எகிப்தில் தமிழி எழுத்து

1 view
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
Feb 13, 2026, 5:58:28 AM (8 days ago) Feb 13
to தமிழ் மன்றம்
எகிப்தில் தமிழி எழுத்து

 பாரிஸில் உள்ள பிரெஞ்சு ஆசியக் கல்வி நிறுவனத்தின் (EFEO) பேராசிரியர் ஷார்லட் ஸ்மிட் மற்றும் சுவிட்சர்லாந்தின் லாசேன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இங்கோ ஸ்ரௌச் ஆகியோர் 2024–2025 ஆண்டுகளில் மேற்கொண்ட ஆய்வின் போது, தேபன் நெக்ரோபோலிஸில் உள்ள ஆறு கல்லறைகளில் சுமார் 30 கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகள் தமிழ் பிராமி, பிராகிருதம் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ளன. ஆய்வாளர்கள் இவை கி.பி. 1ஆம் நூற்றாண்டு முதல் 3ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியைச் சேர்ந்தவை எனக் கணித்துள்ளனர்.

முன்னதாக 1926ஆம் ஆண்டு பிரெஞ்சு அறிஞர் ஜூல்ஸ் பெய்லட் மேற்கொண்ட ஆய்வில் 2,000க்கும் மேற்பட்ட கிரேக்க கிராஃபிட்டிகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், இந்தியத் தொடர்புகள் குறித்து அப்போதைய ஆய்வுகளில் எவ்வித குறிப்பும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பல தசாப்தங்களாக ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் ஆராய்ச்சியாளர்களும் பார்வையிட்ட இந்த இடத்தில் இந்திய மொழிக் கல்வெட்டுகள் இருப்பது இதுவரை கவனத்திற்கு வராதது ஆய்வுலகை ஆச்சரியப்படுத்தியுள்ளது. “முதன்முதலில் இந்த தமிழ் பிராமி எழுத்துக்களை கண்டபோது நம்ப முடியவில்லை; பல ஆண்டுகளாக யாரும் இதை கவனிக்காதது வியப்பாக உள்ளது,” என்று பேராசிரியர் இங்கோ ஸ்ரௌச் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வில் மிகவும் கவனம் ஈர்த்த பெயராக ‘சிகை கொற்றன்’ (Cikai Koṟraṉ) அமைந்துள்ளது. இந்தப் பெயர் ஐந்து வெவ்வேறு கல்லறைகளில் மொத்தம் எட்டு முறை செதுக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சில கல்வெட்டுகள் நுழைவாயிலிலும், சில உயரமான உட்புறச் சுவர்களிலும் காணப்படுகின்றன. குறிப்பாக ஒரு கல்லறையில் நுழைவாயிலிலிருந்து சுமார் நான்கு மீட்டர் உயரத்தில் ‘சிகை கொற்றன்’ என்ற பெயர் பொறிக்கப்பட்டிருப்பது, அக்காலத்தில் பார்வையாளர்கள் தங்கள் இருப்பை பதிவு செய்ய எடுத்த முயற்சியின் சான்றாகக் கருதப்படுகிறது.

மேலும் ‘கோபான் வரத கண்டன்’, ‘சாத்தன்’, ‘கீரன்’ போன்ற பெயர்களும் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. ‘கோபான்’ என்ற பெயர் தமிழகத்தின் அம்மன்கோவில்பட்டி பகுதிகளில் கண்டறியப்பட்ட கல்வெட்டுகளிலும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க ஒற்றுமையாகும். ஆய்வுக் குழுவின் கருத்துப்படி, இக்கல்வெட்டுகளைப் பொறித்தவர்கள் இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கு, மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளிலிருந்து வந்தவர்களாக இருக்கலாம்; இதில் தென்னகத் தமிழர்கள் பெரும்பான்மையினர் எனத் தெரிகிறது. அக்காலத்தில் கல்லறைகள் மற்றும் நினைவுச்சின்னங்களைப் பார்வையிட்டவர்கள் தங்கள் பெயர்களைச் சுவர்களில் பொறித்து வைக்கும் வழக்கம் இருந்தது என்பது வரலாற்று ஆய்வுகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

image.png 
image.png

சிகை கொற்றன் வந்து கண்ட(ன்)

இகுளி - குழிவான படகு, pontoon; இகுப்பம் - boulder on mountain side. இகு > சிகு > சிகை என்பதை குகை அல்லது மலை குகை என கொள்ளலாம். Sikamani, sikara ஆகிய  சமசுகிருத சொல்  வேர்கள் மலை, உச்சியை குறிப்பதை நோக்குக. எனவே சிகை(க்கு) கொற்றன் என்பவன் வந்து கண்டான் என்று கொள்ளலாம். இதை இந்த ஆய்வின் பேராசிரியர் இங்கோ திராச்சு மலைமேல் உள்ள குகையில் அமைந்த 7ஆம் ராமிசெசு  (3,100 ஆண்டுகள்) பாரோவின் கல்லறையில் உள்ள சில கல்லறைகள் என்று குறிப்பதில் இருந்து சிகை என்பது மலை உச்சி குகை தான் என்று கொள்ள முடிகிறது. நாலாம் வேற்றுமை "கு" சேர்த்தால் சிகைக்கு பொருள் வந்துவிடும். ஆக கொற்றன் 1,200 ஆண்டுகள் கழித்து இந்த மலைக் குகை கல்லறைக்கு சென்றுள்ளான். 

முதல் நாள், நான் மாதம் ஒரு முறை தொல்லியல் அலுவலகத்திற்கு செல்வது போல சென்றேன். அங்கு யாருமே இல்லை. ஒரு கல்வெட்டு படிக்கும் மாணவரிடம் ஏன் யாரும் இல்லை? எல்லோரும் எங்கே போனார் என்று கேட்டான். அதற்கு அந்த மாணவர் அருங்காட்சியகத்தில் உள்ளனர் என்றார். போய் பார்த்தால் இந்த நிகழ்ச்சி அப்போது தான் தொடங்கியது. முதல் நாளில் இருந்த கூட்டம் இரண்டாம் நாளில் இல்லை. பெரும்பாலும் பணியாளர், கல்வெட்டியல் மாணவர் தான் பங்கு பெற்றனர். இன்று மூன்றாம் நாள். பல ஓய்வு பெற்ற கல்வெட்டியல் அறிஞர்களை கண்டு பேச முடிந்தது பெரும் மகிழ்ச்சி. 



அதிக படங்கள் பார்க்க https://www.facebook.com/share/p/17KbCQysqr/
Reply all
Reply to author
Forward
0 new messages