பாரதி கூறும் தணிந்த சாதியிருக்க, தலித்து எதற்கு? – இலக்குவனார் திருவள்ளுவன்

80 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Nov 5, 2015, 5:05:12 PM11/5/15
to thiru thoazhamai

 பாரதி கூறும் தணிந்த சாதியிருக்க, தலித்து எதற்கு? – இலக்குவனார் திருவள்ளுவன்

Bharathi02

பாரதி கூறும் தணிந்த சாதியிருக்க, ‘தலித்து’ எதற்கு?


  தமிழ் மக்களில் பெரும்பான்மையருக்கு அயல் மொழிச் சொற்களைப் பயன்படுத்துவதில் மட்டற்ற மகிழ்ச்சி. ஏதோ ஒரு வகை தாழ்வு மனப்பான்மையில் அரைகுறையான பிற மொழிப் பயன்பாட்டை உயர்வாகக் கருதுகின்றனர். அரசியலில் பிற மொழிச் சொற்களைப் புகுத்துவதில் பொதுவுடைமைக் கட்சியினர் எப்பொழுதும் ஆர்வம் காட்டுபவர்கள். அதுபோல் யார் அறிமுகப்படுத்தி இருந்தாலும் தமிழ், தமிழ் என்றே சொல்லிக்கொண்டு ‘தலித்து’ என்னும் மராத்தியச் சொல்லைப் பயன்படுத்துவோரே மிகுதி. பஞ்சமர், தாழ்த்தப்பட்டவர், ஆதி திராவிடர், ஆதித்தமிழர், தொல் தமிழர், பட்டியல் சாதியினர் முதலான பல சொற்களிலும் அவ முத்திரை இருப்பதாகக் கருதி, ஒடுக்கப்பட்டவர் என்னும் பொருளுடைய ‘தலித்து’ என்னும் சொல்லைப் புகுத்திக் கொண்டு புரியாத அப்பிறமொழிச்சொல்லே பொருத்தமானது என வாதிடுவோர் அவ்வியக்கங்களின் தலைவர்கள். எந்தப் பெயரில் அழைத்தாலும் அவர்கள் பிறருக்கு இணையான உரிமையும் கல்வியில் சிறப்பும் பொருள்நிலை உயர்வும் பெற்றாலன்றி அப்புதிய சொல்லுக்குப் பழைய முத்திரையே நிலைக்கும். எனவே, அவர்கள் நிலை உயரவேண்டும். அதே நேரத்தில் இட ஒதுக்கீடு முதலான தேவை கருதி இவ்வினத்தவரை எவ்வாறு அழைக்கலாம் என்பது குறித்துப் பார்க்கலாம்.
  பாரதியார், சாதிகளுக்கு எதிராகச் ‘சாதிக்குழப்பம்’ எனக் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார்(பாரதியார் கட்டுரைகள் http://bharathiyar-ariva.blogspot.in/p/blog-page_31.html). இதில், “சாதராணமாக, மாவுத்தர் வேலை செய்ய மகமதியர்களும் இந்துக்களில் தணிந்த சாதியாருமே ஏற்படுவது(இருப்பது) வழக்கம். இந்த யானைக்குப் பிராமண மாவுத்தர் கிடைத்திருக்கிறார்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
  இங்கே பாரதியார் ‘தாழ்த்தப்பட்ட’ என்பது போன்ற சொற்களைக் குறிப்பிடாமல் ‘தணிந்த சாதியார்’ என்கிறார். புரட்சி முதலான சொற்களை முதலில் அறிமுகப்படு்த்தியவர் பாரதியார்தான். தணிந்த சாதியார் என்பது பாரதியாரே உருவாக்கிய சொல்லா அல்லது அப்பொழுது நடைமுறையில் இருந்த சொல்லா என்று தெரியவில்லை. எனினும் வின்சுலோ அகராதியில் ‘தணிந்த’ என்பதற்குக் ‘கீழான’ என்னும் பொருள் இடம் பெற்றுள்ளதால் அப்பொழுது வழக்கத்தில் இருந்திருக்கலாம். எனினும் நமக்கு இச்சொல்லை அறிமுகப்படுத்துபவர் “சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே” என வலியுறுத்தும் பாரதியார்தான்.
  ‘தணி’ என்பதற்கு “மட்டுப்படுத்து, குளிர்வி, வெப்பம் குறை, பணி(வு), கீழ்ப்படு,” ஆகிய பொருள்களுண்டு. ‘தணி’ என்பது பின்னர்த் தண்டி(த்தல்)-ஐயும் (தணிகை)மலையையும் குறித்தும் வழங்கப் பெற்றது. பணிவு, கீழ்ப்படு முதலான பொருள்களில் வழங்கியதன் தொடர்ச்சியாகப் தாழ்தலையும் குறித்தது. தணிந்தவர் என்னும் பொழுது இவற்றின் அடிப்படையில், பணிவானவரையும், பிற்காலத்தில் தாழ்ந்து போகின்றவரையும் குறித்தது.
“நின் சினம் தணிந்தீக” (கலித்தொகை 16.11) என்னும் அடியில் சினம் ஆறுதலையும்
“நெடுவசி விழுப்புண் தணிமார் காப்பென” (மலைபடுகடாம் 303) என்னும் அடியில் புண் ஆற்றுதலையும்
“தணிபுனலாடுந் தகைமிகு போர்க்கண்” (பரிபாடல்6.29). என்னும் அடியில் புனலின் குளிர்ச்சியையும்
“நோய் முதனாடி அது தணிக்கும் வாய்நாடி” (திருக்குறள் 948) என்னும் அடியில் நோய் தீர்த்தலையும்
“தணி யாத் துன்பந் தலைத்தலை மேல்வர” (மணிமேகலை 2. 5).     என்னும் அடியில் குறையாத்துன்பம் எனக் குறிப்பதால், குறைதலையும்
“தணியா வேட்கை தணித்தற் கரிதாய்” (மணிமேகலை 25. 121) என்னும் அடியில் நிறைவுறா வேட்கையைக் குறித்தலின் நிறைவுறுதலையும்
“தணிவருங் கயத்துப் பூத்த தாமரை அனைய கண்ணும்” (சீவக சிந்தாமணி 1582) என்னும் அடியில் நீர் வற்றுதலையும்
“தணிவில் வெம்பசி” (மணிமேகலை 17. 73) என்னுமிடத்தில் ‘குறைகை’ யையும்
“கடலிற்றணி வெய்தி” (கம்பரா. நகர்நீ. 141) என்னுமிடத்தில் கடலின் சீற்றத்தைத் தணித்து ஏற்படுத்தும் அமைதியையும்
“தணிவுஅளிக்கின் உயர்வுஅளிக்கும்” (காஞ்சிப்புராணம் கழுவா. 307) என்னுமிடத்தில் பணிவையும்
“தணிபொன் சொரியும்” (தஞ்சைவாணன் கோவை 25) என்னும் அடியில் நிறைதலையும் குறிப்பிடும் வகையில் ‘தணி’ இடம் பெற்றுள்ளது.
  நெம்புகோலின் மேல் பக்கத்தைத் தாழ்த்துவதன் மூலம் அடிப்புறம் தாங்குவதை உயர்த்துவதால் ‘தணிமரம்’ என்பது தேர் நெம்பு தடியைக் குறிக்கிறது.
  ‘தணி’ என்பது தாழ்தலைக் குறித்ததுபோன்று காலம்தாழ்தலையும் குறித்துள்ளது. தாழ்வும் பணிவும் குறிக்கப் பயன்படுத்திய ‘தணி’ என்னும் சொல்லே வாழ்வில் தாழ்ந்தவர்களைக் குறிக்கப் பயன்படுத்தி இருக்க வேண்டும்.
  ‘தணிதல்’ என்பது பணிதலைக் குறிப்பினும் இழிவைக் குறிப்பிடு்ம் சொல்லன்று. பணிதல், செல்வர்க்கே செல்வம் போன்றது எனத் தெய்வப்புலவர் திருவள்ளுவர்,
”எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து’’ என்கின்றார் அல்லவா?
துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று
இந் நான்கு அல்லது குடியும் இல்லை (புறநானூறு 335.7-8)
என ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புலவர் மாங்குடி கிழார் இக்குடியினரின் சிறப்பைக் குறித்துள்ளார். இக்குடியினர் காலப்போக்கில் தாழ்த்தப்பட்டாலும் உண்மையில் யார்க்கும் தாழ்ந்தவர்கள் அல்லர்.

  எனவே, பிற வகையில் அழைப்பதைவிடப் பாரதியார் வழியில் ‘தணிந்தசாதியர்’ எனக் குறிப்பது பொருத்தமாக இருக்கும். எந்தச் சொல்லையும் வெவ்வேறு இடங்களில் பயன்படுத்திப் பார்த்து அதன் பொருத்தத்தை முடிவெடுக்க வேண்டும். அந்த வகையில், பின்வருமாறு சொல்லிப் பார்ப்போம் :
தணிந்த சாதியருக்கு இடஒதுக்கீடு
தணிந்தவரைத் தரணியில் உயர்த்த வேண்டும்.
தணிந்தவர்க்கு இழைக்கப்படும் அநீதி களையப்பட வேண்டும்.
தணிந்த பெண்ணிற்கு மறுக்கப்படும் நீதி
தணிந்தோர்க்குக் கொடுமை இழைத்தால் கடுந்தண்டனை
தணிந்தோர் இலக்கியம்
இவ் வகையில் பார்ககும்பொழுது குறைகூறும் வகையில் இல்லாமல் குறியீடாகச் சரியாகவே பொருள் கொள்ள முடிகிறது. எனவே,
தலித்தை மறப்போம்! தணிந்தோரை உயர்த்துவோம்!
-இலக்குவனார் திருவள்ளுவன்
photo_Ilakkuvanar_Thiruvalluvan

--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

rajam

unread,
Nov 5, 2015, 8:33:36 PM11/5/15
to tamil...@googlegroups.com
ஐயனே, எனக்குச் சில கேள்விகள்:

1. “தணிந்த” சாதி என்று பாரதி ஏன் கூறினார்?

எனக்குத் தெரிந்த அளவில் ‘தணிவு’ எனப்பட்டது ‘உயர்வு/அதிகாரம்’ என்பதன் அடக்குமுறை. எந்த ஒரு குமுகமும் அடக்குமுறை இல்லாமல் தாங்களாக முன்வந்து தங்களைத் தாழ்ந்தவர்கள் என்று தணிந்து போகமாட்டார்கள்.  

2. பாரதியின் ‘பறையனுக்கும் இங்குத் தீய புலையனுக்கும் விடுதலை’ என்ற கூற்றில் புலையனுக்கு அடைமொழியாகத் “தீய” என்ற சொல்லைப் பயன்படுத்தியது ஏன்?

ஆவலுடன்,
ராஜம்



--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.

Hari Krishnan

unread,
Nov 5, 2015, 9:31:21 PM11/5/15
to தமிழ் மன்றம்

2015-11-06 7:03 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
2. பாரதியின் ‘பறையனுக்கும் இங்குத் தீய புலையனுக்கும் விடுதலை’ என்ற கூற்றில் புலையனுக்கு அடைமொழியாகத் “தீய” என்ற சொல்லைப் பயன்படுத்தியது ஏன்?


அந்தப் பாடல்:

பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை
பரவரோடு குறவருக்கு  மறவருக்கும் விடுதலை

தீயர்.  தீய அன்று.  அது அடைமொழியுமன்று.  பாரதி பாடலின் கையெழுத்துப்படியுடன் நகல் இணைக்கப்பட்டுள்ளது.  (சீனி விசுவநாதன் பதிப்பு.)Inline images 1

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

rajam

unread,
Nov 5, 2015, 9:38:10 PM11/5/15
to தமிழ் மன்றம்
என் மறதிக்கு மன்னிக்கவும். நீங்கள் சுட்டியதே சரி, ஹரி: “தீயர் புலையருக்கும்”

ஆனாலும் அந்தத்தொடரின் பொருளைச் சரியாகப் புரிந்துகொள்ள ஆவல்.

நன்றியுடன்,
ராஜம்



Begin forwarded message:

Date: November 5, 2015 at 6:31:19 PM PST
Subject: Re: [தமிழ் மன்றம்] பாரதி கூறும் தணிந்த சாதியிருக்க, தலித்து எதற்கு? – இலக்குவனார் திருவள்ளுவன்
From: Hari Krishnan <hari.har...@gmail.com>
To: தமிழ் மன்றம் <tamil...@googlegroups.com>

Hari Krishnan

unread,
Nov 5, 2015, 9:40:16 PM11/5/15
to தமிழ் மன்றம்

2015-11-06 8:08 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
ஆனாலும் அந்தத்தொடரின் பொருளைச் சரியாகப் புரிந்துகொள்ள ஆவல்.

தீயர் என்பதும் சாதிப் பெயர்.

Hari Krishnan

unread,
Nov 5, 2015, 9:48:00 PM11/5/15
to தமிழ் மன்றம்

2015-11-06 8:10 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:

தீயர் என்பதும் சாதிப் பெயர்.

இது தொடர்பான ஒரு பாரதி கட்டுரை:

நம்பூரிகளும் தீயரும்

"நம்பூரிகள் மிகவும் வைதீகமாயிற்றே? அவர்களிடத்தில் தற்காலத்துப் புதிய தீயர் எவ்விதமான எண்ணம் வைத்து நடக்கிறார்கள்?" என்று கேட்டேன்.

"பகை" என்று ராகவசாஸ்திரி சொன்னார். "காரணமென்ன?" என்றேன்.

"புதிய தீயர் இப்போது நம்பூரிகளைப் பகைப்பது மாத்திரமே யல்லாது, எப்போதுமே நம்பூரிகளைத் தீயர் பகைத்து வந்ததாகச் சொல்லி வருகிறார்கள். ஆலுவாயில் ஸ்ரீ நாராயணஸ்வாமி ஒரு "ஸமஸ்கிருத பள்ளிக்கூடம் ஏற்படுத்தியிருக்கிறார். பெரிய கட்டிடம் கட்டியிருக்கிறார். நிறையப் பணம் சேர்ந்திருக்கிறது. அந்தப் பள்ளிக்கூடத்தில் எல்லா ஜாதிப் பிள்ளைகளுக்கும் ஸமஸ்கிருதம் கற்பிக்கப் படுகிறது. ஒரு மகம்மதியப் பிள்ளைகூட அந்தப்பள்ளிக் கூடத்தில் சேர்ந்து வாசித்து வருகிறான். இங்ஙனம் பல வகைகளிலே தீயர் மேன்மை பெற முயல்வதில் நம்பூரிகளுக்குச் சம்மதமில்லை. அதனால் நம்பூரிகளிடம் தீயருக்குப் பகை உண்டாகிறது. இயற்கை தானே? செய்வாருக்குச் செய்வார் செத்துக் கிடப்பாரா?

"பிராமணராக நம்பூரிகள் பரசுராமனால் செய்யப்பட்டனர் என்றும், அதற்கு முன்பு மீன் பிடிக்கும் செம்படவராக இருந்தனரென்றும் தீயர்கள் நம்பி வருகிறார்கள். மலையாள பூமி செழித்துப்போய் காடு பட்டுக் கிடந்ததை பரசுராமன் நாடாகத் திருத்திய போது, அங்கு வந்து குடிபோகும்படி கர்நாடகத்திலிருந்தும் சோழ நாட்டிலிருந்தும் பிராமணர் களைக் கூப்பிட்டார். இந்தப் பார்ப்பார் அங்கே போய் குடியேறச் சம்மதப்படவில்லை. எனவே பரசுராமன் கோபம் கொண்டு தென் கன்னடக் கரையிலிருந்த "செம்படவரைப் பிராமணராகச் செய்து குடியேற்றினார். நம்பூரிகள் விவாக சமயங்களில் குளம், நதி, ஏதேனும் நீர் நிலைக்குப் போய் வலை போடுவது போலே அபி நயிக்கும் பொய்ச் சடங்கொன்று நடத்தி வந்தார்கள். இப்போது, நம்பூரிகளும் நாகரீகப்பட்டு வருகிறபடியால் வீட்டிலேயே ஒரு பெரிய பாத்திரத்தில் நீரை வைத்து, அதில் வாழை இலையைத் துண்டு துண்டாக மீன் ஸ்தானத்தில் போட்டு வைத்து, அதன் மேலே வலைபோடுவது போல் துணி போட்டு அபிநயித்து வருகிறார்கள். மேற்படி பரசுராமன் கதை பொய்க் கதை என்பதே என்னுடைய அபிப்பிராயம். இக்காலத்து நம்பூரிகள் விவாக சமயங்களில் மீன் பிடிக்கும் சடங்கு நடத்துவதற்கு வேறேதேனும் மூலமிருந்தாலும் இருக்கலாம். ''நான் அக்கதையை ஏன் சொன்னேன்'' என்றால், இக்காலத்துத் தீயர்களுக்கு நம்பூரிகளிடத்தில் எத்தனை பெரும்பகை இருக்கிறதென்பதைக் காட்டும் பொருட்டாகச் சொன்னேனே யொழிய வேறொன்று மில்லை.

"ஆதிமுதல் தீயருக்கும் பிராமணருக்கும் சண்டைஉண்டு. தீயர் மற்ற ஹிந்துக்களைப்போலே மக்கள் - தாயத்தை அனுசரிக்கிறார்கள். மருமக்கள் - தாயம் நாயருக்குள்ளே இருப்பதுபோல் தீயருக்குள் இல்லை பிராமணர் நாயர் ஸ்திரீகளுடன் ஸம்பந்தம் செய்வது போலே தீயருடன் செய்து கொள்ள இடமில்லை. தீயர் அதனை விரும்பவில்லை. இதுவே நம்பூரிகளுடன் பகைமைக்கு மூலம்.

நன்றி: தமிழ் இணையப் பல்கலைக்கழகம்.

rajam

unread,
Nov 5, 2015, 9:48:52 PM11/5/15
to tamil...@googlegroups.com
அப்போ … அது … 'தீயராகிய புலையர்' என்று எடுத்துக்கொள்ளவேண்டுமா?


Hari Krishnan

unread,
Nov 5, 2015, 9:51:09 PM11/5/15
to தமிழ் மன்றம்

2015-11-06 8:18 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
அப்போ … அது … 'தீயராகிய புலையர்' என்று எடுத்துக்கொள்ளவேண்டுமா?

பாரதி சொல்ல வந்தது என்ன என்பதைத் தெரியப்படுத்தியிருக்கிறேன்.  நம்பூதிரிகளும் தீயர்களும் கட்டுரையைக் காணவும்.

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Nov 6, 2015, 1:05:35 AM11/6/15
to tamilmanram kuzhu, thiru thoazhamai
திரு அரிகிருட்டிணனுக்கு நன்றி.
அம்மையீர், வணக்கம். பாரதி காலத்தில் வழக்கிலிருந்த சொல்லைப் பயன்படுததியுள்ளார். பின் வரும்  அகராதி விளக்கங்களைப் பாருங்கள். என் விளக்கத்தைப் பின்னர்த் தெரிவிக்கின்றேன்.

தணி (p. 475) [ taṇi ] , II v. i. be allayed, pacified, soothed, ஆறு; 2. grow less, abate, குறை; 3. thrive, grow thick, பரு; 4. be extinguished, அணை; 5. yield, submit one's self, பணி; 6. be adapted as a coulter to the plough, இசை.

