சனாதனத்தை எதிர்க்கும் கபிலர்
சனாதனத்தை ஆரியம் காலந்தோறும் வேருன்ற எல்லா முயற்சியும் எடுத்துக் கொண்டுள்ளது. அதே நேரம், தமிழ் உலகம் எந்த அளவில் எல்லாம் எதிர்க்க வேணடுமோ அந்த அளவில் எல்லாம் சனானத்தை எதிர்த்துக் கொண்டே வருகிறது. அவற்றில் ஒன்றுதான் கபிலர், கபிலர் அகவல் மூலம் சனாதனத்திற்கு எதிராகக் குரல் எழுப்பியது.
கபிலரின் பாடற் கருத்து ஒன்று வாலியின் மூலமாகத் திரைப்பாடல் ஒன்றின் மூலம் நமக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாலி 1958இல் தன்னுடைய முதல் திரைப்பாடலை எழுதினாலும் 1961,63,64ஆம் ஆண்டுகளில் 7 படங்களில் பாடல்களை எழுதியுள்ளார். அதன்பின் 1964 இல் ‘படகோட்டி’ படத்தில் வாலி பாடல்கள் எழுதினார். ஆனால், இதுதான் அவரின் முதல் திரைப்படம் என மக்கள் நம்பினர். அனைத்துப் பாடல்களாலும் அவர் மக்களைக் கவர்ந்தார். அவற்றில் ஒன்றுதான்
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் –
அவன் யாருக்காகக் கொடுத்தான்?
என்னும் பாடல்.
அப்பாடலில் இடம் பெற்ற இரு வரிகள் வருமாறு:
மண்குடிசை வாசலென்றால் தென்றல்வர வெறுத்திடுமா?
மாலைநிலா ஏழையென்றால் வெளிச்சம்தர மறுத்திடுமா?
என்னும் திரைப்பாடல் வரிகள்.
உண்மையில் இக்கருத்து புலவர் கபிலரால் சனாதனத்திற்கு எதிராக எழுதப்பெற்ற பாடலில் இடம் பெற்ற வரிகளில் தெரிவிக்கப்பட்டதே. ஆனால் சனாதனத்தின் வித்தாகவும் பரப்பாளராகவும் உள்ள குமுகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவ்வாறே எடுத்தாளாமல் ஏழை-பணக்காரன் வேறுபாட்டை எதிரொலிக்கும் வண்ணம் வெளிப்படுத்தியுள்ளார்.
முத்தாய்ப்பாகப் பின் வரும் கருத்துகளைக் கூறிக் கபிலர் தம் அகவற்பாவை முடிக்கிறார்.
மாரிதான்சிலரை
வரைந்துபெய்யுமோ
காற்றுஞ்சிலரை
நீக்கிவீசுமோ
மாநிலஞ்சுமக்க
மாட்டேனென்னுமோ
கதிரோன்சிலரைக்
காயேனென்னுமோ
நீணான்குசாதிக்
குணவுநாட்டிலுங்
கீணான்குசாதிக்
குணவுகாட்டிலுமோ
திருவும்வறுமையுஞ்
செய்தவப்பேறுஞ்
சாவதும்வேறிலை
தரணியோர்க்கே
குலமுமொன்றே
குடியுமொன்றே
இறப்புமொன்றே
பிறப்புமொன்றே
வழிபடுதெய்வமும்
ஒன்றேயாதலால்
முன்னோருரைத்த
மொழிதவறாமல்
எந்நாளாயினும்
இரப்பவர்க்கிட்டுப்
புலையுங்கொலையுங்
களவுந்தவிர்ந்து
நிலைபெறவறத்தில்
நிற்பதையறிந்து
ஆணும்பெண்ணும்
அல்லதையுணர்ந்து
பேணியுரைப்பது
பிழையெனப்படாது
சிறப்புஞ்சீலமுஞ்செய்தவமல்லது
பிறப்புநலந்தருமோ
பேதையந்தணரே.
இப்பாடலடிகள் மூலம், உயர்வு தாழ்வு கற்பிக்கும் மக்களைப் பார்த்து அவர் கேட்கிறார்:
மழை தாழ்ந்தவர் எனச் சிலரை விட்டு விட்டு உயர்ந்தவர் எனச் சிலருக்கு மட்டும் பெய்யுமா?
காற்றும் சிலரை இழி குலத்தோர் என விலக்கி விட்டு உயர் குலத்தோர் என்று சொல்லிக் கொள்ளும் சிலருக்கு மட்டும் வீசுமோ?
நிலமும் உயர்வு தாழ்வு வேறுபாட்டை ஏற்றுக் கொண்டு தாழ்த்தப்படுபவர்களைச் சுமக்க மாட்டேன் என்று சொல்லுமோ? இவ்வாறான வேறுபாட்டை ஏற்றுக் கொண்டு சூரியன் சிலருக்கு மட்டும் வீசுமோ?
உணவினை மேல்சாதியினர் எனச் சொல்லிக் கொள்வோருக்கு நாட்டிலும் கீழ்ச்சாதியினர் எனக் கற்பிக்கப் படுவோருக்குக் காட்டிலுமா விளைவிக்கிறார்கள்?
செல்வம் பெறுவதிலும் வறுமை அடைதலிலும் தவப் பேற்றிலும் சாதலிலும் மனிதர்கள் இடையே வேறுபாடில்லை. அனைவரும் சமமே.
குலம், குடி, இறப்பு, பிறப்பு ஆகியவை அனைவருக்கும் ஒன்றே.
வழிபடு தெய்வம் எல்லாருக்கும் ஒன்றுதான். அது அவரவர் மனத்தில் உள்ளது. ஆதலால் முன்னோர் உரைத்த மொழியைப் பின்பற்றி வாழ வேண்டும். நல்ல நாள், கெட்ட நாள் என்றெல்லாம் பார்க்காமல், எந்த நாளாக இருந்தாலும் இரப்பவர்க்குக் கொடுக்க வேண்டும். புலை, கொலை, களவு, ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். அறத்தில் ஊன்றி நிற்க வேண்டும்.
ஆண், பெண் என்னும் பாகுபாட்டைத் தவிர பிற பாகுபாட்டைக் கொள்ளலாகாது. அனைவரையும் சமமாக எண்ணிப் பேணிக்காப்பதே பிழையற்ற நெறியாகும். சிறப்பும் ஒழுக்கமும் தவமும் நலம் தருமேயன்றி நீங்கள் உயர்வு தாழ்வாகக் கற்பிக்கும் பிறப்பு நலந்தருமா? அறியாமை மிக்க பிராமணரே சொல்லுங்கள் என்று முடிக்கிறார்.
நால்வருணப் பாகுபாட்டைத் தோற்றுவித்தது, அதனடிப்படையில் மக்களிடையே உயர்வு தாழ்வைக் கற்பிப்பது, பெண்ணடிமைத்தனத்தை பரப்புவது, வருண அடிப்படையில் நீதி கூறுவது, அதற்கிணங்கச் சட்டத்தில் பாகுபாட்டை உணடாக்குவ என்ற எண்ணற்ற சனாதனக் கொடுமைகள் குறித்து முன்னரே தெரிவித்துள் ளோம்.
எனவே, சனாதனத்தை வேரறுக்கவும் தமிழ்நெறிக்கிணங்க நன்னெறியைப பேணவும், அனைவரும் அனைத்து இடங்களிலும் அனைத்து நிலைகளிலும் சமமே என்பதை வலியுறுத்தவுமே கபிலர், கபிலர் அகவல் எழுதியுள்ளார். இயற்கைப் பயன்பாடும் இறை யருளும் அனைவருக்கும் இணையாகக் கிடைப்பதே என்பதை உணர வேண்டும். எனவே, எவ்வேறுபாடும் காட்டாமல் அனைவரும் ஓர் இணை என்பதை உணர்வோம்.
எல்லாரும் ஓர்குலம்! எல்லாரும் ஓரினம்! . . . எல்லாரும் ஓர் நிறை!
எனப் பாரதி வாக்கிற்கிணங்க வாழ்வோம்!
சனாதனத்தை எதிர்த்த கபிலரை என்றென்றும் போற்றுவோம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
சனாதனத்தை எதிர்க்கும் கபிலர் – இலக்குவனார் திருவள்ளுவன்
இவர் தவம் செய்பவர் என்பதால் புலால் தவிர்க்க சொல்கிறார். இதை கடைபிடிக்க எத்தனை பேர் இன்று முன் வருவார்?
மேல் நான்கு சாதிக்கு உணவு நாட்டிலுங் கீழ் நான்கு சாதிக்கு உணவு காட்டிலுமோ என்ற கேள்வி எட்டு சாதிகளை அல்லோ குறிக்கிறது?
குணவுநாட்டிலுங்
கீணான்குசாதிக்
குணவுகாட்டிலுமோ
கபிலர் அகவல் என்பது 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் நூல். சாதி அமைப்பிற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டுள்ள இந்நூல், கபிலர் பெயரால் எழுதப்பட்டது.
இன்றைய நிலை பட்டம் இல்லாதவனை பட்டம் உடையவள் மணம் புரியமாட்டாள். அதே போல பட்டம் உடையவன் பட்டம் இல்லாதவளை தரக் குறைவாக எண்ணுவான். ஏன் மக்களே இதை ஏற்கமாட்டார்கள். இப்படி ஒரு நிலையை முன்னேற்றம் என்பதா? சமூகத்தில் கல்வியால் இடைவெளி அதிகம் ஆகிவிட்டது. சாதி வேற்றுமை போனால் புதிதாக கல்வியால் வேற்றுமை வந்துவிட்டது.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj5D%2Bxu-VNu7d392hSc1iohMcHoTBcimLOsy7-NOHegB4g%40mail.gmail.com.
பாடல் நல்ல கருத்தில் தான் அமைந்துள்ளது என்பதில் மாற்று கருத்து இல்லை. செயலை அன்றி பிறப்பு வழி என்ன நலம் புரியும் என்ற கேள்வி பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கு சிறப்பு செய் தொழில் வேற்றுமையான் (skill) என்ற கருத்தோடு ஒத்து போகிறது நன்று.இவர் தவம் செய்பவர் என்பதால் புலால் தவிர்க்க சொல்கிறார். இதை கடைபிடிக்க எத்தனை பேர் இன்று முன் வருவார்?மேல் நான்கு சாதிக்கு உணவு நாட்டிலுங் கீழ் நான்கு சாதிக்கு உணவு காட்டிலுமோ என்ற கேள்வி எட்டு சாதிகளை அல்லோ குறிக்கிறது?குணவுநாட்டிலுங்
கீணான்குசாதிக்
குணவுகாட்டிலுமோ
கபிலர் அகவல் என்பது 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் நூல். சாதி அமைப்பிற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டுள்ள இந்நூல், கபிலர் பெயரால் எழுதப்பட்டது.
அருந்தவ மாமுனியாம் பகவற்கு
ஊழ் இருந்தவாறு இணைமுலை ஏந்திழை
மடவரல் ஆதி வயற்றினில் அன்று அவதரித்தகால்முளை ஆகிய கபிலனும் யானேஎன்னுடன் பிறந்தவர் எத்தனைபேர் எனில்ஆண்பால் மூவர் பெண்பால் நால்வர்யாம் வளர் திறம் சிறிது இயம்புவன் கேண்மின் விளக்கம் 15ஊற்றுக்காடு எனும் ஊர்தனில் தங்கியேவண்ணார் அகந்தனில் உப்பை வளர்ந்தனள்காவிரிப்பூம்பட்டினத்தில் கள்விலைஞர் சேரியில்சான்றார் அகந்தனில் உருவை வளர்ந்தனள்நரப்புக் கருவியோர் நண்ணிடுஞ் சேரியில்பாணர் அகந்தனில் ஒளவை வளர்ந்தனள்குறவர் கோமான் கொய்தினைப் புனஞ் சூழ்வண்மலைச் சாரலில் வள்ளி வளர்ந்தனள்தொண்டை மண்டலத்தில் வண்டமிழ் மயிலையில்நீளாண்மைக் கொளும் வேளாண் மரபுயர்துள்ளுவரிடத்தில் வள்ளுவர் வளர்ந்தார்அரும்பார் சோலைச் சுரும்பார் வஞ்சிஅதிகமான் இல்லிடை அதிகமான் வளர்ந்தனன்பாரூர் நீர்நாட்டு ஆரூர் தன்னில்அந்தணர் வளர்க்க யானும் வளர்ந்தேன்
நான் 2020 இல் சித்தர் ஆவிகளிடம் கேட்ட கேள்விக்கு வள்ளுவர் கன்னியாகுமரியில் சிவபிராமணர் குடியில் பிறந்தவர் என்பது தான் விடையாக வந்தது. அவர் 1,300 ஆண்டுகள் அளவில் வாழ்ந்தவர் 2,000 ஆண்டுகள் அல்ல. வேட்பாரி நண்பர் கபிலர் பிறப்பால் அந்தணர்.
எனவே இந்த புலைச்சி ஆதி பகவன் கதை நாயக்கர் காலத்தில் தமிழ் நூல்களை புறக்கணிக்க இழிவு செய்ய அவற்றின் ஆசிரியர் பிறப்பால் தாழ்ந்தவர் என்ற கருத்து பரப்பப்பட்டிருக்கிறது. அதை எதிர்த்து தான் இந்த பாடல் புனையப்பட்டிருக்க வேண்டும். சாதி இரண்டொழிய வேறில்லை என்ற ஒளவையார் பாடல் இதே காலத்தது என்று நோக்க இது ஒரு சாதி எதிர்ப்பு இயக்கத்தாரால் ஒளவை, கபிலர் பெயர்களில் உண்டாக்கப்பட்ட பாடல்கள் என்பது தெளிவு.