துருக்கித் தமிழ் (Turkish and Tamil?) ...

62 views
Skip to first unread message

rajam

unread,
Sep 16, 2014, 8:23:19 PM9/16/14
to tamil...@googlegroups.com, vall...@googlegroups.com, minT...@googlegroups.com
பொதுவாக, "இங்கேயிருந்து இது அங்கே போச்சு, அங்கேயிருந்து அது இங்கே வந்தது" என்ற மொழிச்சலசலப்பில் யான் ஈடுபடுவதில்லை. ஒரு மொழியை உருப்படியாகத் தெரிந்துகொள்வதற்கே என் வாழ்நாள் முழுவதும் தேவைப்படும் நிலையில் தவளைப்பாய்த்து ஆய்வும் வெட்டுக்கிளித்தாண்டலும் என்னைக் கவர்வதில்லை.

அப்படியாகப்பட்ட எனக்கு ... அண்மையில் ஒரு துருக்கி நண்பன் கிடைத்திருக்கிறான், பாரதியாருக்குக் கண்ணம்மா அமைந்தது போல! அவனுக்கு 5-நாட்களுக்கு முன்னரே ஓராண்டு அகவை நிறைந்தது. எங்கள் குடியிருப்பில் அவனை ஒரு சின்னஞ்சிறு வண்டியில் ஈர்த்துவரும் அம்மையாருடன் பேச்சுக்கொடுத்த போது அவர்கள் துருக்கி நாட்டவர் என்று தெரிந்தது. 

நிற்க.

குழந்தையைக் கொஞ்சவும் குழந்தையுடன் விளையாடவும் குழந்தை மொழி பேசவேணுமில்லையா. பார்த்த இரண்டாம் நாளிலேயே நம் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் அருமையைச் சொன்னேன்! 

பிறகு அவனைக் கொஞ்ச வேண்டி, துருக்கிமொழிச்சொற்கள் சிலவற்றைக் கேட்டேன். சில சொற்களிலிருந்தே அந்த மொழி தமிழைப்போலவே "ஒட்டுநிலை (agglutinative)" மொழி என்று புரியத்தொடங்கியது.

('கொஞ்சுவது,' 'செல்லம் கொண்டாடுவது' ஆகிய சொற்களை எப்படி ஆங்கிலத்தில் சொல்லலாம்? இதுக்காகவே தமிழில் கல்வி அமையவேண்டும் என்பது என் கருத்து.)

சரி.

இன்னும் சரியாகப் பேச்சு வராவிட்டாலும் அந்தக் குழந்தை எப்படித் தன் அம்மாவை அழைக்கிறான் என்று கேட்டேன். அம்மா சொன்னது என்னை அசத்திவிட்டது. 

துருக்கி மொழியில் "அன்னே" என்பது குழந்தை தாயை அழைக்கும் சொல்லாம்! உடனே ... சங்கத்தமிழ் பற்றி அளந்துவிட்டேன்! (அந்த அம்மாப்பெண் உடனே 'இல்லை இல்லை, துருக்கி மொழியில் இருந்துதான் தமிழுக்குக் கடன்' என்று வாதாடாமல் ... அமைதியாக "Well, there must have been a lot of traffic between the two cultures" என்று மட்டும் சொன்னார். நல்ல வேளை எங்கள் நட்பு தொடர்ந்தது!)

இன்று காலையில் நடைப்பயிற்சியின்போது, "grandma" என்பதை எப்படிச் சொல்வீர்கள் என்று கேட்டேன். அந்தப் பெண் சொன்னது: "அன்னெ அன்னெ" என்பது தாய்வழிப் பாட்டி; "பபா (baba அன்னெ" என்பது தந்தைவழிப் பாட்டி. 

வேறு எந்த மொழியிலாவது "அன்னெ" என்பது தாயைக் குறிக்கும் சொல்லாக வழங்குகிறதா என்று நண்பர்கள் சொல்லவும்.

அளவிலா மகிழ்ச்சியில் திளைத்து நிற்கும்,
ராஜம்

 

வேந்தன் அரசு

unread,
Sep 16, 2014, 8:36:02 PM9/16/14
to vallamai, தமிழ் மன்றம், மின்தமிழ்
அதுமட்டுமல்ல அன்னாய் என செவிலித்தாய்க்கும் பேர் இருக்கும். வினவிப்பாருங்கள்

16 செப்டம்பர், 2014 8:23 பிற்பகல் அன்று, rajam <ra...@earthlink.net> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

bala subramani

unread,
Sep 17, 2014, 3:43:23 AM9/17/14
to tamil...@googlegroups.com
ஆஸ்திரேலியா நாட்டின் மைய பகுதிகளில் வாழ்பவர்கள் தாயை அஞ்ஞா என்றும் சற்று மைய  பகுதியல் இருந்து வெளியே   உள்ளவர்கள் ஆயி என்று அம்மாவையும் ,அதற்க்கு சற்று வெளியே உள்ளவர்கள் ஆத்தா  என்றும் கடற்கரையை ஒட்டி வாழ்பவர்கள் அம்மா என்றும் வழங்கப் படுவதை என் கடல் மக்களின் புலம் பெயர்ந்த வரலாற்று  ஆய்வுகளில் தெரிந்து கொண்டேன் 

நமது பகுதிகளில் இருந்து அந்த மக்கள் இடம் பெயர்ந்தார்கள் என்பதை இன்றும் மருத நில மக்களாக உள்ள மென் புல மக்களான பள்ளர்கள் அல்லது மள்ளர்கள் என்கின்ற உழுகுடிகளின் மரபு கிளைகளில்  அஞ்ஞா, ஆயி ஆத்தா அம்மா என்கின்ற பள்ளர்கள் இருப்பதை நாம் காணலாம் 

என் ஆய்வுகளில் தமிழ் உழு முது குடிகளான பள்ளர்கள் இந்த மண்ணின் மைந்தர்களாக  தான் இருந்து உள்ளார்கள் என்பதை உறுதி செய்து கொண்டேன்  

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.

bala subramani

unread,
Sep 17, 2014, 3:43:43 AM9/17/14
to tamil...@googlegroups.com
ஆஸ்திரேலியா நாட்டின் மைய பகுதிகளில் வாழ்பவர்கள் தாயை அஞ்ஞா என்றும் சற்று மைய  பகுதியல் இருந்து வெளியே   உள்ளவர்கள் ஆயி என்று அம்மாவையும் ,அதற்க்கு சற்று வெளியே உள்ளவர்கள் ஆத்தா  என்றும் கடற்கரையை ஒட்டி வாழ்பவர்கள் அம்மா என்றும் வழங்கப் படுவதை என் கடல் மக்களின் புலம் பெயர்ந்த வரலாற்று  ஆய்வுகளில் தெரிந்து கொண்டேன் 

நமது பகுதிகளில் இருந்து அந்த மக்கள் இடம் பெயர்ந்தார்கள் என்பதை இன்றும் மருத நில மக்களாக உள்ள மென் புல மக்களான பள்ளர்கள் அல்லது மள்ளர்கள் என்கின்ற உழுகுடிகளின் மரபு கிளைகளில்  அஞ்ஞா, ஆயி ஆத்தா அம்மா என்கின்ற பள்ளர்கள் இருப்பதை நாம் காணலாம் 

என் ஆய்வுகளில் தமிழ் உழு முது குடிகளான பள்ளர்கள் இந்த மண்ணின் மைந்தர்களாக  தான் இருந்து உள்ளார்கள் என்பதை உறுதி செய்து கொண்டேன்  
2014-09-17 5:53 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:

--

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Sep 17, 2014, 4:37:42 AM9/17/14
to tamilmanram kuzhu
அம்மையாரின் தகவல் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. மழலையுடன் கொஞ்சி மேலும் பல ஒற்றுமைகளைக் காணவும். 

ஆசுதிரேலியப் பழங்குடியினர் பேச்சில் தமிழ்ச்சொற்கள் பெரும்பான்மை  காணப்படுவதாக நான் படித்துள்ளேன். பாலாவிற்கும் நன்றி.
--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

iraamaki

unread,
Sep 17, 2014, 5:23:26 AM9/17/14
to tamil...@googlegroups.com
முடிந்தால் ”உறவுகள்” என்ற இக்கட்டுரையைப் படியுங்கள்.
 
 
அன்புடன்,
இராம.கி.

rajam

unread,
Sep 17, 2014, 11:46:32 AM9/17/14
to mint...@googlegroups.com, tamil...@googlegroups.com, vall...@googlegroups.com, minT...@googlegroups.com
என் அடிப்படைக் கேள்வி: 

///வேறு எந்த மொழியிலாவது "அன்னெ" என்பது தாயைக் குறிக்கும் சொல்லாக வழங்குகிறதா என்று நண்பர்கள் சொல்லவும்.///

துல்லியமான மறுமொழி சொன்னவர்கள், தொடர்பான செய்திகளைக் கொடுத்தவர்கள் அனைவர்க்கும் மிக்க நன்றி! 

கூடுதல் செய்திக்கு இங்கே பார்க்கலாம்: 

இங்கே Dr. Baldi என்பவர் சொன்னது என்னை ஈர்த்தது:

"The Hittites used the word 'Annas,' which has a different Indo-European root, cognate with the Latin word 'Annus,' which means old woman," ... "

இந்தக் கூற்றை ஏற்றுக்கொள்ள விரும்பாத இன்னொருவர் சொன்னது:
"Old woman? And Happy Mother's Day to you, Dr. Baldi."

"At any rate, the Hittites -- an ancient race that lived near what today is Turkey -- are long gone, but "Moder" and "Mutter" are still with us, and babies are still making what Dr. Baldi calls "an articulatory extension of the sucking impulse, a nasal consonant, in which the air flows through the nasal passage ... and the lips come together."

இப்படித்தான் பல்கலைக்கழகங்களில் விவாதம் நடக்கும். 

அது கிடக்க.

++++++++++++++++++ 

1. சங்க இலக்கியத்தில் "அன்னை," "அன்னாய்" என்ற சொற்களுக்கும் "அஞ்ஞை" என்ற சொல்லுக்கும் பொருள் வேறுபாடு உண்டு. முன்னவை (அன்னை, அன்னாய்) பெற்ற தாய் + செவிலியரைக் குறிக்கும். பின்னது (அஞ்ஞை), தாய் மகளைக் குறிக்கப் பயன்படுத்தும் சொல். சான்று வேண்டின் ... உங்கள் கைவிரலில் சிக்கிய இணையத்தில் தேடுங்கள் கிடைக்கும். 

2. டாக்டர் நாகராசன் ஐயா, இனி மறந்தும் என்னை, "பேராசிரியர் பேராசிரியை பேராசான் பேராசிரியம்மா" என்று குறிப்பிட்டுவிட வேண்டாம்! ;-) எனக்குப் "பேராசிரியை" என்ற title இல்லாததால் என்னை மட்டம் தட்டிப் பேச என்றே இங்கே சிலர் இருக்கிறார்கள், அவுங்களுக்கு 'ஹார்ட் அட்டாக்' வந்துவிடலாம்! கவனமா இருங்க! ;-)

3. தேமொழீ, நீவிர் சொன்னது, "ராஜம் அம்மா போனால் போகிறது என்று கொஞ்சம் இந்தப் பக்கம்  தலை காட்டுகிறார்கள்... அவர்கள் இழையில் அவர்களை வெப்பேற்றாமல் அன்னையோடு  மட்டும் நிறுத்திக் கொள்ளலாம்." என்பது நும் விவேகத்தைக் காட்டுகிறது! நன்றி. டாக்டர் நாகராசன் அவர்களின் பதிலைப் ("போட்டுக்குடுக்குறீங்களே") புறக்கணித்துவிட்டேன். துயரமில்லை.

ஆனாலும் ... 'வெறுப்பு' என்ற உணர்ச்சியை என்மேல் ஏற்றிச்சொல்லத் தேவையில்லை! சிறுமை கண்டு பொங்குவேனே தவிர, கண்டதுக்கும் என் உணர்ச்சியை வீணாக்கமாட்டேன். ;-)

4. கணேசன், ஹரிக்கு மலைபடுகடாம் குறிப்பை அனுப்ப நினைத்திருந்தேன். 3/2-மணி முந்திய உங்களூர் நேரம் என் வாய்ப்பை எடுத்துக்கொண்டது! எனினும், நன்றி!

5. திரு திருவள்ளுவன் இலக்குவனார் அவர்களே .. என் மழலை நண்பனிடம் கொஞ்சிக் குலவுவதின் மூலம் துருக்கி-தமிழ் ஒற்றுமைகளைக் காண முயல்வேன். நன்றி.

+++++++++++++++++

இப்படிக்கு,
ராஜம்

rajam

unread,
Oct 3, 2014, 6:38:44 PM10/3/14
to tamil...@googlegroups.com, vall...@googlegroups.com, minT...@googlegroups.com
///அம்மையாரின் தகவல் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. மழலையுடன் கொஞ்சி மேலும் பல ஒற்றுமைகளைக் காணவும். ///

கண்டேன் இன்றோர் ஒற்றுமையை! கொஞ்சி மகிழ்ந்தேன் எப்பவும்-போல்!

என் மழலை நண்பன் ஒன்றும் பேசா நிலையிலிருந்து படிப்படியாகக் கிளர்ந்தெழுந்து பலவகை நாவொலிகளை எழுப்பி அவன் அன்னை சொல்லும் சொற்களுக்கு எதிரொலி எழுப்பும் நிலையை அடைந்திருக்கிறான். என்னைப்போலும் வழிப்போக்கரின் நாவொலிக்கும் கைதட்டல் போன்ற பிற ஒலிக்கும் பிற சூழலுக்கும் எதிரொலி தருகிறான் என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஒவ்வொரு தனி ஒலியிலிருந்தும் தொடராக ஒலிகளை வெளிப்படுத்துகிறான். 

இன்று யான் அறிந்தது -- நிலவைப் பார்த்து அவன் கைவிரல் சுட்டுகிறானாம். நிலவுக்குத் துருக்கி மொழியில் என்ன சொல் என்று கேட்டேன். அன்னை சொன்னது "ஐ (ay)." சட்டென என் நினைவுக்கு வந்தவை குறுந்தொகைப் பாடல் 307-இன் முதல் மூன்று வரிகள்:

"வளையுடைத்(து) அனைய(து) ஆகி-ப் பலர் தொழ-ச்
செவ்வாய் வானத்து ஐ-எனத் தோன்றி
இன்னம் பிறந்தது பிறையே, அன்னோ!"

செவ்வாய்க் கோளின் இருப்பு, ஐ-எனத் தோன்றும் பிறை ... இதெல்லாம் புறக்கணிக்கக்கூடிய குறிப்புகளா! 

வேந்தன் அரசு

unread,
Oct 4, 2014, 11:08:59 AM10/4/14
to vallamai, தமிழ் மன்றம், மின்தமிழ்


3 அக்டோபர், 2014 6:38 பிற்பகல் அன்று, rajam <ra...@earthlink.net> எழுதியது:

///அம்மையாரின் தகவல் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. மழலையுடன் கொஞ்சி மேலும் பல ஒற்றுமைகளைக் காணவும். ///

கண்டேன் இன்றோர் ஒற்றுமையை! கொஞ்சி மகிழ்ந்தேன் எப்பவும்-போல்!

என் மழலை நண்பன் ஒன்றும் பேசா நிலையிலிருந்து படிப்படியாகக் கிளர்ந்தெழுந்து பலவகை நாவொலிகளை எழுப்பி அவன் அன்னை சொல்லும் சொற்களுக்கு எதிரொலி எழுப்பும் நிலையை அடைந்திருக்கிறான். என்னைப்போலும் வழிப்போக்கரின் நாவொலிக்கும் கைதட்டல் போன்ற பிற ஒலிக்கும் பிற சூழலுக்கும் எதிரொலி தருகிறான் என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஒவ்வொரு தனி ஒலியிலிருந்தும் தொடராக ஒலிகளை வெளிப்படுத்துகிறான். 

இன்று யான் அறிந்தது -- நிலவைப் பார்த்து அவன் கைவிரல் சுட்டுகிறானாம். நிலவுக்குத் துருக்கி மொழியில் என்ன சொல் என்று கேட்டேன். அன்னை சொன்னது "ஐ (ay)." சட்டென என் நினைவுக்கு வந்தவை குறுந்தொகைப் பாடல் 307-இன் முதல் மூன்று வரிகள்:

"வளையுடைத்(து) அனைய(து) ஆகி-ப் பலர் தொழ-ச்
செவ்வாய் வானத்து ஐ-எனத் தோன்றி
இன்னம் பிறந்தது பிறையே, அன்னோ!"

செவ்வாய்க் கோளின் இருப்பு, ஐ-எனத் தோன்றும் பிறை ... இதெல்லாம் புறக்கணிக்கக்கூடிய குறிப்புகளா! 


செவ்வாய் வானம்:  பிறை மேற்குவானில் மலை நேரம் தோன்றுவதால் வானம் செந்நிறமாக இருக்கும் அதனால் செவ்வாய் வானம்.

ஐ, பிறை இரண்டும் ஒரே பொருளில் இருக்குமா என்பது எனக்கு ஐயம்

rajam

unread,
Oct 6, 2014, 8:32:36 PM10/6/14
to tamil...@googlegroups.com, vallamai, மின்தமிழ்
///
செவ்வாய் வானம்:  பிறை மேற்குவானில் மலை நேரம் தோன்றுவதால் வானம் செந்நிறமாக இருக்கும் அதனால் செவ்வாய் வானம்.

ஐ, பிறை இரண்டும் ஒரே பொருளில் இருக்குமா என்பது எனக்கு ஐயம்
-- 
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

/// 

சிந்திப்போம், வேந்தே. 

1. “செவ்வானம்” என்று கவியரசர் கண்ணதாசன் சொன்னதுபோல் சொல்லாமல் “செவ்வாய் வானம்” என்று சொன்னது ஏன் என்று நினைக்கத் தோன்றுகிறது.

2. ஐ, பிறை இரண்டும் ஒரே பொருளில் இருக்குமா என்ற நும் ஐயம் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்.

3. சங்க இலக்கியத்தில் இன்னொரு முக்கியமான பாடல் இருக்கு. அதை இப்போது சொல்ல மாட்டேன், ஆர்வலர்கள் தேடட்டுமே! ;-)

++++++++++++++ 

இன்று (10/6/2014) என் மழலை நண்பனைப் பார்த்த போது அன்னெயிடம் கேட்டேன். 

“ஐ” என்பது நிலவு என்ற பொருளுக்குப் (moon) பொதுப் பெயர் என்றும், பிறை நிலவுக்கும் (crescent moon) பின் வரும் நிலவுக்கும் (gibbus) தொகைச்சொற்கள் உண்டு என்றும் அவை யாவும் “ஐ” என்பதை ஒரு பகுதியாகக் கொண்டவை என்றும் தெரிந்துகொண்டேன். 

முழுத் தொகைச் சொற்களையும் அன்னெயும் வழிப்போக்கியாகிய யானும் உரையாடிப் புரிந்துகொள்வதற்குள் என் மழலை நண்பனுக்குப் பொறுமை குறைந்துவிட்டது! ஆனாலும் ‘நாளொரு மேனி பொழுதொரு வண்ணம்’ என்பதை இந்தப் பயல் என்னமாய் உண்மைப்படுத்தி வருகிறான்! இரண்டு மூன்று நாட்கள் பார்க்காவிட்டால் அதற்குள் ஒரு புது மாற்றம்! அருமை அருமை!

இப்போது அவன் 'செங்கீரைப் பருவத்தில்’ இருப்பானோ? அவனுடைய சாய்ந்த தள்ளுவண்டியிலேயே சப்பாணி கொட்டுகிறான், நான் காட்டும் அசைவுகளையெல்லாம் செய்கிறான். பொருளற்ற ஒலிகளை நான் எழுப்பினால் அவனும் அதைப்போலவே ஒலிக்க முயல்கிறான். 

பிள்ளைத்தமிழ் பாடிய நம் தமிழ் மரபு எவ்வளவு இனிமையானது, சிறப்பானது என்று எவ்வளவு பேருக்குத் தெரியும்?

++++++++++++++ 

இன்று கேட்டுத் தெரிந்துகொண்ட புதுச்சொல்: ‘மமம்' போன்று ஒலிக்கும் சொல். 
பொருள்: ‘குழந்தைக்காகக் குழைக்கப்பட்ட சோறு.’ 

