இந்த சாமியார் தியானம் செய்ய அமர்கிறார். ஆனால் முடியவில்லை. உட்கார்ந்த சில நிமிடங்களில் கண் சொக்குகிறது. அதனால் மனம் ஒருமுகப்படவில்லை. தியானம் கூடவில்லை. இதற்கு காரணம் என்ன? தமோ குண பூண்டு, வெங்காய உணவு தான். தொடக்கத்தில் எனக்கும் இப்படி தியான அனுபவம் ஏற்பட்டது. இந்த தமோ குண பாதிப்பை ஒழிக்க ஒவ்வொரு ஏகாதசி நாளும் எதையும் உண்ணாமல், நீர் கூட பருகாமல் பட்டினி இருந்தனர் ஆசிவகர், சமணர், பிராமண முனிவர். அது ஏற்கனவே உடலில் தங்கி உள்ள தமோ குணத்தை அகற்றி மனதை தூய்மிக்கும் ஒரு உத்தி.
தமோ குணம் கொண்ட பூண்டு, வெங்காயத்தை சைவ உணவர் உண்பதானது தம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்களின் மனதையும் பாதிக்கிறது. இப்படி பாதிப்புற்ற செல்களின் ஒட்டு மொத்த மனங்கள் ஒன்று சேர்ந்து நம் தனி மனத்தை பாதிப்பதால் தமோ உணவு உண்பதை நிறுத்த வேண்டும் என்று யோகிகள், முனிவர்கள் அறிவுறுத்தினர். மீன், முட்டை, புலால், வெள்ளைக் கத்தரிக்காய், காளான், புதிதாக கன்று போட்ட மாட்டின் கடும் பால் ஆகியனவும் தமோ குணம் உடையவை. அதனால் தான் அவற்றையும் தவிர்க்க சைவ உணவு என்ற கருத்தீடு யோகிகளால் இந்தியாவில் முதன் முதலில் உருவாக்கப்பட்டு நடைமுறையில் அந்தந்த மதத்தவரிடம் இருந்து வருகிறது. தமோ குண உணவை சமைத்த கலனிலேயே சத்துவ உணவுகளான காய், பழம், அரிசி, பருப்பு போன்றவற்றை வைக்கக் கூடாது, சமைக்கக் கூடாது என்றும் முடிவு கொள்ளப்பட்டது.
இன்னும் தீவிரமாக தமோ உணவை தொடுபவர் கையால் சத்துவ உணவைக் கூட வாங்கி சாப்பிடக் கூடாது என்ற அளவிற்கு போனது. இந்த தீவிரம் தேவையற்றது. அசைவ உணவர் பல ஆண்டுகள் தியானம் செய்து அடையும் ஆன்மீக முன்னேற்றத்தை இந்த தமோ குண உணவை தவிர்த்தவரால் சில வாரங்களில் அடைய முடியும். ஆனால் அசைவ உணவரோ இந்த உண்மையை அறியாமல் சைவ உணவரை ஏளனம் செய்கின்றனர், மீன், முட்டை, புலாலை உண்ணச் சொல்லி வற்புறுத்துகின்றனர். கீழே வள்ளுவரின் குறள் தமோ குணத்தின் தீமையை சொல்கிறது.
வெள்ளைக்காரரிடம் வேலை பார்த்த வரை பிராமணர் வீட்டு சமையலை உண்டதால் வெங்காயம், பூண்டு இல்லாமல் இருந்தது. தொழிற்சாலைகளில் பிராமணர் பணியாற்ற தொடங்கிய போது எல்லோருக்கும் பொதுவான வெங்காயம், பூண்டு சமையலை கேண்டீனில் மலிவு விலை சோறாக வாங்கி உண்டனர். அது முதல் பிராமணர் ஒழுக்கக் கட்டுப்பாடு வீழ்ந்தது. எனவே உணவில் வெங்காயம், பூண்டு தவிர்க்க விரும்புவோர் வெளியே உணவகங்களில் உண்பதை தவிர்க்க வேண்டும். வெளியூர் செல்ல நேர்ந்தால் கொய்யா, சப்போட்டா போன்ற விலை குறைந்த பழம், காய்களை உண்டு வெங்காயம், பூண்டை தவிர்க்கலாம்.
வெள்ளையர் அறிமுகப்படுத்திய ரஜோ உணவுகளான காபி, தேநீர் ஆகியனவும் கைவிடப் படவேண்டிய கெட்ட பழக்கங்கள் ஆகும். சிலருக்கு காபி அருந்தாவிட்டால் தலைவலியே வந்துவிடும். எதிர்காலத்தில் இந்த இரண்டு மலைப் பயிர்களும் பலசுக்கல் (decentralization) பொருளியல் முறையில் இல்லாது ஒழிக்கப்படும். குடிகாரனுக்கு மது இல்லாவிட்டால் கை, கால் உதறுவது போல காபி குடியருக்கு காப்பி இல்லாமை உண்டாக்குவதை பார்த்திருக்கலாம். அதுவும் ஓருவகை போதை என்று உணரவேண்டும். உணவில் கட்டுப்பாட்டை இழந்தால் ஒழுக்கத்தில் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும் என்பது நான் நேரில் கண்ட உண்மை. சமத்துவம் பேசுவோர் தனிமனித உரிமை பேசுவோர் (individualism) ஒழுக்கத்தை ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை. இனி, தமோ குண எடுத்துகாட்டுக் குறள்.
"நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்."
பொருள்:
விரைந்து செய்ய வேண்டியதை நீட்டித்தல் (நெடுநீர்/ procrastination), சோம்பல் (மடி/lethargy), மறதி, அளவுக்கு அதிகமான தூக்கம் (துயில்/drowsy) ஆகிய இந்நான்கும், தமக்குக் கேடு வரும் என்று அறியாதவர்கள் விரும்பி ஏறும் அழிவுப் படகுகள் ஆகும் என்கிறது திருக்குறள்.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj5_T5V7DX9jP9G%2BJ%3DCpvxLz%3DYZh%2BPna%2BXuhqE-v4X-QXw%40mail.gmail.com.
பேரமணமுனிவர் பூண்டு,வெங்காயம் ஆயவற்றைஆசீவகர்\சமணர்களைப்பார்த்துஉண்ணாமல் தவிர்த்தனர். பேரமணர்(பிராமணர்)உண்டனர்என்றாகின்றது.தானம்(தியானம்)செய்வது மகிழ்ச்சி.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAPChUPv1nTKp7RaEJbY_sa7e3d2DkwcM_Cc_yqPMn1yi1muTTg%40mail.gmail.com.