வெருளி நோய்கள் 1521-1525 : இலக்குவனார் திருவள்ளுவன்

0 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
4:31 PM (6 hours ago) 4:31 PM
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan, Umarani Pappusamy Mysore, Dr. Ku.Muthukumar

வெருளி நோய்கள் 1521-1525 : இலக்குவனார் திருவள்ளுவன்


ஃஃஃ      அகரமுதல              இலக்குவனார் திருவள்ளுவன் 
     05 June 2026      


(வெருளி நோய்கள் 1516-1520 : தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 1521-1525

  1. நெடுங்கழுத்து வெருளி-Giraffeophobia(2)

ஒட்டகச்சிவிங்கி போன்ற நீளமான கழுத்துகுறித்த அளவுகடந்த பேரச்சம் நெடுங்கழுத்து வெருளி.
ஒட்டகச்சிவிங்கி வெருளி(Kamilopardaliphobia)எனவும் தனியாக உள்ளது.பிறர் கேலியாக எண்ணுவார்கள் என்று அஞ்சியும் நடமாட்டத்தில் குறைபாடு நேர்வது கருதியும் நீளமான கழுத்துகுறித்த பேரச்சம் கொள்கின்றனர்.
00

  1. நெடுங்கைக் குரங்கு வெருளி- Gibbonphobia

நெடுங்கைக் குரங்கு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நெடுங்கைக் குரங்கு வெருளி.
இது, கிழக்கிந்தியத் தீவுகளிலுள்ள நீண்ட கைகளுள்ள வாலில்லாக் குரங்குவகையைச் சேர்ந்தது.
00

  1. நெடுஞ்சாலை வெருளி – Autokinetodromophobia

நெடுஞ்சாலைகள்(highways and expressways) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நெடுஞ்சாலை வெருளி.
நெடுஞ்சாலைகளில் ஊர்திகள் மிகு விரைவாகச் செல்வதால் நேர்ச்சி(விபத்து) ஏற்படும், உடலுக்கோ உயிருக்கோ ஊறு நேரும் என்று பேரச்சம் கொள்வதால் நெடுஞ்சாலை வெருளி வருகிறது.
Autokinetic என்றால் தன்னோட்டம், தன்னியக்கம், இயந்திர அசைவு எனப்பொருள்கள்.
சாலையைக் கடப்பதில் ஏற்படும்கடப்பு வெருளி (Agyrophobia/banmaxianphobia/DromoPhobia) உள்ளவர்களுக்கு இவ்வெருளி வரும் வாய்ப்பு மிகுதியாக உள்ளது.
ஊர்திகளை மிகு வேகமாக ஓட்டுவதால் வரும் கடுகதி வெருளி(tachophobia) உள்ளவர்களுக்கு நெடுஞ்சாலை வெருளி(Autokinetodromophobia) வரும் வாய்ப்பு உள்ளது.
00

  1. நெடுஞ்சொல் வெருளி – Hippopotomonstrosesquippedaliophobia/ Sesquipedalophobia

நீளமான சொற்களைக் கண்டு தேவையற்ற பேரச்சம் கொள்வது நெடுஞ்சொல் வெருளி.
நெடுஞ்சொல்லைக் கொண்டே நெடுஞ்சொல் வெருளி குறிக்கப் பெறுவது இதன் சிறப்பாகும்.
முன்னர்க் குறிப்பிட்டதுபோல் 7 எழுத்துகளுக்கு மேல் தமிழில் சொல் கிடையாது. பொதுவான சொற்கள் 3 இலிருந்து 5 இற்குள் அடங்கி விடுகின்றன. என்றாலும் தமிழ் மக்கள் ஆங்கிலம் பயன்படுத்துவதால் ஆங்கிலத்தில் அல்லது தாங்கள் படிக்கும் பிற மொழிகளில் உள்ள நீண்ட சொற்களுக்கு அஞ்சுவர்.
hippopotamus என்பது பேருருவான நீர் யானையைக் குறிக்கிறது. monstro என்றால் கோரப் பேருரு எனப்பொருள். Hippopotomonstrosesquippedalio என்பது நீளமான சொற்களில் ஒன்று. இதைக் கொண்டே நீளமான சொற்கள் வெருளியைக் குறிக்கின்றனர்.
Sesqui pedalis என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் காலடியும் பாதியும் கொண்ட நீளம்; pedal என்பதன் மூலமான pedis என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் காலடி; -alis என்பது பெயரடை ஒட்டு
கி.மு.19 ஆம் ஆண்டைச் சேர்ந்த இலத்தீன் புலவர் ஒராசு(Horace) தன் பாடல் செய்யுட் கலை (Ars Poetica) வரி 97 இல், மிகைநீளச் சொற்களைக் கையாளும் புலவர்களைப்பற்றி “sesquipedalia verba” எனக் கையாண்டிருப்பார். பின்னர் இதுவே மிகைநீளச்சொற்களைக் குறிக்கும் வழக்கமாயிற்று.
sesqui என்னும் இலத்தீன் சொல்லிற்கு ஒன்றரை அடி நீளம், pedalis என்னும் இலத்தீன் சொல்லிற்குக் காலடி என்னும் பொருள். இரண்டையும் இணைத்து நீளமான சொற்களைக் குறிக்கப் பயன்படுத்துகின்றனர். ஆக hippopotomonstrosesquipedalian என்பது பேரச்சம் தரும் நெடுஞ்சொல் என்ற பொருளில் கையாளப்படுகின்றது.
00

  1. நெடுமுகி வெருளி – Lemurphobia

நெடுமுகக் குரங்கு(Lemur)பற்றிய அளவுகடந்த பேரச்சம் நெடுமுகக் குரங்கு வெருளி > நெடுமுகி வெருளி.
நெடுமுகியை நேரில் காணா விட்டாலும் படக்காட்சியாகப் பார்த்தாலும் படமாக அல்லது ஓவியமாகப் பார்த்தாலும் அதைப்பற்றிப் படித்தாலும் பகுத்தறிவிற்குப் பொருந்தாமல் நெடுமுகி மேலே பாயும், பிறாண்டும் கடித்துக் குதறும் எனப் பலவாறாகப் பேரச்சம் கொள்கின்றனர்.
விலங்கு வெருளி உள்ளவர்களுக்கு நெடுமுகி வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.

00

(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5


--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages