மன்பதை

476 views
Skip to first unread message

C.R. Selvakumar

unread,
Feb 23, 2021, 3:38:51 PM2/23/21
to தமிழ் மன்றம்
43 நி  · 
பொது உடன் பகிர்ந்தது
பொது
அறிந்த சொல்லே! ஆனாலும் இன்னும் ஆளப்படவேண்டிய சொல். ஆங்கிலத்திலே humanity என்றால் தமிழர்கள் புரிந்துகொள்ளுகின்றார்கள். மக்களின் மொத்தத் தொகுப்பைக் குறிப்பது ஒரு பொருள். இதனைத் தமிழில் மன்பதை என்னும் மிக அழகான சொல்லால் குறித்து வந்துள்ளோம். இப்பொழுதும் அரிதாகப் பயன்படுத்துகின்றோம். மக்கள் கூட்டத்தை, மொத்தத் தொகுதியை மன்பதை என்னும் சொல்லால் அழைப்பது அழகு,
சங்க இலக்கியத்திலே 11 முறை ஆளப்பட்டுள்ளது:
___பாண்டியராசாவின் தொடரடைவில் இருந்து_______
கொன்று புறம்பெற்று மன்பதை நிரப்பி - பதி 40/11
மன்பதை மருள அரசு பட கடந்து - பதி 42/16
மன்பதை காப்ப அறிவு வலியுறுத்தும் - பதி 72/5
மன்பதை பெயர அரசு களத்து ஒழிய - பதி 77/3
மன்பதை சவட்டும் கூற்ற முன்ப - பதி 84/7
மன்பதை எல்லாம் மடிந்த இரும் கங்குல் - கலி 65/3
மன்பதை புரக்கும் நன் நாட்டு பொருநன் - புறம் 68/10
மன்பதை காக்கும் நீள் குடி சிறந்த - புறம் 71/17
மன்பதை எல்லாம் சென்று உண கங்கை - புறம் 161/6
மன்பதை காக்கும் நின் புரைமை நோக்காது - புறம் 210/1
மன்பதை எல்லாம் தானாய் - புறம் 356/8
_________________
மன்பது என்றும் இச்சொல் ஆளப்படுகின்றது.
தமிழ்ப்பேரகராதி:
______
மன்பது maṉpatu , n. prob. மன்னு-. See மன்பதை, 1. மன்பது மறுக்கத் துன்பங் களைவோன் (பரிபா. 15, 52).
மன்பதை maṉpatai , n. < மன்பது. 1. Humanity; மக்கட்பரப்பு. (சூடா.) மன்பதை காக்கு நின்புரைமை (புறநா. 210). 2. Army; படை. மன் பதை பெயர (பதிற்றுப். 77, 3).
-------
இதேபோல மரபணுச்சரத்தின் மொத்தத் தொகுதியை (genome) என்பதை மரபணுப்பதை என்றும். proteome என்பதைப் புரதப்பதை என்றும் பொதுவாக -ome என்று முடிவனவற்றை -பதை என்னும் பின்னொட்டால் குறிக்கலாம் என்று கருதுகின்றேன்.

--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

வேந்தன் அரசு

unread,
Feb 23, 2021, 9:22:27 PM2/23/21
to தமிழ் மன்றம்
தமிழ்ச்சான்றோர்கள் சான்றோர்களிடை மட்டும் அளவளாவினால் தமிழ்செழிக்காது.  அவர்கள் கீழிறங்கி நயந்தாரா ரசிகர்களிடம் அளவளாவணும். 

ருத்ரா'போல் சங்கத்தமிழில் கவிதை எழுதிப்பயனில்லை. சங்கச்சொற்களை உரையாடலில் திணிக்கணும்.

புத., 24 பிப்., 2021, முற்பகல் 2:08 அன்று, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAEBez7doScExgx4kCgUMD7e69Fc970NuhYx%2BGGYsu1qxhKHw7w%40mail.gmail.com.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

C.R. Selvakumar

unread,
Feb 23, 2021, 9:35:12 PM2/23/21
to தமிழ் மன்றம்

அவை சங்கச்சொற்கள் அல்ல, தங்கச் சொற்கள்

இனியவே பொருத்திக் கொள்ளவேண்டும்.


பலராமன் என்னும் நண்பர் அருமையான கலைச்சொற்களைக்

கதையில் இயல்பாக  இனிதாகப் பொருத்தி ஆண்டுள்ளார்.

ஒரு கிரந்த எழுத்தும் இல்லை. பேச்சு நடையில்

சொல் வடிவில் சிறிது உறழ்ச்சி . புதிய

கண்ணோட்டத்தில் விருவிறுப்பாக ஓடும் கதை. ஒரு

புதிய பாங்கில் எழுதியுள்ளார். 

அமேசானில் கிட்டுகின்றது. பெயர்: எதிர்கால நினைவுகள்

எதிர்கால நினைவுகள்.jpg

அன்புடன்

செல்வா


சொ. வினைதீர்த்தான்

unread,
Feb 23, 2021, 10:35:02 PM2/23/21
to தமிழ் மன்றம்
மன்பதை போற்ற வேண்டிய மாண்பமை சிந்தனை!

"தன் தாய் மொழி இலக்கியச் செல்வம் ஒருவனுடைய பிறப்புரிமை மட்டுமல்ல அதனை அவன் கைக்கொள்ளவும், பயன்படுத்தித் தன் உரிமையை நிலைநிறுத்தவும் வேண்டும்"
என்று திரு AK.இராமானுசத்தின் ஆங்கிலச் சொற்றொடரை நான் மொழி ஆக்கம் செய்து என்னுடைய உரையில் பயன்படுத்தினேன்.

"One's own tradition is not only one's birthright, it has to be earned and repossessed"
 -- AK.Ramanujam

அதனையே தாங்கள் செயலாக்கிக் காட்டியிருக்கிறீர்கள் நண்பர் திரு செல்வா!

வாழ்த்தும் பாராட்டும்!

நன்றி
சொ.வினைதீர்த்தான்

rajam

unread,
Feb 23, 2021, 11:57:52 PM2/23/21
to tamil...@googlegroups.com
1. முதலில் … மன்பதை என்ற சொல்லை எப்படிப் பிரிக்கவேண்டும் என்று தெரியவேண்டும்.

2. அடுத்து … இதே போல அமைப்புள்ள … ‘பதை’ என்ற ‘பின்னொட்டு’ அமைந்த சொற்களைக் கண்டறியவேண்டும். 


நன்றி,
ராஜம்  



சொ. வினைதீர்த்தான்

unread,
Feb 24, 2021, 1:19:00 AM2/24/21
to தமிழ் மன்றம்
நலமா திருமிகு இராஜம் மா!

தங்களுடைய பதில் செய்திக்கு நன்றி.

AK.இராமானுசத்தின் ஆங்கிலச் சொற்றொடருக்கு என்னுடைய மொழிமாற்றத்தின் பொருத்தம் குறித்தும் நாம் பயன்படுத்தினால் தான் நமக்கு எதுவும் உரிமை என்ற கருத்துக் குறித்தும் தாங்கள் எழுத வேண்டுகிறேன்.

தன் தாய் மொழி இலக்கியச் செல்வம் ஒருவனுடைய பிறப்புரிமை மட்டுமல்ல அதனை அவன் கைக்கொள்ளவும், பயன்படுத்தித் தன் உரிமையை நிலைநிறுத்தவும் வேண்டும்"
என்று திரு AK.இராமானுசத்தின் ஆங்கிலச் சொற்றொடரை நான் மொழி ஆக்கம் செய்து என்னுடைய உரையில் பயன்படுத்தினேன்.

"One's own tradition is not only one's birthright, it has to be earned and repossessed"
 -- AK.Ramanujam

அன்புடன்,
சொ.வினைதீர்த்தான்

தேமொழி

unread,
Feb 24, 2021, 2:20:19 AM2/24/21
to தமிழ் மன்றம்

மன்பதை = மன்பு  + அது + ஐ. 'அது', ஆறாம் வேற்றுமை உருபு. 'ஐ', இரண்டாம் வேற்றுமை உருபு.

மன்பு = மன் + பு. மனம் + கொண்டு வெளிப்படுவது. மக்கள்.  மனித இனம். 

மன்பதை = மக்கள் அதை. மனம் கொண்ட மக்களை. ஆறறிவு கொண்டு வெளிப்படும் மக்களை.

வாட்சப் - (இன்று ஒரு சொல்) குழுமத்தில் கேட்டு அறிந்து கொண்ட விளக்கம் இது. 

Iraamaki

unread,
Feb 24, 2021, 7:08:38 AM2/24/21
to tamil...@googlegroups.com
--------------------------
மன்பு = மன் + பு. மனம் + கொண்டு வெளிப்படுவது. மக்கள்.  மனித இனம். 
--------------------------
இந்தப் பொருள் எங்கு சொல்லப் பட்டிருக்கிறது? எந்த அகரமுதலியிலும் காணமுடியவில்லையே? நினைத்த படியெல்லாம் பொருள் சொல்ல முடியுமா?
 
அன்புடன்,
இராம.கி,

C.R. Selvakumar

unread,
Feb 24, 2021, 7:56:33 AM2/24/21
to தமிழ் மன்றம்

அச்சச்சோ, அப்படியெல்லாம் இல்லை சொ.வி ஐயா!

உங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி. 


அன்புடன்

செல்வா

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

C.R. Selvakumar

unread,
Feb 24, 2021, 2:30:21 PM2/24/21
to தமிழ் மன்றம்



என் கருத்துகளை உங்களின் கருத்துக்குக்கீழே இட்டுள்ளேன்.


On Tue, Feb 23, 2021 at 11:57 PM rajam <ra...@earthlink.net> wrote:
1. முதலில் … மன்பதை என்ற சொல்லை எப்படிப் பிரிக்கவேண்டும் என்று தெரியவேண்டும்.

ஆம்.

சங்க இலக்கியத்தில் ஆளப்பட்ட சொல்லை (பின்னரும் பல இலக்கியங்களிலே

ஆளப்பட்ட சொல்லை) எப்படிப் பிரிக்கவேண்டும் என்று உங்களைப்போன்ற

தமிழறிஞர்கள்தாம் சொல்லவேண்டும்.


2. அடுத்து … இதே போல அமைப்புள்ள … ‘பதை’ என்ற ‘பின்னொட்டு’ அமைந்த சொற்களைக் கண்டறியவேண்டும். 

ஆம், ஆனால் தேடிப்பார்த்த அளவிலே ஏதும் கிடைக்கவில்லை.

கட்டாயம் ஓரிரு சொற்களாவது இருக்கவேண்டும் என்பது

என் எதிர்பார்ப்பு. இன்னும் தேடவேண்டும். சொற்களின் பகுதிகளைத்

தேடுசொல்லாக இட்டுத் தேடும் வசதி இல்லை.  
இந்த -ome என்னும் பின்னொட்டு அண்மையில் ஆங்கிலத்தில் உருவானது, 

genome (n.)
"sum total of genes in a set," 1930, genom, modeled on German genom, coined 1920 by German botanist Hans Winkler, from gen "gene" (see gene) + (chromos)om "chromosome" (see chromosome). 

குரோமோசோம்  (நிறப்புரி) என்பதில் இருந்து -ஓம் (-ome) எடுத்துக்கொண்டார்கள். 
-------------

இப்பொழுது நிறுவப்படாத என் கருத்துகளைப் பகிர்கின்றேன்.


மன்பது + ஐ = மன்பதை ஆகும் (உகரம் நீங்கி ஐகாரம் ஏற்றல்).

பொதுவாக வினைச்சொல்லாக இருந்தால் தொகு + ஐ = தொகை

வகு + ஐ = வகை என்பன போன்று பெயர்ச்சொற்கள் ஆக்கலாம்.


மன்பது என்பது வினைச்சொல் போல தெரியவில்லை

மன்பது என்பதை மன்+பது என்று பிரிக்கவேண்டுமா மன் > மன்பு+அது என்று

பிரிக்கவேண்டுமா என்றும் தெரியவில்லை.

பற்று என்னும் சொல் சேர்வது பற்றிக்கொள் என்னும் பொருள் தரும்


பற்றம் என்றும் ஒரு சொல் உள்ளது இதன் பொருள் கூட்டம், கற்றை  என்று

அகராதி சொல்லுகின்றது (கழக அகராதி). 


தமிழ்ப்பேரகராதியும் கீழ்க்கண்டவாறு காட்டுகின்றது:

பற்றம் paṟṟam , n. பற்று-. 1. Collection; mass, as of hair; கற்றை. குழற் பற்றத்தையும் (சீவக. 1707).
2. Crowd, multitude;
கூட்டம். ஆட்டுப்பற்றம். Nāñ. 3. Thickness, bulk; கனம். (J.)
4. Swelling;
வீக்கம். 5. Grasping, taking hold, bearing; துணையாகப் பிடிக்கை. 


பற்றம் > பத்தம் என்றும் ஆகி  குவியல் என்னும் பொருள் தருகின்றது



தமிழ்ப்பேரகராதி:

பத்தம்¹ pattam , n. cf. பற்றம். Mass, heap, collection; குவியல். தூற்றும்பத்தம் (பட்டினத்துப். கோயிற்றிரு. 2)


பத்தம் பத்து ஆகி பது எனக் குறுகியிருக்கலாமோ என்றும் கருதலாம்.

மன்+பது + ஐ என்பது ஒரு வகையில் கூடும் ஆனால் பது என்பதல் சொல் வடிவமும்

பொருளும் உறுதிப்படவேண்டும்.


பதை என்பது சேர்க்கை, கூட்டத்தொகுதி என்னும் பொருள் சுட்டுவதாக

உணர்கின்றேன் ஆனால் உள்ளுணர்வன்றி தக்க சான்று கிட்டவில்லை. 

பதை என்பது முழுமையான தொகுதியைச் சுட்டுமென்றால் பயனுடைய

ஒரு பின்னொட்டுச் சொல்லாக இருக்கும். 

அன்புடன்

செல்வா

rajam

unread,
Feb 24, 2021, 11:26:04 PM2/24/21
to tamil...@googlegroups.com
வணக்கம், இராம.கி ஐயா.

அன்பு என்ற சொல்லை அல் + பு; அன் + பு என்று பிரிப்பதைப் போலவே … மன்பதை என்ற சொல்லிலிருந்து மன்பு என்று பிரித்தெடுத்து மன் + பு என்று கொண்டு பொருள் உரைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். 

வளர்க இணையத்தமிழாய்வு! 



Iraamaki

unread,
Feb 24, 2021, 11:42:59 PM2/24/21
to tamil...@googlegroups.com
மன்பு என்ற சொல்  எந்த அகரமுதலியிலும் இல்லை.  மன்பு+ அது+ஐ என்பது தவறு  என்றே நான் சொல்வேன். மன்+பதை என்பது தான் ஓரளவு பொருந்துவது போல் தெரிகிறது. இதிலும் சிக்கல் உண்டு. சரியான வீளக்கத்தை இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறேன்.
 
அன்புடன்,
இராம.கி.

rajam

unread,
Feb 24, 2021, 11:44:49 PM2/24/21
to tamilmantram, vallamai, mintamil
நண்பர்களே, வணக்கம்.

நான் ‘வாட்சப்’ போன்ற குழுமங்களில் இல்லை. எனக்காக … ஒரு சொல்லைப் பற்றிக் கேட்டறிய முடிந்தால் அறிந்து சொல்லவும்.

அந்தச் சொல் ‘கில்லா.’ சங்க இலக்கியத்தில் ஒரே ஓர் இடத்தில் காணப்படுகிறது. அதைப்பற்றி இணையக் குழுமங்கள் என்ன சொல்கின்றன என்று அறிய ஆவல்.

[தற்குறிப்பு: நெடுங்கால முன்பு ... இதைப் பற்றித் தமிழாய்வாளர் கமில் சுவலெபில் அவர்களிடம் கேட்டேன், விடையே கிடைக்கவில்லை. :-( ]

Jean-Luc Chevillard

unread,
Feb 25, 2021, 2:00:40 AM2/25/21
to tamil...@googlegroups.com, vallamai, mintamil
Greetings

"விடவும் கில்லேன்"

Tēvāram 4:36__2

போவது ஓர் நெறியும் ஆனார்; புரிசடைப் புனிதனார்;---நான்
வேவது ஓர் வினையில் பட்டு வெம்மைதான் விடவும் கில்லேன்;
கூவல்தான் அவர்கள் கேளார்---குணம் இலா ஐவர் செய்யும்
பாவமே தீர நின்றார்---பழனத்து எம் பரமனாரே.




-- jlc (in Müssen)

https://twitter.com/JLC1956


C.R. Selvakumar

unread,
Feb 25, 2021, 1:39:59 PM2/25/21
to தமிழ் மன்றம், vallamai

மிக்க நன்றி இழான் (Jean-Luc).


கில்-கில்-தல், கிற்றல் என்பதைப் பார்த்திருக்கின்றேன். செய்யகில்லேன் என்று

நானே சில இடங்களில் பயன்படுத்தியும் உள்ளேன்.  இது நன்கு அறிந்த

சொல்லாகவே நான் நினைத்திருந்தேன். ஆனால் இசானபோர்டு இசுட்டீவர்

(Sanford Steever) இந்தக் ‘கில்’ என்னும் சொல்லைப்பற்றி புதிய கண்டுபிடிப்பாக

எழுதியதைப் பார்த்து சற்று அதிர்ச்சியுற்றேன். 

இதைபற்றி அப்பொழுதே எழுதவேண்டுமென்று நினைத்தேன்.

தமிழ்ப்பேரகராதி தெளிவாக, கில்-தல், கிற்றல் பற்றிக் கூறுகின்றது:


கில்¹-தல் [கிற்றல்] kil- , 10 v. intr. To be able; ஆற்றல்கொள்ளுதல். கிற்பன் கில்லேன் (திவ். திருவாய். 3, 2, 6).

கில்²
 kil
 , part. Verbal infix indicating ability; ஆற்றலுணர்த்தும் இடைநிலை. வெம்ப வரு கிற்பதன்று கூற்ற நம்மேல் (தேவா. 1229, 2).

கம்ப இராமாயணத்திலே பல இடங்களில் வருகின்றது இச்சொல். 

“துயரம் நான் தீர்க்ககிற்றிலேன்” என்று ஈரிடங்களில் வருகின்றது.

அன்புடன்

செல்வா

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

rajam

unread,
Feb 25, 2021, 5:25:57 PM2/25/21
to tamil...@googlegroups.com, vallamai
வணக்கம். தங்கள் பதிவுகளுக்கு மிக்க நன்றி, நண்பர்களே. 

என் துழவு / துழாவுதல் … கில்லா என்ற அடிச்சொல்லைப் (root/stem) பற்றி; கில் என்ற இடைச்சொல்லையோ / இடைநிலையையோ (infix) பற்றியதன்று. 

சங்க இலக்கியத்துக்குப் பிற்கால இலக்கியங்களில் ‘-கில்’ என்ற சொல்லின் ஆட்சி பற்றி அறிவேன். 

பிற்கால அகராதிகள் … ???  நான் அகராதிகளை நம்பி என் ஆய்வைச் செய்வதில்லை. 

அப்படியே, கையோடு கையாக … பரிபாடல் 12 -ஐயும் பார்த்துவிடவும். 
[தற்குறிப்பு: இது இக்கால இணையத் தமிழரின் கூச்சலை விவரிப்பது-போலவே இருக்கும்! :-) ]

நன்றி,
ராஜம் 

Jean-Luc Chevillard

unread,
Feb 26, 2021, 2:37:21 AM2/26/21
to tamil...@googlegroups.com, vallamai
Dear VSR,

in case you (or other members of the list) are interested to know how François Gros translated in 1968 into French the passage which you are referring to, here is his French translation:


«Les mots que disent ceux qui se tiennent en rangs serrés sur le bord de la rive,
Nombreux et confus, s'élèvent à la fois.
Qui peut les comprendre et les écouter tous ? C'est impossible!
Quelques-uns seulement ont été perceptibles à nos oreilles.»
(François Gros, 1968, page 82)


முன்றுறை நிறையணி நின்றவர் மொழிமொழி
ஒன்றல பலபல வுடனெழுந் தன்றவை
எல்லாந் தெரியக் கேட்குநர் யாரவை
கில்லா கேள்வி கேட்டன சிலசில

((PARI 12, lines 36-39))


Best wishes


-- Jean-Luc (in Müssen)


https://twitter.com/JLC1956

தேமொழி

unread,
Feb 26, 2021, 3:24:48 AM2/26/21
to தமிழ் மன்றம்
Qui peut les comprendre et les écouter tous ? C'est impossible!
Quelques-uns seulement ont été perceptibles à nos oreilles.

ஆகா இதைத்தான் ராஜம் அம்மா மறைமுகமாக .. .. .. 
"கூச்சலை விவரிப்பது-போலவே இருக்கும்" என்று குறிப்பிட்டு உள்ளார்களோ !!!!! 🤔🤔🤔

C.R. Selvakumar

unread,
Feb 26, 2021, 8:24:19 AM2/26/21
to தமிழ் மன்றம், vallamai

அம்மையீர்,


வணக்கம்.


கில்லா என்பதை “கூடா” என்னும் பொருளில பொ.வே. சோமசுந்தரனார் ஆண்டுள்ளார்

பரிபாடல் - உரை பொ.வே. சோமசுந்தரனார், கழக வெளியீடு பக் 268-9 

….துறை

முன்றுறை நிறையணி நின்றவர் மொழிமொழி

ஒன்றல பலபல வுடனெழுந் தன்றவை

எல்லாந் தெரியக் கேட்குநர் யாரவை

கில்லா கேள்வி கேட்டன சிலசில


என்னும் வரிகளுக்கு

துறை முன்றுறை நிறையணி மொழிமொழி - அப்பொழுது அவ் வையையின்கண் நீராடுந் துறையின்

முன் நிறைந்த அணி அணியாக நின்ற மாந்தர் மொழிகின்ற மொழிகள்.

ஒன்றல பலபல உடனெழுந்தன்று - ஒன்றையொன்று ஒவ்வாது பலபலவாக ஒருகாலத்தெழுந்தன.

யாரவை எல்லாம் தெரிய கேட்குநர்- யாரே அம்மொழிகளை எல்லாம் பொருள்விளங்கக் கேட்க

வல்லார்.

கில்லா - அவை கேட்டல் கூடா

கேட்டன சிலசில - எம்மாற் கேட்கப்பட்டன ஒருசிலவேயாம்


என்று விளக்கம் தருகின்றார்.

.

இது பற்றிய என் கருத்துகள்: 


 கில்லா என்பது ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் என்று நினைக்கின்றேன்.


எனவே கில் என்பது அடிச்சொல் என்று கருதுகின்றேன். இதன் பொருள் இயலுதல், (ஒன்றைச் செய்யும் வல்லமை கொண்டிருத்தல்). இப்பொருள் இப்பாட்டில் முற்றிலும் பொருந்துவதாகவே கருதுகின்றேன்.
பொ.வே.சோ அவர்கள்
கூறும் “கூடா”: என்பது ‘சேராத, முடியாத, செய்ய இயலாத (நடைபெறாத, நடைபெற இயலாத) என்னும்

பொருளில் ஆண்டுள்ளார் என்று கருதுகின்றேன். 


அன்புடன்

செல்வா

rajam

unread,
Feb 26, 2021, 1:05:24 PM2/26/21
to tamil...@googlegroups.com
தேமொழி, வணக்கம். பரிபாடலில் உள்ள வையைப்பாடல்களை நீங்கள் கட்டாயம் படித்து ஒரு கட்டுரை எழுதவேண்டும். அன்பின் ஐந்திணைப் பாடல்களுக்கு முற்றிலும் வேறுபட்ட இலக்கியச் சுவை கொண்டவை. 


Jean-Luc Chevillard

unread,
Feb 26, 2021, 1:26:56 PM2/26/21
to tamil...@googlegroups.com, rajam, தேமொழி
Here is (as two images) a small sample from the முற்றிலும் வேறுபட்ட இலக்கியச் சுவை,
as represented by lines 45-49 of the same Paripāṭal 12
(taken from pages 423 & 424 of a well-known book)

-- Jean-Luc (in Müssen)



VSR_Gram_page_423_extract.png
VSR_Gram_page_424_extract.png

rajam

unread,
Feb 26, 2021, 2:41:47 PM2/26/21
to tamil...@googlegroups.com, vallamai, kanmani tamil, C.R. Selvakumar
வணக்கம் செல்வா. பதிவுக்கு மிக்க நன்றி. 

உங்களைப் போலவே கண்மணி அவர்களும் ‘கில்லா’ என்பதை ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்று எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். 

அதைப் பற்றி இன்னும் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். 

நானறிந்த ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்களைத் தொடர்ந்து வல்லின மெய்களில் தொடங்கும் பெயர்ச்சொற்கள் வரும்போது, அந்தத் தொடக்க வல்லினம் அந்த ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் ஈற்றில் மிகும். 

இங்கே, பரிபாடல் 12-இல் காணும் கில்லா என்பதை அடுத்து வருவது கேள்வி என்ற சொல். கில்லா என்பது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சமானால் … நமக்குக் கிடைத்திருக்கும் தொடர் *கில்லாக் கேள்வி என்று இருக்க வேண்டும்.

எனவே அதைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

நன்றி,
ராஜம் 

rajam

unread,
Feb 26, 2021, 2:44:58 PM2/26/21
to Jean-Luc Chevillard, tamil...@googlegroups.com, தேமொழி
Dear JLC,

You could have said / say “ … pages 423 & 424 of a well-IGNORED book.” :-) :-) :-) 

Thanks and regards,,
VSR



<VSR_Gram_page_423_extract.png><VSR_Gram_page_424_extract.png>

C.R. Selvakumar

unread,
Feb 26, 2021, 3:38:22 PM2/26/21
to rajam, தமிழ் மன்றம், vallamai, kanmani tamil

நானும் வலிமிகுந்திருக்கவேண்டுமே என்று நினைத்தேன்.

ஏன் அப்படி மிகவில்லை (ஏதும் எழுத்துப்பிழையா அல்லது

வேறு ஏதேனும் காரணம் பற்றியா) என்று தெரியவில்லை.


அன்புடன்

செல்வா

rajam

unread,
Feb 26, 2021, 3:47:13 PM2/26/21
to C.R. Selvakumar, தமிழ் மன்றம், vallamai, kanmani tamil
தேடுவோம். தேடுங்கள் கிடைக்குமென்றார்! ஆராய்வோம் நம் அறிவுக்கு எட்டிய அளவில்! 
Reply all
Reply to author
Forward
0 new messages