சங்க இலக்கியங்களில் கைம்பெண்கள்

2,556 views
Skip to first unread message

Mani Manivannan

unread,
Mar 18, 2014, 2:07:32 PM3/18/14
to tamilmanram

சங்க இலக்கியங்களில் கைம்பெண்கள் | திண்ணை

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar...@gmail.com

கைம்பெண்

சங்ககாலப் பெண்கள் திருமணத்திற்குப்பின்  பிறந்த வீட்டில் பெற்றோருடன் உடனுறைந்து வாழவில்லை. கணவனுடன் இணைந்து இன்ப வாழ்வு வாழ்ந்தனர். பழங்காலத்தில் வாழ்ந்த பெண்கள் கணவரைப் பேணும் பண்புடையவர்களாக விளங்கினர்.  கணவனை இழந்த பெண்களைக் கைம்பெண்கள் என்று வழங்கினர். கணவன் இறந்த பின்னர் பெண்கள் கணவனுடன் தங்கள் உயிரையும் மாய்த்துக் கொண்டனர். அதைவிடப் பெண்கள் கைமை நோன்பு நோற்று தமது வாழ்க்கையைக் கழித்தனர் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

கைம்மைக் கோலம்

வளையல்களைக் களைதல்

பெண்களின் ஒப்பனை கணவன் இறந்த நிலையில் சிதைவு பெற்று கைம்மைக்குரிய தோற்றத்தை உருவாக்குகிறது. கணவனை இழந்து வாழும் பெண்கள் மங்கலப் பொருள்களை நீக்கி வாழ வேண்டும். வளையல் அணிதல் கூடாது என்று சமுதாயம் வலியுறுத்தியது. இதனை,

‘‘வாழைப் பூவின் வளைமுறி சிதற’’ (புறம்., 237.10-12)

‘‘தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடி’’ (புறம்.,238.5-7)

என்ற புறநானூற்றுப் பாடல் வரிகள் புலப்படுத்துகின்றன. வெளிமான் என்ற மன்னன் இறக்க அவனுடைய உரிமை மகளிர் தங்கள் கைகளில் அணிந்திருந்த வளையல்களை உடைத்தெறிந்தனர். இதனால் அவர்களது கைகளின் கவின் குறைந்து பார்ப்பதற்கு வெறுமையாகக் காட்சியளித்தன என்று பெருஞ்சித்திரனார் குறிப்பிடுகின்றார்.

அணிகலன்களைக் களைதல்

கணவனுடன் வாழ்கின்ற பெண்களே பல்வேறு அணிகலன்களை அணிந்திருப்பர். கணவனை இழந்த பெண்கள் எந்தவிதமான அணிகலன்களையும் அணிதல் கூடாது. கரிகாற் பெருவளத்தான் மறைந்தான். அவனால் ஆதரிக்கப்பெற்ற அனைவரும் வருந்தினர். அவனது உரிமை மகளிர் தாங்கள் அணிந்திருந்த அனைத்து அணிகலன்களையும் களைந்து பெருந் துயருற்றனர். இதனை அவனது இறப்பினைக் கண்டு கலங்கிய கருங்குழலாதனார் எனும் புலவர்,

‘‘பூ வாட் கோவலர் பூவுடன் உதிரக்

கொய்து கட்டுஅழித்த வேங்கையின்

மெல்லியல் மகளிரும் இழை களைந்தனரே’’’ (புறம்.,224,15-17)

என்று துயருற்றுப் பாடுகின்றார்.

கூந்தல் களைதல்

பெண்களுக்கு அழகு தருவது கூந்தல். அக்கூந்தலிலேதான் பெண்கள் மலரணிந்து மகிழ்ந்தனர். கணவன் இறந்து படவே தமக்கு அழகு தந்த கூந்தலைப் பெண்கள் களைந்தார்கள். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைக் கல்லாடனார் பாடியபோது,

‘‘மெய்ம் மறந்து பட்ட வரையாப் பூசல்

ஒள்நுதல் மகளிர் கைம்மைகூர

அவிர் அறல் கடுக்கும் அம்மென்

குவை இருங் கூந்தல் கொய்தல் கண்டே’’ (புறம்.25:10-14)

என்று பாடுகின்றார். நெடுஞ்செழியனே நீ படையெடுத்துப் பகைவரை அழிப்பதால், பகைவர்களது மனைவியர் கைம்மையை மேற்கொள்ள வேண்டி விளங்கித் தோன்றும் ஆற்றின் கரிய தலைமுடியினைக் களைந்தார்கள் என்று கைம்பெண்கள் கூந்தலைக் களைந்ததை எடுத்துரைக்கின்றார்.

