சகடு (இதுதான் carக்குச் சரியானசொல்; எத்தனைநாள்தான் ஊர்தி,
சீருந்தென நீட்டிமுழக்குவோம்? அருள்கூர்ந்து http://valavu.blogspot.in/2013/10/blog-post.html
விமானம் கட்டுரையைப் படியுங்கள்), இருவளை, விலங்கிழுப்புச்
சகடமென்று பல வையங்களை (wagons) வண்டியென்ற பொதுப்பெயர் கொண்டழைக்கிறோம்.
ஒவ்வொருவண்டியிலும் ”ஓட்டி, ஓடி” என 2 பாகங்களுண்டு. சகட்டில் எந்திரம் (engine)
என்பது ஓட்டி அல்லது துரவு (drive), சட்டகையும் (chassis) சக்கரங்களுஞ் (wheels)
சேர்ந்தது ஓடி (driven machine). ஓட்டியையும் ஓடியையும் கவைக்கும் முறை சகட்டிலும்
இருவளையிலும் வேறுபடும். விலங்குச் சகடத்தில் ஓட்டி = மாடு/குதிரையெனும் விலங்கு;
ஓடி = சட்டகையும், சங்கரங்களும் சேர்ந்தது.
பொதுவாக ஓர் எந்திரத்தையும் ஓடியையும் கணுக்குவதில் (to connect)
பல வகைகளுண்டு. ஒருவகைச் சகட்டில், முடுக்கத்தை (acceleration) மாற்ற உதவும்படி,
ஓட்டியையும் ஓடியையும் முதலாம், இரண்டாம், மூன்றாம், நாலாம்,
பின்வரல் என்று 5 வகைக் பற்சக்கரக் கவைகளால் (gears) இணைப்பார்கள். இந்த இணைப்பில்
எல்லாக்கவைகளுமே பற்சக்கரங்களாக இருக்கத் தேவையில்லை. தவிரப் பற்சக்கரங்களும் ஒன்றின்மேல் இன்னொன்று ஓடியுருளத் தேவையில்லை. நாம்
சவட்டும் மிதிவண்டியிலும், மிதியோடொரு பற்சக்கரமும், பின்சக்கரத்தோடு இன்னொன்றும்
இருக்க, இரண்டின் நடுவே ஒரு சங்கிலி ஊடுவந்து பிணைக்கும். இருசிலும் (bike),
எந்திரத்தண்டின் முடிவிலுள்ள பற்சக்கரத்தையும், பின்சக்கரப் பற்சக்கரத்தையும் ஒரு
சங்கிலி பிணைக்கிறது. மாறாக, அரவையாலையில் (grinding mill) மின்முகட்டி (electric
motor) எந்திர ஓட்டியாக, அரவைப்பொறி ஓடியாகும். விதப்பாக, முகட்டித்தண்டின்
முடிவிலோ, அரவைத் தண்டின் முடிவிலோ உருளைச்சக்கரங்களைப் பொருத்தி, அவற்றின் மேல்
இழுவைப்பட்டையைப் (rubber belt) பயன்படுத்துவார்.
.
சகட்டின் கவையிற் கூட 2 வகையுண்டு. முன்சொன்னது போல் பற்சக்கரம்
பொருத்திய மானமை (manual) வண்டிகள் ஒருவகை [இவற்றில் ஓட்டியின் பற்சக்கரத்திற்கும்
முன்னே clutch செயற்படும்.] இன்னொருவகை (இந்தியாவில் இப்போது
வந்துள்ள, அமெரிக்காவில் அதிகமுள்ள) தானமை வண்டிகளாகும். [ஒருவண்டி நகர்கையில்
மானமைவாய்த் துரவரே (driver) கவை விகிதங்களை மாற்றாது, தானே மாற்றிக்கொள்ளும்
மிடைப்பெயர்வு (motor vehicle transmission that can automatically change gear
ratios as the vehicle moves, freeing the driver from having to shift gears
manually) இங்கு பேசப்படுகிறது. மிடைப்பெயர்வு (transmission) என்ற கலைச்சொல்
எப்படியெழுந்தது? ஒரு கருவியிலிருந்து இன்னொன்றிற்கும், ஓராளிடமிருந்து
இன்னோராளுக்கும் ஒலி, இயக்கம், செய்தி என்று பல்வேறு மிடைகள் பெயர்வதால்
மிடைப்பெயர்வாயிற்று. தானமைநகரித் (automobile) தொழிலில் இதைத் தன்-குவி
மிடைப்பெயர்வென்றும் (self-shifting transmission), n-வேகத் தானமையென்றும் (n-speed
automatic), சுருக்கமாய் AT என்றும் அழைப்பர்.]
இம்முன்னுரையோடு ஷேக் அப்துல் காதரின் கட்டுரையைப் படியுங்கள்.
பின் கலைச்சொற்களுக்கு வரலாம். முதலில் வருவது clutch என்ற கலைச்சொல்.
இணையத்திலுள்ள etymonline அகரமுதலியில் clutch (n.1) Look up
clutch at Dictionary.com "a claw, grip, grasp," c. 1300, from cloche "claw,"
from cloke (c. 1200), related to clucchen, clicchen (see clutch (v.)). Meaning
"grasping hand" (1520s) led to that of "tight grasp" (1784).
Related: Clutches. என்ற பெயர்ச்சொல் விளக்கமும், clutch (v.) Look up clutch at
Dictionary.com Old English clyccan "bring together, bend (the fingers),
clench," from PIE *klukja- (cognates: Swedish klyka "clamp,
fork;" related to cling). Meaning "to grasp" is early 14c.; that of "to seize
with the claws or clutches" is from late 14c. Sense of "hold tightly and close" is from c. 1600. Influenced in meaning by Middle
English cloke "a claw." Related: Clutched; clutching என்ற வினைச்சொல்
விளக்கமுங்கிடைக்கும். அருளியின் அருங்கலைச்சொல் அகரமுதலியில்
”பிடிப்புறுப்பு” என்றே இணைச்சொல் கொடுக்கப்பட்டிருக்கும். நான் பரிந்துரைப்பது
வேறொன்று.
புலி, சிங்கம் போன்ற பெருவிலங்குகளின் கூர்நகத்தை உகிர்
என்றழைப்பர். அந்த உகிர் வளைந்து கொக்கி போலாகி (இதை ஆங்கிலத்தில் hook என்று
சொல்வர். இங்கும் தமிழிய, இந்தையிரோப்பிய ஒற்றுமையைக் காணலாம்.
) இரையைப் பற்றிக்கொள்ளும். பெருஞ்சுமைச் சாக்குகளை முதுகிலேற்றி இடம்மாற்றுவோர்
கொக்கியைத் தன்கையில் வைத்திருப்பார். துறட்டியின் நுனியிற்செருகும் இருப்புக்கருவியும் கொக்கியென்றே அழைக்கப்படும். மேலே சொன்ன claw வும்
கொக்கி போலத்தான். குள்>கொள் என்ற வேர்ச்சொல்லின் வழியெழுந்த. கொள்ளுதல்
தொழிற்பெயரின் அடிப்படைப் பொருள் பற்றுதலே. கை, கால்
உறுப்புக்களைப் பிற பொருள்களோடு பொருந்தப் பிடித்தலென்றும் பாவாணர் சொல்வார்.
இன்றைக்குக் கொள்ளுதலைத் துணைவினையாகப் பயன்படுத்துவதாலேயே ”அதன் முதற்பொருளை மறந்துவிட்டோமோ?” என்று சிலமுறை
தோன்றுவதுண்டு.
கொள்கு என்பது கொக்கிபோல் வளைந்தது. கொள்கு>கொட்கு>கொக்கு
என்ற பறவைப்பெயரும் வளைபொருளில் எழுந்ததுதான்.
குள்>கொள்>கொள்கு>கொட்கு>கொக்கு>கொக்கி என்பதும் இப்படிப்
பிறந்ததுதான். கொள்கு>கொளுகு>கொளுகி>கொளுவி என்பது
கொக்கியையே குறிக்கும். கொளுகுதலின் பிறவினைச்சொல் கொளுக்குதல் ஆகும்.
கொளுக்குதலிற் பிறந்த பெயர்ச் சொல் கொளுக்கி அதற்கும் கொக்கி
என்றுதான் பொருள். விதப்பாக அதையே clutch க்கு இணையாய்ப் பயன்படுத்தவிழைகிறேன்.
இச்சொல் சரியானபொரூளைத் தந்து, நம்மரபிற்குப் பொருந்தியும்வரும். அறிவியல்/
நுட்பியல் என்பது தமிழ்ச்சிந்தனையோடு இயல்பாய்ப் பொருந்தும்.
அவ்வகையில் ஷேக் அப்துல் காதர் கட்டுரையில் வரும் clutch disc ஐக் கொளுக்கித்
திகிரி என்றும், clutch pedal ஐக் கொளுக்கி மிதி என்றும் எளிதிற் சொல்லலாம்.
அடுத்தது flywheel. இதைப் ”பறவளை” என்ற சொல்லால் நெடுங்காலம் முன்னே
பழகியிருக்கிறேன்.
அடுத்தது torque. திருகுவினையால் இதைத் திருக்கு
என்றழைக்கலாம்.இனி pressure plate = அழுத்தத் தகடு என்றாகும். அடுத்ததைக் கூறுமுன்
spring என்ற பொதுச்சொல்லிற்கு வரவேண்டும். சுருங்கிக் கிடந்தது சட்டென்று பொங்கி
மேலே எழுவது spring எனப்படுகிறது. பொங்குதல் என்ற வினையே spring ஐச் சரியாகக்
குறிக்கும். diaphram spring = இடைவரம்புப் பொங்கி. diaphragm (n.) என்பதை Look up
diaphragm at Dictionary.com late 14c., from Late Latin diaphragma, from Greek
diaphragma "partition, barrier, muscle which divides the thorax from the
abdomen," from diaphrassein "to barricade," from dia- "across" (see dia-)
+ phrassein "to fence or hedge in." The native word is midriff. Meaning
"contraceptive cap" is from 1933. என்று சொர்பிறப்பியல் அகரமுதலி கூறும். இருவேறு
பகுதிகளின் இடையிலுள்ள நுணுகிய வரம்பு இடைவரம்பாகும்.
throwout bearing = வெளித்தள்ளும் பெறுவம்.(A throwout bearing
is a part of an automotive clutch system that temporarily disengages the engine
from the manual transmission while shifting.) இளமையில் பொறியியல் படிக்கும்போது
bearing ஐத் தாங்கி என்றே சொல்லிக் கொடுதார்கள். தாங்கியைக் காட்டிலும் பெறுதல்
வினைவந்த பெறுவம் இன்னுஞ் சிறப்பாயிருக்குமென்று பரிதுரைக்கிறேன்.
performance clutch = நனிநடைக் கொளுக்கி
4 stroke engine = 4 தடக்கு எந்திரம்
power stroke புயவுத் தடக்கு (புயவு என்ற சொல்லை power க்கு
இணையாக நெடுநாள் புழங்குகிறேன்.)
dual mass flywheel = இருமதுகைப் பறவளை
அன்புடன்,
இராம.கி.