அந்தச் சொல்லின் முழு வீச்சையும் கேட்டுத் தெரிந்துகொள்வதற்குள் பபா (தந்தை) வந்துவிட்டார், எங்களைத் தேடி! பிள்ளை பபாவை நோக்கித் தாவ, அன்னெயும் யானும் மெதுநடை போட்டு அவரவர் வழியைத் தொடர்ந்தோம்.

++++++++++++++ 

இதுவரை பார்த்ததும் கேட்டுத் தெரிந்துகொண்டதும்: “ஃக்” போன்ற பின்னண்ண ஒலிகளும், “ப, ம” போன்ற இதழொலிகளும், “ட்த்” போன்ற பல்லிதழ் ஒலிகளும் அவன் வாயிலிருந்து இடையறாது சொரியும் மழலைக்கு இடையில் வழிகின்றன. நான் “ட்ற்” போன்ற ஒலிகளை எழுப்பி விளையாட்டுக் காட்டினால் அதைச் சொல்ல முயல்கிறான்! இன்னும் இடைநாவொலிகளான “ன், ண், ழ், ள்” போன்றவற்றைப் பழகவில்லை. 

சிற்சில பற்களே முளை காட்டுகின்றன. 

இன்னும் கேட்டுத் தெரிந்துகொள்ள ஆவல். ஆனால் என் மொழியார்வம் எங்கள் நட்பைக் குலைத்துவிடக்கூடாதே என்ற கவலை; அதனால் மெல்ல மெல்லப் போகிறேன்! ;-)

++++++++++++++ 

இப்படிக்கு,
ராஜம்
-- 

iraamaki

unread,
Oct 6, 2014, 8:55:26 PM10/6/14
to tamil...@googlegroups.com
இன்று கேட்டுத் தெரிந்துகொண்ட புதுச்சொல்: ‘மமம்' போன்று ஒலிக்கும் சொல்.
பொருள்: ‘குழந்தைக்காகக் குழைக்கப்பட்ட சோறு.’
 
என்பதைப் படித்தபின்னால் தாயின் முலைப்பாலுக்கும் (அம்மம் உண்ணத் துயிலெழாயோ? – நாலாயிரப் பனுவல் பெரியாழ்வார் 2.2:1) , குழந்தைக்குக் கொடுக்கும் சோறுக்கும் (சாமிநாதர் அகராதி) ஆன அம்மம் என்ற தமிழ்ச்சொல் நினைவிற்கு வந்தது. அம்மம் பேச்சுவழக்கில் மம்மம் என்றுமாகும்.
 
உங்கள் நண்பனோடு துருக்கிமொழி கற்றுக்கொள்ளுங்கள். அவ்வப்போது இங்குஞ் சொல்லுங்கள். சுவையாரமான செய்திகள்.
 
அன்புடன்,
இராம.கி.
 

வேந்தன் அரசு

unread,
Oct 6, 2014, 9:32:38 PM10/6/14
to vallamai, தமிழ் மன்றம், மின்தமிழ்


6 அக்டோபர், 2014 8:32 பிற்பகல் அன்று, rajam <ra...@earthlink.net> எழுதியது:

///
செவ்வாய் வானம்:  பிறை மேற்குவானில் மலை நேரம் தோன்றுவதால் வானம் செந்நிறமாக இருக்கும் அதனால் செவ்வாய் வானம்.

ஐ, பிறை இரண்டும் ஒரே பொருளில் இருக்குமா என்பது எனக்கு ஐயம்
-- 
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

/// 

சிந்திப்போம், வேந்தே. 

1. “செவ்வானம்” என்று கவியரசர் கண்ணதாசன் சொன்னதுபோல் சொல்லாமல் “செவ்வாய் வானம்” என்று சொன்னது ஏன் என்று நினைக்கத் தோன்றுகிறது.

2. ஐ, பிறை இரண்டும் ஒரே பொருளில் இருக்குமா என்ற நும் ஐயம் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்.


ஐ-எனத் தோன்றி"  வேறொரு ஒருபொருளைபோல் தோன்றி எனகொண்டால் அது என்னபொருளோ!! 

rajam

unread,
Apr 2, 2016, 2:27:57 PM4/2/16
to வல்லமை, tamil...@googlegroups.com
இந்த இழையில் பதிவிட்டு நெடுநாளாயிற்று. 

என் துருக்கி நண்பனுக்கு இப்போது அகவை 2 1/2. பல்முளைக்கக் கொஞ்சம் காலத்தாழ்ச்சி. இப்போது வாய்நிறைய நல்ல பல்வரிசை. அண்மையில் ... கீழே விழுந்து ஒரு பல் உடைந்துபோச்சு, பாவம். ஆனால், அந்தக் குறை அறியாமலே காந்திப்புன்னகை! உடல்கொள்ளாத் துறுதுறுப்பு. 

என்பக்க வெற்றி: என்னைப் "பாட்டி" என்று குறிப்பிடச் சொல்லி அவன் அன்னையிடம் வேண்டி, அந்த அம்மையாரும் அதை அவனுக்குக் கற்றுக்கொடுத்து அவன் என்னைப் "பாட்டி" என்று விளித்தது! அப்படியே உடலும் உள்ளமும் பூரித்துப்போனேன்!!

இப்போதெல்லாம் எங்கள் வீட்டைக் கடந்துபோகும்போது அவன் அன்னை துருக்கிமொழியில் "பாட்டி வீட்டுக்குப் போகலாமா?" என்று கேட்டால் 'வேண்டாம்' என்று தலையசைக்கும் பிள்ளை, வீட்டு வாசலில் என்னைப் பார்த்ததும் தெருவின் அடுத்த பகுதியிலிருந்து என்னிடம் ஓடிவருகிறான்! சிறிது விளையாடிவிட்டு வீட்டுக்கோ, மணற்பூங்காவுக்கோ (sand park) புறப்படும்போது ... "பை பை ராஜம் பாட்டி" என்று மிக அழகாகச் சொல்கிறான்!

சிலநாள் முன்பு ... வீட்டுக்குள்ளே வந்து அவனுக்காக நான் வைத்திருக்கும் விளையாட்டு வாளியில் உள்ள பொருள்களை எடுத்து அங்குமிங்கும் சிதறி விளையாடிக்கொண்டிருந்தபோது ... திடீரென்று "முட்ட" என்ற சொல்லைக் கேட்டேன். அது என்ன அன்று அவன் அன்னையிடம் கேட்டபோது சொன்னார்கள், "அவன் pancake செய்கிறானாம். அதற்காக முட்டையைக் க்லக்குகிறான்." அசந்துபோனேன். 

பிறகு தொடர்ந்து பேசியதில் ... துருக்கி மொழியில் yumurta என்பது முட்டையைக் குறிக்கும் என்று தெரிந்துகொண்டேன்! 

எனக்கு முட்டைகளைப் பற்றி ரொம்பத்தெரியாது. ஆனால், கூமுட்டை என்ற வசவுச்சொல்லைக் கேள்விப்பட்டிருக்கிறேன். இதுதான் மக்கள் உண்ணும் 'மலட்டு முட்டை'யோ என்றும் தெரியாது. ஆனால், yumurta என்பதுக்கும் கூமுட்டை என்பதுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக உணர்கிறேன்.

தமிழின் வளைநாவொலியான "ட"கரம் துருக்கியில் "rt" என்று எழுதப்பட்டிருக்கலாமோ? அமெரிக்க-ஆங்கிலத்திலும் barn, girl, pearl என்ற சொற்களில் உள்ள "n" "l" ஆகியவை வளைநாவொலிகள்-போல ஒலிப்பதுக்கு அந்த "r" என்ற முன்னொலிப்பே காரணம்.

iraamaki

unread,
Apr 5, 2016, 9:39:29 PM4/5/16
to tamil...@googlegroups.com, tamil_...@googlegroups.com, thami...@googlegroups.com
அன்பிற்குரிய இராசம் அம்மா,
 
பாட்டியென உங்கள் மழலை நண்பனைக் கூப்பிடவைத்ததற்கும், அவன்மூலம் தெரிந்துகொண்ட துருக்கித்தமிழை எங்களுக்கு உரைத்ததற்கும் மகிழ்ச்சி.
 
துருக்கிமொழியில் yumurta என்பது முட்டையைக் குறிக்குமெனச் சொல்லி, கூமுட்டையோடு தொடர்புறுத்தினீர்கள். அப்படியெனக்குத் தோன்றவில்லை. சில மாற்றுக்கருத்துக்களைச் சொல்லவிழைந்து, முதலில் முட்டை, கூழ்முட்டை பற்றிச் சொல்கிறேன்.
 
முட்டை ஓட்டிற்குள் மஞ்சளும், வெள்ளையுமான 2 கருக்களுமே பாகுமை (viscosity) மிகுந்த, ஒன்றிற்கொன்று கலவாத, நீர்மங்களாகும் (liquids). (மண்ணெண்ணெய் தண்ணீரின் மேல் மிதப்பதை இங்கு எண்ணிப்பாருங்கள்.) தவிர, வெள்ளைக்கருவை ஓட்டோடு ஒட்டாதுபிரிக்கும் ஒரு படலமும் (membrane) உண்டு. கோழி முட்டையிடும்போது மஞ்சள்கரு மீச்சிறிதாயும், வெள்ளைக்கரு பெரிதாயும் இருக்கும். அடைகாக்கும்போது, தாய்க்கோழி தரும் வெம்மையைக் கொண்டு வேதிப்பொருள்களை வெள்ளைக்கருவிலிருந்து எடுத்துக்கொண்டு மஞ்சள்கரு வளர்கிறது. பனிக்குடம் போலிருக்கும் வெள்ளைக்கரு நாளடைவிற் குறைந்து, மஞ்சள்கரு பெரிதாகி, உறுப்புகள் வளர்ந்து உருவெடுத்து குஞ்சுபொரிக்கும் நேரத்தில் முட்டையுடைகிறது.
 
முட்டைகளைக் கிடங்கிற்காக்கையில் குலுக்கலின்றி, சற்றுகுளிரோடு முட்டைகளை வைப்பது தேவையாகும். ஒருவேளை தவிர்க்கமுடியாத தீவிரக்குலுக்கலும், சற்று வெதுப்பும் வாய்த்துவிட்டால், மஞ்சள், வெள்ளைக் கருக்கள் தனித்தனி நீர்மங்களாயின்றி ஒன்று இன்னொன்றோடு கலங்கி விரவி முட்டை கெட்டுவிடும். அப்படிக் கலங்கித்தங்கிய முட்டைகள் சரியாகப் பொரிக்கா. தேவையில்லா வேதிவினைகளால் சாப்பிடவுஞ் சுவைக்கா.  உடம்பிற்கும் கெடுதல் விளையும். ”எவ்வளவுநேரம் கலங்கிய தன்மை இருந்தது?” என்பதே அப்போது முகனக்கேள்வியாகும். அத்தகையவற்றை கூழ்முட்டைகள் என்பார். கூழ்தல் = கலங்குதல் (to emusify). இதுவே பேச்சுவழக்கில் கூமுட்டையாகும். கலங்கிய மதியாளனையும் கூமுட்டையென்று வழக்கிற் சொல்வதுண்டு. இது வசவுப்பேச்சில் வெளிப்படும்.  
 
சிலபோது செயற்கையாகவும் முட்டையுள்ளீட்டால் கூழ்மத்தை (emulsion) உருவாக்குவோம். ஆனாற் சிறிதுந் தேங்கவிடாது, சுட்டோ, வேகவோ, (கிளறியோ, கிளறாமலோ) பொரிக்கவோ செய்வோம். காட்டாக, ஓர் ஏனத்தில் முட்டைக்கருக்களையிட்டு [தேவைப்பட்டால் வெங்காயம், தக்காளி, குருக்கிழங்கு (carrot), மிளகாய், கொஞ்சம் உப்பு போன்றவற்றையிட்டுச்] சிறுகரண்டியால் கலக்கி (ஏனத்தில் 2 கருக்களும் ஒன்றோடொன்று மயங்குவதைக் காணலாம்.) கலவையை தோசைத்தட்டில் வார்த்து முட்டைத்தோசையாய்ப் (omelet) சுடுகிறோமே? இது தோசைவார்க்குமுன் செயற்கையிற் செய்வதாகும்.  (கலக்காமலும் முட்டைத்தோசை செய்யலாம். அதை omlet என்று சொல்லமாட்டார்.
 
முற்றிலுங் ’கொற்றிய முட்டை (scrambled egg; கொற்றுதல்>கொத்துதல்; கொத்துப் பரோட்டா போன்றது ஆனால் இது உதிரியாய் விழுதுபோலிருக்கும். சாப்பிடச் சுவையானது. நம்மூரில் அவ்வளவு விரும்பமாட்டார். மேலையர் விரும்புவார்.)’ செய்யும்போதும் மிகவேகமாய்க் கலக்கி முற்றுமுழுதாய்க் கூழ்மமாக்குவோம். கலக்கமில்லாது தட்டில்வார்த்து, வெள்ளைக்கருவை மட்டும் அரைவேக்காட்டிற் சுடவைத்து, மஞ்சள்கருவை பாதி நீர்மமாயிருக்கும் படியே தோசைத்தட்டிலிருந்து எடுத்தால் அதற்கு அரைவேக்காட்டு முட்டை (half-boiled egg) என்றுபெயர். அடுத்து, ஏனத்தில் நீரிட்டுக் கொதிக்க வைத்து அதில் முட்டையை வேகவைத்தால் ’கொதி முட்டை (boiled egg)’ கிடைக்கும். முட்டைச் செய்மங்களில் இன்னும் பல்வேறு வகைகளுண்டு. 
 
இனிக் கோழிபற்றி வருவோம். தமிழில் இச்சொல் கிண்டும், கிளறும் பொருளில் எழுந்தது. (குள்>கொழு>கோழி = நிலத்தையும் குப்பையையும் கிளைத்துப் புழுவைத்தேடும் பறவை. கொழு = நிலத்தைக் உழும் காறு. கொழு>கொழுதுதல்>கோதுதல் = மயிர் குடைதல்; குள்>கிள்>கிளர்>கிளறு. இப்பொருளில் ஏராளஞ் சொற்களிருக்கின்றன.) இதுபோகப் புள்ளென்ற பொதுப் பறவைச் சொல்லும் விதப்பாகக் கோழியைக் குறிக்கும். எல்லாப்பறவைகளும் இரைதேடும்போது புள்ளிக் (குத்திக்) கொண்டிருப்பதால் பறவைகளுக்குப் புள்ளென்றசொல் வந்தது. இச்சொல்லிற்கு இணையாக இந்தையிரோப்பிய மொழிகளில் fowl என்பது காட்சியளிக்கும். Old English fugel "bird, feathered vertebrate," from Proto-Germanic *fuglaz, the general Germanic word for "bird" (cognates: Old Saxon fugal, Old Frisian fugel, Old Norse fugl, Middle Dutch voghel, Dutch vogel, German vogel, Gothic fugls "a fowl, a bird"), perhaps a dissimilated form meaning literally "flyer," from PIE *pleuk- (see fly (v.1)).
 
ஆங்கிலத்தில் இச்சொல்லைப் போக்கடித்த bird என்ற சொல் தமிழின் பறதைக்கு இணையானது. [பறவெனும் வினை, சிறகுகள் அடித்துக்கொண்டெழும் படபட/பறபற/பதபத ஒலிக்குறிப்பில் உருவான சொல்லாகும். (பார்க்க என் ”இறைவன்” கட்டுரை.) பறப்பது பறவை. பற+வ்+ஐ என்பதில் வரும் வ் உடம்படுமெய்க்கு மாறாக த் எனுஞ் சாரியை வந்தால் பற+த்+ஐ என்றாகிப் பறவை, பறதையாகும். இம்முடிப்பு இற்றைத்தமிழில் வழக்கில்லை. பறவைக்கிணையாய் இன்னொரு ஈற்றால் பறனையென்ற சொல்லை அட்லாண்டா சந்திரசேகரன் உருவாக்கினார். இப்பொழுதெல்லாம் அதையே வானூர்திக்கு (plane) மாற்றாகப் பயன்படுத்துகிறேன். பகுபகு என்ற படபடப்பொலியிலிருந்து உருவான பக்கியும் பறவையைக் குறிப்பதே. பாலியிலும் பாகதத்திலும் இச்சொல் அப்படியே பயிலும் சங்கதத்தில் பக்ஷி ஆகும். இதைத் தமிழில் மீண்டுங் கடன்வாங்கிப் பட்சியாக்குவோம். அதற்குப் பக்கியையே பயன்படுத்திப் போகலாம். தமிழுக்குக் கொஞ்சமாவது நெருக்கமாய் இருக்கும்.]
   
இன்றெல்லோருக்கும் பழகிய நாட்டுக்கோழி காட்டுக்கோழி/சாம்பற்கோழியிலிருந்து மாந்த இடையுற்றால் உருவானது. (சாம்பங்கோழி, சம்பங்கோழியென்றும் பேச்சுவழக்கிற் திரியும். பெரும்பாலான அகரமுதலிகள் சம்பங்கோழியையே பதிவாக்குகின்றன. பழைய நூற்றாண்டுப் புரிதல்களுக்கும் இற்றைப் புரிதல்களுக்கும் பெரும் இடைவெளியுண்டு. பல்துறை அறிஞர்களை பயன்படுத்தி உருவாகாத, அரைகுறைத் தமிழ் அகரமுதலிகளைப் பலகாலம் நான் குறைகூறி வந்திருக்கிறேன்.) இக்காட்டுக்கோழியை (ம.காட்டுக்கோழி; க.காடுகோழி; தெ. தெள்ள அடவி கோடி; து.காடுகோரி; மரா. (அ)ராண் கொம்ப்டி; கோண்டி. பர்தா கொம்ரி; இராசசுத்தானி. கொம்ரி; இந்தியில் ஜங்லி முர்கி) விலங்கியலில் Gallus sonneratii என்றும் பொதுவழக்கில் சாம்பற் காட்டுக்கோழி (grey junglefowl) என்றும் அழைப்பார். (இந்திச்சொல்லைத் தவிர மற்றவையெல்லாமே கோழியின் திரிவுகள் தான். இந்திச்சொல் <உருது<பெர்சியன் என்று விரியும். அதைக் கீழே பார்ப்போம்.)
 
’உலகமெங்கும் chicken என்று அழைக்கப்படும் கோழி’யின் மூதாதை தென்னிந்தியாவிற்கே சொந்தமென்றும் இதன் எவ்வளர்ச்சியே (evolution) மாந்தப்பரவலில் பல நாடுகளுக்கும் போனது என்றும், அறுதியாய் விலங்கியலார் சொல்வார். நம்மூர்க் குக்கன்/குக்கணம்/குக்குடம் தான் chicken க்கு இணையாகும். (குக்குடத்தைச் சிலர் அறியாது சங்கதச் சொல்லென்று சொல்வார். ’குக்குக்கெ’ன்று ஒலி யெழுப்புவதால் அப்பெயர் எழுந்தது. Old English cicen (plural cicenu) "young fowl," which by early Middle English had came to mean "young chicken," then later any chicken, from Proto-Germanic *kiukinam (cognates: Middle Dutch kiekijen, Dutch kieken, Old Norse kjuklingr, Swedish kyckling, German Küken "chicken"), from root *keuk- (echoic of the bird's sound and possibly also the root of cock (n.1)) + diminutive suffixes.)
 
கோழி பற்றிய தமிழ்ச்சொற்கள் பலவும் பல மொழிகளுக்குக் கடனாய்ப் போயிருப்பதில் வியப்பில்லை. இன்றைக்கிருக்கும் நாட்டுக்கோழிகளின் கால்களிலும் மற்ற சினையுறுப்புக்களிலும் இழையும் மஞ்சள்/பொன் நிறச் சாயலுக்கும் தமிழகத்திலிருந்த சாம்பற் காட்டுக்கோழியே காரணமாகும். சமயங்களில் இக்கோழி காட்டிலுலவும் செங் காட்டுக்கோழியோடும் (red junglefowl) கூடிக் கலப்பினங்களை உருவாக்கும். செங் காட்டுக்கோழியின் தலைக்கொண்டையும், தாடிச்சதையும் கடுஞ்சிவப்புக் காட்டிநிற்கும். சிவப்பும் மஞ்சளும் விரவிய கோழியை, உடம்பெல்லாம் ஆங்காங்கே மஞ்சளையும் குங்குமத்தையும் (காடிச் செறிவில் - acidic concentration -மஞ்சள், களரிச் செறிவில் - alkaline concentration - குங்குமம்) பட்டையாய்ப் பூசிய சாம்பவர்கள் தங்கள் மருதநிலத்தில் விரும்பி வளர்த்ததும், அவரின் பேரூர் கோழியூர் (உறையூர்) என்றானதும், இன்னொரு துறை சாம்பாபதி>சம்பாபதி (காவிரிப்பூம்பட்டினம்) என்றானதும் வியப்பில்லை. சாம்பவரே கோழியர் (என்ற சோழியர்) இன்ற இனக்குழுவும் ஆனார். மருதநிலத்தில் கோழியும் எருமையும் முகன்மை உயிரிகளாகும்.
 
அளவிற்கு மீறிய மாந்த இடையூற்றால், மஞ்சள் சாயலே இல்லாத வெள்ளைக்கால் கோழிகள் (white leg-on chicken) பண்ணைக் கோழிகளாய் (broilers) இன்று வளர்க்கப்பட்டு, பல்வேறு கொழுப்புச் சத்துகளைக் கொடுத்து வேதிப்பொருள்களால் கொழுக்கவைத்து, அவை நோயில் இறந்துவிடாதிருக்க நோய்த்தடுப்பு (antibiotic) மருந்துகளையுங் கொடுத்து (இந்தக் கோழிக்கறியை மாந்தர் சாப்பிடும்போது அளவிற்குமீறிய நோய்த்தடுப்பு வேதிகளை மாந்தர் உடலுக்குள்ளும் ஏற்றி, அதன் மூலம் வெருவிகள் (viruses), பட்டுயிரிகள் (bacterias) ஆகியவை எந்த நோய்த்தடுப்பு மருந்திற்கும் கட்டுப்பட்டாததாக்கி) ஒரே கந்தரகோளம் ஆக்கிவிட்டார்கள். கூடியமட்டும் பண்ணைக்கோழிகளைச் சாப்பிடாமல் நாட்டுக்கோழிகளைச் சாப்பிடுவதே நல்லது என்பது பலருக்கும் புரியமாட்டேம் என்கிறது. இந்த மஞ்சற் சாயல் போன கோழிமுட்டைகள் முற்றிலும் வெள்ளையோட்டோடு பளிச்சென்றிருக்கும் நாட்டுக்கோழி முட்டைகள் சற்று புகர்/குரால் (brown) நிறத்தோடு அளவிற்சிறியதாய்க் காட்சியளிக்கும். பண்ணைக்கோழி முட்டையின் மஞ்சட்கரு வெளிர்மஞ்சளாய்க் காட்சியளிக்கும். நாட்டுக்கோழி முட்டையின் மஞ்சட்கரு சற்று சந்தனநிறத் தோற்றங்காட்டும் மஞ்சளாய் இருக்கும். கோழி முட்டையால் இற்றை மாந்த இனம் பெரிதும் வளங்கொண்டதும் உண்டு; சீரழிந்ததும் உண்டு.
 
இனி yumurta விற்கு வருவோம். துருக்கிமொழி பின்னொட்டுப் புழங்கும் மொழி. (தமிழும் 100க்குத் 99 பின்னொட்டுக்கள் புழங்கும் மொழிதான். மிக அரிதாய் முன்னொட்டுக்கள் புழங்கும்.) துருக்கிமொழி அல்தாயிக் கொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது. இதில் மங்கோலியன், மஞ்ச்சு, சப்பானீய மொழிகளையும் சேர்ப்பர். yumurta என்பதில் ta என்பது இற்றைத் துருக்கி மொழியில் பின்னொட்டாகும். The addition of suffix -da/-ta என்பதற்கு in on at என்ற பொருளையே சொல்கிறார்கள். காட்டாக, என்பது odada [oda-da] in the room என்றும், yatakta [yatak-ta] என்பது on the bed என்றும் பொருள்படும்.தமிழில் இல் என்று பொருளை ta விற்கு இணையாகக் கொள்ளலாம்.
 
அடுத்து yumurta என்பது Old Turkic இல் yumurtka, yumurga என்றும், Proto-Turkic இல் *jumurtka ‎(“egg”) என்றுமாகும். இதனுள் murg/murk என்ற சொல் நடுவே அடங்கியுள்ளது. அது பெர்சியனில் பறவை/கோழி (murg in persian bird, fowl) என்றே பொருள்கொள்ளும். இன்னொருசொல்லாக சிம்முர்க் என்றசொல் கழுகுப்பறவையைக் குறிக்கும். ஆங்கிலத்திலும் இது கடன்வாங்கப்பட்டுள்ளது. [Simurgh Etymology: from Pers. سیمرغ simurgh, from Pahlavi sin "eagle" + murgh "bird." Cf. Avestan saeno merego "eagle," Skt. syenah "eagle," Arm. ցին cin "kite.". a supernatural bird, rational and ancient, in Pers. mythology. தமிழிலும் உயரப்பறக்கும் பருந்திற்குச் சேணம் என்றும் பெயருண்டு. சேண் = உயரம். சிம்முர்க்கை இங்குசொன்னதின் காரணம் முர்க் என்ற சொல் பறவை என்ற பொதுப்பொருளில் புழங்குவதைக் குறிப்பதற்குத் தான்.
 
துருக்கிக்கும், ஈரானுக்கும் அருகில் உள்ள பல்வேறு இன மக்களும் murgh என்ற பெயரையே கோழிக்குப் பயன்படுத்துகிறார். அது ஈரானுக்கும் கிழக்கில் ஆப்கனித்தான், பாக்கித்தான் (உருது), வட இந்தியா (இந்தி) வரை பரவியுள்ளது. நீங்கள் எந்த வட இந்திய உணவுக்கடைக்குப் போனாலும் முர்க் பன்னீர், முர்க் மொசெல்லம், முர்க் கறி என்று விதவிதமாய்ச் சொல்வர். இந்த முர்க் என்ற சொல் எப்படியெழுந்ததென்று என்னால் இன்னுந் தெளிவாய்ச் சொல்லமுடியவில்லை. கோழி என்ற பறவை இங்கிருந்து தான் போனது. ஆனால் முர்க் என்ற பெயர் இத்தனை நாடுகளில் எப்படிப் பரவியது? வியந்து கொண்டிருக்கிறேன். அதேபொழுது, இதற்குப் பறவை என்ற பொருளிருப்பது புரிகிறது.
 
அடுத்தது முன்னால் வரும் yu/ju என்னும் வினைச்சொல். கூகுளாண்டவர் மூலமாய்ச் செய்தி தேடியதில் கீழுள்ள செய்திகள் தெரிந்தன. The stem may be derived from Common Altaic *úmu 'to bear, give birth' q. v., see АПиПЯЯ 58, 281, Дыбо 10, Лексика 149. The Turkic form, however, must have also been influenced by PA *nā̀mo 'testicle' (and/or *ǯi̯ŏmu `round'), which explains initial *j-.altet-prnum,altet-meaning,altet-rusmean,altet-turc,altet-mong,altet-tung,altet-reference,
 
Egg, Proto -Altaic *omu(r)-tkV
Middle Mongolian omdegen (o with umlaut) < Proto-Mongolian *Omdegen
Literary Manchu Umxan<Proto-Tungus-Manchu *umukta (u with umlaut)
Cf:Proto Turkic *jumurtka (>Turkish yumurta), Proto-Japanese *um - (> Japanese umu 'give birth' u with umlaut
 
அதாவது ”கோழியில் (இருந்து) வெளிவந்தது” என்றே yumurta விற்குப் பொருளாகிறது. அதாவது இச்சொல் அடிப்படையானதல்ல. சுற்றிவளைத்து விளக்கம்போல் எழுந்த சொல் வரையறை. இது தற்செயலாக நம்முடைய முட்டையோடு ஒலிப்புக்காட்டுகிறது. அவ்வளவுதான்.
 
