
[1869-1948]
சி. ஜெயபாரதன், கனடா
அறப்போர் புரிய மனிதர் உனக்கு
ஆதரவு தரவில்லை யெனின்
தனியே நடந்துசெல் ! நீ
தனியே நடந்துசெல் !
இரவீந்திரநாத் தாகூர்
பூமியில் பிறந்த எவனும் மரணத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. மரணம் நம் எல்லாருக்கும் நண்பன். நமது நன்றிக்கு உரியது. எனென்றால் அது எல்லா விதத் துயர்களிலிருந்தும் நமக்கு விடுதலை அளிக்கிறது.
மகாத்மா காந்தி
முடிவிலாக் கீர்த்தி பெற்றார்! புவிக்குள்ளே முதன்மை யுற்றார்!
கி.மு.399 இல் கிரேக்க வேதாந்த ஞானி சாக்ரெடிஸ் [Socrates] எழுபதாவது வயதில் விஷம் ஊட்டப் பட்டுத் தன் இனத்தாரால் கொல்லப் பட்டார்! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏசு நாதர் தன் இனத்தாரால் காட்டிக் கொடுக்கப் பட்டு, ரோமானியரால் சிலுவையில் அறையப்பட்டு செத்து மடிந்தார்! அடிமை வாழ்வு ஒழித்த ஆப்ரகாம் லிங்கன் 1865 ஆண்டில் அமெரிக்கன், ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் சுடப்பட்டு உயிர் இழந்தார்! ஆ·ப்ரிக்க அமெரிக்கர் விடுதலைப் பிதா, மார்டின் லூதர் கிங் வெள்ளைக்காரன் ஒருவனால் 1968 இல் சுடப்பட்டு மாண்டார்! மகாத்மா காந்தி 1948 ஜனவரி 30 ஆம் நாள் மாலை 5 மணிக்குப் பிரார்த்தனைக்குச் செல்லும் வழியில் இந்து மத வெறியன் ஒருவனால் கண்முன் நேரே சுடப்பட்டு “ஹே ராம்” என்று முணங்கிய வண்ணம் மடிந்தார்!
உலக வரலாறு மீண்டும் மீண்டும் மீள்கிறது [History repeats again & again]! பல நூற்றாண்டுகளுக் கிடையே அந்த நான்கு பேர் வாழ்ந்த போதிலும், மனிதரால் கொல்லப்பட்ட அவர்களிடம் ஒளிர்ந்த ஓர் அரிய ஒற்றுமை என்ன ? அனைவரும் மனிதப் பணிபுரிந்த உயர்ந்த மனிதாபிமானிகள்! ஆயுள் உள்ள போது சாதித்ததை விட, அவர்கள் மரணத்தின் பின் உலகுக்குப் போதித்தவை, பிரமிக்கத் தக்கவை!
ஏசு மகான் சிலுவைச் சின்னம் இமயத்தளவு ஓங்கி வளர்ந்து, உலகிலே மாபெரும் கிறிஸ்துவ மதம் பரவ ஆணிவேரானது. மார்டின் லூதர் கிங் அமெரிக்காவின் மகாத்மா வானார்! மகாத்மா காந்தியைப் பற்றி, ‘முடிவிலாக் கீர்த்தி பெற்றாய்! புவிக்குள்ளே முதன்மை யுற்றாய்!’ என்று மகாகவி பாரதியார், காந்தி உயிரோடுள்ள போதே போற்றிப் புகழ்ந்தார். அவரது அமர வாக்கு காந்தியின் மரணத்துக்குப் பின், எத்தகைய மெய்மொழியாய் ஆகி விட்டது! ஆனால் கொலை மரணத்தில் இறந்தவர் எல்லோரும் முடிவில்லாக் கீர்த்தியும், புவிக்குள் முதன்மையும் அடைவ தில்லை! அந்தக் கோணத்தில் பார்க்கும் போது, கொலை செய்யப் பட்ட இந்திரா காந்தியும், அவரது மகன் ராஜீவ் காந்தியும், மகாத்மா காந்தியின் உன்னத மகிமையைப் பெற வில்லை!
அகால மரணத்திற்கு அபூர்வ இரங்கல் அறிவிப்புகள்!
மகாத்மாவின் மரணச் செய்தியைக் கேட்டு 1948 ஜனவரியில், “அகில உலகும் இந்தியாவுடன் சேர்ந்து வருந்துகிறது” என்று அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் அவலச் செய்தி அனுப்பி யிருந்தார். காந்தியின் முதற்போர்க் களமாகிய தென் ஆப்பிரிக்காவி லிருந்து, அவரை வெறுத்த தளபதி ஜான் ஸ்மட் “நம்முடன் இருந்த ஓர் இளவரசர் பிரிந்து விட்டார்” என்று ஒரு புகழுரையை அனுப்பினார். இத்தாலியில் வாட்டிகன் போப் பாண்டவர் பையஸ் XII தனது இரங்கல் மொழியில், “கிறிஸ்துவ மதத்தின் நண்பர், சமாதானத்தின் சீடர் ஒருவர் மறைந்தார்” என்று எழுதி யிருந்தார். சைனாவும் இந்தோனேசியாவும், “ஆசிய விடுதலையின் முதல் மூல கர்த்தா மாண்டார்” என்று கூறி அதிர்ச்சி அடைந்தன.
ஒன்றான பாரதத்தைத் துண்டு படுத்திய அரசியல் போட்டியாளர் மகமதலி ஜின்னா, தன் இரங்கல் உரையில், “இந்து இனம் உண்டாக்கிய உன்னத மனிதருள் ஒருவர், காந்தி” என்றார். மரணச் செய்தி கேட்டு, இங்கிலாந்தில் லண்டன் மக்கள் கண்ணீர் விட்டனர். காந்தியைப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் அவர்கள் நேராகப் பார்த்ததை நெஞ்சம் மறக்க வில்லை! உலக மகா யுத்தம் முடிந்த தறுவாயில் பல சம்பவங்களைக் கேட்ட பிறகு அவர்களை நிலைகுலையச் செய்த நிகழ்ச்சி காந்தியின் கோர மரணம்! காந்தியை வெறுத்த வின்ஸ்டன் சர்ச்சில், வருந்தற் கடிதம் அனுப்பி யிருந்தார். எல்லாருக்கும் மேலாக, நாடக மேதை பெர்னாட் ஷா கூறியது, சிந்திக்க வைப்பது ! “நல்லவராக இருப்பது எவ்வளவு ஆபத்தானது என்று காட்டுகிறது, காந்தியின் மரணம்” என்று ஷா கூறினார். ஜவஹர்லால் நேருவின் சகோதரி விஜய லட்சுமி பண்டிட், மாஸ்கோவில் புதிதாகத் திறக்கப் பட்ட இந்திய எம்பஸியில் வருந்தல் பதிவுப் புத்தகத்தை எடுத்து வைத்தார். ஆனால் ஸ்டாலின் வெளித்துறை உறுப்பினர் ஒருவர் கூடத் தன் பெயரை எழுதிக் காந்தியின் மரணத்துக்கு வருத்தம் தெரிவிக்க வில்லை!
நேர்வழி எதுவெனத் தெரிந்தபின் செய்யாமல் நழுவுவது கோழைத்தனம்
இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை சமயத்தில், மனைவிமார் காமப் பலாத்காரத்திற்கு இரையாகும் போது, குழந்தைகள் கண்முன் கொலை செய்யப்படும் போது, உறவினர் தலைகள் சீவப்படும் போது, பழிவாங்க ஆய்தமோடு ஓடும் இந்துக்களைத் தடுத்துப் பொறுக்குமாறு, காந்தி அகிம்சா வேதம் போதித்தார். “அகிம்சா வழித் தூதரே! சொல்லுங்கள்! எப்படி இந்த நரகத்தில் வாழ்வது ? பஞ்சாபில் இந்துக்களைக் கண்டதும் முஸ்லீம் ஆட்கள் கொலை செய்யும் போது, ஆயுதத்தைக் கைவிட நீங்கள் எப்படிச் சொல்லலாம் ? கசாப்புக் கடை ஆடுகளைப் போல எங்கள் தலைகள் அறுபட்டுக் கூறுபட வேண்டுமா ?” என்று புலம்பெயர்ந்த கூட்டத்தார் யாவரும் கத்தினார்கள்! “காந்தி சாகட்டும்” என்று கூச்சலிட்டார்கள்!
டெல்லியில் வாழும் காந்தியின் முஸ்லீம் நண்பர்கள், “உயிருக்கு ஆபத்து என அறிந்தும் இந்தியாவிலே தங்குவதா ? அன்றி எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் பாகிஸ்தானுக்கு ஓடுவதா ?” என்று கேட்டால், “ஓடிப் போகாமல் தங்கி மரண ஆபத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்பது காந்தியின் பதிலாக இருந்தது! போகப் போக, காந்தியின் அறிவுரை, அவரைப் பின்பற்றியவருக்கும் பிடிக்க வில்லை! எப்போதும் இஸ்லாமியருக்குப் பரிந்து, அவர் பேசுவது பலருக்கு வெறுப்பூட்டின!
“முஸ்லீம்களுக்குப் பகைவன் எவனோ, அவன் இந்தியாவுக்கும் பகைவன். இந்தியா, பாகிஸ்தான் இரண்டிலும் ஒருங்கே அமைதி நிலவட்டும். நாம் ஒருவரை ஒருவர் பகைவராக எண்ணக் கூடாது. இந்துக்கள் குர்ரானைப் படிக்க வேண்டும். முஸ்லீம் பகவத் கீதையின் உட்பொருளை அறிய வேண்டும். நமது மதத்தை நாம் மதிப்பதுபோல், மற்றவர் மதங்களையும் மதிக்க வேண்டும். உயர்ந்த கருத்துக்கள் உருது மொழியில் இருந்தா லென்ன ? சமஸ்கிருதத்தில் இருந்தா லென்ன ? பார்ஸி மொழியில் இருந்தா லென்ன ? அவை எல்லாமே மெய்யான மொழிகள் தான்! நமக்கும் உலகுக்கும் கடவுள் நல்லறிவைத் தரவேண்டும்.” இவை காந்தியின் அழுத்தமான வார்த்தைகள்.
காந்தியைக் கொல்ல பலவிதச் சதிகள்
காந்தி இஸ்லமியருக்குப் பரிந்து பேசுவது, சிலருக்கு வேப்பங் காய்போல் கசந்தது! மகாராஷ்ட்ராவில் ராஷ்ட்ரிய சுவய சேவா சங்க [R.S.S.S] உறுப்பினர் பலருக்கு எட்டிக் காயாய் இருந்தது. அவர்கள் தூய இந்துக்கள்; மத வெறியர்கள். குறிப்பாக பூனாவைச் சேர்ந்த நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகிய இரு வாலிபருக்கு காந்தி பகைவரானார்! தென் ஆப்பிரிக்காவில் வேலை முடிந்து 1915 இல் பாரதம் திரும்பிய காந்தியை, விடுதலைப் போராட்டத்திற்கு இழுத்து வந்தவரும், ஒரு மராட்டியரே; அவர்தான் கோபால கிருஷ்ண கோகலே! 1948 இல் சதி செய்து அவரைக் கொன்றவனும் ஒரு மராட்டியனே! அவன்தான் நாதுராம் விநாயகக் கோட்சே! முதலில் கோட்சே முழுக்க முழுக்க காந்தியை பின்பற்றினான்! 1937 இல் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டு, கைதி செய்யப் பட்டுச் சிறைக்குச் சென்றவன், கோட்சே! பிறகு கொள்கை பிடிக்காமல் அவரை விட்டுவிட்டு ராஷ்ட்ரிய சுவய சேவா சங்க இந்து போராட்டத் தளபதி வீர சாவர்க்கரைப் பின் பற்றினான். வீர சாவர்க்கர் இந்து மதத்தைக் காக்க வந்த கடவுளின் தூதராகப் போற்றப்படும் ஒரு பட்டாளிய இந்து [Messiah of Militant Hindu]. சாவர்க்கர் காந்தியின் கொள்கை எல்லாவற்றையும் எதிர்க்கும் ஓர் எதேச்சை அதிகாரி! மெளண்ட் பாட்டன் தனது இந்தியப் பிரிவினைத் திட்டத்தை, 1947 ஜூலை 3 இல் வெளியிட்ட போது, அதைப் ‘பாரதத்தின் இருண்ட நாள்’ என்று பறை சாற்றி, வீர சாவர்க்கர் தனது பூரண எதிர்ப்புத் தெரிவித்தார்!