கைம்பெண்களின் உணவும் அவர்களது நிலையும்

கணவனை இழந்த பெண்கள் மிகவும் துன்பச் சூழலில் வாழ்ந்தனர். அவர்கள் தங்களை அழகுறுத்திக் கொள்வதும் நல்லுணவு உண்பதும் சமுதாயத்தால் மறுக்கப்பட்டது. அவர்கள் மிகுந்த இழிந்த வாழ்வு வாழ்ந்தனர். தமது கணவன் இருந்தபோது மகிழ்வுடன் வாழ்ந்த மகளிர் கணவன் இறந்த பின்னர் அனைத்து இன்பங்களையும் துறந்து வாழ்ந்தனர். இதனை,

‘‘குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில்

இரவலர்த் தடுத்த வாயில், புரவலர்

கண்ணீர்த் தடுத்த தண்நறும் பந்தர்

கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி

அல்லி உணவின் மனவைியொடு இனியே

புல்லென்றனையால் வளம் கெழுதிருநகர்

வான்சோறு கொண்டு தீம்பால் வேண்டும்

முனிந்தலைப் புதல்வர் தந்தை

தனித்தலைப் பெருங்காடு முன்னிய பின்னே’’ (புறம்.250:3-4)

என்ற தாயங்கண்ணியாரின் பாடல் தெளிவுறுத்துகின்றது.

தலைவனை இழந்து, பொலிவிழந்து காணப்பட்ட இல்லத்தைப் பார்த்த புலவர், மாளிகையே, புதல்வருடைய தந்தை தனியிடத்தையுடைய புறங்காட்டை அடைந்தான். தாளிக்கும் ஓசை மிகுந்த திரண்ட துவையலுடன் கூடிய உணவு இரவலரை மேற்செல்லாது தடுத்துத் தன்னிடம் வருமாறு செய்யும் வாயிலினையும் தன்னால் காக்கப்பெறுவோரின் கண்ணீரைத் தடுத்து மாற்றிய குளிர்ந்த மணமுடைய பந்தலையும் உடையதாய் முன் விளங்கினை. அத்தகைய இடத்தில் மயிரைக் களைந்தும் சிறிய வளையலை நீக்கியும் அல்லியரிசியாகிய உணவுண்ணும் மனயைிவியுடன் நீ இருந்து பொலிவழிந்தாய் என்று வருந்திப் பாடுகின்றார். இதில் கைம்பெண்களின் நிலைசித்திரிக்கப்பட்டுள்ளது நோக்கத்தக்கது.

கைம்பெண்களின் அழகிழந்த நிலை

கணவனை இழந்த பெண்கள் கூந்தல், வளையல், அணிகள் ஆகியவற்றை இழந்து பொலிவிழந்து காணப்பட்டனர். அவர்களின் அழகற்ற நிலையானது அழகற்ற இல்லம்போன்று காணப்பட்டன. இத்தகைய கைம்பெண்களின் அவல நிலையை,

‘‘நிரை இவன் தந்து, நடுகல் ஆகிய

வென்வேல் விடலை இன்மையின் புலம்பி

கொய்ம் மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய

கழிகல மகடூஉப் போலப்

புல்லென்றனையால் பல்லணி இழந்தே’’(புறம். 262)

என்று வாள்போரில் வீழ்ந்தவனைப் பார்த்து யாழ்ப்பாணர் வருந்தி ஆவூர் மூலங்கிழார் பாடுகின்றார். இப்பாடல் கைம்பெண்களின் வாழ்க்கைநிலையை தெளிவுறுத்தும் பாடலாக அமைந்துள்ளது.

கைம்மைத் துயர்

பூதப்பாண்டியன் இறந்தான். அவனது மனைவி பெருங்கோப்பெண்டு பெருந்துயருற்றாள். தன் கணவன் இறந்த பின்னர் உயிர்வாழ்வதா? என்று கருதி தீப்பாய்ந்து உயிர்விடத் துணிந்தாள். அப்போது கைம்மைத் துயர் எத்தன்மையது என்பதை,

‘‘அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந்திட்ட

காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது

அடைஇடைக் கிடந்த கைபிழி பண்டம்

வெள்எட் சாந்தொடு புளிப்பெய்து அட்ட

வேளை வெந்தை வல்சி ஆக

பரற் பெய்பள்ளிப் பாய்இன்று வதியும்

உயவல் பெண்டிரேம் அல்லேம்மாதோ

பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்

நுமக்கு அரிதாகுகதில்ல. எமக்கு எம்

பெருந்தோட் கணவன் மாய்ந்தென’’ (புறம்.,246)

என்று எடுத்துரைக்கின்றாள்.

சான்றோரே! அணிலின் மேலுள்ள வரிபோல் வரியை உடைய வெள்ளரிக்காயை அரிவாளால் அரிந்து இடப்பட்ட விதை. அவ்விதை போன்றதும் நல்ல வெண்மையான மணம்மிகுந்த நெய் தீண்டப்படாததும், கீரை இடையிடையே பயின்று கையால் பிழிந்து கொள்ளப்பட்டதுமான நீர்ச்சோற்றுத்திரள். அதனுடன் வெண்மையான எள்ளுத்துவையலுடன் புளியுடன் சமைத்த வேளைக்கீரையையும் வேகவைத்து உணவாகக் கொண்டு உண்பர். கைம்மை மகளிர் இவற்றை உணவாகக் கொள்வதுடன் பருக்கைக் கற்கள் அமைந்த படுக்கையின் மீது பாயின்றிக் கிடப்பர். இத்தகைய கைம்மை நோன்பால் வருந்தும் பெண்டிராக யாம் விளங்கமாட்டோம். சுடுகாட்டில் உண்டாக்கியதும் கரிய விறகால் அடுக்கப்பட்டதுமான பிணப்படுக்கை உமக்கு அரியதாக இருக்கலாம். ஆனால் எங்களுக்குப் பெரிய தோளையுடைய எம் கணவன் இறந்தபிறகு மொட்டின்றி நிறைந்த இதழ் மலர்ந்த தாமரையை உடையதும் நீரு் செற்ந்ததுமான பெரிய பொய்கையும் தீயும் ஒரு தன்மைத்தே ஆகும்’’ என்று கைம்பெண்களின் துயரைத் தெளிவுறுத்துகின்றாள்.

பாயின்றிப் படுத்தல், உப்பில்லா வேளைக் கிரை உணவை உண்ணல் உள்ளிட்ட துன்பங்களைக் கைம்பெண்கள் அனுபவித்த கொடியநிலையைப் பெருங்கோப்பெண்டின் பாடல் தெளிவுறுத்தியிருப்பது நோக்கத்தக்கது.

சங்க மகளிரின் திருமணத்தில் இழை அணிகள் அணியப்பட்டன. கைம்மையில் இழை, வளை, தொடி களையப்பட்டன. கைம்மை வாழ்க்கையில் கூந்தல் களைதலில் மலர் நீக்கம் தானாகவே நடக்கிறது. திருமணத்தில் மங்கல மகளிர் வாழ்த்துகின்றனர். சங்க காலத்தில் கைம்மை மகளிர் வாழ்த்தியதாகவோ, நிகழ்வுகளில் கலந்து கொண்டதாகவோ செய்திகள் இல்லை. கற்பு வாழ்க்கையில் விருந்தோம்பல் பண்பு சிறப்பாகப் போற்றப்பட்டது. இன்னாப்பொழுதில் பசலைக்கீரை, புல்லரிசி, வெள்ளைச்சாந்து, பழஞ்சோறு உண்பது கைம்மைக்குரியதாக உள்ளது.

 

கைம்மைத் துன்பத்தின் மூன்று நிலைகள்

ஒப்பனை நீக்கம், உணவு நீக்கம், பழக்கநீக்கம் என்ற கைம்மைத் துன்பத்தின் மூன்று நிலைகள்  காணப்படுகின்றன. வளை, தொடி, இழை ஆகியன கணவன் இறந்த நிலையில் களையப்பட்டிருக்கின்றன. பெருஞ்சித்திரனார், வெளிமான் என்னும் வள்ளல் துஞ்சிய போது, வருந்திப் பாடிய பாடலில் இச்செய்தி வெளிப்படுகின்றது. அறனில்லாத கூற்றம் வெளிமான் உயிரைக் கவர்ந்தமையால் அவனது மகளிர் தம் மார்பில் அறைந்து கொள்வதையும் கைம்மைக் கோலத்தின் அறிகுறியாக அவர் கைவளைகளை உடைப்பதையும் அவை வாழைப் பூப்போல சிதறிக்கிடப்பதையும் பாடியுள்ளார் (புறம். 237: 7-14). கைம்மை மகளிர் தம் கூந்தலை நீக்கிய செய்தியைப் புறநானூற்றில் நான்கு பாடல்கள் எடுத்து இயம்புகின்றன (புறம். 25,250,261,280). திருமணத்திற்கு முன்பும், மணநிலையிலும், பெண்கள் பூச்சூடியிருக்கின்றனர். கைம்மையில் கூந்தல் நீக்கத்துடன் மலர் நீக்கமும் இயல்பாகவே நிகழ்ந்துள்ளது. இது பழந்தமிழகத்தின் சமுதாய நிலையையும் பெண்களின் பெருந்துயரையும் விளக்குவதாக உள்ளது.

கைம்பெண்களுக்கு வழங்கப்பட்ட பெயர்கள்

தமிழகத்தில் கணவனை இழந்த பெண்டிர் கைம்மை மகளிர் என அழைக்கப்பட்டனர். கைம்மை நிலை என்பது தந்தைவழிச் சமுதாயத்தின் ஒருதார மணமுறை என்ற சமூக அமைப்பில் உருவாக்கப்பட்டது. கணவர் இறந்தால் மனைவி இறக்க வேண்டும். ஆனால் மனைவி இறந்தால் கணவர் இறக்க வேண்டியதில்லை. நற்றிணை, புறநானூறு ஆகிய நூல்களில் மட்டுமே கைம்மை பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. கணவனை  இழந்த பெண்களை,

1. ஆளில் பெண்டிர் (நற்.353)

2. கழிகல மகளிர் (புறம்,280)

3. பருத்திப்பெண்டிர் (புறம்.125)

4. தொடிகழி மகளிர் (புறம்.238)

5. கைம்மை (புறம்.125, 261)

6. படிவமகளிர் (நற்.273)

7. உயவற்மகளிர் (புறம்.246)

என்ற பெயர்களில் சங்க இலக்கியங்கள் வழங்கியுள்ளமை மனங்கொளத்தக்கதாகும்.

மனைவியை இழந்த ஆண்கள் எங்ஙனம் வாழ வேண்டும் என்ற வரைமுறை சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படாதது சிந்தித்தற்குரியதாகும். பெண்களே கணவனுடன் இறந்துள்ளனர். பெண்களுக்கே கைம்மைக் கோலத்திற்குரிய வாழ்க்கை நடைமுறைகள் வகுத்துரைக்கப் பெற்றன. மனைவியிழந்த ஆடவர்கள் கைம்பெண்களுக்குரிய வாழ்க்கை வாழவில்லை. கைம்மைத் துன்பம் நிறைந்த வாழ்கையைவிட இறப்பதே சாலச் சிறந்தது என்று அரசமகளிர் முடிவெடுத்தனர். இந்நிலையே கைம்பெண்களின் நிலையை எடுத்துரைக்கின்ற சான்றாக அமைந்திலங்குகின்றது.

 

————–


iraamaki

unread,
Mar 18, 2014, 8:24:09 PM3/18/14
to tamil...@googlegroups.com
முனைவர் சி.சேதுராமன் என்று ஆசிரியர் பெயரை இங்கு படியெடுக்கவில்லையே?
 
இராம.கி.

rajam

unread,
Mar 18, 2014, 8:42:56 PM3/18/14
to tamil...@googlegroups.com, Mani Manivannan, Ravikumar, C.R. Selvakumar, Hari Krishnan
இந்தக் கட்டுரையின் நோக்கம் என்ன என்று தெளிவாகத் தெரியவில்லை. ஆனாலும் எனக்குத் தோன்றிய சில கருத்துகள்:

///மனைவியை இழந்த ஆண்கள் எங்ஙனம் வாழ வேண்டும் என்ற வரைமுறை சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படாதது சிந்தித்தற்குரியதாகும். பெண்களே கணவனுடன் இறந்துள்ளனர். பெண்களுக்கே கைம்மைக் கோலத்திற்குரிய வாழ்க்கை நடைமுறைகள் வகுத்துரைக்கப் பெற்றன. மனைவியிழந்த ஆடவர்கள் கைம்பெண்களுக்குரிய வாழ்க்கை வாழவில்லை. கைம்மைத் துன்பம் நிறைந்த வாழ்கையைவிட இறப்பதே சாலச் சிறந்தது என்று அரசமகளிர் முடிவெடுத்தனர். இந்நிலையே கைம்பெண்களின் நிலையை எடுத்துரைக்கின்ற சான்றாக அமைந்திலங்குகின்றது.///