நம்முடைய முட்டை (ஓட்டால்) மூடிய கோளமான பொருளைச் சொல்லும் பொதுச்சொல். அது கோழிக்கான விதப்புச்சொல் அல்ல. வாத்து முட்டை, கோழிமுட்டை, குருவிமுட்டை என்று பல்வேறு முட்டைகளுக்குப் பொதுவான சொல். அப்படியானால் yumurta என்பது துருக்கிமொழியில் கோழிமுட்டையைமட்டுங் குறிக்கிறதா என்றாலில்லை. எப்படித்தமிழில் எள்நெய்> எண்ணெய் என்ற விதப்புச் சொல் இன்று மண் எண்ணெய், தேங்காய் எண்ணெய் நல்ல எண்ணெய், விளக்கு எண்ணெய் என்று கூட்டுச்சொற்களில் ”எண்ணெய்” என்று பொதுப்பொருளை உருவாக்குகிறதோ, அதுபோல yumurta என்பது தன் (கோழி) விதப்புத்தோற்றம் இழந்து பொதுத்தோற்றம் காட்டுகிறது.
 
just egg.
 
அன்புடன்,
இராம.கி. 
 
பி.கு. இது ஒரு பொதுவான புலனம் என்பதால், நான் வழக்கமாய் அனுப்பும் 3 மடற்குழுக்களுக்கும் அனுப்புகிறேன். என்னைப் பொறுத்துக்கொள்ளுங்கள்.
 
 
 
 
 
From: rajam
Sent: Saturday, April 02, 2016 11:57 PM
Subject: Re: [வல்லமை] [தமிழ் மன்றம்] துருக்கித் தமிழ் (Turkish and Tamil?) ...
 
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.

rajam

unread,
Apr 6, 2016, 12:22:53 AM4/6/16
to tamil...@googlegroups.com, vallamai
அன்புள்ள இராம.கி ஐயா, வணக்கம்.

என் மழலைத் துருக்கிநண்பனுடன் செலவிடக் கிடைக்கும் நேரங்கள் அருமையானவை. 

அடுத்த முயற்சி … என் மகனை “uncle” என்று குறிப்பிடாமல் “மாமா” என்று குறிப்பிடவைப்பது. “மா”-வரைக்கும் சொல்கிறான். ‘மா மா’ என்று இரட்டித்துச்சொல்ல இன்னும் பழகவில்லை. என் மகனை அடிக்கடிப் பார்க்காததால் அந்தக் குழந்தைக் கண்ணுக்கு நேரடியாகத் தெரியாத ஒருவரைக் குறிப்பிட்டுச் சொல்லத்தெரியவில்லை. துருக்கியில் இருக்கும் அவனுடைய பாட்டியைக் கணினியில் (skype வழியே) பார்த்துப்பழகுவதால் “அன்னே அன்னே” என்று அழகாகச் சொல்கிறான். 

நான், நீ, அவன்/அவள்/அவர்/அது/அவை என்ற சுட்டுகளைக்கூட இன்னும் அவன் பழகவில்லை என்று அவனுடைய அன்னை சொன்னார். கண்ணாடியில் தன் நிழலைப் பார்த்தால் அது என்ன என்று இன்னும் புரிந்துகொள்ளாத நிலை. 

ஒரு குழந்தையின் உடல்-மொழி வளர்ச்சியை இப்போதுதான் புரிந்துகொள்ளத்தொடங்கியிருக்கிறேன்!! எனக்கெனக் குழந்தை பிறந்தகாலத்தில் பலபல சிக்கல்களால் குழந்தையின் வளர்ச்சியை இவ்வளவு நுணுக்கமாகத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு இல்லை. எல்லாமே எந்திரமயமான கடமையாக அமைந்துவிட்டன. :-(

இந்தத்துருக்கிக்குழந்தையின் வளர்ச்சியைப் பார்ப்பது எனக்குக் கொடுப்பினை. உலகம் என்ற இந்தப்பேரண்டத்தில் ... காலம், இடம், பொருள், ஏவல், வரைகோடுகள் … எல்லாம் எப்படி உருவாகின்றன என்பதை இவன்மூலம் பார்க்கிறேன். இதைப்பற்றிப் பிறகு ஒருநாள் தனியாகச் சொல்லவேண்டும். 

இந்தக் குழந்தையின் பெற்றோரை மிகவும் பாராட்டவேண்டும். வீட்டில் துருக்கிமொழிதான் பேசுகிறார்கள். 

++++++++++

கூ(ழ்)முட்டை பற்றிய விளக்கத்துக்கு மிக்க நன்றி, ஐயா. அண்மையில்தான் முட்டையைத் தொட்டுப் பழகிக்கொண்டிருக்கிறேன். ஆம்லெட் போடுவதில் திறமையை வளர்த்துக்கொண்டிருக்கிறேன்! பலவகைக் காய்களே என் ஆம்லெட்டை நிரப்புகின்றன. பிறவகைகள் (கொற்றியது, அவித்தது) பிடிக்கவில்லை.

இங்கே உணவுத்தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் (Food and Drug Administration) உதவியால் மிக நல்ல முட்டைகள் கிடைக்கின்றன. புதிதாக முட்டையைப் பயன்படுத்தத் தொடங்கிய எனக்கே இவற்றில் வேறுபாடு தெரிகிறது. உயரிய முட்டைகளின் (Pasture Raised) விலை கூடுதல். ஆனாலும் அவற்றையே வாங்குகிறேன்.

++++++++++

கோழி பற்றிய சொற்குறிப்புகளுக்கு மிக்க நன்றி. 

ஐயா, அந்த “முர்க் (murgh)” என்ற சொல் சங்க இலக்கியத்தில் ஏதோ ஓரிடத்தில் ஏதோ ஒரு வடிவில் புழங்கியிருப்பது-போல் ஒரு நெருடல். தேடிப்பார்த்துச் சொல்கிறேன்.

முன்னால் வரும் yu/ju என்னும் வினைச்சொல் பற்றி என் துருக்கித்தோழியிடம் கேட்கிறேன்.

++++++++++

ஐயா, நீங்கள் உறுப்பினராயுள்ள பிற மடற்குழுக்களில் எனக்கு உறுப்பின்மை. ஆகவே, இந்த மடலைத் தமிழ்மன்றத்துக்கு மட்டும் அனுப்புகிறேன். 
Reply all
Reply to author
Forward
0 new messages