9 ஆண்டுகள் கழித்து லோக சுந்தரம் பதிந்த இந்த பிராமி எழுத்தை பார்க்க நேர்ந்தது. இதில் முதல் மூன்று எழுத்துகள் தரத (darada) என்ற சமசுகிருத சொல்லை கொண்டுள்ளன. இதன் பொருள் அச்சமூட்டும் என்பது. நீல வண்ணம் வட பிராமி ஆகும். அடுத்து அரணம் என்ற சொல் பாம்பை குறிப்பது. Z இன் எதிர்வடிவம் ஒட்டக கழுத்தை ஒத்துள்ள எழுத்து ஒகரம் ஆகும். ⅃ - ண். தரத அரணம் ஒண் என்ற சொற்களுக்கு அச்சுறுத்தும் பாம்பிடம் இருந்து ஒளி (ந்து கொள்) என்று பொருள். அதற்கு ஏற்ப சிற்பத்தில் ஒரு ஆள் பாம்பிடம் இருந்து ஓடி ஒளிகிறார். பச்சை வண்ணத்தில் உள்ள கடைசி மூன்றும் பிராமி அல்லாத சிந்து எழுத்துகள் ஆகும். இது வடநாட்டில் வடிக்கப்பட்டிருக்கலாம்.
ஒண் > ஒண்டுதல் என்றால் மரம், சுவர் ஆகியவற்றில் சார்தல், ஒளிந்து கொள்ளல், மறைந்து கொள்ளல். ஒட்டகம் போல் உள்ள இதே சிந்து எழுத்து பட்டணம் சுடுமட்கலனில் உள்ளது. அதை நான் சொன்னன் என்று படித்துள்ளேன்.
