இறைவன் வரவு இயம்பல் திருவருட்பா

283 views
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
May 29, 2021, 8:02:02 AM5/29/21
to தமிழ் மன்றம்
இறைவன் வரவு இயம்பல் திருவருட்பா இப்பாடலுக்கு எவரேனும் பொருள் விளக்கம் தர வேண்டுகிறேன்.
இறைவன் வரவு இயம்பல் திருவருட்பா.xspf

Seshadri Sridharan

unread,
May 29, 2021, 8:10:10 AM5/29/21
to தமிழ் மன்றம்
அப்பன் வரு தருணம் இதே
ஐய்யமிலை கண்டாய்
அஞ்சாதே அஞ்சாதே

அகிலமிசை உள்ளார்க்கு
எய்ப்பறவே சத்தியம் என்று
உரைத்திடு

நின்
உரைக்கோர் எள்ளளவும்
பழுதுவராது என் இறைவன் ஆணை

- திரு அருட்பிரகாச வள்ளலார்

Seshadri Sridharan

unread,
May 29, 2021, 10:36:24 PM5/29/21
to தமிழ் மன்றம்
  • 1. அப்பன்வரு தருணம்இதே ஐயம்இலை கண்டாய்

  • அஞ்சாதே அஞ்சாதே அகிலமிசை உள்ளார்க்
  • கெய்ப்பறவே சத்தியம்என் றுரைத்திடுநின் உரைக்கோர்
    எள்ளளவும் பழுதுவரா தென்னிறைவன் ஆணை
    இப்புவியோ வானகமும் வானகத்தின் புறத்தும்
    எவ்வுயிரும் எவ்வௌரும் ஏத்திமகிழ்ந் திடவே
    செப்பம்உறு திருவருட்பே ரொளிவடிவாய்க் களித்தே
    செத்தாரை எழுப்புதல்நாம் திண்ணம்உணர் மனனே.
  • 2. இறைவன்வரு தருணம்இதே இரண்டிலைஅஞ் சலை நீ
    எள்ளளவும் ஐயமுறேல் எவ்வுலகும் களிப்ப
    நிறைமொழிகொண் டறைகஇது பழுதுவரா திறையும்
    நீவேறு நினைத்தயரேல் நெஞ்சேநான் புகன்ற
    முறைமொழிஎன் னுடையவன்தான் மொழிந்தமொழி எனக்கோர்
    மொழிஇலைஎன் உடலாவி முதல்அனைத்தும் தானே
    பொறையுறக்கொண் டருட்ஜோதி தன்வடிவும் உயிரும்
    பொருளும்அளித் தெனைத்தானாப் புணர்த்தியது காணே.
  • 3. என்இறைவன் வருதருணம் இதுகண்டாய் இதற்கோர்
    எட்டுணையும் ஐயமிலை என்னுள்இருந் தெனக்கே
    தன்னருள்தெள் ளமுதளிக்கும் தலைவன்மொழி இதுதான்
    சத்தியம்சத் தியம்நெஞ்சே சற்றும்மயக் கடையேல்
    மன்னுலகத் துயிர்கள்எலாம் களித்துவியந் திடவே
    வகுத்துரைத்துத் தெரித்திடுக வருநாள்உன் வசத்தால்
    உன்னிஉரைத் திடமுடியா தாதலினால் இன்றே
    உரைத்திடுதல் உபகாரம் உணர்ந்திடுக விரைந்தே.
  • 4. எல்லாஞ்செய் வல்லதனிப் பெருந்தலைமைச் சித்தன்
    எனமறைஆ கமம்புகலும் என்இறைவன் மகிழ்ந்தே
    நல்லார்கள் வியக்கஎனக் கிசைத்தபடி இங்கே
    நான்உனக்கு மொழிகின்றேன் நன்றறிவாய் மனனே
    பல்லாரும் களிப்படையப் பகல்இரவும் தோற்றாப்
    பண்பின்அருட் பெருஞ்ஜோதி நண்பினொடு நமக்கே
    எல்லாநன் மைகளும்உற வருதருணம் இதுவே
    இவ்வுலகம் உணர்ந்திடநீ இசைத்திடுக விரைந்தே.
  • 5. கருநாள்கள் அத்தனையும் கழிந்தனநீ சிறிதும்
    கலக்கமுறேல் இதுதொடங்கிக் கருணைநடப் பெருமான்
    தருநாள்இவ் வுலகமெலாம் களிப்படைய நமது
    சார்பின்அருட் பெருஞ்ஜோதி தழைத்துமிக விளங்கும்
    திருநாள்கள் ஆம்இதற்கோர் ஐயம்இலை இதுதான்
    திண்ணம்இதை உலகறியத் தெரித்திடுக மனனே
    வருநாளில் உரைத்திடலாம் எனநினைத்து மயங்கேல்
    வருநாளில் இன்பமயம் ஆகிநிறை வாயே.
  • 6. உள்ளபடி உரைக்கின்றேன் சத்தியமாம் உரையீ
    துணர்ந்திடுக மனனேநீ உலகமெலாம் அறிய
    வள்ளல்வரு தருணம்இது தருணம்இதே என்று
    வகுத்துரைத்துத் தெரித்திடுக மயக்கம்அணுத் துணையும்
    கொள்ளலைஎன் குருநாதன் அருட்ஜோதிப் பெருமான்
    குறிப்பிதுஎன் குறிப்பெனவும் குறியாதே கண்டாய்
    நள்ளுலகில் இனிநாளைக் குரைத்தும்எனத் தாழ்க்கேல்
    நாளைதொட்டு நமக்கொழியா ஞானநடக் களிப்பே.
  • 7. மாயைவினை ஆணவமா மலங்களெலாம் தவிர்த்து
    வாழ்வளிக்கும் பெருங்கருணை வள்ளல்வரு தருணம்
    மேயதிது வாம்இதற்கோர் ஐயம்இலை இங்கே
    விரைந்துலகம் அறிந்திடவே விளம்புகநீ மனனே
    நாயகன்றன் குறிப்பிதுஎன் குறிப்பெனநீ நினையேல்
    நாளைக்கே விரித்துரைப்பேம் எனமதித்துத் தாழ்க்கேல்
    தூயதிரு அருட்ஜோதித் திருநடங்காண் கின்ற
    தூயதிரு நாள்வருநாள் தொடாங்கிஒழி யாவே.
  • 8. மாற்றுரைக்க முடியாத திருமேனிப் பெருமான்
    வருதருணம் இதுகண்டாய் மனனேநீ மயங்கேல்
    நேற்றுரைத்தேன் இலைஉனக்கிங் கிவ்வாறென் இறைவன்
    நிகழ்த்துகஇன் றென்றபடி நிகழ்த்துகின்றேன் இதுதான்
    கூற்றுதைத்த திருவடிமேல் ஆணைஇது கடவுள்
    குறிப்பெனக்கொண் டுலகமெலாம் குதுகலிக்க விரைந்தே
    சாற்றிடுதி வருநாளில் உரைத்தும்எனத் தாழ்க்கேல்
    தனித்தலைவன் அருள்நடஞ்செய் சாறொழியா இனியே.
  • 9. ஏதும்அறி யாச்சிறிய பயல்களினும் சிறியேன்
    இப்பெரிய வார்த்தைதனக் கியானார்என் இறைவன்
    ஓதுகநீ என்றபடி ஓதுகின்றேன் மனனே
    உள்ளபடி சத்தியம்ஈ துணர்ந்திடுக நமது
    தீதுமுழு தும்தவிர்த்தே சித்திஎலாம் அளிக்கத்
    திருவருளாம் பெருஞ்ஜோதி அப்பன்வரு தருணம்
    ஈதிதுவே என்றுலகம் அறியவிரைந் துரைப்பாய்
    எல்லாரும் களிப்படைந்துள் இசைந்தேத்தி யிடவே.
  • 10. தனித்தலைவன் எல்லாஞ்செய் வல்லசித்தன் ஞான
    சபைத்தலைவன் என்உளத்தே தனித்திருந்துள் உணர்த்தக்
    கனித்தஉளத் தொடும்உணர்ந்தே உணர்த்துகின்றேன் இதைஓர்
    கதைஎனநீ நினையேல்மெய்க் கருத்துரைஎன் றறிக
    இனித்தஅருட் பெருஞ்சோதி ஆணைஎல்லாம் உடைய
    இறைவன்வரு தருணம்இது சத்தியமாம் இதனைப்
    பனித்தவுல கவர்அறிந்தே உய்யும்வகை இன்னே
    பகர்ந்திடுக நாளைஅருட் பரமசுகச் சாறே.

தேமொழி

unread,
May 29, 2021, 11:11:58 PM5/29/21
to தமிழ் மன்றம்
On Saturday, May 29, 2021 at 5:02:02 AM UTC-7 sseshadri69 wrote:
இறைவன் வரவு இயம்பல் திருவருட்பா இப்பாடலுக்கு எவரேனும் பொருள் விளக்கம் தர வேண்டுகிறேன்.



திருவருட்பா
மூலமும் - உரையும்
உரைவேந்தர்  ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை உரை

105-இறை வரவு இயம்பல்(பாடல்கல்: 4875-4884)

105. இறை வரவு இயம்பல்

    அஃதாவது, ஞான யோகத்தில் சிவத்தின் அருள் காட்சி பெறும் மரபு பற்றிக் காட்சி பெற்று இன்புறும் விழைவு முந்துதலால் அருட் காட்சிக்கு உரிய காலம் எய்திற்று என உணர்ந்து அதற்குச் சமையுமாறு மனத்துக்கு எடுத்துரைக்கும் கருத்தும் காட்சியால் தமக்கு விளையும் பயனும் எடுத்துரைப்பது.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

4875.
     அப்பன்வரு தருணம்இதே ஐயம்இலை கண்டாய்
          அஞ்சாதே அஞ்சாதே அகிலமிசை உள்ளார்க்
     கெய்ப்பறவே சத்தியம்என் றுரைத்திடுநின் உரைக்கோர்
          எள்ளளவும் பழுதுவரா தென்னிறைவன் ஆணை
     இப்புவியோ வானகமும் வானகத்தின் புறத்தும்
          எவ்வுயிரும் எவ்வெவரும் ஏத்திமகிழ்ந் திடவே
     செப்பம்உறு திருவருட்பேர் ஒளிவடிவாய்க் களித்தே
          செத்தாரை எழுப்புதல்நாம் திண்ணம்உணர் மனனே.

உரை:
     மனமே, தந்தையாகிய சிவ பரம்பொருள் தமது அருட் காட்சியை வழங்க நம்பால் வருதற்குரிய காலம் இதுவாகும்; அதில் சிறிதும் ஐயமில்லை; நீயும் அஞ்சுதல் வேண்டாம்; உலகில் உள்ளவர்களுக்குத் தளர்ச்சி இன்றாக இது உண்மை என்று சொல்லுவாயாக; உன்னுடைய சொல்லுக்கு எள்ளத்தனையும் குற்றம் உண்டாகாது; இது என்னுடைய இறைவனது ஆணை என்று அறிவாயாக; இம் மண்ணுலகத்தவரும் வானவரும் வானுலகத்துக்கு அப்பால் உள்ளவரும் யாவரும் எவ்வகை உயிரும் துதித்து மகிழ்ந்திடுமாறு செம்மை சான்ற திருவருள் பேரொளி படைத்த வடிவத்துடன் மகிழ்ச்சி கொண்டு செத்தாரை நாம் எழுப்புவது திண்ணம் என்று உணர்வாயாக. எ.று.

----

4876.
     இறைவன்வரு தருணம்இதே இரண்டிலைஅஞ் சலைநீ
          எள்ளளவும் ஐயமுறேல் எவ்வுலகும் களிப்ப
     நிறைமொழிகொண் டறைகஇது பழுதுவரா திறையும்
          நீவேறு நினைத்தயரேல் நெஞ்சேநான் புகன்ற
     முறைமொழிஎன் னுடையவன்தான் மொழிந்தமொழி எனக்கோர்
          மொழிஇலைஎன் உடலாவி முதல்அனைத்தும் தானே
     பொறையுறக்கொண் டருட்ஜோதி தன்வடிவும் உயிரும்
          பொருளும்அளித் தெனைத்தானாப் புணர்த்தியது காணே.

உரை:
     நெஞ்சமே! இறைவன் எழுந்தருளும் தருணம் இதுவாகும்; இச்சொல்லில் இரண்டில்லை; அஞ்ச வேண்டா; நீயும் என் சொல்லில் எள்ளத்தனையும் ஐயப்படாதே; எல்லா உலகத்தோரும் கேட்டு மகிழும்படி என் சொல்லின் நிறைமொழி என்று கொண்டு சொல்லுவாயாக; இச்சொல்லின்கண் சிறிதும் குற்றமுண்டாகாது; வேறுபட நினைத்து வருந்த வேண்டாம்; நான் சொன்ன சொற்கள் முறையாகச் சொல்லப்படவை; அவையும் என்னை உடையவனாகிய இறைவன் தானே மொழிந்த மொழியாகும்; எனக்கு எனத் தனியே ஓர் மொழி இல்லை; என் உடல் உயிர் ஆகிய யாவும் தானே பொறுப்பாக ஏற்றுக் கொண்டு அருட் சோதியாகிய பெருமான் தன்னுடைய வடிவத்தையும் உயிரையும் பொருளையும் எனக்களித்து என்னைத் தானாக உருவாக்கிக் கொண்டான் என அறிக. எ.று.

----

4877.
     என்இறைவன் வருதருணம் இதுகண்டாய் இதற்கோர்
          எட்டுணையும் ஐயமிலை என்னுள்இருந் தெனக்கே
     தன்னருள்தெள் அமுதளிக்கும் தலைவன்மொழி இதுதான்
          சத்தியம்சத் தியம்நெஞ்சே சற்றும்மயக் கடையேல்
     மன்னுலகத் துயிர்கள்எலாம் களித்துவியந் திடவே
          வகுத்துரைத்துத் தெரிந்திடுக வருநாள்உன் வசத்தால்
     உன்னிஉரைத் திடமுடியா தாதலினால் இன்றே
          உரைத்திடுதல் உபகாரம் உணர்ந்திடுக விரைந்தே.

உரை:
     என்னை உடையவனாகிய சிவபெருமான் என்பால் வருகின்ற காலம் இதுவாகும்; நான் சொல்லும் இச்சொல்லில் எள்ளத்தனையும் சந்தேகமில்லை; என் உள்ளத்துள் எழுந்தருளி இருந்து எனக்குத் தன்னுடைய தெளிந்த திருவருள் ஞானமாகிய அமுதத்தை அளிக்கும் தலைவனாகிய அப்பெருமானது மொழியாகும்; நான் சொல்லும் இது முக்காலும் சத்தியம்; நெஞ்சமே இதனை ஏற்றுக்கொள்வதற்கு நீ சிறிதும் மயங்க வேண்டியதில்லை; உலகத்து நிலைபெற்ற உயிர்கள் எல்லாம் இதனைக் கேட்டு மகிழ்ந்து வியக்குமாறு என் சொற்களை வகை வகையாக விளக்கி உரைத்து நீயும் தெரிந்து கொள்வாயாக; அப் பெருமான் வருகின்ற நாளை நுண்ணறிவால் முன்னுற எண்ணி முடியாதாதலால் இன்று சொல்லுவது அவனது திருமிக்க அருளுரை எனச் சுருங்க உணர்ந்து கொள்வாயாக. எ.று.

----

4878.
     எல்லாஞ்செய் வல்லதனிப் பெருந்தலைமைச் சித்தன்
          எனமறைஆ கமம்புகலும் என்இறைவன் மகிழ்ந்தே
     நல்லார்கள் வியக்கஎனக் கிசைத்தபடி இங்கே
          நான்உனக்கு மொழிகின்றேன் நன்றறிவாய் மனனே
     பல்லாரும் களிப்படையப் பகல்இரவும் தோற்றாப்
          பண்பின்அருட் பெருஞ்சோதி நண்பினொடு நமக்கே
     எல்லாநன் மைகளும்உற வருதருணம் இதுவே
          இவ்வுலகம் உணர்ந்திடநீ இசைத்திடுக விரைந்தே.

உரை:
     எல்லாம் செய்ய வல்ல தனிப் பெருந்தலைமையுடைய ஞான மூர்த்தி என வேதங்களும் ஆகமங்களும் பாராட்டுகின்ற என்னுடைய இறைவன் மனம் மகிழ்ந்து உலகிலுள்ள நல்லவர்கள் எல்லோரும் வியக்கும்படி எனக்கு உரைத்தவண்ணமே இங்கே நான் உனக்குச் சொல்லுகின்றேன்; மனமே, நான் சொல்வதை நன்றாக அறிந்துகொள்வாயாக; பலரும் மகிழும்படிப் பகல் இரவுகள் தெரியாத பண்பமைந்த அருட்பெருஞ்சோதி ஆண்டவன் நட்புறவு கொண்டு நமக்கு எல்லா நன்மைகளும் உண்டாக நம்பால் எழுந்தருளும் தருணம் இதுவாகும்; இதனை உலகவர் அனைவரும் உணருமாறு முற்பட்டு நீ விளம்புவாயாக. எ.று.

----

4879.
     கருநாள்கள் அத்தனையும் கழிந்தன நீசிறிதும்
          கலக்கமுறேல் இதுதொடங்கிதக் கருணைநடப் பெருமான்
     தருநாள்இவ் வுலகம்எலாம் களிப்படைய நமது
          சார்பின்அருட் பெருஞ்ஜோதி தழைத்துமிக விளங்கும்
     திருநாள்கள் ஆம்இதற்கோர் ஐயம்இலை இதுதான்
          திண்ணம்இதை உலகறியத் தெரித்திடுக மனனே
     வருநாளில் உரைத்திடலாம் எனநினைத்து மயங்கேல்
          வருநாளில் இன்பமயம் ஆகிநிறை வாயே.

உரை:
     பிறப்பிறப்புக்குரிய நாட்கள் அத்தனையும் ஒழிந்துவிட்டன; அவற்றை நினைந்து நீ சிறிதும் கலக்கம் கொள்ள வேண்டாம்; இன்று தொடங்கும் நாட்கள் யாவும் அருட் கூத்து இயற்றும் பெருமானாகிய சிவன் தந்த பெருநாட்களாய் இவ்வுலகத்தில் உள்ள உயிர்கள் யாவும் மகிழ்ச்சி அடையுமாறு நமது சார்பில் அருட்பெருஞ்சோதி பெருகி நன்மை மிகும்படி விளங்கும் திருநாட்களாகும்; இதற்கு ஒருவிதச் சந்தேகமும் இல்லை; இது உறுதி. இதனை உலகவர் யாவரும் அறிய விளம்புவாயாக; மனமே, இனி வரும் நாட்களில் இவ்வுண்மையை உரைக்கலாம் என எண்ணி மயங்குதல் வேண்டா; மேல் வரும் அந்நாட்களில் நீ இன்ப மயமாய் நிறைந்து விளங்குவாய். எ.று.

----
4880.
     உள்ளபடி உரைக்கின்றேன் சத்தியமாம் உரையீ
          துணர்ந்திடுக மனனேநீ உலகமெலாம் அறிய
     வள்ளல்வரு தருணம்இது தருணம்இதே என்று
          வகுத்துரைத்துத் தெரிந்திடுக மயக்கம்அணுத் துணையும்
     கொள்ளலைஎன் குருநாதன் அருட்ஜோதிப் பெருமான்
          குறிப்பிதுஎன் குறிப்பெனவும் குறியாதே கண்டாய்
     நள்ளுலகில் இனிநாளைக் குரைத்தும்எனத் தாழ்க்கேல்
          நாளைதொட்டு நமக்கொழியா ஞானநடக் களிப்பே.

உரை:
     மனமே! உண்மையை உள்ளபடி உரைக்கின்றேன்; இவ்வுரை சத்தியமாகும் என உணர்வாயாக; நீ இந்த உலகத்தார் எல்லாரும் அறிய வள்ளலாகிய சிவபெருமான் எழுந்தருளும் காலம் இதுவே இதுவே என்று வகுத்துச் சொல்லி விளக்குவாயாக; இவ்வுரையின்கண் அணுவளவும் சந்தேகம் கொள்ள வேண்டாம்; நான் சொல்லும் இது நமக்குக் குருமுதல்வனும் அருட்சோதி ஆண்டவனுமாகிய சிவனுடைய திருவுள்ளக் கருத்து எனவும் என் கருத்தன்று எனவும் உணர்வாயாக; இவ்வுலகத்தில் நாம் நாளைக்கு உரைக்கலாம் எனக் காலதாமதம் செய்ய வேண்டாம்; நாளை முதல் சிவத்தின் நன்ஞான நாடகக் காட்சியில் பெருகும் இன்பத்தில் இடையறவு படாது மூழ்கி விடுவேம் என அறிக. எ.று.

----

4881.
     மாயைவினை ஆணவமா மலங்கள்எலாம் தவிர்த்து
          வாழ்வளிக்கும் பெருங்கருணை வள்ளல்வரு தருணம்
     மேயதிது வாம்இதற்கோர் ஐயம்இலை இங்கே
          விரைந்துலகம் அறிந்திடவே விளம்புகநீ மனனே
     நாயகன்றன் குறிப்பிதுஎன் குறிப்பெனநீ நினையேல்
          நாளைக்கே விரித்துரைப்பேம் எனமதித்துத் தாழ்க்கேல்
     தூயதிரு அருட்ஜோதித் திருநடங்காண் கின்ற
          தூயதிரு நாள்வருநாள் தொடங்கிஒழி யாவே.

உரை:
     மாயையும் கன்மமும் ஆணவ மலமுமாகிய மலங்கள் எல்லாவற்றையும் போக்கித் திருவருள் இன்ப வாழ்வளிக்கும் பெரிய அருளுருவுடைய வள்ளலாகிய சிவபரம்பொருள் என்பால் வந்தருளும் காலம் வந்தெய்தியது இதுவாகும்; நான் சொல்லும் இதில் ஐயம் சிறிதுமில்லை; இங்கே உலகத்தார் இதனை விரைந்து அறிந்து கொள்ளுமாறு மனமே நீ எடுத்துரைப்பாயாக; இதுதானும் தலைவனாகிய சிவபிரானுடைய திருவுள்ளக் குறிப்பாகும்; என் குறிப்பென்று நீ நினையா தொழிக; நாளைக்கு விரிவாக எடுத்துச் சொல்லுவோம் என எண்ணிக் காலத்தைக் கழிக்காதே; தூய திருவருட் சோதியினுடைய திரு நடனத்தைக் கண்டு மகிழ்கின்ற தூய திருநாள் வருகின்றபோது அது தொடங்கின் மடங்கி இடையறாது என அறிவாயாக. எ.று.

----
4882.
     மாற்றுரைக்க முடியாத திருமேனிப் பெருமான்
          வருதருணம் இதுகண்டாய் மனனேநீ மயங்கேல்
     நேற்றுரைத்தேன் இலைஉனக்கிங் கிவ்வாறென் இறைவன்
          நிகழ்த்துகஇன் றென்றபடி நிகழ்த்துகின்றேன் இதுதான்
     கூற்றுதைத்த திருவடிமேல் ஆணைஇது கடவுள்
          குறிப்பெனக்கொண் டுலகம்எலாம் குதுகலிக்க விரைந்தே
     சாற்றிடுதி வருநாளில் உரைத்தும்எனத் தாழ்க்கேல்
          தனித்தலைவன் அருள்நடஞ்செய் சாறொழியா இனியே.

உரை:
     மாற்றுக் காண முடியாத பொன் மேனியையுடைய சிவ பெருமான் எழுந்தருளும் காலம் இதுவாகும்; மனமே, நீ இதில் ஐயமுறுதல் ஒழிக; இதனை நான் உனக்கு நேற்று உரைத்தேனில்லை இன்று உனக்கு இவ்வாறு சொல்லுக என இறைவன் எனக்கு உரைத்தருளினான்; ஆதலின் நான் இப்போது சொல்லுகின்றேன்; நான் சொல்லும் இது அப்பெருமானுடைய கூற்றம் குமைத்த திருவடிமேல் ஆணையாக உரைப்பதாகும்; இது கடவுளின் திருவருள் குறிப்பு என உள்ளத்திற்கொண்டு உலகவர் பலரும் கேட்டு மனம் களிக்க விரைந்து எடுத்துரைப்பாயாக; அவன் வரும் நாளில் உலகிற்கு உரைக்கலாம் எனக் காலதாமதம் செய்யாதே; ஒப்பற்ற தலைவனாகிய கூத்தப்பெருமான் திருவருள் நடனம் புரியும் திருவிழா இடையறவு படாது காண். எ.று.

-----

4883.
     ஏதும்அறி யாச்சிறிய பயல்களினும் சிறியேன்
          இப்பெரிய வார்த்தைதனக் கியானார்என் இறைவன்
     ஓதுகநீ என்றபடி ஓதுகின்றேன் மனனே
          உள்ளபடி சத்தியம்ஈ துணர்ந்திடுக நமது
     தீதுமுழு தும்தவிர்த்தே சித்திஎலாம் அளிக்கத்
          திருவருளாம் பெருஞ்ஜோதி அப்பன்வரு தருணம்
     ஈதிதுவே என்றுலகம் அறியவிரைந் துரைப்பாய்
          எல்லாரும் களிப்படைந்துள் இசைந்தேத்தி யிடவே.

உரை:
     அறிவன யாதும் அறியாத சிறுவர்களில் மிகச் சிறியவனாகிய யான் இப்பெரிய செய்தியை உரைப்பதற்கு யான் யாராவேன்; என் இறைவனாகிய சிவபிரான் சொல்லுக என்று அருளியபடிச் சொல்லுகின்றேன்; என் மனமே, உள்ளத்தில் கேட்டுள்ளபடி நான் சொல்லும் இது சத்தியம் என்று உணர்ந்திடுக; நமது குற்றமெல்லாம் போக்கி நமக்கு வேண்டும் சித்திகள் எல்லாவற்றையும் நல்கி அருளுதற்குத் திருவருளாகிய பெரிய ஒளி யுருவை உடைய அப்பனாகிய பெருமான் நம்பால் வரும் காலம் இப்பொழுதே என்று உலகவர் அறிய அறியுமாறு விரைந்து உரைப்பாயாக; கேட்கும் எல்லோரும் களிப்படைந்து தமது மனம் இசைந்து ஏத்தி மகிழ்வார் காண். எ.று.

----

4884.
     தனித்தலைவன் எல்லாஞ்செய் வல்லசித்தன் ஞான
          சபைத்தலைவன் என்உளத்தே தனித்திருந்துள் உணர்த்தக்
     கனித்தஉளத் தொடும்உணர்ந்தே உணர்த்துகின்றேன் இதைஓர்
          கதைஎனநீ நினையேல்மெய்க் கருத்துரைஎன் றறிக
     இனித்தஅருட் பெருஞ்ஜோதி ஆணைஎல்லாம் உடைய
          இறைவன்வரு தருணம்இது சத்தியமாம் இதனைப்
     பனித்தவுல கவர்அறிந்தே உய்யும்வகை இன்னே
          பகர்ந்திடுக நாளைஅருட் பரமசுகச் சாறே.

உரை:
     ஒப்பற்ற தலைவனும் எல்லாம் செயல் வல்ல அறிவனும் ஞான சபைக்குத் தலைவனுமாகிய சிவபெருமான் என் உள்ளத்தில் தனித்து எழுந்தருளி இருந்து உள்ளுற உணர்த்தியதால் அன்பால் நெகிழ்ந்த மனத்தோடு அத்திருமொழியின் சிறப்பை உள்ளத்தில் உணர்ந்து மனமே நான் உனக்கு உரைக்கின்றேன்; யான் உரைக்கும் இதனைப் பொய்க் கதையாம் என்று நினைத்தல் வேண்டா; உண்மைக் கருத்துரை என்று அறிவாயாக: இன்பம் செய்யும் அருட் பெருஞ் சோதியாகிய இறைவனது ஆணையாகும்; உலகமெல்லாம் தனக்கு உடைமையாக உடைய சிவபெருமான் நம்பால் எழுந்தருளும் காலம் இதுவாகும்; இது சத்தியம்; இதனை அன்பால் குளிர்ந்த மனமுடைய உலகத்தவர் கேட்டறிந்து உய்யும் பொருட்டு நாளை பரம சுகபோகத்தை நுகரும் திருவிழாவாதலின் இன்றே உலகவர்க்கு உரைப்பாயாக. எ.று.
_______________________
 

தேமொழி

unread,
May 29, 2021, 11:17:09 PM5/29/21
to தமிழ் மன்றம்
On Saturday, May 29, 2021 at 5:02:02 AM UTC-7 sseshadri69 wrote:
இறைவன் வரவு இயம்பல் திருவருட்பா இப்பாடலுக்கு எவரேனும் பொருள் விளக்கம் தர வேண்டுகிறேன்.

குறிப்பு:
இணைப்பில் உள்ள 
XSPF file  பலரால் திறக்கவியலாது. 
சாதாரண  Text file போதுமானது 


Seshadri Sridharan

unread,
May 30, 2021, 7:14:53 AM5/30/21
to தமிழ் மன்றம்

4884.
     தனித்தலைவன் எல்லாஞ்செய் வல்லசித்தன் ஞான
          சபைத்தலைவன் என்உளத்தே தனித்திருந்துள் உணர்த்தக்
     கனித்தஉளத் தொடும்உணர்ந்தே உணர்த்துகின்றேன் இதைஓர்
          கதைஎனநீ நினையேல்மெய்க் கருத்துரைஎன் றறிக
     இனித்தஅருட் பெருஞ்ஜோதி ஆணைஎல்லாம் உடைய
          இறைவன்வரு தருணம்இது சத்தியமாம் இதனைப்
     பனித்தவுல கவர்அறிந்தே உய்யும்வகை இன்னே
          பகர்ந்திடுக நாளைஅருட் பரமசுகச் சாறே.

உரை:
     ஒப்பற்ற தலைவனும் எல்லாம் செயல் வல்ல அறிவனும் ஞான சபைக்குத் தலைவனுமாகிய சிவபெருமான் என் உள்ளத்தில் தனித்து எழுந்தருளி இருந்து உள்ளுற உணர்த்தியதால் அன்பால் நெகிழ்ந்த மனத்தோடு அத்திருமொழியின் சிறப்பை உள்ளத்தில் உணர்ந்து மனமே நான் உனக்கு உரைக்கின்றேன்; யான் உரைக்கும் இதனைப் பொய்க் கதையாம் என்று நினைத்தல் வேண்டா; உண்மைக் கருத்துரை என்று அறிவாயாக: இன்பம் செய்யும் அருட் பெருஞ் சோதியாகிய இறைவனது ஆணையாகும்; உலகமெல்லாம் தனக்கு உடைமையாக உடைய சிவபெருமான் நம்பால் எழுந்தருளும் காலம் இதுவாகும்; இது சத்தியம்; இதனை அன்பால் குளிர்ந்த மனமுடைய உலகத்தவர் கேட்டறிந்து உய்யும் பொருட்டு நாளை பரம சுகபோகத்தை நுகரும் திருவிழாவாதலின் இன்றே உலகவர்க்கு உரைப்பாயாக. எ.று.

 

பாராட்டுகள் தேமொழி. உண்மையில் இந்த பனித்த உலகவர் என்ற சொல் தான் இதற்கான பொருளை அறிய வேண்டும் என்று தூண்டுதல் தந்தது. 

நான் ஆனந்த மார்க்கத்தில் சேர்ந்த போது அங்கிருந்த முதியவர் ஒருவர் வள்ளலார் இறைவன் மனித வடிவில் உலகில் அறிமுக ஆகப் போவதைத் தான் ஆறாம் திருமுறையில் கூறியுள்ளார் என்று சொன்னார். இதாவது, கிருத்துவர்கள் dooms day அன்று இறைவன் இறந்தோரை எல்லாம் எழுப்பி தீர்ப்பு தருவான் என்கின்றனரே அதைத்தான்.  

தனித்தலைவன், எல்லாஞ் செய் வல்ல சித்தன், ஞான  சபைத்தலைவன்  < nosterdamus சொல்லும் அந்த immoral ruler. 

என் உளத்தே தனித்திருந்துள் உணர்த்தக்  கனித்தஉளத் தொடும் உணர்ந்தே உணர்த்துகின்றேன் இதைஓர்   கதைஎன நீ நினையேல் மெய்க் கருத்துரை என் றறிக < அந்த immortal  ruler பற்றிய செய்தியை கதை என்று  எண்ண வேண்டாம் மெய்யான கருது என்று அறி 

இனித்த அருட் பெருஞ்ஜோதி ஆணை எல்லாம் உடைய  இறைவன் வரு தருணம் இது  < அந்த immortal  ruler  வரும் நேரம் இது 

சத்தியமாம் இதனைப்  பனித்தவுல கவர் அறிந்தே உய்யும் வகை <    உண்மை இதனை பனிபடர்ந்த ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் வாழ்வோர் அறிந்து கடைத்தேறும் வழி 


இன்னே பகர்ந்திடுக நாளை அருட் பரமசுகச் சாறே < இன்றே இதை சொல்லிடுக நாளை அருள் என்னும் பரமசுகம் சுகம் வாய்க்கும் பொது இதை சொல்லிட வாய்ப்பிருக்காது என்பதே இதன் பொருள்.

தேமொழி

unread,
May 30, 2021, 12:52:57 PM5/30/21
to தமிழ் மன்றம்
அப்படியா பொருள் விளக்கம் அறிந்து என் கண்கள் பனிக்கின்றன. 

இவை எல்லாம் அந்த; 
குனித்த புருவமுங் கொவ்வைச் செவ்வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போன் மேனியிற் பால்வெண்ணீறும் அணிந்தவனின் திருவிளையாடல்களில் ஒன்று. 

வேறு எந்த  ஒரு கருத்தும் எனக்கில்லை. 

Seshadri Sridharan

unread,
May 31, 2021, 1:09:03 AM5/31/21
to தமிழ் மன்றம்
On Sun, May 30, 2021 at 10:22 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:

அப்படியா பொருள் விளக்கம் அறிந்து என் கண்கள் பனிக்கின்றன. 

இவை எல்லாம் அந்த; 
குனித்த புருவமுங் கொவ்வைச் செவ்வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போன் மேனியிற் பால்வெண்ணீறும் அணிந்தவனின் திருவிளையாடல்களில் ஒன்று. 

வேறு எந்த  ஒரு கருத்தும் எனக்கில்லை. 


வள்ளலார் இப்பாடல்கள் மூலம் இறைவன் வரும் செய்தியை எல்லோரிடமும் சென்று உறைக்கவேண்டும் என்று மனிதனை  மனனே  என்று அறிவுறுத்துகிறார்.


1. அப்பன்வரு தருணம்இதே ஐயம்இலை கண்டாய் < சந்தேகம் இல்லாமல் தந்தையாகிய இறைவன் வரஇருக்கின்ற நேரம் இது என்பதை  கண்டாய் என்கிறார் 
அஞ்சாதே அஞ்சாதே அகிலமிசை உள்ளார்க்   கெய்ப்பறவே சத்தியம் என் றுரைத்திடு < யார்க்கும் எதற்கும் அஞ்சவேண்டாம் உலகில் வாழ்வார்க்கு சோர்வு ஒழிய சொல்லுவது உண்மை என்று சொல்லிவிடு 
நின் உரைக்கோர்   எள்ளளவும் பழுதுவரா தென்னிறைவன் ஆணை < உனது சொல்லுக்கு எள்முனை அளவும் இழுகுவராது இதை என்னுடைய இறைவன் மேல் ஆணையிட்டு கூறுகிறேன் 
இப்புவியோ வானகமும் வானகத்தின் புறத்தும்  எவ்வுயிரும் எவ்வெவரும் ஏத்திமகிழ்ந் திடவே  செப்பம்உறு திருவருட்பேர் ஒளிவடிவாய்க் களித்தே < இந்த மண்ணுலகில் வாழ்பவரோடு வானகத்திலும் அதன் புறத்தும் உள்ள எல்லா உயிரும் எப்பேற்பட்டவரும் உயர்த்தி மகிழ்ந்திட செம்மை (perfection) கூடிய திருவருட்பேர் (divine grace)  பெருத்த ஒளிவடிவாய் வந்து  
 செத்தாரை எழுப்புதல் நாம் திண்ணம்உணர் மனனே. > செத்தவரை உயிரூட்டி எழுப்புவதை  (doomsday செய்தி) நாம் திண்ணமாய் அறியப்போகிறோம்  மனிதனே.

2. இறைவன்வரு தருணம்இதே இரண்டிலை<  no second thought அஞ் சலை நீ > you  do not  fear   எள்ளளவும் ஐயமுறேல் < donot doubt  a  bit எவ்வுலகும் களிப்ப  நிறைமொழி கொண் டறைக < எல்லா உலகத்தவரும் இன்பமுற இது
பழுதுவரா திறையும்   நீவேறு நினைத்தயரேல் நெஞ்சேநான் புகன்ற  முறைமொழி என் னுடையவன்தான் மொழிந்தமொழி எனக்கோர்
 மொழிஇலைஎன் < இது என்பேச்சல்ல இது என்னுடையவன் எனக்கு சொன்ன கருத்து 
உடலாவி முதல் அனைத்தும் தானே  பொறையுறக்கொண் டருட்ஜோதி தன்வடிவும் உயிரும்  பொருளும்அளித் தெனைத்தானாப் புணர்த்தியது காணே. < என் உடல் ஆவி அனைத்தும் தானே புகழுற கொண்ட அருள்ஜோதி தன்னுடைய உயிர், பொருள் யாவும் குடுத்து என்னை தானாய் வடித்தது காணே எனவே இது அவன் சொல்லே என் சொல்லல்ல

3. என்இறைவன் வருதருணம் இதுகண்டாய் இதற்கோர்           எட்டுணையும் ஐயமிலை என்னுள் இருந் தெனக்கே      தன்னருள்தெள் அமுதளிக்கும் தலைவன்மொழி இதுதான் < என்னுள் இருந்து இது இறைவனே சொன்ன மொழி 
சத்தியம்சத் தியம் நெஞ்சே சற்றும்மயக் கடையேல்  மன்னுலகத் துயிர்கள்எலாம் களித்துவியந் திடவே  வகுத்துரைத்துத் தெரிந்திடுக வருநாள் உன் வசத்தால்      உன்னிஉரைத் திடமுடியா தாதலினால் இன்றே   உரைத்திடுதல் உபகாரம் உணர்ந்திடுக விரைந்தே.< எதிர்காலத்தில் உன்னால் சிந்தித்து சொல்லமுடியாது ஏனென்றால் நீ உன்னை மறந்து ஆனந்த நிலையில் இருப்பாய்  ஆதலின் இன்றைக்கே சொல்லிவிடுவது நலமாகும் என்று உணர்ந்திடு.

Seshadri Sridharan

unread,
May 31, 2021, 10:45:26 PM5/31/21
to தமிழ் மன்றம்
  http://www.thiruarutpa.org/thirumurai/v/T379/tm/saththiya_arivippu

சத்தியயுகம் பற்றிய செய்தி 

149. சத்திய அறிவிப்பு
sattiya aṟivippu

      எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
      திருச்சிற்றம்பலம்
    • 1. ஐயன்அருள் வருகின்ற தருணம்இது கண்டீர்
      ஐயமிலை ஐயமிலை ஐயன்அடி ஆணை
      மெய்யன்எனை ஆட்கொண்ட வித்தகன்சிற் சபையில்
      விளங்குகின்ற சித்தன்எலாம் வல்லஒரு விமலன்
      துய்யன்அருட் பெருஞ்சோதி துரியநட நாதன்
      சுகஅமுதன் என்னுடயை துரைஅமர்ந்திங் கிருக்க
      வையமிசைத் திருக்கோயில் அலங்கரிமின் விரைந்தே
      மணியாலும் பொன்னாலும் மலராலும் வியந்தே.
    • 2. தனித்தலைமைப் பெரும்பதிஎன் தந்தைவரு கின்ற
      தருணம்இது சத்தியம்காண் சகதலத்தீர் கேண்மின்
      இனித்தநறுங் கனிபோன்றே என்னுளம்தித் திக்க
      இன்னமுதம் அளித்தென்னை ஏழுலகும் போற்ற
      மனித்தஉடம் பிதைஅழியா வாய்மைஉடம் பாக்கி
      மன்னியசித் தெல்லாம்செய் வல்லபமும் கொடுத்தே
      கனித்தசிவா னந்தமெனும் பெரும்போகம் தனிலே
      களித்திடவைத் திடுகின்ற காலையும்இங் கிதுவே.
    • 3. சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய்
      சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்
      இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்
      இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்
      சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும்
      தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்
      செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்
      திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே.

    • 4. என்சாமி எனதுதுரை என்உயிர்நா யகனார்
      இன்றுவந்து நான்இருக்கும் இடத்தில்அமர் கின்றார்
      பின்சாரும் இரண்டரைநா ழிகைக்குள்ளே எனது
      பேருடம்பில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார்
      தன்சாதி உடையபெருந் தவத்தாலே நான்தான்
      சாற்றுகின்றேன் அறிந்திதுதான் சத்தியம்சத் தியமே
      மின்சாரும் இடைமடவாய் என்மொழிநின் தனக்கே
      வெளியாகும் இரண்டரைநா ழிகைகடந்த போதே.

    Seshadri Sridharan

    unread,
    Jun 1, 2021, 9:54:53 AM6/1/21
    to தமிழ் மன்றம்

    • சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும்
      தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்
      செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்
      திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே.

     மேற்கண்ட வரிகளை எறிதாதா  சித்தர் ஆவியிடம் (clairvoyant) யார் யாரை எழுப்புவார் என்று கேட்ட போது வருகின்ற immortal ruler தான் விரும்புகின்ற 1,000 சித்தர்களை, இதாவது எறிதாதா, இராமசந்திர பாபுஜி, பிரபாத்து ரஞ்சன் சர்க்கார் போன்றோரை   மட்டும் உயிர்த்து எழச்செய்வார், அவர்கள் 1-2 ஆண்டுகள் வாழ்ந்து சில வேலைகளை செய்துவிட்டு  மீண்டும் இறப்பர் என்றது.  அப்படியானால் கிருத்துவரும் இசுலாமியரும்  இறைவன் வந்து எழுப்புவார் என்ற நம்பிக்கையில் இறந்தோரை புதைக்கின்றனரே அவருள் யாரையும் உயிருடன் எழுப்பமாட்டாரா? என்று கேட்டதற்கு எழுப்பமாட்டார் என்றது.

    Seshadri Sridharan

    unread,
    Aug 7, 2022, 11:02:21 AM8/7/22
    to தமிழ் மன்றம்
      by Rami Sivan in Quora
    Student of Religions
    “Faces will be radiant on that day as they see their Lord” (Quran 75:22–23)
    Allah creates the earth and all and then sits on his throne (10:3, 20:35, 32:5), the throne is above the waters (11:7) It is carried by eight angels (69:17). Heaven is on the right side of Allah’s throne and Hell on the left side. (56:9,10).
    Allah sees hills (7:143). Allah has discussions with Angels, Adam and Satan. (2:33 to 39, 7:9 to 15, 38:70 to 78 etc.). Allah talks to humans through angels, curtains or symbols. (42:51, 4:64). Allah made Adam with his two hands. (38:75). Allah comes in a queue (89:22)
    Allah has a face (55:27), hands (38:75), fingers (Sahih Muslim 2786) shin (68:42). Allah has an eye (20:39) and a foot (Sahih al-Bukhari 6661) also. What goes up must come down, therefore Allah descends (Sahih al-Bukhari 1145).
    The prophet said that Allah will be seen by every believer when they are eventually resurrected from their graves - if Allah is formless then this statement by the prophet will be falsified. வள்ளலார் சொன்ன செத்தாரை எழுப்புதலை Prophet ம் சொல்கிறார்.

    தேமொழி

    unread,
    Aug 7, 2022, 9:19:37 PM8/7/22
    to தமிழ் மன்றம்
    மயிலையில் பாம்பு கடித்து மரணித்த பூம்பாவை என்ற பெண்ணை எலும்பிலிருந்து உயிர்ப்பித்தார் திருஞானசம்பந்தர் -
    செத்தாரை எழுப்பும் நம்பிக்கை (ஏமாற்று வேலை, புரட்டுகள்) தொன்ம இந்திய மண்ணிலேயே உண்டு. இந்த தாக்கம் போதுமே வள்ளலாருக்கு !!!!!

    வள்ளலார் வரிகளில் பௌத்தம் கூட உண்டு 

    தேமொழி

    unread,
    Aug 7, 2022, 9:21:26 PM8/7/22
    to தமிழ் மன்றம்
    புத்தமதத்தைப் பின்பற்றும்படி வள்ளலார் மறைமுகமாக மக்களை வேண்டியுள்ளார்

    இதற்குச் சான்றாக,
              ‘சாக்கிய வேதந் தேக்கிய பாதம்
              தாக்கிய ஏதம் போக்கிய பாதம்

              ‘புத்தந்தரும் போதா வித்தத்தருந் தாதா
              நித்தந்தரும் பாதா சித்தந்திரும் பாதா’

    -----கட்டுரையை கீழே முழுமையாகப் படிக்கலாம் -----

    வடலூர் சத்தியஞான சபை  2007-2010 வழக்கில் நீதியரசர் சந்துருவின் தீர்ப்பு

    -- ஆ.சிவசுப்பிரமணியன் 



    நீதிமன்ற வழக்குகள் என்பன அவை உரிமையியல் வழக்காக இருந்தாலும், குற்றவியல் வழக்காக இருந்தாலும் பெரும்பாலும் தனிமனிதரைச் சார்ந்தவை யாகவே இருக்கும். இதனால் இவ்வழக்குகளின் மீது வழங்கப்படும் தீர்ப்புகளை வெறும் செய்தியாக மட்டுமே பெரும்பாலோர் படிப்பர்.

    தம் சட்ட அறிவுக்குத் துணைபுரியும் என்றும் வேறு வழக்கில் மேற்கோள்காட்ட உதவும் என்றும் கருதினால் வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் நீதிமன்றத் தீர்ப்புகள் சிலவற்றை வரி பிறழாது படிப்பர்.

    ஆனால் இவ்வெல்லையைத் தாண்டி சமூக வரலாற்றாவணமாக நீதிமன்றத் தீர்ப்புகள் சில அமைந்துவிடுவதுண்டு. வரலாற்றாய்வாளர்களும், சமூகவியல் ஆய்வாளர்களும் படித்து விவாதிக்கும் தகுதியை இவை பெற்றிருக்கும். இத்தீர்ப்பின் வாசிப்புத்தளம் இதனால் விரிவடைந்துவிடும்.

    இத்தகையத் தீர்ப்புகளில் தீர்ப்பு வழங்கியவரின் சட்ட அறிவு மட்டுமன்றி, அவரது உலகக் கண் ணோட்டமும் சார்புநிலையும்கூட வெளிப்படும். அத்துடன் சில வரலாற்றுண்மைகளையும் சமூகச் சிக்கல்களையும் இவை வெளிப்படுத்தி நிற்கும். இத்தன்மை வாய்ந்த உயர்நீதிமன்றத் தீர்ப்பொன்றை இக்கட்டுரை அறிமுகம் செய்கிறது.

    வள்ளலார் என்றழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (1823-1874) வடலூரில் நிறுவிய சத்திய ஞான சபையை மையமாகக் கொண்டது இத்தீர்ப்பு. இத்தீர்ப்பை வழங்கியவர் நீதியரசர் சந்துரு.

    வழக்கின் பின்புலம்:
    வழிபாட்டிற்காக உருவம் எதுவும் நிறுவப்படாத சத்தியஞான சபையில் சிவலிங்கம் ஒன்றை சபாபதி சிவாச்சாரியார் என்பவர் 2006இல் நிறுவினார். ‘பிரதோசம்’ அன்று அதற்கு வழிபாடு நிகழ்த்திப் பிரசாதங்களும் திருநீறும் வழங்கினார். அவரது இச்செயல் இச்சபையை நிறுவிய வள்ளலாரின் கோட்பாடுகளுக்கு முரணானது என்று, அவரைப் பின்பற்றுவோர் சிலர் இந்து அறநிலையத் துறையிடம் முறையீடு செய்தனர். இம்முறையீடே இவ்வழக்கின் தொடக்கமாக அமைந்தது.

    விசாரணை:
    13.07.2006இல் இதுதொடர்பான விசாரணையை இந்து அறநிலையத் துறை மேற்கொண்டது. இவ் விசாரணையை இந்து அறநிலையத் துறையின் இணை ஆணையர் நடத்தினார். இவ்விசாரணையில் மேற்கூறிய சிவாச்சாரியார் கலந்து கொள்ளவில்லை.

    இராமனாதபுரம் மாவட்டம் புதுக்குடியைச் சேர்ந்த தொண்டர்குல வி.பெருமாள் என்பவர் 22.08.2006இல் நடந்த விசாரணையில் கலந்துகொண்டு அறிக்கை அளித்தார். அதன் சுருக்கம் வருமாறு:
      --  18.07.1872இல் வள்ளலார் வகுத்த விதிமுறைகளின் படி பன்னிரெண்டு வயதுக்கு உட்பட்ட, எழுபத்தி யிரண்டு வயதுக்கு மேற்பட்ட எவரும் சத்தியஞான சபையைத் தூய்மைப்படுத்தி விளக்கு ஏற்றலாம்.

      --  18.09.2006 அன்று உதவி ஆணையரும் சத்திய ஞான சபையின் நிர்வாக அதிகாரியும் மனு அளித்தனர். சமயம் சார்ந்த வழிபாடு நடத்தி வள்ளலாரின் அடை யாளத்தைச் சிதைக்கக் கூடாது என்று இருவரும் தம் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

    இதே நாளில் மேற்படி சிவாச்சாரியார் தமது வழக்கறிஞர் வாயிலாக மனுவொன்றை அளித்தார். இம்மனுவில் 25.01.1872ஆம் ஆண்டில் முதல் முறையாகத் தைப்பூசத் திருவிழா நடைபெற்றதாகவும், தம்முடைய தாத்தாவிடம் கண்ணாடி ஒன்றையும், விளக்கு ஒன்றையும் வள்ளலார் வழங்கியதாகவும், அன்றிலிருந்து தற்போதைய பூசைமுறை தொடங்கிய தாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். தம் மனுவுடன் ஆறு ஆவணங்களையும் இணைத்திருந்தார்.

    முதல் ஆவணத்தில் வள்ளலாரின் கையப்பம் இருந்தது, 
    11.02.1941இல் நடந்த திருவிழா அழைப்பிதழ் இரண்டாவது ஆவணமாகவும், 
    01.02.1942இல் நடந்த திருவிழாவின் அழைப்பிதழ் மூன்றாவது ஆவணமாகவும் இடம்பெற்றிருந்தன. 
    நான்கு மற்றும் அய்ந்தாவது ஆவணங்கள் தைப்பூசத் திருவிழா தொடர்பான ஆவணங்களாகும். 
    அறங்காவலர்கள் பட்டியலாக ஆறாவது ஆவணம் அமைந்திருந்தது.

    நிகழ்வின்போது நிர்வாக அதிகாரியாக இருந்த சங்கர நாராணயன் சத்தியஞான சபை அறக் கட்டளையின் தலைவர் வி.எம்.சண்முகம் மற்றும் இதர அறங்காவலர்களான அருட்பா அண்ணாமலை, எம்.ஏ.ராஜன், கணக்காளர் பி.ஞானப்பிரகாசம் ஆகியோர் இணை ஆணையரிடம் மனுச்செய்தனர். இம்மனுவில் பின்வரும் கருத்துக்கள் இடம் பெற்றிருந்தன:
      --  வள்ளலார் காட்டிய வழிகாட்டுதலின்படி ஜோதி வழிபாடே நிகழுதல் வேண்டும்.

      --  பிராமணர் ஒருவர் வழிபட விரும்பினாலும்கூட அவர் தனது பூணூலை நீக்கி, தன் சாதியடையாளத்தைக் கைவிட்டே வழிபடவேண்டும். ஆனால் மனுதாரர் சபையின் கிழக்குப் பகுதியில் சிவலிங்கத்தை நிறுவி சமயச் சடங்குகளையும் மேற்கொண்டுள்ளார். திருநீறு விநியோகித்துள்ளனர். இதை உறுதி செய்யும் வகையிலான புகைப்படங்களும் துண்டறிக்கைகளும் விசாரணையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    இம்மனுக்களில் இடம்பெற்றுள்ள செய்திகளின் அடிப்படையில் இவ்வழக்கில் பின்வரும் வினாக்களுக்கு விடைகாண வேண்டும் என்று இணை ஆணையர் முடிவு செய்தார். அவர் எழுப்பிய மூன்று வினாக்கள் வருமாறு:
    1.   சத்தியஞான சபை தொடங்கிய 25.01.1872 லிருந்து யார் சடங்குகளைத் தொடங்கியது?
    2.   உருவ வழிபாடு எப்போது தொடங்கியது? எப்போது சிவலிங்கம் நிறுவப்பட்டது.
    3.  இச்சடங்குகள் வள்ளலார் வகுத்த விதிமுறை களுக்கு உட்பட்டனவா?

    இவ்வினாக்களுக்கான விடைகளாக தம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளவை வருமாறு:
    சபாபதி சிவாச்சாரியார் வழங்கியுள்ள ஆவணத்தில் நாள், திங்கள், ஆண்டு எதுவும் இல்லை. இதில் இடம் பெற்றுள்ள சபாபதி சிவாச்சாரியார் வள்ளலார் ஆகியோரின் கையப்பங்கள் அடையாளம் காணப் படவில்லை. இதன் நம்பகத்தன்மை நிலைநாட்டப் படவில்லை.

    சபாபதி சிவாச்சாரியார் 13.11.1903வரை அறங் காவலராக இருந்ததாகவும், அவரது உடல் நலக் குறைவுக்குப் பின்னர் அவரது மகனும் மருமகளும் அறங்காவலர்களாக இருந்து தைப்பூசத் திருவிழாவின் போது சைவ சமயம் சார்ந்த சடங்குகளை மேற்கொண் டிருந்தனர் என்ற வாதத்திற்குச் சான்றுகளில்லை. மேலும் சபாபதி சிவாச்சாரியார் மரபினர் அறங்காவலர்களாகத் தொடர்ந்து இருந்தார்கள் என்பது நிரூபிக்கப்பட வில்லை. அத்துடன் அறங்காவலர்களே பூசகர்களாக இருந்துள்ளனர் என்பதும் நிரூபிக்கப்படவில்லை.

    25.01.1872இல் சத்தியஞான சபை நிறுவப்பட்ட பின்னர் 18.07.1872இல் வழிபாட்டு முறைகள் வகுக்கப் பட்டன. ஜோதி வடிவிலேயே இறைவனை வழிபடும் முறையைத் தவிர வேறு வழிபாட்டு முறைகள் பின் பற்றப்படவில்லை. தற்போதைய லிங்க வழிபாடு மிக அண்மைக்காலத்திலேயே தொடங்கியுள்ளது. இது வள்ளலார் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு முரணானது.

    இணை ஆணையரின் வழிகாட்டுதல்:
    மேற்கூறிய அறிக்கைகளையும் ஆவணங்களையும் மட்டுமே சான்றுகளாகக் கொள்ளாது, 18.07.1872

    அன்று சமரச சுத்த சன்மார்க்க சபையை நிறுவியபோது, வள்ளலார் வகுத்த விதிமுறைகளின் சாரத்தைப் பட்டியலிட்டு இவையே இச்சபையின் செயல் பாட்டுக்கான வழிகாட்டி என்று இணை ஆணையர் சுட்டிக்காட்டினார். அவை வருமாறு:
    1.  சன்மார்க்க சங்கத்தைச் சேர்ந்தோர் வள்ளலார் வகுத்த விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
    2.  பன்னிரெண்டு வயதுக்கு உட்பட்டோரும், எழுபத்தியிரண்டு ஆண்டுகட்கு மேற்பட்டோரும் சத்தியஞான சபையில் வழிபாட்டை நடத்த வேண்டும்.
    3.  உள்ளமும் உடலும் தூய்மையானவர்களாக அவர்கள் இருக்க வேண்டும்.
    4.  நீராடிய பின்னர் தம் பாதங்களை ஆடையால் மறைத்துக்கொண்டு தகரத்தாலும் கண்ணாடி யாலும் செய்யப்பட்ட பெட்டியில் இருக்கும் ஜோதியை அறையில் இருந்து எடுத்துவந்து மேடையில் வைக்க வேண்டும்.
    5.  தம் பாதத்தைத் துணியால் மறைத்துக் கொண்டு நான்கு நாட்களுக்கு ஒருமுறை கருவறையில் நுழைந்து, கண்ணாடி விளக் கையும் மற்ற இடங்களையும் தூய்மைப்படுத்த வேண்டும்.
    6.  இதைத்தவிர வேறு எதையும் அங்கு மேற் கொள்ளக்கூடாது.
    7.  ஞானசபையின் திறவுகோல் நிரந்தரமாக ஒருவரிடமே இருக்கக்கூடாது. பணிமுடிந்ததும் திறவுகோலைப் பெட்டியன்றில் வைத்துப் பூட்டி பின் அறையையும் பூட்டி அத்திறவு கோலை அப்பகுதியைப் பாதுகாக்கும் காவலரிடமோ, நிர்வாக அதிகாரியிடமோ கொடுத்துவிட வேண்டும்.
    8.  சத்தியஞான சபையில் ஓசையின்மை உறுதி யாகக் கடைபிடிக்கப்பட வேண்டும்.
    9.  எண்ணெய் ஊற்றி எரியும் ஜோதியை தகரத்தாலும் கண்ணாடியாலும் செய்யப் பட்ட பெட்டியில் வைத்துக் காட்ட வேண்டும்.
    10.  ஜோதியைக் காட்டும்போது மக்கள் இரைச்சலின்றி ‘அருட்பெருஞ்ஜோதி’ என்ற மந்திரத்தைக் கூற வேண்டும்.
    11.  வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் ஆகியன வற்றில் அவர்கள் நம்பிக்கை கொள்ளாதிருக்க வேண்டும்.
    12. சைவம், வைணவம், வேதாந்தம், சித்தாந்தம் ஆகியனவற்றில் நம்பிக்கை இல்லாதிருக்க வேண்டும்.

    இவ்விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வழக்கை ஆராய்ந்து சிவாச்சாரியார் மேற்கொண்ட வழிபாட்டு முறையைத் தடை செய்து இணை ஆணையர் உத்தரவிட்டார்.

    மறுஆய்வு மனு:
    இணை ஆணையரின் இத்தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுக்களை இந்து அறநிலையத் துறையின் ஆணையரிடம் சிவாச்சாரியார் அளித்தார்.  இவற்றில் பின்வரும் வாதங்களை அவர் முன்வைத்தார்:
    1.  தாம் நிறுவிய சத்தியஞான சபையை சிவாலய மாகவே வள்ளலார் கருதினார்.
    2.  சிவ ஆகம விதிப்படியே இதில் வழிபாடுகள் நிகழ்ந்தன.
    3.  மனுதாரரின் (சிவாச்சாரியாரின்) முன் னோர்கள் சிவ ஆகம விதிப்படியே இதில் வழிபாடுகளை நடத்தி வைத்தனர்.

    இவ்விவாதங்களை நிலைநாட்டப் பின்வரும் அய்ந்து சான்றுகளை அவர் முன்வைத்தார்:
    1.  வள்ளலார் தாம் எழுதும் கடிதங்களை ‘உ’ ‘சிவமயம்’ என்று தொடங்கி, சிதம்பரம் ராமலிங்கம் பிள்ளை என்று கையெழுத் திடுவார்.
    2.  சத்தியஞான சபையென்பது சிதம்பரம் சித்திர சபையின் மற்றொரு பகுதியாகும்.
    3.  தமது ஆறாம் திருமுறையில் சிவன், சிவ வழிபாடு, சித்திர சபை ஆகியன குறித்துக் குறிப்பிட்டுள்ளார்.
    4.  சிவலிங்கம், தூபதீபம், கண்ணாடி ஆகிய பூசைப்பொருட்களை சபாபதி சிவாச்சாரி என்பவரிடம் (வாதியின் முன்னோர்) ஒப்படைத்தார்.
    5.  சத்தியஞான சபை தொடங்கப்பட்டபோது பின்பற்றப்பட்ட சடங்குகளும், பூசை முறை களும் இன்றுவரை பின்பற்றப்படுகின்றன.

    சபாபதி சிவாச்சாரியாரின் இம்மனுவை எதிர்த்து இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகிலுள்ள புதுக்குடியைச் சேர்ந்த தொண்டர்குல வி.பெருமாள் என்பவர் எதிர்வாதங்கள் சிலவற்றை முன்வைத்தார். அவற்றுள் முக்கியமான சில செய்திகள் வருமாறு:
    சத்தியஞான சபையைத் தெய்வ நிலையமாக வள்ளலார் உருவாக்கினார். தைப்பூசம் தொடர்பான துண்டறிக்கைகள் மனுதாரரின் முன்னோரால் தன்னிச்சையாக அச்சடிக்கப்பட்டவை. சத்தியஞான சபையானது சைவ ஆகம விதிமுறையிலான வழிபாட்டு முறையைப் பின்பற்ற வேண்டுமென்று வள்ளலார் விரும்பியிருந்தால் அதை சிவன் கோவிலாக நிறுவி யிருப்பார். சைவ ஆகம நெறிப்படி கோவில் ஒன்று நிறுவப்பட்டால், சிவலிங்கம் நிறுவப்பட்டிருக்க வேண்டும். மேலும் கருவறை அர்த்தமண்டபம், மகாமண்டபம், முன்மண்டபம் ஆகியன இருக்க வேண்டும். சிவனுக்கு எதிராக நந்தி நிறுவப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இவை எதுவும் இல்லாமல் சத்தியஞான சபையை அவர் நிறுவியுள்ளார். சிவலிங்கம் ஒன்றை அங்கு நிறுவி உருவ வழிபாட்டை அவர் நிகழ்த்தியதற்கு வரலாற்றுச் சான்று எதுவுமில்லை.

    வள்ளலார் உயிரோடு இருந்தபோது ஆறாம் திருமுறை அச்சிடப்படவில்லை என்பதினாலேயே அதில் இடம்பெற்றுள்ள கருத்துக்களை ஏற்றுக்கொள்ள வில்லை என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. 1885இல் வெளியான முதல் பதிப்பில் தொடங்கி, 1896, 1924, 1931-32 ஆண்டுகளில் ஆறாம் திருமுறை நூல் வடிவில் வெளிவந்துள்ளது. இவற்றில் அருட்பெருஞ்ஜோதி அகவல் இடம்பெற்றுள்ளது. சபாபதி சிவாச்சாரியாரின் மறுசீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்தும் இணை ஆணையரின் தீர்ப்பை உறுதிசெய்தும், இந்து அற நிலையத்துறை ஆணையர் தீர்ப்பு வழங்கினார்.

    உயர்நீதிமன்றத்தில் இந்து அறநிலையத்துறை இணை ஆணையரின் தீர்ப்பையும், அதை உறுதிசெய்து இந்து அறநிலையத் துறையின் ஆணையர் வழங்கிய தீர்ப்பையும் எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சபாபதி சிவாச்சாரியார் மேல் முறையீடு செய்தார். 

    இதை விசாரித்த நீதியரசர் சந்துரு மனுதாரர் முன்வைத்த விவாதங்களை ஏற்றுக்கொள்ளாது அவரது மனுவைத் தள்ளுபடி செய்து 24.03.2010இல் தீர்ப்பு வழங்கினார். அவரது தீர்ப்பு வள்ளலாரின் சிந்தனைகள் குறித்த ஆய்வுக்கட்டுரை போல் அமைந்துள்ளது. தீர்ப்பின் தொடக்கத்தில் வள்ளலாரைக் குறித்த சிறு அறிமுகத்தைச் செய்துள்ளார்.

    Vallalar.jpg

              ‘கிழக்குவெளுத் ததுகருணை அருட்சோதி உதயம்
              கிடைத்ததென துளக்கமலம் கிளர்ந்ததென தகத்தே
              சழக்குவெளுத் ததுசாதி ஆச்சிரம்ஆ சாரம்
              சமயமதா சாரம்எனச் சண்டைஇட்ட கலக
              வழக்குவெளுத் ததுபலவாம் பொய்ந்நூல்கற் றவர்தம்
              மனம்வெளுத்து வாய்வெளுத்து வாயுறவா தித்த
              முழக்குவெளுத் ததுசிவமே பொருள்எனும்சன் மார்க்க
              முழுநெறியில் பரநாத முரசுமுழங் கியதே’

              ‘ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா
              அருட்பெருஞ் சோதிஎன் உளத்தே
              நீதியில் கலந்து நிறைந்தது நானும்
              நித்தியன் ஆயினேன் உலகீர்
              சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே
              சத்தியச் சுத்தசன் மார்க்க
              வீதியில் உமைத்தான் நிறுவுவல் உண்மை
              விளம்பினேன் வம்மினோ விரைந்தே’

    என்ற வள்ளலாரின் பாடல்களுடன் அறிமுகம் தொடங்குகிறது. சமயம், சாதி, ஆகமம், வேதம் என்பனவற்றை அவர் ஏற்றுக்கொள்ளாததை வெளிப் படுத்தும் வழிமுறையாக,
              ‘சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில்
               உணர்த்திய அருட்பெருஞ்சோதி’

              ‘ஆகமுடி மேல் ஆரண முடிமேல்
               ஆக நின்று ஓங்கிய அருட்பெருஞ்சோதி’

              ‘சமயம் குலம் முதல் சார்பு எலாம் விடுத்த
               அமயம் தோன்றிய அருட்பெருஞ்சோதி’
    என்ற வள்ளலாரின் பாடல் வரிகளை எடுத்துக் காட்டுகிறார்.

    1866ஆம் ஆண்டில் அன்றைய சென்னை மாநிலத்தில் நிகழ்ந்த கொடிய பஞ்சமும், அப்பஞ்சத்தால் மக்கள் பட்டினியால் வாடியது கண்டு வள்ளலார் பதைபதைத்ததும் தீர்ப்பில் இடம்பெறுகின்றன. இப்பதைபதைப்பு,
              ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்
              வாடினேன் பசியினால் இளைத்தே
              வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த
              வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
              நீடிய பிணியால் வருந்துகின்றோர்என்
              நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
              ஈடின்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ்
              சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்’
    என்ற பாடலாக வெளிப்பட்டதைச் சுட்டிக்காட்டி விட்டு, இதுவெறும் புலம்பலாக நின்றுவிடவில்லை என்பதையும் எடுத்துக்காட்டியுள்ளார். 1867ஆம் ஆண்டில் கஞ்சித் தொட்டியன்றை வடலூரில் அமைத்ததையும், அங்குள்ள அடுப்பில் அவர் ஏற்றிய நெருப்பு இன்றுவரை அணையாது தொடர்வதையும், ஏழைகளுக்கு உணவளித்தலை உயரிய குணமாக அவர் கருதியதையும் குறிப்பிட்டுள்ளார். ஏழைகளின் அவல நிலையைப் பொறுக்காது இறைவனை நோக்கி,
              ‘வாழைஅடி வாழைஎன வந்ததிருக் கூட்ட
              மரபினில்யான் ஒருவன்அன்றோ வகைஅறியேன் இந்த
              ஏழைபடும் பாடுனக்குந் திருவுளச்சம் மதமோ
              இதுதகுமோ இதுமுறையோ இதுதருமந் தானோ
              மாழைமணிப் பொதுநடஞ்செய் வள்ளல்யான் உனக்கு
              மகன் அலனோ நீஎனக்கு வாய்த்ததந்தை அலையோ
              கோழைஉல குயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்
              கொடுத்தருள்நின் அருள்ஒளியைக்
               கொடுத்தருள் இப்பொழுதே’
    என்று வேண்டுவதையும், 
    ‘கருணை இலா ஆட்சி கடுகி ஒழிக அருள்நியந்த நன்மார்க்கர் ஆள்க’ என்று கூறுவதையும் அவர் நினைவூட்டுகிறார். ஏனைய மடங்கள், ஆதினங்களைப் போன்று வாரிசையோ, இளைய பீடத்தையோ உருவாக்காத தன்மையையும் எடுத்துரைக்கிறார்.

    தீர்ப்பின் தொடக்கத்தில் இடம்பெறும் இப்பகுதிகள் வள்ளலாரைக் குறித்த சரியான சித்திரத்தை வழங்குகின்றன.

    * * *

    வள்ளலாரின் உண்மையான இயல்பை வெளிப் படுத்தும் வகையில் முன்வைக்கப்பட்ட சான்றுகளையும், விவாதங்களையும் தம் தீர்ப்பில் எடுத்தாள்கிறார். அடுத்து வள்ளலாரின் கருத்துக்களின் சாரத்தை வெளிப்படுத்தும் தன்மைகொண்ட பின்வரும் திரு அருட்பா பாடல்களை மேற்கோளாகக் காட்டுகிறார். வள்ளலாரின் சமய நெறிமுறைகள் குறித்தும் பின்வரும் செய்திகளைக் குறிப்பிடுகிறார்.

    உருவ வழிபாட்டை ஏற்காமையும், ஜோதி என்ற பெயரில் நெருப்பை வழிபடுவதும் வள்ளலாரின் கருத்தாக இருந்துள்ளது. நிறுவன சமயம் எதற்கும் அவர் இடமளிக்கவில்லை. மனிதகுலத்திற்கு முழுமையான இடத்தை அவர் வழங்கியுள்ளார். சாதி அடிப்படை யிலான பாகுபாட்டிற்கு அவர் இடமளிக்கவில்லை.

              ‘எச்சம யங்களும்பொய்ச்சம யமென்றீர்
              இச்சம யம்இங்கு வாரீர்
              மெய்ச்சம யந்தந்தீர் வாரீர்’

              ‘சதுமறை யாகம சாத்திர மெல்லாஞ்
              சந்தைப் படிப்புநஞ் சொந்தப் படிப்போ
              விதுநெறி சுத்தசன் மார்க்கத்திற் சாகா
              வித்தையைக் கற்றன னுத்தர மெனுமோர்
              பொதுவளர் திசைநோக்கி வந்தன னென்றும்
              பொன்றாமை வேண்டிடி லென்றோழி நீதன்
              அதுவிது வென்னாம லாடேடி பந்து
              அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து’

              ‘சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
              சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
              ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
              அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
              நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
              நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
              வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
              மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே’

              ‘செவ்வணத் தவரும் மறையும்ஆ கமமும்
              தேவரும் முனிவரும் பிறரும்
              இவ்வணத் ததுஎன் றறிந்திடற் கரிதாம்
              எந்தைநின் திருவருள் திறத்தை
              எவ்வணத் தறிவேன் எங்ஙனம் புகல்வேன்
              என்தரத் தியலுவ தேயோ
              ஒவ்வணத் தரசே எனக்கென இங்கோர்
              உணர்ச்சியும் உண்டுகொல் உணர்த்தே’

    உருவமில்லாத வழிபாடும், நிறுவன சமய மறுப்பும் வள்ளலாருக்கு எதிரிகளை உருவாக்கின. அவருக்கு எதிரான பரப்புரையை அவரது எதிரிகள் மேற்கொண்டனர். அவரது பாடல்கள் ‘திருஅருட்பா’ என்றழைக்கப்படுவதை எதிர்த்து, ‘மருட்பா’ என்றழைத்தனர். இதுதொடர்பாக ஆறுமுக நாவலர் கடலூர் நீதிமன்றத்தில் 1869இல் வழக்குத் தொடுத்தார். இறுதியில் அது தள்ளுபடி செய்யப்பட்டது.

    தீர்ப்பின் இறுதியில் சிந்தனைக்குரிய கருத்து ஒன்றையும் நீதியரசர் சந்துரு முன்வைத்துள்ளார். புத்தமதத்தைப் பின்பற்றும்படி மறைமுகமாக மக்களை வேண்டியுள்ளார் என்பதே அக்கருத்தாகும். இதற்குச் சான்றாக,
              ‘சாக்கிய வேதந் தேக்கிய பாதம்
              தாக்கிய ஏதம் போக்கிய பாதம்

              ‘புத்தந்தரும் போதா வித்தத்தருந் தாதா
              நித்தந்தரும் பாதா சித்தந்திரும் பாதா’
    என்ற வள்ளலாரின் பாடல் வரிகளை முன் வைக்கிறார். முற்போக்குச் சிந்தனையாளர்கள் ஆராய வேண்டிய ஆய்வுப்பொருள் இது.

    * * *

    இவ்வழக்கு வேறொரு சிந்தனையையும் தூண்டுகிறது. சபாபதி சிவாச்சாரியார் சிவலிங்கத்தை வள்ளலாரின் சத்தியஞான சபையில் நிறுவி, சைவ ஆகம விதிமுறைப்படி வழிபாடு நிகழ்த்தத் தொடங்கியதுதான் இவ்வழக்கின் அடிப்படைக்காரணம். இன்று கிராமப்புற நாட்டார் தெய்வங்கள் ஆதிக்க வகுப்பினரால் ஆகம விதிக்குள் கொண்டு வரப்படுகின்றன. அம்மன்கள் அம்பாள்களாக்கப்படுகின்றனர். நாட்டார் தெய்வக் கோவில்களுக்குள் சிவனும், விஷ்ணுவும், முருகனும் அத்துமீறி நுழைந்து, அச்சாமிகளின் அசைவ உணவுப் படையலைத் தடுக்கின்றனர். ஆகம விதிகளின்றி நிறுவப்பட்ட இக்கோவில்களில் ஆகம விதிப்படி குடமுழுக்கு நிகழ்கிறதே! இதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தால் என்ன? நீதியரசர் சந்துரு இதற்கு வழிகாட்டினால் நன்றாக இருக்கும்.





    நன்றி: 
    நவம்பர் 2014 -உங்கள் நூலகம்

    Seshadri Sridharan

    unread,
    Aug 8, 2022, 1:53:11 AM8/8/22
    to தமிழ் மன்றம்
    அதற்கு தான் நபியின் கூற்றையும் காட்டியுள்ளேன்.   “Faces will be radiant on that day as they see their Lord” (Quran 75:22–23) இந்த வரியும் கூட அதை தான் கூறுகிறது.

    தேமொழி

    unread,
    Aug 8, 2022, 4:00:12 AM8/8/22
    to தமிழ் மன்றம்
    சமயங்கள் தோன்றிய காலங்களில் அதில் கொடுக்கப்பட்ட விளக்கங்கள் இன்றைய நாட்களில் சிரிப்பு வரவழைக்கும் படித்தான் இருக்கும்.  

    இதில் எந்த சமயமாக இருந்தால் என்ன 

    இன்றைய  அறிவியல் உலகில் எவ்வாறு மக்கள் மாறியுள்ளார்கள் என்பதில்தான் மக்கள் நாகரிகத்தின் வளர்ச்சி இருக்கிறது. 

    இல்லாவிட்டால் ஈயத்தைப் பார்த்து பித்தளை இளிப்பது போன்றுதான் 
    The pot calling the kettle black
    Reply all
    Reply to author
    Forward
    0 new messages