1. கைம்மை நிலையடைந்த ஆடவனின் நிலை தபுதார நிலை என்று தொல்காப்பியத்தில் குறிக்கப்பட்டது. இதைப்பற்றி மின்தமிழ்க் குழுமத்தில் ஒரு மடலாடல் நிகழ்ந்தது: https://groups.google.com/forum/#!msg/mintamil/Z_9KBHGeizE/04wHI-SC55oJ . அங்கே ஹரியும் தபுதார நிலை பற்றிக் குறிப்பிட்டிருந்தார்: https://groups.google.com/d/msg/mintamil/Z_9KBHGeizE/zthqvH5pfVwJ 


2. புறநானூறு 245 ஒரு சேர அரசனின் கைம்மை நிலையை/உணர்வைச் சொல்கிறது. தன் மடந்தையை இழந்தபின்னும் அவன் தீப்புகவில்லை, அந்த நிலையை நொந்துகொள்கிறான். அதுவே பாடலின் பொருள். 


3. அரச மகளிருக்கு மட்டுமே கைம்மை நிலையை எப்படி ஏற்று எப்படி வாழவேண்டும் என்று நடைமுறைகள் வகுத்துரைக்கப் பெறவில்லை என்று நினைக்கிறேன். வள்ளல்கள், அரசர்கள், குறுநில மன்னர்கள் இவர்களே பாடப்பட்டவர்கள் ஆதலால் அவர்களை இழந்த மகளிரின் கைம்மை நிலையைப் பற்றித் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது. 

ஆனால் … 

3a. மணிமேகலையில் மாதவி சொன்னதைப் பார்த்தால் …”பத்தினி”ப்பெண்டிருக்கு மட்டுமே, அதாவது 'ஒரு பெண்ணுக்கு ஒரு கணவன்’ என்ற நிலையில் வாழ்ந்த பெண்களுக்கே, இறந்த கணவனுடன் தீப்புகுந்த நிலையோ கைம்மை நிலையோ அமைந்திருந்தது என்பது தெளிவாகத் தெரிகிறது. கணிகையாக இருந்த மாதவி தனக்கு அந்த இருநிலைகளும் இல்லாததைப் பற்றி வருந்துகிறாள் என்பது தெளிவு. அதனால்தான் “நாணுத் துறந்தேன்” என்று தன்னைப் பற்றி நொந்து சொல்கிறாள். அந்த நிலையில்தான் அவள் வருணக்காப்பு இல்லாத பெண்களுக்கு ஆதரவு கொடுத்த பவுத்த நெறியை அடைந்தாளோ என்றும் எனக்குத் தோன்றும். (இதைப்பற்றி ரவிக்குமார் பதிப்பித்து வெளியிடும் “மணற்கேணி” என்ற இதழில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்.)

3b. மணிமேகலையும் ‘வருணக் காப்பை’ப் பற்றிக் குறிக்கிறாள்.

ஆகவே, 

4. 'ஒருத்திக்கு ஒருவன்’ ஆனால் ‘ஒருவனுக்குப் பல பெண்டிர்’ என்ற குமுக நிலையைத்தான் சங்க இலக்கியப் பாடல்கள் காட்டுகின்றன. அதனால்தான் கைம்மை நோன்பு நிலையையும் இறந்த தன் மடந்தையுடன் தீப்புகும் நிலையையும் ஓர் ஆடவன் அடைந்ததாகச் சொல்லும் பாடல்களைக் காணவில்லை. 

4a. மனைவியை இழந்த ஆடவனின் நிலை == கணிகையின் நிலை என்பதைத்தான் சங்கப் பாடல்கள் காட்டுகின்றன. இதை மணிமேகலைக் காப்பியப் பெண்களின் கூற்றில் காணமுடிகிறது. 

இப்படிக்கு,
ராஜம்

வேந்தன் அரசு

unread,
Mar 19, 2014, 7:43:04 AM3/19/14
to தமிழ் மன்றம், Mani Manivannan, Ravikumar, C.R. Selvakumar, Hari Krishnan
வீரர்களுக்கு வாழ்க்கைப்பட்ட பெண்கள் மறுமணம்விரும்ப மாட்டார்கள்.


18 மார்ச், 2014 8:42 பிற்பகல் அன்று, rajam <ra...@earthlink.net> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Hari Krishnan

unread,
Mar 19, 2014, 7:53:13 AM3/19/14
to வேந்தன் அரசு, தமிழ் மன்றம், Mani Manivannan, Ravikumar, C.R. Selvakumar

2014-03-19 17:13 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
வீரர்களுக்கு வாழ்க்கைப்பட்ட பெண்கள் மறுமணம்விரும்ப மாட்டார்கள்.