40 கோடி [1948] இந்திய மக்களின் விதி, அப்போது காந்தியின் கையில் இருந்தது! பாரதக் கண்டம் இரு துண்டமாக வெட்டுப்படப் போவதை காந்தி எப்போதும் எதிர்த்தார்! ‘என் இறந்த உடம்பு மீதுதான், இந்தியா பிரிவுபட வேண்டும் ‘ என்று வெகுண்டார். ‘இந்தியா பிளவு பட்டால் ஒழிய, இந்து முஸ்லீம் தனித் தனியே சமரசமாய் வாழ முடியாது’ , என்பது வைஸ்ராய் மெளண்ட் பாட்டனின் உறுதியான எண்ணம். நேரு, வல்லபாய்ப் படேல், ராஜாஜி ஆகியோர் மூவரும் இந்தியா இரண்டாய்ப் பிரிவதைத் தவிர வேறு வழியில்லை என்று காந்தியுடன் வாதாடினர்.
காந்தி பாரதப் பிரிவினைப் போராட்டத்தில் தோல்வி அடைந்தார்! ‘இந்தியா இரண்டாகப் பிளக்கப் பட்டது. ஆனால் காந்தி உயிரைப் போக்கிக் கொள்ள வில்லையே’ என்று கோட்சே ஆங்காரம் அடைந்தான். ‘காந்தியின் அகிம்சா வேதம், இந்து மக்களைக் கோழையாக்கி, எதிர்க்கும் சக்தியை இழக்க வைத்து, எதிரிகள் முன் மண்டியிடச் செய்து விட்டது! மானத்தைக் காக்க இந்து மாதர்கள், காம பலாத்கார வேதனையிலிருந்து தப்பிக் கொள்ள, கிணற்றில் குதித்துத் தம் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்! பலியானப் பெண்களுக்கு அது ஒரு வெற்றி, என்று காந்தி அவர்களது சாவைப் பாராட்டுகிறார்! அப்படிப் பலியாகும் மாதர்களில் ஒருத்தி, அடுத்து என் தாயாக இருக்கலாம்’ என்று கொதித்தான் கோட்சே! ‘பாரத மாதாவின் சதையைப் பசிக் கழுகுகள் உயிரோடு கிழிக்கின்றன! நம் பெண்டிர் நடுத் தெருவில் கற்பழிக்கப் படுவதை, காங்கிரஸ் அலிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன! எத்தனை காலம் பொறுப்பது ? இதற்கு ஒரே முடிவு, காந்தியைக் கொல்ல வேண்டும்’ என்று கொதித் தெழுந்தான் கோட்சே. இந்து மகா சபையில் காந்தியைக் கொல்ல பலவித சதித் திட்டங்கள், வீர சாவர்க்கர் தலைமையில் உருவாகின! குழுச் சதியாளர்கள்: நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே, கோபால் கோட்சே, விஷ்ணு கார்காரே, மதன்லால் பாவா, இன்னும் சிலர்.
மகாத்மா காந்தியின் இறுதி உண்ணா விரதம்
பாரதப் பிரிவினை ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு ஈடாகத் தர வேண்டிய 55 கோடி ரூபாயை, பாரத அரசாங்கம் பிடித்து வைத்துக் கொள்ளப் போவதை, காந்தி அறவே வெறுத்தார். அவரது எதிர்ப்புத் தர்க்கம் நேருவையும், படேலையும் உடன்பட வைக்க முடியவில்லை! இறப்பதற்கு 17 நாட்களுக்கு முன், 1948 ஜனவரி 13 ஆம் தேதி காந்தி, அதற்காகத் தான் உண்ணா விரதத்தைத் தொடங்கப் போவதாக, பிர்லா மாளிகையிலிருந்து அறிவித்தார். ஓராண்டுக்கு முன்பு இந்து முஸ்லீம் படுகொலைக் கலகத்தை நிறுத்த, காந்தி நெளகாலி நோக்கித் தனியாகத் தைரியமாகப் பாத யாத்திரை செய்தார். அப்போது ரவீந்திர நாத் தாகூரின் ஒரு பாடலைப் [தலைப்பில் உள்ளது] பாடிக் கொண்டு தன் உண்ணா விரதத்தைத் துவங்கினார்.
சில நாட்கள் கழித்து இந்தியாவின் எல்லை மாநிலத்திலிருந்து, பாரதப் பிரிவினைக் கலகத்தில் பாடுபட்ட சில இந்துகளும், சீக்கியர்களும் கூக்குரலுடன் காந்தியைக் காண வந்தனர். ஆறுதல் மொழி கூறு வந்த காந்தியை, அவர்கள் யாவரும் உடனே திட்ட ஆரம்பித்தனர்! ‘இதுவரை எங்களைக் கொடுமைப் படுத்தியது போதும். முற்றிலும் எங்களை நாச மாக்கி விட்டார்! எங்களைத் தனியே வாழ விடு! இமயத்தில் போய் ஓய்வெடு! ‘ என்று காந்தியை நோக்கிக் கூச்சல் போட்டனர். இக்கடுஞ் சொற்கள் காந்தியின் நெஞ்சை ஊடுருவித் தாக்கின! அவற்றைக் கேட்டு கற்சிலையாய் நின்று விட்டார், காந்தி! அவரது மெலிந்த மேனி மீது ஒரு பெரிய பாறாங்கல் விழுந்து எலும்பு நொருங்கியது போல் உணர்ந்தார்! பிறகு சில நாட்கள் சென்றபின் வேறு ஒரு கூட்டம் வந்து, உண்ணா விரதத்தை நிறுத்துமாறுக் காந்தியைக் கெஞ்சியது. அந்தக் கூட்டத்தில் இஸ்லாமியர், சீக்கியர், இந்துக்கள் எல்லா இனத்தவரும் இருந்தனர்.
‘இந்தியாவுக்கு அகிம்சா வழி இனி தேவை இல்லை என்றால், நான் இங்கு உயிர் வாழ்வதிலும் பயனில்லை! பாரதத்தின் தலைவர்கள் ஒருநாள், இந்தக் கிழவனால் நாம் பட்டது போதும்! நம்மை விட்டு அவன் ஒழிந்து போக மாட்டானா ? என்று கூறினால் கூட நான் ஆச்சரியப் படமாட்டேன்’ என்று காந்தி ஒருதரம் சொல்லி யிருக்கிறார்.
மெளண்ட் பாட்டன் தம்பதியர் உண்ணா விரதத்தில் கிடந்த காந்தியைக் காண வந்தனர். ‘மலையை மகமதிடம் கொண்டு வர, நான் ஓர் உண்ணா விரதம் எடுக்க வேண்டி யிருக்கிறது! ‘ என்று காந்தி நகைப்பூட்டி அவர்களை வரவேற்றார். காந்தியின் மெலிந்து போன உடலைக் கண்டு, எட்வீனா பாட்டன் கண்களில் நீர் பெருகியது! ‘வருத்தப் படாதே, எட்வீனா, காந்தி எதைச் செய்ய விரும்புகிறாரோ, அதைச் செய்து கொண்டிருக்கிறார். அவர் மிகுந்த மனத்திட முடைய மெலிந்த மனிதர்’, என்று மனைவியைத் தேற்றினார் மெளண்ட் பாட்டன்.
கோபால் கோட்சே, தன் அண்ணன் நாதுராம் கோட்சேயிக்குக் கொடுத்த வாக்குப்படி, ஜனவரி 17 ஆம் தேதி காந்தியைக் கொல்ல .32 காலிபர் கைத் துப்பாக்கியுடன், டெல்லிக்கு வந்தான். ஆனால் அன்று அதை நிறைவேற்ற அவனால் முடியவில்லை!
கடேசியில் பெற்ற காந்தியின் வெற்றி!
இறுதியில் பாரத அரசாங்கம் 55 கோடி ரூபாயைப் பாகிஸ்தானுக்குக் கொடுக்க முன் வந்தது! காந்தி ஜனவரி 18 ஆம் தேதி உண்ணா விரதத்தை நிறுத்தினார். அன்றைய பிரார்த்தனை சொற்பொழிவில் நேரு பேசினார், ‘இந்திய விடுதலை நான் கண்ட ஓர் ஒளிக்காட்சி! ஆசியாவின் எதிர்காலத்தை என் மனதில் வரைந்து வைத்தேன். ஆனால் அந்த ஒளிக்காட்சியை அளித்தவர் ஓர் அரிய, எளிய மனிதர்! அவரைக் காப்பாற்றச் செய்யும் எந்தத் தியாகமும் அத்தனை பெரியதல்ல! அவர் ஒருவர்தான் நம்மை மெய்யானக் குறிக்கோளை நோக்கி நடத்திச் செல்ல முடியும். அது நம் குருட்டு நம்பிக்கை இல்லை!’
அன்று கூட்டத்தில் காந்தி பேசினார், ‘பாரத நாடு இந்துக்களுக்கு மட்டுமே! அதுபோல் பாகிஸ்தான் இஸ்லாமியருக்கு மட்டுமே! என்று கூறுவது போல் முட்டாள்தனமான எண்ணம் எதுவும் இருக்க முடியாது! இந்தியா, பாகிஸ்தான் இரண்டையும் ஒருங்கே சீர்திருத்துவது என்பது மிகவும் கடின மானது! ஆனால் நாம் மனம் வைத்து செய்தால், எதுவும் நிச்சயமாக முடியும்!’
1947 ஜனவரி 20 ஆம் நாள் மிகப் பலவீனமுள்ள காந்தியை, பிர்லா மாளிகைப் பிரார்த்தனை மேடையில் ஒரு நாற்காலியில் வைத்துக் கொண்டு போய் அமர்த்தினர்! அப்போது இந்து மகா சபைச் சதியினர் கொலை ஆயுதங்களோடு கூட்டத்தினுள் நுழைந்தனர். மதன்லால் பாவா பற்ற வைத்த கைவெடி எதிர் பாராதவாறு கூட்டத்தில் வெடித்தது. ஆனால் காந்தி உயிர் தப்பினார். போலீஸ் பாவாவைத் தேடிப் பிடித்துக் கைதி செய்தனர்.
காந்தி இறப்பதற்கு முந்திய நாள் [ஜனவரி 29, 1948] வியாழக்கிழமை, அவர் அணு ஆயுதங்களைப் பற்றி இந்திரா காந்தியிடம் கூறியது: ‘அணுகுண்டை ஒருங்கே அமெரிக்கா தவிர்க்க வேண்டும். அகிம்சா வழிப் போராட்டம் ஒன்றை மட்டும் அணு குண்டுகள் அழிக்க முடியாது! அணுகுண்டு நம்மைத் தாக்கும் போது, அச்சமின்றி நிமிர்ந்து நின்று மேல் நோக்கிப் பார்த்து, விமானிக்காகப் பிரார்த்திக்க வேண்டு மென்று, என்னைப் பின்பற்று வோரிடம் நான் கட்டாயப் படுத்துவேன்.’ மற்றும் ஒரு சமயம், ‘அகிம்சா இயக்கம் ஒன்றுதான் மனித இனத்தின் கைவசமுள்ள மாபெரும் சக்தி பெற்ற ஓர் ஆயுதம். பேரழிவுச் சக்தியுடைய எந்த யுத்த ஆயுதத்தையும் விட பெரியது, அது!’ என்று சொல்லியிருக்கிறார்.
இரண்டாம் தடவை ஜனவரி 30 ஆம் தேதி மாலை ஆப்தே, கோட்சே இருவரும் கைத் துப்பாக்கியை மறைத்துக் கொண்டு, காந்தியின் பிரார்த்தனை மைதானத்தில் நடமாடிக் கொண்டிருந்தனர். அன்று கோட்சே வெற்றி அடைந்தான்! காந்தியைக் கொன்ற சதிகாரனாய்ச் சரித்திரத்தில் இடம் பெற்றான்! 1948 மே மாதம் 27 ஆம் தேதி நாதுராம் கோட்சே, ஆப்தே, கோபால் கோட்சே, சாவர்க்கர் உள்பட எட்டுப் பேர் கைதி செய்யப் பட்டு சதி வழக்குப் பல மாதங்கள் நடந்தது. முடிவில் நாதுராம் கோட்சே, ஆப்தே இருவரும் கொலைக் குற்றம் சாட்டப் பட்டு, நவம்பர் 15 ஆம் தேதி தூக்கிலிடப் பட்டனர்! கோபால் கோட்சே, கார்காரே, பாவா மூவருக்கும் 12 வருட சிறைத் தண்டனை கொடுக்கப் பட்டது! போதிய சாட்சி இல்லாது போனதால், சாவர்க்கர் உள்பட மற்றோர் விடுவிக்கப் பட்டனர்!
ஜாதி மதங்களைப் பார்ப்போம்! சகிப்போம் மதிப்போம்!
பாரத அரசியல் நிர்ணயச் சட்டப்படி, இந்தியா ‘மதச் சார்பற்ற [Secular]‘ ஒரு குடியரசு. மகாத்மா காந்தி மதச் சார்பற்ற ஒரு பாரத நாட்டை உருவாக்கும் பணிக்கே உயிர் வாழ்ந்தார்; அதை இந்தியாவில் நிலைநாட்டப் போராடியதில் அவர் தோல்வியுற்று மாண்டார்! பாரதச் சட்டங்கள் வழக்கறிஞர்களுக்கும் நீதி மன்ற நீதிபதிகளுக்கும் மட்டுமே பயன்படும் கருவிகள்! பாமர மக்கள், அரசியல் வாதிகள், மதவாதிகள், மடாதிபதிகள் ஆகியோருக்கு, எழுதப் பட்டாலும் அவர்கள் சட்டத்தைப் பின்பற்றுவ தில்லை! இஸ்லாமிய மதம், கிறிஸ்துவ மதம், சீக்கிய மதம், புத்த மதம், ஜெயின மதம் இந்திய நாட்டில் பல நூற்றாண்டுகள் வேரூன்றி, இந்து மதத்துடன் இணைந்து உலவி வருகின்றன. ஆயிரக் கணக்கில் நம்மிடையே ஜாதிகள் உள்ளன! பல்லாயிரம் ஆண்டுக் காலம் வளர்ந்து வேரூன்றி விட்ட ஜாதிப் புற்றுநோயை எந்த அறுவை முறையிலும், எத்தனை ஆண்டுகள் முயன்றாலும், அவற்றைப் பாரத மண்ணிலிருந்து களை எடுக்க முடியாது! ‘எம்மதமும் சம்மதமே’ என்று காந்தியின் மரணம், நமக்கு அறிவுரை சொல்லட்டும்! பாரத நாடு இம்மதங்கள் ஒருங்கே தனித்து வாழப் பல நூற்றாண்டுகள் இடம் கொடுத்தது. எல்லோருக்கும் இணையான சமரச வாழ்வைத் தொடர்ந்து, ஏன் பாரதம் அளிக்கக் கூடாது ?
வட இந்தியாவில் இந்து மத வெறியர்கள், அடிக்கடிக் கிறிஸ்துவக் கோயில்களைத் தீயிட்டுக் கொளுத்தியும், அங்குள்ள பாதிரியார்களைக் கொலை செய்தும் வருகிறார்கள்! தாழ்த்தப் பட்ட ஏழை மக்களை, மேலினத்தார் வட நாட்டிலும், தென் நாட்டிலும் படாத பாடு படுத்தி வருகிறார்கள். பாரத்திலே பிறந்து வளர்ந்த புத்த மதத்தினரை, இந்து மதவாதிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நசுக்கி பாரத நாட்டிலிருந்து விரட்டி விட்டதால், மிஞ்சிய சிறுபான்மையினர் இருக்குமிடம் தெரியாமல் முடங்கிக் கிடக்கிறார்கள்! சீக்கியர் தனி நாடு கோரிப் போராடித் தொல்லை கொடுத்துத் துன்புற்று, அவர்கள் கொட்டம் அடக்கப் பட்டு இப்போது சற்று அமைதி நிலவி வருகிறது.
காந்தி ஏசு நாதரை மிகவும் நேசித்தார். ‘ஏசு நாதரின் ‘மலைப் பிரசங்கம்’ [Sermon on the Mount] காந்தியைக் கவர்ந்த ஓர் அரிய வாக்குரை! இந்து வேதங்கள் மட்டுமே தேவ வாக்குகள் என்பதைக் காந்தி ஒருபோதும் ஒப்புக் கொண்ட தில்லை! அவை ஏன் பைபிளாகவும், கொரானாகவும் இருக்கக் கூடாது ? என்று கேள்வி எழுப்பினார். ‘நீங்கள் கிறிஸ்துவர் இல்லை’, என்று ஒருவர் குறிப்பிட்ட போது, காந்தி சொன்னார், ‘நான் ஒரு கிறிஸ்டியன்! நான் ஒரு இந்து! நான் ஒரு முஸ்லீம்! நான் ஒரு யூதன்!’ அந்த ரீதியில் அவர் மற்றவர்களை விடத் தான் ஒரு தகுந்த இந்தியன், என்று காட்டிக் கொண்டார்.
‘எனது ஆழ்ந்த நம்பிக்கை இதுதான்: இந்துக்கள், சீக்கியர், இஸ்லாமியர், கிறித்துவர் யாவரும் ஒரே பாரத மாதாவின் புத்திரர், புத்திரிகள். பாரதத்திலோ, பாகிஸ்தானிலோ நடக்கும் எந்த விதப் படு கொலையும் கண்டு பலிவாங்க முற்பட்டு, நம் மக்கள் கடமை யிலிருந்து பிறழக் கூடாது! பாகிஸ்தானில் உள்ள எல்லா இந்துக்களும், சீக்கியரும் கொல்லப் பட்டாலும், இந்தியாவில் உள்ள ஓர் இஸ்லாமியச் சிறு பிள்ளையைக் காப்பாற்ற நாம் முற்படவேண்டும்!’ என்பது காந்தியின் வாக்கு!
இந்தியர் பலருக்குத் தேசப்பற்று குன்றி வருவதைக், காஷ்மீரிலிருந்து கன்னியா குமரி முதல் பயணம் செய்யும் எவரும் கண்டு பிடித்து விடலாம்! தேசப்பற்று என்றால், நாட்டு மக்கள், நாட்டு மொழிகள், நாட்டுப் பண்புகள், பழக்க வழக்கங்கள், நடையுடை பாவனைகள் மீதுள்ள சகிப்புத்தன்மை, மதிப்பு, நம்பிக்கை ஆகியவற்றின் மீது இந்தியர் காட்டும் மனிதத் தன்மை! அதற்கு மக்களிடம் மதச் சகிப்பு, இனச் சகிப்பு, ஜாதிச் சகிப்பு, மாநிலச் சகிப்பு, மொழிச் சகிப்பு மிக மிகத் தேவை! மதச் சார்பில்லாமை என்றாலும் இதுதான் அர்த்தம்! பாரதத்தின் பல பிரச்சனைகளுக்கு மூல காரணம், இந்தியரிடம் குறைந்துள்ள, இந்தச் சகிப்பற்ற தன்மைகளே !
‘ஜாதிகள் இல்லயடி பாப்பா! ஜாதி மதங்களைப் பாரோம்! மற்றும் செப்பும் மொழி பதினெட் டுடையாள், ஆயின் சிந்தை ஒன்றுடையாள்’ என்று பாரத மாதாவைப் பற்றிப் பாரதியார் பாடியதற்கும் இதுதான் அர்த்தம்! ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு’ என்றும் நமக்குக் கூறினார்! நாற்பது ஆண்டுகள் ஒன்றாக எல்லா ஜாதியினரும், எல்லா இனத்தவரும், எல்லா மதத்தினரும் பிரிட்டீஷ் சாம்ராஜியத்தோடு போராடி இந்தியா மகத்தான விடுதலைக் குறிக்கோளை அடைய வில்லையா ?
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே!
பிரிட்டீஷ் அரசாங்கம் பாரத நாட்டை அடிமைப் படுத்தினாலும், அது செய்த நல்ல காரியங்களும் உண்டு. துண்டுபட்டுப் போன பரத கண்டத்தை ஒன்றாக்கியது பிரிட்டீஷ் அரசு! ஆங்கில மொழி நம்மிடையே பரவி யிருந்ததால், பாரத நாடு கல்வி, தொழில், வாணிபம், விஞ்ஞானம், வேளாண்மை போன்ற எல்லாத் துறைகளிலும் முன்னேறி இருக்கிறது. இந்தியாவின் பதினெட்டு மொழிகள் வளர்ச்சி பெற, ஆங்கில மொழி உதவியாக இருந்திருக்கிறது. இந்திய நகரங்கள், பெரும்பான்மையான ஊர்கள் ரயில் பாதைகளில் இணைக்கப் பட்டு, ரயில்தொடர் வாகனங்கள் ஜாதி மதம் பாராது எல்லா இனத்தாரையும் ஒருங்கே ஏற்றிச் செல்கின்றன. இந்தியத் தபால், தந்தி நிலையங்கள் ஜாதி மதம் பாராது, எல்லா ஊர்களுக்கும் நமது கடிதங்களைப் பரிமாறி வருகின்றன. இந்திய ரயில்தொடர் வாகனங்கள், ஆகாய விமானங்கள் போன்ற சாதனங்களில் நாம் பயணம் செய்யும் போது, ஜாதி, மதம், இனம் எதையும் பார்க்காமல், ஒரு தேச மக்களாய் நடந்து வருகிறோம்! பன்மொழி பேசும் பல்வேறு இந்திய மக்களைப் பிணைக்கும் ஓர் இணைப்பு மொழியாய் ஆங்கில மொழியும் பாரதத்தில் பணி செய்து வருகிறது!
இப்போது அடிப்படைவாத இந்துக்கள் மதப் போர்வைக்குள் புகுந்து கொண்டு, இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர் ஆகியோர்க்குத் தொல்லை கொடுத்து வருகிறார்கள். அதனால் நாட்டில் மீண்டும் மீண்டும் எழும் கொலை பாதக எதிர்ப்புகளுக்கும் இந்துக்கள் ஆளாகி வருகிறார்கள். 16 ஆம் நூற்றாண்டில் பாபர் கட்டிய பாப்ரி மசூதியை அயோத்தியாவில் 1992 ஆம் ஆண்டில் இடித்துத் தரைமட்ட மாக்கிய பிறகு, அங்கே சில இந்துக்கள் ராமர் கோயில் கட்டப் புகுவது ஒரு மாபெரும் பிரச்சனைக் குரிய மதச் சம்பவம்! இராமர் பிறந்த புண்ணிய பூமியாகக் கருதப்படும் அந்தத் தளத்தில் இந்துக்களுக்கும் இஸ்லாமியருக்கும் நிரந்தர மதப்போரை உண்டாக்கிப் பலரது குருதி வெள்ளம் ஓடி விட்டது! இதைப் பற்றி மத்திய அரசியல் மந்திரி, உமா பாரதி அழுத்தமாகச் சொன்னாராம், ‘பாப்ரி மசூதி தேசீய அவமானச் சின்னம்! ஓர் அடிமைச் சின்னம்! அது நமது தேசப்பற்றைப் பாதிக்கிறது! முகலாய சாம்ராஜியத்தைப் பாரத தேசத்தில் நிலைநாட்டிய ஓர் ஆக்கிரமிப்பாளன் பாபர், பெயரைத் தாங்கி நிற்கிறது! மசூதி இடிப்பில் எந்த விதச் சதித் திட்டமும் இல்லை! அது ஓர் அடிமைச் சின்னம், என்பது எனது உறுதியான நம்பிக்கை’ என்று முழக்கினாராம்!
அப்படிப் பார்க்கப் போனால், ஆக்ராவில் உள்ள ‘தாஜ் மஹால்’ ஓர் அடிமைச் சின்னம் இல்லையா ? டெல்லியில் உள்ள ‘குதுப்மினார்’ கம்பம் ஓர் அடிமைச் சின்னம் இல்லையா ? மொம்பையில் பிரிட்டீஷ் அரசாங்கம் கட்டிய, ‘இந்தியத் தலை வாசல்’ [Gateway of India] ஓர் அடிமைச் சின்னம் இல்லையா ? சையத் அகமத் புகாரி உமா பாரதியைத் தாக்கி, ‘பாப்ரி மசூதியை ஓர் அடிமைச் சின்னம் என்பது இஸ்லாமியரை அவமானப் படுத்துவதாகும்! இஸ்லாம் மதத்தை எடுத்துக் காட்டும், ஓர் தனித்துவச் சின்னம் அது’ என்று சீறினார். இராமர் பிறந்த பூமிக்காக தீராத இந்து முஸ்லீம் சண்டைகள், கொலைகள், தீயெரிப்புகள் !
மீண்டும் வட நாட்டில் 2002 ஆம் ஆண்டில் ‘ராம் ஆலயப் போர்’ தலை தூக்கி யிருக்கிறது! இந்து முஸ்லீம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக், கொலை செய்து பலிவாங்கிக் கொண்டனர்! இறந்தவர்களில் முஸ்லீம் மக்கள் எண்ணிக்கை மிக அதிகம்! பெரும்பான்மையான அடிப்படை இந்து மத வெறியர்கள், தீங்கிழைக்காத சிறுபான்மை முஸ்லீம் மக்கள் இல்லங்களைத் தீயிட்டு, அவர்களை உயிரோடு கொளுத்தி யிருக்கிறார்கள்! காந்தி எந்த மதச் சண்டைகள் நிகழக் கூடா தென்று தன் ஆருயிரைக் கொடுத்தாரோ, அந்த மதச் சண்டைகள் பாரதத்தில் இன்னும் ஓயவில்லை ! இனியும் ஓயப் போவதில்லை!
கிறிஸ்துவ ஆலயங்களைத் தீயிட்டுக் கொளுத்திப் பாதிரியாரைக் கொன்ற போதோ, பாப்ரி மசூதியை இடித்துத் தரைமட்ட மாக்கிய போதோ, சங்கராச்சாரியார் போன்ற இந்து மதாதிபதிகள், இந்து மத வெறியர்களைக் கண்டிக்கவும் இல்லை! தண்டிக்கவும் இல்லை! ராம ராஜியத்தை ஆதரித்த மகாத்மா இருந்திருந்தால், ராம பூமிக்காக மசூதி தகர்க்கப் படுவதைத் தடுத்து நிறுத்திக் காப்பாற்றி யிருப்பார்! கிறிஸ்துவர் புனிதக் கோயில் எரிப்புகளையும், அருட் பாதிரியார் கொலைகளையும் தடுக்க அறப்போர் நடத்தி யிருப்பார்! ஆனால் காந்தி சீடர்கள் என்று சொல்லிக் கொள்பவரும், மதச் சார்பற்ற பாரத அரசின் ஆட்சியாளர்களும் கோரக் கொலைகளை, தீயெரிப்புகளை இன்னும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அநாகரீகம், அவமானம், அநியாயம், அறிவீனம்!
வாழ்க நீ எம்மான், இந்த வையத்து நாட்டில் எல்லாம்!
மகாத்மா காந்தி இன்னும் மாண்டு போகவில்லை! அவர் ஓர் உலக மனிதாபிமானி! ‘மகாத்மா’ என்னும் பட்டத்தை காந்திக்கு அளித்தவர், கவியோகி இரவீந்திரநாத் தாகூர். ‘உலக சரித்திரத்தில் மகாத்மா காந்தி புத்தர், ஏசுக் கிறிஸ்து ஆகியோருக்கு இணையான இடத்தைப் பெறுவார்’, என்று இந்தியாவின் கடைசி வைஸ்ராய் மெளண்ட் பாட்டன் கூறி யிருக்கிறார். ஆ·ப்ரிக்க அமெரிக்கர் விடுதலைப் பிதா, மார்டின் லூதர் கிங், காந்தியின் அகிம்சாப் போராட்ட முறையைப் பின்பற்றினார். ‘வாழ்க நீ எம்மான், இந்த வையத்து நாட்டில் எல்லாம்’ என்று பாரதியார் பாடியுள்ளது போல், மகாத்மா காந்தி பிற நாடுகளில் ‘மாதிரி மனிதராய்’ மாந்தருக்கு வழிகாட்டியாய் மறைமுகமாகப் பணி செய்து கொண்டிருக்கிறார்! ஆனால் இந்தியாவை விட்டு, அவரது ஆத்மா என்றோ போய் விட்டது ! பாழ்பட்டுப் பரிதபிக்கும் பாரத தேசம் தன்னை, இனி வாழ்விப்பது எப்படி என்று விண்ணுலகிலிருந்து கவலைபட்டுக் கொண்டிருக்கிறார், மகாத்மா காந்தி!
***************************
தகவல்:
1. Gandhi’s Truth By : Erik H. Erikson (1969)
2. Gandhi His Life & Message for the World By: Louis Fischer (1954)
3. The Life of Mahatma Gandhi By : Louis Fischer (1950/1983)
+++++++++++++++++
Mohandas Gandhi Timeline
From the Website : http://www.sparknotes.com/biography/gandhi/timeline.html
+++++++++++++++++
Mohandas Gandhi
Timeline
October 2, 1869: Birth of Mohandas Karamchand Gandhi
1883: Gandhi and Kasturbai are married.
1885: Death of Karamchand Gandhi, Gandhi’s father
September 4, 1888: Gandhi leaves for England to study law.
June 10, 1891: Gandhi passes the bar exam in England.
1891-1893: Gandhi fails as a lawyer in India.
April 1893: Gandhi accepts commission to spend a year in South Africa advising on a lawsuit.
Spring 1894: Gandhi elects to stay on South Africa, and founds the Natal Indian Congress.
Spring 1896: Gandhi returns to India to collect his wife and children.
December 1896: Gandhi returns to South Africa with his family.
October 1899: Outbreak of Boer War (1899-1901) in South Africa. Gandhi organizes an ambulance corps for the British.
1901: Gandhi returns to India to attend the Indian National Congress. G.K. Gokhale introduces him to nationalist leaders.
1901-1906: Gandhi struggles toward Brahmacharya, or celibacy, finally ending his sexual activity in 1906.
1904: Nationalists found the magazine the Indian Opinion, and soon print it on Gandhi’s farm, the “Phoenix Settlement.”
July 31, 1907: The Boer Republic Transvaal, now under the control of the British, attempts to register all Indians as members; Gandhi and others refuse to register. Their resistance efforts mark the first use of nonviolent non-cooperation by the Indian minority in South Africa, soon calledsatyagraha, or “soul-force.”
January 11, 1908: Gandhi is arrested and sentenced to two months in prison.
October 10, 1908: Gandhi is arrested again, spends a month in jail.
1909: Gandhi travels to London, pushing for rights of South African Indians. The Transvaal registration law is repealed.
November 13, 1913: Indians in Natal and Transvaal, under Gandhi’s leadership, march peacefully in protest of a racist poll tax and marriage laws. The marches continue through the winter.
June 30, 1914: Gandhi and Smuts, the Prime Minister of the Transvaal, reach an agreement, ending the protests.
July 18, 1914: Gandhi sails to England.
August 1914: Gandhi arrives in England, just at the outbreak of World War I(1914-1918).
January 9, 1915: Gandhi returns home to India, and receives a hero’s welcome.
May 25, 1915: Gandhi and his followers found Satyagraha ashram, the religiously-oriented communal farm where Gandhi, his family, and his followers will live.
April 6, 1919: Nationalists hold a hartal, or day of fasting and prayer, in protest of the Rowlatt Act, which drastically curtails civil liberties in India.
April 13, 1919: Amritsar Massacre; Under General Dyer, British troops slaughter Indian protesters.
August 1, 1920: Gandhi calls for a period of non-cooperation across India.
March 10, 1922: Gandhi is arrested for sedition.
March 1922-January 1924: Gandhi remains in prison.
1924-1928: Gandhi avoids politics, focusing his writings on the improvement of India.
1925: Despite his long absence from politics, Gandhi becomes President of the Indian National Congress.
February-August 1928: Residents in the district of Bardoli protest high rents using methods of non-cooperation inspired by Gandhi.
January 26, 1930: Gandhi publishes the Declaration of Independence of India.
March 2, 1931: Gandhi warns the Viceroy of his intention to break the Salt Laws.
March 12-April 6, 1931: Gandhi leads his Salt March to the sea.
May 5, 1931: Gandhi is arrested for violating the Salt Laws; non-cooperation movements break out across India.
January 1931: British government yields to protests, releases all prisoners, invites a Congress representative to Britain for a Round Table Conference (the Congress asks Gandhi to be this representative).
Autumn 1931: Gandhi participates in the Round Table Conference in Britain.
December 28, 1931: Gandhi returns to India.
January 4, 1932: Gandhi is arrested for sedition, and held without a trial.
September 20-25, 1932: Gandhi fasts in prison to protest the treatment of untouchables.
1934-38: Gandhi avoids politics, travels in rural India.
1935: Government of India Act passes British Parliament and is implemented in India; it is the first movement toward independence.
September 1939: World War II begins, lasting until 1945.
March 22, 1942: Sir Stafford Cripps arrives in India, presenting to the Indian National Congress a proposal for Dominion status (autonomy within the British Commonwealth) after the War.
August 8, 1942: The Indian National Congress rejects the Cripps proposal, and declares it will grant its support for the British war effort only in return for independence.
August 1942: Congress leaders are arrested; Gandhi is imprisoned in the Aga Khan’s palace.
February 10 to March 2, 1943: Gandhi fasts while imprisoned, to protest British rule.
February 22, 1944: Death of Kasturbai
May 6, 1944: Gandhi is released from the Aga Khan’s palace.
Summer 1944: Gandhi visits Muhammed Ali Jinnah in Bombay, but is unable to work out an agreement that will keep India whole.
May 16, 1946: British Cabinet Mission publishes proposal for an Indian state, without partition; Jinnah and the Muslim League reject the proposal.
March 1947: Lord Mountbatten arrives in India and hammers out agreement for independence and partition.
August 15, 1947: Indian independence becomes official, as does the partition into two countries, India and Pakistan.
August-December 1948: India dissolves into chaos and killings, as Hindus and Muslims flee for the borders of India and Pakistan.
January 30, 1948: Gandhi is assassinated by Nathuram Vinayuk Godse, a Hindu nationalist.
+++++++++++++
(Revised January 28, 2009)
rare news were gathered in this article
best wishes
Reading this gives me a coherent history of events . I have studied some historical facts as a student in high school , Sri Ramakrishna Mission Vidyalayam which was founded on principles taught by Gandhi. The foundation was laid by Gandhi also. I develop a different perspective reading this at age 70. My perspective is that current students in India should read the history with an eye on dangers of communal conflicts. As we see the current conflicts around the world it is an ironic situation, that religions are used as an instrument in creating conflicts . Hope the leaders will learn the wisdom of solutions based on humanity and harmony. Conflicts should be resolved by a win-win solution whenever possible. One needs lot of wisdom to be a good leader. V.P.Veluswamy
Dear Veluswamy & Angammal,
How are you & Angammal ?
We all know Gandhiji struggled for religious unity in India & gave his life for his principles. He is still an international Model for others.
Great scientist Albert Einstein & writer Leo Tolstoy admired his work. It was Einstein who said we came to know a great leader Gandhi who lived amonst us in our life time.
Dr. N. Ganesan (Texas) wrote to me that he knows both of you.
How was Murali’s Wedding ?
With Kind Regards,
Jayabarathan
மகாத்மா காந்தி ஓர் இந்து. கொன்ற நாதுராம் கோட்சே ஓர் இந்து. ஒரு காலத்தில் சுதந்திர வீரர் காந்திஜியைத் தன் குருவாக வழிபட்டவன் கோட்சே. இதில் இந்து மத வெறி எங்கே வந்தது.
சி. ஜெயபாரதன்.
+++++++++++++++2010/10/2 RRavi Ravi <erae...@gmail.com>
காந்தி அடிகளின் உயிரை குடித்தது
இந்து மத வெறிதான் .
உலகம் அறிந்த உண்மை
2010/10/2 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
மகாத்மா காந்தி ஓர் இந்துவால் கொலை செய்யப்பட்டதற்கு ஒரே ஒரு காரணம் அவர் இஸ்லாமியரைச் சமமாகப் பாவித்து அவர் சார்பாகச் சலுகைகள் வழங்கியது.சி. ஜெயபாரதன்.
++++++++++++++++++++++++++++++2010/10/2 வைகறை. .. <vaigar...@gmail.com>
காந்தியார் பிறப்பும் - காமராசர் மறைவும்
இன்று காந்தியார் அவர்களின் பிறந்த நாள் (1869). பச்சைத் தமிழர் காமராசர் அவர்களின் நினைவு நாள் (1975).
இந்த இரு தலைவர்களும் நாட்டு மக்களால் நன்கு மதிக்கப்பட்டவர்கள்; பொதுத் தொண்டில் அப்பழுக்கற்ற மாமணிகளாக ஒளி வீசியவர்கள்.
இவர்களை இந்நாளில் நினைப்பது என்றால், மாலை மரியாதைகள் மட்டுமல்ல - மனிதகுலம் சிந்திக்கவேண் டிய கூறுகள்பற்றி சிந்திப்பதுதான் சீலமானதாகும்.
