படியுரை (affidavit)

116 views
Skip to first unread message

iraamaki

unread,
Jul 22, 2013, 11:10:16 PM7/22/13
to tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thamizayam
இது மரு.புருனோவின் ”பயணங்கள்” http://www.payanangal.in/2010/04/blog-post.html என்ற வலைப்பதிவில் அங்காடித்தெருப் பணியாளர்களின் நிலையும்,  இளம் வழக்குரைஞர்கள் (Junior Advocates), துணை நெறியாளர்கள் (Asst. Directors) பற்றி மருத்துவர் அளித்த இடுகையில் நான் முன்னால் [06/04/2010] அளித்த முன்னிகையின் படியாகும். affidavit என்ற சொல்லைப் பற்றிய இது, இணையத்தில் வேறொன்றைத் தேடிக் கொண்டிருந்தபோது மீண்டும் கைக்குக் கிட்டியது. இதை என் வலைப்பதிவில் இட்டு ஆவணப்படுத்த வேண்டும் என்று ஒரு விழைவால் இங்கு பதிவு செய்கிறேன். உங்கள் வாசிப்பிற்கு.
 
[இப்படிப் பல்வேறு இடங்களில் வெவ்வேறு ஆங்கிலச் சொற்களுக்கு இணையாய்த் தமிழ்ச்சொற்களைப் பரிந்துரைத்திருக்கிறேன். ஆனால் அவற்றைப் பின்னால் ஓரிடத்திற் சேகரித்து ஆவணப்படுத்தாது விட்டிருக்கிறேன். தொலைந்தவை மிகப்பல. வருத்தந்தான். மீந்தவற்றுள் ஆங்கிலச்சொல்லை அப்படியே அடித்துப் பக்கத்தில் இராம.கி. என்று தமிழில் அடித்துத் தேடினால் கூகுளில் ஏராளங் கிடைக்கும் போற் தெரிகிறது. நான் தொலைத்தது எனக்கே இப்படித்தான் கிடைக்கிறது.]
----------------------------------------
 
அபிடவிட் என்ற சொல்லைக் கொடுத்து அதன் பின் (ஆணை உறுதி ஆவணம்; ஆணை உறுதி வாக்குமூலம்; உறுதிமொழி ஆவணம்; பிரமாணப் பத்திரம், சத்தியவோலை, உறுதிமொழிப் பத்திரம்) என்ற சொற்களைக் கொடுத்திருந்தீர்கள். இவற்றையெல்லாம் ஏதோ சில அகரமுதலிகளில் இருந்து நீங்கள் திரட்டியிருக்கலாம்.
 
தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் ’சட்டத்தமிழ் அகராதி’யில் Affidavit என்பதற்கு [(S.3(3). General Clauses Act). Statement in writing and on oath, sworn before one who has authority to administer oath] என்று சொல்லி ஆணையுறுதி ஆவணம், உறுதிமொழிப் பத்திரம், ஆணையுறுதி என்ற சொற்களைக் கொடுத்து ‘ஆணையுறுதி ஏற்கும் அதிகாரம் பெற்றவர் முன், மெய்யுறுதியாகவும் எழுத்துமூலமாகவும் அளிக்கப்படும் வாக்குமூலம்’ என்று விளக்கமளித்துள்ளார்கள்.
 
இதேபோல Online Etymological Library இல் “1590s, from M.L. affidavit, lit. "he has stated on oath," third person sing. perf. of affidare "to trust," from L. ad- "to" + fidare "to trust," from fidus "faithful," from fides "faith" (see faith). So called from being the first word of sworn statements.” என்று விளக்கம் கொடுத்துள்ளார்கள்.
 
எனக்கு மேலே கொடுத்துள்ள எந்தச் சொற்கள் மேலும் அவ்வளவு பிடிப்பு வரமாட்டேன் என்கிறது. ஏதோ குறையிருப்பது போல் உணருகிறேன். ஏனென்றால், அவை சுற்றிவளைத்து வழக்கவையில் நடைபெறும் செய்முறைகளை வைத்தே விளக்கம் கொடுப்பது போல் அமைகின்றன. இதற்கு மாறாக நம்முடைய காலகாலமான வழக்கத்தில் இருந்தே ஒரு சொல் காணமுடியும் என்று எண்ணுகிறேன்.
 
இப்பொழுது யாருக்கோ ஒரு மடல் எழுதுகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுவோம். இதில் முடிவில் எப்படிக் கையெழுத்துப் போடுகிவீர்கள்? “இப்படிக்கு, ............. புருனோ” என்று தானே போடுவீர்கள்? நம்முடைய முப்பாட்டன், எள்ளுப்பாட்டனும் இப்படித்தான் கையெழுத்துப் போட்டிருப்பார்கள். ஏன் பேரரசுச் சோழர் காலத்திலேயே இந்தப் பழக்கம் இருந்ததை “இப்படிக்கு இவை கோயிற் கணக்குச் சீயபுரமுடையான் பெரிய பெருமாள் எழுத்து.” “இப்படி அறிவேன் மருதூர் சங்கரநாராயண பட்டனேன்” என்று (தெ.கல்.தொ.12.கல்.218, 179) என்று குறிப்பிட்டு ”கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி” என்னும் பொத்தகத்தில் (சி.கோவிந்தராசன், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம், 1987) வரும்.
 
”இப்படி, அப்படி, எப்படி” என்னும் போது அதில் வரும் படி என்ற சொல் நடந்து ”பட்டதைச்” சொல்லும் பொருட்பாடு காட்டும். படுதல் = நடவுதல்.
“இன்னபடிக்கு இது நடந்தது”.
”இந்தப்படிக்குச் செய்”
”அப்படியா அவர் சொன்னார்?”
”எப்படி இதுபோல அவன் கேட்கப் போயிற்று?”
 
எல்லாமே நடந்ததை, நடக்கிறதை, நடக்கப் போவதைக் கேட்பவை தான். படிதல் என்பது படுதல் என்பதைத் தொடர்ந்து எழுந்த வினை. படுதல்>பட்டுதல் என்பதில் இருந்து பட்டகை = fact என்ற சொல் எழுந்தது போல், படிதல் என்பதில் இருந்து படியுரை = affidavit என்ற குறுஞ்சொல்லை உருவாக்க முடியும். வேண்டுமானால் ஆவணம் என்ற சொல்லைச் சேர்த்துக் கொள்ளலாம். [என்னைக் கேட்டால் அப்படியொரு சேர்ப்புத் தேவையில்லை.]. நடந்ததை நடந்தபடி உரைப்பது ”படியுரை”. affidavit என்பதும் அது தான். சொல்லும் சுருக்கமாய் அமையும்.பொருளும் விளங்கும். நம்முடைய மரபும் தொடரும்.
 
நயமன்றத்தில் வழக்குரைஞர் தன் கட்சிக்காரரின் படியுரையைச் சமர்ப்பிப்பதில் எந்தப் பொருட்பாடும் குறையாது. படியுரை என்பது பொதுவான உண்மையல்ல. வழக்காளரின் பார்வையில் “இப்படி நடந்தது” என்று உரைக்கும் ஓர் ஆவணம். அவ்வளவுதான். இரு வழக்காளரின் பார்வைகளும் மாறுபடலாம் அல்லவா? வெவ்வேறு படியுரைகளைக் கேட்டு, படித்து, குறுக்கே கேள்வி கேட்டு, உசாவி, முடிவில் பிழை (குற்றம்) யாரிடம் என்று அங்கே கண்டுபிடிக்கிறார்கள். இதில் உறுதி, ஆணை என்பவையெல்லாம் ஊடுவரும் செயல்கள். பிழை(குற்றம்) நடந்தபோது இருந்தவையல்ல.
 
affidavit என்பது ”பிழை(குற்றம்) நடந்தபோது வழக்காளர் தன் பார்வையில் எப்படி உணர்ந்தார்?” என்று சொல்வது.
 
அன்புடன்,
இராம.கி.
 
 

C.R. Selvakumar

unread,
Jul 23, 2013, 12:09:05 AM7/23/13
to தமிழ் மன்றம், tamil_ulagam, thamizayam
நல்ல கருத்துகள் ஐயா!

// 
”இப்படி, அப்படி, எப்படி” என்னும் போது அதில் வரும் படி என்ற சொல் நடந்து ”பட்டதைச்” சொல்லும் பொருட்பாடு காட்டும். படுதல் = நடவுதல். 
“இன்னபடிக்கு இது நடந்தது”. 
”இந்தப்படிக்குச் செய்” 
”அப்படியா அவர் சொன்னார்?” 
”எப்படி இதுபோல அவன் கேட்கப் போயிற்று?”//

ஆகியவை நல்ல காட்டுகள். 
எனக்குப் பட்டதைக் கூறுகின்றேன்.
எனக்கு அப்படிக் படவில்லை  போன்ற பயன்பாடுகளில்
படுதல் என்பது தோன்றுதல், உண்டாதல், உதித்தல்
அல்லவா? படுதல் என்பதற்கு ஏறத்தாழ 20 சொற்பொருள்கள்
(வினை) உள்ளன. படுதல் என்றால் மறைதல் என்பது
முதல் படுதல் = அகப்படுதல், உடன்படுதல் என்று பற்பல
பொருள்கள் உண்டு. 

ஏனோ படியுரை என்பது உரையின் படி (ஒத்த, ஒரே வடிவுடையது, "காப்பி") 
என்பது போல பொருள் தருமோ என்று ஐயப்பாடு வருகின்றது. 
ஏன் எளிதாக உறுதியோலை என்றோ உறுதியாவணம் என்றோ
கூறலாகாது? படு-படி என்பன பல பொருள்கள்  கொண்டிருப்பதால்,
பயன்பாடு  (இங்கும் பயன்படு--> பயன்பாடு) சற்று உறுதிப்படுமாறு
இருக்கவேண்டும். மேலே நீங்கள் சொன்ன இன்னபடிக்கு நடந்தது முதலான
சொல்லாட்சிகளில் படி என்பது முறையைக் குறிக்கும் என்று நினைக்கின்றேன். 
எப்படி  என்றால் என்ன முறையில், என்ன முறையைப் பின்பற்றி என்ன முறைப்படி
என்ன் வழியில் (எவ்வாறு என்றாலும் அதில் வரும் ஆறு என்பது முறைதான்)
என்று பொருள். எனவே உறுதியோலை போன்ற எளிய சொல்லே போதும்
என்பது என் கருத்து ஐயா.

அன்புடன்
செல்வா


2013/7/22 iraamaki <iraa...@bsnl.in>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

C.R. Selvakumar

unread,
Jul 23, 2013, 12:38:22 AM7/23/13
to தமிழ் மன்றம், tamil_ulagam, thamizayam
கைச்சாத்து என்பது போல், உறுதிச்சாத்து உறுதிச்சாற்று என்றோ
மெய்ச்சாத்து, மெய்ச்சாற்று என்பது போல் ஏதோ சற்று எளிதாகக்
கூற முடியுமா என்றும் சிந்திக்க வேண்டும். 

/செ


2013/7/23 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

iraamaki

unread,
Jul 23, 2013, 2:02:16 AM7/23/13
to tamil_...@googlegroups.com, தமிழ் மன்றம், thamizayam
அன்பிற்குரிய பழனி,

நடந்ததை நடந்த படியே என் பார்வையிற் சொல்லும் போது என் படியுரையாகும். இப்படிப்
படியுரைகள் ஒரு வழக்கில் வெவ்வேறு பார்வையிற் பதிவு செய்யப்படும். அதற்கு மேல்
அதை ஆழப் பார்ப்பது தேவையா? - என்பது என் கேள்வி. அதை அதிகாரம் படைத்தவர் முன்
சொல்லும் போது சட்டத்தின் ஏற்பைப் பெறுகிறது என்றே நான் கொள்ளுகிறேன். Such an
assertion in front of an authority adds to the veracity of my affidavit.
அதிகாரம், ஆனை, உறுதி என்பவற்றை இங்கு கொண்டுவரும் போது confirming an
affidavit, validating an affidavit போன்றவற்றை எப்படிச் சொல்வது என்று நம்மைக்
குழம்ப வைக்கும்.

அப்புறம் உங்கள் உகப்பு.

அன்புடன்,
இராம.கி.

--------------------------------------------------
From: "Palaniappan Arumugum" <singai...@gmail.com>
Sent: Tuesday, July 23, 2013 11:11 AM
To: <tamil_...@googlegroups.com>
Cc: "தமிழ் மன்றம்" <tamil...@googlegroups.com>; "thamizayam"
<thami...@googlegroups.com>
Subject: Re: [தமிழ் உலகம்] Re: {தமிழாயம்} Re: [தமிழ் மன்றம்] படியுரை
(affidavit)

> அன்பு ஐயா,
>
> <நயமன்றத்தில் வழக்குரைஞர் தன் கட்சிக்காரரின் படியுரையைச்
> சமர்ப்பிப்பதில் எந்தப் பொருட்பாடும் குறையாது. படியுரை என்பது பொதுவான
> உண்மையல்ல. வழக்காளரின் பார்வையில் “இப்படி நடந்தது” என்று உரைக்கும் ஓர்
> ஆவணம். அவ்வளவுதான். இரு வழக்காளரின் பார்வைகளும் மாறுபடலாம் அல்லவா?
> வெவ்வேறு படியுரைகளைக் கேட்டு, படித்து, குறுக்கே கேள்வி கேட்டு, உசாவி,
> முடிவில் பிழை (குற்றம்) யாரிடம் என்று அங்கே கண்டுபிடிக்கிறார்கள்.
> இதில் உறுதி, ஆணை என்பவையெல்லாம் ஊடுவரும் செயல்கள். பிழை(குற்றம்)
> நடந்தபோது இருந்தவையல்ல>
>
> அதிகாரம் பெற்ற ஒருவர் முன்னால் இந்தப் புடியுரை உறுதி செய்யப்படவேண்டும்
> எனப்தால்தான் உறுதி, ஆணை என்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.
>
> Affidavit - a written or printed declaration or statement of facts,
> made voluntarily, and confirmed by the oath or affirmation of the
> party making it, taken before an officer (usually a lawyer or a
> commisioner for oaths) having authority to adminster such oath -
> Blacks Law Dictionary
>
> அன்புடன்
> பழனி

iraamaki

unread,
Jul 23, 2013, 1:52:06 AM7/23/13
to thami...@googlegroups.com, தமிழ் மன்றம், tamil_ulagam, thamizayam
படி (copy) என்றாலும் ஊற்றாவணம் எப்படி இருக்கிறதோ, அப்படியே தருவது தான். Copying and giving an affidavit are similar type of processes. Copy can be from written/printed document to another similar document. Affidavit is from ”what is perceived by a party” to what is stated/written.
 
இந்த உறுதி எனக்கு ஒப்புதலில்லை. ஏனெனில் confirming an affidavit   என்பதை எப்படிச் சொல்வது? உறுதியோலையை உறுதி செய்தோம் என்றா? படியுரையை உறுதி செய்தல் என்னும் போது குழப்பம் வராது. படியுரை என்பது சான்றாளர் பார்வையில் அமைவது. உறுதி செய்தல் என்பது தேர்வுப் பார்வையில் அமைவது.
 
அன்புடன்,
இராம.கி.


2013/7/22 iraamaki <iraa...@bsnl.in>

திருவள்ளுவன் இலக்குவனார்

unread,
Jul 23, 2013, 2:12:32 AM7/23/13
to tamil...@googlegroups.com, tamil_ulagam, thamizayam
பயன்பாட்டில் உள்ள சொல் அயற்சொல்லாக இருப்பின் மாற்றி அமைக்கலாம்.
விரிவான தமிழ்ச்சொல்லாக இருப்பின் பயன்பாட்டுச் சொல் அடிப்படையிலேயே சுருக்கமாக உரைப்பின் பயன்பாட்டு எளிமை கிட்டும்.நடைமுறைச்சொல்லிற்கு வேறு பொருளும் இருப்பின்  புதுச் சொல் உருவாக்கலாம்.
அஃபிடவிட் என்பது பிரமாணப்பத்திரம எனச் சொல்லப் பெற்று அதன்அடிப்படையில் சாட்சியம் ஆகி நல்ல தமிழில் சான்றியம்(அருளி) ஆகி அலுவலக ஆட்சியில் நேர் பொருளாக உறுதி ஆவணம் எனப்படுகிறது. உறுதி ஆவணத்தை ச் சுருக்கி உறுதியுரை என்றே கையாண்டுள்ளேன்.
படியுரை என்பதற்குப் பேரா.செல்வா விளக்கமாக உரைத்துள்ளதே சரி.பேறு சொல் வேண்டும் எனக்கருதின்,
வழக்கு தொடுப்புரையில் தன்நிலையில் ஊன்றி உறுதியாய் நிற்றலால்   ஊன்றுரை என்பது  பொருத்தமாக அமையும்.

அஃபிடவிட் - ஊன்றுரை
கவுண்டர் அஃபிடவிட் - எதிர் ஊன்றுரை


2013/7/23 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>



--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.org
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Bala Swaminathan

unread,
Jul 23, 2013, 2:15:42 AM7/23/13
to tamil...@googlegroups.com
என்னைப் பொருத்தவரையில், படியுரை என்பது எளிமையாகத்தான் தோன்றுகிறது. (எங்கள் சாட்சிப்படி (அ) கட்சிப்படி, எங்களுக்குத் தெரிந்தபடி (அ) தோன்றியபடி .. உறைத்துள்ளோம்)

நட்புடன்,
-பாலா

C.R. Selvakumar

unread,
Jul 23, 2013, 2:28:06 AM7/23/13
to தமிழ் மன்றம், தமிழாயம், tamil_ulagam
//confirming an affidavit //

என்றால் என்ன?

அளித்த அஃபிடவிட்டை என்ன செய்தார், பெற்றுக்கொண்டோம் என்றாரா?
எனன பொருள் இங்கே?

அஃபிடவிட்டைக் காப்பி செய்தார் என்பதை எப்படிச் சொல்வீர்கள்?
"படியுரையை"ப் படியெடுத்தார் என்பீர்கள் அல்லவா அது போலத்தான்
உறுதியோலையைப் பெற்றதை உறுதி செய்தார், உறுதியோலை இருப்பை
உறுதிசெய்தார் என்று ஏதேனும் அது சுட்டும் பொருளுக்கு ஏற்ப  சொல்லலாம்.
படியுரை என்பது படிக்கப்படும் உரை படிபப்தற்கான உரை என்பது போல்
ஏதோ நெருடுகின்றது ஐயா!

இன்னொன்று.. பொதுவாகவே இப்படி ஆங்கில வழி முறைகளை அடியொற்றி
அனைத்தையும் செய்வதே எனக்கு உவப்பு இல்லை. அதில் நல்ல முறைகள்
இருந்தால் அதனை நமக்கு ஏற்ப எடுத்துக்கொண்டு அதற்கான வழிமுறைகளைத்
தமிழில் நாம் ஆக்கிக்கொள்ள வேண்டும். அவன் அஃபிடவிட்டு என்றால் நாமும்
அதே பொருளில் ஒன்றை அதே முறையில் ஈயடிச்சான் படியாகத்தான் செய்ய
வேண்டுமா? என்ன ஓர் ஆவணம் சமர்ப்பிக்கின்றார். அது எப்படி இருக்க வேண்டும்?
ஏதேனும் ஒரு வகையில் ஏற்பு பெற்றதாக இருக்க வேண்டும்.. இப்படியாக தேவை
அறிந்து அதற்கான சொற்களை நாம் நமக்காக ஆக்கிக்கொள்ள வேண்டும்.
இதற்கு ஈடான நடைமுறை ஆங்கிலேயர் உலகில் இல்லாமல் இருக்கலாம்,
அது பற்றி நாம் கவலைப் பட வேண்டியதில்லை. ஏன் சில நூறு ஆண்டுகளுக்கு முன்
அவரவர் சண்டை பிணக்குகளைத் தீர்த்துக்கொள்ளவில்லையா?
தெரியும் உரோமன் சட்டம், 'பெரிய பெரிய "நெடிய" ' "மரபுகள்"  எல்லாம்
உள்ளன என்று. அவை எல்லாம் தேவையா என்பதே என் கேள்வி.
பொதுவாக நாம் நம் தேவை அறியாமல் நமக்கான முறை வகுக்காமல்
இபப்டி யாரோ செய்து வைத்தபடியே (அவற்றில் நல்லதை
எடுத்துக்கொள்ளலாம்) செய்ய வேண்டும் என்பதில் எனக்கு
பெரிய ஈர்ப்பு இல்லை... இது பெரிய தலைப்பு எனவே... தொடருவது கடினம்..

அன்புடன்
செல்வா


2013/7/23 iraamaki <iraa...@bsnl.in>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--

iraamaki

unread,
Jul 23, 2013, 4:27:43 AM7/23/13
to tamil_...@googlegroups.com, தமிழ் மன்றம், தமிழாயம், tamil_ulagam
நான் தான் வழக்குப் போட்டேன் என்று வையுங்கள். என் படியுரையை வழக்கு மன்றத்தில் சமர்ப்பிக்கிறேன். வழக்கு வாதாடலுக்கு வருகிறது. இன்னொருவர் (அவர் சான்றாளராகவோ, வேறு யாராகவோ இருக்கலாம்) தன் வாய்ச்சான்றின் மூலமோ, தன் படியுரையின் மூலமோ நான் படியுரைத்ததை உண்மையென்று கூறி உறுதிசெய்கிறார். இது என் வழக்கிற்கு அரணாக அமையும். This is a third party confirming the affidavit of the plaint.
 
நீங்கள் கேட்டதை இப்படிச் சொல்லமுடியும்.
 
I took a copy of the affidavit = வழக்கின் படியுரையை நான் படியெடுத்தேன் (படியெடுத்தல் என்பது துணைவினை சேர்த்து உருவாக்கப் பட்ட வினைச்சொல். எடுத்தல் என்ற துணைவினை கூட இருக்கும் வரை இது சரியான புரிதலைக் கொண்டுதரும்,  குழப்பம் வர வாய்ப்பில்லை என்றே எண்ணுகிறேன்.).
 
He confirmed my affidavit =    என் படியுரையை அவர் உறுதி செய்தார்.
 
பலவகையிலும் இந்த மொழியாக்கத்தை எண்ணிப் பார்த்துவிட்டேன்.  குழப்பம் வர வாய்ப்பில்லை. [கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் எங்கள் குழுமஞ் சார்ந்து உயர்நீதிமன்றத்தில், வழக்குகளில் பங்களிக்க வேண்டிய தேவையேற்பட்டு, பல்வேறு படியுரைகளும் வழக்குரைஞரோடு சேர்ந்து எழுதிச் சமர்ப்பித்துப் பெற்ற பட்டறிவிற் சொல்லுகிறேன்.)
 
அன்புடன்,
இராம.கி.  

Sent: Tuesday, July 23, 2013 11:58 AM
Subject: [தமிழ் உலகம்] Re: {தமிழாயம்} Re: [தமிழ் மன்றம்] படியுரை (affidavit)

//confirming an affidavit //

என்றால் என்ன?

அளித்த அஃபிடவிட்டை என்ன செய்தார், பெற்றுக்கொண்டோம் என்றாரா?
எனன பொருள் இங்கே? =

வேந்தன் அரசு

unread,
Jul 23, 2013, 5:53:48 AM7/23/13
to tamil...@googlegroups.com, tamil_ulagam, thamizayam
வாக்கு கொடுத்துட்டேன் என்றால் சொன்னதை காப்பாற்றுவேன் என பொருள்

வாக்கு / தமிழ் அல்லாவிட்டால் என்ன நாம் புதிதாக படைத்ததாக கொள்ளலாம், வாயில் வருவது வாக்கு.

வாதம், (வாயம்) வாக்கு, வாசி எல்லாம் வாயில் பிறப்பனவே

உலகன் ஐயாவை கேட்டால் இவை தொல்தமிழ் என்பார்

வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்
Reply all
Reply to author
Forward
0 new messages