1. வெருளி நோய்கள் 604-608: இலக்குவனார் திருவள்ளுவன் +++ 2. வெருளி நோய்கள் 609-613: இலக்குவனார் திருவள்ளுவன்+++ 3. வெருளி நோய்கள் 614-618: இலக்குவனார் திருவள்ளுவன்

3 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Oct 31, 2025, 8:43:07 PM (3 days ago) Oct 31
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, meen...@gmail.com, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan, Umarani Pappusamy Mysore

வெருளி நோய்கள் 604-608: இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 599-603: தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 604-608

604. கடற்கன்னி வெருளி –  Serenephobia

கடற்கன்னிபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கடற்கன்னி வெருளி.

serene என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் கடற்கன்னி

00

605. கடற்குதிரை வெருளி – Odovainophobia

கடற்குதிரை அல்லது பனிக்கடல் யானை(walrus) என அழைக்கப்பெறும் கடல் வாழ் உயிரி மீதான அளவு கடந்த பேரச்சம் கடற்குதிரை வெருளி.

இதனைக் கடல் சிங்கம் என்றும் கூறுகின்றனர்.

00

606. கடற்கோழி வெருளி-Pigkouinophobia

கடற்கோழி(penguin) மீதான அளவு கடந்த பேரச்சம் கடற்கோழி வெருளி.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி நீர் வாழ் பறக்காத பறவையான இதனை ஒயில் நடைப்பறவை; எனவே ஒயிலி எனக் குறிக்கிறது.

00

607. கடி வெருளி – Daknophobia/Bitenphobia(1)

கடித்தல் பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கடி வெருளி.

dakno என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் கடித்தல். 

00

608. கடனட்டை  வெருளி –  Pistotikikartaphobia

கடனட்டை (credit card) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கடனட்டை வெருளி.

கடன் அட்டையைப் பயன்படுத்தும பொழுது மகிழ்ச்சியாகவும் பயனுள்ளதாகவும் இருந்தாலும் தவணை தப்புவதாலும் வட்டி ஏறுவதாலும் வங்கியினர் அடியாள்கள் வைத்து மிரட்டுவதுபோல் கடுமையாக நடந்துகொள்வதாலும் கடன் அட்டைகள் மீது பேரச்சம் கொள்கின்றனர்.நுழைவுக்கட்டணம் இல்லை எனக் கூறிக் கடன் அட்டை வழங்கிவிட்டு, நிறுவத்தினர் சொல்லாமலே அத்தொகையைச் சேமிப்புப் பணத்தில் பிடித்து விடுகின்றனர் போன்ற  நாம் அறியாமலே பிடிக்கப்படும் பணம் குறித்தும் அஞ்சுகின்றனர்.

00

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

வெருளி அறிவியல் 2/5

++

வெருளி நோய்கள் 609-613: இலக்குவனார் திருவள்ளுவன்


ஃஃஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன் 
     31 October 2025      அகரமுதல



(வெருளி நோய்கள் 604-608: தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 609-613

609. கடிகார வெருளி-Chronomentrophobia/ Roloiphobia/ Soloiphobia

சிலருக்குக் கடிகாரம் அல்லது கைக்கடிகாரம் மீது தேவையற்ற அச்சம் ஏற்படும். இதுவே கடிகாரவெருளி.

கடிகாரம் காலம் காட்டும் கருவி. குறித்த நேரத்தில் வேலையைச் செய்ய வேண்டும், செய்து முடிக்க  வேண்டும் என்பதை நேரம்காட்டி உணர்த்துவது கடிகாரம். அவ்வாறு செய்யாமல் காலம் தாழ்த்தும் பொழுதும் உரிய காலத்தில் செய்யத் தவறியதைச் சுட்டிக்காட்டுவதும் கடிகாரம்தான். இதனால் சிலர் கடிகாரம் காலமுடிவை – இறப்பை உணர்த்துவதாக எண்ணி அஞ்சுவதும் உண்டு.

chrono என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் நேரம். ment  என்னும் இலத்தீன் சொல்லிற்கு வழிமுறை எனப் பொருள்.

Roloi என்னும் கிரேக்கச் சொல்லிற்குக் கடிகாரம் எனப் பொருள்.

00

610. கடினப் பொருள் வெருளி – Durumphobia

கடினப் பொருள்கள் மீது ஏற்படும் அளவுகடந்த பேரச்சம் கடினப் பொருள் வெருளி.

இதனை வன்பொருள் வெருளி என்று சொன்னால், இப்போது தவறுதலாகக் கணிணி துறையில் கருவியத்தை(Hard ware) வன்பொருள் என்தால் குழப்பம் வரும்.

00

 611. கடுகதி வெருளி – Tachophobia

ஊர்திகள் மிகு விரைவாகச் செல்வது தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கடுகதி வெருளி.

கடுகதி=high speed, மிகு வேகம்.

(வே > வேகு >)வேகம் தமிழ்ச்சொல்லே!

00

 612. கடுகு வெருளி – Moustardaphobia

கடுகு தொடர்பான அளவு கடந்த பேரச்சம் கடுகு வெருளி.

எண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்டது கடுகு. எனவேதான் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்றனர்.  கடுகைமிகுதியாகப் பயன்படுத்துவதால் வரும் சில தீமைகளை எண்ணிக்கடுகு மீது தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.

00

613. கடைசி எழுத்து வெருளி – Zzzzzzphobia/ Zzzzphobia/Zzzzzphobia

கடைசி எழுத்து வரிசையைக் கொண்டு தொடங்கும் சொல் மீதான அளவுகடந்த பேரச்சம் கடைசி எழுத்து அடுக்குத் தொடக்க வெருளி > கடைசி எழுத்து வெருளி.

Zzzz  என்றால் கொச்சை வழக்கில் தூக்கம் என்றும் குறட்டை என்றும் பொருள். அதனால் இவ்வாறு தொடங்கும் சொற்கள் மீது வெறுப்பும் பேரச்சமும் கொள்கின்றனர்.

தமிழில் கடைசி எழுத்தான ‘ன்’ சொல்லின் முதல் எழுத்தாக வராது. எனவே, சிக்கல் இல்லை. ஆங்கிலத்தில் கடைசி எழுத்தான  என்பதைக் கொண்டு Zzzz  எனத் தொடங்கும் சில சொற்கள் உள்ளன. Zzzz  என்றால் கொச்சை வழக்கில் தூக்கம் என்றும் குறட்டை என்றும் பொருள். அதனால் இவ்வாறு தொடங்கும் சொற்கள் மீது வெறுப்பும் பேரச்சமும் கொள்கின்றனர். கடைசி எழுத்து முதல் எழுத்தாகத் தொடங்கக்கூடிய சொற்கள் உள்ள மொழியினருக்கும் இவ்வெருளி வரலாம்.

யாரோ ஒருவருக்கோ இருவருக்கோ இத்தகைய பேரச்சம் வந்திருக்கலாம். எனினும் இதை ஒரு வகைப்பாட்டாகச் சேர்த்துள்ளனர்.

00

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

வெருளி அறிவியல் 2/5

++

வெருளி நோய்கள் 614-618: இலக்குவனார் திருவள்ளுவன்


ஃஃஃஃஃஃ    இலக்குவனார் திருவள்ளுவன் 
     01 November 2025      கரமுதல


(வெருளி நோய்கள் 609-613: தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 614-618

614. கடை நிலை வெருளி – Omegaphobia

வரிசையில் கடைசியில் இருப்பது குறித்த அளவுகடந்த பேரச்சம் கடை நிலை வெருளி.

கடையில் பொருள் வாங்க அல்லது பயணச்சீட்டு வாங்க அல்லது திரைப்படச் சீட்டு வாங்க அல்லது இதுபோன்ற சூழலில் வரிசையின் கடைசியில் இருப்பதால் தனக்குக் கிடைக்க வேண்டிய பொருள் தீர்ந்து கிடைக்காமல் போய்விடும்,  தனக்கு உரிய வாய்ப்பு வராமல் போய்விடும் என்பன போன்ற கவலைகளுக்கு ஆட்பட்டு அளவுகடந்த பேரச்சம் கொள்கின்றனர்.

Omega என்பது கிரேக்க நெடுங்கணக்கின் கடைசி எழுத்து. எனவே,  தொடரின் முடிவு, வளர்ச்சி முடிவு, வரிசை முடிவு முதலியவற்றைக் குறிக்கிறது.

காண்க: கடைசி எழுத்து வெருளி – Zzzzzzphobia/ Zzzzphobia/Zzzzzphobia

ஆங்கில நெடுங்கணக்கில் இசட்டு/Z கடைசி எழுத்து என்பதால் அதைக் குறிப்பிட்டுக் கடைசிநிலை வெருளியை Zzzzphobia/Zzzzzphobia எனக் குறித்துள்ளனர்.

00

615. கடை வளாக வெருளி – Arcadephobia

 கடை வளாகம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கடை வளாக வெருளி.

Arcade என்பது வளைவுகளால் மூடப்பெற்று இரு மருங்கிலும் நடைபாதைகள் உடைய கடைப்பகுதியைக் குறிக்கிறது.  எனவே, கடை வளாகம் எனலாம். கேளிக்கைப் பூங்காக்கள் அடுத்தடுத்து அமைந்தாலும் வளாகம்தான். எனினும் இதனைப் பூங்கா வளாகம் எனலாம்.

எந்தக் கடைக்குச் செல்வது அல்லது எந்தக் கடையில் வாங்கலாம், குறைந்த விலையில் தரமானபொருள்கள் கிடைக்குமா? என்பன போன்ற சிந்தனைகளுக்கு உள்ளாகிக் கடை வளாகம் மீது பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.

00

616. கடை செல் வெருளி – Officinaphobia

கடைக்குச் செல்வதுபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கடைசெல் வெருளி.

Officina என்னும் இலத்தீன் சொல் பொருள் கடை எனப் பொருள்.

00

617. கட்சி மாறல் வெருளி – Oviphobia

கட்சிமாறுநர் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கட்சி மாறல் வெருளி.

ovi என்றால் முட்டை ஓடு எனப் பொருள். எனவே, முட்டை வெருளி எனப் பொருள் கொண்டு சிலர் விளக்கம் அளித்துள்ளனர். ஆனால் முட்டை வெருளி (ovophobia) எனத் தனியாக உள்ளது. புதிய வெருளிகளை வரையறுத்துள்ள திம் (Tim Lihoreau) வெற்றி அணியின் பக்கம் தாவுதல் குறித்த அச்சம் (fear of jumping on the bandwagon) என்கிறார். தேர்தலில் கூடப் பெரும்பாலான மக்கள் எந்தக் கட்சி வெற்றி பெறும் எனச் சொல்லப்படுகிறதோ அக்கட்சிக்குத்தான் வாக்களிப்பர். வெற்றி அணி அல்லது புகழணி பக்கம் இருந்து ஒரு வேளை அது தோற்றால் என்ன ஆகும் என்ற அச்சம் வருவதை இவர் குறிப்பிடுகிறார். தேர்தலில் மட்டுமல்ல ஆட்சி அமைக்கும் பொழுது ஏற்படும் சிக்கல்களில் எந்தப்பக்கம் இருந்தால் ஆதாயம் எனக் கணக்கிட்டுத் தாவும் மக்கள் மன்ற உறுப்பினர்களும் எங்கும் உள்ளனர். அவர்களுக்கும்  இந்த வெருளி வரலாம்.

இதனைக் கொடும் அச்சம் (cruel fear) என்கிறார் திம் (Tim Lihoreau). அந்த அளவிற்கு என்ன கொடும் அச்சம் இதனால் வருகிறது எனத் தெரியவில்லை. ஒரு வேளை தான் சாரும் அணி தோல்வியைத் தழுவி எதிர்காலமே இருண்டுபோகும் என்ற அச்சத்தைத்தான் கொடும் அச்சம் என்கிறார் போலும்.

00

618. கட்டட வெருளி – Subturrophobia

பொது இடங்களில் கட்டடங்கள் திடீரென்று எழும்பியுள்ளதைப் பார்க்கும் பொழுது வரும் அளவுகடந்த பேரச்சம் கட்டட வெருளி 

திடீர்க் கட்டட வெருளி என்பதைத்தான் சுருக்கமாகக் கட்டட வெருளி எனலாம்.

சென்னை மவுலிவாக்கத்தில் கட்டுமானப் பணியில் இருந்த அடுக்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது போன்ற செய்திகளை அறிய வருவோர் கட்டடம் தொடர்பிலான அச்சத்திற்கு ஆளாகின்றனர்

இலத்தீனில் subito என்றால் திடீர் என்றும் turris என்றால் கோபுரம் என்றும் பொருள்.

00

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

வெருளி அறிவியல் 2/5

++





--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages