திருகோணமலை சோழர் கல்வெட்டு

152 views
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
Jul 28, 2022, 6:21:08 AM7/28/22
to தமிழ் மன்றம்
திருகோணமலை சோழர் கல்வெட்டு
-----------------------------------------
கி.பி.13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்தது இக்கல்வெட்டு.
இக்கல்வெட்டு திருகோண மலை நகரில் இருந்து ஏறத்தாழ 50 கி.மீ தொலைவில் திருகோணமலை மாவட்டத் தில் தனி நிர்வாகப் பிரிவாக உள்ள கோமரன் கடவல பிரதேசத்தில் உள்ள முக்கிய வீதியுடன் இணைந் திருக்கும் காட்டுப்பகுதியில் காணப்படு கின்றது.
இந்த இடம் குமரன்கடவை எனவும் அழைக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகின்றது.
அழிவடைந்த சிவாலயமும் இவ்வாலயத்திற்கு மிக அருகிலுள்ள சிறு மலையி லேயே கல்வெட்டும் காணப் படுகின்றது.
இம்மலையின் மேல்பகுதியில் திருவாசிபோன்ற வட்டமும், அதனுடன் இணைந்த ஆவுடை யாருடன் கூடிய சிவலிங்கமும் செதுக்கப்பட்டுள்ளன.
இக்குறியீடுகளுக்கு கீழே 22 வரிகளில் தமிழ்க் கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ளது.
முதல் இரு வரிகளும், ஏனைய வற்றில் சில சொற்களும் சமஸ்கிருதத்தில் இருக்கின்றன.
கல்வெட்டின் வலப்பக்கத்தில் உள்ள பல எழுத்துப் பொறிப்புக்கள் மலையின் மேற்பகுதியில் இருந்து கீழ்நோக்கி வழிந்தோடும் நீரினால் சிதைவடைந்தும், தெளிவற்றும் காணப்படு கின்றன.
கல்வெட்டின் ஒரு பாகம் தெளிவற்றுக் காணப்பட்டதால் அது கூறும் வரலாற்றின் முழுமையான உள்ளடக்கத் தைப் புரிந்துகொள்ள முடிய வில்லை.

இக்கல்வெட்டு வாசகம்:
01)... ... க்ஷகே ஸ்ரீவிம்[ங்கோ3] நௌ ம்ருகே3 விம்ச0 திப4.
02).... .....ச0க்தி ப்ரதிஷ்டா2ம் கரோத் க்ருதி: ஸ்வஸ்தி ஸ்ரீ ...
03) [த்திகள்?] [ஸ்ரீகுலோஸத்துங்கசோழக் காலிங்கராயநேன் ஈழ[ம
04) ண்டலமான மும்முடி] சோழமண்டல மெறிந்தும் கங்கராஜ காலிங்க வி-
05) ஜயவாகு தே3வற்கு வீராபி4ஷேகம் பண்ணுவித்து அநந்தரம் அஷ்ட-
06) [நேமி பூசை கால]ங்களில் ஆதி3க்ஷேத்ரமாய் ஸ்வயம்பு4வுமாந திருக்கோ-
07) [யிலை]யுடைய நாயநாரை தெ3ண்டன் பண்ணி இன்னாய-
08) நாற்கு ச0[க்தி] ப்ரதிஷ்டையில்லாமையில் திருக்காமக்கோட்ட நா
09) ச்சியாரை எழுந்தருளிவித்துத் திருப்ரதிஷ்டை பன்ணுவித்து நமக்கு [ப்
10) ராப்தமாய்] வருகிற காலிங்கராயப் பற்றில் மாநாமத்[துஸ நாட்டில் ல-
11) ச்சிகா[தி]புரம் இதுக்குள் நாலூர் வேச்சர்களுள்ளிட்ட நில-
12) மும் . . .றிதாயாளமு . . .ட்டும் இதில் மேநோக்கிய
13) மரமும் கீநோக்கிய கிணறும்பேருடரை நீக்கி குடிமக்களுள்பட
14) இந்நா[ச்சியார்க்கு திருபப்]படிமாற்றுக்கும் மண்டபக் கொற்று-
15) க்கும்சாந்த்3ராதி3த்தவரையும் செல்லக் கடவதாக ஹஸ்தோதகம் ப-
16) ண்ணிக் குடுத்தேன்இ .... லுள்ளாரழிவு படாமல்
17) ...ண்ண..ட்ட......ப் பெறுக்கிவுண்டார்கள் [ஆ]ய்
18) நடத்தவும் இதுக்கு . . . . ண்டாகில் காக்கையும் நாயும்
19) மாக . . டையார் பி... கெங்கைக் கரையிலாயிரங்
20) குரால் பசுவைக் கொன்றா[ர்பாவங்] கொண்டார்கள் ஆயிரம் ப்3ரா-
21) ஹ்மணரைக் கொன்றார் பாவ[ங் கொண்]டார்கள் மேலொரு ...
22) மாற்றம் விலங்குரைப்பார் .. காலிங்கராயரின் [சொல்படி] ... ...
23) த்தியஞ் செய்வார் செய்வித்தார்

அவை சோழர் ஆட்சியிலிருந்து ஐரோப்பியர் காலம் வரை தமிழர் பிராந்தியங்களின் ஆட்சியுரிமை, நிர்வாக ஒழுங்கு என்பன தனிப்போக்குடன் வளர்ந்தமையைக் கோடிட்டுக் காட்டுவதாக உள்ளன.

சோழரின் 77 ஆண்டுகால நேரடி ஆட்சியில் அவர்களது நிர்வாக முறையே பின்பற்றப் பட்டது.இதன்படி இலங்கை மும்முடிச் சோழ மண்டலம் என்ற பெயரைப் பெற்றதுடன் வளநாடு, நாடு, ஊர் போன்ற நிர்வாக அலகுகளும் இங்கு பின்பற்றப்பட்டன.

திருகோணமலையில் மட்டுமே ஐந்து வளநாடுகள் இருந்துள்ளன. அத்துடன் சோழரின் அரசியல், இராணுவ, நிர்வாக நடவடிக்கைகளின் முக்கிய மையமாக திருகோண மலை இருந்ததை அவர்களின் ஆட்சிக்கால ஆதாரங்களும் உறுதிப்படுத்துகின்றன.
இக்கல்வெட்டில் 'பற்று' என்ற நிர்வாகப் பிரிவு பற்றிக் கூறப்பட்டுள்ளது. பற்று என்ற தமிழ்ச் சொல் சிங்களத்தில் 'பத்து' என அழைக்கப்படுகின் றது. இச்சொற்கள் தற்காலத்தி லும் இலங்கையின் பல பாகங்களிலும் நிர்வாக அலகுச் சொற்களாகப்பயன்படுத்தப்படுகின்றன.

பொலன்னறுவையைத் தலைநகராகக் கொண்ட சோழரின் ஆட்சி கி.பி.1070 இல் வீழ்ச்சியடைந்தாலும் சோழரின் ஆதிக்கம், நிர்வாக முறை, பண்பாடு என்பன தமிழர் பிராந்தியங்களில் தொடர்ந்திருக்கலாம் எனக் கருத முடிகின்றது.
இதை உறுதிப்படுத்தும் புதிய சான்றாகவே கோமரன் கடவலக் கல்வெட்டுக் காணப் படுகின்றது.
பொலன்னறுவையில் சிங்கள மன்னர்களின் ஆட்சி ஏற்பட்டு ஏறத்தாழ 125 ஆண்டுகளின் பின்னரும் தமிழர் பிராந்தி யங்களில் மும்முடிச் சோழ மண்டலம் என்ற நிர்வாகப் பெயரும், தமிழ் நிர்வாக முறையும் இருந்தன என்ற புதிய செய்தியை இக்கல் வெட்டுத் தருகின்றது.
கல்வெட்டுப் பொறிக்கப்பட்ட காலத்தில் இப்பகுதியில், சோழர் ஆட்சிக்குப் பொறுப்பாக மூன்றாம் குலோத்துங்க சோழனது படைத்தளபதிகளுள் ஒருவனான அல்லது அரச பிரதிநிதியான குலோத்துங்க சோழக் காலிங்கராயன் இருந்துள்ளான் என்ற புதிய செய்தியும் தெரியவருகின்றது.
மேலும் இவனே கங்கராஜ காலிங்க விஜயபாகுவிற்கு (கலிங்கமாகனுக்கு) பட்டாபி ஷேகம் செய்தான் என்ற அதிமுக்கிய புதிய வரலாற்றுச் செய்தியும் இக்கல்வெட்டி லேயே முதல் முறையாகச் சொல்லப்பட்டுள்ளது.
இலங்கையை வெற்றிகொண்டு பொலன்னறுவையில் ஆட்சி புரிந்த கலிங்கமாகன், குலோத்துங்க சோழ காலிங்க ராயனால் அபிஷேகம் செய்யப்பட்டு ஆட்சியில் அமர்த்தப்பட்டவன் என்ற புதிய ஆதாரம் கிடைத்துள்ளது.
இக்கல்வெட்டில் கூறப்படும் குலோத்துங்கசோழக் காலிங்கராயன் மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக் காலத்தில் இலங்கையில் இருந்த சோழப்படைத் தளபதியாக அல்லது சோழ அரசப் பிரநிதியாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் மூன்றாம் குலோத்துங்க சோழனது ஆட்சிக்காலத்தில் (கி.பி 1178-1218) அவன் இலங்கை மீது படையெடுத்து சில வெற்றிகளைப் பெற்றதாக அவனது பத்தாவது ஆட்சி யாண்டுக் கல்வெட்டுக் கூறுகின்றது.
இங்கே கலிங்கமாகன் பொலன்னறுவை இராச்சியத்தை கி.பி.1215 இல் வெற்றி கொண்டான் எனக் கூறப்படுகிறது. கலிங்கமாகன் கங்கை வம்சத்துடனும், கலிங்க நாட்டுடனும் தொடர்புடை யவன் என்ற புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
இதனால் குலோத்துங்க சோழ காலிங்கராயனால் கலிங்க மாகனுக்கு நடத்தப்பட்ட பட்டாபிஷேகம் மூன்றாம் குலோத்துங்க சோழனது ஆட்சியின் இறுதிக் காலப் பகுதியில் நடந்ததெனக் கூறமுடியும்.
கோமரன்கடவல சிவன் கோயில் குலோத்துங்கசோழக் காலிங்கராயன் காலத்திற்கு முன்பே பன்நெடுங்காலமாக இருந்திருக்கின்றது என்பதும் கல்வெட்டில் வரும் ஆதி க்ஷேத்ரம் என்ற சொற்தொட ரால் தெரிகின்றது.
காலிங்கராயன் ஈழத்தை வெற்றி கொண்டதற்கும் கலிங்கமாகனுக்குப் பட்டம் சூட்டியதற்கும் பிறகு இக் கோயிலுக்கு வந்து வழிபட்டு, சக்திக்காக தனிக்கோயில் எடுப்பித்து, தனக்கு சொந்த மாகக் கிடைத்த நிர்வாகப் பிரிவில் இருந்து சில நிலங்களை நிவந்தமாக கொடுத்தமையை இக்கல் வெட்டுக் குறிப்பிடுகிறது.
இந்த நிலங்களுக்கும் கோயில் நிர்வாகத்திறகும் உரித்துடை யவர்களாக ஏற்பாடு செய்யப் பட்டவர்கள் காலிங்கராயன் சொற்படி இக்கல்வெட்டை பொறித்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.
தமிழகத்தில் இரண்டாம் இராஜராஜ சோழன் காலத்தில் இருந்து சிவன் கோயிலுக்குப் பக்கத்தில் சக்திக்கு தனிக் கோயில் அமைக்கும் மரபு இருந்தமை தெரிகின்றது. அம்மரபு சமகாலத்தில் இலங்கையிலும் பின்பற்றப் பட்டமைக்கு இக்கல்வெட்டு சான்றாகும்.
கல்வெட்டின் ஓம்படைக் கிளவியில் குலோத்துங்க சோழக் காலிங்கராயனின் இந்த ஏற்பாடுகளுக்குப் பங்கம் செய்பவர்கள் கங்கைக் கரையில் ஆயிரம் குரால் (கபிலை) பசுக்களை கொன்ற பாவத்திற்கும், ஆயிரம் பிராமணர்களைக் கொன்ற பாவத்திற்கும் உட்பட்டு நாயாகவும், காகமாகவும் பிறப்பார்கள் எனக் குறிப்பிட்டு அவற்றின் உருவங்களும் கல்வெட்டுப் பொறிப்புக்கு கீழே கோட்டுருவமாக வரையப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றகாலப் பின்னணி, அது தோன்றிய காலம், தோற்று வித்த வம்சங்கள் தொடர்பான முன்னைய வரலாற்றுப் பார்வையை மீளாய்வு செய்வதிலும், தெளிவுபடுத்து வதிலும் இலங்கைத் தமிழர் வரலாறு பற்றிய இக்கல் வெட்டு அதிக முக்கியத்துவம் பெறுகின்றது.
--------------------------------------------------------------
For detailed description see :

rajam

unread,
Jul 28, 2022, 10:38:44 PM7/28/22
to tamil...@googlegroups.com
வணக்கம், சேசாத்திரி. இலங்கைக் கல்வெட்டுத் தகவலுக்கு நன்றி! இந்த … ‘கங்கைக்கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவம்’ பற்றிய விளக்கமான தகவல் கிடைத்தால் பகிர்ந்துகொள்ளவும். 

நன்றி,
ராஜம்  


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj7gb-JG_q_GBOBt%3D%3D%3D_Sm0CsJmmhEzX_zk_MDnto1nbXQ%40mail.gmail.com.

rajam

unread,
Jul 29, 2022, 12:45:33 AM7/29/22
to tamil...@googlegroups.com
/// கல்வெட்டின் ஓம்படைக் கிளவியில் குலோத்துங்க சோழக் காலிங்கராயனின் இந்த ஏற்பாடுகளுக்குப் பங்கம் செய்பவர்கள் கங்கைக் கரையில் ஆயிரம் குரால் (கபிலை) பசுக்களை கொன்ற பாவத்திற்கும், ஆயிரம் பிராமணர்களைக் கொன்ற பாவத்திற்கும் உட்பட்டு நாயாகவும், காகமாகவும் பிறப்பார்கள் எனக் குறிப்பிட்டு அவற்றின் உருவங்களும் கல்வெட்டுப் பொறிப்புக்கு கீழே கோட்டுருவமாக வரையப்பட்டுள்ளன. ///

இந்த …

1. குரால் பசு பற்றிச் சங்கப் பாடல்களில் செய்திகளுண்டு.

2. ஆயிரம் பொற்கொல்லர்களைக் கொன்று நங்கைக்குச் (== கண்ணகிக்கு) சாந்தி செய்த விழவு பற்றிச் சிலப்பதிகாரத்திலிருந்து தெரியவரும்.

ஆனால் …இந்த மரபுகளின் வரன்முறை பற்றி அறியக்கூடவில்லை. விவரம் தெரிந்தால் பகிர்ந்துகொள்ளவும்.

நன்றி,
ராஜம்


On Jul 28, 2022, at 3:50 PM, Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:

Appasamy Murugaiyan

unread,
Aug 1, 2022, 6:03:10 AM8/1/22
to tamil...@googlegroups.com
அன்புடையீர் வணக்கம்,
தமிழ்க் கல்வெட்டில் காணப்படும் ஓம்படைக் கிளவி குறித்து எனக்குத் தெரிந்து இரண்டு கட்டுரைகள் உள்ளன:

கா. அரங்கசாமி. 1998. “ஓம்படைக்கிளவிகளும் அறவியல் நிலைகளும்”, வரலாற்றுக் கலம்பகம், (பேராசிரியர் செ. இராசு அவர்கள் மணிவிழா ஆய்வுக்கோவை) தஞ்சாவூர், 74-78.

Noboru Karashima, "New Imprecations in Tamil Inscriptions and Jāti Formation", in, Ancient to Medieval: South Indian Society in Transition, Delhi: OUP, 2009, pp. 99-114.

கட்டுரைகள் தேவைப்பட்டால் தெரிவிக்கவும், இரண்டு மூன்று நாட்களில் அனுப்பிவைக்கின்றேன்.
வணக்கம்
முருகையன்




--

Appasamy Murugaiyan
EPHE-UMR 7528 Mondes iranien et indien
27 rue Paul-Bert
94204- Ivry-sur-Seine
France

Seshadri Sridharan

unread,
Aug 1, 2022, 10:42:29 AM8/1/22
to தமிழ் மன்றம்
On Mon, Aug 1, 2022 at 3:03 AM Appasamy Murugaiyan <a.muru...@gmail.com> wrote:
அன்புடையீர் வணக்கம்,
தமிழ்க் கல்வெட்டில் காணப்படும் ஓம்படைக் கிளவி குறித்து எனக்குத் தெரிந்து இரண்டு கட்டுரைகள் உள்ளன:

கா. அரங்கசாமி. 1998. “ஓம்படைக்கிளவிகளும் அறவியல் நிலைகளும்”, வரலாற்றுக் கலம்பகம், (பேராசிரியர் செ. இராசு அவர்கள் மணிவிழா ஆய்வுக்கோவை) தஞ்சாவூர், 74-78.

Noboru Karashima, "New Imprecations in Tamil Inscriptions and Jāti Formation", in, Ancient to Medieval: South Indian Society in Transition, Delhi: OUP, 2009, pp. 99-114.

கட்டுரைகள் தேவைப்பட்டால் தெரிவிக்கவும், இரண்டு மூன்று நாட்களில் அனுப்பிவைக்கின்றேன்.

அனுப்புங்கள் 

rajam

unread,
Aug 1, 2022, 2:59:44 PM8/1/22
to tamil...@googlegroups.com
அன்புடையீர், கட்டுரைகள் கிடைத்தால் நல்லது. அவசரமில்லை, நேரம் கிடைக்கும்போது செய்யவும். 

நெடுங்காலமாகவே, இந்த … ‘கங்கைக்கரையில் காராம்பசுக்கொலை,’ ‘ஆயிரம் பேரைப் பலி கொடுத்தல்’ … இன்னும் ‘இத்தனைச் சமணரைக் கழுவேற்றல்’ பற்றிய செய்திகளின் நுணுக்கத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆவல். ஈதெல்லாம் ஒரு சமுதாயத்தைப் பற்றிப் பெருமையாகப் பேசிக்கொள்ளத்தகுந்த செயல்கள் அல்ல என்பது என் தனிப்பட்ட கருத்து. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தழைத்துவரும் ஒரு பண்பாடு இன்னும் நாகரிகமடையாதது-போலவே … ‘ உன்னால்தான் இது நடந்தது, இவனால்தான் இது நடந்தது’ என்று புகார் சொல்லி ... இன்றும் ‘போர் எனில் புகலும்’ புகழ்மொழி மறவர்களைக் காண்கிறேன். மிகவும் வருந்தவைக்கும் பண்பாடு. :-( 

வணக்கத்துடன்,
ராஜம் 

Appasamy Murugaiyan

unread,
Aug 4, 2022, 7:03:11 AM8/4/22
to tamil...@googlegroups.com
அன்புடையீர், வணக்கம்!
இத்துடன் முன் குறிப்பிட்ட இரண்டு கட்டுரைகளையும் அனுப்பியுள்ளேன். இவை தவிர சமஸ்கிருத கல்வெட்டுகளில் உள்ள (imprecatory / benedictory verses) பற்றிய சில கட்டுரைகளும் உள்ளன. 
அவற்றையும் தேடி எடுத்து அனுப்புகிறேன். 
வணக்கம்
முருகையன்

Le jeu. 4 août 2022 à 11:20, Appasamy Murugaiyan <a.muru...@gmail.com> a écrit :
அன்புடையீர், வணக்கம்!
இத்துடன் முன் குறிப்பிட்ட இரண்டு கட்டுரைகளையும் அனுப்பியுள்ளேன். இவை தவிர சமஸ்கிருத கல்வெட்டுகளில் உள்ள (imprecatory / benedictory verses) பற்றிய சில கட்டுரைகளும் உள்ளன. 
அவற்றையும் தேடி எடுத்து அனுப்புகிறேன். 
வணக்கம்
முருகையன்


--

Appasamy Murugaiyan
EPHE-UMR 7528 Mondes iranien et indien
27 rue Paul-Bert
94204- Ivry-sur-Seine
France
அரங்கசாமி-ஓம்படைக்கிளவி.pdf

Appasamy Murugaiyan

unread,
Aug 4, 2022, 7:05:00 AM8/4/22
to tamil...@googlegroups.com
அன்புடையீர், வணக்கம்!
இத்துடன் முன் குறிப்பிட்ட இரண்டு கட்டுரைகளையும் அனுப்பியுள்ளேன். இவை தவிர சமஸ்கிருத கல்வெட்டுகளில் உள்ள (imprecatory / benedictory verses) பற்றிய சில கட்டுரைகளும் உள்ளன. 
அவற்றையும் தேடி எடுத்து அனுப்புகிறேன். 
வணக்கம்
முருகையன்
Le lun. 1 août 2022 à 20:59, rajam <ra...@earthlink.net> a écrit :
Karashima-New imprecations in Tamil inscriptions.pdf

தேமொழி

unread,
Aug 4, 2022, 7:05:16 PM8/4/22
to தமிழ் மன்றம்
பகிர்வுகளுக்கு நன்றி 

-- தேமொழி 

rajam

unread,
Aug 4, 2022, 10:33:21 PM8/4/22
to tamil...@googlegroups.com
இரண்டு அருமையான கட்டுரைகளுக்கும் மிக்க நன்றி! 

[தற்குறிப்பு: பழைய நாள்கள் நினைவுக்கு வருகின்றன. V.I.S. அடிக்கடிக் கேட்டு எழுதுவார் — Tamil Civilization இதழுக்குக் கட்டுரைகள் எழுதச் சொல்லி. கரோஷிமா அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பில்லாமல் போயிற்று.] 

வணக்கத்துடன்,
ராஜம் 

To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CALxSkSu_LHxRsfj7yxd29AxBYpQobjAOjf1Y1JxmMngnmwPeFQ%40mail.gmail.com.
<Karashima-New imprecations in Tamil inscriptions.pdf>

Appasamy Murugaiyan

unread,
Aug 6, 2022, 11:14:15 AM8/6/22
to tamil...@googlegroups.com
அன்புடையீர்,
பேராசிரியர் கரோஷிமா அவர்களை தமிழ்நாட்டில் மூன்று முறை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நிறைகுடம் தளும்பாது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கினார். மிகவும் அமைதியானவர்.
பாரிசில் எங்கள் ஆய்வு மையத்தில் ஒரு கருத்தரங்கத்திற்கு அவரை அழைக்க முயன்றேன், ஆனால் உடல் நலம் சரியில்லாததால் அவரால் வர முடியவில்லை.
கல்வெட்டாய்வில் புதிய ஆய்வு முறைகளை அறிமுகப்படுத்தியதுடன், பேராசிரியர் எ. சுப்பராயலு அவர்களுடன்  பல சிறந்த ஆய்வாளர்களை உருவாக்கிய பெருமையும் அவருக்கு உண்டு.
வணக்கம்.
முருகையன்

Reply all
Reply to author
Forward
0 new messages