கண்ணெழுத்தும், வட்டெழுத்தும், கந்தெழுத்தும் - 1

187 views
Skip to first unread message

iraamaki

unread,
Jan 3, 2011, 8:08:10 AM1/3/11
to tamil...@googlegroups.com, tamil_...@googlegroups.com, gbin...@yahoogroups.com

கண்ணெழுத்தும் வட்டெழுத்தும், கந்தெழுத்தும் - 1

”அறிவின் எதிரி அறியாமையல்ல; அது அறிந்ததாய் எண்ணிக் கொள்ளும் மயக்கம்
                                                                                                                                                                                      - விண்ணியல் அறிஞர் ச்*டீவன் ஆக்கிங்

”தமிழெழுத்தும் கிரந்தமும் குறியேற்ற ஊடாடல்களும்” என்ற தொடரை முடித்து, அடுத்த சிந்தனையில் ஆழ்ந்திருந்த போது ”கிரந்தவெழுத்து எப்படி எழுந்தது? அதன் பின்புலம் என்ன? இற்றைத் தமிழெழுத்து வடிவம் எப்பொழுது தோன்றியது? சங்க காலத் தமிழெழுத்தின் பெயரென்ன? அது நம் இலக்கியங்களிற் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா? வட்டெழுத்து என்பது என்ன? அது எப்பொழுது புழக்கத்திலிருந்தது? ஏன் மறைந்தது? புள்ளியிட்ட தமிழியெழுத்து, வட்டெழுத்து, கிரந்தவெழுத்து என்ற மூவகை எழுத்துக்களுக்கும் இடையிருந்த ஊடாட்டு என்ன? - என்ற கேள்விகளுக்கு விடை சொல்லாது போனோமோ?” என்று தோன்றியது.

அதேபொழுது, ஒருங்குறி நுட்பியற் குழுவிற்கு முன், வந்த கிரந்த முன்மொழிவுகளை ஆழ்ந்து பயிலாது, வெறும் அரைகுறைப் புரிதலில், பொதுக்கைப் போக்கில் "கிரந்தம் x கிரந்த எதிர்ப்பு" என்று எளிமைப் படுத்தி, “தாம் பிடித்த முயலுக்கு மூன்றே கால்” என அடம்பிடித்து வறளி பேசுவோர் ஒருசிலர் இருக்கிறாரே? அவருக்கு இது போன்ற எழுத்துப் பின்புலங்களைச் சொல்வது தேவையா? இவருக்குச் சொல்லி என்ன பயன் விளையும்?” - என்று ஓரோவழி சலித்தும் போனேன். தமிழ்க்காப்பில் தாம் மட்டுமே முன்னிற்பதாய் முழங்கும் ஒரு சிலர், ”ஆ., இராம.கி கிரந்தத்தைத் தூக்கிப் பிடிக்கிறார்” என்று முற்றிலும் அவதூறாய்க் கைதூக்கும் நேரத்தில், ”இக் கேள்விகளுக்கு விடையிறுத்து என்னாகப் போகிறது?” என்று தயங்கியும் நின்றேன். அப்புறம், இச் சலிப்பையும், தயக்கத்தையும் தூக்கியெறிந்து, சொல்ல வந்ததைச் சொல்லத்தான் வேண்டுமென முடிவு செய்தேன். புரியாத நாலு பேர் அறியாது தொல்லை கொடுப்பதாலேயே நமக்குத் தெரிந்ததைச் சொல்லாதிருக்க இயலுமோ?

இற்றைத் தொல்லியல் வளர்ச்சியில் சிந்து சமவெளி எழுத்துக்களைத் தவிர்த்துப் பார்த்தால், இந்தியப் பொறிப்புகளிலேயே மிகவுந் தொன்மை வாய்ந்தவை, அசோகர் கல்வெட்டிற்கும் முந்தியவை, தமிழகத்திற்றான் கிடைக்கின்றனவாம். கொங்கு மண்டலக் கொடுமணலிற் கிடைத்த பானைப் பொறிப்புகள் கி.மு.4/5 ஆம் நூற்றாண்டுகளுக்குக் கொண்டு செல்லுகின்றனவாம். அவை அசோகருக்கும் முன்னால் குறைந்தது 100 ஆண்டுப் பழமை வாய்ந்தனவாம். இந்தக் கண்டுபிடிப்புகளின் முகன்மை இன்று இந்திய வரலாற்றையே மாற்றிப் போட்டிருக்கிறது. அந்தக் காலத்து தி,,நா. சுப்பிரமணியன், இந்தக் காலத்து கே.வி.இரமேஷ், கா.இராஜன் போன்றோர் தமிழி எழுத்துக்களில் இருந்தே அசோகனின் பெருமி எழுத்துக்கள் எழுந்திருக்கலாம் என்ற ஏரணங் காட்டி மாற்றுச் சிந்தனைக்கு நம்மை நகர்த்துவார்கள். அவர்களின் ஏரணம் இன்னும் ஆய்ந்து உறுதி செய்யப்படவேண்டியவொன்றாகும்.

[ஆனால், தொல்லியலையும், கல்வெட்டு எழுத்துக்களையும், தூக்கிப் போட்டு மிதிக்க முனைவோருக்கும், செஞ்சீனக் ”கலாச்சாரப் புரட்சி” போல் இடதுசாரி எக்கு வாதத்திற் (left wing extremism) தோய்ந்து, பழைய ஆவணங்களைத் தூக்கிக் கடாசுவோருக்கும், ”வரலாறா, வீசை என்ன விலை?” என்பவருக்கும் இந்த எழுத்துத் தோற்றங்கள் விளங்காது.]

இனிக் கட்டுரைக்கு வருவோம். என்னுடைய ”தொல்காப்பியமும் குறியேற்றங்களும்” என்ற தொடரின் 5-ஆம் பகுதியில் (http://valavu.blogspot.com/2006/11/5.html) பழம் எழுத்துமுறைகள் பற்றி ஒருசில பத்திகளிற் சொல்லியிருப்பேன். மேலும் அத்தொடரின் 6-ஆம் பகுதியில் (http://valavu.blogspot.com/2006/11/6.html) ஒரு படத்தொகுதியால் விளக்கியிருப்பேன். அவற்றைச் சில திருத்தங்களுடன் இங்கு மீண்டுந் தருகிறேன்.
 
தொடர்ச்சி http://valavu.blogspot.com/2011/01/1.html
 
அன்புடன்,
இராம.கி.

சி. ஜெயபாரதன்

unread,
Jan 3, 2011, 11:20:07 AM1/3/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
////  - விண்ணியல் அறிஞர் ச்*டீவன் ஆக்கிங் //////

ஸ்டீஃபன் ஹாக்கிங் மகா ஐக்கியப் பிரபஞ்ச நியதியை () உருவாக்க  முயன்று  வருகிறார்.  
 
விண்ணியல் என்றால் என்ன அர்த்தம் ?   விண்ணியல் பிரபஞ்சம் ஆகாது.
 
அறிஞர் என்றால் விஞ்ஞானியாகுமா ?   அப்படியானால் அறிஞர் அண்ணா  ஒரு விஞ்ஞானியா ?
 
ஸ்டீஃபன் என்பதை ச்*டீவன் என்று எழுதுவது தமிழுக்கும் இழுக்கு !!!  ஸ்டீஃபன் ஹாக்கிங் என்னும் பெயர்ச் சொல்லுக்கும் இழுக்கு !!! 
 
தூய தமிழ் என்று சொல்லிக் கொண்டு தமிழ் விஞ்ஞானப் படைப்புகள் பிற்போக்குத்தனமாக ஆக்கப் படுகின்றன.
 
 
ஜெயபாரதன் 
+++++++++++++++++++++++++
2011/1/3 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

சி. ஜெயபாரதன்

unread,
Jan 3, 2011, 11:22:38 AM1/3/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
மகா ஐக்கியப் பிரபஞ்ச நியதியை (Grand Unified Theory, GUT )

 
2011/1/3 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>

C.R. Selvakumar

unread,
Jan 3, 2011, 12:00:01 PM1/3/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com

செயபாரதன் ஐயா,
 
இராம.கி ஐயா அவருடைய விளக்கத்தைத் தருவார்கள். ஆனால்
எனக்குத் தெரிந்ததைக் கூறுகின்றேன்.
 
* விண்ணியல் என்றால் cosmology ஆனால் சில இடங்களில் cosmos என்றும் பொருள்படும்.
 
*இசுட்டீவன் ஃகாக்கிங் அல்லது இசுட்டீவன் ஆக்கிங்கு என்று எழுதுவது மாற்று வடிவங்கள்.
காற்றொலி சகர ஒற்றில், அதுவும் மெய்ய்ழுத்துக்கூட்டமாக வருதல் தமிழ் இயல்புக்கும்
ஏன் இந்திய மொழிகளில் இயல்புக்கும் மிகவும் முரணானது. Stephen, Splash, Station, School முதலான
சொற்களை உங்கலால் முதலில் (சிறியதாகவேனும் ஓர்)
உயிரொலி இல்லாமல் ஒலிக்க முடியாது என்று ஆணித்தரமாகக் கூருகின்றேன்.
தமிழர்களின் உயர் ஒலிநுட்ப அறிவால்தான் முதலில் இப்படியான ஒலிகள் வருதல் வேண்டாம்
என்று வைத்தனர். தமிழ் முறையின் அருமையை நடுநிலை நின்று அறிந்தால் போற்றாமல் இருப்பது
கடினம்!!
 
* அறிஞர் என்றால் அறிவியலாளர் என்றும் பொருள்படும்,
ஆனால் பொதுவாக அறிவாளி, ஒன்றை
நன்றாக ஆழமாக அறிந்தவர் என்று பொருள். அறிவியலர்,
அறிவியலாளர், அறிவியலாளி என்றால்
scientist. விடாப்பிடியாக விஞ்ஞானம், விஞ்ஞானம் என்கிறீரே,
அச்சொல் வழித் தமிழில் கிளைத்த சொற்கள் சிலவற்றையேனும் கூறுங்களேன்.
பொருள் விளங்காத அச்சொல்லைவிட அறிவியல், அறிவியலாளர் என்பன
அறி, அறிவு, அறிவியல், அறிவார்ந்த, அறிவுசார், அறிக்கை, அறிவாளி,
அறிவர், அறிவிலி, அறிவினா.. என்று எத்தனையோ சொற்களோடு
தொடர்புடையன.
 
மேலும் விஞ்ஞானம் என்பதை வட இந்திய மொழியாளர்கள்கூட
ஒழுங்காகச் சொல்ல மாட்டார்கள் விக்'யானம் என்பது போல ஒலிப்பர்.
பொருள் விளங்கா விஞ்ஞானம் வேண்டா. அறிவு பிறக்கட்டும்! :)
[க்' = g]
 
இந்த 2011 ஆம் ஆண்டிலாவது, ஐயா, சற்று நடுநிலைமையுடன்
கருத்தாடுங்கள்.  தமிழில் எழுதும்பொழுது தமிழ் எழுத்தில் எழுதுவதும்
(எங்கே விஞ்ஞானம் என்பதை ஆங்கிலத்தில் எழுதுங்களேன் பார்ப்போம் :) ),
தமிழில் விளங்குமாறும் எழுதுவது நல்லது.
 
எளிய தமிழில் எழுத வாருங்கள்!!
 
அன்புடன்
செல்வா

 
2011/1/3 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
////  - விண்ணியல் அறிஞர் ச்*டீவன் ஆக்கிங் //////




--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

Govindasamy Thirunavukkarasu

unread,
Jan 3, 2011, 12:20:39 PM1/3/11
to tamil...@googlegroups.com
கிரந்த எழுத்துக்களை கலந்து எழுதுவதுதான் முற்போக்கு என்று பொருள்கொள்வதா? சிறீரமன சர்மா கூறும் ஏனைய 26  கிரந்த எழுத்துக்களை தமிழில் புழனக்கினால் இன்னும் பல சமற்கிருத உச்சரிப்புகளையும் நாம் எழுதிக்காட்டமுடியும்.

எதற்காக்...என்பதுதான் கேள்வி?
சீனத்தலைவர்  மாசேதுங் என்றார்கள். ஆனால் அது சீன  உச்சரிப்பில்லை.என்ன செய்வது. எமது மொழியில் உள்ள எழுத்துக்களைக்கொண்டு எழுதினால் போதும். ஆங்கிலேயர்கள்  "தமிழ் "என்ர உச்சரிப்பை தனக்கள் மொழியில் கொண்டுவரமுடியவில்லையேஎன்று கவலைப்படுவதில்லை. தமிழர்களுக்கு மட்டும் இந்த தலைவலி ஏனோ? இதைவைத்துத்தான் ஆரியன் கிரந்த வரிவடிவினையும் மணிப்பிரவாள நடைஅயையும் கொண்டு வந்தான். இன்று தமிங்கலம்  சொறி சிரங்காய் ஒவ்வொரு தமிழன் வாயிலு நுழைந்து வருகின்ரது.

அறிவு வளர்ச்சி எல்லாம் சரிதான்!  கண்கலை விற்று சித்திரம் வாங்கிய  அறிவும், இருந்த கோவனத்தை இரணடாய் கிழிக்கிற வளர்ச்சிகளும் ஆதிக்கம் செய்வோருக்கு பயன்படலாம். அடிபட்டுக்கிடக்கிர இனத்திற்கு அல்ல.

இப்படித்தான் எழுதுவேன் என்றால் எழுதிக்கொள்ளுங்கள். அது உங்கள் விருப்பம். அதுதான் சரியென்று தமிழ் இலக்கணத்தை தூக்கிவீசக்கூடாது.
அன்புடன்
அரசு

2011/1/3 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
////  -
 



--
கோ.திருநாவுக்கரசு
தாளாண்மை உழவர் இயக்கம்
செம்பியநல்லூர்,அம்மாபேட்டை வழி 614401
திருவாரூர் மாவட்டம்.
பேசி:  9380297522


சி. ஜெயபாரதன்

unread,
Jan 3, 2011, 12:23:52 PM1/3/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
தூய தமிழ்வாதிகளே,
 
மொழிக்கு முதலில் ஒற்றெழுத்து வாராது என்று இலக்கணத்தை சொல்லிக் கொண்டு ஏன் ச்*டீவன் ஆக்கிங் என்றெழுதி சரியென்று வாதாட வருகிறீர் ?
 
விஞ்ஞானம், பிரபஞ்சம், சக்தி, யுகம். சூனியம், சூரியன், சந்திரன், வாயு, அக்கினி, தீபம்,  ஞானம்,  சிந்தனை, சித்தம்,  மனம், மனிதன் போன்ற வட சொற்கள் அனுதினத் தமிழ்ச் சொற்கள் ஆகிவிட்டன. 
 
 
இவை சிலருக்குப் பிடிக்காவிட்டால் அவற்றைத் தமிழிலிருந்து அகற்ற முடியாது.
 
 
ஜெயபாரதன்.
 
++++++++++++++++++++++


2011/1/3 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

சி. ஜெயபாரதன்

unread,
Jan 3, 2011, 12:28:47 PM1/3/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
நண்பர் கோவிந்தசாமி திருநாவுக்கரசு,
 
 
கோவிந்த சாமி என்பது வடசொற்கள் கலப்பு.    தூய தமிழ்ச் சொல்லில் முதலில் உங்கள் பெயரை மாற்றுங்கள்.
 
ஜெயபாரதன்.
 
+++++++++++++++++++++++
2011/1/3 Govindasamy Thirunavukkarasu <gthiruna...@gmail.com>

C.R. Selvakumar

unread,
Jan 3, 2011, 1:27:44 PM1/3/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
2011/1/3 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
தூய தமிழ்வாதிகளே,
 
மொழிக்கு முதலில் ஒற்றெழுத்து வாராது என்று இலக்கணத்தை சொல்லிக் கொண்டு ஏன் ச்*டீவன் ஆக்கிங் என்றெழுதி சரியென்று வாதாட வருகிறீர் ?
 
விஞ்ஞானம், பிரபஞ்சம், சக்தி, யுகம். சூனியம், சூரியன், சந்திரன், வாயு, அக்கினி, தீபம்,  ஞானம்,  சிந்தனை, சித்தம்,  மனம், மனிதன் போன்ற வட சொற்கள் அனுதினத் தமிழ்ச் சொற்கள் ஆகிவிட்டன. 
 
 
மேலுள்ள (கிரந்த எழுத்துகள் இல்லா)
சொற்களை அப்படியே தமிழில் வழங்குவதில் பெரும் இடர்
இல்லை. பிறமொழிச் சொற்களைத் தமிழ் முறைப்படி உள்வாங்குவதிலும்
என்னைப்போன்றவர்களுக்கு எதிர்ப்பில்லை. ஐதரசன், ஈலியம்,
குளோரைடு, பிளாட்டினம், பாதரசம் (இது வடமொழி), வாடிக்கை,
அலமாரி, பீரோ (piirO < bureau (ஆங்கிலம்) < bureau (பிரான்சியம்))
முதலான எத்தனையோ சொற்களைத் தமிழ் உள்வாங்கியுள்ளது.
(இவற்றில் தமிழில் வழங்கும் பொருளானது முதல்மொழியில்
இருப்பதில் இருந்து மாறுபடக்கூடும்). ஆகவே தூய தமிழர்
என்று பட்டங்கட்டி எதிர்கொள்ள மறுக்காதீர்கள். நான்
முன்னர் விஞ்ஞானம் <-> அறிவியல் பற்றிக் கேட்ட
கேள்விகளுக்கு நேர்மையான மறுமொழியைத் தாருங்கள்.
நல்ல தமிழ்ச்சொற்களைத் தேர்ந்தாள்வதில் பல
நன்மைகள் உள்ளன. அதேபோல, தேவை அறிந்து
பிறமொழிச்சொற்களை உள்வாங்கிப் பயன்கொள்வதும்
அறிவுடைமை. கதிரவனுக்குத் தமிழில் 30+
சொற்கள் உள்ளன, ஆனால் அவற்றைப் பயன்படுத்தவே
மாட்டேன் சூரியன் (இது தமிழாகவும் இருக்கலாம் ஆனால்
சமசுக்கிருதம் என்பதாக நினைத்து)  என்பதை மட்டுமே 
பயன்படுத்துவேன், 30+ சொற்கள் தமிழில் கடலுக்கும்,
30+ சொற்கள் தமிழில் காட்டிற்கும் உள்ளபோதும், மாட்டவே
மாட்டேன் சமுத்திரம், வனம் என்னும் சொற்களை
மட்டுமே பயன்படுத்துவேன்
என்று முரண்டு பிடிக்கும் மக்களை தமிழின் நண்பர்களாகக்
கருத முடியுமா?
 
தமிழிலிருந்து சமுத்திரம், வனம், சூரியன், சந்திரன் அக்கினி, வாயு
முதலான சொற்களை யாரும் (என்னைப்போன்ற யாரும்)
நீக்கச்சொல்லவில்லை, ஆனால் கடல், ஆழி, பரவை, பெருங்கடல்,
போன்ற 30+ சொற்களில் சிலவற்றையும், கதிரவன், பகலவன்,
பொழுது, ஞாயிறு போன்ற 30+ சொற்களில் சிலவற்றையும்,
வளி, வளிமம் (கால் என்றால் காற்று என்று பன்னூற்றுக்கணக்கான
இடங்களில் ஆழ்வார்களும் நாயன்மார்களும் இன்னும் பலரும்
ஆண்டுள்ளனர். கால் --> காற்று) என்பனவற்றையும், ஆளலாம்தானே.
ஆனால் தமிழில் தமிழ்ச்சொற்களை ஆள்தல் அறவே கூடாது
என்று வீம்பு செய்யும் சிலரை தமிழ் நண்பர்கள், நேர்மையானவர்கள்
என்று கூறமுடியுமா? கொஞ்சம் கூட நேர்மை இல்லாமல்,
திணிப்பே கொள்கையாக, தமிழை அழிப்பதே கொள்கையாக
மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் செய்வோரை
தமிழ் நண்பர்கள், நேர்மையயனவர்கள் என்று போற்ற முடியுமா?
 
ஒப்பரிய தமிழ் மொழியை இப்படிக் குலைக்கின்றார்களே!!
குலைக்க விடும் தமிழர்களைத்தான் குறை கூறவேண்டும்!!

Govindasamy Thirunavukkarasu

unread,
Jan 3, 2011, 1:48:19 PM1/3/11
to tamil...@googlegroups.com
ஐயா,
 கோவிந்த் என்பது ஒரு கடவுளைக்குறிக்கும் சொல். தமிழின் உச்சரிப்புக்குஏற்ப கோவிந்த ஆகிறது. ஸ்வாமி என்பது சாமி ஆகியுள்ளது என்று சொல்ல வருகிறீர்கள்.சாமி வடசொல்லாகி ஸ்வாமியாக வடக்கு நோக்கி சென்று இருக்கலாம்.எபடியிருப்பினும்  கோவிந்தசாமி என்ற உச்சரிப்பு கடாபுடா இல்லாத உச்சரிப்பு.

இது என் தந்தையார் பெயர் .இதை தாங்கள் அறிந்திருக்கவேண்டும்.

பெற்றோர் எனக்கிட்ட பெயர்  மேதாஸ். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே--அதாவது 1962லேயே இந்த பெயரை
எ ன்பெற்றோர் இசைவு பெற்று திருநாவுக்கரசு என்று மாற்றிக்கொண்டேன்.  எனவே எனது பெயரில் மாற்ற ஒன்றுமில்லை.
என் பிள்ளைகள் பெயர்கள் அழகு தமிழ்ப்பெயர்கள்.இருவரும் விளங்குகிறார்கள் நன்ராக. என்னை வேண்டுவோருக்கு தமிழில் பெயரிடுகிறேன்.

எனது முதல் பையன் இராசபுதான மங்கையை விரும்பி மணமுடித்தான்.அது கல்வியை பெரிதாகக்கொண்ட குடும்பம்.
அவர்கல்வீட்டில் ஒவ்வொருவருக்கும் இட்டுள்ள பெயர்கள் பெரும்பாலும் கரண்ப்பெயர்கள். சம்ற்கிருத வேர்ச்சொற்கலைக்கொண்டு கட்டப்பட்ட காரணப்பெயர்கள். அன்கத். ஆழம் அறியமுடியா ஒருவன். இதையே தமிழில் அன்கத் என்று சொல்லித்திரிவது வேடிக்கையாக இருக்கும்.

மும்பை ,அணுஅராய்ச்சி நிலையத்தில் நேர்முகத்தேர்வுக்கு வந்த 80% க்கு மேல் மதிப்பெண் பெற்ற மின்னியல் மாணவரிடம் , அந்த அறையில் இருந்த  இழைமின்விளக்கை(Filament Lamp)காட்டி  கேட்டார்கள்.
"இதோ.இந்த மின் விளக்கை  , மின்தடை , மின்தூண்டம் , மின்தேக்கி என்ற மூன்று வகைகளுக்குள் எதில் சேர்ப்பீர்கள். வந்தவர் சட்டென்று கூறினார்.  "மின் தூண்டம் '
அடுத்த கேள்வி: எதனால் மின்துண்டம் என்று கூறுகிறீர்கள். மாணவர் கையால்சைகை செய்துகொண்டே கூறினார்.ஒளிர்கிற இழை கம்பிச்சுருள்போல் இருக்கிறது.அதனால் அது மின் தூண்டமாக தான்.இருக்கவேண்டும்.

புரியாத பாடத்தை  ஒரு சில குறிகளைவைத்து அடையாளம் கண்டு குறிகளுக்கும் பொருளுக்கும் உள்ல தொடர்புகூட அறுந்துபோய் பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதையாக  போய்க்கொண்டிருக்கும் வேளையில் ...கொஞ்சம் எளிமை,இனிமை ஆகியவைகளைக்கூட்டிக்கொள்வோமே?
அன்புடன்
அரசு
கம்பன் ர்ராமனைப்பாடினான். வீடணன் பெயரை இசைவுடையதாக மாற்றிப்பாடினான் தேவை ஏற்பட்டதால். ராமன்,வீடணன் என்ற பெயர்கள் வடமொழிச்சொற்கள் அன்று. தமிழுக்கு ஒவ்வாத ஒலிகலை கம்பர் மாற்றினார். சோனியா இத்தாலிய சொல் அன்று.

ஏதோ தமிழ் வெறியர்கல் என்பதுபோல உங்களுக்கு படுகிறதோ ?
எனக்கு வேண்டிய ஒருவர்  சிவ சண்முகம் என்ர பெயரை  " ஷிவ ஷண்முகம்" என்று எழுதுவதோடு அப்படி எழுதாவிட்டால் சண்முகம் தன் வேலை அவர்மீது பாய்ச்சிவிடுவாரோ என்று கலங்குகிறார்..இதையெல்லாம் சகிக்கவேண்டியுள்ளது.

N. Ganesan

unread,
Jan 3, 2011, 2:05:21 PM1/3/11
to தமிழ் மன்றம்

On Jan 3, 10:22 am, சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com> wrote:
> *மகா ஐக்கியப் பிரபஞ்ச நியதியை (Grand Unified Theory, GUT )
> *...
>

மக்களுக்கு எளிதில் புரியும்படி உங்கள் கட்டுரைகள் உள்ளன.

மகிழ்வான 2011!
நா. கணேசன்


> read more »
>
> 2011/1/3 சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com>
>
>
>
> > *////  - விண்ணியல் அறிஞர் ச்*டீவன் ஆக்கிங் //////


>
> > ஸ்டீஃபன் ஹாக்கிங் மகா ஐக்கியப் பிரபஞ்ச நியதியை () உருவாக்க  முயன்று

> > வருகிறார்.  *
> > **
> > *விண்ணியல் என்றால் என்ன அர்த்தம் ?   விண்ணியல் பிரபஞ்சம் ஆகாது.*
> > **
> > *அறிஞர் என்றால் விஞ்ஞானியாகுமா ?   அப்படியானால் அறிஞர் அண்ணா  ஒரு
> > விஞ்ஞானியா ?*
> > **
> > *ஸ்டீஃபன் என்பதை ச்*டீவன் என்று எழுதுவது தமிழுக்கும் இழுக்கு !!!  ஸ்டீஃபன்
> > ஹாக்கிங் என்னும் பெயர்ச் சொல்லுக்கும் இழுக்கு !!! *
> > **
> > *தூய தமிழ் என்று சொல்லிக் கொண்டு தமிழ் விஞ்ஞானப் படைப்புகள்
> > பிற்போக்குத்தனமாக ஆக்கப் படுகின்றன.*
> > **
> > **
> > *ஜெயபாரதன்
> > *

> >> "தமிழ் மன்றம்" group.- Hide quoted text -
>
> - Show quoted text -

N. Ganesan

unread,
Jan 3, 2011, 2:07:32 PM1/3/11
to தமிழ் மன்றம்

On Jan 3, 12:48 pm, Govindasamy Thirunavukkarasu


<gthirunavukkar...@gmail.com> wrote:
> ஐயா,
>  கோவிந்த் என்பது ஒரு கடவுளைக்குறிக்கும் சொல். தமிழின் உச்சரிப்புக்குஏற்ப
> கோவிந்த ஆகிறது. ஸ்வாமி என்பது சாமி ஆகியுள்ளது என்று சொல்ல வருகிறீர்கள்.

கோவிந்த் கோவிந்த என்று தமிழாகவில்லை.
வடமொழியின் சொல் கோவிந்த என்பதாகும்.
தமிழில் னகரமெய் ஈற்றில் பெறும்.

> சாமி
> வடசொல்லாகி ஸ்வாமியாக வடக்கு நோக்கி சென்று இருக்கலாம்.எபடியிருப்பினும்

> கோவிந்தசாமி என்ற உச்சரிப்பு கடாபுடா இல்லாத உச்சரிப்பு....
>

சாமி ஸ்வாமி ஆகவில்லை.

நா. கணேசன்


> read more »
>

> 2011/1/3 சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com>
>
>
>
> > *நண்பர் கோவிந்தசாமி திருநாவுக்கரசு,*
> > **
> > **
> > *கோவிந்த சாமி என்பது வடசொற்கள் கலப்பு.    தூய தமிழ்ச் சொல்லில் முதலில்


> > உங்கள் பெயரை மாற்றுங்கள்.

> > *
> > **
> > *ஜெயபாரதன்.*
>
> > +++++++++++++++++++++++
> > 2011/1/3 Govindasamy Thirunavukkarasu <gthirunavukkar...@gmail.com>


>
> > கிரந்த எழுத்துக்களை கலந்து எழுதுவதுதான் முற்போக்கு என்று பொருள்கொள்வதா?
> >> சிறீரமன சர்மா கூறும் ஏனைய 26  கிரந்த எழுத்துக்களை தமிழில் புழனக்கினால்
> >> இன்னும் பல சமற்கிருத உச்சரிப்புகளையும் நாம் எழுதிக்காட்டமுடியும்.
>
> >> எதற்காக்...என்பதுதான் கேள்வி?
> >> சீனத்தலைவர்  மாசேதுங் என்றார்கள். ஆனால் அது சீன  உச்சரிப்பில்லை.என்ன
> >> செய்வது. எமது மொழியில் உள்ள எழுத்துக்களைக்கொண்டு எழுதினால் போதும்.
> >> ஆங்கிலேயர்கள்  "தமிழ் "என்ர உச்சரிப்பை தனக்கள் மொழியில்
> >> கொண்டுவரமுடியவில்லையேஎன்று கவலைப்படுவதில்லை. தமிழர்களுக்கு மட்டும் இந்த
> >> தலைவலி ஏனோ? இதைவைத்துத்தான் ஆரியன் கிரந்த வரிவடிவினையும் மணிப்பிரவாள
> >> நடைஅயையும் கொண்டு வந்தான். இன்று தமிங்கலம்  சொறி சிரங்காய் ஒவ்வொரு தமிழன்
> >> வாயிலு நுழைந்து வருகின்ரது.
>
> >> அறிவு வளர்ச்சி எல்லாம் சரிதான்!  கண்கலை விற்று சித்திரம் வாங்கிய  அறிவும்,
> >> இருந்த கோவனத்தை இரணடாய் கிழிக்கிற வளர்ச்சிகளும் ஆதிக்கம் செய்வோருக்கு
> >> பயன்படலாம். அடிபட்டுக்கிடக்கிர இனத்திற்கு அல்ல.
>
> >> இப்படித்தான் எழுதுவேன் என்றால் எழுதிக்கொள்ளுங்கள். அது உங்கள் விருப்பம்.
> >> அதுதான் சரியென்று தமிழ் இலக்கணத்தை தூக்கிவீசக்கூடாது.
> >> அன்புடன்
> >> அரசு
>

> >>  2011/1/3 சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com>
>
> >>> *////  -


> >>> *
> >>> **
> >>>   *தூய தமிழ் என்று சொல்லிக் கொண்டு தமிழ் விஞ்ஞானப் படைப்புகள்
> >>> பிற்போக்குத்தனமாக ஆக்கப் படுகின்றன.*
> >>> **
> >>> **
> >>> *ஜெயபாரதன்
> >>> *
> >>> +++++++++++++++++++++++++

> >>> 2011/1/3 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>- Hide quoted text -

சி. ஜெயபாரதன்

unread,
Jan 3, 2011, 2:51:00 PM1/3/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
நண்பர் திருநாவுக்கரசு, செல்வா,
 
 
விஞ்ஞானம், விஞ்ஞானி என்று நான் எழுதக் கூடாதென்று  சொல்லிவிட்டு இப்போது என்ன அறிவுரை கூற வருகிறீர் இருவரும் என்பது எனக்குப் புரிய வில்லை !!!
 
விஞ்ஞானம் என்ற சொல்லில் என்ன கிரந்தம் உள்ளது ????
 
 
ஜெயபாரதன்.
++++++++++++++++++++++++
2011/1/3 N. Ganesan <naa.g...@gmail.com>

--

N. Ganesan

unread,
Jan 3, 2011, 4:29:18 PM1/3/11
to தமிழ் மன்றம்

On Jan 3, 1:51 pm, சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com> wrote:
> *நண்பர் திருநாவுக்கரசு, செல்வா,*
> **
> **
> *விஞ்ஞானம், விஞ்ஞானி என்று நான் எழுதக் கூடாதென்று  சொல்லிவிட்டு இப்போது என்ன
> அறிவுரை கூற வருகிறீர் இருவரும் என்பது எனக்குப் புரிய வில்லை !!!*
> **
> *விஞ்ஞானம் என்ற சொல்லில் என்ன கிரந்தம் உள்ளது ????*
> **

தமிழ் வாழுகிற ஒரு மொழி. அதில் தேவைக்கேற்ப பிற
மொழிகளில் இருந்து கடன் பெறுதல் இயற்கைதான்.
கடன்பெறும் வார்த்தைகளை அறபி, ஆங்கிலம், உர்து,
ஹிந்தி, ... எழுத கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தலாம்.
மாற்றாக, டையாக்ரிட்டிக்ஸ் பயன்படுத்தவும் கூடும்.

எல்லா வகைகளையும் பயனர் சமுதாயத்திற்கு அளிப்பது
எஞ்சினீயர்கள் பொறுப்பு.

நா. கணேசன்


> ****
> *ஜெயபாரதன்.
> *
> ++++++++++++++++++++++++
> 2011/1/3 N. Ganesan <naa.gane...@gmail.com>...
>
> read more »

> > > >> வாயிலு- Hide quoted text -

சி. ஜெயபாரதன்

unread,
Jan 3, 2011, 4:48:15 PM1/3/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
நல்ல விளக்கம் நாசா கணேசன்.
 
 
தமிழ்த் தாலிபான்களுக்கு வடமொழி, இந்தி, உருது, ஆங்கிலச் சொற்கள்,  கிரந்த எழுத்துள்ள சொற்கள் போன்றவை தீட்டுச் சொற்கள்.  
 
ஆங்கிலத்தில் கட்டுமரான், அரிசி, கர்ரி, யோகா, காம சூத்ரா, குரு போன்ற இந்திய மொழிச் சொற்கள், ஏராளமான கிரேக்க, லத்தீன் சொற்கள் பழக்கத்தில் உள்ளன.  
அவற்றால் ஆங்கிலம் செழிப்பானதே தவிர சிதைந்து போக வில்லை.
 
 
ஜெயபாரதன்.
 
++++++++++++++++++++++
2011/1/3 N. Ganesan <naa.g...@gmail.com>

N. Ganesan

unread,
Jan 3, 2011, 6:41:21 PM1/3/11
to தமிழ் மன்றம்

On Jan 3, 3:48 pm, சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com> wrote:
> *நல்ல விளக்கம் நாசா கணேசன்.*
> **
> **

நன்றி, ஐயா. அமெரிக்க விண்மையம் நான் பணிபுரியும் இடம்.

நா. கணேசன் என்று எழுதுங்கள், மகிழ்வேன்.

> *தமிழ்த் தாலிபான்களுக்கு வடமொழி, இந்தி, உருது, ஆங்கிலச் சொற்கள்,  கிரந்த
> எழுத்துள்ள சொற்கள் போன்றவை தீட்டுச் சொற்கள்.   *
> **
> *ஆங்கிலத்தில் கட்டுமரான், அரிசி, கர்ரி, யோகா, காம சூத்ரா, குரு போன்ற இந்திய


> மொழிச் சொற்கள், ஏராளமான கிரேக்க, லத்தீன் சொற்கள் பழக்கத்தில் உள்ளன.

> *
> *அவற்றால் ஆங்கிலம் செழிப்பானதே தவிர சிதைந்து போக வில்லை.*
> **
> **
> *ஜெயபாரதன்.*...
>
> read more »
>
> ++++++++++++++++++++++
> 2011/1/3 N. Ganesan <naa.gane...@gmail.com>

> > > > > > *நண்பர் கோவிந்தசாமி- Hide quoted text -

N. Ganesan

unread,
Jan 3, 2011, 6:46:12 PM1/3/11
to தமிழ் மன்றம், anb...@googlegroups.com, tamizh...@googlegroups.com

திரு. ஜெயபாரதன் அவர்களுக்கு,

திருவிளையாடற் புராணத்தில்
சங்கப் பலகை தந்த படலம் சுவைமிக்கது.

ஸம்ஸ்க்ருதத்தின் 49 எழுத்துக்கள்
சிவபிரான் தலைமையேற்க தமிழ்ப் புலவோராக
வீற்றிருந்த கதையை பரஞ்சோதி முனிவர்
அழகாப் பாடியுள்ளார். தமிழின் அழகைக்
காட்டிநிற்கும் நூல்களில் பரஞ்சோதி படைப்பும்
ஒன்று. பேரா. ந. மு. வேங்கடசாமி நாட்டார்
உரையும் இணைத்துள்ளேன்.
http://nganesan.blogspot.com/2010/12/sangap-palakai-alittatu.html

படித்தபின் உங்கள் கருத்தை எழுதுங்கள்.

நா. கணேசன்

C.R. Selvakumar

unread,
Jan 3, 2011, 6:48:21 PM1/3/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
ஆழ்வார்களும், நாயன்மார்களும், கம்பனும், தொல்காப்பிய
நன்னூலார்களும் வடவெழுத்து ஒரீஇ என்னும் விதிப்படி
தமிழ் எழுத்துகளில் மட்டுமே எழுதியுள்ளனர். அவர்கள்
தமிழ்த் தாலிபான்களா?
 
நான் கேட்ட கேள்விகள்
ஒன்றுக்கேனும் நேர்மையுடன்
மறுமொழி தந்தீரா? அப்படி இல்லாமல்
தமிழ்த் தாலிபான்கள் என்று தரக்குறைவாய் கூறுவது
பண்பாடு உள்ளவர்கள் செய்ய மாட்டார்கள்.
கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளுங்கள்.
அப்படி எதிர்கொள்ள இயலாதவர்கள்தான் இப்படி
பண்பற்ற முறையில் பேசுவர்.
 
செல்வா

2011/1/3 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>

N. Ganesan

unread,
Jan 3, 2011, 7:07:05 PM1/3/11
to தமிழ் மன்றம்

On Jan 3, 3:48 pm, சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com> wrote:
> **
> **
> *தமிழ்த் தாலிபான்களுக்கு வடமொழி, இந்தி, உருது, ஆங்கிலச் சொற்கள்,  கிரந்த
> எழுத்துள்ள சொற்கள் போன்றவை தீட்டுச் சொற்கள்.   *
> **

Thanks for the explanation.

> *ஆங்கிலத்தில் கட்டுமரான், அரிசி, கர்ரி, யோகா, காம சூத்ரா, குரு போன்ற இந்திய


> மொழிச் சொற்கள், ஏராளமான கிரேக்க, லத்தீன் சொற்கள் பழக்கத்தில் உள்ளன.

> *
> *அவற்றால் ஆங்கிலம் செழிப்பானதே தவிர சிதைந்து போக வில்லை.*
> **
> **


> *ஜெயபாரதன்.*...
>
> read more »
>
> ++++++++++++++++++++++
> 2011/1/3 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
>
>

> > > > > > *நண்பர் கோவிந்தசாமி- Hide quoted text -

C.R. Selvakumar

unread,
Jan 3, 2011, 7:13:34 PM1/3/11
to tamil...@googlegroups.com


2011/1/3 N. Ganesan <naa.g...@gmail.com>
Thanks for the explanation.
 
:) 
 
இதையெல்லாம் நீங்கள் கெட்டிக்காரத்தனமாக நினைக்கின்றீர்கள்
போலும் !! :)
 
செல்வா

N. Ganesan

unread,
Jan 3, 2011, 7:20:58 PM1/3/11
to தமிழ் மன்றம்

On Jan 3, 6:13 pm, "C.R. Selvakumar" <c.r.selvaku...@gmail.com> wrote:
> 2011/1/3 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
> > Thanks for the explanation.
>
> :)
>
> இதையெல்லாம் நீங்கள் கெட்டிக்காரத்தனமாக நினைக்கின்றீர்கள்
> போலும் !! :)
>
> செல்வா

ஜெயபாரதன் ஐயாவின் விளக்கத்திற்கு நன்றி சொல்வதில்
என்ன கெட்டிக்காரத்தனம் ஐயா?

அன்புடன்,
கணேசன்

சி. ஜெயபாரதன்

unread,
Jan 3, 2011, 8:51:22 PM1/3/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
ஆழ்வார்களும், நாயன்மார்களும், கம்பனும், தொல்காப்பியரும் வாழ்ந்த காலத்தில் ஸ்டீஃபன் ஹாக்கிங்கும், ஹிக்ஸ் போஸானும், ஐன்ஸ்டைனும், ஸ்டிரான்சியமும், ஹைடிரஜனும்,  ஹீலியமும் இல்லை. 
 
சங்க காலத்துச் சுத்தத் தமிழில் விஞ்ஞானத்தை எழுதினால் சங்க காலத்து மக்கள்தான் புரிந்து கொள்வார்.   

மாறிவரும் புது விஞ்ஞான யுகத்தில் பூர்வீகத் தமிழ் இலக்கண விதி விலக்குகள் வரவேற்கப் பட வேண்டும்.
 
தாலிபான்கள் ஆஃப்கானிஸ்தானில் 1500 ஆண்டுகள் நிலைத்த புராதனப் புத்தர் சிலையை ஏவுகணைகள் ஏவித் தகர்த்து உடைத்தனர்.
 
அதைப்போல சில தமிழ்த் தாலிபான்கள் கிரந்தங்கள் உள்ள உன்னத தமிழ் இலக்கியங்களைத்  திருத்த அல்லது அழிக்கத் தற்போது முயல்கிறார். 
 
 
ஜெயபாரதன்.
 
+++++++++++++++
 
2011/1/3 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

C.R. Selvakumar

unread,
Jan 3, 2011, 9:32:12 PM1/3/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
2011/1/3 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
ஆழ்வார்களும், நாயன்மார்களும், கம்பனும், தொல்காப்பியரும் வாழ்ந்த காலத்தில் ஸ்டீஃபன் ஹாக்கிங்கும், ஹிக்ஸ் போஸானும், ஐன்ஸ்டைனும், ஸ்டிரான்சியமும், ஹைடிரஜனும்,  ஹீலியமும் இல்லை. 
 
ஏன் இசுட்டீவன் ஃகாக்கிங்,  அல்லது இசுட்டீவன் ஆக்கிங்கு,
ஃகிக்ஃசு அல்லது இக்ஃசு, போசான், ஐன்சுட்டீன் அல்லது ஐன்சுட்டைன்,
எசுட்ரான்சியம், ஐதரசன், ஈலியம் என்று எளிதாகக் கூறலாமே,
இக்காலத்திலும்? அக்காலத்திலும் பிற ஒலியன்களோடு
இருந்த பெயர்களை எழுத அவர்களுக்குத் தேவை இருந்தது.
ஏதோ இக்காலத்தில் மட்டும் ஏற்பட்டதல்ல. அது
மட்டுமல்லாமல், வேற்றுமொழிப்பெயர்கள் பலவாக வரும்
வால்மீகி இராமாயணத்தைக் கூட
ஒப்பரிய கம்ப இராமாயணமாக இயற்றியுள்ளனர்.
சுவை குன்றியதோ?
 