அவனுக்குத் தணியச் சொல்லு, speak with him so as to appease him.

தணிந்தவன், தணிந்துபோனவன், a humble-minded, submissive person.

தணி (p. 475) [ taṇi ] , VI v. t. abate, subdue, கீழ்ப் படுத்து; 2. calm, ஆற்று; 3. slacken, soften, இளக்கு; 4. lower, தாழ்த்து; 5. quench, அவி; 6. (vulg.) cause to increase.

http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF&table=fabricius

தணி, (p. 541) [ tṇi, ] கிறேன், ந்தேன், வேன், தணிய, v. n. To be allayed, mitigated, alleviated, soften ed, appeased, calmed, pacified, soothed, ஆற. 2. To abate, grow less, be reduced, குறைய. 3. To grow thick, to be fat, பருக்க. 4. To be extinguished, அணைய. 5. To be come cool, as the sun, &c., குளிர. 6. To yield, to submit one's self, தாழ. (c.) 7. To become slack, இளக. 8. [prov.] To be adapted, as the angle of a hoe to the haft, or a coulter to the plough, இசைய. அவன்உனக்குத்தணிந்தவன். He is lower in stature than you. ஒருசொல்லுக்குந்தணிந்துகொடுக்கிறதில்லை. He does not submit to reproof. வீடுவெந்துதணிந்துபோயிற்று. The fire, in the burning house is subdued.

தணிந்தவன், appel. n. A humble, se date person. 2. One born in a medium rank. 3. One whose bodily health is restored after sickness.

தணிந்திருக்க, inf. To be extinguish ed, as a fire; to be soothed as an exas perated mind, to be subdued as a mob, to be moderated as a fever; to be lower, &c., in height. பிள்ளையிப்பொழுதுதணிந்திருக்கிறது. The child is now well.

தணிந்தவிலை, s. A low price, a reduced price.

தணிவாயிருக்க, inf. To be humble, to be quiet, to be lower in stature.

தணிவானபுடவை, s. Inferior cloth.

http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF&table=winslow

தீயர், s. (Malayalim.) A low caste or tribe--oppos. to நாயர், high caste.

தீயோர்--தீயர், s. (plu.) The base, the vulgar, கீழ்மக்கள். 2. Savages, barba rians, மூடர். 3. Hunters those that live by the chase, வேடர்.

தீயர், (p. 597) [ tīyr, ] s. A caste. See தீ, evil.

http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D&table=winslow

தீயர் tīyar

, n. < தீமை. 1. See தீயார். (திவா.) 2. A caste in Malabar; ஒரு மலையாளச்சாதியார்.

http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/showrest_?conc.6.1.5039.0.0.tamillex

 


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.

rajam

unread,
Nov 6, 2015, 11:45:31 AM11/6/15
to tamil...@googlegroups.com
தாங்கள் இணைத்த 'நம்பூதிரிகளும் தீயர்களும்' கட்டுரையைப் படித்தேன், ஹரி. மிக்க நன்றி.

என் சித்தியொருவர் கேரளத்தில் ‘வாக்கப்பட்டிருந்தார்' (== வாழ்க்கைப்பட்டிருந்தார்). அதனால் மலையாளப் பழக்கம் எனக்குக் கொஞ்சம் பரிச்சயம். அங்கே கேள்விப்பட்ட சொல் “தீயா.” அதனால் அந்தச்சொல்லை மலையாளப்பெட்டகத்தில் சேர்த்துவைத்திருக்கிறது என் மூளை. ஏன் அந்த ஒரு கேரளச்சாதியை மட்டும் பாரதி சொன்னார் என்றும் எனக்குத் தெளிவில்லை.


rajam

unread,
Nov 6, 2015, 11:59:54 AM11/6/15
to tamil...@googlegroups.com
ஐயனே, வணக்கம்.

‘தணி’ என்பதன் பொருளைத் தெரிந்துகொள்ள அகரமுதலியைத் தேடவேண்டிய தேவை எனக்கில்லை, நல்லவேளை! காலங்காலமாக எங்கள் வீடுகளில் சிறுபிள்ளைப் பருவத்திலிருந்தே … 'தலையில் குட்டிக் கையில் கொடுத்தது'-போலக் காதில்கேட்டு அலுத்துவருவதே! ;-)

மிகவும் முரடனான அண்ணனுடன் வாய்ச்சண்டை மட்டுமே போடமுடிந்தது. உடல்வலிமை இல்லை. அப்போதெல்லாம் அம்மா சொன்னது, “ஒனக்குத்தான் அவங்கொணம் தெரியுமே; நீதான் விட்டுக்குடுத்துப் போகணும்.” அவனைக் கண்டிக்காமல் விட்ட குற்றம் யாருடையது? பிறகு, பிறகு … வேறோர் உறவு வந்தபோது … “அவன் ரொம்பக்கோவக்காரன். நீதான் பணிஞ்சு போகணும், தணிஞ்சு போகணும். ஆக, விட்டுக்கொடுத்தலும் பணிதலும் தணிதலும் எனக்குக் கடமைகளாகக் கற்பிக்கப்பட்டவை. 

ஒரு பிறவி தானாக நான் பணிந்து/தணிந்துபோகவேண்டும் என்று நினைப்பதில்லை. உடல்வலிமை, செயல் சூழ்ச்சி, அதிகாரம் … இன்ன பிற இடையிடும்போதுதான் ஒருவரின் ‘உயர்வு'ம் இன்னொருவரின் ‘தாழ்வு'ம் உருவாகின்றன. 

[இந்த நேரத்தில் ஈ.வே.ரா அவர்களின் "பெண் ஏன் அடிமையானாள்” என்ற நூலின் தலைப்பை நினைவூட்டுகிறேன். பெண் என்பவள் ‘அடிமை’யாகப் பிறக்கவில்லை; வாழ்க்கையின் போக்கால் ‘அடிமை’நிலைக்குத் தள்ளப்பட்டாள் என்பதுவே இதன் பொருள்.]

நிற்க.

‘தலித்’ என்ற சொல் பிறமொழிச்சொல் என்பதால் அதைவிடுத்துப் பாரதியார் உருவாக்கிய ‘தணிந்தசாதி’ என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்று இங்கே நீங்கள் சொன்னது எனக்கு வியப்பைத் தந்தது. 

‘ஒடுக்கப்பட்டவர்’ என்ற பொருள் தரும் ‘தலித்' என்ற சொல் ஏற்புடைத்தன்று என்றால் … ‘தணிந்த சாதி’ என்ற சொல்லோ ‘தாழ்ந்த சாதி’ என்ற சொல்லோ எந்தவகையில் சிறப்புடைத்து என்று எனக்குத் தெரியவில்லை. முன்னதாவது (தலித்) அந்த மக்களுக்கு இழைக்கப்பட்ட ‘அநீதி’யை வெளிப்படையாகச் சுட்டுகிறது. பின்னதோ (‘தணிந்த/தாழ்ந்த சாதி') அந்த மக்களின் நிலைக்கு அவர்களே பொறுப்பு என்கிற மாதிரி அவர்கள்மேல் பொறுப்பைச் சுமத்துகிறது — 'அவர்களாகத் தாழ்ந்துபோனார்கள்’ என்ற பொருளைத் தருகிறது.

உண்மையாகச் சொல்லப்போனால் … ‘தணிந்த/தாழ்ந்த சாதி’ என்று பட்டையடிக்கப்பட்ட மக்கள் மிகுந்த உடல்வலிமை வாய்ந்தவர்கள்; அவர்கள் எல்லாரும் ஒன்றித் திரண்டு வந்தால் ‘உயர்சாதி’ மக்களால் தாக்குப்பிடிக்க முடியாது. எல்லாரும் இதையுணரவேண்டும். 

மக்களை உயர்த்துவதாக நினைத்துச் சொற்களைப் பயன்படுத்துவதைவிட நம் செயலால் அவர்களை உயர்த்துவது நேர்மையானதும் சிறந்ததும் என்பது என் கருத்து.

சரி, போதும். நான் ‘பாடம்' எடுக்கிறேன் என்று சிலர் சுட்டிக்காட்டுமுன் நிறுத்திக்கொள்கிறேன். ;-)

அன்புடன்,
ராஜம்


On Nov 5, 2015, at 10:05 PM, இலக்குவனார் திருவள்ளுவன் <thir...@gmail.com> wrote:

திரு அரிகிருட்டிணனுக்கு நன்றி.
அம்மையீர், வணக்கம். பாரதி காலத்தில் வழக்கிலிருந்த சொல்லைப் பயன்படுததியுள்ளார். பின் வரும்  அகராதி விளக்கங்களைப் பாருங்கள். என் விளக்கத்தைப் பின்னர்த் தெரிவிக்கின்றேன்.

<deleted for space>

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Nov 6, 2015, 1:16:31 PM11/6/15
to tamilmanram kuzhu, thiru thoazhamai
அம்மையீர், வணக்கம். உங்கள் கருத்து முற்றிலும் சரியே. ஆனால், ஒடுக்கப்பட்டவர் என்று சொல்லாமல் வேறு சொல்லைத் தேடுவதால், குறிக்க வேண்டிய நிலை வந்தது. கடவுளின் குழந்தை(அரிசனம்) எனக் கூறினாலும் நிலைமையில்  மாற்றமில்லாமையால் சொல்லில் பழைய  கீழ்மையே வந்து விட்டது. எனவே, சொல்லால் பயனில்லை. என்றாலும் குறிப்பிட ஒரு சொல் தேவை. தணி என்பது கீழ்ப்படுத்து என்றும் பொருள் வருவதால் கீழ்ப்பபடுத்தப்பட்ட என்ற பொருளிலும், எல்லார்க்கும் பணிதல் சிறப்பு, அச்சிறப்பே முரணாய் அமைந்தமையாலும்   தணிந்த சாதி பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன்.மேலும் பாரதியார் தாமாக அச்சொல்லை உருவாக்கவில்லை. அக்கால வழக்கில் உள்ள சொல்லைத்தான் கையாண்டுள்ளார். பாரதிக்கு முந்தைய வின்சுலோவின் அகராதியில் அச் சொல் உள்ளமையே இதற்குச் சான்று. எனினும் பாரதி கையாண்ட சொல் என்ற வகையில் குறிப்பிட்டுள்ளேன்.
ஒடுக்கப்பட்டவர்களின் துயரங்கள் தணிய வேண்டும் என்னும் பொருளில் கையாள்வதாக எடுத்துக் கொள்ளலாம் என்பது என் எண்ணம்.

rajam

unread,
Nov 6, 2015, 2:02:03 PM11/6/15
to tamil...@googlegroups.com
ஐயனே, வணக்கம்.

///தணி என்பது கீழ்ப்படுத்து என்றும் பொருள் வருவதால் கீழ்ப்பபடுத்தப்பட்ட என்ற பொருளிலும், எல்லார்க்கும் பணிதல் சிறப்பு, அச்சிறப்பே முரணாய் அமைந்தமையாலும்   தணிந்த சாதி பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன்.///

‘தணி' என்ற வேரின் பொருள் எப்படியானாலும் அது ‘தணிந்த’ (தாமாகச் செய்யும் செயல்; intransitive) என்றும் ‘தணிக்கப்பட்ட’ (பிறரால் திணிக்கப்பட்ட செயல்; transitive) என்றும் வழக்காறு பெறுவதில் உள்ள வேற்றுமையை உணரலாமே. 

'தணிந்த சாதி' என்றால் அந்தச் சாதியினர் ஏதோ ஒரு காரணத்துக்காகத் தாமாகப் பிறருக்குத் தாழ்ந்துபோகும் நிலையை மேற்கொண்டவர்கள் என்ற பொருள் கொடுக்கும். அது தேவையா?

"எல்லார்க்கும் பணிதல் சிறப்பு,” … இந்த வகையான பழங்காலக் கருத்துகள் ஒருசிலரை அடிப்படுத்துவனவே. அவை இந்தக் காலத்துக்கு ஒவ்வா என்பது எல்லாருக்கும் தெரியுமென்று நம்புகிறேன். 

அன்புடன்,
ராஜம்



இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Nov 6, 2015, 2:16:51 PM11/6/15
to tamilmanram kuzhu, thiru thoazhamai
கடைசிப்பத்தி தவிரப் பிறவற்றை ஏற்கிறேன். எனினும் தலித்து என்ற சொல்லைக் கையாளவிரும்பவில்லை.

வணக்கத்துடன்

rajam

unread,
Nov 6, 2015, 4:52:19 PM11/6/15
to tamil...@googlegroups.com
யான் சொன்னது: 
///"எல்லார்க்கும் பணிதல் சிறப்பு,” … இந்த வகையான பழங்காலக் கருத்துகள் ஒருசிலரை அடிப்படுத்துவனவே. அவை இந்தக் காலத்துக்கு ஒவ்வா என்பது எல்லாருக்கும் தெரியுமென்று நம்புகிறேன்.///


அதற்கு எதிராக இளவல் சொன்னது:
///கடைசிப்பத்தி தவிரப் பிறவற்றை ஏற்கிறேன். எனினும் தலித்து என்ற சொல்லைக் கையாளவிரும்பவில்லை./// 

அட, அட, அட! 

"யாமறிந்த புலவரிலே … வள்ளுவன் போல் … பூமிதனில் … கண்டதில்லை“ என்று வீறார்ந்த அந்தக்காலக்கவிஞனும் …

"குறள்நெறி” கண்டு “குறளகம்” அமைத்த, என்னைத் தமிழ்ப்படுத்திய, இலக்குவனாரும் 

அந்தச் செம்மலின் ஓர் அருமை மாணாக்கியும் 

அந்தச் செம்மலின் தவப்புதல்வனும் … 

யாருமே வள்ளுவன் சொன்னதுக்காகக் கண்ணை மூடிக்கொண்டு எக்காலத்தும் எல்லாருக்கும் பணிந்ததில்லை என்பது உலகறியவேண்டும் உண்மையன்றோ!!!

பகடி கிடக்க!

‘தலித்' என்று சொன்னாலும் சரி, வேறு சொல்லைப் பயன்படுத்தினாலும் சரி … அந்த மக்களுக்குரிய மரியாதையைக் கொடுத்து அவர்களுக்குரிய தேவையை நிறைவு செய்வதே பிறர் கடமை. 

அன்புடன்,
ராஜம்

[குறிப்பு: நான் ஒரு பள்ளர்/பறையர்/பாணர்/மள்ளர்/மறவர்/அடவியார் … குலத்தில் பிறந்திருந்தால் … தொழிலால் உண்டான அந்தப் பெயர்களையே தக்கவைத்துக்கொண்டிருப்பேன்.]

Hari Krishnan

unread,
Nov 6, 2015, 10:26:36 PM11/6/15
to தமிழ் மன்றம்

2015-11-06 22:15 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
அங்கே கேள்விப்பட்ட சொல் “தீயா.” அதனால் அந்தச்சொல்லை மலையாளப்பெட்டகத்தில் சேர்த்துவைத்திருக்கிறது என் மூளை. ஏன் அந்த ஒரு கேரளச்சாதியை மட்டும் பாரதி சொன்னார் என்றும் எனக்குத் தெளிவில்லை.

தீய புலையர் என்று புலையரை மட்டும் தீயவர்களாக அடையாளப்படுத்தவில்லை என்பது தெளிவானவரையில் சரி.  மகிழ்ச்சி.

MANICKAM POOPATHI

unread,
Nov 9, 2015, 4:41:35 PM11/9/15
to tamil...@googlegroups.com
வணக்கம்:

தணிந்த சாதியினர் என்பது (Satvik?)
 இடங்கலை(Ida) கூட்டத்தினரைக்   (Chandravanshi)
குறித்தானது.. எ.கா : குலத்'துங்கன்'

(வலங்கலை/பிங்கலை => Suryavanshi)
எ.கா :'உக்கிர'ப்  பெருவழுதி  

திய்யர்  <பேச்சு வழக்கில்> தீயர் எனவும் 
புலயர் <பேச்சு வழக்கில்> பொலயர் (புலம்/புலத்தார்)
பொலயர்  என்பது கண்ணட மொழியில் (Canarese)
ஹொலயர் (Holayar) என்றாகும்..

மிக்க நன்றி..!

அன்புடன்.../பூபதி 


--

rajam

unread,
Nov 9, 2015, 7:15:25 PM11/9/15
to tamil...@googlegroups.com
On Nov 9, 2015, at 1:41 PM, MANICKAM POOPATHI <poop...@gmail.com> wrote:

வணக்கம்:

தணிந்த சாதியினர் என்பது (Satvik?)
 இடங்கலை(Ida) கூட்டத்தினரைக்   (Chandravanshi)
குறித்தானது.. எ.கா : குலத்'துங்கன்'

(வலங்கலை/பிங்கலை => Suryavanshi)
எ.கா :'உக்கிர'ப்  பெருவழுதி  

திய்யர்  <பேச்சு வழக்கில்> தீயர் எனவும் 
புலயர் <பேச்சு வழக்கில்> பொலயர் (புலம்/புலத்தார்)
பொலயர்  என்பது கண்ணட மொழியில் (Canarese)
ஹொலயர் (Holayar) என்றாகும்..

மிக்க நன்றி..!

அன்புடன்.../பூபதி 


வணக்கம் ஐயா. தகவலுக்கு நன்றி. இந்த மாதிரி … ‘சாதி,’ 'பேச்சு வழக்கு’ என்பவற்றையும் பிறமொழிப் பயன்பாடுகளையும் ஆங்காங்கே தெறித்த பொறிகளாக அறிந்துகொள்வதோடு … காலக்கோட்டில் அவை எவ்வாறு புழங்கின என்று அறிந்து தெளிவதே துல்லியமான தமிழ்மொழி/குமுக வரலாற்று ஆய்வுக்கு உதவும்.

நன்றியுடன்,
ராஜம்


2015-11-06 19:26 GMT-08:00 Hari Krishnan <hari.har...@gmail.com>:

2015-11-06 22:15 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
அங்கே கேள்விப்பட்ட சொல் “தீயா.” அதனால் அந்தச்சொல்லை மலையாளப்பெட்டகத்தில் சேர்த்துவைத்திருக்கிறது என் மூளை. ஏன் அந்த ஒரு கேரளச்சாதியை மட்டும் பாரதி சொன்னார் என்றும் எனக்குத் தெளிவில்லை.

தீய புலையர் என்று புலையரை மட்டும் தீயவர்களாக அடையாளப்படுத்தவில்லை என்பது தெளிவானவரையில் சரி.  மகிழ்ச்சி.


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.

rajam

unread,
Nov 9, 2015, 8:02:42 PM11/9/15
to தமிழ் மன்றம், poop...@gmail.com
வணக்கம். 

அதென்ன “இடங்கலை”க்கூட்டம்? “இடங்கலை”க்கூட்டம் என்றால் “வலங்கலை”க்கூட்டமும் இருந்திருக்குமன்றோ?

இதில் யாருக்கு யார் இடங்கலை/வலங்கலை? ஏன் அப்படிப்பட்ட பாகுபாடு தோன்றியது?

இந்த மாதிரியான வரலாற்றுக்குறிப்புகளை யாராவது துல்லியமாகத் தெரிவித்தால் நல்லது.


Begin forwarded message:
Reply all
Reply to author
Forward
0 new messages