இலக்கண ஆர்வலருக்கு ...

72 views
Skip to first unread message

rajam

unread,
Aug 12, 2023, 11:11:03 PM8/12/23
to vallamai, mintamil, tamilmantram
வணக்கம். 

தமிழிலக்கணத்தில் குறிக்கப்படும் 'வேற்றுமை’ என்றால் என்ன என்று சுருக்கமாக, தெளிவாகச் சொல்லி உதவுவீர்களா? 

நன்றி, 
ராஜம்  

Seshadri Sridharan

unread,
Aug 13, 2023, 1:05:03 AM8/13/23
to tamil...@googlegroups.com
வேற்றுமை உருபுகள் வேர் விளக்கம் 

வேற்றுமை உருபுகள் ஐ, ஆல், கு, இன், அது, கண் முதலியனவாகும். பெயர்ச் சொல்லின் இறுதியில் இவ்வாறான உருபுகள் வந்து அல்லது மறைந்து நின்று இலக்கணத் தொழிற்பாட்டை வேறுபடுத்துவது வேற்றுமை எனப்படும்.  

இரண்டாம் வேற்றுமை உருபு ஐ 

மூன்றாம் வேற்றுமை உருபு ஆல், ஆன், ஒடு, ஓடு  உடனிகழ்ச்சி.  

நான்காம் வேற்றுமை உருபு கு. கோடல் பொருள் இதாவது கொடுப்பது ஏற்பது. 

ஐந்தாம் வேற்றுமை உருபு இல், இன் (நின்று, இருந்து) விட,  காட்டிலும். 

ஆறாம் வேற்றுமை உருபு  அது, ஆது, அது அஃறிணை ஒருமை அ அஃறிணை பன்மை உடையது. 

ஏழாம் வேற்றுமை உருபு இல், கண், இடம், உள், மேல்  கீழ் இடப்பொருள் 

இந்த வேற்றுமை உருபுகள் எதை ஒட்டி இன்று பயன்பாட்டில் வந்திருக்கலாம் என்பதை வேரியல் மூலம் விளக்கும் ஒரு முயற்சியே இந்த பதிவு. இதுவரை யாரும் மேற்கொள்ளாத முயற்சி இது. இதில் தவறு இருக்கலாம் என்றாலும் இனியும் காலம் தாழ்த்துவது தவறு என்ற கருத்தில் நான் முன்னெடுப்பது. 

ஐ  (eye) - பழமையில் ஒருவர் மேல் அல்லது ஒன்றன் மேல் பார்வை செலுத்தி , நோக்கு செலுத்தி அவனை, இவனை, அதை, இதை என்று புருவத்தை அசைத்தும் உயர்த்தியும் சுட்டுவது என்பது நடைமுறையில் வந்த போது கண்ணை ஒட்டி இந்த ஐ பயன்பாடு இரண்டாம் வேற்றுமை பயன்பாட்டில் வந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. கண்ணை குறிக்கும் ஐ (eye)  என்ற சொல் இக்கால் தமிழ் இலக்கிய, பேச்சு  வழக்கொழிந்து போனாலும் ஆங்கிலத்தில் உடல் உறுப்பின்  பெயர்ச்  சொல்லாக இன்றும் ஐ / eye உள்ளது. ஐ க்கு  சான்றாக ஐகுந்தம் வணிகக் கல்வெட்டு பாடம் ஒன்றை சுட்ட முடியும்.  ''கண்டழி / மூலபத்திரரும் ஐய்யன் போய் / களமடக்கி கீழ் மேற் காக்கை''  இங்கே "ஐய்யன்" என்பது கண் இமைக்கும் நேரத்தில் எனப் பொருள்படும். ஆங்கிலத்தில் in no time என்பரே அதற்கு இணையானது ஐய்யன்.

ஆல் - வலிமைக் கருத்தில், ஆற்றல் கருத்தில் வழக்கில் வந்தது. ஆல் > ஆள் > ஆண்மை > ஆள் + தல் = ஆற்றல்,  தெலுங்கில் வல்ல என்ற சொல் இதற்கு இணையாக பயன்படுத்தப்படுவதை நோக்கினால் மூன்றாம் வேற்றுமை "ஆல்"  ஆட்சி பற்றி  தெளிவு கிட்டும். ஒடு - ஒல் > ஒள் > ஒடு பொருந்துதற் கருத்தில் உடனிகழ்வாக ஆளப்படுகிறது.

கு(ல்) - குறிப்பாக சொல்வதால் கு இதன் பயன்பாட்டில் வந்தது. குறிப்பு > குறித்தல் > குறி என்றால் முதலில் புள்ளியிட்டு குறிப்பதாகும். எனவே குறியின் வேர் "குல்" என்பதை கடைக்குறையாக நான்காம் வேற்றுமைக்கு பயன் கொண்டனர். கூரிய ஒன்றை கொண்டு சிறு துளை ஏற்படுத்தி குறிப்பதே  குறி ஆகும். 

இல், இன் (நின்று, இருந்து)  - அசையா, பெயரா கருத்தில் இடம் குறித்து தோன்றியது.  இடம் என்பதும் பெயராதது, அசையாதது காண்க. 

அது - சார்பு, உடைய, உரிமை கருத்து உடையது.  அத்து > அது - இணைப்பு உறவை சுட்டுவதால் பயனில் வந்தது.

கண் - நிலையாக உள்ளதை பெயராமல் உள்ளதை குறிப்பது. ஐந்தாம் வேற்றுமை போன்றது. இக்கால் இந்த வேற்றுமை வழக்கொழிந்தது. 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/E099C60A-8C8A-4FC5-A04C-4EDC3A0B5C56%40earthlink.net.

Jean-Luc Chevillard

unread,
Aug 13, 2023, 1:55:50 AM8/13/23
to vall...@googlegroups.com, rajam, mintamil, tamilmantram
Dear VSR,

here (as attachment)  is one explanation given by Cēṉāvaraiyar
(under TC62c)

I hope this is useful

அன்புடன்

-- Jean-Luc

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/E099C60A-8C8A-4FC5-A04C-4EDC3A0B5C56%40earthlink.net.

TC_62c_5.png

Seshadri Sridharan

unread,
Aug 13, 2023, 2:49:52 AM8/13/23
to tamil...@googlegroups.com
பெயர்ச்சொல்லின் மாறுபட்ட நிலையை (position) உணர்த்துவதே வேற்றுமை.

rajam

unread,
Aug 15, 2023, 1:00:36 AM8/15/23
to tamilmantram, vallamai, mintamil
வணக்கம். என் பதிவுக் கேள்விக்கு மறு பதிவிட்ட சேசாத்திரி, Jean-Luc-Chevillard, நா. கணேசன், சேதுராமன் முத்துசாமந்தி ஆகியோருக்கு மிக்க நன்றி! 

Sethuraman Muthusamandi என்பவர் சொன்னது பொருத்தமாக உள்ளது: 

/// வாழ்க வளமுடன்.குழந்தையைக்கொடு.குழந்தைக்குக்கொடு.முதல்தொடர்-கழந்தையை (என்னிடம்)கொடு என்றுபொருள்படும். 2ஆம்தொடர்-(இதை)க்
குழந்தைக்குக்கொடு  என்று  பொருள்படும். ஆகப் பொருள்  வேறுபடுகின்றது.வேறுபடுத்துவது  எது? பெயர்ச்சொல்லலின் ஈற்றில் இடம் பெற்றுள்ள ஐ\கு.
பெயர்ச்சொல்லின்  ஈற்றில் வந்து பெயர்ச்சொல்லின பொருளை வேறுபடுத்துவது  வேற்றுமை.ஐ\கு இரண்டும்  வேற்றுமை உருபுகள்/// 

இன்னும் இதை எளிமைப்படுத்தி … இலக்கணப் பயிற்சி இல்லாதார்க்கு எப்படிச் சொல்லுவது என்று யோசிப்பது நல்லது.    

‘வேற்றுமை என்றால் என்ன’ என்று தொல்காப்பியர் வரையறுக்கவில்லை. 
‘வேற்றுமைகள் இத்தனை. வேற்றுமை உருபுகள் இவை, …’ என்றுதான் தொல்காப்பியத்தில் படிக்கிறோம்.  
‘வேற்றுமை, வேற்றுமைக் கிளவி, வேற்றுமைச்சொல், வேற்றுமைப் பொருள்’ ஆகிய கோட்பாடுகளைத் தொல்காப்பிய நூற்பாக்களின் மூலம் நாம் உய்த்தறியவேண்டும்.  அதைத்தான் நான் முயன்றுகொண்டிருக்கிறேன். 

மீண்டும் எல்லாருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்,
ராஜம் 

Seshadri Sridharan

unread,
Aug 15, 2023, 5:07:05 AM8/15/23
to tamil...@googlegroups.com
On Tue, Aug 15, 2023 at 10:30 AM rajam <ra...@earthlink.net> wrote:

உமது பழைய கேள்விக்கு எனது பழைய விடை   

  //'பெயர்ச்சொல்லின் மாறுபட்ட நிலை என்றால் என்ன? பெயர்ச்சொல் ஏன் மாறுபடுகிறது?’ என்று எனக்கு விளங்கவில்லை. 

முதல் வேற்றுமை பெயரிடுவதை மட்டுமே முன்வைப்பதால் பெயர் வேற்றுமை nominative case எனலாம்.

ஒளிக் கருத்து / வெண்மை கருத்து சுல் > சுள் > சுடு > சுட்டு > சூடு ( தெலுங்கில் பார் என்னும் ஏவல் வினை) சுல் > சுர் > சூரியன்.  பழந் தமிழில் சுட்டு என்ற சொல் கண்ணையே குறித்தது. சுட்டு என்றால் விரலால் சுட்டுவது அல்ல கண்ணால் சுட்டுவதே சுட்டு ஆகும். எனவே பெயரை முன்வைத்து  சுட்டுவதால் இரண்டாம் வேற்றுமையை சுட்டு வேற்றுமை - identity / accusative  case எனலாம்.

பெயருக்கு வல்லமையை ஏற்றி  உரைப்பதால் மூன்றாம் வேற்றுமையை வல் வேற்றுமை - instrumental case எனலாம். 

பெயர் குறிப்பிட்டு (குல்) கொடுப்பதை தெரிவிப்பதால் நான்காம் வேற்றுமையை குறிப்பு வேற்றுமை - dative case எனலாம்.

பெயரை நிலையாக வைத்து நீங்குதல் கருத்தை நின்று, இருந்து என விவரிப்பதால் ஐந்தாம் வேற்றுமையை நிலை (குலைப்பு) வேற்றுமை - ablative case எனலாம். 

பெயருக்கு உரிமையை சார்த்தி அத்து > அது சொல்வதால் ஆறாம் வேற்றுமையை உரிமை வேற்றுமை - genitive case எனலாம்.

கண் என்பது இடத்தை  மையப்படுத்தி (core) பெயரை சொல்வதால் கூர் வேற்றுமை - locative case எனலாம்.

பெயரை விளிக்கும் வகையில்  கூறுவதால் எட்டாம் வேற்றுமையை விளி வேற்றுமை - vocative case எனலாம்.  

தமிழில் வேற்றுமைக்கு இப்படி தனித்தனி பெயர் இல்லாமல் முதல், இரண்டாம் என்று எண்ணை  சுட்டுவதால் கூட வேற்றுமை என்றால் என்ன என்று விளங்காமல் போகலாம். ஒரு மொழியில் பெயரும் வினையுமே முகமையான ஆட்டம் ஆடுகின்றன. பெயர் இல்லாமல் வினையை குறித்தால் அது யார் தொடர்பானது என பொருள்படாது. காட்டாக, " பயிற்சி நன்று" என்று சொல்லிவிடலாம். அதையே "பயிற்சி உடலுக்கு நன்று" என ஒரு பெயரை குறிப்பிட்டால் அது முழுமையான பொருள் தரும். ஆனால் அந்த பெயர் வெறும் பெயராக இல்லாமல் வினைக்கு மதிப்பு அளிக்கும், மதிப்பு கூட்டும் வகையில் தன் நிலையை மாற்றிக் கொள்கிறது. பெயரின் மாறுபட்ட நிலைமையை தான் வேற்றுமை என்கின்றனர். யார், யாரால், யாருக்கு, யாரது என்று பெயரையே சுற்றி சுழல்வதால் வேற்றுமை எனப்படுகிறது.

//'பெயர்ச்சொல்லின் மாறுபட்ட நிலை என்றால் என்ன? பெயர்ச்சொல் ஏன் மாறுபடுகிறது?’ 

சுட்டல், இயலுமை, உரிமை, நீங்கல் ஆகியவற்றால் பெயர் நிலை மாற்றம் பெறும். இந்த நிலை மாற்றமே வேற்றுமை ஆகும். ஆங்கிலத்தில் case > நிகழ்வு இடம், ஆள் (place, person) ஆகியவற்றை கணக்கில் கொண்டு சொல்லப்படுகிறது. 

Appasamy Murugaiyan

unread,
Aug 15, 2023, 7:27:54 AM8/15/23
to tamil...@googlegroups.com, vallamai, mintamil
முனைவர் VSR அவர்களுக்கு வணக்கம்,
"செ.வை.ச. வேற்றுமை பற்றித் தொல்காப்பியர்",  கட்டுரையை இணைத்துள்ளேன். உதவியாக இருக்கும் என எண்ணுகிறேன்.
அன்புடன்
முருகையன்

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/E099C60A-8C8A-4FC5-A04C-4EDC3A0B5C56%40earthlink.net.

--

Appasamy Murugaiyan
EPHE-GREI
Paris-France
வேற்றுமை பற்றித் தொல்காப்பியர்-செ_வை_ச.pdf

C.R. Selvakumar

unread,
Aug 15, 2023, 1:14:57 PM8/15/23
to tamil...@googlegroups.com, vallamai, mintamil
அம்மையீர்,
வணக்கம்.
//தமிழிலக்கணத்தில் குறிக்கப்படும் 'வேற்றுமை’ என்றால் என்ன என்று சுருக்கமாக, தெளிவாகச் சொல்லி உதவுவீர்களா? //

உங்களுக்குச் சொல்லும் அளவுக்கு எனக்குத் தெரியாது.
நான் புரிந்துகொண்டிருப்பது ஒரு சொற்றொடரில் வரும் பெயர்ச்சொற்களுக்கு இடையே வினை
தொழிற்படும் (அல்லது உறவு கொள்ளும்) வேறுபாட்டை உணர்த்துவது வேற்றுமை. 

முருகன் வள்ளியைப் பார்த்தான் என்றால் பார்க்கப்படுபவள் வள்ளி என்பதைக் குறிக்க 'ஐ'
என்னும் உருபு வள்ளி என்னும் பெயர்ச்சொல்லோடு ஒட்டி வருகின்றது.

வேற்றுமை இல்லாமல் முருகன் வள்ளி பார்த்தான் என்றால் யார் யாரை பார்த்தார்த்தார் என்பது
விளங்காது. இங்கே வள்ளி என்பது பெண்பாலாக இருப்பதால் குழப்பம் இல்லாமல் இருக்கலாம், ஆனால்
முருகன் இராமனைப் பார்த்தான் என்பதை ஐ என்னும் வேற்றுமை இல்லாமல் எழுதினால்
முருகன் இராமன் பார்த்தான் என்றால் யார் யாரைப் பார்த்தான் என்பது தெளிவாகாது.
எனவே பெயர்ச்சொற்கள் எவ்வாறு வினையுடன் தொழிற்படுகின்றது என்று வேறுபடுத்திக் காட்டுவது.
பெயர்ச்சொற்களிடையே உள்ள வேறுபாட்டையும் உறவையும் காட்டுவது.

சில வினைகள் மூன்று பெயர்ச்சொற்களையும் தொடர்புபடுத்தவல்லது.
கந்தன் முருகனுக்கு ஒரு நூலைக் கொடுத்தான் என்றால், இங்கே
கொடு என்னும் வினை
யார் ,யாருக்கு எதைக் கொடு(த்தான்) என்று வேறுபடுத்திக் காட்டவல்லது.

நீங்கள் வேண்டும் விடை அல்லது விளக்கம் கிடைத்ததோ இல்லையோ, எனக்குத்
தெரிந்ததைச் சொன்னேன். 

நன்றி
அன்புடன்
செல்வா

On Sun, Aug 13, 2023 at 8:41 AM rajam <ra...@earthlink.net> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/E099C60A-8C8A-4FC5-A04C-4EDC3A0B5C56%40earthlink.net.

--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

rajam

unread,
Aug 15, 2023, 2:39:42 PM8/15/23
to tamilmantram, Seshadri Sridharan
வணக்கம், சேசாத்திரி.

///சுட்டல், இயலுமை, உரிமை, நீங்கல் ஆகியவற்றால் பெயர் நிலை மாற்றம் பெறும். இந்த நிலை மாற்றமே வேற்றுமை ஆகும். /// 

பெயர் நிலை” என்றால் என்ன என்று சுருக்கமாகவும் தெளிவாகவும் சொன்னால் நல்லது. 

நன்றி,
ராஜம் 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

rajam

unread,
Aug 15, 2023, 3:17:43 PM8/15/23
to tamilmantram, vallamai, mintamil
வணக்கம். முனைவர் செ.வை. ச அவர்களின் சிறப்பான ஆராய்ச்சிக் கட்டுரை அந்தக் கால ஆய்வு மாணவர்களுக்கு உதவும்/உதவியது. இக்காலத்தில் எத்தனைப் பேர் ஆர்வமுடன் அதைப் படிப்பார்கள் என்பது என் கவலை. 

இன்றைய பள்ளி, கல்லூரிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று நாம் விரும்பினால் … 
  • எந்த வகைத் தமிழை (இலக்கணம், இலக்கியம், செந்தமிழ், நடைமுறைத் தமிழ், வணிகத் தமிழ், வட்டாரத் தமிழ், …)?
  • எந்த வகுப்பில்?
  • எதற்காக?
  • அறிமுகப்படுத்த வேண்டும்? 
  • அந்த வகைப் படிப்பிற்கேற்ற பயிற்சி நூல்கள் இருக்கின்றனவா?        
என்றெல்லாம் நாம் நினைத்துப் பார்க்கவேண்டும், இல்லையா? 
அதனால்-தான், மிக எளிய வகையில் ‘வேற்றுமை’ என்ற கோட்பாடு/கருத்து/பொருண்மை (concept) குறித்து எழுத முனைந்திருக்கிறேன்.  

மிக்க நன்றி, 
ராஜம்  

To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CALxSkSv_1GM78tmTx%2BtTDJgJoqGPLABO1-ogvnG%2B_%3DKajrFxLg%40mail.gmail.com.
<வேற்றுமை பற்றித் தொல்காப்பியர்-செ_வை_ச.pdf>

Velmurugan Subramanian

unread,
Aug 15, 2023, 3:58:44 PM8/15/23
to tamil...@googlegroups.com, vallamai, mintamil

அன்புள்ள அம்மா, 

வேற்றுமை என்றால் என்ன என்று இங்கு தமிழ்பயிலும் HSCP (High School Credit Program; Tamil as a world language)  மாணவர்களுக்கு நான் கீழ்க்கண்டவாறு  விளக்குவேன். 

மாணவர்களே, 

பெயர்ச்சொல் என்றால் என்ன என்று உங்களுக்குத்தெரியும். இல்லையா? 

அப்படிப்பட்ட.. 

1) ஒரு பெயர்ச்சொல் எழுவாயாக (subject) நிற்கலாம்.

       - மரம் விழுந்தது..

2) அதே பெயர்ச்சொல் செயப்படுபொருளாகவும்(object) நிற்கலாம். 

       - இராமன் மரத்தை வெட்டினான். 

3) அதே பெயர்ச்சொல் கருவியாகவும்(tool) நிற்கலாம்… 

       - இது மரத்தால் செய்யப்பட்டது

..

8) அதே பெயர்ச்சொல்லைச்சொல்லி அது அடையாளப்படுத்தும் ஒரு பொருளை விழிக்கவும்முடியும்…அல்லாவா!

     - ஏ! மரமே, நான் ஒரு கூடுகட்டலாமா? 

இப்படியெல்லாம் மரம் என்னும் ஒரு பெயர்ச்சொல் சில உருபுகளை ஏற்கும்போது அது நிற்கும் தன்மை மாறிவிடுகிறதுபார்தீர்களா!. (எழுவாயாக, செயபடுபொருளாக, கருவியாக....) 

இதைத்தான் தமிழிலக்கணம் வேற்றுமை (வேறுபடுத்திக்காட்டும் தன்மை) என்று கூறுகிறது. முதல்வேற்றுமைக்குமட்டும் உருபு கிடையாது!

என்று விளக்குவேன்! 

என்னுடைய புரிதல் இங்கு சொல்லப்படும் பல்வேறு விளக்கங்களுடன் ஒத்துப்போகிறது என்றே கருதுகிறேன்.

முதல்வேற்றுமைக்குமட்டும் உருபு கிடையாது. ஆனால், அதையே “” (NULL) உருபு என்று எடுத்துக்கொண்டால் ஒரு சொற்றொடரில் அமைந்திருக்கும் பெயர்ச்சொல் எப்போதும் உருபுடனே அமைந்து 8 வேற்றுமையுள் ஒன்றை ஏற்றே நிற்கிறது என்று பார்க்கமுடியும் என்று நீட்டுவேன்.  - [ இதுபோன்ற பார்வையை மொழியியல்வழியாக எனக்குக்கொடுத்த  பேரா. தெய்வசுந்தரமவர்களுக்கு நன்றி!] 

நன்றி

வேல் 

செவ்., 15 ஆக., 2023, பிற்பகல் 12:17 அன்று, rajam <ra...@earthlink.net> எழுதியது:

rajam

unread,
Aug 16, 2023, 12:44:27 AM8/16/23
to tamil...@googlegroups.com, hen...@gmail.com
அன்புள்ள வேல்முருகன்,

பதிவு கண்டு மிக்க மகிழ்ச்சி! மிக்க நன்றி! 