 
சங்க காலத்துச் சுத்தத் தமிழில் விஞ்ஞானத்தை எழுதினால் சங்க காலத்து மக்கள்தான் புரிந்து கொள்வார்.   
 
அறிவியலை நல்ல தமிழில் எளிமையாக எழுதலாம்.
புரியாத, கிளைக்காத  "விஞ்ஞானம்" என்பதைவிட
புரியும், கிளைத்துப் பெருகும் அறிவியல் மேல்.

மாறிவரும் புது விஞ்ஞான யுகத்தில் பூர்வீகத் தமிழ் இலக்கண விதி விலக்குகள் வரவேற்கப் பட வேண்டும்.
 
 
எத்தனையோ விதிகள் மாறித்தான் வந்துள்ளன. டி.என்.ஏ-வையே
மாற்ற வேண்டும், அடிப்படை முறைகளையே மாற்ற வேண்டும் எனில்,
அதுவும் பற்பல குழப்பங்களும், அழிவுகளும் தரும், அறிவுக்குப்
புறம்பான (ஒலிப்பு நுணுக்கத்தில், இயைபு நுணுக்கத்தில்)
முறைகளைப் புகுத்த வேண்டும் எனில், எதிர்ப்பது
அடிப்படை உரிமையும், அறிவுடைமையும் ஆகும்.
நானும் அறிவியல்-பொறியியல் துறையில்தான் உள்ளேன்.
மாறிவரும் அறிவியலையும் நுட்பியலையும் பிற பலவற்றையும்
நோக்கிக்கொண்டுதான் இருக்கின்றேன்.
தமிழ் முறையே உகந்த முறை.  புதிய அறிவியல்
கருத்துகள் வரவேற்கப்பட வேண்டும். புரியும்படியும் தமிழில்
ஆக்கப்பட வேண்டும். 
 
தாலிபான்கள் ஆஃப்கானிஸ்தானில் 1500 ஆண்டுகள் நிலைத்த புராதனப் புத்தர் சிலையை ஏவுகணைகள் ஏவித் தகர்த்து உடைத்தனர்.
 
நீங்கள் 3000 ஆண்டுகளாக மிக உயிர்ப்புடன் மிக ஒண்மையுடன்
வாழும் மொழியை தகர்க்கின்றீர்கள். :)
 
அதைப்போல சில தமிழ்த் தாலிபான்கள் கிரந்தங்கள் உள்ள உன்னத தமிழ் இலக்கியங்களைத்  திருத்த அல்லது அழிக்கத் தற்போது முயல்கிறார். 
 
 
உங்களுக்கே சிரிப்பு வரவில்லையா?!!
 
தார்ன் (Þ, þ) போன்ற எழுத்துகளை நீக்கி ஈரெழுத்து
(digraph, th) முதலானவற்றைப் பயன்படுத்தும் ஆங்கிலேயர்கள்
தாலிபான்களா? 
 
முதலாவது தமிழ்த் தாலிபான்கள் போன்ற பண்பற்ற
சொல்லாடல்களை அறவே களைந்து
விட்டொழியுங்கள். ஆயிரம் விதமாக எதிர்த்தாக்குமொழிகளைப்
பயன்படுத்தலாம் (பண்பாடு இல்லாதவர்கள் உரையாடினால்), இவற்றால்
பயன் ஏதும் இல்லை. திருவள்ளுவர் கூறும் பயனில் சொல்லாமையில்
வரும் 10 குறள்களையுமமவது படித்துப்பாருங்கள்
 
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
 
நான் கேட்ட கேள்விகள் ஒன்றுக்கேனும் நேர்மையாக
கருத்தைக் கருத்தால்
எதிர்த்துக்கூறும் மறுமொழி தந்தீரா?
 
செல்வா

சி. ஜெயபாரதன்

unread,
Jan 3, 2011, 11:13:18 PM1/3/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
////ஏன் இசுட்டீவன் ஃகாக்கிங்,  அல்லது இசுட்டீவன் ஆக்கிங்கு,
ஃகிக்ஃசு அல்லது இக்ஃசு, போசான், ஐன்சுட்டீன் அல்லது ஐன்சுட்டைன்,
எசுட்ரான்சியம், ஐதரசன், ஈலியம் என்று எளிதாகக் கூறலாமே,////
 
தமிழ் மொழியில் ஆங்கிலப் பெயர்ச் சொற்களைச் செம்மையாய்  எழுத முடியாது, எழுதக் கூடாது என்பது பிற்போக்குத்தனம்.
 
 
////பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும். ////
 
பல்லார் முனையப் பயனுள பேசுவான்
செல்வாவால் எள்ளப் படும்.
 
 
ஜெயபாரதன்.

2011/1/3 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

Govindasamy Thirunavukkarasu

unread,
Jan 4, 2011, 12:04:32 AM1/4/11
to tamil...@googlegroups.com
அன்புமிகு செயபாராதன் ஐயா,அன்பு கணேசன் ஐயா,

கிரந்த உருவாக்கம் ,தமிழில் வடசொற்கள் கலந்தது, மணிப்பிரவாள நடை எல்லாம்
எப்படி வந்தது தமிழ் நாட்டில்,தமிழ் மன்னர்கள் ஏன் இதை ஊக்கப்படுத்தினார்கள் ,
மக்கள் எப்படி இதை சகித்தார்கள் என்று எண்ணுவதுண்டு.

இப்படித்த்தான் நடந்திருக்கும்  என்பது
 சமீபத்திய ஒருங்குறித் தமிழில் திரு நா.கணேசன் அவர்களும், திரு சிறிரமண சர்மாவும்  சில மாற்றங்களை முன்மொழிந்து அதை கிட்டத்தட்ட நடைமுறைக்கு கொண்டு வர முனைந்த  வழிமுறை ஒரு நடைமுறை உதாரணமாக இருக்கிறது.
ஒருங்குறி சேர்ப்பியம்  unicode consortiuam  என்ற அமைப்பு பலகோடி தமிழர்களுக்கு தெரியாத அமைப்பு.இந்த அமைப்பு செய்யும் மாற்றங்கள் தமிழின் எதிர்கால வளர்ச்சியையும் ,கருத்துப்பரிமாற்ரங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்று. இதை உணர்ந்த இரண்டு தனி நபர்கள் சந்தடியின்றி ஒரு பழம்பெரும் மொழியில் தாங்கள் செய்யும் மாற்றத்தின் பன்முகத்தனமை அறியாமல்  மாற்ரம் செய்ய முயன்றது எவ்வளவு பெரிய துணிச்சல்காரியம்.

தமிழ்நாட்டில் ஆளும் அரசு தமிழில் உரத்து கூவுகிறதேயொழிய செயல்பாட்டில் அடிபனிந்து போகிறது.ஆங்கில வழிப்பள்ளிகளை திறந்து விட்டதைவிட, ஏழைத்தமிழர்கள்,கிராமப்புர மக்களின் குழந்தைகள் கல்வி பயிலும் தமிழ்வழிப் பள்ளிகளை கால்நடைக் கொட்டகைகள் போல் நடத்தும் கொடுமையைச் செய்கிறது.நடத்தும் தமிழ் மாநாடுகள் தங்கள் ஆட்சிக்கு ஒரு ஊன்றுகோலாக பயன்படும் விதத்திலும் பரப்புரை நிகழ்த்தவும் பயனாகிறது.
எனவேதான் சங்கர மடத்து சர்மாவும், நாசாவில் பணிபுரியும் தமிழ்ர் என்ர முறையிலும் சொல்வதைக்கேட்டு தலையை அசைத்திருக்கிரார்கள்.சமயங்கலில் இந்த தமிழக அரசே ஓரங்கட்டப்பட்டிருக்கின்றது. அரச மேலாண்மையின் பாரத்தில் சிக்குண்டு நாடு,மொழி,இனத்தின் நன்மைகளை ஊன்றித் தன் கைகளில் வைக்கமுடியாத அரசு மொழியில் மாற்றங்கள் கொண்டுவருவதை நெறிப்படுத்த இயலவில்லை.

ஓடுமீன் ஓட உருமீன் வரும்வரை வாடியிருக்கும் போல தங்களின் சொந்த எண்னங்களை நடைமுறைப்படுத்த முயன்றிருக்கும்போது, தகவல் தொழில் நுட்பம் வளராத அன்னிய ம்ன்னன் ஆண்ட தமிழக இருண்டகாலத்தில்தான் கிரந்தம் என்ற உருவை தந்திரக்காரர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். அதனால் ஏற்பட்ட சீர்கேடுகளை மறைமலை அடிகள், தேவநேய பாவாணர்,பெருங்சித்திரனார் போன்றொர் வெளிக்கொணர்ந்து போராடியிருக்கிரார்கள். வேர்சொற்கள் ஆய்வில் எது தமிழ்ச்சொல்,எது வடசொல் என்று நிரைய வழிகாட்டியுள்லார்கள். வழிவருபவர்கள் ஒவ்வொருவருக்கும் "அ" விலிருந்து வாதிட்டால் நேரமே வெட்டியாகும்.

தமிழ் இலக்கண மரபுகள்,மரைமலை அடிகள் முதல் தோன்றிய தனித்தமிழ் இயக்கத்தை ,ஒரு ஆங்கிலபுத்தகத்தை மொழிபெயர்க்க சொல் அறியாத்தற்காக மீறமுடியாது. சொற்களை கற்றுக்கொள்ளுங்கள்.அல்லது உருவாக்குவோம்.எப்படி உருவாக்குவது என்பதற்கு தமிழ் இலக்கண வழிமுறைகள்தான் அவசியம்.ஒவ்வொருவரும் தங்கள் வசதிக்கு ஏற்ப செய்யக்கூடாது.

தமிழ் என்பதே தூய தமிழ்தான். தனித்தமிழ்தான். தூய ஆங்கிலம் என்று எவனும் கூறுவதில்லை. ஆனால் தமிழர்கள்தான்  தூய தமிழ் பேசுபவர்களை  தமிழ்த்தாலிபான்கள் என்று கூறுகின்றார்கள்.ஏன் இந்த நிலை.
தமிழ் தந்த வாழ்வில் மகிழ்ந்து குலவி , ,தமிழ் மூலம் ஏற்றம் பெற எண்ணும் ஒரு வாழ்வுக்கு  தமிழையே பலியிட்டு ஏதோ தமிழுக்கு தொண்டு செய்வதாக எண்ணும் மரபினர் உள்ளவரை இந்த வாதங்கள் நிற்கப்போவதில்லை.

நாம் அறிவியல் நூல்கள் என்று படைப்பது யாரைசென்று அடைகிறது என்று பார்க்கவேண்டும். யார் யார் அதில் பயன் பெறுகிறார்கள் என்று பார்க்கவேண்டும்.  வேளாண் தொழிலில் இந்த அறிவியல் வித்தகர்கள் பயன்பட்ட உரம்,பூச்சிக்கொல்லிகள் ,மண்னியல்,நுண்ணுயிரியல் ஆகியவைகளின் உண்மை தனமைகளை மறைத்துதான் விற்றார்கள்.பல்கலைக்கழகங்கள்  அமெரிக்க அறக்கட்டளைகள் சொன்ன அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களை மானவர்களுக்கு சொல்லிக்கொடுத்து அவர்கள்மூலம் உழவர்கலைத் திசைதிருப்பினார்கள்.ஆனால் இன்றுகூட வேளாண்பலகழகம் தன் தவறை பேசுவதில்லை.ஆற்ரமுடியாதவன் தற்கொலை செய்துகொண்டால் அந்த எண்ணிக்கையைக்கூட மறைக்கின்றது.

எங்களுக்கு நன்றாகவே புரிகின்றது.அறிவியலும் தொழில் நுட்பமும்  கும்பெனிகளின் கைகளில் சிக்கிய வல்லமை பொருந்திய ஆயுதங்கள்.அதன் சூத்திரங்களை மட்டும் தெரிந்து ஆக்ப்போவதில்லை.

எதற்காக,எப்படி,யாருக்காக  அந்த சூத்திரங்கள் பயன்படவேண்டும் என்பதைத் தான் பார்க்கிறோம்.

மக்களுக்கு பயன்பட வேண்டுமானால் மக்கள் மொழியில் எழுதுங்கள். மக்களுக்கு சொற்களைத்தாருங்கள்.
உந்து என்ற சொல் 1960 களில் ஒரு நகைப்புச்சொல்.இன்று,  பேருந்து,பேருந்து நிலையம், மகிழுந்து, சிற்றுந்து,சரக்குந்து என வளர்ந்துகொண்டே போகிறதே. எத்தனை ஆங்கிலசொற்களுக்கு குறுக்கே நிற்கின்றன.

படித்த தமிழன் சமுதாய உணர்வோடு சொற்களை உருவாக்காமல் தமிங்கலம் என்று கிண்டல் கேலி பேசுவதை முறிக்கவேண்டும். கல்வியில்தமிழின் பங்கை உறுதிசெய்ய அனைத்துமுயற்சிகளும் செய்யவேண்டும்.

தமிழோடு ஆரியம் எந்த வடிவிலும் தமிழின் வளர்ச்சிக்கு உதவாது என்றே தோன்றுகின்றது.

அன்புடன்
அரசு

அன்புடன்
அரசு

2011/1/4 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>



--

C.R. Selvakumar

unread,
Jan 4, 2011, 12:27:55 AM1/4/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
2011/1/3 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
////ஏன் இசுட்டீவன் ஃகாக்கிங்,  அல்லது இசுட்டீவன் ஆக்கிங்கு,
ஃகிக்ஃசு அல்லது இக்ஃசு, போசான், ஐன்சுட்டீன் அல்லது ஐன்சுட்டைன்,
எசுட்ரான்சியம், ஐதரசன், ஈலியம் என்று எளிதாகக் கூறலாமே,////
 
தமிழ் மொழியில் ஆங்கிலப் பெயர்ச் சொற்களைச் செம்மையாய்  எழுத முடியாது, எழுதக் கூடாது என்பது பிற்போக்குத்தனம்.
 
கொஞ்சம் புறப்பெயர் (exonym) என்றால் என்ன என்று
கற்றுக்கொள்ளுங்கள். அது முற்போக்குத்தனம்.  
பல முறை கூறியும் தெரிந்துகொள்ள மறுக்கின்றீர்கள்.
ஒவ்வொரு இசைக்கருவியையும் அதன்
இயல்பின் படி இசைப்பது அறிவுடைமை. வீணையையோ, வயலினையோ
தவில் அடிப்பது போலவோ, போர் முரசு கொட்டுவது
போலவோ கொட்ட முடியாது. Stephen, Splash, Station, School ஆகிய
சொற்கள் ஒவ்வொன்றையூம் கண்ணை மூடிக்கொண்டு
இயல்பாய் 3-4 முறை நேர்மையாகச் சொல்லிப்பபருங்கள்.
சிரிதளவாவது முன்னே துணை உயிரொலி இல்லாமல்
ஒலிக்க முடிகின்றதா என. உங்களால் முடியாது என்று
ஆணித்தரமாகக் கூறுகின்றேன். இசுட்டீவன் என்பது தமிழில்
எழுதி வழங்கும் முறை இதன் அறிவுடைமையை உணருங்கள்!
ஞானசம்பந்தன், அண்ணாமலை, கண்ணம் என்பன போன்ற
சொற்களை ஆங்கிலத்தில் ஒலிக்க இயலாது (திரித்து வழங்குவர்).
ஆங்கிலத்தில் உள்ள ஒலியன்களால் வழங்கக்கூடிய மது, திலக்
முதலான சொற்களையும் அவர்களால் துல்லியமாக ஒலிக்கத் தெரியாது.
பிரான்சியச் சொல்லாகிய Jean, Paris போன்ற சொற்களை ஆங்கிலேயர்கள்
தக்கவாறு எழுதவோ ஒலிக்கவோ வழியில்லை. இதெல்லாம்
கற்று அறிவது முற்போக்குத்தனம்.
 
////பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும். ////
 
பல்லார் முனையப் பயனுள பேசுவான்
செல்வாவால் எள்ளப் படும்.
 
செல்லாச்சொல் கொள்ளானே செல்வா என்றேயோ
பொல்லாச்சொல் சொல்வீரோ நீர்?
 
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்
 
என்பதனை அறியீரோ?

சி. ஜெயபாரதன்

unread,
Jan 4, 2011, 8:51:57 AM1/4/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
பேராசிரியர் செல்வா,
 
 
ஹீலியம் ஈலியம் ஆனதுபோல்,
 
ஹாங்ஹாங் என்னும் பெயர்ச் சொல்லை ஆங்காங் என்று சொல்வீரா ?  காங்காங் என்பீரா ?  ஈங்காங் என்பீரா ?  கீங்காங் என்பீரா ?  எப்படிச் சொன்னாலும் அது உமது பெயர்ச்சொல்.   எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் ஓர் பொதுப் பெயர்ச் சொல்லாகாது.   விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாமா ?  அல்லது பேராசிரியர் செல்வாவின் தாலிபான்  அகராதியைத் தேட வேண்டுமா ?
 
ஸ்டீஃபன் ஹாக்கிங் -  ஹாக்கிங் என்னும் பெயர்ச் சொல்லை காக்கிங் என்பீரா ?  ஈக்கிங் என்பீரா ?  ஆக்கிங் என்பீரா ?  அல்லது கீக்கிங் என்பீரா ?   இப்படித் திரித்து ஒரு பெயர்ச் சொல்லை விருப்பம் போல் எழுதுவது  போக்கிரித்தனம், மூடத்தனம்.  பிற்போக்குத்தனம்,
 
 
ஜெயபாரதன்.
 
+++++++++++++
 
2011/1/4 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

சி. ஜெயபாரதன்

unread,
Jan 4, 2011, 9:37:20 AM1/4/11
to tamil...@googlegroups.com
நண்பர் கோவிந்தசாமி திருநாவுக்கரசு,
 
 
கோவிந்தசாமி என்னும்  உங்கள் தந்தையின் பெயரைத் தனித்தமிழில் இப்போது மாற்ற உங்களாலே முடியாது.  மாற்ற வேண்டிய அவசியமும் இல்லை.
 
அதுபோல் ஆயிரக்கணக்கன தமிழ் நூல்களில் பாரதியார், பாரதிதாசன் நூல்கள் உட்படக் கிரந்த எழுத்துக்கள்  உள்ள கலப்பை எப்படி  நீக்கப் போகிறீர். 
 
இப்பணி இப்போது தேவையா.   ஒரு சிலருக்குப் பிடித்தாலும் சரி,  பிடிக்கா விட்டாலும்  சரி,  கிரந்தம்  கலந்த  தமிழ்  நூல்கள், ஏடுகள், கல்வெட்டுகள் தமிழரின் பூர்வீக அடையாளச்  சின்னங்கள்.  அவற்றை அழிப்பதால்  தமிழரின் வரலாறும், அடையாளங்களும்தான் ஒழிந்து போகும்.   
 
 
ஜெயபாரதன்.
+++++++++++++++


2011/1/3 Govindasamy Thirunavukkarasu <gthiruna...@gmail.com>

C.R. Selvakumar

unread,
Jan 4, 2011, 11:10:06 AM1/4/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
பண்பற்ற முறையில் உரையாடாவிடில் (தாலிபான்,
போக்கிரித்தனம்), அப்படிபட்ட மடல்களைத் தமிழ்
மன்றத்தில் இருந்து நீக்கப்படும். தேவை இருப்பின்,
உறுப்பியமும் நீக்கப்படும். எவ்வளவு கடுமையாக
வேண்டுமானாலும் எதிர்க்கருத்துகள் கூறலாம், ஆனால்
பெயர் சுட்டி இழிசொல் கூறுதலும், தமிழைப் பழிக்கும்
மொழிகளும் தமிழ் மன்றத்தில் வேண்டாம்.  
 
நான் கூறிய கருத்துகளுக்கு எதிர்க்கருத்துகள்
இருந்தால் தாருங்கள். இது போக்கிரித்தனம்,
தாலிபானியம், போன்ற தகாத மொழிகள் தவிர்க்க
வேண்டுகிறேன். நான் கேட்ட கேள்விகளுக்கு
விடை பகருங்கள், முடிந்தால்.
 
புறப்பெயர் (exonym, எக்ஃசோனிம்) என்பதை
அறிவீரா? ஒவ்வொரு மொழியும் அதனதன்
இயல்பின்படியேதான் புறமொழிப்பெயர்களையும்
சொற்களையும் உள்வாங்கும். இருக்கும் ஒலியன்களாக
இருப்பினும்கூட மொழியின் இயல்பின்படியே தான் உள்வாங்கும்.
இதனாலேயே ஆங்கிலத்தில் London என்னும் சொல்லைப்
பிரான்சியத்திலும், போர்த்துக்கீசியத்திலும், எசுப்பானியத்திலும்
Londres  என்கின்றனர் கிரேக்க மொழியில் Londino (Λονδίνο) என்கின்றனர்
இடச்சு (டச்சு) மொழியில் Londen என்றும் இத்தாலிய
மொழியில் Londra என்றும் கூறுகின்றனர். எழுத்துகளும்
ஒலிகளும் இருந்தபோதும்! ஆங்கிலத்தில்
பின்வரும் சொற்களில் உள்ள எல்லா
ஒலியன்களும் இருந்தும் திருவனந்தபுரம், தூத்துக்குடி
போன்றவற்றை மாற்றி வழங்குகின்றனர்
(Trivandrum, Tuticorin). ஞானபாரதி, அழகப்பன் என்பதை
எபப்டி ஆங்கிலத்தில் எழுதுவர்?  helium என்பதை
இத்தாலியர் Elio என்கின்றனரே, Strontium என்பதை
எசுப்பானியர் estroncio என்கின்றனரே. இதெல்லாம்
போக்கிரித்தனமா? தாலிபானியமா?
 
கற்றவர்க்கு அழகு பண்புடனும் கருத்துடன்
உரையாடிப் பழகுதல் ஐயா!!
அகவையால் மூத்தவர் நீங்கள்.
இப்படியெல்லாம் பேசுவதால்
நீங்கள்தான் உங்களைத் தாழ்த்திக்கொள்கிறீர்கள்,
நீங்கள்தான் உங்கள் மதிப்பை இழக்கின்றீர்கள்.
 
செல்வா
 
2011/1/4 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>

Mani Manivannan

unread,
Jan 4, 2011, 11:51:08 AM1/4/11
to tamilmanram, அன்புடன்
அன்புள்ள ஜெயபாரதன்,

நீங்கள் குறிப்பிட்ட பெயர்கள் எவையும் தமிழ் இலக்கண விதிகளுக்குச்
சிக்கல் அளிப்பதில்லை.

ஹனுமன் ==> அனுமன் (கம்ப ராமாயணம்)
ஹுண்டாய் ==> யுண்டாய் ( நிறுவனத்தின் தமிழ்ப் பெயர்ப் பலகையிலிருந்து)
ஹாங் காங் (ஹாங் ஹாங் இல்லை) ==> ஆங் காங் (பல பத்தாண்டுகளாக வழங்கி வரும் பெயர்)
ஹாக்கிங் ==> ஆக்கிங்

இன்னொரு மொழியில் இருக்கும் எல்லா ஒலிகளுக்குமே தமிழில் வரி வடிவம்
இருக்க முடியாது. ஒவ்வொரு மொழியும் தன் மரபுக்கு ஏற்ற முறையில் மாற்ற
வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

ஆங்கிலத்திலேயே ஒரே ஒலிப்பும் வெவ்வேறு எழுத்துகளும், ஒரே எழுத்தும்
வெவ்வேறு ஒலிப்புகளும் உடைய சொற்கள் உள்ளன:

bear chested = கரடி மார்பினன்
bare chested = திறந்த மார்பினன் (ஒரே ஒலிப்பு, வெவ்வேறு எழுத்து)

bear = கரடி
bear = தாங்கு (ஒரே எழுத்து, ஒரே ஒலிப்பு, வெவ்வேறு பொருள்)

Cap = கேப்
Cape = கேப்
Gap = கேப் (தமிழில் ஒரே எழுத்து, வெவ்வேறு ஒலிப்புகள்)

ஒலிப்புத் துல்லியம் இருந்தால்தான் மொழி வளம் பெறும் என்பதற்குச்
சான்றுகள் ஏதும் இல்லை.

ஜப்பானிய மொழி, சீன மொழி இவற்றில் எல்லாப் பிற மொழி ஒலிப்புகளையும்
குறிக்கக் குறிகள் இல்லை. அதே போல், சீன மொழிகளின் தொனிகளைக் குறிக்க
ஆங்கிலத்தில் குறிகள் இல்லை.

ஒரு முப்பதாண்டுகளுக்கு முன்னர், நாட்டுப்புறத் தமிழகத்தில் உங்கள்
பெயரைச் செயபாரதன் (Cheyapaaradhan) என்றுதான் பலுக்கியிருப்பார்கள்.
அதுதான் தமிழ் மொழியின் தன்மை. எப்படி உங்களுக்கு உங்கள் பெயரை நீங்கள்
விரும்பும்படி எழுத வேண்டும், ஒலிக்க வேண்டும் என்ற விருப்பம்
இருக்கிறதோ, அதே போல் தங்கள் மொழியில் இல்லாத ஒலிகளைப் பலுக்க மாட்டோம்
என்பவர்களின் எண்ணத்தையும் மதிக்க வேண்டும். தங்கள் மொழியில் இல்லாத
ஒலிகளைப் பிறமொழி எழுத்துகளில் எழுதிப் பிறமொழி போல் பலுக்க வேண்டும்
என்று மற்றவர்களைக் கட்டுப்படுத்த முயல்வதும் ஆதிக்க எண்ணமே.

நமது பெயர்களை வட அமெரிக்கர்கள் சிதைத்து ஒலித்தால் ஏற்றுக் கொள்கிறோமே,
ஏன்? ஆனால், தமிழர்கள் அதை மாற்றி அவர்கள் மொழியின் தன்மையில் எழுதினால்
மட்டும் கடுஞ்சினம் கொண்டு அவர்களைத் தாக்குகிறோமே ஏன்?

எந்தக் கண்ணில் வெண்ணெய் எதில் சுண்ணாம்பு?

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன் ( அல்லது அமெரிக்க ஒலிப்படி மேந்நி மேநவேந்நந்!)
கொட்டிவாக்கம், தமிழ்நாடு


2011/1/4 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:

C.R. Selvakumar

unread,
Jan 4, 2011, 12:15:49 PM1/4/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
//பண்பற்ற முறையில் உரையாடாவிடில் (தாலிபான்,

போக்கிரித்தனம்), அப்படிபட்ட மடல்களைத் தமிழ்
மன்றத்தில் இருந்து நீக்கப்படும்//
 
என்பதை,
 
பண்பற்ற முறையில் உரையாடினால் (தாலிபான்,
போக்கிரித்தனம்), அப்படிபட்ட மடல்கள் தமிழ்

மன்றத்தில் இருந்து நீக்கப்படும்
 
எனத் திருத்திப் படிக்கவும்.
 
நன்றி
 
செல்வா

2011/1/4 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

சி. ஜெயபாரதன்

unread,
Jan 4, 2011, 12:22:46 PM1/4/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
நண்பர் மணிவண்ணன்,
 

உங்கள் அழகிய பெயரைத் தமிழறியா ஒருவர் மனை வண்ணான் என்று உச்சரித்தால், அல்லது எழுதினால் என்ன செய்வீர்கள் ?   அவரை உடனே திருத்த மாட்டீர்களா ?
 
ஸ்டீஃபன் ஹாக்கிங் பெயரைத் தெரிந்தே அரங்கில் ஒரு தமிழர் சிடீபன்  ஆக்கிங் என்றால் அது அவரை அவமானப் படுத்தாதா ? 
ஐன்ஸ்டைன் என்பதை ஐன்சுட்டீன் என்றால் காதில் ஈயத்தை  ஊற்றியது  போல் இல்லையா ? 
 
 
ஜெயபாரதன்.
 
++++++++++++++++++++++++++++++++++++++++
 
2011/1/4 Mani Manivannan <mmani...@gmail.com>

சி. ஜெயபாரதன்

unread,
Jan 4, 2011, 12:31:34 PM1/4/11
to tamil...@googlegroups.com
என் பெயரை வேண்டுமென்றே செயபாரதன் என்று எழுதுவது போக்கிரித்தனம்.
 
ஜெயபாரதன்.
 
++++++++++++++++++++++++++++++

2011/1/4 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

C.R. Selvakumar

unread,
Jan 4, 2011, 1:02:08 PM1/4/11
to tamil...@googlegroups.com
2011/1/4 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
என் பெயரை வேண்டுமென்றே செயபாரதன் என்று எழுதுவது போக்கிரித்தனம்.
 
நான் தமிழில் எழுதும்பொழுது தமிழ்முறைப்படியே
கூடியமட்டிலும் எழுதுபவன்.
தமிழ் மன்றம் தமிழையும், தமிழ் மரபுகளையும் பேணி நடக்கும்
மன்றம். உங்கள் பெயரைத் தமிழில் செயபாரதன் என்றுதான் எழுதுதல்
கூடும். ஏதோ சிறு வேறுபாடு காட்ட வேண்டும் என்று விரும்பினால்,
செ'யபாரதன் என்று எழுத இயலும். தமிழ் உங்களுக்கு
இழுக்காக இருந்தால் தாராளமாக விலகிக்கொள்ளுங்கள்.
இனியொரு முறையும் தகாத சொற்களால் எழுதுவீர்கள் எனில்,
உங்களை இந்த மன்றத்தில் இருந்து
விலக்குவதைத் தவிர வேறு வழியில்லை. இப்படி நான்
கூறுவதற்கும் வருந்துகிறேன். என் செய்வது?!!
 
ஒழுக்கம், நல்லொழுக்கம் உயிரினும் மேலானது. தமிழையும்
தமிழ்ப்பண்பாட்டையும் மதிக்காமலும், தகாத முறையிலும்
நடந்து கொள்வோருக்கு இம்மன்றத்தில் இடம் இல்லை. 
 
செல்வா
மட்டுறுத்துநர், தமிழ்மன்றம்

N. Ganesan

unread,
Jan 4, 2011, 1:56:29 PM1/4/11
to தமிழ் மன்றம்

On Jan 4, 11:31 am, சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com> wrote:
> என் பெயரை வேண்டுமென்றே செயபாரதன் என்று எழுதுவது போக்கிரித்தனம்....
>
> read more »
>
> ஜெயபாரதன்.
>

அன்பின் செல்வா,

இம்மன்றத்தில் இருப்பவர்கள் அனைவரும் முனைவர்கள், அறிஞர்கள்.
ஜெயபாரதன், செல்வகுமார் - இருவரும் தமிழ் வளர்ச்சியில்
பல பதினாண்டுகளாய் உழைப்போர். பொறுத்தார் பூமியாள்வார்
என்பது நீங்கள் அறியாததா? பண்பாடு மிக்க குழ்மம் இது.
நாக. இளங்கோவன் போன்றோர் எழுதுமிடம் அல்லவா?

ஜெயபாரதன் ஐயா விரும்புவதுபோல் அவரது பெயரை
நீங்கள் எழுதச் சித்தம் கொள்ளவேணும். ஒருவர் பெயரை
அவர் விருப்பபடி எழுதும் அறிஞர்கள் பலரை அறிமுகம்


இருக்கிறது.

ஜெயபாரதன் ஐயா, உங்கள் விருப்பம்போல் விஞ்ஞானம் போதியுங்கள்.
செல்வா ஐயா, உங்கள் விருப்பம்போல் தனித்தமிழ் பரப்புங்கள்.
இரண்டையும் வாசிக்க தமிழன்பர்கள் நாங்கள் என்றும்
காத்திருக்கிறோம்.

அன்புடன்,
நா. கணேசன்

> ++++++++++++++++++++++++++++++
>
> 2011/1/4 C.R. Selvakumar <c.r.selvaku...@gmail.com>


>
>
>
> > பண்பற்ற முறையில் உரையாடாவிடில் (தாலிபான்,
> > போக்கிரித்தனம்), அப்படிபட்ட மடல்களைத் தமிழ்
> > மன்றத்தில் இருந்து நீக்கப்படும். தேவை இருப்பின்,
> > உறுப்பியமும் நீக்கப்படும். எவ்வளவு கடுமையாக
> > வேண்டுமானாலும் எதிர்க்கருத்துகள் கூறலாம், ஆனால்
> > பெயர் சுட்டி இழிசொல் கூறுதலும், தமிழைப் பழிக்கும்
> > மொழிகளும் தமிழ் மன்றத்தில் வேண்டாம்.
>
> > நான் கூறிய கருத்துகளுக்கு எதிர்க்கருத்துகள்
> > இருந்தால் தாருங்கள். இது போக்கிரித்தனம்,
> > தாலிபானியம், போன்ற தகாத மொழிகள் தவிர்க்க
> > வேண்டுகிறேன். நான் கேட்ட கேள்விகளுக்கு
> > விடை பகருங்கள், முடிந்தால்.
>
> > புறப்பெயர் (exonym, எக்ஃசோனிம்) என்பதை
> > அறிவீரா? ஒவ்வொரு மொழியும் அதனதன்
> > இயல்பின்படியேதான் புறமொழிப்பெயர்களையும்
> > சொற்களையும் உள்வாங்கும். இருக்கும் ஒலியன்களாக
> > இருப்பினும்கூட மொழியின் இயல்பின்படியே தான் உள்வாங்கும்.
> > இதனாலேயே ஆங்கிலத்தில் London என்னும் சொல்லைப்
> > பிரான்சியத்திலும், போர்த்துக்கீசியத்திலும், எசுப்பானியத்திலும்

> > *Londres*  என்கின்றனர் கிரேக்க மொழியில் *Londino* (Λονδίνο) என்கின்றனர்
> > இடச்சு (டச்சு) மொழியில் *Londen *என்றும் இத்தாலிய
> > மொழியில் *Londra *என்றும் கூறுகின்றனர். எழுத்துகளும்


> > ஒலிகளும் இருந்தபோதும்! ஆங்கிலத்தில்
> > பின்வரும் சொற்களில் உள்ள எல்லா
> > ஒலியன்களும் இருந்தும் திருவனந்தபுரம், தூத்துக்குடி
> > போன்றவற்றை மாற்றி வழங்குகின்றனர்
> > (Trivandrum, Tuticorin). ஞானபாரதி, அழகப்பன் என்பதை
> > எபப்டி ஆங்கிலத்தில் எழுதுவர்?  helium என்பதை
> > இத்தாலியர் Elio என்கின்றனரே, Strontium என்பதை

> > எசுப்பானியர் *estroncio *என்கின்றனரே. இதெல்லாம்


> > போக்கிரித்தனமா? தாலிபானியமா?
>
> > கற்றவர்க்கு அழகு பண்புடனும் கருத்துடன்
> > உரையாடிப் பழகுதல் ஐயா!!
> > அகவையால் மூத்தவர் நீங்கள்.
> > இப்படியெல்லாம் பேசுவதால்
> > நீங்கள்தான் உங்களைத் தாழ்த்திக்கொள்கிறீர்கள்,
> > நீங்கள்தான் உங்கள் மதிப்பை இழக்கின்றீர்கள்.
>
> > செல்வா
>

> > 2011/1/4 சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com>
>
> >  *பேராசிரியர் செல்வா,*
> >> **
> >> **
> >> *ஹீலியம் ஈலியம் ஆனதுபோல்,*
> >> **
> >> *ஹாங்ஹாங் என்னும் பெயர்ச் சொல்லை ஆங்காங் என்று சொல்வீரா ?  காங்காங்


> >> என்பீரா ?  ஈங்காங் என்பீரா ?  கீங்காங் என்பீரா ?  எப்படிச் சொன்னாலும் அது
> >> உமது பெயர்ச்சொல்.   எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் ஓர் பொதுப் பெயர்ச்
> >> சொல்லாகாது.   விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாமா ?  அல்லது

> >> பேராசிரியர் செல்வாவின் தாலிபான்  அகராதியைத் தேட வேண்டுமா ?*
> >> **
> >> *ஸ்டீஃபன் ஹாக்கிங் -  ஹாக்கிங் என்னும் பெயர்ச் சொல்லை காக்கிங் என்பீரா ?
> >> **ஈக்கிங் என்பீரா ?  ஆக்கிங் என்பீரா ?  அல்லது கீக்கிங் என்பீரா ?


> >> இப்படித் திரித்து ஒரு பெயர்ச் சொல்லை விருப்பம் போல் எழுதுவது

> >> போக்கிரித்தனம், மூடத்தனம்.  பிற்போக்குத்தனம், *
> >> **


> >> **
> >> *ஜெயபாரதன்.*

> >> **
> >> *+++++++++++++*
>
> >> 2011/1/4 C.R. Selvakumar <c.r.selvaku...@gmail.com>


>
> >>>  2011/1/3 சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com>
>

> >>>>  *////ஏன் இசுட்டீவன் ஃகாக்கிங்,  அல்லது இசுட்டீவன் ஆக்கிங்கு,*
> >>>>  *ஃகிக்ஃசு அல்லது இக்ஃசு, போசான், ஐன்சுட்டீன் அல்லது ஐன்சுட்டைன்,*
> >>>> *எசுட்ரான்சியம், ஐதரசன், ஈலியம் என்று எளிதாகக் கூறலாமே,////*
> >>>> **
> >>>> *தமிழ் மொழியில் ஆங்கிலப் பெயர்ச் சொற்களைச் செம்மையாய்  எழுத முடியாது,
> >>>> எழுதக் கூடாது என்பது பிற்போக்குத்தனம்.*
> >>>> **


>
> >>> கொஞ்சம் புறப்பெயர் (exonym) என்றால் என்ன என்று
> >>> கற்றுக்கொள்ளுங்கள். அது முற்போக்குத்தனம்.
> >>> பல முறை கூறியும் தெரிந்துகொள்ள மறுக்கின்றீர்கள்.
> >>> ஒவ்வொரு இசைக்கருவியையும் அதன்
> >>> இயல்பின் படி இசைப்பது அறிவுடைமை. வீணையையோ, வயலினையோ
> >>> தவில் அடிப்பது போலவோ, போர் முரசு கொட்டுவது
> >>> போலவோ கொட்ட முடியாது. Stephen, Splash, Station, School ஆகிய
> >>> சொற்கள் ஒவ்வொன்றையூம் கண்ணை மூடிக்கொண்டு
> >>> இயல்பாய் 3-4 முறை நேர்மையாகச் சொல்லிப்பபருங்கள்.
> >>> சிரிதளவாவது முன்னே துணை உயிரொலி இல்லாமல்
> >>> ஒலிக்க முடிகின்றதா என. உங்களால் முடியாது என்று
> >>> ஆணித்தரமாகக் கூறுகின்றேன். இசுட்டீவன் என்பது தமிழில்
> >>> எழுதி வழங்கும் முறை இதன் அறிவுடைமையை உணருங்கள்!
> >>> ஞானசம்பந்தன், அண்ணாமலை, கண்ணம் என்பன போன்ற
> >>> சொற்களை ஆங்கிலத்தில் ஒலிக்க இயலாது (திரித்து வழங்குவர்).
> >>> ஆங்கிலத்தில் உள்ள ஒலியன்களால் வழங்கக்கூடிய மது, திலக்
> >>> முதலான சொற்களையும் அவர்களால் துல்லியமாக ஒலிக்கத் தெரியாது.
> >>> பிரான்சியச் சொல்லாகிய Jean, Paris போன்ற சொற்களை ஆங்கிலேயர்கள்
> >>> தக்கவாறு எழுதவோ ஒலிக்கவோ வழியில்லை. இதெல்லாம்

> >>> கற்று அறிவது முற்போக்குத்தனம்.- Hide quoted text -

Mani Manivannan

unread,
Jan 4, 2011, 1:59:04 PM1/4/11
to tamilmanram, அன்புடன்
நண்பர் ஜெயபாரதன்,
 
நீங்கள் என்னுடைய முந்தைய மடலைக் கவனிக்கவில்லை போலிருக்கிறது.
 
எனது பெயரை ஆங்கிலத்தில் எழுதவே முடியாது.  எனது பெயரில் வரும் ணகரத்தை அமெரிக்கர்களால் உச்சரிக்க முடிவதில்லை. அது அவர்கள் மொழியில் இல்லாத ஓர் ஒலிப்பு.  அமெரிக்க ஆங்கிலத்தில் எல்லா அமெரிக்கர்களுமே என் பெயரை மேன்னி மேநவேன்னன் என்பது போல்தான் உச்சரிக்கிறார்கள்.  அவர்களைக் குறை சொல்ல முடியாது.  ஏனெனில் அதுதான் அவர்கள் மொழியில் முடியும்.  இதே போல் சீன மொழியிலும், ஜப்பானிய மொழியிலும், என் பெயரைச் சொல்ல முடியாது.  ’ண’கரம் பல மொழிகளில் இல்லை.  அதனால் என் பெயரைச் சரியாகத் தமிழரல்லாத பிறமொழியினர் உச்சரித்தாலும் எனக்கு வியப்பாக இருக்கும்.  அவர்களால் உச்சரிக்க முடியவில்லை என்றால் நான் கோபித்துக் கொள்வதில்லை. அவர்கள் பெயரைத் தமிழர்கள் எப்படியெல்லாம் கொலை செய்கிறோம் என்று நமக்கும் தெரியாதல்லவா!
 
எடுத்துக் காட்டாக Giovanni Cassini ( http://jayabarathan.wordpress.com/2010/12/10/astronomer-giovanni-cassini/ ) என்ற பெயரை எடுத்துக் கொள்ளுவோமே.  அதை நீங்கள் கியோவன்னி காஸ்ஸினி என்று எழுதியிருக்கிறீர்கள்.  ஆனால், அந்தப் பெயரை ஜ்யோவாநி கசினி என்று உச்சரிக்க வேண்டும்.  (http://www.pronouncenames.com/pronounce/giovanni, http://www.forvo.com/word/giovanni_cassini/).  இது மட்டுமல்ல, வேறு பல பிறமொழிப் பெயர்களையும் நீங்கள் ஒலிபெயர்த்து எழுதுவதில் பிழைகளைப் பார்த்திருக்கிறேன்.
 
நல்ல அறிவியல் கட்டுரைகள் எழுதும் உங்களுக்குப் பிறமொழிப் பெயர்கள் அனைத்தையுமே ”சரியாக”த் தமிழில் எழுதத் தெரிந்திருக்க வேண்டியதில்லை.  நான் சுட்டிக்காட்டினாலும் நீங்கள் திருத்திக் கொள்ளப் போவதில்லை.  அதனால் உங்களை நான் தாலிபான் என்று சொல்ல முடியுமா என்ன?
 
நீங்கள் உங்களுக்குப் பிடித்த நடையில், உங்களுக்குத் தெரிந்த முறையில் கிரந்தங்களைத் தேவையோ இல்லையோ அள்ளித் தெளித்து எழுதுகிறீர்கள். அதுதான் சரி என்று நினைப்பது மட்டுமல்லாமல் மற்றவர்களும் அவ்வாறே எழுத வேண்டும் என்று வலியுறுத்துகிறீர்கள்.
 
