எகிப்து தமிழி எழுத்தில் சில விளக்கம்

11 views
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
Feb 15, 2026, 3:06:47 AM (6 days ago) Feb 15
to தமிழ் மன்றம்

எகிப்து தமிழி எழுத்தில் சில விளக்கம் 

strauch & schmid.jfif

இந்த கல்வெட்டுகளின் இருப்பை உலகின், குறிப்பாக தமிழ் உலகின் கவனத்திற்கு கொண்டு வந்த சுச்சர்லாந்து நாட்டு பேராசிரியர் இங்கோ திராச்சு (Ingo Strauch) , அவரது உடன் ஆய்வாளர் பேராசிரியை சார்லெட் கிமிட்டு (Charlotte Schmid)  ஆகிய இருவருக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது தமிழ் உலகம். ஆர்வலர் சிலர் சிகை என்பதையும் கண்டா என்பதை கண்டன் என்றும் ஆள் பெயராக தவறாக கொள்கின்றனர். அது பற்றியதே இந்த விளக்கம். இந்த எழுத்து பொறிப்புகள் அனைத்தும் ஒரு சேர கருத்தில் கொள்ளப்பட்டு தான் ஒரு முடிவாக "சிகை கொற்றன் வரா கண்டா" என படிக்கப்பட்டதாக ஊகிக்க முடிகிறது. 

பேராசிரியர் இங்கோ இந்த கல்வெட்டுகள் மலை மீது செயற்கையாக குகை வெட்டி அதில் 7 ஆம் ராமிசேசு மன்னனுக்கு அமைத்த கல்லறையில் உள்ள உள்கல்லறைகளில் இந்த தமிழி, பிராமி & கரோஷ்ட்டி எழுத்துகள் அறியப்படுவதாக சொன்னார். எனவே சிகை என்பது மலைக் கல்லறையை குறிக்கும் சொல் என்று கொள்வதே சரி ஆள் பெயர் அல்ல. இனி, மேலும் தெளிவு பெற இன்னொரு பிரபலம் ஆகாத 3 வரிக் கல்வெட்டை பார்க்கலாம். இதை "கோபன் வராத கண்டான்" என்று படித்துள்ளனர். இந்த படிப்பை பேராசிரியர் இங்கோ தாமே படித்ததாக என்னிடம் தனிப்பட்ட முறையில் 2 ஆம் நாள் தேநீர் இடைவேளையின் போது கூறினார். அது தமிழியையும் சேர்த்து சொன்னாரா என தெரியாது. ஆனால் இந்த வாசிப்பு சில தொல்லியல் அறிஞர்கள் க. ராசன், சுப்பராயலு, யதீசு போன்றோரால் சரி பார்க்கப்பட்டதாக தெரிகின்றது. இதில் இறுதியில் கண்டான் என்பது தெளிவாக உள்ளதை வைத்து கல்வெட்டுகளில் பிறவற்றையும் கண்டான் என்று கொள்வதே சரி. எனவே இது கண்டன் என்ற ஆள் பெயர் ஆகாது என உறுதி ஆகிறது. கண்டான் என்பது இறந்த காலம் காட்டும் வினை முற்றுச் சொல். இனி, 

image.png

இதன் முதல் வரியை பார்ப்போம். இந்த வரியின் இரண்டாவது எழுத்து '' அல்ல, ஆனால் பேரா இரா மதிவாணன் படித்த சிந்து எழுத்தில் ''  ஆகும். குஷானர் கால வட பிராமியில் 'ga' என்பதைக் குறிக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது சற்றே மாறுபட்டு, இது U > ∩ தலைகீழாக இருப்பது போல உள்ளது (படம் இணைப்பு) . எனவே கோபன் என்பதற்குப் பதிலாக கோகன் என்று படிக்க வேண்டும். இதன் இரண்டாவது வரியின் இரண்டாவது எழுத்து 'ரா' அல்ல, 'ரு'. எனவே அதை 'வருத' என்று படிப்பதே சரி, இதாவது 'வராத' அல்ல. அப்படியானால் அது not  coming என்று பிழைபட்ட பொருள் தரும். கோகன் வருத(ல்)  கண்டான் என்பதே சரியான வாசிப்பு. இதை தமிழி அறிந்த அனைவரும் ஒப்புவர். கோகன் என்ற பெயருடைய  ஒருவர் வருவதை (அவன்) கண்டான் என்பது சரியான பொருள் தருகின்றது அன்றோ? Kogan, Cohen என்ற பெயர்கள் இன்றும் ஐரோப்பியர்களிடையே வழங்குகின்றன. கொற்றன் இந்த கோகன் வருவதை பார்த்ததாக சொல்கிறதா? தெரியவில்லை. 
  
அடுத்த படம்  வட்டமிட்ட இடத்தில் மூன்று எழுத்துகள் உள்ளன. அதில் முதல் எழுத்து , இறுதி  எழுத்து ன். நடு எழுத்து இன்றைய போல உள்ளது. ஆனால் இந்த எழுத்து தமிழியிலோ, வட பிராமியிலோ அல்லது வட்டெழுத்திலோ அக்காலத்தில் கிடையாது. பின் என்ன எழுத்து அது?   
 

image.png



image.png

https://www.youtube.com/live/ats1HPTaV64?si=JKiq1WZxn12L5F-i இந்த காணொளியில் அமைச்சர் நிகழ்ச்சியை  தொடங்கிய பின் முதலில் பேரா. இங்கோ அறிமுக உரை தருகிறார் பின் பேரா சார்லோட்டி விளக்குகிறார் 
Reply all
Reply to author
Forward
0 new messages