உங்களது முயற்சி மிக நல்ல முயற்சியாகத் தெரிகிறது. இன்னோர் இழையில் தனியாக HSCP-பற்றி உரையாட விரும்புகிறேன். பார்ப்போம். 

உங்கள் முயற்சி தொடரவும் மிக நல்ல பயன் தரவும் என் மனமார்ந்த வாழ்த்து! 

அன்புடன், 
ராஜம்      

rajam

unread,
Aug 16, 2023, 1:44:49 AM8/16/23
to tamil...@googlegroups.com, vallamai, mintamil, selvakumar C.R.
அன்புள்ள செல்வா, வணக்கம். 

/// நான் புரிந்துகொண்டிருப்பது ஒரு சொற்றொடரில் வரும் பெயர்ச்சொற்களுக்கு இடையே வினை 
தொழிற்படும் (அல்லது உறவு கொள்ளும்) வேறுபாட்டை உணர்த்துவது வேற்றுமை. /// 

மிகச் சரியே. மிக்க நன்றி. 

‘தொழிற்பாடு’ போன்ற சொற்களைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள் இருப்பார்கள், இல்லையா? 
ஆகவே, இன்னும் எளிமையாக என்ன சொல்லலாம், எப்படிச் சொல்லலாம், அப்படிச் சொல்ல முடியுமா என்ற சிந்திப்பில் என் காலம் கழிகிறது. 

பிற பின்னர். 

அன்புடன்,
ராஜம் 

Seshadri Sridharan

unread,
Aug 16, 2023, 7:02:16 AM8/16/23
to rajam, தமிழ் மன்றம்
On Wed, Aug 16, 2023 at 12:09 AM rajam <ra...@earthlink.net> wrote:
வணக்கம், சேசாத்திரி.

///சுட்டல், இயலுமை, உரிமை, நீங்கல் ஆகியவற்றால் பெயர் நிலை மாற்றம் பெறும். இந்த நிலை மாற்றமே வேற்றுமை ஆகும். /// 

பெயர் நிலை” என்றால் என்ன என்று சுருக்கமாகவும் தெளிவாகவும் சொன்னால் நல்லது. 

பெயரின் நிலை என்பது position of  noun. வேல் முருகன் "மரம்" என்ற பெயர்ச் சொல்லை  வேற்றுமைக்கு அழகாக எடுத்துக் காட்டினார்.  

4 - மரத்திற்கு தண்ணீரை  ஊற்று.  இதில் மரம் 4 ஆம் வேற்றுமை. தண்ணீர் 2 ஆம் வேற்றுமை.

5 - மரத்தினின்று  பழத்தை பறித்தேன்.இதில் மரம் 5 ஆம் வேற்றுமை/ பழம் 2 ஆம் வேற்றுமை.

6. ஒரு மரத்து பழம். இதில் மரம் 6 ஆம் வேற்றுமை/ பழம் 1 ஆம் வேற்றுமை. 

7 - மரத்தின் கண் கூடு உள்ளது. இதில் மரம் 7 ஆம் வேற்றுமை. கூடு 1 ஆம் வேற்றுமை,

rajam

unread,
Aug 16, 2023, 11:09:25 PM8/16/23
to tamilmantram, vallamai, mintamil, selvakumar C.R., subramanian Velmurugan, seshadri Sridharan
வணக்கம். 

எல்லாரும் ‘வேற்றுமை'க்கு மிக அருமையான எடுத்துக்காட்டுகள் (செயப்படு பொருள், கருவி, … இப்படி) தருகிறீர்கள். மிக நன்று. மிக்க நன்றி. 

ஆனால் …  ‘பெயர் நிலை,’ ‘தொழிற்பாடு,’ ‘எழுவாய், செயப்படு பொருள்,’ ‘கருவி,’ ‘பெயர்ச்சொல் நிற்கும் தன்மை’ ...  போன்ற ‘கலை நுணுக்கச்’ சொற்களைப் பயன்படுத்தாமல் … ‘ 'வேற்றுமை’ என்றால் என்ன?’ என்று அந்தக் கோட்பாட்டை அறிமுகப்படுத்த முடியுமா? முயன்று பார்க்க வேண்டுகிறேன்.   

'வேற்றுமை என்றால் என்ன' என்று ஒரு சிறு பிள்ளைக்கு அறிமுகப்படுத்த விரும்பும் நாம் … எழுவாய், செயப்படுபொருள், உடனிகழ்ச்சி, தற்கிழமை, பிறிதின் கிழமை … இப்படிப்பட்ட சொற்களைப் பயன்படுத்தி விளக்கம் சொல்வது பயன் தருமா? அப்படிச் சொல்வது எனக்கு ஒத்து வாராது.       

மிகவும் கடினமான ஒரு கோட்பாட்டை அறிமுகப்படுத்தும்போது அதை விளக்க இன்னும் அரிய ‘கலை நுணுக்கச்சொற்களை’ப் பயன்படுத்துவது ஏனோ எனக்கு ஒத்து வரவில்லை. 

விருப்பமிருந்தால் … இரண்டே இரண்டு ‘கலை நுணுக்கச்’ சொற்களை — ஒரு பெயர்ச்சொல், ஒரு வினைச்சொல் — மட்டும் முதலில் அறிமுகப்படுத்திவிட்டு, தொடர்ந்து ‘வேற்றுமை’ என்ற கோட்பாட்டை விளக்கப் பார்ப்போமே.   

மனதில் வைத்துக்கொள்ள வேண்டியது — இலக்கணப் பயிற்சி இல்லாதவர்க்காக … ‘வேற்றுமை’ என்ற கோட்பாட்டை அறிமுகப்படுத்த இந்த விளக்கம் தேவைப்படுகிறது.  

[தற்குறிப்பு: ஏழாம் வேற்றுமையின் சிறப்பு என்ன என்று முன்பொருமுறை இணையத்தில் கேட்டிருந்தேன். அதற்குத் தகுந்த விளக்கம் கிடைக்கவில்லை. அண்மையில் ... சில பழம், காய்களின் குறுக்கு வெட்டுத் தோற்றம் எனக்குப் புதியதொரு பார்வையைத் தந்திருக்கிறது. தோழி ஒருவரிடம் அது பற்றிச் சொன்னேன். அவர் கேட்டதும் சொன்னதும்: “வேற்றுமைன்னா என்ன? சுருக்கமாச் சொல்லுங்க.”  
ஏழாம் வேற்றுமைக்கும் கீவி, காரட், முள்ளங்கி ஆகிய பழம், காய்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்துக்கும் என்ன தொடர்பு? இலக்கணப் பயிற்சி இல்லாத அவருக்கு விளக்கம் சொல்லத் திணறிக்கொண்டிருக்கிறேன்.]     

மிக்க நன்றி,
ராஜம்       

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

Seshadri Sridharan

unread,
Aug 17, 2023, 2:04:16 AM8/17/23
to தமிழ் மன்றம்
On Thu, Aug 17, 2023 at 8:39 AM rajam <ra...@earthlink.net> wrote:

 ஆங்கிலத்தில் core எதை குறிக்குமோ அதுவே கண் என்ற 7 ஆம் வேற்றுமை. இன்று அது வழக்கொழிந்து விட்டது 

C.R. Selvakumar

unread,
Aug 17, 2023, 5:07:37 AM8/17/23
to rajam, tamilmantram, vallamai, subramanian Velmurugan, seshadri Sridharan
அம்மா உங்கள் தேடல் சுவை மிக்கது (கீவி பழத்தைச் சொல்லவில்லை).
புரிகின்றது. 

இலக்கண அறிமுகம் இல்லாதவர்களுக்கு
வேற்றுமை என்றால் என்ன என்பதன் "வரையறை" (இன்னொரு கலைச்சொல்)
அல்லது விளக்கம் தருவதைவிட எளிய எடுத்துக்காட்டுகளைத் தந்து விளக்கலாம் 
என்று நினைக்கின்றேன்.

அன்புடன்
செல்வா 
 
Sethuraman Muthusamandi

unread,
Aug 17, 2023, 8:19:17 AM8/17/23
to tamil...@googlegroups.com
வணக்கம். கண்ணன்  தேர்ச்சி  பெற்றான்.  கண்ணனால்  தேர்ச்சி  பெற்றான்  இரு  தொடர்களிலும் தேர்ச்சி பெற்றான் இடம் பெற்றுள்ளது.
முதல்  தொடரில்  தேர்ச்சி  பெற்றவன்  கண்ணன்.  2ஆம்  தொடரில்தேர்ச்சி பெற்றவன்  கண்ணன்  இல்லை.. ஆக ஆல்பெயர்ச்சொல்லின்
இறுதியில்  இடம் பெற்றதால்  பெயர்ச்சொல்லின்பொருள் மாறியது.

rajam

unread,
Aug 17, 2023, 3:44:26 PM8/17/23
to tamil...@googlegroups.com, Seshadri Sridharan
வணக்கம் சேசாத்திரி. 

On Aug 16, 2023, at 11:04 PM, Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:

ஆங்கிலத்தில் core எதை குறிக்குமோ அதுவே கண் என்ற 7 ஆம் வேற்றுமை. இன்று அது வழக்கொழிந்து விட்டது  

தமிழ்க் ‘கண்'ணுக்கு நிகராக ‘eye’ என்ற ஆங்கிலச் சொல்லையே பயன்படுத்தலாம். 

விரும்பினால் ...  origin, center of activity என்ற ஆங்கிலச் சொற்களையும் பயன்படுத்தலாம். 

‘eye’ என்ற ஆங்கிலச் சொல்லின் ‘eye of a cyclone’ என்ற பயன்பாடு தமிழின் ஏழாம் வேற்றுமையைப் புரிந்துகொள்ள உதவலாம். 

படமும் விளக்கமும் பார்க்க: https://en.wikipedia.org/wiki/Eye_(cyclone) 

rajam

unread,
Aug 17, 2023, 4:17:47 PM8/17/23
to tamil...@googlegroups.com, vallamai, subramanian Velmurugan, seshadri Sridharan
வணக்கம், செல்வா. 

என் கருத்து இடைச்செருகலாக … 

On Aug 17, 2023, at 2:06 AM, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:

அம்மா உங்கள் தேடல் சுவை மிக்கது (கீவி பழத்தைச் சொல்லவில்லை).
புரிகின்றது.  

கீவிப் பழத்தைச் சுவைத்திருப்பீர்கள். அதன் குறுக்கு வெட்டுத் தோற்றம் மிக அழகானது! மிக அருமையான படம் ஒன்று வணிக முறையில் எனக்குக் கிடைத்தது. ஆனால் அந்தப் படத்தை என் கட்டுரைக்காகப் பயன்படுத்தினால் … ஏதாவது ‘காப்புரிமை’ச் சட்டத்தை மீறிவிடுவேனோ என்ற அச்சம். 

உண்மையில் … கீவிப்பழம், காரட், முள்ளங்கி போன்றவற்றின் குறுக்கு வெட்டுத் தோற்றம் ஏழாம் வேற்றுமையை விளக்க உதவும் என்று நம்புகிறேன். 

இலக்கண அறிமுகம் இல்லாதவர்களுக்கு
வேற்றுமை என்றால் என்ன என்பதன் "வரையறை" (இன்னொரு கலைச்சொல்)
அல்லது விளக்கம் தருவதைவிட எளிய எடுத்துக்காட்டுகளைத் தந்து விளக்கலாம் 
என்று நினைக்கின்றேன்.

அந்த எளிய எடுத்துக்காட்டுகளைச் சொல்லும்போதும் முன்பின் அறிமுகமில்லாத கலைச்சொற்களையல்லவா (செயப்படுபொருள், கருவி, உடனிகழ்ச்சி, …) பயன்படுத்த வேண்டியிருக்கிறது. இது தவிர்க்க முடியாதது என்று தோன்றுகிறது. :-( 

rajam

unread,
Aug 19, 2023, 12:00:03 AM8/19/23
to tamil...@googlegroups.com, sethura...@gmail.com
வணக்கம். என் கருத்து கீழே இடைச்செருகலாக … 

On Aug 17, 2023, at 5:19 AM, Sethuraman Muthusamandi <sethura...@gmail.com> wrote:

வணக்கம். கண்ணன்  தேர்ச்சி  பெற்றான்.  கண்ணனால்  தேர்ச்சி  பெற்றான்  இரு  தொடர்களிலும் தேர்ச்சி பெற்றான் இடம் பெற்றுள்ளது.
முதல்  தொடரில்  தேர்ச்சி  பெற்றவன்  கண்ணன்.  2ஆம்  தொடரில்தேர்ச்சி பெற்றவன்  கண்ணன்  இல்லை.. ஆக ஆல்பெயர்ச்சொல்லின்
இறுதியில்  இடம் பெற்றதால்  பெயர்ச்சொல்லின்பொருள் மாறியது. 

ஆம். ஆனால், இந்த எடுத்துக்காட்டு இக்காலப் பள்ளிச் சிறுவர்களுக்குச் சுமையாக இருக்கும் எனத் தோன்றுகிறது. 

கண்ணன், தேர்ச்சி, பெற்றான் என்ற மூன்று சொற்களை முதலில் அறிமுகப்படுத்த வேண்டும், இல்லையா. 

பிறகு … கண்ணனால் என்ற வடிவை அறிமுகப்படுத்த வேண்டும், இல்லையா.  

இந்த மாதிரிச் சிக்கல்களை எப்படிக் கடப்பது என்பதே என் கவலை. 

C.R. Selvakumar

unread,
Aug 19, 2023, 1:03:30 AM8/19/23
to tamil...@googlegroups.com, sethura...@gmail.com
அம்மா,

என்னென்ன வினைச்சொற்கள் (கொடு, தா, வா, போ, எடு..?)
என்னென்ன பெயர்ச்சொற்கள் (வீடு, புத்தகம், தலை, கால், பால்..?)
தெரியும், பயன்படுத்தலாம் என்றால் தக்க எடுத்துக்காட்டுகளைத் 
தரலாம் (எங்களைவிட நீங்களே சிறந்த எடுத்துக்காடுகளைத் தெருவீர்களே).

'அத்து' போன்ற சாரியைகள் வராமல் முதலில் சொல்லித்தர வேண்டும்.
மரம் + ஐ = மரத்தை (மரம் + அத்து +ஐ)  போன்றவை. எனவே -ம் அல்லது -அம் என்றும் முடியும் சொற்களை முதலில் தவிர்க்கவேண்டும்.  வீடு என்பது கூட வீட்டை என்று இரட்டிக்கும். இவற்றை முதலில் மரபாகக் கொள்ளலாம். 

பால் என்ற சொல்லை எடுத்துக்கொண்டால்.
முருகன் பா
லைக் குடித்தான்.
பால் இனிக்கும், 
பால் உடம்புக்கு நல்லது.
பா
லில் பழம் விழுந்தது.
பாலோடு பழமும் சேர்த்து சாப்பிடு
பாலால் உடம்புக்கு பல நன்மை. 

இதே போல கால், காலை, காலால், காலுக்கு, காலோடு கையும்.. என்று 
பயன்படுத்திக் காட்டலாம். ஆனால் கற்பவர் ஒருவரின் வயது பின்புலம் 
முன்னைய தமிழறிவு ஆகியவற்றைக் கொண்டுதான் எடுத்துக்காட்டுகள்
அமைக்க வேண்டும். 

அன்புடன்
செல்வா

rajam

unread,
Aug 20, 2023, 1:21:44 AM8/20/23
to tamilmantram, c.R. Selvakumar, sethura...@gmail.com, subramanian Velmurugan
அன்புள்ள செல்வா, வணக்கம். 

எடுத்துக்காட்டுக்கென்ன பஞ்சம்! 

பிறந்தது, அழுதது, சிரித்தது, வளர்ந்தது, தும்மியது, இருமியது, செருமினான், உருமினான்,  … போன்ற சொற்களை எடுத்துக்கொள்ளலாம். இந்தச் செயல்கள் அனைத்தும் ஒருவர் தானாகச் செய்பவை. Reflex actions என்றும் சொல்லலாம்.                                                          

எளிமையாகத் தொடங்க நினைத்தால் …

குழந்தை என்ற பெயர்ச்சொல்லை எடுத்துக்கொள்ளவும். அந்தக் குழந்தையின் செயல்களைச் சொல்லவும்.

குழந்தை பிறந்தது
குழந்தை அழுதது
குழந்தை சிரித்தது
குழந்தை தவழ்ந்தது
குழந்தை உட்கார்ந்தது        
குழந்தை நடந்தது 
குழந்தை ஓடியது 
குழந்தை வளர்ந்தது 

போன்ற வாக்கியங்கள்/சொற்றொடர்கள் அனைத்தும் ஒரு குழந்தையின் ‘தன் - செயல்’ நிகழ்ச்சிகளை, இயல்பாக நிகழும் செயல்களைக், குறிக்கின்றன, இல்லையா? 

அடுத்து … மெல்ல … அம்மாவைக் கொண்டுவருவோம்.

அம்மா குழந்தையை எடுத்தாள்
அம்மா குழந்தையோடு வந்தாள்
அம்மா குழந்தைக்குப் பால் கொடுத்தாள் 

இங்கேதான் எமக்குச் சிக்கல் தொடங்குகிறது. குழந்தை என்ற சொல் ஏன் வேறுபடுகிறது என்று சொல்லவேண்டும்.  

கணினிப்படுத்த விரும்புவோருக்காக … 

குழந்தை — A 
அழுதது, … — B 
அம்மா — C 
பால், … — D 

A B  structure, where A is a constant and B is a variable. 
(குழந்தை சிரித்தது) 

C A D B  structure, where  C is tagged and D is a new variable.
(அம்மா குழந்தைக்குப் பால் கொடுத்தாள்)

We have to deal with such structures.    

எல்லாரையும் குழப்பிவிட்டேனோ? இப்போதைக்கு இது போதும் என்று நினைக்கிறேன்.  

சரி, மீண்டும் பார்ப்போம். 

அன்புடன்,
ராஜம்      

rajam

unread,
Aug 20, 2023, 2:16:07 AM8/20/23
to tamil...@googlegroups.com, c.R. Selvakumar, sethura...@gmail.com, subramanian Velmurugan
oops! மன்னிக்கவும். 

Please read 

/// C A D B  structure, where  C is tagged and D is a new variable.
(அம்மா குழந்தைக்குப் பால் கொடுத்தாள்) /// 

as 

CADB structure where A is tagged

Thanks,
rajam 

Seshadri Sridharan

unread,
Aug 20, 2023, 4:13:17 AM8/20/23
to tamil...@googlegroups.com
அடுத்து … மெல்ல … அம்மாவைக் கொண்டுவருவோம்.

அம்மா குழந்தையை எடுத்தாள்                                                     இங்கே குழந்தை சுட்டப்படுகிறது.
அம்மா குழந்தையோடு வந்தாள்                                                    இங்கே உடன் நிகழ்வாக குழந்தை சொல்லப்படுகிறது 
அம்மா குழந்தைக்குப் பால் கொடுத்தாள்                                  குழந்தை இங்கே குறிப்பாக சொல்லப்படுகிறது. 

இங்கேதான் எமக்குச் சிக்கல் தொடங்குகிறது. குழந்தை என்ற சொல் ஏன் வேறுபடுகிறது என்று சொல்லவேண்டும்.  

குழந்தை தொடர்பான செயல் மாறுபடுவதால் குழந்தைக்கான  சொல் வேறுபடுத்தப்பட வேண்டியுள்ளது.

Velmurugan Subramanian

unread,
Aug 20, 2023, 12:58:28 PM8/20/23
to tamil...@googlegroups.com
மிக அருமையான சிந்தனையோட்டத்தை பாடத்தினுள் முனைகிறீர்களம்மா! 
மிக எளிமை!  நானும் இந்த எளிய சிந்தனையோட்டத்தை என் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த முனைகிறேன். 

இங்கேதான் எமக்குச் சிக்கல் தொடங்குகிறது. குழந்தை என்ற சொல் ஏன் வேறுபடுகிறது என்று சொல்லவேண்டும்.  
//
முதற்சொற்றொடரில் செயலை யார் செய்கின்றார்? அம்மா வந்தபின் இரண்டாஞ்சொற்றொடரில் யார் செய்கின்றார், யார் செய்யப்படுகின்றார் என்று கேட்டு குழந்தை என்ற சொல் ஏன் வேறுபடுகிறது என்பதை விளக்கமுடியுமா என்று பார்க்கலாம். 

அடுத்ததாக, எப்படியெல்லாம் அதேசொல் வேறுபடவியலும் என்று கேட்டு அடுத்தடுத்த வேற்றுமைகளை உள்ளே கொண்டுவரமுடியுமா என்று பார்க்கலாம். 

-வேல்.

ஞாயி., 20 ஆக., 2023, முற்பகல் 1:13 அன்று, Seshadri Sridharan <ssesh...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

rajam

unread,
Aug 21, 2023, 4:50:54 PM8/21/23
to tamilmantram, Seshadri Sridharan, subramanian Velmurugan, C.R. Selvakumar
நல்லூக்கச் சொற்களுக்கு மிக்க நன்றி, வேல் முருகன்! 

செய்கின்றனர், செய்யப்படுகின்றனர் போன்ற சொற்களைத் தவிர்க்க முடியுமா? என்றும் … 
சுட்டுதல், உடன் நிகழ்வு, குறிப்பு போன்ற high-level concepts-ஐத் தவிர்க்க முடியுமா? என்றும் …
பார்த்துக்கொண்டிருக்கிறேன். 

இரவும் பகலும் இதே நினைப்புத்தான். என் நூலுக்கான கட்டுரைப்பகுதியை ஓரளவு முடித்துவிட்டேன்; இன்னும் செப்பனிட வேண்டும். ஒரு வழியாக முடித்த பின் விவரமான கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறேன். 

[தற்குறிப்பு: இன்றைய நிலையில் … தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் போன்றவற்றை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டுமா? ஏன்? அதனால் அவர்களின் வாழ்க்கைக்குப் பயன் என்ன? … என்றெல்லாம் நினைத்துப் பார்ப்பது நம் கடமை.] 

அன்புடன்,
ராஜம் 

Reply all
Reply to author
Forward
0 new messages