தமிழில் விண்டு என்றால் காற்று!!

319 views
Skip to first unread message

C.R. Selvakumar

unread,
Dec 14, 2013, 2:45:30 PM12/14/13
to தமிழ் மன்றம்
முகநூலில் பேராசிரியர் ப. அர. நக்கீரன் அவர்கள் 
சொன்னார்கள்:

காற்று என்பதற்கு விண்டு என்ற பெயரும் தமிழில் உள்ளது.wind என்று
ஆங்கிலத்திலும் உள்ளது ஆச்சரியமாக இருக்கிறது.

இது ஒரு சுவையான சிறு உரையாடலாக மாறியது.
அதனை ஒரு கோப்பாக இணைத்துள்ளேன். பார்க்கவும்!

அன்புடன்
செல்வா
விண்டு.pdf

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Dec 14, 2013, 5:19:38 PM12/14/13
to tamilmanram kuzhu
இவ்வாறு காற்று வெவ்வேறு நிலைகளில் உலவுவதைப் பழந்தமிழர்கள் நன்கு அறிந்திருந்தனர். காற்று வீசக்கூடிய விரைவின் (வேகத்தின்) அளவைப் பற்றிய கணக்கு நமக்குத் தெரியாவிட்டாலும் அதன் தன்மைகளைப் புரிந்து தெளிவாக வரையறை செய்துள்ளனர் என்பது இலக்கியங்கள் மூலம் நன்கு தெரிய வருகின்றது.
காற்றின் வகைகளாகப் பிங்கல நிகண்டு (23 & 24) , வங்கூழ், மருத்து, சலனன், வாடை, வளி, கோதை, வாதம், கூதை, வேற்றலம், கால், ஒலி, உயிர், காலிலி, விண்டு, நீளை, உலவை, கொண்டல், கோடை, நிழலி, உயிர்ப்பு எனப் பலச் சொற்களைக் குறிப்பிடுகின்றது.
உயிரினங்களுக்கு உயிர்ப்பு அளிப்பதால் உயிர் அல்லது உயிர்ப்பு என்றும் ஓரிடத்தில் நிற்காமல் உலவிக் கொண்டு இருப்பதால் உலவி என்றும் கால் இல்லாமல் அலைவதால் காலிலி என்றும்  பொருத்தமாகக் கூறியுள்ளனர். தமிழ் விண்டு என்பதுதான் ஆங்கிலத்தில் wind என மாறியதோ? மேலும், தெற்கில் இருந்து வீசுவதைத் தென்றல் வடக்கில் இருந்து வீசும் வாடைக்காற்றை வாடை,  மேற்கில் இருந்து வீசும் வெப்பக் காற்றைக்  கோடை, கிழக்கில் இருந்து வீசுவதைக் கொண்டல் என்றும் வரையறுத்துள்ளனர்.
குடக்காற்று என்பதும் மேற்கில் இருந்து வீசும் காற்றாகும். பனிக்காற்றானது கூதிர், ஊதை, குளிர் என மூவகைப்படும்.
குளிர்ந்த காற்றானது சாளரங்கள் வாயிலாக வீட்டிற்குள் நுழைவதைச்
சில்காற்று இசைக்கும் பல்புழை நல்லில் என மதுரைக் காஞ்சி (358) குறிப்பிடுகிறது.
கடுங்காற்றால் கப்பல் சிதைந்ததைக்
கடுங்காற்று எடுப்பக் கல்பொருது உரைஇ, என மதுரைக் காஞ்சி (378) கூறுகிறது.
பெருமலையைப் புரட்டுவது போன்ற பெருங்காற்று வீசியதைப்
பெருமலை மிளிர்ப்பன்ன காற்று எனக்  கலித்தொகை: (45: 4) கூறுகிறது.
கப்பலைக் கவிழ்க்கும் சுழல் காற்றினைக்

கால்ஏ முற்ற பைதரு காலை,
கடல்மரம் கவிழ்ந்தென

என்று நற்றிணை (30: 7-8) கூறுகிறது.
அகன்ற கடற் பரப்பைக் கலங்கடிக்கும் காற்று குறித்துத் 
துளங்குநீர் வியலகம் கலங்கக் கால்பொர என்று பதிற்றுப்பத்து (51) கூறுகிறது.
பெருமலையில் கடுங்காற்றுச் சுழன்றடிப்பதைக்
கடுங்காற்று எடுக்கும் நெடும்பெருங் குன்றத்து என  அகநானூறு (258 : 6) கூறுகிறது.
நிலப்பரப்பில் சுழன்றடிக்கும் கடுங்காற்று குறித்துக்
கடுங்கால் கொட்கும் நன்பெரும் பரப்பின் எனப் பதிற்றுப்பத்து ( 17 : 12) கூறுகிறது.
கடற்கரை மணலை அள்ளித் தூவும் குளிர்ந்த காற்றை
நெடுநீர் கூஉம் மணல்தண்கான் எனப்  புறநானூறு (396 : 5) கூறுகிறது.
மேலும் பலவகைக் காற்று குறித்து நாம் சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம்.
19 ஆம் நூற்றாண்டில் கண்டறிந்த காற்றின் வகைகளை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பழந்தமிழர்கள் உணர்ந்து வகைப்படுத்தியுள்ளனர் என்பது காற்றறிவியலில் சிறந்திருந்தனர் என்பதை உணர்த்துகின்றது அன்றோ?
-- இலக்குவனார் திருவள்ளுவன்

விரிவிற்குக் காண்க : <http://thiru-padaippugal.blogspot.in/2011/01/andre-sonnaargal-12.html>
<http://thiru-padaippugal.blogspot.in/2011/01/sky-without-air-andre-sonnaargal-13-13.html>


2013/12/15 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.org
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

rajam

unread,
Dec 14, 2013, 6:09:44 PM12/14/13
to tamil...@googlegroups.com
பழந்தமிழில் "விண்டு" என்பது "காற்றை"க் குறிக்கிறதா அல்லது மழை மேகத்தைக் குறிக்கிறதா என்பதைப் பேராசிரியர் நக்கீரன் அவர்கள் தெளிவு செய்தால் நல்லது. 

"விண்டு அன்ன வெண்ணெல் போர்வின்" (ஐங்குறுநூறு), "விண்டு அனைய விண்தோய் பிறங்கல்" (புறநானூறு), "பனி வார் விண்டு விறல் வரை" (ப்திற்றுப்பத்து) ... போன்ற வரிகள் காற்றைப்போலக் கண்ணுக்குப் புலப்படாத ஒரு பொருளைச் சுட்டிவதாகத் தெரியவில்லையே? 

அதோடு, முகநூலில் ஒரு நண்பர் குறித்ததுபோல ... 'விண்டு' என்பது வினைச்சொல்லாகவும் பயன்படும். 'தோசை விண்டு போச்சு' என்பதை எங்கள் நெல்லைத் தமிழில் கேட்கலாம்! இது 'விள்' என்ற வினையடியிலிருந்து பிறந்தது. இதுக்கு 'விஷ்' 'புஷ்' என்று தாறுமாறாகப் பொருள் சொல்வது பைத்தாரத்தனம் (எங்கள் நெல்லைத் தமிழில்!). 

நன்றியுடன்,
ராஜம்
Reply all
Reply to author
Forward
0 new messages