மத்தவங்களுக்கெல்லாம் சளி பிடிச்சிருச்சோ?  (ஒண்ணுல்ல... கோழையோ.. துப்பறதுக்குன்னு கேக்க நெனச்சேன்.)


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

வேந்தன் அரசு

unread,
Mar 19, 2014, 8:36:01 PM3/19/14
to Hari Krishnan, தமிழ் மன்றம், Mani Manivannan, Ravikumar, C.R. Selvakumar



19 மார்ச், 2014 7:53 முற்பகல் அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:


2014-03-19 17:13 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

வீரர்களுக்கு வாழ்க்கைப்பட்ட பெண்கள் மறுமணம்விரும்ப மாட்டார்கள்.

மத்தவங்களுக்கெல்லாம் சளி பிடிச்சிருச்சோ?  (ஒண்ணுல்ல... கோழையோ.. துப்பறதுக்குன்னு கேக்க நெனச்சேன்.)


இம்மை மாறி மறுமை ஆகினும்
நீயாகியர் என் கணவனை
யான் ஆகியள் நின் நெஞ்சு நேர்பவளே 

தேமொழி

unread,
Mar 19, 2014, 8:58:29 PM3/19/14
to tamil...@googlegroups.com


இது போன்ற வசனம்/உரைகளை பெண்கள் மட்டுமே தங்கள் துணையிடம் கூறியதாக அறிந்ததில்லை வேந்தே.

பெண்கள் வாய்மை தவறக் கூடாது, ஆனால் ஆண்கள் சொல்வதை நீர் மேல் எழுத்தாகக் கொள்க என்பது போல இருக்கிறது இது.

..... தேமொழி 

வேந்தன் அரசு

unread,
Mar 20, 2014, 7:23:19 AM3/20/14
to தமிழ் மன்றம்



19 மார்ச், 2014 8:58 பிற்பகல் அன்று, தேமொழி <them...@yahoo.com> எழுதியது:



இது போன்ற வசனம்/உரைகளை பெண்கள் மட்டுமே தங்கள் துணையிடம் கூறியதாக அறிந்ததில்லை வேந்தே.

பெண்கள் வாய்மை தவறக் கூடாது, ஆனால் ஆண்கள் சொல்வதை நீர் மேல் எழுத்தாகக் கொள்க என்பது போல இருக்கிறது இது.



கடவுள் ஆண் இனத்தை சீர்பட படைக்கவில்லை.

MANICKAM POOPATHI

unread,
Mar 20, 2014, 11:18:00 PM3/20/14
to tamil...@googlegroups.com
வணக்கம் நண்பர்களே:


நண்பர்களுக்கு  நினைவிருக்கலாம்..
மேற்படி கட்டுரையின் சாயலில் 'தற்செயலாக'அமைந்த (?)
ஒரு சில ஆங்கில கட்டுரைகள்..பல ஆண்டுகளுக்கு முன்
"சதி" "கரணம்"  என்ற தலைப்புகளில் ..ஸ்ரீ கே  வி  ராமகிருஷ்ன
ராவ்  என்ற அதீத தமிழ் ஆர்வலர் ஒருவரின் பெயரில்
தொள்ளாயிரத்து தொன்னூறுகளில்.. (1991-1994?)
தொல் தமிழின் காலதேய வர்த்தமானங்களை 
கருத்தில் கொள்ளாமல்   (cherry picking/fallacy of composition?)
கள்ளிக்கோட்டையில் வைத்து அது.. அன்றைய
அமைப்பாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டாலும்..
(History Congress of Ta​milnadu?)

நமது தமிழ் பேராசிரியப் பெருமக்களின்
கடுமையான  கேள்விகளுக்கும்..(Peer Review)
காரசாரமான விமரிசனங்களுக்கும்  இடையே..
வசதி வாய்ப்புகள் மிக்க மேற்படி நண்பர்களின்
பகரீத பிரயத்தனங்கள்.. அரசியல் அழுத்தங்களுக்கு
மத்தியிலும்.. அவை  பிரசுரிப்பதற்கு தகுதியற்றவை 
என நிராகரிக்கப்பட்டதாகவும் அறியக் கிடக்கிறது...
(Freely available in the public domain...)

மேற்படி ராவுகாரு மற்றும் வகையறாக்கள்
சரஸ்வதி ஆற்று தொன்மங்களின் ஊதுகுழலான
'பாரதிய இதிகாஸ சங்கலன சமிதி' போன்ற  அமைப்புகளில்
அங்கம் வகிப்பவர்கள் என்பதும்  இங்கே  குறிப்பிடத்தக்கது....

நன்றி.. வணக்கம்..! ​_/\_


அன்புடன்../பூபதி



பிகு: தபுதாரம் குறித்து..
தமிழ் இணையத்தில் உரையாடியாதாக நினைவு..
வேண்டுமானால்  மீண்டும் கிளறிப் பார்க்கலாமே..?

"எம்தமிழ் கடன் பணிசெய்து கிடப்பதே ..."
​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​_______________________________________




Sent: Tuesday, March 18, 2014 11:37 PM
Subject: [தமிழ் மன்றம்] சங்க இலக்கியங்களில் கைம்பெண்கள்

சங்க இலக்கியங்களில் கைம்பெண்கள் | திண்ணை

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar...@gmail.com

--

MANICKAM POOPATHI

unread,
Mar 20, 2014, 11:54:29 PM3/20/14
to tamil...@googlegroups.com

அருள் கூர்ந்து..
தமிழ் இணையம் என்பதனை Tamil Cyber Community
என்ற பொருள் பட எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்...

நன்றியறிதல்களுடன்.../பூபதி
__________________

On 5/29/12, MANICKAM POOPATHI <poop...@gmail.com> wrote:
> வணக்கம்: _/\_
>
> ஆமாம்..
> தமிழில் தாரன் என்றால்
> மாலை அணிந்தவன் என்றுதானே  பொருள்..?
> எகா:  தார் அணி மார்பன்..
> (அன்/அம் விகுதியுடன் தாரன்/தாரம்)
>
> அந்த அளவில்..
> மாலை தப்பிய/இழந்த/துறந்தவனை
> தபுதாரன் என அழைக்கலாம் தானே..?
>
> மீண்டும் நன்றிகள்...!
>
> அன்புடன்.../பூபதி


http://goo.gl/QG6EmC

rajam

unread,
Mar 21, 2014, 12:24:16 AM3/21/14
to tamil...@googlegroups.com, poop...@gmail.com
அன்பிற்குரிய திரு மாணிக்கம் பூபதி ஐயா, வணக்கம். 

///தமிழில் தாரன் என்றால்
மாலை அணிந்தவன் என்றுதானே பொருள்?///

இல்லவேயில்லை! அப்படி இருந்தால் … கண்ணகியும் கோவலனும் தங்கள் திருமண நாளில் மங்கல அமளியில் கலந்து கிடந்த நிலையை … “தாரும் மாலையும் மயங்கி” என்று இளங்கோவடிகள் குறிப்பிட்டிருக்கமாட்டார். கோவலன் அணிந்திருந்தது “தார்.” கண்ணகி அணிந்திருந்தது “மாலை.” 

“தார்” என்பது அரசர் + வணிகர் குலத்தவர் தங்களை அடையாளப்படுத்திக்கொள்வதுக்காக அணியப்பட்டது. தொல்காப்பியத்தில் சான்று உள்ளது.

இப்படிக்கு,
ராஜம்


MANICKAM POOPATHI

unread,
Mar 22, 2014, 7:56:47 PM3/22/14
to rajam, tamil...@googlegroups.com
வணக்கம்:


இல்லவே இல்லியா..?  :-)

காது-காது என்றால்  
வேது-வேது  என்கிறேனோ  ..? :-)   :-)

நண்பர்கள் அறியாததல்ல..
வழக்கு ஒளிந்த சொற்கள் தமிழில் ஏராளம்.

கழுத்தோடு  தோய்ந்து
இடுப்பிற்கும் கீழே இருபுறமும்
முடி படாமல் அணியப்படுமானால்.. அது தார் .. 
ஆண் 'குலத்திற்கு' உரித்தானது என்பார்கள்..?
 
களிறு /ஏறு (பிடி /எருது ஆண்பால் ) (யானை / எருமை = பெண்பால்))
போன்ற விலங்கினத்திற்கும்  தார் அணிவித்து  அழகு பார்ப்பதுண்டு .
தார் அணி எருத்தின் வாரல் வள் உகிர் அரிமான்...
(தொங்குவதால்  வாழைத் தார்..கீழ்  + தார் = கீத்தார் )

இன்னுஞ்சொல்ல வேண்டுமானால் ..அது
உமையொருபாகன்..  ஆண்டாள் அணிந்திருந்த  "மாலை"..
என்பது  வேறு.. அது தனி..? (beyond our scope..?)

அதுவே..
மாலையாக (முனைகள் முடியப்பட்டு)
இடுப்புவரை தொடுக்கப்படுமானால் ..
அது அன்றைய பெண்களுக்கானது...
(presumably for the sake of modesty..?)

