வணக்கம் வேல்முருகன். நல்ல சுருக்கமான நேரிடையான பதிவுக்கு நன்றி.
'நல்வாழ்த்து’ என்பது நன்மை பொருந்திய வாழ்த்து என விரிவடையும் எனக்கொள்வதில் தவறேதும் இல்லை.
///வஞ்சப்புகழ்ச்சியின்போது நன்மைபொருந்தாத வாழ்த்தும் இருக்கமுடியும் என்பதால் எனக்கு நல்வாழ்த்து என்பது பிழையாகப்படவில்லை. ///
வாழ்த்து என்பதும் புகழ்ச்சி என்பதும் ஒரே பொருள் கொண்டவையல்ல. வாழ்த்து வேறு, புகழ்ச்சி வேறு.
++++++++++
நல்வாழ்த்து என்று ஏன் நல் என்ற அடைமொழி கொடுத்துச் சிறப்பித்துச் சொல்லவேண்டும்? என்பதுவே என் கேள்வி.
தீய/கெட்ட வாழ்த்து என்பதிலிருந்து வேறுபடுத்திக் காட்டவா?
இந்தக் கேள்விக்கு … முறையாகத் தமிழ் இலக்கணம் பயின்றவர்களிடமிருந்து விடையை எதிர்பார்த்தேன்/எதிர்பார்க்கிறேன்.
++++++++++
பார்ப்போம், யாராவது தொல்காப்பியத்தைப் புரட்டிப் பார்க்கிறார்களா என்று. ;-)
[குறிப்பு: சென்றமுறை, வெள்ளரிக்காய் என்ற சொல்லைப் பற்றிக் கேட்டபோது … திருத்தம் பொன் சரவணன் அவர்கள் 'வண்ணச்சினைச்சொல்’ பற்றிய தொல்காப்பிய நூற்பாவைக் கண்டுபிடித்துவிட்டார்! அதேபோல இம்முறையும் … யாராவது … நல்~தீய/கெட்ட என்ற இணையில்லாமையைக் கண்டுகொள்கிறார்களா என்று அறிய ஆவல், அவ்வளவே!]
அன்புடன்,
ராஜம்