பொறுமையும் சகிப்புத் தன்மையும், வளைந்து கொடுக்கும் பாங்கும், ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காணும் பண்பும் இருந்தால் போதுமே.  அவை இல்லாதவர்களைத்தான் நாம் “தாலிபான்” என்று குற்றம் சாட்டலாம்.  கடவுளின் உள்ளத்தை நேரடியாக அறிந்தவர்கள் போல் மற்றவர்கள் தாம் கூறுவதைச் செய்ய வேண்டும், இல்லையேல் தலையைச் சீவி விடுவோம் என்று சொன்னால் தாலிபான் எனலாம்.
 
ஐயா, தமிழ் மொழியின் மரபு இன்னது, எனவே நாங்கள் தமிழ் மொழிமரபைப் பின்பற்றி எழுதுகிறோம் என்றால் அவர்களைப் பொறுக்கிகள், தாலிபான்கள் என்று தாக்குவது பொறையுடைமை ஆகுமா? கிரந்த எழுத்துகளைச் சேர்க்கக் கூடாது என்பவர்கள் தாலிபான்கள் என்றால், கிரந்தத்தைச் சேர்த்துத்தான் எழுதவேண்டும் என்று கட்டளையிடுவது மட்டும் தாலிபான் ஆகாதா என்ன?
 
பேரா. செல்வகுமார் கூறுவதெல்லாம், ஒவ்வொரு மொழிக்கும் அதன் மரபு இருக்கிறது.  அதற்கு ஏற்றாற்போல் எழுதுவது முறையானது.  மற்றபடி எழுதுவது அந்த மொழியின் மரபுப் படி, அதன் இலக்கணப் படி பிழையானது என்பதே.  தமிழ்மொழி இலக்கணப் படி, அதன் மொழி மரபுப் படி வடமொழி எழுத்தைத் தவிர்த்து எழுதுவது முறையானது.  தற்காலத் தமிழில் அந்த இலக்கணத்திலிருந்து நெகிழ்ந்திருக்கிறோம்.  நெகிழ்ச்சியே மரபு என்றும் அதைப் பின்பற்றாதவர்கள் தாலிபான்கள் என்பதும் முறையோ?
 
ஹீலியம் என்று தான் எழுத வேண்டும் என்று நீங்கள் கட்டளை இடுகிறீர்கள்.
 
ஆனால், அது ஆங்கிலத்தை அடியொற்றி வருவது.  ஐரோப்பிய மொழிகளிலே கூட ஈலியோ என்று வருவதால், நாம் அப்படித் தமிழில் எழுதுவது பிழையில்லை என்கிறார் செல்வா.
 
ம்ம்ம். இப்படியும் சிந்திக்கலாமா என்று சொன்னால், பரந்த மனதுள்ளவர் என்று கொள்ளலாம். அதை விடுத்து அப்படி எழுதுவது போக்கிரித்தனம் என்றால்?
 
பைபிளை முதலில் விவிலியம் என்று தான் அழைத்தார்கள்.  ஜீஸஸ் என்று தமிழில் எழுதுவதில்லை. ஏசு, இயேசு என்றுதான் அழைப்போம்.  ஜீஸஸ் பிழையான உச்சரிப்பு. யெஷூவா அல்லது யேஷு (http://www.seekfirst.com/node/257) என்றே அவர் பெயர் அழைக்கப் பட்டிருக்க வேண்டும்.  ஆங்கில உச்சரிப்பின் அடிப்படையில் தமிழில் எழுதுவது பிழை என்றால் கோபித்துக் கொண்டால் எப்படி?
 
அதே போல் பீட்டர் என்பது தவறு. பேதுரு என்பதே பெத்ரோ என்ற உச்சரிப்புக்கு நெருங்கிய பெயர்.
 
மேத்யூ என்பது தவறு.  மத்தேயூ என்பதே மத்தேயோ என்ற உச்சரிப்புக்கு நெருங்கிய பெயர்.
 
ஜான் என்பது தவறு.  யோவான் என்ற பெயரே மூலத்துக்கு நெருங்கிய பெயர்.
 
இதே போல் எண்ணற்ற பல யூத, கிறித்துவப் பெயர்களைப் பழைய ஏற்பாட்டில் போர்த்துகீசிய ஒலிப்புகளை ஒட்டிய உச்சரிப்பில் கொடுத்திருக்கிறார்கள். அவை ஆங்கிலப் பெயர்களை விட, கிரேக்கப் பெயர்களை விடப் பொருந்தியவை.
 
இவை தெரியாவிட்டால் பரவாயில்லை.
 
ஆனால், ஜீஸஸ் என்று எழுதாதவர்கள் போக்கிரிகள், தாலிபான்கள் என்றால் என்ன சொல்வது?
 
அன்புடன்,
 
மணி மு. மணிவண்ணன்

ஞானபாரதி

unread,
Jan 4, 2011, 2:33:29 PM1/4/11
to தமிழ் மன்றம்
அன்புடையீர்,
தாலிபான் போன்றவற்றை ஒருவரை குற்றம் சொல்ல பயன்படுத்த தேவையில்லை.
அதேவேளை கிரந்தச் சொற்கள் தமிழில் பயன்பாட்டில் உள்ளதையும்
மறுப்பதற்கில்லை. தமிழக அரசு இவற்றை அங்கீகரித்துள்ளது. மன்மோகன்
சிங்கிற்கு முன்னர் இருந்த பிரதமர் யார்? ஆக்ராவிலுள்ள காதல்
நினைவிடத்தை யார் யாருக்காக கட்டினார்? என பலவற்றிக்கு, சொல்லத்
தெரிந்தும், தூய தமிழில் எழுதிடல் இயலாது.

ளகர, டகர மட்டுமல்லாமல் சகரத்திலும் தமிழ்ச் சொற்கள் தொடங்குவதில்லை
என்று படித்த நினைவு.

லகர, ளகர, ழகர - ணகர, நகர, னகர - றகர, ரகர - என்ற வேறுபாடுகளையும் மறந்து
வருகிறோம். நிலைநிறுத்த வேண்டியவற்றோடு ஏற்றுக்கொள்ளவேண்டியவைகளும் உள்ளன
என்பதை மறுக்கக்கூடாது.

அறிவியலும் தமிழும் கலந்த குழுமம் இது- பகை வேண்டாமே!!!!
அன்புடன்
பாரதி


On Jan 4, 11:02 pm, "C.R. Selvakumar" <c.r.selvaku...@gmail.com>
wrote:
> 2011/1/4 சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com>


>
> > என் பெயரை வேண்டுமென்றே செயபாரதன் என்று எழுதுவது போக்கிரித்தனம்.
>
> நான் தமிழில் எழுதும்பொழுது தமிழ்முறைப்படியே
> கூடியமட்டிலும் எழுதுபவன்.
> தமிழ் மன்றம் தமிழையும், தமிழ் மரபுகளையும் பேணி நடக்கும்
> மன்றம். உங்கள் பெயரைத் தமிழில் செயபாரதன் என்றுதான் எழுதுதல்
> கூடும். ஏதோ சிறு வேறுபாடு காட்ட வேண்டும் என்று விரும்பினால்,
> செ'யபாரதன் என்று எழுத இயலும். தமிழ் உங்களுக்கு
> இழுக்காக இருந்தால் தாராளமாக விலகிக்கொள்ளுங்கள்.
> இனியொரு முறையும் தகாத சொற்களால் எழுதுவீர்கள் எனில்,
> உங்களை இந்த மன்றத்தில் இருந்து
> விலக்குவதைத் தவிர வேறு வழியில்லை. இப்படி நான்
> கூறுவதற்கும் வருந்துகிறேன். என் செய்வது?!!
>
> ஒழுக்கம், நல்லொழுக்கம் உயிரினும் மேலானது. தமிழையும்
> தமிழ்ப்பண்பாட்டையும் மதிக்காமலும், தகாத முறையிலும்
> நடந்து கொள்வோருக்கு இம்மன்றத்தில் இடம் இல்லை.
>
> செல்வா
> மட்டுறுத்துநர், தமிழ்மன்றம்
>
>
>
>
>
>
>
>
>
> > ஜெயபாரதன்.
>
> > ++++++++++++++++++++++++++++++
>

> >   2011/1/4 C.R. Selvakumar <c.r.selvaku...@gmail.com>


>
> >>   பண்பற்ற முறையில் உரையாடாவிடில் (தாலிபான்,
> >> போக்கிரித்தனம்), அப்படிபட்ட மடல்களைத் தமிழ்
> >> மன்றத்தில் இருந்து நீக்கப்படும். தேவை இருப்பின்,
> >> உறுப்பியமும் நீக்கப்படும். எவ்வளவு கடுமையாக
> >> வேண்டுமானாலும் எதிர்க்கருத்துகள் கூறலாம், ஆனால்
> >> பெயர் சுட்டி இழிசொல் கூறுதலும், தமிழைப் பழிக்கும்
> >> மொழிகளும் தமிழ் மன்றத்தில் வேண்டாம்.
>
> >> நான் கூறிய கருத்துகளுக்கு எதிர்க்கருத்துகள்
> >> இருந்தால் தாருங்கள். இது போக்கிரித்தனம்,
> >> தாலிபானியம், போன்ற தகாத மொழிகள் தவிர்க்க
> >> வேண்டுகிறேன். நான் கேட்ட கேள்விகளுக்கு
> >> விடை பகருங்கள், முடிந்தால்.
>
> >> புறப்பெயர் (exonym, எக்ஃசோனிம்) என்பதை
> >> அறிவீரா? ஒவ்வொரு மொழியும் அதனதன்
> >> இயல்பின்படியேதான் புறமொழிப்பெயர்களையும்
> >> சொற்களையும் உள்வாங்கும். இருக்கும் ஒலியன்களாக
> >> இருப்பினும்கூட மொழியின் இயல்பின்படியே தான் உள்வாங்கும்.
> >> இதனாலேயே ஆங்கிலத்தில் London என்னும் சொல்லைப்
> >> பிரான்சியத்திலும், போர்த்துக்கீசியத்திலும், எசுப்பானியத்திலும்

> >> *Londres*  என்கின்றனர் கிரேக்க மொழியில் *Londino* (Λονδίνο) என்கின்றனர்
> >> இடச்சு (டச்சு) மொழியில் *Londen *என்றும் இத்தாலிய
> >> மொழியில் *Londra *என்றும் கூறுகின்றனர். எழுத்துகளும்


> >> ஒலிகளும் இருந்தபோதும்! ஆங்கிலத்தில்
> >> பின்வரும் சொற்களில் உள்ள எல்லா
> >> ஒலியன்களும் இருந்தும் திருவனந்தபுரம், தூத்துக்குடி
> >> போன்றவற்றை மாற்றி வழங்குகின்றனர்
> >> (Trivandrum, Tuticorin). ஞானபாரதி, அழகப்பன் என்பதை
> >> எபப்டி ஆங்கிலத்தில் எழுதுவர்?  helium என்பதை
> >> இத்தாலியர் Elio என்கின்றனரே, Strontium என்பதை

> >> எசுப்பானியர் *estroncio *என்கின்றனரே. இதெல்லாம்


> >> போக்கிரித்தனமா? தாலிபானியமா?
>
> >> கற்றவர்க்கு அழகு பண்புடனும் கருத்துடன்
> >> உரையாடிப் பழகுதல் ஐயா!!
> >> அகவையால் மூத்தவர் நீங்கள்.
> >> இப்படியெல்லாம் பேசுவதால்
> >> நீங்கள்தான் உங்களைத் தாழ்த்திக்கொள்கிறீர்கள்,
> >> நீங்கள்தான் உங்கள் மதிப்பை இழக்கின்றீர்கள்.
>
> >> செல்வா
>

> >> 2011/1/4 சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com>
>
> >>  *பேராசிரியர் செல்வா,*
> >>> **
> >>> **
> >>> *ஹீலியம் ஈலியம் ஆனதுபோல்,*
> >>> **
> >>> *ஹாங்ஹாங் என்னும் பெயர்ச் சொல்லை ஆங்காங் என்று சொல்வீரா ?  காங்காங்


> >>> என்பீரா ?  ஈங்காங் என்பீரா ?  கீங்காங் என்பீரா ?  எப்படிச் சொன்னாலும் அது
> >>> உமது பெயர்ச்சொல்.   எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் ஓர் பொதுப் பெயர்ச்
> >>> சொல்லாகாது.   விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாமா ?  அல்லது

> >>> பேராசிரியர் செல்வாவின் தாலிபான்  அகராதியைத் தேட வேண்டுமா ?*
> >>> **
> >>> *ஸ்டீஃபன் ஹாக்கிங் -  ஹாக்கிங் என்னும் பெயர்ச் சொல்லை காக்கிங் என்பீரா
> >>> ?  **ஈக்கிங் என்பீரா ?  ஆக்கிங் என்பீரா ?  அல்லது கீக்கிங் என்பீரா ?


> >>> இப்படித் திரித்து ஒரு பெயர்ச் சொல்லை விருப்பம் போல் எழுதுவது

> >>> போக்கிரித்தனம், மூடத்தனம்.  பிற்போக்குத்தனம், *
> >>> **


> >>> **
> >>> *ஜெயபாரதன்.*

> >>> **
> >>> *+++++++++++++*
>
> >>> 2011/1/4 C.R. Selvakumar <c.r.selvaku...@gmail.com>
>

> >>>>  2011/1/3 சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com>
>

> >>>>>  *////ஏன் இசுட்டீவன் ஃகாக்கிங்,  அல்லது இசுட்டீவன் ஆக்கிங்கு,*
> >>>>>  *ஃகிக்ஃசு அல்லது இக்ஃசு, போசான், ஐன்சுட்டீன் அல்லது ஐன்சுட்டைன்,*
> >>>>> *எசுட்ரான்சியம், ஐதரசன், ஈலியம் என்று எளிதாகக் கூறலாமே,////*
> >>>>> **
> >>>>> *தமிழ் மொழியில் ஆங்கிலப் பெயர்ச் சொற்களைச் செம்மையாய்  எழுத முடியாது,
> >>>>> எழுதக் கூடாது என்பது பிற்போக்குத்தனம்.*
> >>>>> **


>
> >>>> கொஞ்சம் புறப்பெயர் (exonym) என்றால் என்ன என்று
> >>>> கற்றுக்கொள்ளுங்கள். அது முற்போக்குத்தனம்.
> >>>> பல முறை கூறியும் தெரிந்துகொள்ள மறுக்கின்றீர்கள்.
> >>>> ஒவ்வொரு இசைக்கருவியையும் அதன்
> >>>> இயல்பின் படி
>

> ...
>
> read more »

சி. ஜெயபாரதன்

unread,
Jan 4, 2011, 3:01:36 PM1/4/11
to tamil...@googlegroups.com
நண்பர் மணிவண்ணன்,
 
 
நீங்கள் காட்டியுள்ள இணையான உதாரணங்கள்  எல்லாம் ஆங்கிலப்  பெயர்ச்  சொற்களை முறையாக, நேரடியாகப் புரியும்படி விஞ்ஞானத்தில் எழுத  வேண்டும் என்னும் என் தர்க்கத்தை நெருங்க வில்லை.  புதிர் போட்டது போல் புரியாத புதிய நூதனச் சொற்களை விருப்பம்  போல்  விஞ்ஞானப் படைப்புகளில் இட்டு புதிய அகராதிகளை எழுதுவோரை  நான்  தடுக்க  வில்லை.   அம்முறை குழப்பம் விளைவிக்கும் என்பதே என் தர்க்கம்.
 
வடமொழி, ஆங்கிலச் சொற்கள், கிரந்தம் கலக்காத தூய விஞ்ஞானப் படைப்புகள் நூல்கள் யார் இதுவரை எழுதியுள்ளார் எழுதி வருகிறார் என்பது என் இறுதிக் கேள்வி.      
 
ஜெயபாரதன்.
 
++++++++++++++++
2011/1/4 Mani Manivannan <mmani...@gmail.com>

சி. ஜெயபாரதன்

unread,
Jan 4, 2011, 5:32:38 PM1/4/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
நண்பர் மணிவண்ணன்,
 
///நல்ல அறிவியல் கட்டுரைகள் எழுதும் உங்களுக்குப் பிறமொழிப் பெயர்கள் அனைத்தையுமே ”சரியாக”த் தமிழில் எழுதத் தெரிந்திருக்க வேண்டியதில்லை.  நான் சுட்டிக்காட்டினாலும் நீங்கள் திருத்திக் கொள்ளப் போவதில்லை.  அதனால் உங்களை நான் தாலிபான் என்று சொல்ல முடியுமா என்ன? ////
 
இது உங்கள் யூகம்.  இப்படி முன்கூட்டி முடிவெடுப்பது உங்கள் பழக்கம்.
 
என்னை பின்பற்றித்தான் எழுத வேண்டும் என்று யாரையும் நான் கட்டாயப் படுத்தியதில்லை.
 
ஐன்சுட்டீன் என்றும் சிடீவன் ஆக்கிங் என்றும் எழுதுவது அந்தப் பெயருடையோரை மிகவும் இழிவு படுத்துவது என்றுதான் எழுதி வருகிறேன்.
 
////நீங்கள் உங்களுக்குப் பிடித்த நடையில், உங்களுக்குத் தெரிந்த முறையில் கிரந்தங்களைத் தேவையோ இல்லையோ அள்ளித் தெளித்து எழுதுகிறீர்கள். அதுதான் சரி என்று நினைப்பது மட்டுமல்லாமல் மற்றவர்களும் அவ்வாறே எழுத வேண்டும் என்று வலியுறுத்துகிறீர்கள்.///
 
இதுவும் உங்கள் அனுமானத் திரிபுக் கருத்து.   இதை நான் எங்கே  வலியுறுத்தி உள்ளேன் ? 
 
 
ஜெயபாரதன்.
 
+++++++++++++++++++++++++++

சி. ஜெயபாரதன்

unread,
Jan 4, 2011, 6:01:11 PM1/4/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
நண்பர் மணிவண்ணன்,
 
 
///எடுத்துக் காட்டாக Giovanni Cassini ( http://jayabarathan.wordpress.com/2010/12/10/astronomer-giovanni-cassini/ ) என்ற பெயரை எடுத்துக் கொள்ளுவோமே.  அதை நீங்கள் கியோவன்னி காஸ்ஸினி என்று எழுதியிருக்கிறீர்கள்.  ஆனால், அந்தப் பெயரை ஜ்யோவாநி கசினி என்று உச்சரிக்க வேண்டும்.  (http://www.pronouncenames.com/pronounce/giovanni, http://www.forvo.com/word/giovanni_cassini/).  இது மட்டுமல்ல, வேறு பல பிறமொழிப் பெயர்களையும் நீங்கள் ஒலிபெயர்த்து எழுதுவதில்  பிழைகளைப் பார்த்திருக்கிறேன்.////
 
ஜியோவானி கஸ்ஸினி என்று நான் மாற்றிக் கொள்கிறேன்.   அதுபோல்  ஐன்ஸ்டைன், ஸ்டீஃபன் ஹாக்கிங், ஹிக்ஸ் போஸான்,  ஐஸக் நியூட்டன்  என்று நான் எழுதி இருப்பது  சரிதானே.
 
 
ஜெயபாரதன்.
 

C.R. Selvakumar

unread,
Jan 4, 2011, 7:21:18 PM1/4/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
2011/1/4 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
நண்பர் மணிவண்ணன்,
 
///நல்ல அறிவியல் கட்டுரைகள் எழுதும் உங்களுக்குப் பிறமொழிப் பெயர்கள் அனைத்தையுமே ”சரியாக”த் தமிழில் எழுதத் தெரிந்திருக்க வேண்டியதில்லை.  நான் சுட்டிக்காட்டினாலும் நீங்கள் திருத்திக் கொள்ளப் போவதில்லை.  அதனால் உங்களை நான் தாலிபான் என்று சொல்ல முடியுமா என்ன? ////
 
இது உங்கள் யூகம்.  இப்படி முன்கூட்டி முடிவெடுப்பது உங்கள் பழக்கம்.
 
என்னை பின்பற்றித்தான் எழுத வேண்டும் என்று யாரையும் நான் கட்டாயப் படுத்தியதில்லை.
 
ஐன்சுட்டீன் என்றும் சிடீவன் ஆக்கிங் என்றும் எழுதுவது அந்தப் பெயருடையோரை மிகவும் இழிவு படுத்துவது என்றுதான் எழுதி வருகிறேன்.
 
இது உங்கள் கற்பனை. ஒவ்வொரு மொழியும் அதன் இயல்பின்படியே
பெயர்களை வழங்கும் என்னும் எளிய அடிப்படையை
அறிவாளிகளாகிய அவர்கள் நன்கு அறிவர்.
அதுவும் ஐன்சுட்டீனுக்கு நன்கு தெரியும். அவர் இடாய்ச்சு மொழியைத் தாய்மொழிகாயக் கொண்டவர். Joeseph என்றால் யோசஃவ் என்பது போல
ஒலிக்கும் என்பதை அறிவார்.  exonym என்பதை சற்று புரிந்துகொளுங்கள்.
 
////நீங்கள் உங்களுக்குப் பிடித்த நடையில், உங்களுக்குத் தெரிந்த முறையில் கிரந்தங்களைத் தேவையோ இல்லையோ அள்ளித் தெளித்து எழுதுகிறீர்கள். அதுதான் சரி என்று நினைப்பது மட்டுமல்லாமல் மற்றவர்களும் அவ்வாறே எழுத வேண்டும் என்று வலியுறுத்துகிறீர்கள்.///
 
இதுவும் உங்கள் அனுமானத் திரிபுக் கருத்து.   இதை நான் எங்கே  வலியுறுத்தி உள்ளேன் ? 
 
 
மேலே பாருங்கள்.



--

C.R. Selvakumar

unread,
Jan 4, 2011, 7:26:51 PM1/4/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
2011/1/4 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
நண்பர் மணிவண்ணன்,
 
 
///எடுத்துக் காட்டாக Giovanni Cassini ( http://jayabarathan.wordpress.com/2010/12/10/astronomer-giovanni-cassini/ ) என்ற பெயரை எடுத்துக் கொள்ளுவோமே.  அதை நீங்கள் கியோவன்னி காஸ்ஸினி என்று எழுதியிருக்கிறீர்கள்.  ஆனால், அந்தப் பெயரை ஜ்யோவாநி கசினி என்று உச்சரிக்க வேண்டும்.  (http://www.pronouncenames.com/pronounce/giovanni, http://www.forvo.com/word/giovanni_cassini/).  இது மட்டுமல்ல, வேறு பல பிறமொழிப் பெயர்களையும் நீங்கள் ஒலிபெயர்த்து எழுதுவதில்  பிழைகளைப் பார்த்திருக்கிறேன்.////
 
ஜியோவானி கஸ்ஸினி என்று நான் மாற்றிக் கொள்கிறேன்.   அதுபோல்  ஐன்ஸ்டைன், ஸ்டீஃபன் ஹாக்கிங், ஹிக்ஸ் போஸான்,  ஐஸக் நியூட்டன்  என்று நான் எழுதி இருப்பது  சரிதானே.
 
 
தமிழில் சியோவானி கசினி என்றெழுதுவது சரி.
அதேபோல நீங்கள் மேலே குறிப்பிட்ட
மற்ற பெயர்கள்: ஐன்சுட்டீன் (அல்லது ஐன்சுட்டைன்),
இசுட்டீவன் ஆக்கிங் (அல்லது இசுட்டீஃவன் ஃகாக்கிங்),
இக்ஃசு போசான், ஐசக் நியூட்டன் என்று
தமிழில் எழுதுவது சரி.
 
 
செல்வா



--

iraamaki

unread,
Jan 4, 2011, 8:20:21 PM1/4/11
to tamil...@googlegroups.com
அன்பிற்குரிய ஜெயபாரதன் ஐயா,
 
நீங்கள் என்னைவிட அகவையில் மூத்தவர். தமிழுக்கு அரிய கட்டுரைகளைத் தருகிறீர்கள். பாராட்டுக்கள். ஆனால் “தான் செய்வது மட்டுமே சரி, மற்றவர் தன்னைப் போலக் கட்டுரைகள் படைப்பதில்லை” என்று நீங்கள் விடாது அகந்தை முற்றிக் குத்திக் காண்பித்துக் கொண்டிருப்பதைக் கண்டால் ”உங்களோடு என்ன பேசுவது?” என்று புரியவில்லை. குறிப்பாக, என்னுடைய கட்டுரையின் உள்ளடக்கத்தைப் பாராது, "அது என்ன சொல்கிறது?" என்று அதைப் பற்றிப் பேசாமல், வெறும் முதல்வரியிலேயே குதித்துக் கொண்டு குழாயடிச் சண்டை போடுவது எனக்குப் புரியவில்லை. [I am sick and tired of your childishness.]
 
விண்ணியல் என்பது cosmology. செல்வா அது பற்றிக் கூறிவிட்டார். அறிஞர் என்பது expert என்பதைக் குறிக்கும். இயல் என்று வரும்போதே அதுவொரு -logy என்பது தெரிந்து போய்விடும். விண்ணியல் என்றாலே அது அறிவியலின் (உங்கள் வழக்குப் படி விஞ்ஞானம். அதை இப்பொழுது பலரும் பயன்படுத்துவதில்லை. அறிவியல் என்ற சொல்லே அதற்கு நிகராகப் பயன்பட்டு வருகிறது. நீங்கள் விஞ்ஞானம் என்று பயன்படுத்துவது உங்கள் உகப்பு.) ஒரு பகுதி என்பது தெரிந்துவிடும். அறிவியல் அறிஞர் என்பவர் ஓர் அறிவியலாளர் (உங்களின் விஞ்ஞானி) என்பதும் தெரிந்துவிடும். அதைத் தனித்துச் சொல்லத் தேவையில்லை. பொதுச்சொல்லால் சொன்னால் தவறில்லை. தமிழறிஞர் என்று சொல்வதில்லையா? knowledge expert எல்லோருமே அறிஞர் தான்.
 
அப்புறம் ச்*டீவன் ஆக்கிங் என்று எழுதியது உங்களைக் கோவப் படுத்தியிருக்கிறது. நீங்கள் பெயர்களை எழுதும் முறை எத்தனை பேரைக் கோவப் படுத்துகிறது என்று அறிய மாட்டீர்கள். பொதுவாக இசுட்டீவன் ஆக்கிங்கு என்று தான் நான் எழுதிக் கொண்டிருந்தேன். அங்கும் இங்கும் சிலர் கேட்டுக் கொண்டதால் சற்று நெகிழ்ந்து, இலக்கண விதிகளை மீறியும், கிரந்தம் கலந்தும், ஒரு சில எழுதிக் கொண்டும் இருக்கிறேன். என்னுடைய இந்தக் கட்டுரையிலேயே ஒரு சில கிரந்த எழுத்துக்கள் பயிலப் பட்டிருக்கும். ”இங்கே நண்பர் செல்வாவின் பரிந்துரையான மீக்குறியைப் போட்டுத்தான் பார்ப்போமே?” என்று ஒரு சோதனை முயற்சி செய்தேன். உடனே என்மேற் பாய்ந்து குதற முயலுகிறீர்கள். ச் - க்கு அருகில் இருந்த * மீக்குறியை நீங்கள் கவனிக்கவில்லை போலும். இந்த மடலில் மட்டும் உடுக்குறியோடு வெட்டியொட்டிய நீங்கள் பின்னால் வந்த உங்கள் தொடர் மடல்களில் உடுக்குறியைத் தொலைத்துவிட்டீர்கள். என்ன செய்வது? நீங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால். எங்களுக்குத் தெரிந்தது நாலு கால்.
 
[நீங்கள் ஸ்டீஃபன் என்று எழுதுவது தமிழின் ஒலிப்புப் படி பெருந் தவறு. அதைத் தமிழ் ஒலிப்போடு ஆங்கிலத்தில் எழுதிக் காட்டட்டுமா? stehpan. hp is not the same as f. ஃ - என்பதை ப - விற்கு முன்னால் போட்டு fa என்ற ஒலி வந்ததாக நீங்கள் கொள்ளுவீர்கள். ச்* என்று உடுக்குறி போட்டு S என்று நாங்கள் சொன்னால் அது தவறோ? அது என்ன ஐயா, இப்படியொரு நொள்ளைச் சிந்தனை? உங்களுக்கு ஒரு ஞாயம், எங்களுக்கு ஒரு ஞாயமா? வேண்டாத மருமகள் கைபட்டாற் குற்றம், கால்பட்டாற் குற்றமா? கொஞ்சமாவது ஓர்ந்து பாருங்கள்.] 
 
உங்களுடைய ஒவ்வொரு கூக்குரலுக்கும் எதிர்க் கூக்குரல் கொடுத்துக் கொண்டிருந்தால் என்னுடைய பணிகள் தடைப் பட்டுப் போகும் என்று வெறுமே உங்களைப் படிப்பதோடு நான் நகர்ந்து போவேன். என்னால் “மகா ஐக்கியப் பிரபஞ்ச நியதி” என்று எழுத முடியாது. “பேரொன்றிப்புத் தேற்று (Grand Unified Theory, GUT )” என்று தான் எழுத முடியும். கிரந்தம், வடசொல் தவிர்க்க முயன்று கொண்டேயிருப்பேன். என் தமிழ்நடை வேறு; உங்களின் கலப்புநடை வேறு. 
 
ஒருவர் கைகளை இன்னொருவர் குலுக்கிக் கொள்வோம். நீங்கள் உங்கள் வழியிற் போங்கள், நான் என் வழியிற் போகிறேன். தமிழ் பெரிதும் பரந்தது.
 
அன்புடன்
 
தமிழ்த் தாலிபான் :-))))))))))))))))))). என்னாற் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
இராம.கி.
 
 
----- Original Message -----
Sent: Monday, January 03, 2011 9:52 PM
Subject: Re: [தமிழ் மன்றம்] கண்ணெழுத்தும், வட்டெழுத்தும், கந்தெழுத்தும் - 1

மகா ஐக்கியப் பிரபஞ்ச நியதியை (Grand Unified Theory, GUT )

 
2011/1/3 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
////  - விண்ணியல் அறிஞர் ச்*டீவன் ஆக்கிங் //////

ஸ்டீஃபன் ஹாக்கிங் மகா ஐக்கியப் பிரபஞ்ச நியதியை () உருவாக்க  முயன்று  வருகிறார்.  
 
விண்ணியல் என்றால் என்ன அர்த்தம் ?   விண்ணியல் பிரபஞ்சம் ஆகாது.
 
அறிஞர் என்றால் விஞ்ஞானியாகுமா ?   அப்படியானால் அறிஞர் அண்ணா  ஒரு விஞ்ஞானியா ?
 
ஸ்டீஃபன் என்பதை ச்*டீவன் என்று எழுதுவது தமிழுக்கும் இழுக்கு !!!  ஸ்டீஃபன் ஹாக்கிங் என்னும் பெயர்ச் சொல்லுக்கும் இழுக்கு !!! 
 
தூய தமிழ் என்று சொல்லிக் கொண்டு தமிழ் விஞ்ஞானப் படைப்புகள் பிற்போக்குத்தனமாக ஆக்கப் படுகின்றன.
 
 
ஜெயபாரதன் 
+++++++++++++++++++++++++
2011/1/3 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>

கண்ணெழுத்தும் வட்டெழுத்தும், கந்தெழுத்தும் - 1

”அறிவின் எதிரி அறியாமையல்ல; அது அறிந்ததாய் எண்ணிக் கொள்ளும் மயக்கம்
                                                                                                                                                                                      - விண்ணியல் அறிஞர் ச்*டீவன் ஆக்கிங்

”தமிழெழுத்தும் கிரந்தமும் குறியேற்ற ஊடாடல்களும்” என்ற தொடரை முடித்து, அடுத்த சிந்தனையில் ஆழ்ந்திருந்த போது ”கிரந்தவெழுத்து எப்படி எழுந்தது? அதன் பின்புலம் என்ன? இற்றைத் தமிழெழுத்து வடிவம் எப்பொழுது தோன்றியது? சங்க காலத் தமிழெழுத்தின் பெயரென்ன? அது நம் இலக்கியங்களிற் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா? வட்டெழுத்து என்பது என்ன? அது எப்பொழுது புழக்கத்திலிருந்தது? ஏன் மறைந்தது? புள்ளியிட்ட தமிழியெழுத்து, வட்டெழுத்து, கிரந்தவெழுத்து என்ற மூவகை எழுத்துக்களுக்கும் இடையிருந்த ஊடாட்டு என்ன? - என்ற கேள்விகளுக்கு விடை சொல்லாது போனோமோ?” என்று தோன்றியது.

அதேபொழுது, ஒருங்குறி நுட்பியற் குழுவிற்கு முன், வந்த கிரந்த முன்மொழிவுகளை ஆழ்ந்து பயிலாது, வெறும் அரைகுறைப் புரிதலில், பொதுக்கைப் போக்கில் "கிரந்தம் x கிரந்த எதிர்ப்பு" என்று எளிமைப் படுத்தி, “தாம் பிடித்த முயலுக்கு மூன்றே கால்” என அடம்பிடித்து வறளி பேசுவோர் ஒருசிலர் இருக்கிறாரே? அவருக்கு இது போன்ற எழுத்துப் பின்புலங்களைச் சொல்வது தேவையா? இவருக்குச் சொல்லி என்ன பயன் விளையும்?” - என்று ஓரோவழி சலித்தும் போனேன். தமிழ்க்காப்பில் தாம் மட்டுமே முன்னிற்பதாய் முழங்கும் ஒரு சிலர், ”ஆ., இராம.கி கிரந்தத்தைத் தூக்கிப் பிடிக்கிறார்” என்று முற்றிலும் அவதூறாய்க் கைதூக்கும் நேரத்தில், ”இக் கேள்விகளுக்கு விடையிறுத்து என்னாகப் போகிறது?” என்று தயங்கியும் நின்றேன். அப்புறம், இச் சலிப்பையும், தயக்கத்தையும் தூக்கியெறிந்து, சொல்ல வந்ததைச் சொல்லத்தான் வேண்டுமென முடிவு செய்தேன். புரியாத நாலு பேர் அறியாது தொல்லை கொடுப்பதாலேயே நமக்குத் தெரிந்ததைச் சொல்லாதிருக்க இயலுமோ?

இற்றைத் தொல்லியல் வளர்ச்சியில் சிந்து சமவெளி எழுத்துக்களைத் தவிர்த்துப் பார்த்தால், இந்தியப் பொறிப்புகளிலேயே மிகவுந் தொன்மை வாய்ந்தவை, அசோகர் கல்வெட்டிற்கும் முந்தியவை, தமிழகத்திற்றான் கிடைக்கின்றனவாம். கொங்கு மண்டலக் கொடுமணலிற் கிடைத்த பானைப் பொறிப்புகள் கி.மு.4/5 ஆம் நூற்றாண்டுகளுக்குக் கொண்டு செல்லுகின்றனவாம். அவை அசோகருக்கும் முன்னால் குறைந்தது 100 ஆண்டுப் பழமை வாய்ந்தனவாம். இந்தக் கண்டுபிடிப்புகளின் முகன்மை இன்று இந்திய வரலாற்றையே மாற்றிப் போட்டிருக்கிறது. அந்தக் காலத்து தி,,நா. சுப்பிரமணியன், இந்தக் காலத்து கே.வி.இரமேஷ், கா.இராஜன் போன்றோர் தமிழி எழுத்துக்களில் இருந்தே அசோகனின் பெருமி எழுத்துக்கள் எழுந்திருக்கலாம் என்ற ஏரணங் காட்டி மாற்றுச் சிந்தனைக்கு நம்மை நகர்த்துவார்கள். அவர்களின் ஏரணம் இன்னும் ஆய்ந்து உறுதி செய்யப்படவேண்டியவொன்றாகும்.

[ஆனால், தொல்லியலையும், கல்வெட்டு எழுத்துக்களையும், தூக்கிப் போட்டு மிதிக்க முனைவோருக்கும், செஞ்சீனக் ”கலாச்சாரப் புரட்சி” போல் இடதுசாரி எக்கு வாதத்திற் (left wing extremism) தோய்ந்து, பழைய ஆவணங்களைத் தூக்கிக் கடாசுவோருக்கும், ”வரலாறா, வீசை என்ன விலை?” என்பவருக்கும் இந்த எழுத்துத் தோற்றங்கள் விளங்காது.]

இனிக் கட்டுரைக்கு வருவோம். என்னுடைய ”தொல்காப்பியமும் குறியேற்றங்களும்” என்ற தொடரின் 5-ஆம் பகுதியில் (http://valavu.blogspot.com/2006/11/5.html) பழம் எழுத்துமுறைகள் பற்றி ஒருசில பத்திகளிற் சொல்லியிருப்பேன். மேலும் அத்தொடரின் 6-ஆம் பகுதியில் (http://valavu.blogspot.com/2006/11/6.html) ஒரு படத்தொகுதியால் விளக்கியிருப்பேன். அவற்றைச் சில திருத்தங்களுடன் இங்கு மீண்டுந் தருகிறேன்.
 
தொடர்ச்சி http://valavu.blogspot.com/2011/01/1.html
 
அன்புடன்,
இராம.கி.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

karuannam annam

unread,
Jan 5, 2011, 5:42:04 AM1/5/11
to tamil...@googlegroups.com


2011/1/4 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>




 ஏதோ சிறு வேறுபாடு காட்ட வேண்டும் என்று விரும்பினால்,
செ'யபாரதன் என்று எழுத இயலும். 

அன்பிற்கினிய நண்பருக்கு 
தமிழ் எழுத்தின்மீது மேற்குறி இட்டு எழுதுவதை எந்தச் சூழ்நிலையிலும்  பரிந்துரைக்க வேண்டாம் என வேண்டுகிறேன். கிரந்த ஆதரவாளர் விளைக்கும் குழப்பமே போதுமானது. மேற்குறியை வைத்து ஒலியைப் புரிந்து கொள்ளுபவர் மேற்குறி இன்றியும் சரியாகப் புரிந்து கொள்வார்.
எழுத்தைச் சிதைப்பவர்களுக்கு குறிகளையும், எண்களையும் பயன்படுத்தலாம் என வழி சொல்வது அவர்களுக்கு ஒரு வகையில் துணையாக அமையும் என எண்ணுகிறேன். இதுவும் தமிழ் இலக்கணத்தில் இல்லை அல்லவா.
அன்புடனும் நன்றியுடனும்
சொ.வினைதீர்த்தான்.

அன்புடன் புகாரி

unread,
Jan 5, 2011, 10:46:38 AM1/5/11
to tamil...@googlegroups.com
பாரதி பாரதிதாசன் இரண்டும் தமிழ்ப் பெயர்களா?


 
2011/1/4 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>



--
image
அன்புடன் புகாரி 1-416-500-0972
http://anbudanbuhari.blogspot.com

அன்புடன் புகாரி

unread,
Jan 5, 2011, 10:53:46 AM1/5/11
to tamil...@googlegroups.com
ஹனுமன் ==> அனுமன் (கம்ப ராமாயணம்)
ஹுண்டாய் ==> யுண்டாய் ( நிறுவனத்தின் தமிழ்ப் பெயர்ப் பலகையிலிருந்து)
தமிழில் யு முதல் எழுத்தாய் வருமா?
 
உண்டாய்?
 
 
 
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.




--

Mani Manivannan

unread,
Jan 5, 2011, 11:41:48 AM1/5/11
to tamilmanram


2011/1/5 அன்புடன் புகாரி <anbuda...@gmail.com>

ஹனுமன் ==> அனுமன் (கம்ப ராமாயணம்)
ஹுண்டாய் ==> யுண்டாய் ( நிறுவனத்தின் தமிழ்ப் பெயர்ப் பலகையிலிருந்து)
தமிழில் யு முதல் எழுத்தாய் வருமா?
 
உண்டாய்?
 
யானை, யுத்தம், யுக்தி, யுகம், யுகாதி, யுவன், யுவதி, யுத்தி, யுதிட்டிரன் என்ற பிறமொழிச் சொற்களைத் தமிழில் எழுதும்போது யு தமிழில் முதல் எழுத்தாய் வந்திருக்கிறது.
 
யுதிட்டிரன் என்ற சொல்லாட்சி பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் வந்து இலக்கிய வழக்காகி விட்டது.
 
Hyundai என்ற வணிகப் பெயரை அந்த நிறுவனம் ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாட்டின் மொழிக்கு ஏற்ப ஒலிக்கிறது.
 
அமெரிக்காவில் ஹன் டே (Hun Day)
 
செர்மனியில் யூன் டை (yoon dye )
 
கொரியாவில் ஹியுன் டேஹ், ஹிஉன் டேஹ்
 
தமிழில் யுண்டாய்
 
இதை யுண்டாய் நிறுவனமே விளம்பரப் படுத்துவதால், ஏற்றுக் கொள்ளுவோமே!  அதை ஹுண்டாய், உண்டாய், ஹியுண்டாய் என்று நாம் ஏன் திரிக்க வேண்டும்?  வாடிக்கைக் காரர்கள் வாயில் வராத பெயர்களை எந்த நிறுவனமும் வலியுறுத்தாது.
 
அன்புடன்,
 
மணி மு. மணிவண்ணன்

அன்புடன் புகாரி

unread,
Jan 5, 2011, 12:36:03 PM1/5/11
to tamil...@googlegroups.com
அன்பின் மணிவண்ணன்,
 
ஆகவே பெயர்ச்சொற்களைத் தமிழ்ப்படுத்தும்போது தனித்தமிழ்க் கட்டுப்பாடும் இலக்கண இறுக்கமும் கொஞ்சம் தளர்ந்துகொள்ளலாம்!
 
நான் யுண்டாய் என்றோ ஹுண்டாய் என்றோ எழுதிச் செல்லலாம். யுண்டாயும் ஹுண்டாயும் தனித்தமிழ் விருப்பத்தை முழுமையாக நிறைவு செய்யப்போவதில்லை என்பதால், அவரவர்க்கு இயன்றவரை கிரந்தம் தவிர்ப்பதும், பிறமொழிச்சொல் தவிர்ப்பதுமே நற்றமிழ்!
 
நான் ஊசுடன் என்பதைவிட ஹூஸ்டன் என்பதையே விரும்புகிறேன். அப்படி விரும்பும்போது நானொன்றும் நற்றமிழுக்கு ஏதும் இழுக்கினைச் செய்துவிடவில்லை. புழங்குதமிழே நற்றமிழ். புழங்கப்படாத தமிழ் அழியும் தமிழ். இன்றைய புழக்கத்தில் தமிழ்ச்சொற்களைக் கொண்டுவந்து சேர்ப்போர் நல்ல தமிழர்கள் என்று கொள்வேன். அதே சமயம் இன்றைய அறிவியல் தேவைகளையும் உலகத் தொடர்பு உரையாடல்களையும் கருத்தில் கொண்டு தனித்தமிழ் விருப்பம் தளர்வது சிறப்பு என்றே கருதுகிறேன்.
 
தமிழில் உரையாடி தமிழில் எழுதி தமிழை வாழ்மொழியாக்கிக் காப்பதே தமிழினத்திற்கான முதற் தேவை!
 
அன்புடன் புகாரி 
2011/1/5 Mani Manivannan <mmani...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.



--
image
அன்புடன் புகாரி 1-416-500-0972
http://anbudanbuhari.blogspot.com

karuannam annam

unread,
Jan 5, 2011, 1:37:42 PM1/5/11
to tamil...@googlegroups.com
2011/1/5 அன்புடன் புகாரி <anbuda...@gmail.com>
அவரவர்க்கு இயன்றவரை கிரந்தம் தவிர்ப்பதும், பிறமொழிச்சொல் தவிர்ப்பதுமே நற்றமிழ்!
 

தமிழில் உரையாடி தமிழில் எழுதி தமிழை வாழ்மொழியாக்கிக் காப்பதே தமிழினத்திற்கான முதற் தேவை!
 
இயன்றவரை நல்ல தமிழ் எழுத முயல்வோம் என்ற உயரிய நோக்கம், உறுதி பெரும்பாலோர் மனதில், எழுத்தில் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்  
 

அன்புடன் புகாரி

unread,
Jan 5, 2011, 1:50:39 PM1/5/11
to tamil...@googlegroups.com
அன்பு மணிவண்ணன்,
 
குளியலறையிலிருந்து வந்ததும் இதை எழுதுகிறேன். எப்போதும் என் தலையில் நீர் பொழியும்போது ஞாபகங்களும் எண்ணங்களும் பெருகி வழிவது வழக்கம்.
யாக்கை
யாரும் ஊரே யாவரும் கேளிர்
யாதுமாகி நின்றாய்
யாயும் ஞாயும் யாராகியரோ
 
என்று சங்கத்தமிழ் யாவினை முதல் எழுத்தாகக் கொண்டு புழங்குகிறது.
 
அன்புடன் புகாரி

 
2011/1/5 karuannam annam <karu...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.



--
image
அன்புடன் புகாரி 1-416-500-0972
http://anbudanbuhari.blogspot.com

Govindasamy Thirunavukkarasu

unread,
Jan 5, 2011, 2:54:33 PM1/5/11
to tamil...@googlegroups.com
அன்புக்கவிஞர் புகாரி அவர்களுக்கு,
தங்கள் பெயரையே  புஹாரி என்று எழுதலாமா என்று ஒரு உரையாடல் எழுந்தது நினைவிருக்கிறது.ஆனால் நீங்கள் எழுதும் அழகுதமிழ்க் காதலோவியங்களைக்கண்டு தமிழன்னையே மகிழ்ந்து  புகாரி யிலும் அந்த கிரந்த எழுத்தின் உச்சரிப்பை தந்துவிட்டாள்.வென்றீர்கள்.

தனித்தமிழ் தேவையா என்பதுபோல கருத்துக்கள் எழுப்பப்படுகின்றன.  தனி ஆங்கிலம் என்றோ ,தனி சமற்கிருதம் என்றோ கேள்விப்பட்டிருக்கிறோமா? தனி வங்காளம் என்று பேசும் நிலை வங்காளத்தில் உண்டா? விடுவார்களா? தமிழர்களிடையே  என் இந்த வாதம்?

தமிழ் என்றாலே அது தனித்தமிழ்தான். ஏனையவை கலப்படங்கள்தான்.

ஆரியர்கள் அதில் கிரந்த வரிவடிவம் மூலம் சமற்கிருதத்தை நுழைத்தார்கள்.  ஆங்கிலம் படித்த தமிழன் சில ஆங்கில சொற்களை கல்ந்துபேசாவிட்டால் அவனது நாகரிகம் கற்பிழந்து போவதுபோல கூசுகிறான். நரிக்குறவர்கள் நினைவில் உள்ள மராட்டிச்சொற்கலை தமிழ் கலந்து சிரிப்புக்கொத்து போன்ற உச்சரிபில் பேசுகிறார்கள். நகரசபை சிலவற்றில் கழிவகற்றும் தொழிலாளிகலாய் வேலை செய்யும் ஒரு பிரிவு மக்கள் கொச்சையான தெலுங்கோடு தமிழ்ச்சொற்களைகல்ந்து பேசுகிறார்கள்.இன்னும் குடிபோதையில் இவர்கள் சத்தமிடும்போது மிகவு வேடிக்கைதான். கன்னடவேலியோரமும்,மலையளப்பக்கமும்  தமிழோடு பிறமொழிச்சொற்களும் ஒலிப்பு முறைகளும் உள்ளன.சௌராட்டிரம்,உருது,இந்தி,மார்வாடி  ...தமிழகத்தின் எந்த மாவட்டத்தில்  தமிழ்மட்டும் வீட்டில் பேசும் மக்கள் இருக்கிறார்கள்?

அவரவர் வசதிக்கேற்ப பேசுகிறார்கள். பேசுபவர் வசதிக்கு ஒரு மொழியினை விட்டுவிடமுடியுமா? படிப்பறியா மக்கள்,மெத்தப்படித்த் மேதைகள்,தமிழர், தெலுங்கர்,க்ன்னடர்,குறவர் என பல்வேறு மாந்தர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வசதி இருக்கிறது. அவரவர் வசதிக்கேற்ப விட்டுவிட்டால் தமிழ் என்பதே காலப்போக்கில் கரைந்துவிடும் என்பதை ஓர்க.

கிரந்தம் தவிர் என்பது தமிழ் எழுத்துக்கோபில் இல்லாதது கிரந்தம். சமற்கிருததை எழுத ஏற்படுத்தப்பட்ட அந்த வேலையோடு நிற்கட்டும். தமிழுக்குள் சமற்கிருதததை தமிழ்போல் அலங்கரித்து கொண்டுவரவேண்டாம் என்பதே.
ஆங்கிலப் பெயரை எப்படி எழுதுவது, ஆக்ராவில் முகலாய மன்னன் எழுப்பிய காதலோவியத்தை
நான் எப்படி தமிழில் எழுதுவது என்றெல்லாம் கேட்கிரார்கள். தாசுமகால் என்று பெயரிட்டு அந்த உலக அதிசயத்தைப்பற்றி  இதுவரை யாரும் எழுதாத கோணத்தில் எழுதினால்  அதன் பெயரை எப்படி எழுதியுள்ளோம் என்பதை யாரும் பொருட்படுத்தப்போவதில்லை.அடிமைகொண்டவனின் மனங்குளிர அவன் மொழியில் சில சொற்களக்கூறி த்திணறும் நிலை தேவையில்லை.உச்சரிப்பைவிட கூறவரும் பொருளின் அறிவாழம்தான் பிறரை வென்றெடுக்கும்.
ஆங்கிலத்தைப்பேசும்போது  தமிழ்நாட்டினரும்,பிற மாநிலத்தினரும் எண்ணிலடங்கா  முறையில் உச்சரிக்கின்றார்கள். பி.பி.சி வானொலி உச்சரிப்பு ஆங்கிலேய அரச குடும்பத்தினருக்கே வராத ஒன்று என கூறுகின்றார்கள்.ஆனால் இவையாவும் செல்லுபடியாகும்போது கிரந்தம் என்ற அயல் எழுத்துவடிவை ஒதுக்கி தமிழால் எழுவதால் நம்மை யாரும் பழிக்கப்போவதில்லை .அந்த இசுடீபன் கூறியதன் கருத்தை செழுமையாக நாம் புரிந்துகொள்ள் முடிந்தால் அதில்தான் வெற்றி அடங்கியுள்ளது.அவன் பெயரை எப்படி உச்சரிப்பு பிசகாமல் எழுதுவது என்பதில் இல்லை.

வீட்டில் பயன்படு பொருட்கல் ஒவ்வொன்றாக ஆங்கிலச்சொற்களும்,கிரந்த எழுத்துருக்களாக மாறும்போது  அந்த இடத்தை நிரப்பவேண்டிய தமிழ்ச்சொற்கள் கருவிலேயே உருவிழந்துபோகின்றன. பேஸ்ட்,பிரஷ், சோப், ஷேவ்,
லோஷன், ஷாம்பூ என ஆங்கிலச்சொற்களை ஏற்றிவரும் கட்டைவண்டியாக கிரந்த எழுத்துக்கள் பயன்படுகின்றன.
1960 வாக்கில் இருந்த மொழியுணர்வு வேறு. ப்ஸ்  என்பது பேருந்து ஆகியது.  இன்று பேருந்து நிலையம்,பேருந்து,சிற்றுந்து,மகிழுந்து,குளிர்பதன உந்து, சரக்குந்து  எத்தனை சொல்லாட்சிகள்.இராம.கி போன்ர பொறியாளர்கள் கல்லூரியில் படிக்கும்போதே ஆக்கிய கலைச்சொற்கள் நிறைய. தான் படித்த அறிவியலை ,
மைனாவைப்போல திருப்பிச்சொல்லாமல் ,உள்வாங்கி செரித்து பின் அதை பேசமுயன்றால் கலைச்சொற்களை
உருவாக்குவது எளிதாகும்.  பட்டதாரிகளில் எத்தனை விழுக்காட்டினர் ஆங்கிலம் என்ற அறிவுமொழியிலே புரிந்து படித்திருக்கிறார்கள்?  உண்மை மட்டுமே வெல்லும்  என்ற தேசிய பெருங்கருத்தை மனதில் நிறுத்தி நாம் எந்த அளவுக்கு எந்தெந்த பாடத்தைப்படித்தோம்,இப்போது செய்கின்ற வேலையில் எந்த அளவுக்கு வல்லுநராக இருக்கிறோம் என்பதை ந்மக்குள் நாமே கணக்குப்போட்டு பார்ப்போமா?  உழைத்திருந்தால் இன்னும் அதிக உயரங்கலை எட்டியிருப்போம் எனபது உண்மையல்லவா?

சாதனைகள் மலைக்காமல் இடைவிடாது முயல்வதால்தான் முடியும். மலையேறுபவர்கள் மூச்சிறைக்க வியர்வையைக்கொட்டி  ஆற்றலைச்செலுத்தியே வெல்கிறார்கள். எந்த முயற்சியும்  இன்றி வசதிக்கு ஏற்ப மொழியை பயன்படுத்தமுடியுமா?

ஒரு சிறு நாட்டில்  சாலையில் உமிழ்ந்தாலோ,காகிதம் போன்றவற்றை வீசினாலோ பிடித்து தண்டிக்கிரார்கள். அந்த் அநாட்டுச்சாலைகள் கண்னுக்கழகாக தூய்மையாக உள்ளன. ஆனால் நமது நாட்டில் வீட்டைக்கழுவி,வாச்லைப்பெருக்கி கோலமிட்டு அழகுபடுத்திவிட்டு குப்பையை பலர் நடக்கும் தெருவில் கொட்டுவது வழக்கம். தங்கள் சிறுகுழந்தைகளை தெருவோரம் மழை நீர் வழிந்தோட என்றுள்ள பாதையில் மலம் கழிக்க வைப்பதைக்கூட க்ண்டிருக்கிறேன்.

அன்பு கவிஞர் புகாரி அவர்களே, தஞ்சையின் சந்துகளையும்,ஒரத்தநாட்டின் வீதிகளையும் நினைவில் வைத்திருப்பீர்களென நம்புகின்றேன். 
இதன் தொடர்ச்சியாக நான் கூறவிரும்புவது....

" நாம் நமதுவீட்டின் தூய்மையில் காட்டும் ஆர்வத்தை பொதுப்பாதை,பொதுச்சொத்து,பொதுச் சூழல் ,பொது நியதி "ஆகியவைமீது காட்டுவது இல்லை. ஏன்?

மொழி எனபது ஆயிரமாயிரம் ஆண்டுகளில் வாழ்ந்த ஒரு சமூகம் அமைத்துள்ள் ஒரு வசதிதானே. எப்படி இந்தவசதியை கையாளுவது, வளர்த்தெடுப்பது, செழுமைப்படுத்துவது,வரப்போகிற சமூகத்திற்கு விட்டுச்செல்வது ஆகியவைகளில்  விதிமுறைகள்  தேவையல்லவா?
அந்த விதிமுறைகளும் தொலகாப்பியயத்தில் கூறப்படுகின்றன .மறைமலை அடிகள்,பாவாணர்,பவலரேறு போன்றோரால் பின்னாளில்  தொடரப்படுகின்றது.ஆனால் இங்கு ஏன் அதை ஏதோ நேற்று வந்த சிக்கல்போல பார்க்கிறோம்.

இறுதியாக,   வசதிகள் கடின உழைப்பால் உருவாகின்றன.  உழைப்பின் வாரா உறுதிகள் இல்லை.கிரந்தம் தவிர்ப்போம் என்று முயன்றால் இயலாத ஒன்றல்ல.

 இன்றைய நிலையில் மொழியளவில்,
  தமிழகம் அதன் குப்பைகளால் தூய்மைகெட்ட சாலைகளைப்போலத்தான் உள்ளது.
இப்படியே இதை  விட்டுவிடுவோமா?
அன்புடன்
அரசு

 

Elangovan N

unread,
Jan 6, 2011, 1:00:58 AM1/6/11
to tamil...@googlegroups.com


2011/1/5 Govindasamy Thirunavukkarasu <gthiruna...@gmail.com>


தமிழ் என்றாலே அது தனித்தமிழ்தான். ஏனையவை கலப்படங்கள்தான்.


நண்பர்களுக்கு வணக்கம்.

திரு.அரசு அவர்கள் சொல்லியிருக்கும் இந்தக் கருத்தைப் பலரும் புரிந்துதான் இருக்கிறார்கள்.
 
ஆனால் வேண்டும் என்றே செய்யும் சிலரே பல கலவரங்களையும்
திட்டமிட்ட பரப்புரைகளையும் கேலியையும் செய்கின்றனர்.

திரைப்படங்களில் தமிழ் ஆசிரியரை வேண்டுமென்றே மிகையான செந்தமிழ் பேசவைத்து
கேலி செய்து கேவலப்படுத்துவதும், இணையத்தில் வேண்டுமென்றே கெட்டவார்த்தைகளைச் சொல்லிக்
கேலி செய்வதும் திட்டமிட்ட உளவியல் தாக்குதல்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

ஒரு படத்திலே ஒரு தமிழாசிரியரை நீட்டி முழக்கி வேண்டுமென்றே பேச வைத்து வாயிலே வெடி வைத்து
கருக்குவார்கள்.

இந்த உளவியல் தாக்குதல்களில் பயந்து போய் நற்றமிழ் எழுதினால் நம்மை ஏதோ மோசமானவர்கள்
என்று கருதுவார்களோ என்று எண்ணி,  எழுத விழைந்தும் பம்மிக்கொள்கின்ற எத்தனையோ நல்ல தமிழ்
உள்ளங்கள் இணையத்தில் உண்டு. 

ஊரில் உள்ள ஒரு முழு நேர விபச்சாரி, தானும் ஊரில் வாழ வேண்டி,
எப்படி நற்பெண்டிரைத் தூற்றிக் கொண்டே இருப்பாளோ, 
கதை கட்டுகள் விடுவாளோ அப்படியான மனநிலை தமிழை இகழ்வாருக்கு உண்டு. 

தான் செய்வதே சரியென்றோ, 
தான் செய்வதில் ஒன்றும் தப்பில்லை என்றோ, 
ஊரில் யாரும் செய்யாததையா நான் செய்கிறேன் என்றோ, 
அல்லது மேலும் ஒரு படி போய் "நீ என்ன ஒழுங்கா" என்றோ 
தடம் பிறழ்ந்தவள் எப்படி சாதிக்கிறாளோ அதே சாதிப்பை 
தாய்மொழி இகழ்ச்சியாளரிடம் காணமுடியும். 

நீரா ராடியாவின் தொழில் தருமம் என்னவோ அப்படியானதே இவர்களின் போக்கு. 
நீரா மாட்டிக்கொள்ளும் வரை அவரும் ஒரு பண்பாட்டுச் சின்னம்தான்.

அவமானச் சின்னங்கள் பண்பாட்டுச் சின்னங்களாகக் காட்சியளிப்பது 
காலவெள்ளத்தின் நீர்க்குமிழி போன்றதே.

ஆனால் அதற்குள் இந்த விடக்குமிழிகள் அவை செய்யத் துணிந்த 
தீங்குகளையும் செய்து கொண்டேதான் இருக்கும்.

தீங்குகளை மறுப்பார்களுக்குப் *பண்பாடு* கற்றுத்தரவும் 
சிலவேளை சிலர் முயல்வதுண்டு. 

தமிழ் இகழ்வாருக்குக் கிடைக்கின்ற சொற்கள் கூட அயலாகத்தான் இருக்கும்.
இங்கே தாலிபான் என்ற சொல்லை விட ஒரு நல்ல தமிழ்ச் சொல்லால் இகழ்வாரெனின்
அதைக்கூட நான் வரவேற்பேன்.

சொல்லுக்கு சொல்வரைய வைப்பவர்கள் *கிரந்தக் கையர்*களாகவும் *தமிழ்இலம்பாடி*களாகவும்
இருக்கின்றனர். என்ன செய்ய! தேவையற்ற சொல்லெடுத்து உளவியல் தாக்குதல்கள் செய்வார்கள்
தேவையற்ற சொற்களை இனிமேலாவது கைவிட்டார்கள் என்றால் நன்று.

அன்புடன்
நாக.இளங்கோவன்




 

சி. ஜெயபாரதன்

unread,
Jan 6, 2011, 9:35:02 AM1/6/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
நண்பர் நாக இளங்கோவன்,
 
 
/////தமிழ் இகழ்வாருக்குக் கிடைக்கின்ற சொற்கள் கூட அயலாகத்தான் இருக்கும்.  இங்கே தாலிபான் என்ற சொல்லை விட ஒரு நல்ல தமிழ்ச் சொல்லால் இகழ்வாரெனின் அதைக்கூட நான் வரவேற்பேன்./////
 
 
இவன் ஒரு ஹிட்லர், இது வியட்நாம் போர் என்று குறிப்பிடுவதற்கு வேறு சொற்கள் உண்டா ?

தமிழில் தேவையான, கையாளப் பட்ட கிரந்த எழுத்துக்களைப் பெயர்ச் சொல்லில் சேர்ப்பது தமிழைச் சிதைப்பதா, தமிழ் எழுத்துக்களுக்கு மீசை, ஒட்டுப் புல், புல்லாக்கு, மூக்குத்தி  போடுவது சிதைப்பதா, அல்லது எழுத்துரு  மாற்றுவது  சிதைப்பதா என்பதை வலைத்தமிழ் வாசகர்  தீர்மானத்துக்கு  விட்டு விடுகிறேன்.  
 
 
சி. ஜெயபாரதன்
 
++++++++++++++++++++++++
 
2011/1/6 Elangovan N <nela...@gmail.com>
--

அன்புடன் புகாரி

unread,
Jan 6, 2011, 2:54:09 PM1/6/11
to tamil...@googlegroups.com

அன்பிற்கினிய திருநாவுக்கரசு அவர்களுக்கு,

தமிழன்னை எனக்குத் தந்தது சில்லறைச் சலுகைகளையல்ல உயர்வான வாழ்க்கையையும் நிம்மதியையும். என் பண்பாடும் கலாச்சாரமும் தமிழ் தந்தது. என் அடையாளமும் இருப்பும் தமிழ் தந்தது.

என் பெயரின் உச்சரிப்பில் தமிழ் எனக்குச் சலுகை தந்தது என்றால் எனக்குத் தேவை ஒரு சலுகை அல்ல இரு சலுகைகள். ஒன்று ’ஹா’ என்ற உச்சரிப்பு. அடுத்தது ’Bu’ என்ற உச்சரிப்பு.

‘ஹா’ என்ற உச்சரிப்பை எழுத்தப்படாத ஆனால் ஒலிக்கப்படும் எழுத்தில் தமிழ் வைத்திருந்தது. அதை அடையாளம் கண்டதும் உடனே பயன்படுத்திக்கொண்டேன்.

இந்த B யின் ஓசை அன்பு என்று வரும்போது வந்துவிடும். ஆனால் சொல்லின் முதல் எழுத்தாக வரும்போது வர வழியில்லை. அதனால் நான் கவலைப்படவில்லை. எனக்கு முன்னரே பாரதிகளும் பாலுகளும் கவலைப்பட்டதில்லை. ஏனெனில் எழுத்தில் இருப்பதை வாசிக்கும்போது கற்றோர் பழகின பயன்பாட்டையே பின்பற்றுவர். அப்படித்தான் பாரதி பாரதிதாசன் என்ற பெயர்களெல்லாம் சரியாக உச்சரிக்கப்படுகின்றன.

’தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்று பாடியவர் பாரதிதாசன். ஆனால் அவர் பெயரை ஏன் தூய தமிழில் வைத்துக்கொள்ளவில்லை என்று அடிக்கடி யோசிப்பேன். தமிழ்மீதுள்ள பற்றைவிட பாரதியின் மீதுள்ள பற்றுதான் மிகுத்திருந்ததா அவருக்கு என்ற ஐயம் தோன்றும்.

பாரதி என்ற சொல்லும் தாசன் என்ற சொல்லும் தமிழ் மூலச் சொற்கள் அல்ல. தமிழனின் பெயர் என்ற அளவில் அது தூய தமிழாய் மட்டுமே இருக்கத் தேவையில்லை என்று அவர்கள் கருதியிருக்கலாம். ஆனால் அவர்களுடைய தமிழ்ப் பற்றைக் குறைத்துக்கூற முடியுமா?

அவ்வண்ணமே, பிறமொழிப் பெயர்களைக் கொண்டிருப்பதாலும், கிரந்தம் பயன்படுத்துவதாலும் ஒருவனின் தமிழ்ப்பற்றை இழித்துக்கூறுவது அறிவுடைமையாய் எனக்குப்படவில்லை.
ஆனால் வெறுமனே  கிரந்தத்தை வலியப் புகுத்துதலும், பிறமொழிச் சொற்களிலேயே விருப்பம் மிகக் கொண்டுள்ளமையும் தமிழை அழிக்கச் செய்யும் அறியாமைச் செயலாகத்தான் இருக்கமுடியும்.

சேக்ஸ்பியர் காலத்து ஆங்கிலத்தைக் கட்டிக்கொண்டு, தனி ஆங்கிலமே தேவை என்று ஆங்கிலம் கொடிபிடித்திருந்தால் இன்று ஆங்கிலம் இந்த அளவிற்குப் பரந்து விரிந்து உலக மொழிகளின் முதன்மைக்குப் போட்டிபோட்டுக்கொண்டிருக்க வழியில்லை.

பிறந்த குழந்தை  பிறந்ததுபோலவே இருப்பதுதான் சரி. அது வளர்ந்தால் கலப்படமாகிக் குரங்காகிவிடுகிறது என்று எண்ணுவது அறிவுடைமையா?  ஓலைச்சுவடி தொடங்கி கணினி வரை குறைந்தது ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்துவிட்ட தமிழ் எத்தனை வளர்ச்சியினை அடைந்திருக்கும்?

தமிழின் வளர்ச்சி என்றால் என்ன? தொல்காப்பியனுக்குப்பின் இலக்கண இலக்கிய மாற்றங்களே இல்லாதிருப்பதா? என்றால் அது வாழ்தமிழ் இல்லை. வாழ்ந்த தமிழ். தொடர் தமிழ் இல்லை முடிந்த தமிழ்.

தமிழன் இன்று ஒரு கிணற்றுக்குள் வாழவில்லை. வடவேங்கடம் தென்குமரியை உடைத்துக்கொண்டு, பூமிப்பந்தையும் கடந்து சந்திரன் செய்வாய் என்று சென்று வாழும் நிலையில் இருக்கிறான். அவனது இன்றைய தேவைக்கேற்ப தமிழும் அவனுக்கு முன்சென்று பறக்கிறது. இது இனிப்பான ஒன்றல்லவா? ஏன் துக்கம்?

தமிழ் தமிழனின் அன்றாட பயன்பாட்டில் இல்லாதுபோனால்தான் எனக்குத் துக்கம் வரும். தமிழில் இதெல்லாம் சொல்லமுடியாது அதெல்லாம் செய்யமுடியாது என்று சொல்லும் தமிழனை நான் வெறுக்கிறேன். எதுவும் முடியும், தமிழ் எப்படியும் வளையும் என்று சொல்லுவோரால்தான் தமிழ் வாழும் வளரும்.

நான் ஊசுடன் என்று எழுதுவதைவிட ஹூஸ்டன் என்று எழுதுவதையே விரும்புகிறேன். அப்படி விரும்பும்போது நான் நற்றமிழுக்கு ஏதும் இழுக்கினைச் செய்துவிடவில்லை.

புழங்குதமிழே நற்றமிழ். புழங்கப்படாத தமிழ் அழியும் தமிழ். இன்றைய புழக்கத்தில் தமிழ்ச்சொற்களைக் கொண்டுவந்து சேர்ப்போர் நல்ல தமிழர்கள் என்று கொள்வேன். அதே சமயம் இன்றைய அறிவியல் தேவைகளையும் உலகத் தொடர்பு உரையாடல்களையும் கருத்தில் கொண்டு தனித்தமிழ்ப் பிடிகளைத் தளர்த்துவதே சிறப்பு என்றே கருதுகிறேன்.


 
தமிழில் உரையாடி தமிழில் எழுதி தமிழை வாழ்மொழியாக்கிக் காப்பதே தமிழினத்திற்கான முதற் தேவை!

வடமொழிச்சொற்கள் மட்டுமின்றி உலகின் பல பகுதியில் உள்ள சொற்கள் தமிழில் வந்து கலந்துள்ளன. இன்று ஏதும் புதிதாய் வடமொழிச் சொற்கள் வந்து சேரவில்லை. அவை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வந்துசேர்ந்துவிட்டன. ஆனால் அது தமிழை அழிக்கும் ஈன எண்ணத்தோடு செய்யப்பட்டவை.

ஆகவே தமிழறிஞர்கள் தமிழை மீட்டெடுக்கத் தமிழ்ப்புரட்சி செய்தார்கள். மீண்டும் தமிழை உயர்த்திப் பிடித்தார்கள். இதன் பொருள் இனி ஒரு புதுச் சொல்லும் வேறு மொழியிலிருந்துதமிழுக்குள் வந்துவிடக்கூடாது என்பதல்ல. தமிழை அழிக்கும் முகமான எதுவும் இனி நிகழக்கூடாது என்பதே.

இன்றைய காலகட்டத்தில் தமிங்கிலம் வந்து தமிழுக்குள் குதியோ குதியென்று குதிக்கிறது. அதனை எதிர்த்தே நாம் போராடவேண்டும். அதைவிட்டுவிட்டு கிரந்தம் அழிப்பு தனித்தமிழ் ஒன்றே தமிழ் என்று கூறுவது போன்றவை நம்மை நாமே முடக்கிக்கொள்வது.

ஆங்கிலம் தமிழை மட்டும் தாக்கவில்லை. உலக மொழிகள் அனைத்தையும் தாக்குகின்றது. இந்தி பேசுவோர் நம்மைவிட மிக அதிகமாக ஆங்கிலம் கலந்து பேசுவதைக் கேட்டிருக்கிறேன். இப்படியே சைனா, ஜப்பான், கொரியா என்று பல நாட்டு மொழிகளும். உலகில் இன்று ஆங்கிலச் சொற்களைக் கலக்காமல் பேசுவோர் மிகக் குறைவு.

இன்றைய நாட்களில் மனித இனங்கள் எப்படி ஒன்றுடன் ஒன்று கலந்து ஒட்டு இனங்களாய் நிற்கின்றவோ அப்படியே மொழிகளும் நிற்கின்றன. கனடாவின் டொராண்டோ வந்தீர்களென்றால், எங்கும் கலப்பு எதிலும் கலப்பு என்பதுபோல், தமிழ்ப்பெண் ஆஃப்கானிஸ்தான் பையனை மணக்கிறாள். சைனாக்காரன் ஜெர்மானியப் பெண்ணை மணக்கிறான். கறுபர் வெள்ளையரை. வெள்ளையர் மஞ்சள் இனத்தவரை என்று மனித இனங்கள் பிணைந்து நிற்கின்றன. இவர்களெல்லாம் அந்த ஊரின் வட்டார மொழியே தம் புழங்குமொழியாய்க் கொள்கின்றனர். அது வேறென்ன ஆங்கிலம்தான்.

இதில் ஒரு தமிழ்ப்பெண் ஜார்ஜ் புஷ் என்ற ஆங்கில இளைஞனை மணந்தபின், சார்சு பூழ்சு என்று அழைத்தால் என்னாகும்? அதைப்போலவே ஒரு வெள்ளைக்காரன் காத்தாயியை மணந்தபின், ’கேட்டாய்’ என்றால் என்னாகும்? இளையவர்கள் நிறையவே வளைகிறார்கள். எல்லாவற்றையும் நேசிக்கிறார்கள். தன்னையும் தன் மொழியையும் நேசிப்பதுபோலவே பிறரையும் பிற மொழிகளையும் நேசிக்கிறார்கள்.

கிலோ மீட்டர், லிட்டர் என்பதையெல்லாம் தமிழாக்கவேண்டும் என்று நினைப்பது தேவையா? அதேபோல கணினி, இணையம், யுனித்தமிழ் போன்ற சொற்களைப் புழங்காமல் இருப்பது சரியா?

தமிழன் வேற்று மொழிப் பெண்ணை மணந்தாலும் தமிழை விடக்கூடாது. அப்பெண்ணின் மொழியை அறிந்துகொண்டு அதையும் பேசவேண்டும். அவளுக்குத் தமிழ் சொல்லிக்கொடுத்து அவள் தமிழையும் பேசவேண்டும். இரண்டு மொழிகளும் பிள்ளைகளின் மொழியாக வேண்டும். அதுதான் சிறப்பு. ஒரு மொழி அழியாமல் காக்கும் பண்பாடு. அந்தப் பண்பாட்டை வளர்க்கப் பாடுபடுவோம். அது தமிழின் தேவைமட்டுமல்ல உலக மொழிகளின் தேவை.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் அடுத்த தலைமுறையினர் எளிய வழிகளில் தமிழை உள்ளிழுத்துக்கொள்ள என்ன வழியென்று கண்டு அதனைச் செம்மையாக வளர்ப்போம்.

’என்னம்மா குஷ்புவை குசுபூங்கிற’ என்று மகள் கேட்டுச் சிரிக்காதவாறு தமிழ் வளர்ப்போம். குஷ்பு என்பதென்ன தமிழ்ச்சொல்லா, வெறும் பெயர்ச்சொல்தானே? அது அப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே. இதனால் நற்றமிழ் எப்படி கெடும்?

வேட்டி என்பதை வேஷ்டி என்று கூறினால் நாம் திருத்துவோம். கனவு என்பதை ட்ரீம் என்று எழுதினால் வசைபாடுவோம். அப்படிச் செய்வதுதான் நற்றமிழுக்கு இழுக்கு.

பெயர்ச்சொற்களை அததன் வழியில் இயன்றவரை உச்சரிக்க முயல்வதில் தமிழ் ஒருக்காலும் கலப்படத்தமிழாய் ஆகிவிடாது.

புகாரி என்று எழுதி Buhari என்று வாசிக்கிறோம். பாரதி என்று எழுதி Bharathi என்று வாசிக்கிறோம். இதனால் தமிழ் அழிந்துவிடுமா? சார்சு பூழ்சு என்று எழுதி அதை ஜார்ஜ் புஷ் என்று வாசிக்க முடிந்தால் அப்படி எழுதுவதில் ஏதும் குழப்பம் இல்லைதான். ஆனால் அப்படி வாசிக்கமுடியுமா? முடியும் என்றால் அது வெற்று விவாதமாகவே ஆகும்.

உடனே, அழகிய தமிழ் எழுத்துக்கிடையில் உள்ள ஐந்து கிரந்தங்களை அழிக்கிறேன் பார் என்று கூறிக்கொண்டு தமிழ் எழுத்தின் இங்கும் அங்கும் கரும்புள்ளி செம்புள்ளி குத்துவதும் ஆப்பிரிக்க இன அடையாளக் கோடுகள் கிழிப்பதும் அருவருப்பைத் தருகிறது. அதற்குப் பதிலாக கிரந்தம் தவிர்ப்போம் என்று கூறுவதுதான் சரி.

கிரந்தம் தவிர்ப்பது என்றால் என்ன? புகாரி என்பதை புஹாரி என்று எழுதாமல், ஆனால் ஜார்ஜ் என்பதை சாருசு என்றும் எழுதாமல் நற்றமிழ் எழுதுவது. அதாவது அவசியம் இல்லாமல் பெயர்ச் சொற்களிலும் கிரந்தம் இடாமல் இருக்க உறுதி கொள்வது. இயன்றவரை உச்சரிப்பை முதன்மையாகக்கொண்டு பெயர்ச்சொற்களை அமைப்பது,

அன்புடன் புகாரி

2011/1/5 Govindasamy Thirunavukkarasu <gthiruna...@gmail.com>

Govindasamy Thirunavukkarasu

unread,
Jan 6, 2011, 11:38:40 PM1/6/11
to tamil...@googlegroups.com


2011/1/7 அன்புடன் புகாரி <anbuda...@gmail.com>

அன்பிற்கினிய திருநாவுக்கரசு அவர்களுக்கு,

.

தமிழன் இன்று ஒரு கிணற்றுக்குள் வாழவில்லை. வடவேங்கடம் தென்குமரியை உடைத்துக்கொண்டு, பூமிப்பந்தையும் கடந்து சந்திரன் செய்வாய் என்று சென்று வாழும் நிலையில் இருக்கிறான். அவனது இன்றைய தேவைக்கேற்ப தமிழும் அவனுக்கு முன்சென்று பறக்கிறது. இது இனிப்பான ஒன்றல்லவா? ஏன் துக்கம்?

தமிழ் தமிழனின் அன்றாட பயன்பாட்டில் இல்லாது போனால்தான் எனக்குத் துக்கம் வரும். 

 புழங்குதமிழே நற்றமிழ். புழங்கப்படாத தமிழ் அழியும் தமிழ். 



நன்றாகவே கூறினிர்கள்.நள்ளுக்கு நாள் புழக்கத்தில் ஆங்கிலச் சொற்களும்,பிற சொற்கலும் வருகின்ற்ன.அன்றாட வழ்க்கில் ஊர்ப்புரங்களில் கூட அனிய சொற்களின் புழக்கம் உள்ளது.கிராமத்தில் படித்தவர்கள், சிறு நகரில் உள்ளோர்,சென்னையில் உள்ளோர் என்று பார்த்தால் தமிழ்ச்சொற்கைன் புழக்கம் குறைவதோடு  ஆங்கிலச் சொற்களின் இணைப்புச்சொற்களாக தமிழ் ஆகிவருகின்றது.

 . இன்று ஏதும் புதிதாய் வடமொழிச் சொற்கள் வந்து சேரவில்லை. அவை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வந்துசேர்ந்துவிட்டன. ஆனால் அது தமிழை அழிக்கும் ஈன எண்ணத்தோடு செய்யப்பட்டவை.


சரியாகவே கூறினீர்கள்.

ஆகவே தமிழறிஞர்கள் தமிழை மீட்டெடுக்கத் தமிழ்ப்புரட்சி செய்தார்கள். மீண்டும் தமிழை உயர்த்திப் பிடித்தார்கள். இதன் பொருள் இனி ஒரு புதுச் சொல்லும் வேறு மொழியிலிருந்துதமிழுக்குள் வந்துவிடக்கூடாது என்பதல்ல. தமிழை அழிக்கும் முகமான எதுவும் இனி நிகழக்கூடாது என்பதே.

இன்றைய காலகட்டத்தில் தமிங்கிலம் வந்து தமிழுக்குள் குதியோ குதியென்று குதிக்கிறது. அதனை எதிர்த்தே நாம் போராடவேண்டும். அதைவிட்டுவிட்டு கிரந்தம் அழிப்பு தனித்தமிழ் ஒன்றே தமிழ் என்று கூறுவது போன்றவை நம்மை நாமே முடக்கிக்கொள்வது.

வடசொற்களை ,சமற்கிருத உச்சரிப்பை  ஏற்றி வந்த  கிரந்த எழுத்துக்கள்   இன்று ஆங்கிலச்சொற்களை உச்சரிப்பை ஏற்றிவர பயனாகிறது. தற்போது வழக்கில் உள்ள ஸ,ஷ.ஹ. ஜ,   போன்ற வரிவடிவங்கள்
ஆங்கில/பிற மொழிச்சொற்களை எளிதாக புழங்க பயனாகின்றன என்பதை மறுக்கமாட்டீர்கள் என நம்புகின்றேன்

பெயர்ச்சொற்களை அததன் வழியில் இயன்றவரை உச்சரிக்க முயல்வதில் தமிழ் ஒருக்காலும் கலப்படத்தமிழாய் ஆகிவிடாது.

பெயர்ச்சொற்களால் தமிழின் நடைமுறை வாழ்வில் புழங்கு திறனை அழித்துவிட முடியாது எனப்து உண்மையே.ஆனால் பொதுவாக ஒரு சொல்லை தமிழில் ஏற்க ஒரு பொது விதி வேண்டும். நமது மொழியில் உள்ள எழுத்துக்களைக்கொண்டு இயன்றவரை  அருகாமையான உச்சரிப்பை கூறவேண்டும்.  எல்லா நாடுகளிலும் உள்ள பெயர்ச்சொற்களையும் கிரந்த எழுத்துக்களை வைத்து எழுதமுடியாது.

 

உடனே, அழகிய தமிழ் எழுத்துக்கிடையில் உள்ள ஐந்து கிரந்தங்களை அழிக்கிறேன் பார் என்று கூறிக்கொண்டு தமிழ் எழுத்தின் இங்கும் அங்கும் கரும்புள்ளி செம்புள்ளி குத்துவதும் ஆப்பிரிக்க இன அடையாளக் கோடுகள் கிழிப்பதும் அருவருப்பைத் தருகிறது. அதற்குப் பதிலாக கிரந்தம் தவிர்ப்போம் என்று கூறுவதுதான் சரி.

கிரந்தம் தவிர்ப்பது என்றால் என்ன? புகாரி என்பதை புஹாரி என்று எழுதாமல், ஆனால் ஜார்ஜ் என்பதை சாருசு என்றும் எழுதாமல் நற்றமிழ் எழுதுவது. அதாவது அவசியம் இல்லாமல் பெயர்ச் சொற்களிலும் கிரந்தம் இடாமல் இருக்க உறுதி கொள்வது. இயன்றவரை உச்சரிப்பை முதன்மையாகக்கொண்டு பெயர்ச்சொற்களை அமைப்பது,


ஐயா,
நாம்  பெரிதாக எங்கே முரண்படுகின்றோம்.( ஹூஸ்டன், ஜார்ஜ் தவிர )

கிரந்தம் தவிர்.ஆம்.அதுதான் சரியாகப்படுகிறது.  இந்த மொழி பற்றிய சூடான கலந்துரையாடல்களின் சாரங்களை தஞ்சாவூரைச்சுற்றியுள்ள கிரமங்களில் வசிபவர்களுக்கும், தமிழகத்தின் பலபகுதிகளிலும்  உள்ள தமிழர்களும் அறிந்துகொள்ளவேண்டுமே.
சில ஆயிரம் கற்ற இளைஞர்கள் வெளிநாடுகளில் நல்ல வேலைகளில் உளளது சரிதான். அவர்கள் உரையாடல்கள் ஒரு வகையின. ஆனால் நூறாயிரக்கணக்கான இளைஞர்கள் தொழிலாளிகளாக உள்ளார்கள். அவர்களது வாழ்முறைகள் வேறு.  கோடிக்கணக்கான மக்கள் ,குக்கிராமத்தில் இருந்து சிறு /பெரு நகரங்களுக்கும் , இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் பஞ்சம் பிழைக்கப்போய்க் கொண்டிருக்கிறார்கள். மொழி,கலை ,இலக்கியங்கள் பெரிய பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளன.கிரந்தம் மீண்டும் நுழைவது தமிழனின் வாழ்வுக்கு, வளர்ச்சிக்கு  மேலும் சில பாதிப்புகளை உண்டாக்கும்.குறிப்பாக தமிங்கலம் பரவுவதற்கும் ,மேலைப்பண்பாட்டு நுழைவை படித்தவர்கள் மத்தியில் பண்டைய மேல்தட்டு வழமைகளின் தொடர்வாகவும் செய்யும். சாதாரண மக்களிடமிருந்து  விலகி மேம்பட்டுப்போனது போன்ற இதத்தோடு  தமிழர் விரோத பணபாட்டை வளர்க்கும்.

எமது மக்களின் செழித்த வாழ்வாக நான் இதைப்பார்க்கவில்லை.வரம்போகும் ஆண்டுகளில்  எமது மக்களின் வயிறு எஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்ச மான ரோசங்களையும் அவர்களிடமிருந்து பிய்த்து எறிந்துவிடும் போல் தெரிகிறது.

எமது மக்கள் ஒன்றுபட்டுவிடாமல் இருக்க  சாதித் தீயும்,மதப்பகையும் , அன்னிய கமெனிகளைப்பற்றிய மயக்கமும் அன்னிய தொழில் நுட்பத்திற்கு முந்தானை விரிக்காமல் வயிற்றுச்சோறுக்கு வழியில்லை என்ற தத்துவமும் பரப்பப் படுகின்றன.

நற்ரமிழ் வளர தமிழ் இனம் வகையோடு வாழ்வேண்டும். தமிழினத்தின் மேன்மைகளை தாங்கும் தமிழ் மதிப்பிழந்தால் தமிழனின் சிந்தனை சிறகொடியும்.

தமிழ் பேசும் இனம் நாம் என்ற பீடும் பெருமிதமும் வேண்டும். நாம் எத்தனை மொழிகளைவேண்டுமானாலும் கற்போம்.  வாழ்வில் நாம் புழங்கு மொழியாக, கல்வி மொழியாக ,ஆட்சி மொழியாக தமிழை காப்போம்.

இதற்காக மக்களிடையே, கருத்துக்களை எடுத்துச்செல்கிறோம். சில இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.
தஞ்சையில் சனவரி 9 அன்று  தமிழகத்தின் அறிஞர் பெருமக்களை அழைத்து ஒரு மாநாடு கூட்டுகிறோம்.
மேலும் விவாதிப்போம். கருத்தொற்றுமையுடன் தமிழினம் ஒரு வெல்லும்  இனம் என நிறுவுவோம்.

கவிஞர் ஐயா,முற்றுகையிடப்பட்ட ஒரு சமூகத்தினைவிட மேம்பட்ட சமுதாயமாக தமிழினம் இல்லை.

அன்புடன்
அரசு

அன்புடன் புகாரி

Reply all
Reply to author
Forward
0 new messages