வெறும் கண்ணியாக (சங்கலி) கோர்க்கப் பட்டால்.. (simple lei)
சிறு குழந்தைகளுக்கு.... என நீளும் என்பார்கள்..?

தாங்கள் சொல்வதும் சரிதான்...

கண்ணகையும்  கோவலனும்
'ஒருவரையொருவர்  பூர்த்தி செய்யும்'   நிலையினை 
விளக்கப் புகுந்த அடிகளார்தம் தூய பார்வையில்
அதுவோர் தாந்திரிய சாதகம்..?

மற்றபடி..
தாரை என்பதற்கு..  வார்ப்பது..
இசைப்பது என  (Ulphorn = தாரை)
சாரை சாரையாக பொருள் படும்..

அணியும் அங்க வஸ்திரத்தினை  கொண்டு
ஆன்மீக சித்திகள்    (யோக) அறியப்படுவதெனபது
அன்றைய  சமண சாங்கியம்.. என்பார்கள்..?

அதுவே கால கதியில் (vestigial meme?)
அவரவர் வசதிக்கேற்ப அணியும் நிலைக்கு
மாறி மயங்கிப்  போனதாகவும்   தெரிகிறது ..?

மிக்க நன்றி..!


அன்புடன்.../ பூபதி


 

rajam

unread,
Mar 22, 2014, 8:20:53 PM3/22/14
to MANICKAM POOPATHI, tamil...@googlegroups.com
வணக்கம். ஐயா, என் மறுப்பு “தாரன் என்றால் மாலையன்” என்ற கூற்றைக் குறித்ததே. 

தாரும் மாலையும் வெவ்வேறு என்பதே எம் அறிவு. 

அன்புடன்,
ராஜம்

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Mar 22, 2014, 9:34:54 PM3/22/14
to tamilmanram kuzhu, MANICKAM POOPATHI
பிங்கல நிகண்டு மாலை வகைகளாகப்  பின்வரும்  பெயர்களைக் குறிப்பிடுகிறது( நூற்பா1326).  அவையாவன:-
1.    அணியல்,
2.    அலங்கல்,
3.    இலம்பகம்,
4.    ஒலியல்,
5.    கண்ணி,
6.    கோதை,
7.    சிகழிகை,
8.    சுக்கை,
9.    சுத்திகை,
10.    சூட்டு,
11.    தாமம்,
12.    தார்,
13.    தெரியல்,
14.    தொங்கல், 
15.    தொடையல்,
16.    படலை
17.    பிணையல்,
18.    மஞ்சரி,
19.    மத்தகம்,
20.    வாகை
21.    வாசிகை,


மாலை,தார்,கோதை,கண்ணி,தெரியல்,தொடையல்,ஒலியல்,தாமம்
மாலை என்பது சேர்த்துக் கட்டப்படுவது;  நடுவில் குஞ்சம் வைக்கப்படும்.
தார் என்பது நடுவில் சேர்த்துக் கட்டப்படாமல் அமைப்பது; இரு பக்கமும் தனித்தனி குஞ்சம் இருக்கும்.
தார் ஆண்களாலும், மாலை பெண்களாலும் கோதை இருபாலராலும் அணியப் பெறுவன.

அவ்வாறிருக்க, தாரன், மாலையன் என ஏன் வரவேண்டும்? உமையொரு பாகம் கொண்டவன் சிவன் எனப்பெறுவதால், அப்பகுதியில் மாலை சூட்டப்பட்டதையும் சிவன் என்ற முறையில் தார் அணியப் பெறுவதையும்  குறிக்கும் வகையில்  தாரன், மாலையன் என இரண்டும் குறிக்கப் பெறுகின்றன.

ஆணும் பெண்ணும் இணை என்பதை வலியுறுத்தும் கதைதான் இறைவனும் இறைவியும் இணைந்த உருவம் கொண்டிருப்பது.  கதை என்றாலும் இறைவி  சூட்டிக் கொள்ளும் மாலையைக் குறித்தாக வேண்டுமல்லவா? இந்நுண்ணிய வேறுபாட்டைக் கடவுள் வாழ்த்து மூலம் பாரதம் பாடிய பெருந்தேவனால் விளக்கியுள்ள அருமை பாராட்டிற்குரியது.

மாலையை அணியும் இறைவியைத் துணையாக உடையவன் என்னும் பொருளிலும் மாலையன் எனலாம் அல்லவா?

(கைம் பெண்கள் குறித்துத் தனியாக எழுத எண்ணியுள்ளேன்.)
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages