நிசீதிகைக் கல்வெட்டு
தேசூர் அருகில் திருவண்ணாமலை மாவட்டம்
Nishadi Inscription
Thirakovil
Near Desur
Thiruvannamalai District
Tamilnadu
இக்கோயில் வளாகத்தில் உள்ள ஒரு பாறையில் சிறு பாத பிடாரர் எனும் சமண ஆசாரியர் ஒருவரின் சல்லேகனை இறப்பு குறித்த நீசீதிகைக் கல்வெட்டு காணப்படுகிறது.
இக்கோயிலில் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்ற போது இந்த நிசீதிகை கல்வெட்டு கண்டறியப்பட்டது.வரலாற்று அறிஞர் சாந்தலிங்கம் மற்றும் வரலாற்று ஆய்வாளர் உதயகுமார் ஆகியோர் இதனை ஆய்வு செய்தனர்.இக்கல்வெட்டு ஆவணம் இதழில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காலம்:
கி.பி.9 ம் நூற்றாண்டு
கல்வெட்டு:
"மூத்த உடையார் சிறுபாத
விளக்கம்:
சிறுபாத பிடாரர்(படாரர்)"மூத்த உடையார்" என மரியாதையுடன் சுட்டப்படுகிறார்.,
நாற்புறமும் தீர்த்தங்கரர் சிற்பம் அமைந்துள்ள பாறை இக்கோயிலில் இருப்பதால், இக்கோயில் "சதுர்முக சீனாலயம்" எனக் குறிப்பிடப்படுகிறது.
இக்கல்வெட்டு,திருநாதர் குன்றில் உள்ள நிசீதிகைக் கல்வெட்டுகளின் எழுத்தமைதியை ஒத்திருப்பதாக கல்வெட்டு ஆய்வாளர் திரு. பொன்.கார்த்திகேயன் கருதுகிறார்.
