--ராணி மேரி ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் வணிகம் செய்ய முனைந்த கிழ்க்கிந்தியக் கம்பெனி இந்தியாஅவில் மதப்பரப்பலும் இடம் பிடித்தலும் செய்ய மாட்டோம் என்று உறுதிமொழி அளித்து அதை முற்றிலும் தவிர்த்து இந்தியாவில் கிறித்துவ மதத்தைப் பரப்பவும் இடங்களைப் பிடிக்கவும் செய்தனர்
இந்தியாவில் அதை ஒட்டி எழுந்த கொந்தளிப்புகளால் ஆங்கிலேய அரசு இந்தியாவக் கிழக்கிந்தியக் கம்பெனியின் கைகளில் இருந்து பறித்து விக்டோரிய அரசின் ஆட்சிக் குடைக்கு கொணர்ந்தனர். இங்கிலாந்தில் புதியன ன்கண்டுபிடித்தப் புதியன தேடல் புதியன படைத்தல் என்ற விக்டோரியா யுகத்தின் தாக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டது. 1857 -ல் இந்தியர்களின் உயர் கல்விக்கென் மூஉன்று புதிய பல்கலைக் கழகங்களை நிறுவியும் பெண் கல்வியை முன்னெடுத்தும் ஆங்கிலக் கல்வி மூலம் பெண்டிரின் மேம்பாட்டை வலியுறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன
1882 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் பெண்கள் முன்னேற்றம் பற்றிய சிந்தனைகள் தொடங்கிய நிலையில் அக்கால கட்டத்தில் காசியில் வாழ்ந்த பாரதிக்கும் பெண் விடுதலை மற்றும் மேம்பாட்டுக்கான சிந்தனை தோன்றியது. சுதேசி இயக்கம் தோன்றுவதற்கு முன்னரே பெண்கள் மேம்பாட்டுக்கான சிந்தனையை ஒட்டிய படைப்புகளைப் பாரதியார் வெளியிட ஆரம்பித்தார். ,ஏலை நாட்டுச் சிந்தனைகளுக்கு வடிகாலாக அவர் ஆசிரியராகப் பணிபுரிந்த சக்ரவர்த்தினி இதழ் அமைந்தது. விக்டோரியா ராணியைக் குறிக்கும் சக்ரவ்ஃஅர்த்தினி என்ற பெயரைக்கொண்ட சக்ரவர்த்தினி பெண்கள் முன்னேற்றம் பற்றிய மேல் நாட்டுச் சிந்தனைகளைத் தமிழர்கள் அறிய அவரும் அவருடன் மற்ற பெண் எழுத்தாளர்கள் பண்டிதை அசலாம்பிகை திருமதி ஆர்.எஸ். சுப்புலட்சுமி ஆகியோர் விக்டோரியா யுகத்தில் எழுந்த பெண்கள் முன்னேற்றதை ஒட்டிய சிந்தனைகளையே கருத்துக்களாக வெளியிட்டனர்
சென்னையிலிருந்து பாண்டிச்சேரிக்கு இடம் பெயர்ந்த பாரதியாரின் பெண்கள் தொடர்பான சிந்தனைகள் இந்துமதச் சிந்தனையை ஒட்டி மாற்றம் பெற ஆரம்பித்தது அவரின் இறுதிக் காலத்தில் அவரின் பெண்கல் பற்றிய கருதுகோள் முற்றும் ஒரு இந்துமத வாதியின் கருத்தாகவே அமைந்திருந்தது
பெண் விடுதலையைப் பற்றிப் பாட்டும், கட்டுரையும் எழுதிய பாரதி, தன்னுடைய
குடும்பத்திலுள்ள பெண்களுக்கு விடுதலை கொடுத்தாரா? இதோ பாரதி ஆய்வாளர் ரா.அ.பத்மநாபன்
கூறுகிறார்: “மாதர் சுதந்திரம் பாடிய கவிஞர் வீட்டில் அவர் இட்டதே சட்டம். செல்லம்மா
தவிப்பு சொல்லி மாளாது” என்கிறார்.“ஒருநாள் பாரதி, 14 வயதான தமது மூத்த மகள் தங்கம்மாவைத் தம்முடன் கடையத்திலிருந்து
ஐந்து மைலில் உள்ள ஒரு அய்யனார் கோயிலுக்கு வருமாறு உத்தரவிட்டார். அக்கோவில்
மலைச்சாரலில் காட்டு நடுவே உள்ளது...தங்கம்மா தயங்கி வரமறுத்ததால் பாரதிக்கு கோபம்
வந்து விட்டது. மகள் கன்னத்தில் விரல் பதிய அறைந்து விட்டார். தடுக்க வந்த மைத்துன்ர் மீதும்
இளைய மாமனார் மீதும் காறி உமிழ்ந்தார்”.பாரதி ஆய்வாளர் தொ.மு.சி ரகுநாதன்
"பாரதி பற்றிய குறிப்புகள் பலவற்றிலும் மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட, திரிக்கப்பட்ட, திரையிட்டு மூடப்பட்ட இலக்கிய மற்றும் அரசியல் வாழ்வின் ஓர் அம்சத்தைப் பற்றி மட்டுமே இந்த நூலில் ஆராய்ந்திருக்கிறேன்" என்கிறார்பாரதியின் பெண்கள் முன்னேற்றம் என்ற கருதுகோள் ஆங்கிலச் சிந்தனைகளை அடியொட்டி எழுந்து பின்னர் இந்து சமயவாதியின் நோக்கில் வலுவிழந்து இறங்குமுகாகியது
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.