அன்புள்ள முனைவர் இராசம்,
உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
வாய்பாடு (இடையே பகர ஒற்று இல்லாமல்) இருப்பதன் இலக்கணம்
என்ன என்று அறிய ஆவல். வாய்பாடு (பகர ஒற்று இன்றி) வருவது
இன்று ஆங்கிலத்தில் கூறும் formula என்பது போன்ற
வாய்மையான தொடர்பைக் கூறும் கூற்று,
அல்லது ஒரு " generative scheme"
வருவித்துக் கூறக்கூடிய முறை
என்பதாக நான் கொள்ளுகின்றேன்.
வாய்ப்பாட்டு என்பது வீணை
போன்ற இசைக்கருவிகளில் பண்ணிசைப்பது போல் அல்லாமல்,
வாயால் பாடும் பாட்டு என்று பொருள்படும்.
வாயால் கூறும் பாடம் என்பதாகவும் பொருள் கொள்ள இயலும்.
(வாய்ப்பாடம் என்றும் வரலாம் அல்லவா?)
ஆனால் வாய்பாடு (பகர ஒற்று இல்லாமல் வரும்)
சொல்லின் இலக்கணமும்,
இலக்கணவழி அது சுட்டும் பொருள் என்ன?
தேய்படுதல் தேய்மானம் தேய்பாடு ஆகுமா தேய்ப்பாடு ஆகுமா?
தூய்மை+பாடு தூய்பாடு ஆகுமா தூய்ப்பாடு ஆகுமா?
மை என்னும் பண்புருபு மறைந்து இருப்பதால்
வலிமிகாது என்பார்களே அதுபோல் வரக்கூடுமா?
நான் முன்பு இட்ட மடலில் தவறுகள் இருப்பின்
அருள்கூர்ந்து தெரிவிக்க வேண்டுகின்றேன்.
வாய்பாடு (பகர ஒற்று இல்லாமல் இருப்பது)
சரியான பொருள் உணர்த்துவதாக நான் கருதுகின்றேன்
பெருக்கல். கூட்டல் வாய்பாடுகளுக்கும்
நியூட்டன் விதி கூறும் விசை = நிறை x முடுக்கம்
(F=m.a) போன்றவற்றுக்கும் நீர் என்பதன் வேதியியல்
வாய்பாடு H2O என்பதாகக் கூறும் பொழுதும் பொருந்தும்
எனக்கருதுகின்றேன்.
அன்புடன்
செல்வா
--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar