தீதும் நன்றும் பிறர்தர வாரா

11 views
Skip to first unread message

Banukumar Rajendran

unread,
Sep 28, 2010, 2:32:56 AM9/28/10
to tamil...@googlegroups.com, மின்தமிழ்

தீதும் நன்றும் பிறர்தர வாரா!


புறநானூற்றில் வரும் பாடல், ”யாதும் ஊரே யாவரும் கேளிர்,
தீதும் நன்றும் பிறர்தர வாராமிகவும் பிரசித்தம். இதை எழுதியவர், கனியன்.பூங்குன்றனார் என்ற சங்கப் புலவராவார். இக்கால எழுத்தாளர்கள் இந்தப் பாட்டு ஆசிவகத்தின் சாரம் என்று கூறி வருகின்றனர். இது உண்மையா?


ஆசிவகமா?


உண்மையில் இப்பாடல் ஆசிவகக் கருத்துகளை பேசுகிறதா? என்ற கேள்விக்கு முன், சமணத்திற்கும் ஆசிவகத்திற்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை சிறிதுத் தெரிந்துக் கொண்டு மேலே செல்லுவோம்! இரண்டு சமயங்களுக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை கீழேக் கொடுத்துள்ளேன்.


எண் வரிசை

சமணம்

ஆசிவகம்

தத்துவம்/ கடமைகள்

 

 

1

உயிர் உண்டு

உயிர் உண்டு

2

உயிர்கள் தாழாது முயன்றால் வீடுபேறடைதல் உறுதி! (முயற்சி திருவினையாக்கும்)

உயிர்கள் வீடுபேறடைதல் முன்னமே நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. உயிர்கள் என்ன முயன்றாலும் வீடுபேறடைதல் முடியாது! (முயற்றின்மை இன்மை புகுத்திவிடும்)

3

ஊழ் உடன்பாடு

ஊழ் உடன்பாடு

4

நல் ஊழ் / தீ ஊழ் உண்டு

நல்/தீ ஊழ் என்ற பாகுபாடு இல்லை

5

வீடுபேறடைந்த உயிர்கள், மறுபடியும் பிறப்பெடுப்பதில்லை!

வீடுபேறடைந்த உயிர்கள், மறுபடியும் பிறப்பெடுக்கும்!

6

வீடுபேறு பெற துறவறம் மேற்கொள்ளப்பட்டது!

துறவறம் "Professional" ஆகக் கருதப்பட்டது! இல்லறத்திலும் வீடுபேறுண்டு!

7

துறவறத்தார் அமணமாகயிருப்பர்!

துறவறத்தார் அமணமாகயிருப்பர்!

8

துறவறத்தார் மயீர்ப்பீலி, கமண்டலம் வைத்துக்கொள்ள அனுமதியுண்டு

துறவறத்தார் தட்டு, துடுக்கு, கமண்டலம் வைத்துக் கொள்ள அனுமதியுண்டு

9

புலால் மறுப்பு இல்லறத்தார்/துறவறத்தார் இருவருக்கும் கடைப்பிடிக்கவேண்டும்!

புலால் மறுப்பு கட்டாயம் இல்லை!

10

வேறுப் பெயர்கள் - சமணம், ஆருகதம், நிக்கந்தம், அனேகாந்தம், சாவகம், தாபதம்

ஆசிவகம் - மற்ற பெயர்கள் தெரியவில்லை

11

சமய ஸ்தாபகர் என்று யாரும் இல்லை.  நிகழ்க் காலத்தில் ரிஷபநாதர் என்ற முதலாம் தீர்த்தங்கரரால் முன்னெடுத்தோம்பப்பட்டு அவரால் வெளிப்பட்டது. அதையே  இருபத்துநான்காம் தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் முன்னெடுத்துச் சென்றார்.

சமய ஸ்தாபகர் மஸ்கலி கோசப் புத்திரர். சமணத்தின் இருபத்துநான்காம் தீர்த்தங்கரர் மகாவீரரிடம் ஆறு வருடம் சீடராகயிருந்திருக்கிறார். இவருக்கு முன் அஜிவக சமயம் இருந்ததற்கான ஆதாரம் இன்றளவில் கிட்டவில்லை.

12

படைப்புக் கோட்பாட்டில் நம்பிக்கையில்லை

படைப்புக் கோட்பாட்டில் நம்பிக்கையில்லை

 

மேல் கூறப்பட்ட அட்டவணையிலிருந்து ஒன்றுப் புரியும். இரண்டு சமயங்களுக்கும் நுணுகிப்பார்த்தாலன்றி பெரிதும் வித்தாயசம் காண முடியாது. இரண்டுக்கும் நூலிழையேத் தான் வேறுபாடு!


காட்டாக: ஊழ் என்ற கோட்பாட்டை இரண்டு சமயங்களும் ஏற்கின்றன. ஆனால் ஆராய்ந்துப் பார்த்தால், இரண்டு சமயங்களும் பிரியும் இடம் தெரியும். பிரியும் இடம் எதுவென்றுப் பார்த்தால், புருஷார்த்தம் என்ற ஆள்வினையிடைமையில் சமணம் அசைக்க முடியாத நம்பிக்கை. ஆனால், ஆசிவகம் அவற்றை நம்புவதில்லை. யார் (கடவுள், தனிமனித முயற்சி) என்ன முயன்றாலும் எது நடக்கவேண்டுமோ அது நடந்தே தீரும். அவற்றை யாரும் அல்லது யாதொன்றும் தடுக்கவோ முடியாது.

சமண இலக்கியங்களில், ஊழைப்பற்றி பரக்கக் காணலாம். அதுசமயம், அவ்வூழை தாழாது, முயன்று, வென்று வீடுபேறடைந்த உயிர்களைப் பற்றி வருவதையும்க் காணலாம். அஃதாவது, பிறப்பெடுத்த உயிர் ஆள்வினை (புருஷார்த்தம்) இல்லாவிட்டால் அவ்வுயிர் எக்காலமும் வீடுபேறடைய முடியாது. பிறவிப் பெருங்கடலில் உழன்றுக் கொண்டேயிருக்கவேண்டியது தான். ஆனால் அதற்கு மாறாக, அசீவகக் கொள்கைப்படி முயற்சி செய்யாமலே உயிர்கள் வீடுபேறடைய முடியும்.


இதன் அடிப்படையில் கனியனார்ப் பாட்டை ஆராய்வோம்.


யாதும் ஊரே, யாவரும் கேளிர்


விளக்கம் 1: எல்லா உயிரும் ஒன்றே. ஒரு பிறவியில் தந்தையாகயிருந்த உயிர், மற்றோர் பிறவியில் தனையனாகவும், வேறோர் பிறவியில் மாமனாகவோ ஏன் தாயாகவோ பிறப்பெடுக்கும். அவ்வகையில் எல்லா உயிர்களும் நம் உறவினர்களே! அவ்வண்ணமே எல்லா ஊர்களும் நம் ஊரே!

 

விளக்கம் 2: எல்லாரும் கடவுள் பெற்ற குழந்தைகள். ஆதலால். நாம் எல்லோரும் ஒரு வகையில் உறவினர்களே. எல்லா ஊரும் நம் ஊரே!

 

இவ்விளக்கங்கள் தவிர வேறு வகையில் பொருள் உரைத்தாலும், மேற்சொன்ன விளக்கத்தில் ஏதாவதொன்றை ஒற்றியே அவைகள் இருக்கமுடியும்.

முதல் விளக்கத்தில் கடவுள் என்ற ஒரு வஸ்து தேவையில்லாமல் போய்விடுகிறது. இரண்டாவதில் கடவுள் என்ற ஒரு வஸ்து தேவைப்படுகிறது.

சரி. அடுத்த வரிக்கு போவதற்கு முன்னற் ”தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்ற வரிக்கு விளக்கங்கள் எழுதி அனுப்புங்களேன். எல்லாருடைய விளக்கங்களையும் தொகுத்தப் பின்னர் மேல் செல்லுவோம்.

 

தொடரும்….

 

இரா.பா

சென்னை

Elangovan N

unread,
Sep 28, 2010, 12:16:18 PM9/28/10
to tamil...@googlegroups.com
பயனுள்ள தரவுகள் தந்தமைக்கு மிக்க நன்றி.
நல்ல உரையாட்டை துவக்கியிருக்கிறீர்கள்.
”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற வரிக்கு தாங்கள் எழுதியிருக்கிற விளக்கத்தின்பால்
எனக்குக் கருத்துக்கள் இருப்பினும், இந்த வரியை தமிழ்நாட்டு அரசியல் மேடைகள்
இதனைப் பிழையாகப் பயன்படுத்திக் கொண்டன என்ற எண்ணம் எனக்கு உண்டு.

”அன்னை எத்தனை எத்தனை அன்னையோ
  அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ....
 பின்னம் எத்தனை எத்தனைப் பிள்ளையோ
  பெண்டிர் எத்தனை எத்தனைப் பெண்டிரோ
 முன்னம் எத்தனை எத்தனை சென்மமோ
   மூடநாயடியேன் அறிந்திலேன்
 இன்னம் எத்தனை எத்தனை சென்மமோ
  இறைவா கச்சி ஏகம்பனே”

என்பார் பட்டினத்தார். (மேலே நான் எழுதிருப்பதில் சில சீர்களில் பிழையிருக்கக் கூடும். மறதி) 
அப்பாடல் நினைவுக்கு வந்தது.

மேலும் இவ்விழையில் வரும் கருத்துக்களைப் படிக்க ஆவலாக உள்ளேன்.

அன்புடன்
நாக.இளங்கோவன்




2010/9/28 Banukumar Rajendran <banuk...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

C.R. Selvakumar

unread,
Sep 28, 2010, 1:37:22 PM9/28/10
to tamil...@googlegroups.com, மின்தமிழ்

அன்புள்ள இரா.பா,

நம் திருவள்ளுவர் உரையாடலை விட்டுவிட்டீர்களே!
2-3 கேள்விகள்தாம் ஐயா கேட்டேன்.

இப்பொழுது நீங்கள் தந்திருக்கும் சமணம்-ஆசீவகம் வேறுபாடுகள் பட்டியலுக்கு
அடியூட்டுகள், அடிச்சான்றுகள் யாவை? எக்காலத்தவை (தோராயமாக)
அவை? உங்கள் பட்டியலில்
6 ஆவது புள்ளி அல்லது கிடை வரிசையில், சமணத்தில்
இல்லறத்தில் வீடு பேறு இல்லை எனக் கொள்ளலாமா?
 
சமணத்தில் பெண்களுக்கு வீடு பேறு உண்டா?
 
(சான்றுகாளுடன் கூறினால் நல்லது)

அன்புடன்
செல்வா

2010/9/28 Banukumar Rajendran <banuk...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.



--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

Elangovan N

unread,
Sep 28, 2010, 1:50:15 PM9/28/10
to tamil...@googlegroups.com
ஐந்தாவது கருத்தில் “ஆசீவகத்தில் வீடுபேறு அடைந்த உயிர்கள்  மீண்டும் பிறக்கும்”
என்று சொல்லியிருக்கிறீர்கள். 

மரணமடைந்து மீண்டும் பிறவி எடுப்பதற்கும், வீடுபேறடைந்து மீண்டும் பிறப்பதற்கும்
என்ன வேறுபாடு?

ஆசீவகத்தின் படி மரணம் என்றால் என்ன? வீடுபேறு என்றால் என்ன?
என்று விளக்க வேண்டுகிறேன்.

அன்புடன்
நாக.இளங்கோவன்


2010/9/28 Elangovan N <nela...@gmail.com>

Banukumar Rajendran

unread,
Sep 29, 2010, 1:17:21 AM9/29/10
to tamil...@googlegroups.com
ஐயா,

//நம் திருவள்ளுவர் உரையாடலை விட்டுவிட்டீர்களே!
2-3 கேள்விகள்தாம் ஐயா கேட்டேன்.//

என்னுடைய கடைசி இடுகையைப் பாருங்களேன். கடவுள் அதிகாரத்தில் இருந்தே தொடங்கலாம் (சுற்றி வளைத்து வேண்டாம்) என்று கூறியிருந்தேன். நான் அல்லவோ தங்களுக்காகக் காத்திருக்கிறேன்! :-)

// சமணத்தில்
இல்லறத்தில் வீடு பேறு இல்லை எனக் கொள்ளலாமா?
//

இல்லறத்தில் இருந்து வீடுபேறில்லை!

//சமணத்தில் பெண்களுக்கு வீடு பேறு உண்டா? //

திகம்பர சமணத்தின் படி இல்லை. ஸ்வேதாம்பர சமணத்தின் படி உண்டு. :-))
சான்றுகள் ”Jain world" வலைத்தளத்திலேக் காணலாம்.


இரா.பா,
சென்னை


2010/9/28 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

அன்புள்ள இரா.பா,

இப்பொழுது நீங்கள் தந்திருக்கும் சமணம்-ஆசீவகம் வேறுபாடுகள் பட்டியலுக்கு
அடியூட்டுகள், அடிச்சான்றுகள் யாவை? எக்காலத்தவை (தோராயமாக)
அவை? உங்கள் பட்டியலில்
6 ஆவது புள்ளி அல்லது கிடை வரிசையில்,

Banukumar Rajendran

unread,
Sep 29, 2010, 3:13:52 AM9/29/10
to tamil...@googlegroups.com, மின்தமிழ்
நாக.இளங்கோவன் ஐயா,

மரணத்திற்கு பிறகு உயிர் என்னவாகிறது என்பதற்கு விடைக்காணும் பொருட்டுதானேப் பலதரப் பட்ட சமயங்கள் தோன்றின.

ஆசிவகம்ப் பற்றி அறிந்துக் கொள்ள நேரடியான நூலகள் தற்போது ஏதுமில்லை. சமண, பெளத்த தர்க்க இலக்கியங்களில் இருந்து பெறப் பெற்ற விஷயங்களின் அடிப்படைகளைக் கொண்டு சொல்லப்பட்டவைகள் தான் இருக்கின்றன.

ஆசிவகம் வீடுபேறுப் பற்றி:

உடல்தான் அழிகிறதே தவிர உயிர்கள் அழிவில்லை. உயிர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட நாள் வரை உழன்றுக் கொண்டேயிருக்கும். இதற்கு நூல் உருண்டையைக் காட்டாகக் காட்டுவர். நூல் உருண்டையைப் பிரித்தால் எவ்வளவு நீளுமோ அவ்வளவு வரை பிறவி நீளும். பின்னர் உயிர்கள் மறுபடியும் பிறப்பெடுப்பதில்லை.


இரா.பா,
சென்னை
 


2010/9/28 Elangovan N <nela...@gmail.com>

Banukumar Rajendran

unread,
Sep 29, 2010, 3:30:53 AM9/29/10
to mint...@googlegroups.com, tamil...@googlegroups.com
அம்மையீர்,


தங்கள் பின்னூட்டு கண்டு மகிழ்ச்சி.


யான் பயன்படுத்திய நூல்கள்:

1. பெளத்தமும் தமிழும் - (பின் இணைப்பாக - ஆஜிவ மதம் - கட்டுரை - மயிலையார்)
2. நீலகேசி - மூலமும் உரையும் - (பெருமழைப் புலவர் - சைவ சித்தாந்த கழகம்)
3. நீலகேசி - சக்கரவர்த்தி நயினார்
4. http://texts.00.gs/History_and_Doctrines_of_the_Ajivikas,_1-IV.htm
5. http://philtar.ucsm.ac.uk/encyclopedia/hindu/ascetic/ajiv.html
6. தமிழர் சமயம் - திரு.க.நெடுஞ்செழியன்


மேற் சொன்ன நூற்களில் இருந்துத் தொகுத்ததுதான் அந்த அட்டவணை. ரொம்பவும் Basic தான்.



இரா.பா,
சென்னை

2010/9/29 rajam <ra...@earthlink.net>
திரு இரா.பா அவர்களுக்கு என் முதல் வணக்கம்.
(1961-1963 நாட்களில்) திரு அவ்வை துரைசாமிப் பிள்ளையவர்கள் வகுப்பில் கேட்ட நினைவு --
"யாதும் ஊரே ... " என்ற பாடல் ஆசீவகக் கொள்கையைத் தெரிவிக்கிறது என.
பிற விவரங்கள் இன்று நினைவில் இல்லை. 
"நூலிழை" என்றாலும் அங்கே பிறந்த கருத்து வேறுபாடுதானே பிறகு பிளவுபட்டிருக்கும்? என்ன சூழலோ?
அதுபற்றியது அன்று என் கவலை.
கீழே தாங்கள் கொடுத்திருக்கும் அருமையான அட்டவணைக்கு மூலநூல் எது என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.
அன்புடன்.
ராஜம்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Banukumar Rajendran

unread,
Sep 29, 2010, 4:36:35 AM9/29/10
to tamil...@googlegroups.com


---------- Forwarded message ----------
From: Banukumar Rajendran <banuk...@gmail.com>
Date: 2010/9/29
Subject: Re: [MinTamil] தீதும் நன்றும் பிறர்தர வாரா
To: mint...@googlegroups.com



//செம்மொழி மாநாட்டில் இவ்வாசீவகப்பாடல் உயர்த்திப் பிடிக்கப்பட்டுள்ளது.

ஆரியர், திராவிடர் என்று ஒப்பாரி அடிக்கும் குழுவினர் ஆசீவகத்தை மட்டும்
எப்படித்தூக்கிப்பிடிக்கலாம். அதுவும் ஆரியர் கொடை என்றல்லவோ உங்கள்
அட்டவணை காட்டுகிறது!//


சமண சம்பந்தமென்றுக் கொண்டால் அவைகள் ஆரியப்பட்டு போகும் என்றுதானே, சமண குறியீடுகளை ஆசிவகத்திற்கு ஏற்றிவருகிறார்கள். ஆசிவகம் வடநாட்டில் தானே தோன்றியது என்பதை மறைக்க தற்போது ஆசிவகத்தை தமிழ்நாட்டோடு தொடர்புப் படுத்துகிறார்கள். கோசலர், பூரணர், காஸ்யபர், மக்கலி, ஆஜிவகப் போன்ற வார்த்தைகள் எப்படி தமிழாகும் என்று அவர்களுக்கே வெளிச்சம். முன்பு இந்து சமய வெறுப்புக் கொண்டவர்கள் சமண/பெளத்த மதங்களை ஆதரித்தார்கள். தற்போது சமணம்/பெளத்தம் என்று ஏற்றுக் கொண்டால் தமிழனுக்கு என்று சுய அறிவு இல்லாமல் போகுமே என்று ஆஜிவகத்தை ஆதரிக்க முற்படுகின்றனர். ஏன்னென்றால் அம்மதம் தான் முற்றும் அழிந்துப் போயிற்றே, அதனால் யாரும் ஏதும் சொல்ல முடியாது என்று தமிழனோடு ஆஜிவகத்தை ஏற்றி வருகின்றனர். தற்போது தமிழ்ச் சமணமோ இப்பரத கண்டத்தின் ஒரு புள்ளி.

தமிழில் சமண/பெளத்த இலக்கியங்கள் படைத்தவர்கள் தமிழ் நாட்டவரே. அவர்கள் சமண/பெளத்த மதகளை தழுவினார்களே தவிர, அவர்களும் தமிழர்கள்தான் என்பதை மறந்துப் போனார்கள். தமிழர், தமிழ், சமயம் என்ற அடிப்படைப் புரிதல் கூட இல்லாதவர். :-(


//மறுபிறவி பற்றிய கருத்துக்கள் சுவாரசியமானவை. யாதும் ஊரே, யாவரும் கேளிர்

என்பதற்கு அதுவே ஆதாரமெனில் மறுபிறவியின் இயக்க நுணுக்கம் என்ன? முன்பு
எங்கோ படித்ததில் 300 கிமீ பரப்பளவிலேயே இச்சுழற்சி அடிக்கிறது என்று
எண்ணம். அமெரிக்க வெள்ளையர் நம் கருத்தம்மா கருவில் துளிர்க்கமுடியுமா?
அண்ட்ரோமிடா வான் மண்டலத்து ஜீவராசி அய்யம்பேட்டை அம்மாப்பொண்ணு
வயிற்றில் உதிக்க முடியுமா?//

யாருக்கு மறுபிறவிக் கோட்பாடு என்ற ஒன்று வேண்டும்?

1. படைப்பு கோட்பாட்டை ஏற்றுக் கொண்டவர்களுக்கு மறுபிறப்பு கோட்பாடு தேவையில்லை.
2. படைப்பு கோட்பாட்டை ஏற்காதவர்கள், நிகழ்வுக்குச் சமாதானம் கூறும் பொருட்டு, ஊழ்க் கோட்பாட்டை முன்வைத்தார்கள்.




இரா.பா,
சென்னை





2010/9/29 N. Kannan <navan...@gmail.com>

மூன்று கேள்விகள் அல்லது குறிப்புகள்:

சமணத்திற்கும், ஆசீவகத்திற்கும் மயிரிழை அளவு வித்தியாசம்தான் என்று
குறிப்பிட்டுள்ளீர்கள். இந்தியத் தத்துவங்கள் (வேதத்தை ஒத்துக்கொண்ட,
ஒத்துக்கொள்ளாத) அனைத்திற்குள்ளும் மிகச்சிறிய வித்தியாசங்களே உள்ளன.
ஒன்றையொன்று தழுவியே அவை நிற்கின்றன. சமகால இந்தியத்தத்துவம் (இந்து
‘மதம்’ என்று அதை அழைக்கலாமா?). நாம் ஒரு மேட்டில் நின்று கொண்டு இப்போது
குழி தோண்டிப் பார்க்கிறோம் என்று தோன்றுகிறது!

மறுபிறவி பற்றிய கருத்துக்கள் சுவாரசியமானவை. யாதும் ஊரே, யாவரும் கேளிர்
என்பதற்கு அதுவே ஆதாரமெனில் மறுபிறவியின் இயக்க நுணுக்கம் என்ன? முன்பு
எங்கோ படித்ததில் 300 கிமீ பரப்பளவிலேயே இச்சுழற்சி அடிக்கிறது என்று
எண்ணம். அமெரிக்க வெள்ளையர் நம் கருத்தம்மா கருவில் துளிர்க்கமுடியுமா?
அண்ட்ரோமிடா வான் மண்டலத்து ஜீவராசி அய்யம்பேட்டை அம்மாப்பொண்ணு
வயிற்றில் உதிக்க முடியுமா?

செம்மொழி மாநாட்டில் இவ்வாசீவகப்பாடல் உயர்த்திப் பிடிக்கப்பட்டுள்ளது.
ஆரியர், திராவிடர் என்று ஒப்பாரி அடிக்கும் குழுவினர் ஆசீவகத்தை மட்டும்
எப்படித்தூக்கிப்பிடிக்கலாம். அதுவும் ஆரியர் கொடை என்றல்லவோ உங்கள்
அட்டவணை காட்டுகிறது!

க.>



2010/9/28 Banukumar Rajendran <banuk...@gmail.com>
>
> தீதும் நன்றும் பிறர்தர வாரா!
>
> சமய ஸ்தாபகர் என்று யாரும் இல்லை.  நிகழ்க் காலத்தில் ரிஷபநாதர் என்ற முதலாம் தீர்த்தங்கரரால் முன்னெடுத்தோம்பப்பட்டு அவரால் வெளிப்பட்டது. அதையே  இருபத்துநான்காம் தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் முன்னெடுத்துச் சென்றார்.
>
> சமய ஸ்தாபகர் மஸ்கலி கோசப் புத்திரர். சமணத்தின் இருபத்துநான்காம் தீர்த்தங்கரர் மகாவீரரிடம் ஆறு வருடம் சீடராகயிருந்திருக்கிறார். இவருக்கு முன் அஜிவக சமயம் இருந்ததற்கான ஆதாரம் இன்றளவில் கிட்டவில்லை.

> மேல் கூறப்பட்ட அட்டவணையிலிருந்து ஒன்றுப் புரியும். இரண்டு சமயங்களுக்கும் நுணுகிப்பார்த்தாலன்றி பெரிதும் வித்தாயசம் காண முடியாது. இரண்டுக்கும் நூலிழையேத் தான் வேறுபாடு!
>
>> யாதும் ஊரே, யாவரும் கேளிர்
>
> விளக்கம் 1: எல்லா உயிரும் ஒன்றே. ஒரு பிறவியில் தந்தையாகயிருந்த உயிர், மற்றோர் பிறவியில் தனையனாகவும், வேறோர் பிறவியில் மாமனாகவோ ஏன் தாயாகவோ பிறப்பெடுக்கும். அவ்வகையில் எல்லா உயிர்களும் நம் உறவினர்களே! அவ்வண்ணமே எல்லா ஊர்களும் நம் ஊரே!

Banukumar Rajendran

unread,
Sep 29, 2010, 4:47:30 AM9/29/10
to mint...@googlegroups.com, tamil...@googlegroups.com
அன்பின் தேவ் ஐயா,

ஆஜிவகக் கோட்பாட்டை விளக்க நூலுருண்டையைத்தான் காட்டாக காட்டப்படுகிறது. ஊழை நியதியாகப் பார்க்கிறது ஆஜிவகம். நல்வினை, தீவினை என்று ஏதுவுமில்லை என்பதுதானே ஆஜிவகம்.

நம் கையில் ஏதுமில்லை. எல்லாம் நியதிப்படிதான் நடக்கும்  -ஆஜீவகம்.



இரா.பா,
சென்னை

2010/9/29 devoo <rde...@gmail.com>
>> நூல் உருண்டையைப் பிரித்தால் எவ்வளவு நீளுமோ
அவ்வளவு வரை பிறவி  நீளும். பின்னர் உயிர்கள் மறுபடியும்
பிறப்பெடுப்பதில்லை.<<



பிறவித் தொடரின் இறுதியாக ஒரு பிறப்பு உண்டு என்கிறீர்கள்.
அதில் ஒருவன் வினையாற்றாமல் இருக்க முடியுமா ?
அதை நுகர்வதற்கு ஒரு பிறவி ஏற்பட்டாக வேண்டுமல்லவா ?
இல்லையெனில் அந்த வினைகளின்  பயனை நுகர்வது யார் ?
நூலுருண்டை  எ கா அத்தனை பொருத்தமாக இல்லையே ?


தேவ்



On Sep 29, 2:13 am, Banukumar Rajendran <banukuma...@gmail.com> wrote:
> நாக.இளங்கோவன் ஐயா,
>
> மரணத்திற்கு பிறகு உயிர் என்னவாகிறது என்பதற்கு விடைக்காணும் பொருட்டுதானேப்
> பலதரப் பட்ட சமயங்கள் தோன்றின.
>
> ஆசிவகம்ப் பற்றி அறிந்துக் கொள்ள நேரடியான நூலகள் தற்போது ஏதுமில்லை. சமண,
> பெளத்த தர்க்க இலக்கியங்களில் இருந்து பெறப் பெற்ற விஷயங்களின் அடிப்படைகளைக்
> கொண்டு சொல்லப்பட்டவைகள் தான் இருக்கின்றன.
>
> ஆசிவகம் வீடுபேறுப் பற்றி:
>
> உடல்தான் அழிகிறதே தவிர உயிர்கள் அழிவில்லை. உயிர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட
> நாள் வரை உழன்றுக் கொண்டேயிருக்கும். இதற்கு நூல் உருண்டையைக் காட்டாகக்
> காட்டுவர். நூல் உருண்டையைப் பிரித்தால் எவ்வளவு நீளுமோ அவ்வளவு வரை பிறவி
> நீளும். பின்னர் உயிர்கள் மறுபடியும் பிறப்பெடுப்பதில்லை.
>
> இரா.பா,
> சென்னை
>
> 2010/9/28 Elangovan N <nelan...@gmail.com>

