--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.
புலவர். ஆ.பழநி – ஓர் அறிமுகம்
ஐயா திரு. ஆ.பழநி அவர்கள் 7.11.1931 அன்று ஆண்டியப்பன் – உமையாள் தம்பதியினருக்கு ஒன்பதாவது மகனாக காரைக்குடியில் பிறந்தார். ஐந்தாம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை முடித்துக்கொண்ட இவர், வட்டிக்கடை, துணிக்கடை, பெட்ரோல் விற்பனை நிலையம், பல்பொருள் அங்காடி எனப் பல இடங்களில் வேலை செய்து இறுதியாக குடும்பத்தொழிலான வேளாண்மையில் இறங்கினார். வட்டிக்கடை முதல் வயல்வெளித் தொழில் வரை ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் கண்டது கற்கும் தொழிலையும், கற்றவற்றைச் சிந்திக்கும் இயல்பையும் கை விடாமல் பற்றிக் கொண்டிருந்தார். 1950களில் தமிழர் உள்ளங்களில் விழுதை இறக்கிய திராவிட இயக்கம், கற்பதும் சிந்திப்பதும் இரு கண்ணெனக் கொண்ட ஐயா அவர்களை தன்வயப் படுத்திக்கொண்டது. படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது; சிந்தனையைக் கூர்மைப்படுத்திச் செழுமைப்படுத்தியது. திராவிட நாடு, போர் வாள், திராவிடன் போன்ற ஏடுகளை வேதப்புத்தகங்களாகவே கருதிப் படித்த ஐயா அவர்களை மீட்ருவாக்கம் செய்ததில் இவ்வேடுகள் கணிசமான பங்காற்றின. இதன் விளைவு தமிழ் மீது, தமிழ் இனத்தின் மீது, தமிழ் இலக்கியங்களின் மீது ஆராக் காதலாக உருமாறியது. தமிழ் இலக்கியங்களைக் கற்கும் நோக்கில் மேலைச்சிவபுரி, கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரி இறுதியாண்டில் (1959) வால்குடல் அழற்சிநோய், வால்குடல் நீக்கப்பட்டவுடன் நுரையீரலில் கட்டி, அதன் தொடர்ச்சியாக ஒரு பக்க நுரையீரல் இழப்பு எனப் பல இன்னல்களைக் கடந்து, சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் பறவையைப் போல, 1962ல் புலவர் பட்டம் பெற்றார். 1964ஆம் ஆண்டு முதல் காரைக்குடி மீ.சு. உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.1997ல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் பேரவை உறுப்பினராகவும் பணி புரிந்துள்ளார். நாடகம், உரை, திறன்நூல், காப்பியம், ஒப்பீட்டு நூல் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். தமிழ் இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் இயங்கிய ஐயா அவர்கள் பல்வேறு பரிசுகளும், விருதுகளும் பெற்றுள்ளார்.
ஐயா திரு. ஆ.பழநி அவர்களின் நூல்கள்:
ஐயா திரு. ஆ.பழநி அவர்கள் பெற்ற பரிசுகள் மற்றும் விருதுகள்:
// திரு அரிசோனன். நூலில் குறிப்பிட்டிருந்த சிவனைக் குறித்த இரண்டு இடங்களில் உள்ள கம்பனின் பாடல்களைப் பேச்சாளர் குறிப்பிட்டார்.1.திருமால் அவதாரம் எடுக்க உறுதியெடுக்கும்போது சிவன் திருமால் அடிபணிதல்.2.யுத்தம் முடிந்து இறுதியில் தயரதனை அழைத்துவர ஒரு பணியாளைப் போல சிவனை ஏவுதல்.அன்புடன்சொ.வினைதீர்த்தான்//
--