சதுரகிரி ரகசியங்கள்

42 views
Skip to first unread message

C.M உதயன்

unread,
May 6, 2014, 11:59:21 AM5/6/14
to உதயன்


சிதம்பர ரகசியம்!

முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்.”

1. இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World’s Magnetic Equator ).

2. பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

3. மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

4. விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

5. இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

6. திருமந்திரத்தில் ” திருமூலர்”

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே
என்று கூறுகிறார், அதாவது ” மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்”. என்ற பொருளைக் குறிகின்றது.

7. “பொன்னம்பலம்” சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை “பஞ்சாட்சர படி” என்று அழைக்கப்படுகின்றது, அதாவது “சி,வா,ய,ந,ம” என்ற ஐந்து எழுத்தே அது. “கனகசபை” பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,

8. பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

9. பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

10. சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் “cosmic dance” என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.



--
--
--உதயன்--

Website : http://udhayam.in/
Blog       : http://udhayan-photos.blogspot.com/

C.M உதயன்

unread,
May 6, 2014, 12:21:40 PM5/6/14
to உதயன்
சதுரகிரி ரகசியங்கள் தலைப்பு முகநூல் குழுமங்களில் இருந்து எடுத்ததால் அதே தலைப்பையே வைத்து விட்டேன் மன்னிக்கவும்.

சிதம்பர ரகசியம்! பற்றிய இந்த பதிவில், ஆர்வத்தில் இதில் இருக்கும் இரண்டாம் பாய்ண்டை சோதனை செய்து பார்த்தேன்,

//2. பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.//

கூகுள் மேப் உதவியுடன் சோதித்ததில்  தில்லை நடராஜர் ஆலயம், காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயம், காலஹஸ்தி ஆலயம் மூன்றும் நேர்கோட்டில் வருகிறது, கீழே உள்ள படங்களிலும் அதன் கீழே உள்ல கூகுள் மேப் கிளீக் செய்தும் கோவிலின் சரியான இருப்பிடத்தையும் தெரிந்து கொள்ளலாம்.



Map Link



3 கோவில்களும் குறைந்தது 1000 - 1500 ஆண்டுகள் பழமையானவை எப்படி இது போல் சரியான நேர்கோட்டில் வருவது போல் செய்து இருப்பார்கள், உச்சகட்ட ஆச்சர்யம் / அதிசயம் தான்.








தேமொழி

unread,
May 6, 2014, 11:07:58 PM5/6/14
to tamil...@googlegroups.com, உதயன்

பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ அவர்கள் எழுதிய "சைவ சமயம் அறிவியல் மையம் – பகுதி 4" >>>  http://www.vallamai.com/?p=38892
படித்துப் பாருங்கள் உதயன்.

அட்சரேகைகளை முதல் முதலில் எகிப்திய வானநூல் அறிஞர் டாலமியின் வரைபடத்தில் காண்கிறோம். அவர் கி.பி. 150 -இல் வாழ்ந்தவர். ஆனால் தீர்க்கரேகைகளையோ 18 -ஆவது நூற்றாண்டில் தான் காண்கிறோம். இதில் வியப்பு என்னவென்றால் இதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இது குறித்துத் திருமூலர் அறிந்திருக்கிறார். அவர் இரண்டு திருமந்திரப்பாடல்களில் (2701,2708) மேரு, தில்லை (சிதம்பரம்), இலங்கை ஆகிய மூன்றும் ஒரே நேர்க் கோட்டில் (தீர்க்கரேகை) இருப்பதாகப் பாடுகிறார்! கற்பனைக் கதை இல்லை இது. அறிவியல் (புவியியல்) உண்மை. சிவன் இருக்கும் கைலாய மலை மேரு. இதில் இருந்து கீழ் நோக்கி நேர்க் கோடு வரைந்தால் அது சிதம்பரம் (சிவத்தலம்) வழியாகச் செல்லும். இக்கோட்டின் வலப்பக்கம் மேரு (கைலாய) மலை இருக்கும் ; இடப்பக்கம் (எக்காலத்தும்) சிவ பூமியாக (விளங்கும்) இலங்கை இருக்கும். >>>> மேலும் படிக்க >>>  http://www.vallamai.com/?p=38892


11.399363, 79.693553 >>> Chidambaram Temple, India


12.847322, 79.699835 >>> Ekambareswarar Temple
Ekambaranathar Sannidhi St, Periya, Kanchipuram, Tamil Nadu 631502, India


13.749550, 79.698439 >>> Sri Kalahastheeswara Swamy Temple
Srikalahasti, Andhra Pradesh 517644, India


இவற்றைத் தவிர ...

Rishikesh Neelkanth Mahadev Temple >>> 30.080908,78.341019 

Dakshina Kailasa Puranam/ Naguleswaram Kovil of Keerimalai, Sri Lanka
9.813745, 80.012105

..... தேமொழி 
Reply all
Reply to author
Forward
0 new messages