காந்தியாரின் பிறந்த நாள் சர்வதேச அகிம்சை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. காந்தியார் என்று நினைக்கும்பொழுது, அவரின் இந்த அகிம்சை அனை வருக்கும் நினைவிற்கு வருவது இயல்பானதுதான். அதேநேரத்தில், அந்த அகிம்சா மூர்த்தி வன்முறையால் தான் மறைய நேரிட்டது என்பது கவனிக்கத்தக்க சான்றாகும். மத நம்பிக்கையாளரான காந்தியார் மதவாத நம்பிக்கையாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
காந்தியாரின் கடவுள் நம்பிக்கையோ, மத நம்பிக்கையோ அவரைக் காப்பாற்றவில்லை என்பது ஒரு சிந்தனை. மத நம்பிக்கையாளர்கள் மனிதநேயக் காரர்கள் அல்லர்; நன்னெறிகளை நம்பிக் கடைப்பிடிப் பவர்களும் அல்லர் என்பதற்கு எடுத்துக்காட்டு - உன்னதமான ஒரு மாமனிதரை திட்டமிட்டுக் கொலை செய்ததாகும்.
நான் ஒரு சனாதன இந்து என்று காந்தியார் அவர்கள் மிக வெளிப்படையாகச் சொல்லியிருந்தும், நம்பியிருந்தும், அந்த இந்துவை இந்துத்துவா சக்திகள் விட்டு வைக்கவில்லை.
இந்துத்துவா என்பது இந்துக்களை ஒற்றுமைப் படுத்தக் கூடியது - இந்து மக்களுக்குப் பாதுகாப் பானது என்பது கடைந்தெடுத்த பொய் என்பது தெற்றென விளங்கிவிட்டது. ஒரு சனாதன இந்துவை - ஒரு சனாதன இந்துக் கும்பலே கொன்று முடித்து, இனிப்பு வழங்கியதன்மூலம் இந்துக்கள் என்று கருதிக் கொண்டிருப்பவர்கள் வேறு கோணத்தில் சிந்திக்கக் கடமைப்பட்டவர்கள் ஆகிவிடவில்லையா?
இந்துவாக உள்ள ஒருவர் நியாயவாதியாக, பொதுத்தன்மை வாய்ந்தவராக இருக்க முடியாது. அப்படியிருந்தால், அத்தகையவரை இந்துத்துவா காவிகள் காவு கொடுத்துவிடுவார்கள் என்பதும் காந்தியார் கொலை நாட்டு மக்களுக்குச் சொல்லித் தரும் சொக்கத்தங்கமான பாடமாகும்.
காந்தி இந்தியாவை மதச் சார்பற்ற நாடு என்று சொன்னது 7.12.1947 இல்; காந்தி கொல்லப்பட்டது 30.1.1948 இல்; அதாவது நம் நாடு மதச் சார்பற்றது என்று சொன்ன 53 ஆம் நாள் கொல்லப்பட்டார்; அதாவது சுதந்திரம் பெற்ற 165 ஆம் நாள் கொல்லப்பட்டார் காந்தி. இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் பார்ப்பனர்களின் நடத்தையைப் பார்த்து அவர் சுயமரியாதைக்காரராகி விட்டார். அவர் கொல்லப்படாவிட்டால், இந்தியா சுயமரியாதைக் கொள்கை நாடாகிவிடும் என்று பயந்தே அவரைக் கொன்றார்கள் என்று கூறியுள்ளார் தந்தை பெரியார் (விடுதலை, 13.1.1965).
இந்துத்துவா என்று சொல்லும்பொழுது இந்து மதத்தின் கொள்கைகளில் நம்பிக்கை உள்ளவர்கள் என்பதையும்விட, வருணாசிரமத் தன்மையில் முதல் இடத்தில் உரிமைகளை அனுபவிக்கக் கூடிய பார்ப் பனர்களின் நலனைச் சார்ந்ததைத்தான் முக்கியமாகக் கருதப்படுகிறது.
பார்ப்பனர்களைப்பற்றி காந்தியார் தெளிவாகக் கணிக்கத் தொடங்கினார்.
பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் ஆகிய மூன்று பிரிவினரும் ஜாதி இந்துக்களானால், அவர்கள் சிறுபான்மைக் கட்சியினர் ஆவார்கள். பிரிட்டீஷார் வெளியேறி, இந்தியாவில் சுதந்திரத்தை நிலைநாட்டிய பின், இருந்த இடம் தெரியாமல் அவர்கள் அழிந்து போக வேண்டியதுதான் (திராவிட நாடு, 12.2.1947) காந்தியாரின் இந்தக் கணக்குக்குப் பிறகும், பார்ப்பன சக்திகள் விட்டு வைப்பார்களா? பார்ப்பனர்களின் கடந்தகால வரலாற்றை நன்கு உணர்ந்தவர்கள் இதனை இம்மியளவு அய்யமின்றி உணர்ந்து கொள்வார்களே!
அழிந்து போவார்கள் என்று சாபமிட்டவரை அழித்துவிட்டனர் பார்ப்பனர்கள்.
பச்சைத் தமிழர் காமராசரைப் பொறுத்தவரை - அவரும் மதவாத சக்திகளால் கொலை செய்யப்பட வேண்டியவtராகவே இருந்தார். குறிப்பாக பசுவதைத் தடுப்பு என்ற பெயரால், பட்டப் பகலில் இந்தியாவின் தலைநகரமான டில்லியிலே காந்தியாரைக் கொன்ற கா(லி)விக் கும்பல் கொலை செய்ய எத்தனித்ததா இல்லையா? (7.11.1966).
இந்தக் கொலைக் கும்பலில் ஆர்.எஸ்.எஸ்., ஜன சங்கம், சங்கராச்சாரியார், சாதுக்கள் இடம்பெற்றி ருந்தனரே!
காந்தியாரின் பிறந்த நாள் - காமராசரின் மறைவு நாள் தரும் சிந்தனை என்ன?
மதவெறியை மாய்ப்போம் - மனிதநேயம் காப்போம்! .
--
---------------------------------------------------------------------------------------------------------------------
You received this message because you are a member of Google
Groups "Thanthaiperiyar".
Send your e-mails to: thantha...@googlegroups.com
Group home: http://groups.google.com/group/thanthaiperiyar
unsubscribe e-mails to: thanthaiperiy...@googlegroups.com
-------------------------------------------------------------------------------------------------------------------
Home Page: http://www.periyarkural.com
http://thanthaiperiyar.blogspot.com/
--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
--
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
நன்றி செல்வன்,
அந்த ஒரிஜினல் கட்டுரையை இங்கே இடுகிறேன் சிவா.தமிழ்நாடு போகும் போக்கை ஜெயபாரதன் ஐயா காணட்டும்
காந்தி என்ற “துரோகி” – “மகாத்மாவானது” எப்படி? ஏன்?
காந்தி என்ற ஒரு தனி மனிதன் எப்படி இந்தியாவின் அடையாளமாக ஆக்கப்பட்டார்? இந்திய விடுதலை போராட்டத்தில் தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்த பல்லாயிரக்கணக்கான போராளிகளை(மக்களை) விட காந்தி எந்த விதத்தில் உயர்வானவர்? என்ற கேள்விகள் எல்லாம் என்னுள் பல முறை எழுந்துள்ளன. கேள்விக்களுக்கான பதிலை தேடும் முயற்சியில் விளைந்ததே இக்கட்டுரை.”துரோகி” காந்தி, “மகாத்மா காந்தியானது எப்படி? என்ற கேள்விக்கான பதிலை இலவச இணைப்பாக கிடைத்து.
ஏகாதிபத்திய அரசுகள் எல்லாம் தங்கள் கருத்தியலுக்கு(ideology) ஒத்துவரக்கூடிய ஒரு மனிதனை அந்த நாட்டின் அடையாளமாக மாற்றியும், அவர்களின் தேவை முடிகின்ற பொழுது அவர்களின் உண்மை முகங்களை அம்பலப்படுத்தியும் வந்துள்ளது வரலாறு முழுவதும் பதிவாகியுள்ள உண்மை. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் கருத்தியலுடன் ஒத்துபோவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு அடிமையாகவும் இருந்துள்ளார் காந்தி. இதன் காரணமாக காந்தி ஆங்கிலேயர்களால் ஒரு பெரும் சக்தி என்று வர்ணிக்கப்பட்டார். இந்தியாவின் அடையாளமாவதற்கு இது மட்டும் போதுமா என்றால் போதாது என்பதே பதிலாக இருக்கும். அன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் ஆதிக்கம் செய்து வந்த பார்ப்பனர்கள், ஆங்கிலேயருக்கு காட்டியும் , கூட்டியும் கொடுத்ததால் மன்னர்களானவர்கள் (அவ்வாறு இல்லாதவர்களெல்லாம் கொல்லப்பட்டார்கள் என்பது வரலாறு கூறும் செய்தி), தொழிலதிபர்கள் இவர்களின் ஆதரவும் காந்திக்கு தேவையாக இருந்தது. காந்தி இவர்கள் அனைவரின் கருத்தியலுக்கும் ஒத்து போனார். இதனால் அன்றைய இந்தியாவின் அடையாளமாக காந்தி மெல்ல, மெல்ல உருமாற்றப்பட்டார்.
என்ன காந்தி துரோகியா? ஆங்கிலேய அரசின் அடிமையா? எதை வைத்து நீங்கள் இவ்வாறு கூறுகின்றீர்கள் என நீங்கள் என்னை கேட்கலாம். இதற்கான சான்றுகள் பல எம்மிடம் உள்ளன. இங்கே சில முக்கியமானவற்றை கூறுகின்றேன். எந்த ஒரு ஏகாதிபத்தியத்திற்கும் “புரட்சி” “புரட்சியாளர்கள்” போன்ற சொற்களே ஒவ்வாமை(alergy) நோயை வரவழைத்துவிடும். புரட்சியையும், புரட்சியாளர்களையும் அழித்தொழிப்பதே ஏகாதிபத்தியங்களின் வேலை. ஆனால் இந்தியாவில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு அந்த வேலையை இல்லாமல் பார்த்து கொண்டார் காந்தி. ஆம் இந்தியாவில் தோன்றிய புரட்சிகளையும், புரட்சியாளர்களையும் கருவறுப்பதையும் தனது முதல் வேலையாக பார்த்துக் கொண்டார் காந்தி. இந்த கருத்தியல் தான் காந்தியை ஆங்கிலேயர்கள் உயர வளரவிடுவதற்கு முக்கிய காரணமாகும். காந்தி இந்தியாவில் தோன்றிய பகத்சிங், சுபாஷ் சந்திர போஸ் போன்ற புரட்சியாளர்களை வேரறுப்பதில் ஆங்கிலேயர்களை விட மிக தீவிரமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பகத்சிங்கை தூக்கிலட காந்தி ஒப்புதல் அளித்தது மிக தெளிவாக காந்தி இர்வின் ஒப்பந்த பதிவுகளிலும், அவரின் சீடரான சீதாரமையா எழுதிய இந்திய தேசிய காங்கிரசு என்ற நூலிலும் உள்ளது. பகத்சிங்கின் தியாகத்தீ இந்தியாவில் பற்றி எரியாமல் இருப்பதற்காக அவர் பார்த்த பணிகள் எல்லாம் கராச்சி காங்கிரசு மாநாட்டு பதிவுகளில் உள்ளது. இதை எல்லாம் ஒரு படி மேலே போய் அரசுக்கு ஆலோசனை கூறும் “அரச குரு” பதவியில் காந்தி ஈடுபட்டதும் உண்டு. அது வெளி வந்ததும் பகத்சிங்கின் மூலமாக தான். இதோ..
……..
அந்த கடிதத்தில், எமர்சன், பகத்சிங் தண்டனை குறித்து நேற்றிரவு உங்களோடு பேசியபடி…’ என்று தொடங்கும் அக்கடிதத்தில் அன்று மாலை நடைபெறவிருக்கும் ஒரு கூட்டத்தைப் பற்றி பேசப்பட்டுள்ளது. பகத்சிங்கின் தண்டனையை குறைக்கச் சொல்லி வலியுறுத்துவதற்காக, சுபாஷ் சந்திர போஸ் பேசவிருக்கும் கூட்டம் அது. அகூட்டத்தைப் பற்றி குறிப்பிட்டு, அது மக்கள் மத்தியில் உணர்ச்சியை தூண்டக்கூடும் என்பதால், அதனை எப்படி ஒடுக்குவது என்று காந்தியிடம் அக்கடிதத்தில் யோசனை கேட்கப்பட்டுள்ளது. இதற்கு உடனே பதில் கடிதம் எழுதினார் காந்தி.
என் அருமை எமர்சன்,
சற்று நேரத்திற்கு முன்பு பெறப்பட்ட தங்கள் கடிதத்திற்கு நன்றி. தாங்கள் குறிப்பிட்டுள்ள, அக்கூட்டம் பற்றி நான் அறிவேன். என்னாலியன்ற எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளேன் என்பதோடு, விரும்பத்தகாத எதுவும் நடைபெறாது என்றும் நம்புகிறேன். எவ்வகையான காவல்துறை அணிவகுப்பும், தலையீடும் வேண்டாம் என்று நான் யோசனை கூறுகிறேன். கொந்தளிப்பான நிலை அங்கு இருக்கக்கூடும். அத்தகைய நிலை, கூட்டங்கள் போட்டு பேசுவதன் வாயிலாக வெளியேற அனுமதிப்பது நல்லதாக அமையும்.
தங்களின்
நேர்மையுள்ள,
எம்.கே.காந்தி.
(பகத்சிங்கும் இந்திய விடுதலை என்ற நூலில் இது வெளிவந்துள்ளது. அவர்களுக்கு என் நன்றிகள்)
இதற்கு நேரடியாக தங்கள் அடிமையும், ஆலோசகருமான எம்.கே.காந்தி என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கலாம். இது போன்ற மக்கள் புரட்சிகளுக்கும், புரட்சியாளர்களையும் கருவறுக்கும் வேலையை காந்தி பல முறை செய்துள்ளார். சௌரி சௌரா மக்கள் போராட்டத்திற்கு பின்னர் இது போன்ற போராட்டங்கள் தவறு எனக்கூறி காந்தி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார் (ஆனால் ஒரு முறை கூட ஆங்கிலேய அரசை எதிர்த்தோ, விடுதலை வேண்டியோ காந்தி உண்ணாவிரதம் இருந்ததே கிடையாது என்பதை நினைவில் கொள்க). இதிலிருந்து காந்தி என்ற மக்கள் துரோகி ஏகாதிபத்திய ஆங்கிலேய அரசின் கருத்தியலிற்கும், ஆங்கிலேய அரசிற்கும் செய்த அடிமைப் பணிகள் செவ்வனே தெளிவாகின்றது. ஆங்கிலேய அரசை அண்டி பிழைத்ததால் அவர்களின் கருத்தியல் தான் அப்பொழுதிருந்த மன்னர்களிடமும், தொழிலதிபர்களிடமும் இருந்ததால் காந்தி இவர்களுக்காக தனியாக ஏதும் செய்ய தேவை இல்லாமல் போனது. அடுத்து பார்ப்பனர்களின் கருத்தியலிற்கு காந்தி ஒத்து போனதை பார்ப்போம்.
பார்ப்பனிய கருத்தியலான “இந்து கட்டமைப்பை” காந்தி தான் இறக்கும் காலத்திற்கு முன்பு வரை மிக செவ்வனே காப்பற்றி வந்தார் என்பதை அவரின் கருத்தியலான “இராம இராச்சியம் அமைப்பேன்” என்பதிலிருந்தே புரிந்துகொள்ளலாம். இதனால் தான் காந்தி “இந்து கட்டமைப்பினால்” அதிகம் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களை மேலும் கேவலப்படுத்தும் விதமாக “ஹரிஜன்” என்று பெயரிட்டழைத்தார். புற்றுநோயை குணப்படுத்த நல்ல சட்டை போட்டால் போதும் என்ற தனது பரிசோதனையை காந்தி இங்கே செய்து பார்த்தார். பல சமூக சீர்திருத்தம் ஏற்ப்பட்டுள்ள இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் புகுத்தப்பட்ட கிருத்தவ மதமே கல்லறையில் கூட பிரித்து வைத்து வன்மம் காட்டி வருகின்றது ( http://www.bbc.co.uk/news/world-south-asia-11229170 ) என்றால் அன்றைய காலகட்ட இந்தியாவை பார்ப்பனர்கள் தான் ஆண்டார்கள்(97% அரசு பணிகளில் இருந்தவர்கள் பார்ப்பனர்களே) என்று நினைக்கும் போதும், அவர்களை இந்து மதத்தின் கொள்கைகள் என்று கூறி எவ்வாறெல்லாம் சித்ரவதை செய்திருக்கும் என்பதை நீங்கள் இப்பொழுது எண்ணிகூட பார்க்கமுடியாது. அப்படி பட்ட காலகட்டத்தில் தான் காந்தி கூறினார், நீங்கள் கடவுளின் குழந்தைகள், அவர் கூறிய இந்து மத கொள்கைகள் படியே வாழ வேண்டும் என. காந்தியின் துரோகம் இத்துடன் முடிந்துவிட்டதா என்றால் இல்லை. “இந்து மத கட்டமைப்பு” தாக்கப்பட்ட போதெல்லாம் முதல் ஆளாக வந்து முட்டு கொடுத்தவர் காந்தி. இதே போன்ற “இந்து மத கட்டமைப்பு” தகர்க்க கூடியதாகவும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் உரிமை வழங்கிய பூனா இரட்டை வாக்குரிமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட டாக்டர்.அம்பேத்காரை எதிர்த்து சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் காந்தியை பார்ப்பனர்கள் தங்கள் தலையின் மீது தூக்கிவைத்து கொள்ள உதவின. ஆனால் அதே நேரத்தில் காந்தி எப்பொழுது “இந்து கட்டமைப்பு” கருத்தியலிலிருந்து விலகி சென்றாரோ அப்பொழுதே அவரை தங்களிடம் உள்ள மதவெறியர்களில் ஒருவன் மூலமாக சுட்டும் கொன்றார்கள். ஆனால் இது நடந்தது “துரோகி காந்தி” மகாத்மாவாக கட்டமைக்கப்பட்ட பின்னர் என்பதால் பார்ப்பனர்களால் காந்தியை மக்கள் மனதில் இருந்து அகற்றமுடியவில்லை. இதிலிருந்து காந்தி பார்ப்பனீய கருத்தியலுக்கு ஒத்து போனார் என்பதும் வெட்ட வெளிச்சமாகின்றது.
இதுவரை நாம் காந்தி கருத்தியல் ரீதியாக எப்படி ஆளும் அரசிற்கும், அப்போதைய ஆதிக்க வகுப்பிற்கும் துணைபோனார் என்பதை பார்த்தோம். இனி காந்தியுடைய சிறப்பு என்று கூறப்படும் தனிப்பட்ட குணநலன்களை பார்ப்போம்.
காந்தி ஒரு அகிம்சாவாதி. அகிம்சாவாதி என்றால் எந்த ஒரு உயிரையும் துன்புறுத்தாதவர் என பொருள். இதன் படி காந்தி அகிம்சாவதியா என பார்ப்போம். பகத்சிங்கை தூக்கிலிட்டு கொள்வதற்கு ஒப்புதல் அளித்தவரும், இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன் படையில் சேர்ந்து மக்களை கொல்வதற்கு ஊர், ஊராக சென்று ஆள் திரட்டிய தரகருமான காந்தி எப்படி அகிம்சாவதியாவார்? என்பதே என் கேள்வி. இதிலிருந்து அவர் ஒரு அகிம்சாவதியும் இல்லை என்பது தெளிவாகின்றது. ஆறாவது அறிவான பகுத்தறிவை கொண்ட, படித்த முற்போக்கானவர்கள் என்று தங்களை கூறிக் கொள்ளும் இன்றைய இளைய சமூகம் எப்படி காந்தியை அகிம்சாவதி எனக் கூறுகின்றார்கள் என எனக்கு கேள்வி எழும்புகின்றது. இதற்கு முக்கிய காரணம் இது தான் அவர்களுக்கு கற்பிக்கப்பட்டுள்ளது என்பதும், பொது புத்தியிலிருந்து விலகி இது போன்ற கட்டுகதைகளை உடைக்கவியலாத அவர்களின் கையாலாகாத தன்மையுமே காரணம். மேலும் எங்கே நம்மை சமூகம் தேசதுரோகியாக பார்த்துவிடுவார்களோ என்ற பயமும் அவர்களிடம் உள்ளது என்பதும் மறுக்கவியலாத உண்மைகள். அகிம்சாவாதம் என்ற கருத்தியலில் தான் அவரின் எல்லா போராட்டங்களும் உருவானதால், அவை எல்லாம் இங்கே உடைப்பட்டு போய் நிர்வாணமாக காட்சியளிக்கின்றன.
அடுத்து நான் இங்கே வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு காந்தி பேராசை கொண்ட ஒரு சர்வாதிகாரி என்பதே. ஆம் எங்கே நாம் இவ்வளவு நாள் சிரமப்பட்டு மக்களுக்கு குழிபறித்து உருவாக்கிய அந்த அடையாளத்தை இழந்து விடுவோமோ என்ற பயம் காந்திக்கு எப்போதுமே உண்டு. அதனால் தான் அவரே காங்கிரசில் சேர்த்த சுபாஷ் சந்திர போஸ் பின்னாளில் வளர்ந்து அவர் நிறுத்திய வேட்பாளரான பட்டாபி சீத்தாரமைய்யாவை தோற்கடித்த போது காந்தி தனது ஆதரவாளர்களையும் , மற்றவர்களையும் போஸ்ஸீன் எந்த ஒரு கூட்டத்திலும் கலந்துகொள்ள விடாமல் தடுத்து சுபாஷ் சந்திர போஸே வெறுத்து காங்கிரசை விட்டுமட்டுமல்ல இந்தியாவை விட்டே வெளியேற தேவையான எல்லா அரசியலையும் செய்தார் காந்தி. இதே போல பகத்சிங்கின் புகழ் வழக்காடு மன்ற பிரச்சாரம் மூலமாக வேகமாக வளர்ந்து வந்த போது அதை கண்டு பயந்து அவரை கொல்வதற்கு ஆங்கிலேய அரசிற்கு எல்லா உதவிகளையும் அளித்தார்.
இப்படிப்பட்ட பச்சோந்தி கொள்கைகளையுடைய, சர்வாதிகாரியும், மக்கள் துரோகியுமான காந்தி முதலில் ஒரு மனிதனா என்று உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள் நண்பர்களே.
நட்புடன்......
ப.நற்றமிழன்.
http://natramizhan.wordpress.com/2010/10/02/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4/
--
செல்வன்
www.holyox.blogspot.com"வரலாற்றை பற்றி சிறிதளவேனும் அறிந்தவர்கள் பெண்களின் பங்களிப்பின்றி மாபெரும் புரட்சிகளும், மாற்றங்களும் நிகழ்ந்ததில்லை என்பதை அறிவார்கள்.சமூக முன்னேற்றம் என்பது பெண்களின் முன்னேற்றத்தை வைத்தே அளவிடபடுகிறது-அவலட்சணமான பெண்களின் முன்னேற்றம் உட்பட.."- காரல் மார்க்ஸ்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
இந்த கட்டுரைக்கு கோபமான எதிர்வினைகள் வர காரணம் இதில் உள்ள சொற்பிரயோகங்களே."காந்தி மனிதனே இல்லை" என்று கட்டுரையாளர் எழுதியிருக்கிறார்.இம்மாதிரி அதீதமான சார்புநிலைகள்,வார்த்தைகளே இதற்கு இத்தனை கடுமையான எதிர்வினைகளை சில நண்பர்களை அளிக்க தூண்டியிருக்கும் என கருதுகிறேன்.
இதில் கூறப்பட்ட கருத்துக்கள் அனைத்துக்கும் இதே இழையில் பதில் அளித்தேன்.காந்தியை பிடிக்காதவர்கள் அதனால் திருப்தியடைவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை.நாள்பட,நாள்பட தான் மனதில் ஆழபதிந்த கருத்துக்களை மாற்ர இயலும்.
