கல்வெட்டு சொல் புழங்குவோம்
இக்கால் பலர் பல புதிய சொற்களை உருவாக்கி பழஞ்சொல் நிலையாக வழக்கொழிய வழிகோலுகின்றனர். அவ்வாறு அல்லாமல் கல்வெட்டில் உள்ள சொற்களை இனி புழங்கலாம்.
- ஸ்வஸ்திஸ்ரீ மதிரை கொண்ட கோப் பரகேசரி ப[ர்]ம[ர்]க்கு யாண்டு 31 றாவது சோழபெருமான் ஸ்ரீ பராந்தக தேவர் தாதி பாண்டன் காளி இவ்வூர் தேவதான பொன்கால்குடி புன்செ[ய்] கல்லி ம[ய]க்கின நிலத்துக்கு கீழ்பாற் கெல்லை பூஞ்சேரி நிலத்துக்கு மே[ர்]கு தென்பாற் கெல்லை கரிகால கரைக்கு வடக்கும் மேல்பாற் கெல்லை பொங்கால்குடி வாய்க்காலுக்கு கிழ[க்கு]ம் வடபாற் கெல்லை மண்ணிக்குத் தெற்கும் இவ்விசைந்த பெரு நான் கெல்லையில் லகப்பட்ட நிலம் இரண்டரையும்
- உண்ணில மொழிவின்றி இந்நிலத்தால் சந்திராதித்யவற் நிசதி பத்து ப்ராஹ்[மணற்க்]கும் அடுவாநு[க்]கும் விறகிடுவாநு[க்]கும் நெய்[க்]கும் [ஒருபல]ம் மிளகிநுக்கு[ம்] உப்பிநுக்கும் வெற்றிலைக்கும் கலமிடும் வெட்கோவர்[க்]கும் அரிசி அரித்து எச்சி லெடுப்பானுக்கும் குறுகூலி அடங்க ஒருவனுக்கு நிசதி பதினாழி நெல்லாக [இப்ப]ரிசு சந்த்ராதித்ய[வ]ல் உண்பதாக வைத்த நிலம் 2 இ. இது காத் [தூ]ட்டுவார் இவ்வூர் பதிபாதமூலத்தார்
தாதி - வைப்பாட்டி, mistress, concubine; கல்லி - தோண்டி; மயக்கின - பண்படுத்திய; மண்ணி ; நிசதி - நாள்தோறும்; அடுவான் / அடுவாள் - சமையல்காரன், chef, cook; கலம் - மட்கலம்; வேட்கோ - குயவன், potter; அரி - அரிசி களைபவன் பாண்டன் காளி என்பவள்
மதுரையை வென்ற சோழ வேந்தன் முதற் பராந்தகனின் 31 ஆவது ஆட்சி ஆண்டு கி.பி. 938 இல் அவன் வைப்பாட்டி / போகி இந்த ஊர் தேவதான பொன்கால்குடியில் புஞ்செய் நிலம் தோண்டி பண்படுத்திய நிலத்திற்கு கிழக்கே பூஞ்சேரியும் அதற்கு மேற்கின் தென் அப்பகுதியில் அமைந்த தென் எல்லையாக அமைந்த கரிகால் கால்வாய் கரைக்கு வடக்கில் அதன் மேற்கில் பொன்கால்குடி வாய்க்காலுக்கு கிழக்கில் அதன் வட எல்லையில் மண்ணி ஆற்றுக்கு தெற்கில் இந்த நான்கு எல்லைகள் கொண்ட இரண்டரை. அந்தண் உள்ளே நிலம் ஏதும் அற்ற நிலத்தை சந்திர சூரியன் நிலைக்கும் கால அளவு ஒவ்வொரு நாளும் பத்து பிராமணருக்கு, மடைப்பள்ளி சமையலோனுக்கு விறகு இடுபவனுக்கு நெய் ஒரு பலம் மிளகு உப்பு வெற்றிலை மட்கலம் தரும் குயவனுக்கு அரிசி களைபவனுக்கு உண்ட எச்சில் சிறுகூலி உட்பட ஒரு ஆளுக்கு நாள் ஒன்றுக்கு பதின் நாழி நெல்லாக தருவதற்கு இந்த ஏற்பாடு சந்திர சூரியர் உள்ள காலம் வரை செல்வதாக தனியே வைத்த நிலம் 2. இதை பாதுகாத்து சோறு வழங்க வேண்டுவது இவ்வூர் பதிபாதமூலத்தார் கடமை
SII Vol 5 No 693