>
> > ஐந்தாவது கருத்தில் “ஆசீவகத்தில் வீடுபேறு அடைந்த உயிர்கள்  மீண்டும்
> > பிறக்கும்”
> > என்று சொல்லியிருக்கிறீர்கள்.
>
> > மரணமடைந்து மீண்டும் பிறவி எடுப்பதற்கும், வீடுபேறடைந்து மீண்டும்
> > பிறப்பதற்கும்
> > என்ன வேறுபாடு?
>
> > ஆசீவகத்தின் படி மரணம் என்றால் என்ன? வீடுபேறு என்றால் என்ன?
> > என்று விளக்க வேண்டுகிறேன்.
>
> > அன்புடன்
> > நாக.இளங்கோவன்
>
> > 2010/9/28 Elangovan N <nelan...@gmail.com>

>
> > பயனுள்ள தரவுகள் தந்தமைக்கு மிக்க நன்றி.
> >> நல்ல உரையாட்டை துவக்கியிருக்கிறீர்கள்.
> >> ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற வரிக்கு தாங்கள் எழுதியிருக்கிற
> >> விளக்கத்தின்பால்
> >> எனக்குக் கருத்துக்கள் இருப்பினும், இந்த வரியை தமிழ்நாட்டு அரசியல் மேடைகள்
> >> இதனைப் பிழையாகப் பயன்படுத்திக் கொண்டன என்ற எண்ணம் எனக்கு உண்டு.
>
> >> ”அன்னை எத்தனை எத்தனை அன்னையோ
> >>   அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ....
> >>  பின்னம் எத்தனை எத்தனைப் பிள்ளையோ
> >>   பெண்டிர் எத்தனை எத்தனைப் பெண்டிரோ
> >>  முன்னம் எத்தனை எத்தனை சென்மமோ
> >>    மூடநாயடியேன் அறிந்திலேன்
> >>  இன்னம் எத்தனை எத்தனை சென்மமோ
> >>   இறைவா கச்சி ஏகம்பனே”
>
> >> என்பார் பட்டினத்தார். (மேலே நான் எழுதிருப்பதில் சில சீர்களில்
> >> பிழையிருக்கக் கூடும். மறதி)
> >> அப்பாடல் நினைவுக்கு வந்தது.
>
> >> மேலும் இவ்விழையில் வரும் கருத்துக்களைப் படிக்க ஆவலாக உள்ளேன்.
>
> >> அன்புடன்
> >> நாக.இளங்கோவன்
>
> >> 2010/9/28 Banukumar Rajendran <banukuma...@gmail.com>
>
> >>> தீதும் நன்றும் பிறர்தர வாரா!
>
> >>> புறநானூற்றில் வரும் பாடல், ”யாதும் ஊரே யாவரும் கேளிர்,
> >>> தீதும் நன்றும் பிறர்தர வாரா” மிகவும் பிரசித்தம். இதை எழுதியவர்,
> >>> கனியன்.பூங்குன்றனார் என்ற சங்கப் புலவராவார். இக்கால எழுத்தாளர்கள் இந்தப்
> >>> பாட்டு ஆசிவகத்தின் சாரம் என்று கூறி வருகின்றனர். இது உண்மையா?
>
> >>> ஆசிவகமா?
>
> >>> உண்மையில் இப்பாடல் ஆசிவகக் கருத்துகளை பேசுகிறதா? என்ற கேள்விக்கு முன்,
> >>> சமணத்திற்கும் ஆசிவகத்திற்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை சிறிதுத் தெரிந்துக்
> >>> கொண்டு மேலே செல்லுவோம்! இரண்டு சமயங்களுக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை
> >>> கீழேக் கொடுத்துள்ளேன்.
>
> >>>   *எண்** **வரிசை***
>
> >>> *சமணம்***
>
> >>> *ஆசிவகம்***
>
> >>> *தத்துவம்**/ **கடமைகள்***
>
> >>> * *
>
> >>> * *
> ...
>
> read more »

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Reply all
Reply to author
Forward
0 new messages