--திரு மரைக்காடு - where Mustangs roam-------------------------------மரைகள் நிறைந்த மரைக்காடு (antelope forest). மரை இனத்தை மறை என்றும் எழுதுதல் உண்டு. மொழிபெயர்ப்பில் பிழை ஏற்படுவது இயற்கை. மரைக்காடு மறைக்காடு எனப் புரிந்துகொள்ளப்பட்டு வேதாரண்யம் எனப் புராணக்கதைகள் கட்டப்பட்டன. வேதம் எதற்குக் காட்டுக்கு வருகிறது? - எனச் சிந்தித்த தமிழறிஞர்கள் அவ்வூர் இயற்கையைக் கொண்டு ஊர்ப்பெயரை 1940களில் தொடங்கி விளக்கலாயினர். தஞ்சை மாவட்டத்திலேயே பெரிய காடுகள் இன்றும் இருப்பது திரு மரைக்காட்டின் அருகேதான். மஸ்டேங்க்ஸ் திரிகின்ற வனமும் அஃதே. அமெரிக்க மஸ்டாங்ஸ் போல, இந்திய மஸ்டாங்ஸ் உள்ள காடு மரைக்காடு (= வேதாரண்யம்).மறை என்ற சொல்லுக்கு வேதம் என்று நான்கு மறைகள் எனவும்,கதவு மறைக்கிறது என்றும் இருபொருளாலும் ஏற்பட்ட புராணக் கதையைத் தேவாரத்தில் வாசிக்கலாம்.சைவ சித்தாந்தம் நன்கு கற்றோர் சிவபிரான் வேதங்களை ஓதுதலைத்தேவாரத்தில் இருந்து காட்டியுள்ளனர்.ஆனால், பழைய பெயர் மரைக்காடு என்பதனை புலவர்கள் 1940களில் இருந்து விளக்கி,அவ்வூர் மக்கள் மரைக்காடு, திருமரைக்காடு எனப் பயன்படுத்துகின்றனர்.புராணங்களை விட்டு தமிழ் தன் பழைமையைப் புரிந்துகொண்டுவளர்கிறது என்பதற்கு திருமரைக்காடு என்று பயன்படுத்துதல்நல்ல சான்றாகும்.மரையூர் - என்ற அழகான ஊரில் மரைகள் இருப்பதைக் கற்கால ஓவியங்களில்இருந்து இன்றுவரை காணலாம். மரைக்காட்டிலும் அவ்வாறே.மரை ‘antelope' தமிழில் மறை என்றும் எழுதப்படும்.சென்னைப் பேரகராதி:மறை&sup6; maṟai, n. [T. mara.] 1. See மரை¹, 5, 6. 2. Spiral of conch; சங்கின் முறுக்கு. (யாழ். அக.)-------------அமெரிக்காவின் ‘Wild West' என்னும் மேற்கு மாகாணங்களில் திரியும் காட்டுக்குதிரைகள் (ferals) மஸ்டாங்ஸ் எனப்படுகிறது. அதி வேகமானவை. மஸ்டாங்ஸ் பற்றி அறிய:இந்தியாவில் மஸ்டாங்ஸ் வாழும் காடுகளில் முக்கியமானது திரு மரைக்காடு. மரை இனம் தவிர (antelopes), காட்டுக்குதிரைகளும் (mustangs) மரைக்காட்டில் இருக்கின்றன. இவை எக் காலத்தவை எனச் சொல்லமுடிவதில்லை. சோழர் படைகளில் இருந்து தப்பி வாழ்பனவாகவும் இருக்கலாம்.நா. கணேசன்* நான் பிஎச்டி படித்த காலத்தில், 32 ஆண்டுகள் முன்னர், ஃபோர்ட் மஸ்டாங் கார் ஒன்று என் மைத்துனர் சில ஆண்டுகள் வைத்திருந்தார். எனக்குக் கொடுத்துவிட்டு ஊர் திரும்பிவிட்டார். .
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

-#ங்க இலக்கிய ஆய்வாளர்களாக உள்ள தமிழறிஞர்கள் சார்பற்ற தன்மையைக் கொண்டவர்கள். எனவேதான், திருமரைக்காடு என்பது பழந்தமிழ்ப் பெயர் என்று எழுதினர்.#தாங்கள் குறிப்பிட்டுச் சொன்ன பேரா. ரா.பி. சேதுபிள்ளைக்கும், பாவாணருக்கும் சார்பு தன்மை இல்லை என்று சொல்வது எவ்வாறு பொருந்தும்?அவர் எக்காலத்தவர்? எந்த மனோ நிலையில் தமிழை மீட்டெடுக்க வாழ்ந்தவர்? அப்படி மீட்டெடுக்க வேண்டுமானால் 'வேதாரண்யம்' என்பது தப்பாகச் செய்யப் பட்ட மொழிபெயர்ப்பு என்பதற்கு மாற்று கருத்து ஒன்றை முன் வைக்க வேண்டுமானால் அதற்குரிய ஆதாரங்களைத் தேடும்பொழுது எப்படி சார்பற்ற நிலையில் நிற்க முடியும்?இருவருமே 'மறை' என்பது வேதத்தைக் குறித்தது அல்ல என்று கூற வந்தவர். அவர் காலத்தில் 1940-ம் ஆண்டுகளில் தமிழ் நாட்டில் வேதத்தை மறுத்த எவருக்காது முதல் மரியாதை கொடுக்கப் பட்டதா? பேரா. ரா.பி. சேதுபிள்ளைக்கு மக்களிடையே தனக்கிருந்த மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய ஆசை இருந்தது. அதனால் 'மறை' என்பது 'வேதம்' அல்ல என்று எவ்வகையில் சொன்னாலும் எதிர்ப்பு எழும் என்பது அவருக்குத் தெரியும். அதனை நேரிடையாக மறுக்காது மறைமுகமாக மறுக்க 'மரை' என்றொரு காரணம் அவருக்குத் தேவைப்பட்டது. அதன் அடிப்படையில் அவர்தம் கருத்தை முன் வைத்தார்.பாவாணரோ, தாம் பிறந்த பொழுது கொண்டு வந்தது யாதொன்றுமில்லை, இனி போகும் பொழுதும் கொண்டு செல்ல யாதொன்றுமில்லை என்று தன் சுயநலத்தையும், ஆசையையும், அச்சத்தையும் தூக்கி எறிந்து விட்டு வாழ்ந்து காட்டியவர். அதனால்தான் ஆரியத்தையும், வடமொழியை ஆதிக்கத்தையும் மறுத்து எழுதி வாழ்க்கையில் வறுமையின் உச்ச வரம்புக்கு உட்படுத்தப் பட்டார்.இவ்விருவரும் கொண்ட நோக்கத்தில் தவறில்லை. அதனைச் சாதிக்கும் முறை வலுவிழந்து போனால் அப்பிழையைச் சரி செய்வது இக்காலத்தவர் கடமை. அதனால்தான் 'மறை' என்ற சொல் 'மறைத்தல்' என்ற பொருளில் வந்தது என்றும் அது அக்காட்டுக்கு காரணப் பெயராகியது என்பதை நிருவ முனைந்தேன். அதற்கு தேவாரத்தில் உள்ள தரவுகளை ஆதாரமாகக் கொண்டேன்.அக்காலத்திலேயே அது 'மரைக்காடு' என்று காரணப்பெயர் பெற்றிருந்தால் ஏதாவது ஒரு ஆதாரத்தை விட்டு வைத்துச் சென்றிருக்க மாட்டார்களா?அருளாளர் அத்தலைத்தை நேரிடையாகக் கண்டு கதைத்தவர். நாமோ காணததைக் கொண்டு கதைக்கின்றோம். அவர் கூற்று ஏற்குமா அல்லது நமது கூற்று ஏற்குமா? சிந்தியுங்கள்.
On Friday, August 11, 2017 at 8:40:26 AM UTC+8, N. Ganesan wrote:
On Thursday, August 10, 2017 at 2:49:26 PM UTC-7, செல்வன் wrote:அந்த சார்பற்ற தன்மை இருக்கும் யாரும் 1300 ஆண்டுகளாக இருக்கும் பெயரை மாற்ற சொல்லி இங்கே எழுதிகொண்டிருக்கமாட்டார்கள். அப்படி மாற்றூவது தவறு என கண்டித்திருப்பார்கள்.2017-08-10 16:44 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:ஆய்வாளராக இருக்கும் பொழுது எனது சமயம், எனது நாடு, எனது மொழி என்ற உணர்வுகள் வருவது தவறு... Their bias starts to creep in, impartial analysis is required.சங்க இலக்கிய ஆய்வாளர்களாக உள்ள தமிழறிஞர்கள் சார்பற்ற தன்மையைக் கொண்டவர்கள். எனவேதான், திருமரைக்காடு என்பது பழந்தமிழ்ப் பெயர் என்றுஎழுதினர். அவ்வழியில் திருமரைக்காட்டு மக்கள் செல்கின்றனர். அதனைக் கண்டு ஆவணப்படுத்தவே இவ்விழை தொடங்கப்பெற்றது,நா. கணேசன்