கொடி வேர் பொருள் என்ன ​

3 views
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
Sep 9, 2025, 11:25:43 PM (10 days ago) Sep 9
to தமிழ் மன்றம்
கொடி வேர் பொருள் என்ன 

image.png

குடுவை - வளைந்த சிரட்டை; குடு > கொடு வளைதல் கருத்து. கொடுக்கு - தேளின் வளைந்தாற் போல இருக்கும் வால். கொடு > கொடி என்றால் காற்றில் வளைந்து வளைந்து பறக்கும் துணி. உலர்த்திய துணிகளின் பளுவால் தொய்யும் கயிறு வில் போல் வளைந்து இருப்பதால்  கொடி எனப்படுகிறது.

வளைந்து வளைந்து படரும் தாவரம் கொடி ஆகும். வளைந்து பின்னியுள்ளதால் தொப்புள் கொடி (umbilical cord). குடல் என்பதும் வளைந்து இருப்பதையே குறிக்கும். உட்டுளை உள்ளதால் குழல் > குடல் ஆகாது வளைவு பற்றியே வந்தது.
Reply all
Reply to author
Forward
0 new messages