்பதும் இங்கு கருதத்தகது. பள்ளி என்பது படுக்கும் இடம் மட்டும் அன்று. அது
சேரும் இடம் (ஆண் பெண் கூட்டமாக இருப்பினும், பலர் சேர்ந்து உறையும் இடமாக இருப்பினும்).
ஊருக்குப் பள்ளி என்பது சேர்ந்திருக்கும் இடம் என்பதால் ஏற்பட்டது எனப்து என் கருத்து. பள்ளிவாசமல் என்பதும்
பலர் சேர்ந்து தொழுகை செய்யும் இடம். இல்லறம் என்பதற்கே "சேர்தல்" கூடி வாழ்தல் என்னும் உட்பொருள் உண்டு.
தொழு என்றாலும் சேர்ந்து இருத்தல். தொழுவம் என்றால் மாடுகள் சேர்ந்திருக்கும் இடம். தொழுதெழுவாள் என்றால்
சேர்ந்து உள்ளெழுவாள் என்று பொருள்.. போதுமான நேரம் இல்லாததால் விரித்து எழுத இயலவில்லை...
ஆனால் என் கருத்துப்போக்கை உணர இவை உதவும் என்று கருதுகின்றேன்.. பின்னர் எழுதுகின்றேன்..
அன்புடன்
செல்வா
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
கல்வி என்பது கல்லிலிருந்துத் தொடங்கியதே!