எது சரி எழுந்திரு எந்திரி ஏஞ்சி எந்திரிச்சி
30 ஆண்டுகள் முன்பு வரை வட தமிழ்நாட்டவர் எழுந்திரு என்றே சொல்லி வந்தனர். இதுவே சரியான இலக்கண பலுக்கம். ஆனால் திரைப்படத்தில் வடிவேலுவின் தெற்கத்தி பேச்சின் தாக்கம் காரணமாக வட தமிழ்நாட்டவர் பேச்சு வழக்கில் தெற்கத்தி பேச்சு வழக்கு கலந்து வடக்கத்தி பேச்சின் செவ்விய வழக்குச் சொற்கள் அழிந்துவிட்டன. இன்று வடக்கத்தி தமிழ் கெட்டு குட்டிசுவராகி தெற்கத்தி தமிழ் போல குலைந்து விட்டது.
படுத்திருப்பவரை எழுந்திரு என்றால் படுப்பத்தை விட்டு உட்கார் என்று தான் பொருள். ஆனால் எந்திரி என்பது ழகரம் சிதைந்த இரு > இரி என குலைந்த மலையாள தாக்கம் ஆகும். மலையாளிகள் உட்காருங்கள் என்பதை இரிக்கு என்பர். எனவே எந்திரி முந்திரி என்பது தமிழை சிதைக்கும் தெற்கத்தி வழக்கு ஆகும். அதை வட தமிழ் நாட்டவர் விட்டு ஒழிக்க வேண்டும். இன்னும் சிலர் எழுந்திரு என்பதை ஏஞ்சிக என்கின்றனர். இது எந்திரிச்சி என்பதன் கொடுஞ் சிதைவு ஆகும். எந்திரிச்சி என்பது எப்படி உள்ளது என்றால் மனநலம் குன்றியவர் ஒருவர் வேண்டாத இடங்களில் உடம்பெல்லாம் கந்தல் துணியை சுற்றிக் கட்டிக் கொண்டு நடப்பதை நாம் சாலையில் பார்த்திருப்போமே அது போன்ற வேண்டாத ஒட்டு தான் இரிச்சி என்பதை மானமுள்ள தமிழர் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொண்டு கந்தலை தூக்கி எரிந்து செவ்விய பேச்சு நடையாக நம் தமிழை மாற்றிக் கொள்வோம். இப்போது தமிழை வேற்று மொழி கெடுக்கவில்லை மாறாக தெற்கத்தி தமிழ் தான் கெடுக்கிறது. அதை புறக்கணிப்போம். பெரும்பான்மை மக்கள் பேசுவதாலேயே ஒரு பேச்சு வழக்கு எத்தனை கொச்சையாக இருந்தாலும் ஏற்க தக்கது அன்று. இதை சொல்வதற்கு துணிவு வேண்டும்.