இந்த கட்டுரையில் காந்தி மீது சுமத்தபடும் குற்றசாட்டுகள் பெரும்பாலும் கான்ஸ்பைரசி தியரி.தாஜ்மகால் சிவன் கோயிலாக இருந்தது, நிலவில் மனிதன் காலடி எடுத்து வைக்கவில்லை, ஒபாமா ஒரு முஸ்லிம், 9/11 நிகழ்த்தியது யூதர்கள்/அமெரிக்க அரசு என்பது போல ஆதாரமே இல்லாத, வரலாற்று ஆய்வாளர்களால் புறக்கணிக்கபட்ட/ஒதுக்கப்பட்ட கான்ஸ்பைரசி தியரிகள்.கான்ஸ்பைரசி தியரிகளுக்கு ஒரு சந்தை உண்டு.அதை நம்புகிறவர்களை மாற்ரவே இயலாது.அடிப்படையில் நமக்கு காந்தியை பிடிக்காது என்றால் அவர் மேல் சுமத்தபடும் எந்த குற்றசாட்டையும் ஏற்கும் மனோநிலைக்கு தள்ளபடுவோம்.அவரது சாதனைகள் சாதனைகளே இல்லை என வாதிடுவோம்.அதேபோல் தான் இங்கேயும் நடக்கிறது.நேதாஜியை காந்தி கொன்றார், பகத்சிங்கை காப்பாற்றவில்லை, இந்திய சுதந்திரம் கிடைக்க காந்தி காரணம் அல்ல, கடற்படை ஸ்ட்ரைக்கே காரணம் என்பது எல்லாம் அடிப்படை ஆதாரம் இல்லாத, மெயின்ஸ்ட்ரீம் வரலாற்று ஆசிரியர்களால் நிராகரிக்கபட்ட தியரிகள்.
வெல்பவர்களால் வரலாறு எழுதபடுகிறது என்பது உண்மை.அந்த லாஜிக்படி இங்கே வரலாறு காந்தியின் சீடர்களால் எழுதபட்டதே வென்றது காந்திதான் என்பதை அல்லவா காட்டுகிறது?உலகெங்கும் உள்ல வரலாற்று ஆசிரியர்கள், மாபெரும் ஞானிகள், தலைவர்கள், மேதைகள், பொதுமக்கள் அனைவரும் காந்தியின் ஆளுமை குறித்தும் அது உலக வரலாற்றில் ஏற்படுத்திய மாற்றம் குறித்தும் பேசுகிறார்கள்.நோபல் அமைதி விருதுக்கு காந்தியின் பெயர் பலமுறை பரிசீலிக்கபட்டு அன்றைய அரசியல் சூழல் காரணமாக,ப்ரிட்டனை பகைத்துகொள்ள விருப்பாததன் காரனமாக காந்திக்கு வழங்கபடவில்லை.கருப்பர்களின் விடுதலை இயக்க பேரொளிகளான மார்ட்டின் லூதர் கிஙும், மண்டேலாவும் காந்திய வழிமுரையே தமக்கு ஆதர்சத்தை அளித்தது என்கிரார்கள்.அதே அகிம்சையை பயன்படுத்தி வெற்றி அடைகிறார்கள்.அப்புறமும் காந்தி கயவன் என கூறுபவர்களுக்கு வரலாற்று புரிதல் எந்த அளவுக்கு உள்லது என்பதே எனக்கு சந்தேகமாக உள்லது.ஒரு பரந்துபட்ட வரலாற்று பார்வை இவர்களிடம் இல்லை.ஒரு சித்தாந்தத்தின் ஊடாக நின்று அதனுள் நிற்காத அனைவரையும் எதிரிகளாக,மூடர்களாக பார்க்கும் மனபோக்கு மட்டுமே இவர்களிடம் உள்ளது.பொதுமக்கள் மூடர்கள், உலக மக்கள் மூடர்கள், காந்தி நயவஞ்சகர் அனைவரையும் ஏய்த்து வரலாற்று புத்தகத்தில் இடம்பெற்று விட்டார்.நான் தான் அதிமேதாவி.இதை உலகுக்கு எடுத்து சொல்லி அனைவரையும் திருத்த போகிரேன் என்ர மனஒப்போக்கு தான் இங்கே காந்தி மனிதனே இல்லை என கூறுபவர்களிடம் காணபடுகிறது.
"காந்தி மகாத்மா இல்லை, மனிதன் மட்டுமே" என இன்னொரு தரப்பு கூறுகிறது.இதை முதலில் யாரும் மறுக்கவில்லை.காந்தி மனிதர்,ஆனால் அவர் சாதாரண மனிதர் அல்லர்.அசாதாரணமானவர். உலக வரலாற்றில் காணகிடைத்த மனிதர்களில், தலைவர்களில் மிக மேன்மையானவர்.அவருக்கு ஒப்பான விடுதலை போராட்ட தலைவர்களை காண்பதே மிக அரிது.மொழியால், இனத்தாம்,மதத்தால் பிரிந்து கிடந்த மக்களை கட்டி இனைத்து ஒரு தேசத்தை உருவாக்கியவர்.சூரியனே அஸ்தமிக்காத ப்ரிட்டிஷ் அரசை வெறும் முப்பதாண்டு கால போரில் தோற்கடித்து காட்டியவர். ராஜதந்திரத்தால் இந்தியாவை கைபற்றி ஆண்ட ப்ரிட்டிஷாரை அதே ராஜதந்திரத்தால் ஜெயித்து காட்டிய ஸ்ட்ராடஜிஸ்ட்.காந்தியின் நிர்வாக மேலாண்மை திறன்கள் என ஒரு புத்தகமே எழுதி கல்லூரியில் வைக்கும் அளவுக்கு ராஜதந்திரத்தில் கைதேர்ந்தவர்.
சுயநலனை துறந்து,பொதுநலனை,தேசநலனை மட்டுமே சிந்தித்த தலைவர்.அவர் பதவி வெறியர், சர்வாதிகாரி என குற்றம் சாட்டுபவர்கள் அவர் எதற்கு அதிகாரத்தை விரும்பினார் என்பதை மறந்துவிடுகிரார்கள்.அவர் என்ன காசுக்கும், பதவிக்குமா அதிகாரம் கேட்டார்?அவர் அப்படிப்பட்டவராக இருந்திருந்தால் இந்தியாவின் ஒருங்கினைந்த பிரதமராக அவரால் ஆகியிருக்க முடியும்.அவர் அதை முற்றிலும் மறுத்தவர்.காசு பனம் சேர்க்காதவர்.வாரிசுகளை அரியணையில் அமர்த்தாதவர்.தன் உயிர்மூச்சான சத்தியாகிரக கொள்கையிலிருந்து கட்சி விலை செல்வதை தடுக்கவே அவர் நேதாஜியை சகலவிதமான ராஜதந்திரஙக்ளை பயன்படுத்தியும் வென்றார்.அவரை வழிநடத்தியது அவரது கொள்கை.அந்த கொள்கைக்கு தான் அவர் உயிர்வாழ்ந்தார்.அதனாலேயே உயிரையும் இழந்தார்.
இப்படிப்பட்ட மனிதரை உலகவராற்றில் எங்கும் காண்பது அரிது.காந்திக்கு ஒப்பன மனிதனே பூமியில் இதுவரை பிறந்ததில்லை.இனியும் பிறக்க வாய்ப்பு இல்லை.காந்தி ஏசுவை போன்ற கருணாமூர்த்தி, ஜார்ஜ் வாஷின்டனை போன்ற தேச தந்தை, கார்ல் வான் க்ளாஸ்விட்சையொத்த ராஜதந்திரி, கரிபால்டியை போன்ற அப்பழுக்கற்ற தேசபக்தர், முனிவர்களை ஒத்த ஆன்மிகவாதி, வள்ளுவரை ஒத்த செக்யூலரிஸ்ட், இத்தனைபேரையும் ஒரு தராசில் நிறுத்தி மறுதராஅசில் காந்தியை நிறுத்தினால் வேண்டுமானால் காந்திக்கு சமமானவர்கள் கிடைத்தார்கள் என கூறலாமே ஒழிய காந்திக்கு சமமான இன்னொருவரை உலகவராலற்றில் நாம் எங்கும் கானவே இயலாது.இத்தகையவருக்கு மகாத்மா பட்டம் பொருந்தாது என கூறினால் அப்புறம் அது வேறு யாருக்கு தான் பொருந்தும் என்பதை அறிய நான் ஆவலாக இருக்கிறேன்.
காந்தியிடம் தவறுகள் இல்லையா?இருந்தது.பெரும் தலைவர்கள் அனைவரிடமும் காணப்படும் தவறுகள் காந்தியிடமும் இருந்தது.மார்ட்டின் லூதர் கிங் விபசாரிகளுடன் க்ரூப் செக்ஸ் வைத்து கொண்டவர், மண்டேலா பெண்கள் விசகய்த்தில் படுவீக், ஜார்ஜ் வாசிங்க்டன் அடிமைகளை வைத்திருந்தவர்,,,அடுக்கிகொண்டே போகலாம்...குரைகள் இல்லாத மனிதன் இல்லை.நான் சொல்லுவது குறை,நிறை இரண்டையும் வைத்து ஒரு மனிதனை அளவிடுங்கள் என்பதே.அந்த அளவீட்டின்படி பார்த்தால் காந்திக்கு அருகே கூட யாரும் தென்படவில்லை.ஒப்புயர்வற்ற மாபெரும் மனிதர் அவர்.அவரை பற்றி உங்களுக்கு நல்ல கருத்து இருக்கோ, கெட்டவர் என்ற கருத்து இருக்கோ..அது வேறு விஷாய்ம்.அவரை குழுவதும் படியுங்கள் உள்வாங்குங்கள்.ஒற்றைபரிமான கண்ணோட்டங்களையும், சித்தாந்த பின்புலத்தின்பாற்பட்டும் அவரை அணுகாதீர்கள்.அதன்பின் காந்தி மகாத்மாவா,மனிதனா,கயவனா என யாரும் சொல்லாமலே உங்களுக்கே புரியும்.
//இந்த கட்டுரையில் காந்தி மீது சுமத்தபடும் குற்றசாட்டுகள் பெரும்பாலும் கான்ஸ்பைரசி தியரி.தாஜ்மகால் சிவன் கோயிலாக இருந்தது, நிலவில் மனிதன் காலடி எடுத்து வைக்கவில்லை, ஒபாமா ஒரு முஸ்லிம், 9/11 நிகழ்த்தியது யூதர்கள்/அமெரிக்க அரசு என்பது போல ஆதாரமே இல்லாத, வரலாற்று ஆய்வாளர்களால் புறக்கணிக்கபட்ட/ஒதுக்கப்பட்ட கான்ஸ்பைரசி தியரிகள்.கான்ஸ்பைரசி தியரிகளுக்கு ஒரு சந்தை உண்டு.அதை நம்புகிறவர்களை மாற்ரவே இயலாது.அடிப்படையில் நமக்கு காந்தியை பிடிக்காது என்றால் அவர் மேல் சுமத்தபடும் எந்த குற்றசாட்டையும் ஏற்கும் மனோநிலைக்கு தள்ளபடுவோம்.அவரது சாதனைகள் சாதனைகளே இல்லை என வாதிடுவோம்.அதேபோல் தான் இங்கேயும் நடக்கிறது.நேதாஜியை காந்தி கொன்றார், பகத்சிங்கை காப்பாற்றவில்லை, இந்திய சுதந்திரம் கிடைக்க காந்தி காரணம் அல்ல, கடற்படை ஸ்ட்ரைக்கே காரணம் என்பது எல்லாம் அடிப்படை ஆதாரம் இல்லாத, மெயின்ஸ்ட்ரீம் வரலாற்று ஆசிரியர்களால் நிராகரிக்கபட்ட தியரிகள்.//
நிச்சயமாக காந்தியை எங்களுக்கு பிடிக்காமல் போவதற்கு “ கான்ஸ்பைரசி தியரி“
காரணம் அல்ல காந்தியும் காங்கிரசும் தாழ்த்தப்பட்டோருக்கு செய்தது என்ன ? என்ற புத்தகம் படியுங்கள் .
நாங்கள் தனிமனிதர்களின் தனி நடத்தைகளை வைத்து கொள்கைகளை தீர்மானிப்பதில்லை காந்தியாரின் நடவடிக்கைகளால் ஈர்கக்ப்பட்ட மற்றவர்களைப்போலவே பெரியாரும் ஈர்க்கப்படுகிறார். மிகத்தீவிரமாக செயல் படுகிறார் பதவி பட்டங்கள் துறப்பதிலிருந்து கள்ளுக்கடை மறியல், கதர் உடுத்துதல் வரை காந்தியார் அறிவித்த அனைத்துப் போராட்டங்கறிலும் தீவிரமாக தான் மட்டும் இறங்கியது மட்டுமல்லாமல் தன் குடும்பத்தையே ஈடுபடுத்துகிறார் பெரியார் .
பின்னாளில் பெரியாரின் கொள்கை காந்தியிடமிருந்து வேறுபடுகிறது
காந்தி ராம ராஜ்யம் என்பார் ராமன் அடித்தட்டு மக்களின் விரோதி என்பதைக் கூறியவுடன் நான் குறிப்பிடுவது புராணகாலத்து ராமன் அல்ல. இது வேறு ராமன் என்பார் மனுதமைம் சிறந்தது என்பார்
காந்தி பின்னாட்களின் கடைசிகாலத்தில் சனாதனத்திலிருந்து மீண்டு கருத்து கூறிய, சிலநாட்களில் மஹாத்மா என்றுபட்டம் கொடுத்த பார்ப்பனர்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.
இது இததான் வெறி என்பது
இது போல் வரலாற்றில் எத்தனையோ பேர் கொலையுண்டு இருக்கிறார்கள்.
2010/10/5 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
--
---------------------------------------------------------------------------------------------------------------------
You received this message because you are a member of Google
Groups "Thanthaiperiyar".
Send your e-mails to: thantha...@googlegroups.com
Group home: http://groups.google.com/group/thanthaiperiyar
unsubscribe e-mails to: thanthaiperiy...@googlegroups.com
-------------------------------------------------------------------------------------------------------------------
Home Page: http://www.periyarkural.com
http://thanthaiperiyar.blogspot.com/
எனது தந்தை காந்தியார் தலைமையில் தேச விடுதலைக்குப் போராடிச் சிறை சென்றவர் என்பதில் பெருமைப்படுகிறேன்.
நேரம் கிடைக்கும்போது அவரை பற்றி எழுதுங்கள் ஐயா.அவரது புகைப்படம், போராட்ட வரலாறு இது எல்லாம் ஆவணப்படுத்தபடுவது நம் வரலாற்றை நாம் அறிய உதவும்.
--
அன்புடன்
மலர்பாலாநீ கடைசிவரை உன் உரிமைக்காகப் போராட வேண்டும்.
நீ யாருடன் போராடுகிறாயோ அவர்களை உன் எதிரியாகக் கருதாதே.
அவர்கள் மீது வெறுப்பு இல்லாமல் போராடு.
அப்போதுதான் நீ முழுமையான வெற்றியை அடையமுடியும்.மார்டின் லூதர் கிங்
குழப்ப வாதிகளுக்கு, திராவிட இனம் மட்டுமல்ல முழு மனித இனமும் உய்ய வேண்டும் என்று தம் வாழ்நாளை அர்ப்பணித்த பெரியார் தோற்றதாகத்தான் தெரியும். பெரியார் என்ற மாமனிதனால்தான் தமிழினம் இன்று பிற இந்திய இனங்களை விட நன்றாக வாழ்கிறது.
அய்யா,கருஞ்சட்டைக் காரர்கள் குறைவு என்ற கருத்து சரியே. ஆனால், சிந்தனைத் தெளிவு பெற்றவர்கள் தமிழகத்தில் மிகுதியானவர்கள். இம்மாற்றம் பெரியாரால் ஏற்பட்டதே.2010/10/5 ARUMUGAM ELANGOVAN <arue...@gmail.com>
அய்யா,கசடறக் கற்றவர்களுக்கும், பகுத்தறிவாளர்களுக்கும் யாருடைய வழிநடத்தலும் தேவையில்லை. பெருமைக்கும், சிறுமைக்கும் தத்தம் கருமமே என்பதை உணர்ந்தவரே கற்றவர் என்பதும் எனது கருத்து.
காந்திஜியை மகாத்மா என்று போற்றுகிறோம், ஏன்? அவர் வாழ்வில் நடந்த சில சம்பவங்களே அவர் ஒரு மகாத்மா என்பதற்கு அடையாளம்… அதிலிருந்து சில துளிகள்…
துப்புரவுத் தொழிலாளி காந்தி…
ஜுலை 1947ல் காந்திஜி கல்கத்தாவிற்கு வந்தார், காரணம் இந்து முஸ்லிம் பிரச்சனை. அவர்களுக்கிடையே ஒற்றுமை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக காந்திஜி தீவிரமாக உழைத்தார். ஒரு முஸ்லிம் பெண் வீட்டில் தங்கியிருந்தார். பின்னர் சதீஷ் சந்திரதாஸ் குப்தா என்பவரின் ஆசிரமத்திலும் சில நாட்கள் தங்கியிருந்தார். வங்காளத்தின் பிரதமராக இருந்த சோராவதி என்பவரை அழைத்து தன்னோடு சேர்ந்து ஒற்றுமைக்கு வழிவகுக்க உறுதுணையாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார். முஸ்லிம்கள் வந்து இந்துக்களைப் பற்றிக் குறை சொல்லிவிட்டுப் போவார்கள். இந்துக்கள் முஸ்லிம்களைப் பற்றி குறை சொல்லிச் செல்வார்கள். காந்திஜி அதையெல்லாம் பொறுமையாகக் கேட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறுவார். கிட்டத்தட்ட மூன்று நாட்களாக இது தொடர்ந்தது. அவருக்கு ஓய்வே இல்லை.
ஒருநாள் மதிய வேளையில் காந்திஜி இயற்கை உபாதையைக் தணிப்பற்காக கழிவறைக்குச் சென்றிருந்தார். அவர் வரும்போது அவரது செயலாளர் எதிரே சென்று, ‘எனக்கு எந்த வேலையுமில்லை. சும்மாவே இருக்க மிகவும் சிரமமாக இருக்கிறது’ என்றார். உடனே காந்திஜிக்கு கோபம் வந்து விட்டது.
என்னது வேலையில்லையா, எத்தனையோ வேலைகள் இருக்கின்றனவே! இப்போதுதான் நான் கழிவறைக்குப் போய் வந்தேன். போ, அதைப் போய் சுத்தம் செய், போ’ என்று கூறினார். செயலாளரும் உடன் அந்த வேலையைச் செய்யச் சென்றார்.
காந்திஜி அந்த அளவுக்கு சமத்துவம் பேணுபவராக இருந்தார். ஸ்வீப்பர் வந்துதான் அதைச் செய்ய வேண்டும் என்பதில்லை. யார் வேண்டுமானாலும் அதைச் செய்யலாம். அவரே பலமுறை அவ்வாறு பல கழிப்பிடங்களைச் சுத்தம் செய்திருக்கிறார். பலரது கழிவுகளைத் துப்புரவு செய்திருக்கிறார். அவர் ஒரு துப்புரவுத் தொழிலாளியாக பல சேரிப்பகுதிகளுக்குச் சென்று அவ்வேலையை, எந்தவித முகச் சுளிப்பும் இல்லாமல் செய்திருக்கிறார். அதனால் தான் அவர் மகாத்மா.
*************
காந்திஜி பத்திரிகையாளர்களைச் சந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வெளிநாட்டுப் பத்திரிகையாளர் அங்கே வந்தார். அவர் காந்திஜியிடம், ’உங்களை ஒருநாள் மட்டும் இந்நாட்டின் கவர்னர் ஜெனரலாக நியமித்தால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டார்.
அதற்கு காந்திஜி, ‘கவர்னர் ஜெனரலிம் மாளிகை அருகே அமைந்துள்ள துப்புரவுத் தொழிலாளிகளின் குடியிருப்பைச் சுத்தம் செய்வேன்’ என்றார்.
‘உங்களை மேலும் ஒருநாள் அப்பணியில் நீட்டித்தால்?…’
‘மறுநாளும் அதே பணியைத் தான் செய்வேன்’ என்றார் காந்தி.
பத்திரிகையாளர் காந்திஜியின் உறுதியை நினைத்து வியந்தார்.
*************
செருப்புத் தைக்க வாங்க…
காந்திஜியிடம் ஆலோசனை கேட்பதற்காக ஒருமுறை சேவாகிராமத்திற்கு சர்தார் படேலும், ஜவஹர்லால் நேருவும் வந்திருந்தனர். அப்போது காந்திஜி பயிற்சியாளர்களுக்கு செருப்பு தைப்பது எப்படி என்று வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். “துண்டுகளை இப்படிப் பொருத்த வேண்டும். தையலை இப்படிப் போட வேண்டும். அடிப்பாகம் அதிக எடையைத் தாங்குவதால் சரியான முறையில் அதனைப் பொருத்த வேண்டும்’ என்றெல்லாம் அவர் மாணவர்களுக்கு விரிவாக விளக்கி செய்முறைப் பயிற்சி தந்து கொண்டிருந்தார்.
அதைப் பார்த்த நேருவும், படேலும், ‘என்ன இது பொன்னான இந்த நேரத்தை இந்தப் பயிற்சியாளர்கள் இப்படிப் பாழடிக்கிறார்களே!’ என்று அங்கலாய்த்தனர்.
உடனே காந்திஜிக்குக் கோபம் வந்து விட்டது.‘அவர்கள் பாடம் கற்றுக் கொள்வதைக் குறை சொல்லாதீர்கள். வேண்டுமானால் நீங்களும் வந்து இப்படி அமர்ந்து நல்ல ஜோடி செருப்பை எப்படிச் செய்வது என்று கற்றுக் கொள்ளலாம்’ என்றார்.
நேருவும், படேலும் பதில் பேச முடியாது மௌனமாக நின்றனர்.
குற்றால அருவியில்….
1934 ஆம் ஆண்டில் ஒருமுறை காந்திஜி குற்றாலத்துக்கு வந்திருந்தார். உடன் வந்திருந்தோர் உட்பட அனைவரும் அருவியில் குளிப்பதற்கு மிக்க ஆவலாக இருந்தனர்.திடீரென காந்தி அங்கே குளிப்பதற்கு வந்திருந்த பிற சுற்றுலாவாசிகளிடம்,”இந்த அருவியில் ஹரிஜனங்கள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்களா?” என்று கேட்டார். உடன் அவர்கள், “ இல்லை. கோயிலின் முன்பாக வரவேண்டியிருப்பதால்அவர்கள்இங்கே வந்து குளிப்பதற்கு அனுமதியில்லை” என்றனர்.
அவ்வளவுதான்.“என்றைக்கு இந்த அருவியில் ஹரிஜனங்கள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்களோ, அதன் பிறகு நானும் வந்து குளிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, உடன் வந்தவர்கள் திகைத்து நிற்க, திரும்பிக்கூடப் பார்க்காமல் நடந்து சென்றார் காந்திஜி.
காந்திஜியின் கருணை
காந்திஜி லண்டனில் பாரிஸ்டர் படிப்பை முடித்து விட்டு, இந்தியாவில் வக்கீலாக பணிபுரிந்து வந்து கொண்டிருந்த காலம். வக்கீல் தொழில் செய்வது போக எஞ்சியிருந்த நேரங்களில் சமூகப் பணி செய்து வந்தார் காந்தி.
ஒருநாள், காந்திஜியின் வீட்டு வாசலில் குஷ்டநோய் உள்ள ஒருவன் வந்து பிச்சை கேட்டான். அவனைக் கண்டு காந்தியின் மனம் இரங்கியது. அவனைப் பற்றி, அவன் குடும்பம் பற்றி, அவன் பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்தது பற்றி விசாரித்தார். அவனுக்கு ஒருவேளை சோறு மட்டும் போட்டு அனுப்பி வைத்துவிட அவர் விரும்பவில்லை.எனவே அவனைத் தன் வீட்டிலேயே தங்கச் சொன்னார். அவனுடைய உடம்பிலிருந்த புண்களைத் தாமே துடைத்து மருந்திட்டார். அவன் ஓரளவு குணமாகும் வரை சில நாட்கள், அந்த பிச்சைக்காரனுக்குத் தொண்டு செய்தார். அவன் உடல் நலம் சற்றுத் தேறியதும், ஒப்பந்தக் கூலிகளுக்காக ஏற்பட்ட மருத்துவமனைக்கு அவனை அனுப்பி வைத்தார்.அதுமுதல் நோயாளிகளுக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்ற எண்ணம் காந்திஜியின் உள்ளத்தில் அதிகமாகியது.
நண்பர் அளித்த நன்கொடை மூலம் ஏழைகளுக்காக ஒரு இலவச மருத்துவமனையை நிறுவிய காந்தி, டாக்டர் பூத் என்பவரை அதன் பொறுப்பாளராக நியமித்தார். தான் அவருக்கு உதவியாளராகப் பணி செய்தார். நோயாளிகளுக்கு தானே தன் கையால் மருந்திட்டு அவர்களைத் தேற்றினார்.
இது போன்றவற்றால் காந்தியை மகாத்மா என்கிறோம்.இந்த தேசத்திற்கு ஓராயிரம் காந்திகள் தேவை அல்லவா?
அவரது இந்தப் பிறந்த நாளில் உள்ளன்போடு அவரை நினைவு கூர்வோம்.