Re: தாக்கம் என்றால் என்ன அர்த்தம் ?

387 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Nov 5, 2009, 7:34:10 AM11/5/09
to மின்தமிழ், tamil...@googlegroups.com

ஏத்து-:ஏந்து- போன்ற தொடர்புடைய வினைச்சொற்கள் தாக்கு-:தாங்கு-

The one who attacks = தாக்குபவன்
The one who gets attacked = தாங்குபவன்.


So, for a thing to be influenced by something else
we can employ verbs - vayappaTal, Entutal, taaGgutal etc.,

சற்றே வேறுபடுத்திக் காட்ட,
தாக்கம் = impact
தாங்கல் = influence
என்று கொண்டால் மொழிபெயர்ப்புகளில் துல்லியம் மிகும்.
(இல்லையெனில், இராமகி குறிப்பிடுவதுபோல்,
ப்ராஜக்ட், ப்லான், .... எதுவானாலும் “திட்டம்”
என்பதுபோல் ஆகிவிடும்).

வாக்கு = வளைவு
வாங்கு- = வளைதல்

நா. கணேசன்


On Nov 5, 1:44 am, Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
wrote:
> Dear NG,
>
> In the case of this verse from Appar தேவாரம்,
> the meaning given for தாங்குதல்
> by traditional scholars
> is  "to protect".
>
> See the English paraphrase by V.M. Subramanya Ayyar for this verse:
>
> நம் கடம்பனைப் பெற்றவள் பங்கினன்
> Civaṉ who has as a half Umai who gave birth to our Kaṭampaṉ
>
> தென் கடம்பைத் திருக்கரக் கோயிலான்
> who dwells in the holy temple of Karakkōyil in beautiful Katampai (Kaṭampūr)
>
> தன் கடன் அடியேனையும் தாங்குதல்
>  It is his duty to protect even me who is low and who is his devotee
>
> என் கடன் பணி செய்து கிடப்பதே
> my duty is to follow the path shown by his grace without ever thinking
> with egotism even in a small measure "it is my action"
>
> And see the பொழிப்புரை and the குறிப்புரை found on the <www.thevaaram.org>
> site:
>
> பொழிப்புரை
> கடம்பமாலை சூடிய நம் முருகனைப் பெற்ற உமாதேவியினைப் பங்கில் உடையவனாகிய தென் கடம்பைத்
> திருக்கரக்கோயிலான் தன் கடன் அடியேன் போன்றாரைத் தாங்குதல் ; என் போன்றார் கடன் பணிசெய்து
> தற்போதம் இன்றியே இருத்தல்.
>
> குறிப்புரை:
> நங்கடம்பன் - நம்மால் விரும்பிப் போற்றப்படும். கடம்பமலர் சூடும் முருகன். பெற்றவள் -
> பார்வதி. பங்கினன் - பாகமாக உடையவன். தென் - அழகிய. தன்கடன் - அப்பெருமான் தன் கடமை.
> அடியேனையும் - அடியவனாகிய என்னையும். உம்மை இழிபுணர்த்திற்று. தாங்குதல் -
> காப்பாற்றுதல். என்கடன் - என்னுடைய கடமை. கிடப்பது - அவன் அருள்வழி நின்று என்செயல்
> என்பது சிறிதும் இன்றி இருத்தல்.
>
> Best wishes
>
> -- jlc
>
> N. Ganesan a écrit :
>
>
>
> > [...]
> > தாங்கு
>
> > நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்
> > தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்
> > தன்க டன்னடி யேனையுந் தாங்குதல்
> > என்க டன்பணி செய்து கிடப்பதே. (5.19.9.)- Hide quoted text -
>
> - Show quoted text -

N. Ganesan

unread,
Nov 5, 2009, 8:27:49 AM11/5/09
to மின்தமிழ், tamil...@googlegroups.com

On Nov 5, 6:42 am, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:

> > சற்றே வேறுபடுத்திக் காட்ட,
> > தாக்கம் = impact
> > தாங்கல் = influence
>

> அப்பப்ப,,
>
> "கைத்தாங்கலா"ன்னு சொல்றாங்களே.. அப்ப அதை என்னப்பன்றது  :-)
>
> ஏற்கன்வே இருக்குற வார்த்தையோட அர்த்தத்தை மாத்தி ஏன் குழப்பணும் ?

Not really.

Look at this Tevaram:
வீங்கினார் மும்மதிலும் வில்வரையால் வெந்தவிய
வாங்கினார் வானவர்கள் வந்திறைஞ்சுந் தொல்கோயில்
பாங்கினார் நான்மறையோ டாறங்கம் பலகலைகள்
தாங்கினார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.

tAGku- "to bear". That can happen in a physical or abstract (mental,
non-physical) sense.

tAGkal = "influence" uses the Tamil verb, tAGku- in the abstract
sense.

Look at Tevaram verse: Aakkuur citizens "4 maRaiyOTu 6 aGkam pala
kalaikaL tAGkinAr"
- here, people are bearing in mind vedas etc.,

NG


வேந்தன் அரசு

unread,
Nov 10, 2009, 9:19:51 PM11/10/09
to tamil...@googlegroups.com


5 நவம்பர், 2009 7:34 am அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:


ஏத்து-:ஏந்து- போன்ற தொடர்புடைய வினைச்சொற்கள் தாக்கு-:தாங்கு-

The one who attacks = தாக்குபவன்
The one who gets attacked = தாங்குபவன்.


So, for a thing to be influenced by something else
we can employ verbs - vayappaTal, Entutal, taaGgutal etc.,

சற்றே வேறுபடுத்திக் காட்ட,
தாக்கம் = impact
தாங்கல் = influence
என்று கொண்டால் மொழிபெயர்ப்புகளில் துல்லியம் மிகும்.
(இல்லையெனில், இராமகி குறிப்பிடுவதுபோல்,
ப்ராஜக்ட், ப்லான், .... எதுவானாலும் “திட்டம்”
என்பதுபோல் ஆகிவிடும்).

வாக்கு = வளைவு
வாங்கு- = வளைதல்


வாங்கு எனில் பின் வாங்கு என்ற பொருளும் உண்டு

”விட்டு விட்டு வாங்குதலால்” காள மேகம் சுண்ணாம்பு குப்பியில் சுண்ணாம்பை விரலால் தொட்டி எடுப்பதை பாடுவார்


தாக்கம் எனில் affect
effect ஒரு சொல் தேவை
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”

N. Ganesan

unread,
Nov 10, 2009, 9:26:29 PM11/10/09
to தமிழ் மன்றம்

On Nov 10, 8:19 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> effect ஒரு சொல் தேவை

effect = விளைவு.

உ-ம்: ராமன் விளைவு.


சி வி ராமன் நினைவில் , பேரா. பசுபதி முன்பு எழுதிய ஒரு சிறு கவிதை;
======

ராமன் விளைவு

பசுபதி

பார்புகழ் நோபல் பரிசுவென்று, பாரதத்தில்
பேர்பெற்ற ராமனது பேச்சில் நகையிழையும்.

விருந்துக்குச் சென்றிருந்தார் விஞ்ஞானி ஓர்நாள்;
அருந்தவோர் அரியமது அளித்தனர் யாவர்க்கும்.

மதுக்கிண்ணம் பார்த்ததுமே மறுத்துவிட்டார் ராமன் !
'இதற்கென்ன காரணம்?' என்றவர்க்(கு) உரைத்தார்:

"ராமன்விளை வைஸோம ரசத்தில் ஆயலாம்;
ஸோமரசம் செய்விளைவை ராமனிடம் அன்று!"

ராமன் விளைவு= Raman Effect
=====

நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
Nov 10, 2009, 9:36:09 PM11/10/09
to tamil...@googlegroups.com


10 நவம்பர், 2009 9:26 pm அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:


On Nov 10, 8:19 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> effect ஒரு சொல் தேவை

effect = விளைவு.

உ-ம்: ராமன் விளைவு.


சரியாக இல்லை

விளைவு எனில் ரிசல்ட்

ராமன் வினை என்றால் ஒருகால் பொருந்தலாம்
 

N. Ganesan

unread,
Nov 10, 2009, 9:54:45 PM11/10/09
to தமிழ் மன்றம்

On Nov 10, 8:36 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
>> ராமன் வினை என்றால் ஒருகால் பொருந்தலாம்
>

Raman action.

N. Ganesan

unread,
Nov 10, 2009, 10:06:32 PM11/10/09
to தமிழ் மன்றம்

On Nov 10, 8:36 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> விளைவு எனில் ரிசல்ட்
>

result = முடிவு, பலிப்பு

C.R. Selvakumar

unread,
Nov 10, 2009, 10:33:34 PM11/10/09
to tamil...@googlegroups.com
ஒரு முதல்வினையால் (cause)  ஏற்படும் வழி வினை (விளைவு)
விளைவு எனலாம் அல்லவா? result, effect, product என்பன இங்கு ஒரு பொருள் தருவனதானே. இராமன் விளைவு என்பது இராமன் நிகழ்விளைவு. அல்லது ஒரு புதிதாகக் கண்டுபிடித்த நிகழ்வினை.
இங்கே வினை என்பதே விளைவு என்னும் பொருள் கொண்டதே.
 
செல்வா

2009/11/10 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Nov 11, 2009, 8:19:23 AM11/11/09
to tamil...@googlegroups.com


10 நவம்பர், 2009 10:06 pm அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:



On Nov 10, 8:36 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> விளைவு எனில் ரிசல்ட்
>

result = முடிவு, பலிப்பு

முடிவு = இறுதி, டிசிசன்

result =ஈவு

வேந்தன் அரசு

unread,
Nov 11, 2009, 8:20:18 AM11/11/09
to tamil...@googlegroups.com


10 நவம்பர், 2009 10:33 pm அன்று, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> எழுதியது:

ஒரு முதல்வினையால் (cause)  ஏற்படும் வழி வினை (விளைவு)
விளைவு எனலாம் அல்லவா? result, effect, product என்பன இங்கு ஒரு பொருள் தருவனதானே. இராமன் விளைவு என்பது இராமன் நிகழ்விளைவு. அல்லது ஒரு புதிதாகக் கண்டுபிடித்த நிகழ்வினை.
இங்கே வினை என்பதே விளைவு என்னும் பொருள் கொண்டதே.

செய்வினை வைக்கிறார்களே எதுக்கு?
Reply all
Reply to author
Forward
0 new messages